Since the News paper is very old, I had to place it [ Nadoodo Mannan Ad.] next to other ads:
http://i160.photobucket.com/albums/t...psysjvmkro.jpg
Printable View
Since the News paper is very old, I had to place it [ Nadoodo Mannan Ad.] next to other ads:
http://i160.photobucket.com/albums/t...psysjvmkro.jpg
News paper details as it is:
http://i160.photobucket.com/albums/t...pskfed1soi.jpg
http://i1170.photobucket.com/albums/...pszjpy3fgy.jpg
பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா” வை மீண்டும் ஒருமுறை , ஒரு சமீப ஞாயிறில் பார்க்க நேர்ந்தது...
ரஜினி பேசும்போது கருணாநிதியைப் பார்த்து கேட்டார்...
“அரசியல்ல இருக்கிறவங்க இரும்பு மனசும் , வைர நெஞ்சும் கொண்டவங்களா இருப்பாங்கன்னு நினைச்சேன். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி வசனம் பேசி நடித்த அந்த காட்சியை திரையில் பார்த்தபோது , இந்த காட்சியை ஒரே டேக்கில நடித்து முடிச்சுட்டாருனு சொல்லி தேம்பி தேம்பி அழுதிங்களே.... இவ்வளவு மென்மையான மனசு கொண்ட நீங்க எப்படி இந்த அரசியல்ல இத்தனை நாளா இருக்கீங்க?”
# கருணாநிதி இதற்கு பதில் எதுவும் சொல்லவில்லை...
ஆனால்...இந்த வேளையில் , எம்.ஜி.ஆரின் இளகிய மனம் பற்றி படித்த ஒரு செய்தி நினைவுக்கு வந்தது..
“அன்பே வா” சமயத்தில் நடந்ததாம் இது...
சிம்லாவில் ஷூட்டிங் முடிந்து திரும்பும்போது எம்.ஜி.ஆர்.சொன்னாராம்...
''டெல்லியில் நான் காந்தி சமாதி, நேரு சமாதி, காந்தியின் உயிர் பிரிந்த இடம் இந்த மூன்றையும் பார்த்துவிட்டு மறுநாள்தான் சென்னைக்குப் போகப் போகிறேன்..''
சொன்னது போலவே முதலில் காந்தி சமாதிக்குச் சென்று அந்தச் சமாதி மீது மலர் வளையத்தைப் பக்தியோடு வைத்து வணங்கினாராம் எம்.ஜி.ஆர்....பின்னர் சமாதியை ஒருமுறை வலம் வந்து , மௌனமாக உட்கார்ந்து , சிறிது நேரம் கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஆழ்ந்தாராம் .... உணர்ச்சிப் பெருக்கினால் எம்.ஜி.ஆரின் கண்களில் நீர் பெருகி வழிய..... நெடு நேரம் மௌனமாக இருந்தாராம்..
# எம்.ஜி.ஆரின் இளகிய மனதுக்கு இன்னும் கூட எத்தனையோ சாட்சிகள் உண்டு...!
# சரி..இளகிய மனம் கொண்ட இவர்களால் எப்படி அரசியலில் இவ்வளவு சாதிக்க முடிந்தது..?
தமிழக சட்டமன்றத்தில் எப்போதுமே ஆளும்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் யுத்த மனப்பான்மையே நீடிப்பது ஏன்? "
" தங்கள் தலைமையைத் திருப்திப்படுத்த சம்பந்தப்பட்ட கட்சி உறுப்பினர்கள் துடிப்பதுதான் இதற்குக் காரணம். இதனைப் புரிந்துகொண்டு கட்சித் தலைவர்கள் செயல்பட்டால் மட்டும்தான் அமைதி ஏற்படுத்த முடியும்.
எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஓர் உறுப்பினர், 'கருணாநிதி, கருணாநிதி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தார். தங்கள் தலைவரை இப்படி பெயர் சொல்லி அழைக்கலாமா என்று தி.மு.க உறுப்பினர்கள் கொந்தளித்தார்கள். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கண்டித்தது முதல்வர் எம்.ஜி.ஆர்-தான். 'கலைஞர், எனக்குத் தலைவராக இருந்தவர். அவரை கருணாநிதி என்று மரியாதை இல்லாமல் அழைக்கக் கூடாது’ என்று எம்.ஜி.ஆர் கண்டித்தார்.
