-
கலைமன்னன்
சமூக சிற்பி
http://i39.tinypic.com/2dh7cjd.jpg
மக்கள் திலகத்தின் 8 படங்கள், விவரங்கள் தெரிந்தவரை, (18.08.2013) தமிழ் நாட்டில் மக்கள் வெள்ளத்தில் திருவிழாவாக திரையிடப்பட்டது என்ற செய்தி நமக்கு இன்பத்தேன். இந்த திரைப்படங்கள் அன்றும், இன்றும் மக்களால் விரும்பப்படுவதற்கு முக்கிய காரணம் புரட்சித்தலைவர் என்றாலும், இந்த வெற்றிகளுக்கு முக்கிய காரணிகள் என்ன? நம் இதய தெய்வம் ஆரம்ப காலங்களிலிருந்தே, தன்னுடைய படங்கள் மக்களுக்குத் தேவையான செய்திகளை, நல்ல அறிவுரைகளை சொல்லும் ஊடகமாகத் திகழ வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தார். நாம் திறம்பட நடித்தோம், பணம் பெற்றோம், அதோடு நம் பங்கு முடிந்தது என்றில்லாமல், அந்த திரைப்படத்தை எப்படியெல்லாம் பட்டை தீட்ட வேண்டுமோ அப்படியெல்லாம் பட்டை தீட்டி, ஜொலிக்க வைத்த நடிகப்பேரொளி நம் மக்கள் திலகம். பட்டை தீட்டியது மட்டுமல்லாமல், பாடல்கள், இசை, வசனங்கள், காட்சி அமைப்புகள், சண்டை காட்சிகள் என ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு, ஒரு சிலையை அழகுடன் ஜொலிக்க ஒரு சிற்பி எவ்வளவு கவனமும், சிரத்தையுடனும் எடுப்பாரோ அந்த அளவிற்கு ஒரு திரைப்படத்தை செதுக்கிய சிற்பி அவர். ஏனெனில் அவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, சிறந்த திரைப்பட தொழில்நுட்பக்கலைஞர். மேலும் அதில் சொல்லப்படும் கருத்துகளை நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கும் ஏற்றதாகக் கூறி, எல்லா தரப்பினரையும் கவரும் வண்ணம் மாற்றங்களை செய்து,அந்த திரைப்படங்கள் சமுதாயத்தில் ஒரு மாற்றத்தையே ஏற்படுத்த வேண்டும் என்று பாடுபட்டாரே அவரை, சமூக சிற்பி என்றாலும் முக்காலமும் உணர்ந்த தீர்க்கதரிசி என்றாலும் தகும்.
http://i44.tinypic.com/14e8avt.jpg
தீர்க்கதரிசி
அதனால்தான் இன்றளவிற்கும் அவருடைய படங்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் மட்டுமல்லாது, அனைவரையும் கவரும் வண்ணமாக இருக்கிறது. படம் முதல் வெளியீட்டிலிருந்து, இன்று வரை வசூலை அள்ளிக்குவிக்கிறது. தலைவரது திரைப்படங்கள் படத்தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மீது பாசம் வைக்குமே தவிர எந்த காலகட்டத்திலும் மோசம் செய்யாது. அது கருப்பு வெள்ளை படமாக இருந்தாலும் சரி, வண்ணப்படமாக இருந்தாலும் சரி, அப்படங்கள் வசூல் சக்ரவர்த்தி என்ற பட்டத்தையோ, மினிமம் கேரண்டி ராமச்சந்திரன் என்ற நம்பிக்கையையோ எந்த காலத்திலும் வீணாக்கியதே இல்லை. சமீப வெளியீடான முகராசி, மதுரை வீரன், நாடோடி மன்னன் மற்றும் உரிமைக்குரல், நினைத்ததை முடிப்பவன்.................. இன்னும் பல திரைப்படங்கள் இதற்கு உதாரணங்கள். இடைவெளி இல்லாமல், தினசரி விளம்பரம் இல்லாமல் நம் தெய்வத்தின் திரைப்படங்கள் சாதிக்கும் சாதனைக்கு ஈடிணை உண்டோ?
