-
எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கு, பெரும்பான்மையான பாடல்களை என் சகோதரர் மருதகாசிதான் எழுதி வந்தார். சர்வாதிகாரி, அலிபாபாவும் 40 திருடர்களும், பாக்தாத் திருடன், தாய்க்குப்பின் தாரம், தாய் மகளுக்குக் கட்டிய தாலி, மாடப்புறா, நினைத்ததை முடிப்பவன், மன்னாதி மன்னன், மகாதேவி, விவசாயி போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை.
கவிஞர் சொந்தப்படம் எடுத்து அது தோல்வியில் முடிந்ததால், சம்பாதித்ததை எல்லாம் இழந்தார். கடன் தொல்லையால், வெளியார் படங்களுக்கு பாடல் எழுத முடியாத நிலை ஏற்பட்டது.
கவிஞர் கடன் தொல்லையால் அவதிப்படுவதையும், தொழிலை படிப்படியாக இழப்பதையும் அவினாசி மணி மூலம் அறிந்த எம்.ஜி.ஆர்., என் சகோதரரை அழைத்துப்பேசி, தொல்லைகளில் இருந்து அவரை மீட்டார்.
இந்த சந்தர்ப்பத்தில் பட அதிபர் ஜி.என்.வேலுமணி, சின்னப்ப தேவரின் தம்பி திருமுகம் ஆகியோர் செய்த உதவிகளும் மறக்க முடியாதவை.
1963-ல் இருந்து 1967 வரை என் அண்ணன் சென்னை வீட்டை காலி செய்து விட்டு எங்கள் ஊருக்கே வந்துவிட்டார்கள்.
1967-ல் எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு, குணம் அடைந்தவுடன், பலரும் அவரை நடிக்க அழைத்தனர். ஆனால், தேவர் படத்தில் நடிப்பதற்குத்தான் எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார். 'பாடல்களை மருதகாசியை வைத்தே எழுதுங்கள்' என்று தேவரிடம் சொல்லிவிட்டார்.
அதைத்தொடர்ந்து, மருதகாசிக்கு தேவர் கடிதம் எழுதினார். 'நான் அடுத்து எடுக்கப்போகும் படத்தின் பெயர் 'மறுபிறவி.' எம்.ஜி.ஆர். எடுத்திருப்பதும் மறுபிறவி. பட உலகைத் துறந்துவிட்ட உங்களுக்கும் மறுபிறவி. அதாவது 4 ஆண்டுகளுக்குப்பின் மறுபிரவேசம் செய்கிறீர்கள். உடனே புறப்பட்டு சென்னைக்கு வாருங்கள்' என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி கவிஞர் உடனே புறப்பட்டுச் சென்று, சென்னையில் எம்.ஜி.ஆரையும், தேவரையும் சந்தித்தார். எம்.ஜி.ஆரின் ஆதரவோடு, என் அண்ணன் மருதகாசியின் திரையுலக மறுபிரவேசம் நிகழ்ந்தது.
'மறுபிறவி' படம், ஒரு பாடலோடு நிறுத்தப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக, 'தேர்த்திருவிழா' படத்தை தேவர் தயாரித்தார். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் அண்ணன் மருதகாசியே எழுதினார்.
தேவருக்கு பெரும்பொருளை அள்ளித் தந்தது, அந்தப்படம். பாதிப்படத்தின் படப்பிடிப்பு எங்கள் கிராமப் பகுதியில் அமைந்த கொள்ளிடம் கரையில்தான் நடந்தது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்தார்.
எம்.ஜி.ஆர். என் அண்ணனுக்கு எல்லா சந்தர்ப்பங்களிலும் உதவியிருக்கிறார். ஒவ்வொரு மகன் திருமணத்திற்கும் உதவியிருக்கிறார்.'
courtesy - பேராசிரியர் முத்தையன்
-
‘மந்திரிகுமாரி’(1950).
ஆட்சியாளர்களை மதவாதிகள் எப்படி ஆட்டிப் படைக்கிறார்கள் என்பதுதான் கதை. கலைஞரின் வசனத்தில் எம்.ஜி.ஆர். ‘வீரமோகன்’ என்ற தளபதி பாத்திரத்தில் நடித்தார். எல்லீஸ் ஆர்.டங்கன் இயக்கினார். இந்தப் படத்திலும் கலைஞரின் வசனங்கள் வரவேற்பைப் பெற்றன. “அரண்மனை நாயே.. அடக்கடா வாயை…” என்பது மந்திரிகுமாரியின் வசனத் தெறிப்புகளில் ஒன்று.