இன்னொரு சம்பவம், எம்.ஜி.ஆர் முதல்வராகவும் முனுஆதி சபாநாயகராகவும் இருந்தபோது நடந்தது. அப்போதைய தி.மு.க உறுப்பினர்களான துரைமுருகன், க.சுப்பு, ரகுமான்கான் ஆகிய மூவரும் சபாநாயகர் எவ்வளவு சொன்ன பிறகும் அமைதியாக உட்காரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன சபாநாயகர், 'உங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று சொன்னார். உடனே எதிர்க்கட்சித் தலைவரான கருணாநிதி எழுந்து, 'நான் ஆண்டவன்தான்’ என்று சொல்லி, அவர்கள் மூவரையும் அமைதியாக இருக்கச் சொன்னார்.
முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதியும் நடந்துகொண்டதைப்போல இன்றைய ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் நடந்துகொண்டால் மட்டும்தான் சபை அமைதியாக நடக்கும். "
courtesy jv
மக்கள் திலகத்தை கவுரவிக்கும் பாரதிராஜா, விஜயகாந்த்.
http://i1170.photobucket.com/albums/...psppv74die.jpg
உன்னை விட மாட்டேன்
https://www.youtube.com/watch?v=Ma410RAP4nM
மந்திரிகுமாரி (1950)
1950-ம் ஆண்டு மாடர்ன் தியேட்டர்ஸ், வடுவூர் துரைசாமி ஐயங்கார் எழுதிய ""திகம்பர சாமியார்'' கதையை, அதே பெயரிலும், மந்திரிகுமாரி என்ற இன்னொரு படத்தையும் தயாரித்தது. இரண்டு படங்களுமே வெற்றிப் படமானது என்றாலும், மந்திரிகுமாரியில், எம்.ஜி.ஆர். நடிப்பும், கலைஞரின் வசனமும், மக்களை அதிகம் கவர்ந்தது. மந்திரிகுமாரியின் கதை ஒரு புராண கதையின் பின்னணியில் உருவாக்கப்பட்டிருந்தது.
கொள்ளை அடிப்பதையும், கொலை பாதகம் செய்வதையும் தொழிலாக செய்து வருகிறான் ஒரு கொடியவன். அந்த நாட்டு மக்கள் அரசனிடம் சென்று முறையிடுகிறார்கள். அந்தக் கொடியவனையும், அவன் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க, தளபதி வீரமோகன் நியமிக்கப்படுகிறான். அவனது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போட்டு கெடுத்து வருகிறார் ராஜகுரு.
அரசனின் மகள் ஜீவரேகா, ஒரு பேரழகி. மந்திரியின் மகள் அமுதாவும், அவளும் நெருங்கிய தோழிகள்.
தளபதி வீரமோகனின் தோற்றத்தையும் அவனது வீரதீரச் செயல்களிலும் மனதைப் பறிகொடுத்த ராஜகுமாரிக்கு அவன் மேல் காதல் பிறக்கிறது. ராஜகுருவின் மகன் பார்திபனோ, ஜீவரேகாவை ஒருதலையாகக் காதலிப்பதோடு, அவளது அன்பையும் காதலையும் பெற பல வழிகளில் முயற்சிக்கிறான்.
பார்திபன், ஜீவரேகாவுக்கு தன்னைச் சந்திக்க வரும்படியாக கடிதம் எழுதி, ஒரு சேவகனிடம் கொடுக்கிறான். தற்செயலாக, அந்தக் கடிதத்தைப் பார்த்த மந்திரிகுமாரி அமுதா அதிர்ச்சியடைகிறாள். காரணம், பார்திபன் அவளை காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்வதாகவும் உறுதியளித்திருந்தான். கடிதத்தைப் பார்த்த அவளுக்கு ஒருவேளை இருவருக்கும் காதல் இருக்குமோ என்று சந்தேகம் தோன்றுகிறது.
ஒருநாள் ஜீவரேகாவைப் பின்தொடர்ந்து உண்மையை தெரிந்து கொள்ளச் சென்ற "அமுதா'வை, பார்திபன் எதிர்பாராமல் சந்திக்கிறான். காதல் மொழி பேசி, அவளை மயக்கி தன் வலையில் விழச் செய்து விடுகிறான் அவன்.
