- 
	
	
	
	
		கற்புடைய எம் ஜி ஆர் ரசிகர்கள்! 
 -------------------------------------
 ஆம் உலகில் இது போன்ற எம் ஜி ஆர் ரசிகர்களை எங்கும் காண முடியாது
 
 திரைப்படத்தில் கதாநாயகி உடன் வந்தாலும் மக்கள் பார்ப்பது மக்கள் திலகத்தை தான்
 
 இன்று வரை  அவர்கள் மற்ற படங்கள் பாப்பது அரிது தன் வீட்டிலும்  எம் ஜி ஆர் படம் தான்
 பெரும்பாலும் பேசுவது  எம் ஜி  ஆரைப் பற்றி தான்
 
 ஒரு நண்பர் என்னிடம் சொன்னார் என் தந்தை லைட் பாயாக வேலை செய்து கொண்டிருந்தார் அன்பே வா படம் முடியும் தருவாயில் எல்லோக்கும் ஐநூறு ரூபாய் கொடுத்தார் என் தந்தைக்கும் கிடைத்தது
 
 அதில் நாங்கள் நான்கு கறவை மாடுகள் வாங்கினோம் வழி வழியாக அதன் முலம் இன்றும் பிழைத்து வருகிறோம்
 
 ஒருவர் பொங்கல் திருநாளில் பல தலைவர்களை குறிப்பிடுகிறார் எம் ஜி ஆரை பற்றி குறிப்பிடவில்லை
 
 அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் மக்கள் திலகத்தை குறிப்பிடாததால் தூக்கி எறிந்து விட்டேன்
 
 மக்கள் திலகம் பொங்கல் பண்டிகைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்று உலகறிந்த விஷயம்
 
 தன் அறிவாற்றலை காட்ட வேண்டுமா? எம் ஜி ஆரை பற்றி தேடு பெரிய வெள்ளை காகிதத்தில் பூதக் கண்ணாடி கொண்டு பல மணிநேரம் தேடுவது அதிலும் ஆயிரம் முறை கண்களை துடைத்து கொண்டு
 
 ஏதேனும் மூலையில் சிறிய புள்ளி தென்பட்டால் நானும் ரெளடி தான் வடிவேல் பாஷையில் நானும் அறிவாளிதான் என்று பிதற்றிக் கொள்வது
 
 மேலே குறிப்பிட்ட மக்கள் திலகத்தால் வாழ்ந்து கொண்டிருப்போரும்
 
 கற்புள்ள எம் ஜி ரசிகர்கள் இருக்கும் வரை அவர் புகழை அழிக்க முடியாது
 
 மதம் ஜாதி இனம் என்று பாராமல் வாழ்நாள் முழுவதும் ஓவ்வொரு கனமும் ஏழைகளுக்கு உதவிய எங்கள் தலைவனை அறிவாளிகள் என்று பிதற்றிக் கொண்டு திரியும் உங்கள் திறமையை உன்னத தலைவனிடம் காட்டாதீர்கள்!
 
 ஹயாத்!... Thanks Friends...
 
 
- 
	
	
	
	
- 
	
	
	
	
- 
	
	
	
	
- 
	
	
	
	
- 
	
	
	
	
		மனித குல மகான் மக்கள் திலகம் பக்தர், தொண்டர் திரு சுரேபித்தி
 
 
 சுரேந்திர பாபு மறைவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக...
 
 
- 
	
	
	
	
		மறு வெளியிட்டு திரைப்பட காவியங்களுக்கு மதிப்பும், அகிலம் காணா பெருமையும் பெற்று கொடுத்து கொண்டேயிருக்கும் அசல் திரையுலக வசூல் சக்ரவர்த்தி மக்கள் திலகம் அளிக்கும் "குலேபகாவலி" தினசரி 4 காட்சிகள் (1955 ம் ஆண்டு வெளி வந்த) சென்னை புரசைவாக்கம் பாலாஜி dts யில் வெற்றி நடை போடுகிறது...👍 👌 
 
- 
	
	
	
	
		#உடல் #சுமந்த #எம்ஜிஆர்
 
 (மீள்.....)
 
 மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களும் , அண்ணன் சக்ரபாணியும் சிறு வயதில் கந்தசாமி முதலியார் நாடகக் கம்பெனியில் சேர, அப்போது அங்கு ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த ஒருவர் பெரும் உதவி செய்தார். பெயர் காமாட்சி.
 
 பின்னர் பாகவதர், சின்னப்பா, எம்.கே.ராதா, எம்ஜிஆர், சிவாஜி ஆகியோர் வரவுக்குப் பின் நாடகங்கள் குறைந்து சினிமா பிரபலமானது. நடிகர் காமாட்சிக்கு நடிப்பு வாய்ப்பு குறைந்து பாடல்கள் எழுத ஆரம்பித்தார். இவர்தான்
 
 "உன் கண் உன்னை ஏமாற்றினால் " - படம் -வாழ்க்கை,
 
 "புதுப்பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே "
 , "ஓ ரசிக்கும் சீமானே வா" படம் -- பராசக்தி,
 
 "தேனுண்ணும் வண்டு மாமலரைக் கண்டு " படம்_ அமரதீபம்,
 
 "சிற்பி செதுக்காத பொற்சிலையே" - படம் -எதிர் பாராதது
 
 ஆகிய சிறந்த பாடல்களை எழுதிய காமாட்சி என்கிற கவி கே.பி. காமாட்சி.
 
 புரட்சித் தலைவர் எம். ஜி ஆர் தன் சொந்த தயாரிப்பான நாடோடி மன்னன் படத்திற்கு பாட்டெழுத , காமாட்சி செய்த நன்றியை மறவாமல் கவி கே.பி. காமாட்சியை தமக்கு கந்தசாமி முதலியார் நாடக கம்பெனியில் சேர பெரிதும் உதவி செய்ததற்கு நன்றிக்கடனாக பாடல் எழுத அழைத்திருந்தார்.
 
 எம் ஜி ஆரை சந்திக்கச் சென்ற காமாட்சிக்கு இருந்த குடிப் பழக்கத்தினால் நாடோடி மன்னன் படத்திற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இவருக்கு  குடிப்பழக்கம்  இருந்ததால் எம்ஜிஆர் எதுவும் சொல்லாமல் அனுப்பி விட்டார்.
 
 சில நாட்களுக்குப் பின் கவி.காமாட்சி காலமாகிவிட விஷயத்தைக் கேள்விப்பட்ட எம் ஜி ஆர், என்.எஸ்.கிருஷ்ணன், வி.கே.ராமசாமி, கே.ஆர்.ராமசாமி போன்றவர்கள் காமாட்சி வீட்டிற்கே வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
 
 காமாட்சியின் உடல் அலங்கரிக்கப்பட்ட பாடையில் வைக்கப்பட்டது. உடலைத் தூக்கிச் செல்லக் கூட சரியான ஆட்கள் இல்லை. இதை கவனித்த மக்கள் திலகம் எம் ஜி ஆர் சிறிதும் யோசிக்கவில்லை.
 
 உடல் வைக்கப்பட்ட பாடையின் முன்புற கைப்பிடியை பற்ற அடுத்த கைப்பிடியை என்.எஸ்.கிருஷ்ணன் தூக்கிக் கொண்டார். பின்புறம் கே.ஆர்.ராமசாமியும் ,வி.கே.ராமசாமியும் தூக்கிக் கொண்டார்கள். சுமார் முக்கால் கிலோ மீட்டர் தூக்கி வந்த எம் ஜி ஆர், என்.எஸ்.கே ஆகிய நால்வரும் கண்ணம்மாபேட்டையில் வந்து தான் இறக்கினார்கள்.
 
 அங்கு போயும் எம்.ஜி.ஆர் சும்மா இருந்தாரா. காமாட்சியின் உறவினர்கள் யார் எனக் விசாரித்தார். அங்கே இருந்த தயாரிப்பாளரும், கதைவசனகர்த்தாவும், இயக்குநருமான கலைஞானம்
 
 "நான் தான் அவருடையதம்பி "என்றார்.. "
 
 "காமாட்சி அண்ணன் ஏதாவது கடன் எவச்சிருக்காரா "? என்றார் எம் ஜி ஆர்.
 
