http://i59.tinypic.com/v6hgxz.jpg
Printable View
This is also from media only, I am used to seeing Nadigar Thilagam.com almost every week. There I got this link. I do not know if this is correct.
http://www.thalaivansivaji.com/sivaji-kural-9/
கல்லாத பேரையெல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில் தான் இன்பம் என் தோழா
a material fromm Thiru. Sailesh Basu of MGR thread
:idontgetit:
செலுலாய்ட் சோழன் – 17
சுதாங்கன்
சிவாஜியின் பரத நாட்டிய திறமை வெளிப்பட்டதற்கு உதாரணம் தூக்கி தூக்கி படத்தில் வரும் பாடல் `குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’. இந்தக் காட்சியில் சிவாஜியுடன் நடனமாடிய இருவருமே நாட்யத்தில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள். அப்போது சினிமாவில் ந்டனமென்றாலே இந்த சகோதரிகளைக் கூப்பிடுங்கள் என்று சொல்லுகிற அளவிற்கு புகழ் பெற்றவர்கள் அவர்கள் தான் லலிதா, பத்மினி ராகினி சகோதரிகள்.
இந்தக் காட்சியில் சிவாஜியுடம் நடனமாடியவர்கள் பத்மினியும், ராகினீயும். இருவருமே படத்தில் அரசகுமாரிகள். சிவாஜி ஒர் பைத்தியம் மாதிரி அந்தக் காட்சியில் நடிப்பார். அதாவது மற்றவர்கள் செய்வதை அப்படியே செய்து காட்டுவார்.
இப்போது அந்த இருவரும் பாடி நடனமாடுவதைப் போலவே சிவாஜியும் செய்து காட்ட வேண்டும். அந்தப் பாடல்தான் குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்’ இந்த பாடல் காட்சியை இன்று பார்த்தாலும் அசந்தே போவோம்
அந்த இரு நாட்டிய தாரகைகளுக்கு இணையாக நடனமாடியிருப்பார். அதற்குக் காரணம் சிவாஜி கணேசனுக்குள்ளிருந்த அந்த ஈர்க்கும் சக்தி. எத்தனையோ பேர் நடனமாடுவார்கள். ஆனால் சிலர் மட்டுமே நடனத்தில் புகழ் பெறுகிறார்கள்.
நடனத்தில் மிக முக்கியமானது தாளமும், பாவமும் தான். இது சொல்லிக்கொடுத்து வருவதில்லை. அது பிறப்பிலேயே, இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் `GENETIC INFLUENCE’ என்பார்கள்.
சினிமாவிற்கு வருவதற்கு முன்பே தன்னிடமிருக்கும் தாளம் பாவ திறமைகளை தன் நாடகங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார் சிவாஜி.
உதாரணமாக நாடகத்தில் அவர் பெண் வேடம்போட்டு `நூர்ஜகான்’ ஆக வருவார் . அப்போது ஒரு நளினமான நடை நட்ந்து வருவார் ச. பெண் வேடத்திலிருந்து இந்த சிவாஜியின் நடையையும் நளினத்தையும் பார்க்கவே ரசிகர்கள் திரும்ப திரும்ப வருவார்களாம்
வெளியூர்களில் நாடகங்கள் நடக்கும்போது, பல ஊரில் அந்த ஊர் பணக்காரர்கள் சிவாஜியை பெண் என்றே நினைத்து ஆசை நாயகியாக வைத்துக் கொள்ள தூது அனுப்பிய சம்பவங்களும் அவரது வாழ்க்கையில் உண்டு.
இதை சிவாஜியே ஒரு முறை என்னிடம் சொல்லியிருக்கிறார்.