வீரமோகன், கொள்ளைக் கூட்டத் தலைவனை கையும் களவுமாகப் பிடித்து விடுகிறான். அவன் வேறு யாருமல்ல, ராஜகுருவின் மகன் பார்திபன்தான். பொதுமக்களுக்கோ மகிழ்ச்சி. ஆனால் அரசவையில் குழப்பம். விவரம் அறிந்த மந்திரிகுமாரி அமுதா துடிக்கிறாள். எப்படியும் அவனுக்கு மரணதண்டனை நிச்சயம் கிடைக்கும்.
அவனைத் திருத்திவிடலாம், என்ற எண்ணத்தில் தன் தந்தை மந்திரி நீதிதேவனிடம் கெஞ்சுகிறாள். ஆனால் அவரோ பாசத்துக்காக நீதியை பலியிட விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லி விடுகிறார். அவனுக்குத் தீர்ப்பளிக்குமாறு மந்திரி நீதிதேவனிடம் கூறுகிறார் அரசர். அவர் ஒரு தேவி பக்தர் என்பதால் தெய்வத்திடம், நீதி கேட்டு வேண்டி நிற்கிறார். அவனுக்கு தூக்குத் தண்டனை விதிக்க முடிவு செய்யப்படும் நேரம், தேவியின் சிலையில் ஒரு அசரீரி குரல் ஒலிக்கிறது.
""பார்திபன் குற்றமற்றவன். அவனை விடுதலை செய்'' என்ற அருள்வாக்கு உத்தரவிடுகிறது. அவர் அதை உண்மை என்று எண்ணி, மன்னரிடம் சென்று கூறி அவனை விடுதலை செய்து காப்பாற்றுகிறார். தளபதி வீரமோகனுக்கு ஒரே குழப்பம்.
ராஜகுருவின் சூழ்ச்சியால் வீரமோகன் நாடு கடத்தப்படுகிறான். பார்திபன் தளபதியாக்கப்படுகிறான். மந்திரிகுமாரி அமுதவல்லிக்குக் கணவனாகிறான்.
நாடு கடத்தப்பட்ட வீரமோகனை ராஜகுரு கொடுமையான முறையில் நடத்தி அதிகார பலத்தால் அடித்து விடுகிறார். இந்தச் சம்பவம், மன்னருக்கும் ராஜகுருவுக்கும் இடையே மனக்கசப்பை ஏற்படுத்துகிறது. ராஜகுருவுக்கு மன்னனாகும் ஆசை துளிர்விட்டு வளர்கிறது. ஒரு கொடியவன் அவர் எண்ணத்திற்கு தூபம் போடவே, அவர் எண்ணம், வலுவடையத் தொடங்குகிறது.
அரசகுமாரி ஜீவரேகா நாடு கடத்தப்பட்ட தன் காதலன் வீரமோகனைத் தேடிப் புறப்படுகிறாள். பார்திபன், மந்திரிகுமாரியை மணமுடித்த பின்பும் ஜீவரேகாவை, அடைய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
வீரமோகன் இருக்கும் இடம் தனக்குத் தெரியும் என்று யாரோ ஒருவன் மூலம் சொல்ல வைத்து அவளை தனது குகைக்கு வரவழைத்து விடுகிறான்.
அங்கே, அவள் கற்புக்கு களங்கம் ஏற்படப் போகும் தருணத்தில் ஆண் உடை தரித்து அவளைப் பின் தொடர்ந்து வந்த மந்திரிகுமாரி அமுதா, பார்திபனுடன் மோதுகிறாள். ஜீவரேகாவைக் காப்பாற்றித் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறாள்.
அமுதாவை பழிவாங்க திட்டம் தீட்டுகிறான் பார்திபன். காதல் மொழி பேசி, மலை உச்சிக்கு அழைத்துப் போய், அங்கிருந்து அவளை தள்ளிவிட்டு- விபத்து என்று சொல்லிவிடும் திட்டத்தில் அவளை அழைத்துக் கொண்டு மலைஉச்சிக்குப் போகிறான். உச்சியில், அமுதாவை கொன்று விடும் திட்டத்தை சொல்லவே, அவள் இறக்கப் போவதில் வருத்தமில்லை, என் கணவரை, நான் வணங்க வேண்டாமா? அதனால் உங்களை மூன்று முறை சுற்றி வணங்கிய பின்பு தங்கள் விருப்பம் போல என்னை தள்ளிக் கொலை செய்து விடுங்கள் என்று சொல்லி, மூன்றாவது சுற்று முடியும் போது தன் கணவனை அங்கிருந்து தள்ளி கொன்று விடுகிறாள்.