 "ஆயிரம் ரூபாய் கடன் இருக்குதுங்கண்ணே" என்றார் கலைஞானம்.
 
 " நாளைக்கு வந்து ஆபீஸ்ல வாங்கி கொண்டு போய் கடனை அடைத்து விடுங்க" என்றார் மக்கள் திலகம்.
 
 அதே போல் அடுத்த நாள் எம் ஜி ஆர் பிக்சர்ஸ் ஆபீஸ் சென்ற போது தயாராக ஒரு கவரில் ரூ 1000 போட்டு ரெடியாக இருந்தது. பிணம் தூக்கியது மட்டும் அல்லாமல் கடனையும் அடைத்தார் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர்.
 
 இந்த கவி கே.பி. காமாட்சி வேறு யாருமல்ல. பராசக்தி படத்தில் போலி பூசாரி்யாக நடித்தவர் இவர்தான். மேலும் பழைய 1941 அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தில் வீரப்பா செய்த திருடர் தலைவன் வேடம் செய்தவர்..... Thanks Friends...
 
 
- 
	
	
	
	
		"தேடிவந்தமாப்பிள்ளை"  யாகவந்து  ஒரு  வாரம்  ஒரு  லட்சத்து  ஆயிரம் ரூபாய்க்கும் 
 101000.00 மேல்வசூல்சாதனைசெய்த  புரட்சித்தலைவர் வரப்போகும்  தீபாவளித்திருநாள் ஜெயிலர் ராஜனாக அவதாரம் எடுத்து வந்து வசூலை வாரிக் குவிக்க ரசிகர்களை மதிக்காத  சென்ட்ரல்சினிமாவில்  வருகிறார்  பல்லாண்டுவாழ்க  புரட்சித்தலைவரின் கொள்கையில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks Friends...
 
 
- 
	
	
	
	
		மிக நீண்ட பதிவு.. பொறுமையாகப் படிக்கவும்..
 
 ஒவ்வொரு எம்.ஜி.ஆர். ரசிகனுக்குள்ளும் குமுறிக் கொண்டிருக்கும் எரிமலையை வெடிக்க வைக்கும் பதிவு!!
 
 நன்றி: திரு. Shyam Shanmugaam அவர்கள்
 
 ஷாலின் மரியா லாரன்ஸ் குமுதத்தில் எழுதிய அலசல்..
 
 எம்.ஜி.ஆருக்கு நடிப்பு வராதா? ஹ்ஹ..
 
 நிலவைப் போலே.. பளபளங்குது
 நினைக்க நினைக்க.. கிறுகிறுங்குது
 
 மலரை போலே.. குளுகுளுங்குது
 மனசுக்குள்ளே.. ஜிலு ஜிலுங்குது
 
 பளபளங்குது கிறுகிறுங்குது
 குளுகுளுங்குது ஜிலுஜிலுங்குது
 
 ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம்
 அது எப்படி எப்படி எப்படி வந்தது எனக்கும்...
 
 ஆமாம். எம்ஜியாரை பார்த்தால் இப்படித்தான் ஒரு மயக்கம் வந்து தொற்றி கொள்கிறது.
 
 எனக்கு வயது 33. எனது நாலரை வயதில் எம்ஜியார் மறைந்துவிட்டார். நான் அவரை நேரில் கண்டதுகூட கிடையாது. ஆனால் அன்பே வா 32 தடவையும், அவரின் மற்ற படங்களை குறைந்தது மூன்று தடவையும் பார்த்த எம்ஜியார் பைத்தியம் நான்.
 
 எம்ஜியார் மறைந்தாலும் அவர் பெயர் மறையவில்லை. அவரை பற்றி எப்பொழுதுமே யாரோ ஒருவர் பேசி கொண்டிருக்கிறார். பத்திரிகைகளில் அவரை பற்றிய கட்டுரைகள், தொடர்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
 
 ஆனால்... எம்ஜியார் நல்ல தலைவர், நல்ல ஆட்சி செய்தார், நண்பர்களுடன் இப்படி பழகினார், ஷூட்டிங் ஸ்பாட்டில் அன்பாக நடந்து கொண்டார், தோட்டத்திற்கு வரும் அனைவரையும் சிறப்பாக உபசரிப்பார் என்கிற விஷயங்களை தாண்டி எம்ஜியார் நடிப்பை பற்றி பேச தயங்குகிறார்கள்.
 