நடனத்தில் மிக முக்க்கியமானது தாளம் . அத அடவுக்கேற்ப ஆடவேண்டும். நவரச பாவங்களுக்கும் நாட்டியத்தில் தாளக்கட்டு உண்டு. இந்த நடன அடவுகளுக்கு பஞ்ச நடை என்று சொல்வதுண்டு. உதாரணமக திகிட,என்றால் 3 அடிக்குண்டானது திஸ்ரம் என்பார்கள். தகதிமி என்றால் 4 இதை சதுஸ்ரம் என்பார்கள். தக்கதகிட 5 இது கண்டம். தகிடதகதிமி 7 இது மிஸ்ரம்/ தகதினிதக்கதகிட 9 இது சங்கீர்ணம்
பெரும்பாலும் ரெளத்திரமான நடனங்களுக்கு, சிவதாண்டவமெல்லாம் இந்த சங்கீர்ண அடவுக்குள் வரும். அதே போல் இந்த தூக்குத் தூக்கி பாட்டு மிஸ்ரத்தில் அமைந்தது. அந்த அடவுக்குள் ஆடவேண்டும். அதற்கு அந்த தாளம் என்பது ஆடுபவரின் உடல் மூலமாக வெளிப்பட வேண்டும்.
கூடவே அதற்குண்டான பாவம் வெளிப்படவேண்டும், காதல் நடனத்தில் கோபம் வெளிப்படக்கூடாது. இதை அப்படியே உள் வாங்கியிருப்பார். தூக்குக் தூக்கி இந்த பாடல் காட்சியில் பத்மினி, ராகினி இருவரின் முக பாவங்களை விட சிவாஜியின் பாவம் தூக்கி சாப்பிட்டு விடும்
ஆரம்ப காலங்களில் சிவாஜி நாடகக்குழுவில் இருந்த போதே சாஸ்திரப்படி பரதம், பாடல்களைக் கற்றுக் கொண்டவர். ஆனால் பின்னர் வந்த கமல்ஹாசனை போல் முழு நேர பயிற்சி கிடையாது.
சிவாஜி பெரிய கர்நாடக சங்கீதப் பிரியர். எம்.ஜி.ஆருக்கு அதில் பைத்தியமே உண்டு. இருவருமே ஒரு பாடல் உருவானவுடன் அது எந்த ராகத்தில் உருவானது என்று சட்டென்று சொல்லிவிடுவார்கள்.
சிவாஜி மேடையில் பாடிக்கொண்டிருந்தவர்தான். அவர் குரல் அப்போதெல்லாம் மிக அருமையாக இருக்கும் பிறகு திரைக்கு வந்ததும், தன் கவனம் நடிப்பை விட்டு திசை திரும்பி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
அதற்கு அவர் சொன்ன உதாரணம். எம்/கே. தியாகராஜ பாகவதர், டி.ஆர் மகாலிங்கம். இந்த இருவருக்குமே அபாரமான குரல்கள். அவர்கள் குரலைக் கேட்கவே ரசிகர்கள் கூடுவார்கள். இருவருமே இயற்கையில் அழகானவர்கள்..
அந்த அழகு முகத்திலிருந்து வரும் சொந்தக் குரல் பாடல் ரசிகர்களை இழுத்தது. ஆனால் அவர்கள் நடிப்பு அத்தனை பிரமாதம் என்று சொல்லிவிடமுடியாது. இதை சிவாஜி நன்றாக உணர்ந்திருந்தார்.
`எனக்கு அவங்கள மாதிரி பாட்டு ஞானம் கிடையாது. நல்லா பாடுவேன். அவங்க பாடற சுருதியில் என்னால கிட்ட கூட முடியாது. இரண்டு பேருடைய அழகும் கேட்கவே வேண்டாம். எங்கிட்டயிருந்த ஒரே பலம் என் நடிப்பு, நாட்டியத்தில என் தாள ஞானம். பாட்டிலிருந்த அந்த ராக அறிவு. அதனால நான் என் நடிப்பிலதான் கவனம் செலுத்ததுனங்கிறதுல உறுதியாக இருந்தேன் என்றார் சிவாஜி.