வீரமோகன் ஜீவரேகாவைத் தேடி அரண்மனைக்கு வருகிறான். அரசனைக் கொல்ல ராஜகுரு முயல்கிறான். மந்திரிகுமாரி மேல் கத்தி வீசப்பட்டு விடுகிறது. தேவி சிலைக்கு பின்னால் அருள்வாக்கு பேசியது முதல், தன் கணவன் பார்திபன் தன்னை கொல்ல முயற்சித்தது.
ஜீவரேகாவை, அவனிடமிருந்து காப்பாற்றியது போன்ற எல்லா உண்மைகளையும் சொல்லி, ஜீவரேகாவையும் வீரமோகனையும் இணைத்து வைத்து விட்டு இறந்து விடுகிறாள். ராஜகுருவின் சூழ்ச்சி அம்பலமாகி விடுகிறது. அவர் சிறைப்படுத்தப்படுகிறார்.
கனல் பறக்கும் வீரமான வசனங்களைப் போலவே, கருணாநிதியின் காதல் வசனங்களும், பாராட்டும்படி இருந்தது படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகும்.
பார்திபனாக நடித்த எஸ்.ஏ. நடராஜன் தனக்கே உரித்தான, தனித்தன்மையான குரலாலும் வித்தியாசமான நடிப்பாலும், பாராட்டுக்களைத் தட்டிச் சென்றார். ராஜகுருவாக, எம்.என். நம்பியார் சிறப்பாக நடித்திருந்தார். வீரமோகன் பாத்திரத்தில் எம்.ஜி.ஆர். தன் நடிப்பாலும், சண்டைக் காட்சிகளில் தனது வாள் வீச்சாலும் புகழை வளர்த்துக் கொண்டார். அவருக்கு ஜோடியாக ஜி. சகுந்தலா. மந்திரிகுமாரி டைட்டில் ரோலில் நடித்த மாதுரிதேவி, சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
"உலவும் தென்றல் காற்றினிலே'. "அந்தி சாயிர நேரம்', "எருமைக் கன்னுக்குட்டி', "வாராய், நீ வாராய்', "அன்னமிட்ட வீட்டிலே' போன்ற அத்தனை பாடல்களும் இன்றைய கால கட்டத்திலும் விரும்பிக் கேட்கும் பாடல்களாகும்.
தரமான படப்பிடிப்பும் திறமையான டைரக்ஷனும், வசனமும், பாடல்களும் நடிப்பும், ஒன்றோடு ஒன்று இணைந்து விட்டதால், மந்திரிகுமாரி மறக்க முடியாத படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைந்துவிட்டது.
நடிக, நடிகையர்
எம்.ஜி. ராமச்சந்திரன், எம்.என். நம்பியார், எஸ்.ஏ. நடராஜன், சி.வி. நாயகம், சிவசூரியன், கே.வி. சீனிவாசன், ஏ. கருணாநிதி, மாதுரிதேவி, ஜி. சகுந்தலா, டி.பி. முத்துலட்சுமி, அங்கமுத்து மற்றும் பலர்.
திரைக்குப்பின்னால்...
கதை வசனம் : மு. கருணாநிதி
இசை : ஜி. ராமநாதன்
தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
டைரக்ஷன் : டி.ஆர். சுந்தரம்,
எல்லிஸ். ஆர்.டங்கன்.
courtesy - cinema express
ஐம்பெரும் காவியங்களில் ஒன்றான “குண்டலகேசி”யில் வரும் ஒரு சம்பவத்தை அடிப்படையாக வைத்து, “மந்திரிகுமாரி” என்ற நாடகத்தை கலைஞர் உருவாக்கியிருந்தார். ஏற்கனவே மேடையில் வெற்றி பெற்ற அந்த நாடகத்தை திரைப்படமாகத் தயாரிக்க சுந்தரம் தீர்மானித்தார்.
திரைக்கதையை அமைத்து, வசனத்தை எழுதித் தரும்படி கலைஞரிடம் சுந்தரம் கேட்டுக்கொண்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று, வசனம் எழுதத் தொடங்கினார் கலைஞர்.