 135 படங்களில் நடித்து 45 ஆண்டு காலம் சினிமாவில் வெற்றிகரமாக இயங்கிய எம் ஜி ராமசந்திரன் என்கிற நடிகரின் நடிப்பை இந்த சமூகம் பேச தயங்குகிறது என்பதே உறுத்தலான விஷயம். சொல்ல போனால் தற்போதைய தலைமுறையால் அதிகம் கிண்டலடிக்கப்பட்ட மாபெரும் நட்சத்திரம் அவர்தான்.
 
 எம்ஜியார் நடிப்பில் ஒன்றுமில்லை என்று சொல்பவர்கள் அவரின் ஐந்து படத்துக்கு மேல் பார்க்காமலே பேசுபவர்கள். சதி லீலாவதி துவங்கி மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வரை அவரின் மொத்த படங்களை பார்த்தவர்கள் மட்டுமே சரியாய் புரிந்து கொண்ட சகாப்தம் அவர்.
 
 எம்ஜியார் என்றால் துள்ளல், எம்ஜியார் என்றால் சுறுசுறுப்பு, எம்ஜியார் ஒரு பட்டாசு.
 
 எனக்கு எம்ஜியாரிடம் மிகவும் பிடித்த விஷயம் அவர் தன் ஜோடிகளை கையாண்ட விதம். படங்களில் அவர் காதலித்த அழகு.
 
 ஜெமினி கணேசன் காதல் கொண்டு மையலில் திளைத்து நின்ற இடத்திலேயே பார்வையால் தூது விட்டுக்கொண்டிருப்பார். சிவாஜி கணேசன் காதலின் அதனை ரசங்களிலும் நீந்திக் கொண்டு காதலிகளை மறந்து பாடல் வரிகளில் லயித்திருப்பார். ஆனால் எம்ஜியாரோ தன் காதலிகளுடன் ஆடி, பாடி, ஓடி 'dynamic ' காதலராக இருப்பார்.
 
 அத்தனை உற்சாகம் அவர் உடம்பில் இருக்கும். அவர் தன் ஜோடியை ஒரு பரிசுக் கோப்பையையை போல் இறுகப் பிடித்து ரசித்துக்கொண்டிருப்பார். ஒரு ரசிகைக்கு இதை விட என்ன வேண்டும்?
 
 'acting' காதலனைவிட 'active' காதலன்தான் எப்பொழுதுமே பெண்களின் சாய்ஸ். இதை எல்லாம் நாங்கள் வெளியே சொல்வதில்லை, அவ்வளவுதான். 50 வயதை தாண்டி நடித்த படங்களில்கூட அதே வேகத்துடன் ,அதே இளமை துடிப்புடன் டூயட் பாடிக்கொண்டிருந்தது எம்ஜியாரின் ஸ்பெஷாலிட்டி.
 
 எம்ஜியார் அதிகமாக விமர்சிக்கப்பட்டது அவரின் உடைகளுக்காக. "என்னய்யா, மஞ்ச சட்ட, பிரவுன் பேன்ட், மெரூன் ஷூ எல்லாம் ஒரு டிரஸ்ஸா?" என்று கிண்டலடிக்கும் அறிவுஜீவிகளுக்கு ஒரு விஷயம் தெரியாது.
 
 அறுபதுகளின் பின் பாதியில் வந்த படங்களில்தான் அவர் இந்த அடர் நிறங்களை அணிய ஆரம்பித்தார். அதற்கு இரண்டு காரணங்கள். 1964 ஆம் ஆண்டு ஈஸ்ட்மேன் கலர் தொழில்நுட்பம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறது. அந்த கலரில் எடுக்கப்படும் படங்களில் அடர் நிறங்கள் மட்டுமே துல்லியமாக தெரியும்.  எம்ஜியார் அதற்கேற்ப உடை அணிய ஆரம்பித்தார். இரண்டாவது காரணம் அப்போது ஹாலிவுட் படங்களில் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த கேரி க்ரான்ட், கிரகரி பெக், பால் நியுமன் போன்ற ஹீரோக்களின் உடையலங்காரம் இப்படித்தான் இருந்தது. ஹாலிவுட் ஆடை ட்ரெண்டைதான் எம்ஜியார் கடைபிடித்தார்.
 
 முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். எம்ஜியார் ஒரு fashion icon  என்று நான் சொன்னால் இங்கே பலரும் சிரிப்பார்கள். நான் அதற்கு கோபப்பட மாட்டேன். மாறாக எம்ஜியாரை போல அழகான ஒரு நமுட்டு சிரிப்புடன் உண்மைகளை தெளிய வைப்பேன். அன்றைய ஹாலிவுட் நடிகர்கள் ஏழையாக  நடிக்கும்போதுகூட சட்டையை tuck in செய்து ஷூ அணிந்திருப்பார்கள். அதுதான் அன்று ஸ்டைல். அதை எம்ஜியார் பின்பற்றினார். அவர் ஷூ அணிந்து வராத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
 
 V கட் கழுத்து வைத்த குர்தா, slim-fit பேன்ட், வலது கையில் பிராண்டட் வாட்ச், சில சமயம் உடைக்கு ஏற்றாற்போல் கையில் காப்பு, பாடல் காட்சிகளில் நடன அமைப்பிற்கு ஏற்ற தொப்பி, ஸ்கார்ப் என்று அனைத்திலும் தனி கவனம் எடுத்துக் கொண்டது எம்ஜியார் மட்டுமே.
 
 இன்றுகூட ஆண்டிபட்டியில் இருக்கும் ஒரு மூதாட்டியிடம் எம்ஜியார் பெயரை சொன்னால் முகத்தில் வெட்கம் வருகிறது என்றால் அதற்கு காரணம்? ஜிப்பா வேட்டியுடன் சுற்றிய பாகவதர் போன்ற ஹீரோக்களை பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு பேன்ட் ஷூ சகிதமாக வந்த எம்ஜியார் நிச்சயம் கிளர்ச்சியை ஏற்படுத்தி இருப்பார்தானே?
 
 52 வயதில் ரோமானிய மன்னர் பாணியில் முட்டிக்கு மேலே உடையணிந்து 'ஆயிரம் நிலவே வா’ என்று பாடி வருவார். அடித்து சொல்கிறேன், எம்ஜியாரை தவிர வேறு யார் அந்த உடை அணிந்தாலும் முகம் சுளிய வைத்திருக்கும். ஆனால் எம்ஜியாரோ அத்தனை வசீகரமாக இருப்பார்.
 
 இது ஒன்று போதும் அவரின் அடையாலங்கார நேர்த்தியை பறைசாற்ற.
 
 அடுத்து மிகவும் நக்கலடிக்கப்பட்டது எம்ஜியாரின் நடனம். அவரது நடனம் பெரும்பாலும் Broadway Musicals பாணியில் இருக்கும்.அந்த வகை நடனத்தில் நடிகர்கள் மேடையை முற்றிலுமாக ஆக்கிரமிப்பார்கள். நடனமும் கூடவே சேர்ந்து ஓட்டமுமாக இருக்கும். அதேபோல் எம்ஜியார் பாடல்களில் சர்வதேச நடன அமைப்புகள் தெரியும். குறிப்பாக மிகவும் கடினம் என்று கருதப்படும் லத்தீன் அமெரிக்க நடன அமைப்புகள் இருக்கும்.
 
 'துள்ளுவதோ இளமை'யில் வரும் paso-doble 'என்னை தெரியுமா’வில் வரும் rock and roll,  'அன்று வந்ததும் இதே நிலா’வில் வரும் ballroom dancing என்று வகை  வகையான நடனங்களை பின்னி பெடலெடுத்திருப்பார்.
 
 ஆடும்போது கை மற்றும் காலை எந்த கோணத்தில் உயர்த்த வேண்டும் என்று அளவெடுத்தாற்போல் செய்வார். நடனம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இந்த விஷயம் புரியும்.
 