ஒரு பாட்டுக்கு உதட்டசைப்பது என்பது வேறு. பாடுவது என்பது வேறு. அந்தக் காலத்தில் நாடகங்களில் மைக் வசதி பிரமாதமாக இருக்காது. நடிகர்கள் உரத்த குரலில் பாடவேண்டும். அப்படி பாடும்போது அடுத்த நாள் முகம் வீங்க, தொண்டை கட்டிக்கொண்டு விடும் இதனால் அடுத்த நாள் நாடகம பாதித்த சம்பவங்களும் உண்டு.
ஆனால் சினிமா என்பது பெரும் பணம் போட்டு எடுக்கிற தொழில்.. அப்படி பாடி விட்டு, அடுத்த நாள் தொண்டை கட்டினால் முகம் வீங்கினால் தயாரிப்பாளருக்குத்தான் நஷ்டம் .இதையுணர்ந்த சிவாஜி பாடுவதை விட்டு விட்டார்.
ஆரம்ப காலங்களில் சிவாஜிக்கு ஆஸ்தான பாடகர் சி.எஸ். ஜெயராமன் தான். சில பாடல்கள் மட்டும் சீர்காழி பாடியிருப்பார். சபாஷ் மீனா படத்தில் வரும் `கானா இன்பம் கனிந்ததேனோ பாட்டை மோதி என்பவர் பாடியிருப்பார்.
தூக்குத் தூக்கி படத்தில் அந்த அபூர்வ நிகழ்வு நடந்தது.
`கொண்டு வந்தால் தந்தை’
கொண்டு வந்தாலும், வராவிட்டாலும் தாய்’
சீர் கொண்டு வந்தால் சகோதரி’
கொலையும் செய்வாள் பத்தினி
உயிர் காப்பான் தோழன்’
இந்த அடிப்படைகளைக் கொண்டு அமைக்கப்பட்ட திரைக்கதை. இந்த படத்திற்கு இசை ஜி.ராமனாதன். அவர் வெளியே ஒரு குரலைக் கேட்டார்.
பாகவதர் பாணியிலே பாடிய அந்தக் குரல் ஜி. ராமநாதனை வெகுவாக கவர்ந்தது.
தூக்குத் தூக்கி படத்திற்கு அவரை பயன்படுத்த நினைத்தார் ஜி.ராமநாதன்.
சிவாஜி ஒப்புக்கொள்ளவில்லை. வேண்டாம் எதற்கு இந்த `ரிஸ்க்’? என்றார்.
உடனே ராமநாதன். நான் பதிவு பண்றேன். பாட்டை கேளுங்க. உங்களுக்கு பிடிக்கலேன்னா, வழக்கம் போல் நாம சி.எஸ். ஜெயராமனை வைத்தே பதிவு பண்ணுவோம்.
பாடல் பதிவானது. சிவாஜி வந்த பாட்டைக் கேட்டார். மறுபடியும் பாடலைப் போடச் சொன்னார். பல முறை கேட்டார். சிவாஜியின் முகத்தில் ஏகாந்த புன்னகை மலர்ந்தது.
(தொடரும்)
http://www.youtube.com/watch?feature...&v=WPi1I-X82uc
Posted to Thalaivan Sivaji. Com
MESSAGE TO Mr. INBA, THALAIVAN SIVAJI.COM
Dear Mr. Inba,
Your article in Thalaivan Sivaji.com featuring Late MGR is not in the best of the spirits. Any controversial discussions concerning those who are not living with us has to be avoided especially those referring write-up by third person. Such articles that were written those days due to difference of opinions between any two persons should not be speculated now as it is totally out of context and out of date. Further, this spoils the harmony between internet friends.
Trust you would remove the same and also avoid such write ups in future and help to create harmony between mankind !
Regards
RKS
COMING SOON !
http://i501.photobucket.com/albums/e...ps6f60079c.jpg