மந்திரிகுமாரியின் கதாநாயகனாக யாரைப் போடுவது என்று சுந்தரம் யோசித்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே கலைஞர் வசனம் எழுதிய ராஜகுமாரி, மருதநாட்டு இளவரசி ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்திருந்ததால், அவருக்கும், கலைஞருக்கும் நெருங்கிய நட்புறவு ஏற்பட்டிருந்தது. எனவே, கதாநாயகன் வேடத்துக்கு எம்.ஜி.ஆரை கலைஞர் பலமாக சிபாரிசு செய்தார்.
“ராஜகுமாரி” படத்தில் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்திருந்தாலும், தொடர்ந்து அவருக்கு கதாநாயகன் வேடம் கிடைக்கவில்லை. சுந்தரமும் உடனடியாக அவரை கதாநாயகனாகத் தேர்வு செய்யாமல், “அவருக்கு தாடையில் பெரிய குழி இருக்கிறதே” என்றார். “அங்கு சிறிய தாடியை ஒட்ட வைத்து விட்டால் சரியாகிவிடும். தளபதி வேடத்துக்குப் பொருத்தமாக இருப்பார். சண்டைக் காட்சிகளில் பிரமாதமாக நடிப்பார்” என்று கலைஞர் எடுத்துக் கூறினார். அதன்பின் எம்.ஜி.ஆரை ஒப்பந்தம் செய்தார் சுந்தரம்.
மந்திரிகுமாரியில் வில்லன் வேடம் முக்கியமானது. அதற்கு நாடக நடிகர் எஸ்.ஏ.நடராஜன் தேர்வு செய்யப்பட்டார். மற்றும் ராஜகுமாரி வேடத்துக்கு ஜி.சகுந்தலா, மந்திரிகுமாரி வேடத்துக்கு மாதுரிதேவி, ராஜகுரு வேடத்துக்கு எம்.என். நம்பியார் ஒப்பந்தமானார்கள்.
“மந்திரி குமாரி”யின் கதை, திருப்பங்கள் நிறைந்தது. முல்லை நாட்டு மன்னரின் மகள் ஜீவரேகவும் (ஜி.சகுந்தலா) மந்திரியின் மகள் அமுதாவும் (மாதுரிதேவி) ஆருயிர் தோழிகள். தளபதி வீரமோகனை ராஜகுமாரி காதலிக்கிறாள்.
மன்னரை ஆட்டிப்படைக்கும் ராஜகுருவின் (எம்.என்.நம்பியார்) மகன் பார்த்திபன் (எஸ்.ஏ.நடராஜன்) கொடூரமானவன். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் பயங்கர கொள்ளைக்காரன். “கொள்ளையடிப்பது ஒரு கலை” என்பது அவன் கொள்கை.
மந்திரிகுமாரி அமுதாவைக் கண்டதும் அவளை அடையத்துடிக்கிறான். அவனுடைய சுயரூபத்தை அறியாத அவள், அவனை மணக்கிறாள். கொள்ளைக் கூட்டத்தைக் கண்டு பிடிக்கும் முயற்சியில் தளபதி ராஜமோகன் ஈடுபட்டு, பார்த்திபனை பிடித்து அரசவையின் முன் நிறுத்துகிறான். ஆனால் ராஜகுருவின் சூழ்ச்சியால் பழி ராஜமோகன் மீது விழுகிறது.
தன் கணவன் கொடியவன் _ கொள்ளைக்காரன் என்பதை, அமுதா அறிந்து கொள்கிறாள். அவனைத் திருத்த முயல்கிறாள். உண்மையை அறிந்து கொண்டு விட்டாளே என்ற ஆத்திரத்தில், அவளைத் தீர்த்துக்கட்ட பார்த்திபன் முடிவு செய்கிறான்.
“வாராய் நீ வாராய்” என்று பாட்டுப்பாடி, அவளை மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அங்கிருந்து அவளைத் தள்ளிவிட அவன் முயற்சி செய்யும்போது, “சாவதற்கு முன் உங்களை மூன்று முறை சுற்றி வந்து வணங்க அனுமதியுங்கள்” என்று வேண்டுகிறாள், அமுதா.
அதற்கு அவன் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை சுற்றி வரும் போது, அவனை மலை உச்சியில் இருந்து கீழே தள்ளி விடுகிறாள். அவள் மூலம், உண்மையை அறிகிறார், அரசர். ராஜகுரு சிறைப்படுத்தப்படுகிறார். அரசகுமாரியும், தளபதியும் ஒன்று சேருகின்றனர்.