 சிவாஜி தன் இயல்பான முகபாவத்தை வைத்து பல நடனங்களை நேர்த்தியாக கடந்து விடுவார். எம்ஜியார் அப்படி இல்லை. எந்த நடனமானாலும் அதை முழுதாய் கற்று தேர்ந்து ஆட வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்தார். அதை சிறப்பாக செய்தார்.
 
 ’ஆடலுடன் பாடலை கேட்டு’ பாட்டில் வரும் பாங்க்ரா நடனத்திற்கு மட்டுமே ஒரு மாதம் பயிற்சி எடுத்தார். இன்னும் கூட அப்படி ஒரு பாங்க்ரா நடனத்தை அந்த ளவிற்கு தமிழ் சினிமாவில் யாரும் முயற்சிகூட செய்யவில்லை என்பதே நிதர்சனம்.
 
 நடனம் மட்டுமா? சண்டை காட்சிகளிலும் அப்படி ஒரு நேர்த்தி. ஆஜானுபாகு இல்லை என்றால் மலை போல் உடம்பு வைத்திருப்பவர்களுடன்தான் மோதுவார். தன்னைவிட பலம் குறைந்தவனை அடிப்பதில் என்ன ஸ்பெஷல் இருந்துவிட போகிறது?
 
 சிவாஜி நடிப்பின் உச்சம்; அவர்போல் எம்ஜியார் நடிக்கவில்லை என்கிற குற்றச்சாட்டு இருக்கிறது. நமக்கு இரண்டு சிவாஜி தேவையா? ஒருபக்கம் சிவாஜி  அணுகுண்டாய் வெடித்துக் கொண்டிருந்தார். இந்த பக்கம் எம்ஜியார் underplay செய்து இயல்பாக வலம் வந்தார். இந்த வித்தியாசம் ரசிகர்களுக்கு தேவைப்பட்டது.
 
 கட்டபொம்மன் போல் கர்ஜிக்க வில்லைதான். ஆனால் மதுரை வீரனின் எழுச்சி அவன் குரலிலும் பார்வையிலும் தெறித்தது. நாடோடி மன்னனின் கம்பீரம், அன்பே வா ஜேபியின் குறும்புத்தனம், எங்க வீட்டுப்பிள்ளையின் சாமர்த்தியம் என்று எம்ஜியாருக்கு அநேக முகங்கள் இருக்கிறது.
 
 எம்ஜியார் சாக மாட்டார். எப்படியாவது உயிரோடு வருவார். மக்களை பொறுத்தவரை எம்ஜியார் ஒரு சூப்பர் ஹீரோ. இப்பொழுது பேட்மேன் ,மார்வெல் சூப்பர் ஹீரோக்களை ரசிக்கும் இளைஞர் பட்டாளங்களுக்கு தெரியாது, அந்த காலத்தில் எம்ஜியார்தான் பேட்மேன், சூப்பர்மேன் எல்லாமே என்று.
 
 நண்பர் ஒருவர் இருக்கிறார். பல சமயம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவர். .ஆனால் சொல்லுவார் "எல்லாத்தையும் முடிச்சிக்கலாம்னுதான் போவேன். வழியில எங்கேயோ ஒரு எம்ஜியார் பாட்டு கேக்கும். அவ்வளவுதான். அட போடா நான் ஏன் சாவணும், நான் போராடுவேன் அப்படினு உள்ள ஒரு வெறி வரும் பாரு" என்று.
 
 அந்த பாடல்களை எம்ஜியார் எழுதினாரா? இல்லை. ஆனால் இந்த வரிகள்தான் வேண்டும் என்று பாடலாசிரியர்களை கேட்டு பெற்றுக் கொண்டார். ஆக யாராவது "எம்ஜியார் எப்படி பாடி இருக்காரு பாரேன்" என்று கூறினால் அது தவறே இல்லை. எம்ஜியார்தான் எழுதினார், பாடினார்.
 