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர் ..
-
100 % உண்மை திரு கலியபெருமாள் சார்
இந்த இரண்டு வாரத்தில் மட்டும் நெல்லையில் ஒரு தாய் மக்கள் விழா
கோவையில் உரிமைக்குரல் விழா உடனே நினைத்ததை முடிப்பவன் விழா ,
சேலத்தில் நாடோடிமன்னன் விழா
சென்னையில் இன்றுபோல் என்றும் வாழ்க விழா ,உடனே நேற்று இன்று நாளை விழா
மற்றும் திருச்சியில் புதியபூமி
திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள்திலகத்தின் படங்கள் வந்தாள்தான் முடியும் என்று நம்புகிறார்கள்
அந்த நம்பிக்கையை நம் தலைவன் அவர்களுக்கு இன்னமும் அளித்து கொண்டிருக்கிறார்
என்றும் அளிப்பர் நம் தலைவன்
http://i42.tinypic.com/aww9si.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
-
Thanks Vellore Ramamurthy for bringing back our Verangan memories.
-
-
இன்றைய தினமலர் (21.08.2013) செய்தி.
http://i43.tinypic.com/aw2fbp.jpg
புரட்சித்தலைவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில், 1967ல், அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்து குரல்வளையிலிருந்து குண்டை அகற்றிய டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் 'முது முனைவர்' பட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நம் இதய தெய்வத்தின் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த, நன்றி கலந்த, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
Quote:
Originally Posted by
MGRRAAMAMOORTHI
100 % உண்மை திரு கலியபெருமாள் சார்
இந்த இரண்டு வாரத்தில் மட்டும் நெல்லையில் ஒரு தாய் மக்கள் விழா
கோவையில் உரிமைக்குரல் விழா உடனே நினைத்ததை முடிப்பவன் விழா ,
சேலத்தில் நாடோடிமன்னன் விழா
சென்னையில் இன்றுபோல் என்றும் வாழ்க விழா ,உடனே நேற்று இன்று நாளை விழா
மற்றும் திருச்சியில் புதியபூமி
திரையரங்கு உரிமையாளர்கள் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட மக்கள்திலகத்தின் படங்கள் வந்தாள்தான் முடியும் என்று நம்புகிறார்கள்
அந்த நம்பிக்கையை நம் தலைவன் அவர்களுக்கு இன்னமும் அளித்து கொண்டிருக்கிறார்
என்றும் அளிப்பர் நம் தலைவன்
http://i42.tinypic.com/aww9si.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார்
இனிய நண்பர் திரு. வேலூர் ராமமூர்த்தி அவர்களின் நாடோடி மன்னன் வெற்றி விழா நிகழ்ச்சிகளின் தொகுப்பு மிகவும் அருமை. ஒவ்வொரு புகைப்படத்திலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. வெற்றி விழா முழுமையும் நேரிலிருந்து பார்த்த நிறைவினைத் தரும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
இன்றைய தினமலர் (21.08.2013) செய்தி.
http://i43.tinypic.com/aw2fbp.jpg
புரட்சித்தலைவர் துப்பாக்கி குண்டு காயத்துடன் சென்னை அரசு பொது மருத்துவமனையில், 1967ல், அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரது கழுத்து பகுதியில் அறுவை சிகிச்சை செய்து குரல்வளையிலிருந்து குண்டை அகற்றிய டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை பட்டமளிப்பு விழாவில் 'முது முனைவர்' பட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். நம் இதய தெய்வத்தின் ரசிகர்கள் மற்றும் தமிழக மக்கள் சார்பில் டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு நம் நெஞ்சார்ந்த, நன்றி கலந்த, வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வோம்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்.
நன்றி திரு கலியபெருமாள் sir,
மிக நல்ல செய்தி
இப்படிக்கு
எஸ் ரவிச்சந்திரன்
------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்.
------------------------------------------------
-
-
-