சி க சார்
லலிதா னு நீங்கள் சொல்வது 'தூக்கு தூக்கி ' லலிதா வை தானே
நல்லா கவனீங்க வாசு சார்
இரண்டு உதடு நடுவில் ஏதோ தெரிகிறேதே . (:mrgreen:)
Printable View
வினோத் சார்,
http://www.centerforinquiry.net/imag...-trumpcard.jpg
அதகளம். trump card. புரியுதா? புரியுமே!புரியுமே!
கிருஷ்ணா சார்,
சி,காவை சாதரணமா நெனச்சுடாதீங்க. ஒண்ணுமே தெரியாம அப்பாவி மாதிரி முழி முழிப்பார்.:) அப்புறம் நம்மை முழிக்க வைப்பார். கட்ட கடைசியில் நம்மை சிரிப்பு போலிஸ் ஆக்கி விடுவார்.:) என்னவாக்கும் நான் சொல்றது.:)
ஆமாம். 'தங்கப்பதக்கம்' படத்தில் தலைவர் ஜோடி ஒய்.விஜயாதானே!:)
நான் எஸ்.ஆர்.விஜயான்னு நெனச்சேனாக்கும்.:)
ஐயையோ! தவளை தவளை... தன் வாயால கெடும்.:) கிருஷ்ணா சார்! எஸ்.ஆர்.விஜயா யாராக்கும் என்று சி.க. நம்மை காய விடப் போகிறார்.:) இது தேவையா?:)
ஜோதி லக்ஷ்மி- செக்ஸ் பாம் என்று சொல்லத்தக்க நம்மூர் கவர்ச்சி.இவர் இளம் பிராயத்திலிருந்து நடிக்கிறார்.வெவ்வேறு காலகட்டங்களில் இவர் அழகு வெவ்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தது. எனக்கு பிடித்த பின் பரிமாணங்கள் பின்னாட்களில்.
1963 வானம்பாடி.
https://www.youtube.com/watch?v=Z12Xa2R_BmE
1968 பூவும் போட்டும்.
https://www.youtube.com/watch?v=G9g29W9VYBk
1970 எதிரொலி.
https://www.youtube.com/watch?v=rO8a1GpQHxQ
கண்டு கொண்டேன் ...கண்டு கொண்டேன் ....கண்டு கொண்டேன் ... தேவரே
http://i62.tinypic.com/110kfmr.jpg
நூறு ஆயுசு .
ஜோ.ல வில் முக்கியமான் “ தங்கம் தங்கம் உன்னுருவம் தாங்காதினிமேல் என் பருவம்” விட்டதை வன்மையாக்க் கண்டிக்கிறேன் :)
//சி,காவை சாதரணமா நெனச்சுடாதீங்க. ஒண்ணுமே தெரியாம அப்பாவி மாதிரி முழி முழிப்பார்.அப்புறம் நம்மை முழிக்க வைப்பார். கட்ட கடைசியில் நம்மை சிரிப்பு போலிஸ் ஆக்கி விடுவார். என்னவாக்கும் நான் சொல்றது.// வாசு சார் நான் அப்படி எல்லாம் இல்லையாக்கும்.. //தூக்குத்தூக்கி லலிதா தானே// க்ருஷ்ணா சார்..அவரே.. கணவனே கண்கண்ட தெய்வத்தில் ஒரு நாகப்பாம்பு நடனம் அப்புறம் உன்னைக் க்ண் தேடுதேயில் அவரும் விக்கி காண்பவரையும் விக்க வைத்தார் :)
ஆமாம் எஸ்.ஆர். விஜயா யாராக்கும் :)
கார்ட்டூன் புதிர்கள் இந்தச் சிற்றறிவை எட்டவில்லை என்பதை ...
I too did my B.tech between 1981 - 1985 but i could not notice any such veruppu against SJ. In fact their were quite a lot of SJ fans. I am a hard core fan of PS but the fact was during the college days SJ and Illayaraja's songs are very popular among the youth especially the romantic and sexy songs . PS was not as popular as SJ in this period and slowly she was losing the market to the new generation singers in which SJ was the lead.