நாட்டு நடப்பை புராண-இதிகாச-காப்பியங்கள் அடிப்படையிலான திரைப்படங்களிலும் திறமையாக வெளிப்படுத்தும் கலைஞரின் ஆற்றல் இதிலும் வெளிப்பட்டது. கொள்ளைக்கூட்டத் தலைவன் வெளியே சென்றிருக்கும் சமயத்தில், குகையில் உள்ள அவனுடைய கூட்டத்துக்குத் தற்காலிகத் தலைவனாக ஒருவன் உருவாகிவிடுவான். மற்றவர்கள் அவனை எதிர்த்ததும், எதிர்ப்பவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு பதவி கொடுத்து சரிகட்டுவான். “நீ நிதி மந்திரி.. நீ உணவு மந்திரி..’ எனப் பதவிகள் வழங்கப்படும். அப்போது ஒருவன், “எனக்கு எதுவும் கிடையாதா? நீங்க போன்னா போறதுக்கும் வான்னா வரதுக்கும் நான்தான் ஆளா?” எனக் கோபப்படுவான். உடனே அந்த தற்காலிகத் தலைவன், “போன்னா போறே.. வான்னா வர்றே.. நீதான்டா போக்குவரத்து மந்திரி” என்பான். அந்த நேரத்தில், கொள்ளைக்கூட்டத் தலைவன் திரும்பி வந்துவிடுவான். குகையில் இருந்தவர்கள் தற்காலிகப் பதவிகளை மறந்து, வழக்கம்போல கொள்ளைக்கூட்டத் தலைவனின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள். அப்போது ஒருவன் மெல்லிய குரலில், “என்னடா மந்திரி பதவி வந்ததும் தெரியலை.. போனதும் தெரியலை…” என்பான். திரையரங்கம் சிரிப்பால் அதிரும். இன்றைய நிலையிலும் கச்சிதமாகப் பொருந்தக்கூடிய வசனம் இது.
-
-
கவியரசர் கண்ணதாசனின் பிறந்த நாள் 24.6.2015
மக்கள் திலகத்தின் பல படங்களுக்கு பாடல்கள் எழுதி புகழ்பெற்றவர் கவியரசர் கண்ணதாசன்
கண்ணதாசன் வசனம் எழுதிய மக்கள் திலகம் படங்கள் .
மதுரை வீரன் - 1956
மகாதேவி -1957
நாடோடி மன்னன் - 1958
ராஜா தேசிங்கு - 1960
மன்னாதி மன்னன் - 1960
திருடாதே - 1961
ராணி சம்யுக்தா -1962
அரசியல் ரீதியாக மக்கள் திலகம் எம்ஜிஆர் - கண்ணதாசன் நட்பில் விரிசல் இருந்தாலும் காலபோக்கில் மாறுதல்
ஏற்பட்ட பின் கவியரசர் தமிழக ஆஸ்தான கவிஞராக நியமிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார் .
-
Music. Sound, Voice = M.S.V.
நவீன உலகில் இசை உருவாக்கம் என்பது கணிணி சார்ந்த ஒன்றாகிவிட்டது.
அன்றைய காலக்கட்டத்தில்.. எல்லாமே அந்த ஆர்மோனியக் கட்டைக்குள் இருந்துதான்.. அப்படியென்றால் இசைக்கலைஞனின் மூலையிலிருந்துதான்.. முழுக்க.. முழுக்க..
அப்படி.. இசையை கேள்வியறிவின்மூலம் பெற்று.. முன்னணி இசையமைப்பாளரிடம் உதவியாளராய் பணிபுரிந்து.. தனது ஞானத்தால், தெய்வ அருளால், பெரியவர்களின் ஆசியால்.. காலம் கனிந்திட.. கண்ணதாசன் முதலான மாபெரும் கவிஞர்களின் பாடல்களுக்கெல்லாம் உயிர்கொடுத்த இசை வழங்கி.. ஆயிரக்கணக்கில் பாடல்களுக்கு இசையமைத்து நூற்றாண்டு சாதனை படைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு.. 24.6.2015 அன்று இனிய பிறந்த நாள் .
-
MELLISAI MANNARIN SUPERB TITLE MUSIC.
https://youtu.be/3HvyBAAopq0
-
-
-
-