 எதிரிகளை அடிப்பார். கொல்ல மாட்டார். கடைசியில் மன்னித்து விடுவார். இது ஒரு கடவுள் மனப்பான்மை. விளிம்பு நிலை ரசிகனுக்கு அது பிடித்தது. மோசமான வாழ்வு நிலையில் இருந்த அவனுக்கு திரையில் ஒரு கடவுள் தேவைப்பட்டார். எம்ஜியார் அதுவாய் இருந்தார். அவர் ஒரு திரை கடவுள்.
 
 அவரும் பிரிந்து சென்ற காதலிக்காக அழுது, குடித்து, சாவது போல் நடித்திருக்க முடியும். நிஜ வாழ்வில் பலர் அப்படிதான் செய்கிறார்கள். ஆனால் எம்ஜியாரோ காதலிகளை வசீகரத்தால் கட்டி போடும் வித்தையை அவர்களுக்கு கற்று கொடுத்தார். அப்படியும் 'பாசம்' படத்தில் எம்ஜியார் கடைசியில் இறந்து போவார். என்னால் அந்த படத்தை இன்னொரு முறை பார்க்க முடியவில்லை. இறக்கும் கடவுளை யாருக்கும் பிடிப்பதில்லை.
 
 எம்ஜியார் ஒரு ரசிகனின் நடிகர். அந்த காலத்தில் ரசிகர்களுக்கு எது தேவை பட்டதோ அதை கொடுத்தார். ரசிகனின் எதிர்பார்ப்பை தாண்டி அவர் தன்னை நிலை நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.
 
 படங்களில் அரசியலை திணித்தார் என்று குற்றம் சாட்டினால், அறுபதுகளில் சினிமாவில் திராவிடம் பேச வேண்டிய அவசியம் இருந்தது. அது  தமிழ்நாட்டுக்கு  தேவையாய் இருந்தது. அல்லாமல் எந்த நடிகர் அரசியல் பேசவில்லை? தமிழ் சினிமாவில் ஏதோ ஒரு விதத்தில் யாரோ ஒரு நடிகர் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
 
 உடையலங்காரம், பாடல்கள் மற்றும் நடனங்களில் முழு ஈடுபாடு, சண்டை பயிற்சி துல்லியம், வேறுபட்ட நடிப்பு திறன் என்று எம்ஜியார் ஒரு தேர்ந்த நடிகர் மட்டுமில்லாது அதையும் தாண்டி ஒரு முழுமையான சினிமா கலைஞர் என்பதை எந்த தலைமுறையும் மறுக்க முடியாது.
 
 அவருடைய கடைசி படம் வெளிவந்து 40 ஆண்டுகள் முடிந்த நிலையில், இந்த 2017 ல் ஒரு பெண் அவர் நடிப்பை பற்றி எழுதி கொண்டிருக்கிறாள் என்பதே எம்ஜியார் என்கிற நடிகரின் மாபெரும் வெற்றிதான்.
 
 இவ்வளவு நான் எழுத தேவை இல்லை. இதற்கும் சேர்த்து எம்ஜியார் ஒரு பாடலை பாடிவிட்டுதான் சென்றிருக்கிறார்.
 
 நான் புதுமையானவன்
 உலகை புரிந்து கொண்டவன்
 நல்ல அழகை தெரிந்து
 மனதை கொடுத்து
 அன்பில் வாழ்பவன்
 ஆடலாம் பாடலாம்
 அனைவரும் கூடலாம்
 வாழ்வை சோலை ஆக்கலாம்
 
 இந்த காலம் உதவி செய்ய
 இங்கு யாரும் உறவு கொள்ள
 அந்த உறவை கொண்டு
 மனித இனத்தை அளந்து பார்க்கலாம்
 
 இசையிலே மிதக்கலாம்
 எதையுமே மறக்கலாம்
 இசையிலே மிதக்கலாம்
 எதையுமே மறக்கலாம்
 
 என்னை தெரியுமோ
 நான் சிரித்து பழகி
 கருத்தை கவரும்
 ரசிகன் என்னை தெரியுமோ
 
 உங்கள் கவலை மறக்க
 கவிதை பாடும் கவிஞன்
 என்னை தெரியுமா
 
 ஆகா ரசிகன் ஆகா ரசிகன்
 நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
 உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்...
 
 #புரட்சித்தலைவர்_நூற்றாண்டு... Thanks Friends...