கொஞ்சூண்டு வலையில் தேடியதில் அகப்பட்டது..:)
**
தமிழக ரசிகர்களை தங்கள் நடனத்தால் கவர்ந்த "திருவாங்கூர் சகோதரிகள்" லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரும் பின்னர் நடிப்பிலும் முத்திரை பதித்தனர்.
திருவாங்கூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களான லலிதா, பத்மினி, ராகினி ஆகிய மூவரில் லலிதா 1932லும், பத்மினி 1934லும், ராகினி 1938லும் பிறந்தவர்கள். தந்தை பெயர் தங்கப்பன்பிள்ளை. தாயார் பெயர் சரசுவதி அம்மாள்.
நடனப் பயிற்சி
மூன்று சகோதரிகளில் முதலில் பத்மினிதான் நடனப் பயிற்சி பெற்றார். பிறகு லலிதாவுக்கும் நடனத்தில் ஆர்வம் ஏற்பட்டது. இருவரும் நடன ஆசிரியரிடம் முறைப்படி நடனம் பயின்றனர்.
சில ஆண்டுகள் கழித்து, ராகினியும் நடனப் பயிற்சி பெற்றார்.
கல்பனா
40களில், இந்தியாவிலேயே நடனத்தில் புகழ் பெற்று விளங்கியவர் உதயசங்கர். இவர் சிதார் மேதை ரவிசங்கரின் சகோதரர்.
ரவிசங்கர் சென்னை வந்திருந்தபோது, பத்மினியும், ராகினியும் அவரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்போது, முழுக்க முழுக்க நடனங்கள் கொண்ட "கல்பனா" என்ற இந்தி திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோவில் ரவிசங்கர் தயாரித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தில் நடிப்பதற்கு லலிதாபத்மினிக்கு ரவிசங்கர் வாய்ப்பளித்தார்.
"கல்பனா" மூலமாக லலிதாவும், பத்மினியும் திரைப்பட உலகில் அறிமுகம் ஆனார்கள்.
வேதாள உலகம்
இந்த சமயத்தில், காரைக்குடியில் ஏவி.எம். ஸ்டூடியோ இயங்கி வந்தது. "நாம் இருவர்" என்ற மெகாஹிட் படத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து, "வேதாள உலகம்" என்ற படத்தை ஏவி. மெய்யப்ப செட்டியார் தயாரித்து வந்தார். இது இசை நாட்டியத் திரைப்படம்.
"இந்தப் படத்தில் நடிக்கிறீர்களா?" என்று லலிதா பத்மினியிடம் ஏவி.எம். கேட்டார்.
"நடனம் மட்டும் ஆடுகிறோம். நடிப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை" என்று சகோதரிகள் கூறினார்கள்.
இதற்கு ஏவி.எம். சம்மதித்து, பவளக்கொடி இசை நாட்டிய நாடகம், பாம்பாட்டி நடனம் முதலியவற்றில் லலிதா, பத்மினியை நடிக்க வைத்தார்.
1948 ஆகஸ்டு மாதம் வெளியான "வேதாள உலக"த்தின் சிறப்பு அம்சமாக, லலிதா பத்மினியின் நடனங்கள் அமைந்தன. நடனங்களை வழுவூர் ராமையாப்பிள்ளை அருமையாக அமைத்திருந்தார்.
வேதாள உலகத்தைத் தொடர்ந்து, தங்கள் படத்தில் லலிதா பத்மினியின் நடனம் இடம் பெறவேண்டும் என்று ஒவ்வொரு பட அதிபரும் விரும்பினர்.
லலிதா பத்மினி நடனம் இடம் பெறாத படமே அநேகமாக இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஓடாத படங்களையும் ஓட வைக்க, லலிதா பத்மினி நடனங்கள் உதவின.
அந்தக் காலக் கட்டத்தில் பத்மினியை விட லலிதாதான் கவர்ச்சிகரமாக இருப்பார். நடன நாடகங்களில், லலிதா பெண்ணாக ஆட, பத்மினி ஆண் வேடத்தில் (மீசையோடு) ஆடுவார். இதனால், இந்த நடன சீசனில், லலிதாவின் கையே ஓங்கியிருந்தது.