ஆரம்பத்தில் “மந்திரிகுமாரி”யை எல்லிஸ் ஆர்.டங்கன் டைரக்ட் செய்தார். அவர் அவசரமாக அமெரிக்கா போக வேண்டி இருந்ததால், டைரக்*ஷனை டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்தார். சென்சார் கெடுபிடியை சமாளித்து, 1950_ல் படத்தை வெளியிட்டார், டி.ஆர்.சுந்தரம். படம் மகத்தான வெற்றி பெற்றது.
கதை, வசனம், நடிப்பு, இசை எல்லாமே இதில் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக, கலைஞரின் வசனங்கள் கூர்மையாக அமைந்திருந்தன. “அனல் பறக்கும் வசனம்; கனல் தெறிக்கும் நடிப்பு” என்று விளம்பரம் செய்தார்கள்.
நம்பியாருக்கும், எஸ்.ஏ.நடராஜனுக்கும் இடையே நடைபெறும் ஒரு உரையாடல்:
“பார்த்திபா! நீ கொள்ளையடிப்பதை விட்டுவிடக் கூடாதா?”
“கொள்ளை அடிப்பதை விட்டு விடுவதா? அது கலையப்பா, கலை!”
“என்ன! கொள்ளையடிப்பது கலையா?”
“ஆம் தந்தையே! அது கலைதான். வில்லில் இருந்து புறப்படும் அம்பு எத்தனையோ உயிர்களைக் குடிக்கிறது. ஆனால், வில்வித்தை என்ற பெயரால், கொலை அங்கே கலையாகிறது. ஓவியக் கலைஞன், பெண்ணின் அங்கங்களை வரைந்து காட்டுகிறான். ஓவியக் கலையின் பெயரால், காமம் அங்கே கலையாகிறது. அதுபோல இதுவும் ஒரு கலைதான்!”
“இந்தக் கலையை விட்டுவிடக் கூடாதா?”
“கொக்கு மீனைப் பிடிக்காமல் இருந்தால், பாம்பு தவளையை விழுங்காமல் இருந்தால், நானும் என் கலையை விட்டு விடுவேன்.” இத்தகையை வசனங்கள் ஏராளம்.
“கொள்ளை அடிப்பதை கலை என்று கலைஞர் கூறுகிறார்” என்று மாற்றுக் கட்சியினர் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அதற்குக் கலைஞர் கூறிய பதில்: “கொள்ளை அடிப்பதும் ஒரு கலை என்று, அப்படத்தில் தீயவன் ஒருவன்தான் கூறுகிறான். கடைசியில் அவன் அழிந்து போகிறான். ராமாயணத்தை எழுதியவர், கூனி பாத்திரத்தையும் படைத்தாரே, கூனியின் சுபாவம் அதை எழுதியவருக்கு சொந்தமானதா? மகாபாரதத்தை எழுதியவர், சகுனி பாத்திரத்தைப் படைத்தாரே. அப்படியானால் அவர் சகுனியின் செய்கைகளை ஆதரிப்பதாக அர்த்தமா?”
எம்.ஜி.ஆர், நம்பியார், மாதுரிதேவி ஆகிய அனைவரும் நன்றாக நடித்திருந்தபோதிலும், புதிய பாணியில் பேசி நடித்த எஸ்.ஏ.நடராஜன் பெரும் புகழ் பெற்றார்.
(மந்திரிகுமாரியைத் தொடர்ந்து, எஸ்.ஏ.நடராஜனுக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அதில் அவர் சோபிக்க முடியவில்லை. மந்திரிகுமாரிக்குப் பிறகு, அவருக்கு பெயர் சொல்லும் படமாக “மனோகரா” மட்டுமே அமைந்தது.)
“மந்திரிகுமாரி”யின் பாடல்களை கா.மு.ஷெரீப், மருதகாசி ஆகியோர் எழுதினர். ஜி.ராமநாதன் இசை அமைத்தார். திருச்சி லோகநாதனும், ஜிக்கியும் பாடிய “வாராய், நீ வாராய்” என்ற பாடல், இன்றைய ரசிகர்கள் கூட விரும்பும் பாடலாக விளங்குகிறது
(நன்றி : மாலைமலர்)