முத்து அடிக்கும் கூத்து.1
நம்ம நவரசத் திலகம் திடீர் திடீரென பிகர்களுடன் பிக்னிக் போய் வியக்கத் தக்க வகையில் பாடி ஆடிடுவார். அப்படி சில பாடல்களைப் பார்ப்போம்.
'பத்துமாத பந்தம்' படத்தில் பெரிய குரூப்பாக சரோஜாதேவி, ராஜஸ்ரீ, மனோரமா, மற்றும் இளம் சிட்டுக்களுடன் முத்துராமன் டிப்-டாப்பாக உடை அணிந்து அதுவும் கலரில் பாடி ஆடுவது கொஞ்சம் வியப்புத்தான். தேங்காயும் தொடை தட்டி உடன் ஆடுவார். முத்துராமனுடன் ஆடும் சிட்டுக்களில் ஒருவர் பின்னால் புகழ் பெற்ற நடிகையானார். சங்கர் கணேஷ் இசையில் பாடல் அமர்க்களம்.
https://youtu.be/FKRcP6rwySY
முத்து அடிக்கும் கூத்து.2
இங்கே துலாபாரத்தில் முத்துராமன் காஞ்சனா, சாரதா சகிதம் கல்லூரி மாணவ மாணவிகளுடன் உல்லாசப் பயணம் போய் அட்டகாசமான பாடல் பாடி குறும்புத்தனத்தில் நம்மைக் குதூகலப் படுத்துவார். சற்றே விலகி நின்று முத்துவின் பாடலை ரசிக்கும் சாரதா, காஞ்சனாவின் கூச்சம் கலந்த இயல்பான வெட்கம் அருமை.
பாடகர் திலகத்தின் திறமைக்கு ஒரு சான்று.
முத்தான முத்துராமனின் பாடல். என் நெஞ்செமெல்லாம் நிறைந்து எந்நாளும் சுவை கூட்டி மகிழ்ச்சியடையச் செய்யும் பாடலும் கூட. தேவராஜன் தந்த தேவ ராகங்களில் ஒன்று.
https://youtu.be/Md8lIx_OdyE
முத்து அடிக்கும் கூத்து.3
இங்கே முத்து டூர் போக வில்லை. வசந்த மாளிகை நடிகர் திலகத்தின் 'ஒரு கிணத்தை ஏந்துகிறேன்' ரேஞ்சிற்கு இளம் மொட்டுக்களுடன் ஏழெட்டுப் பெண்கள் பக்கம் இருக்க அவர்களுடன் ப்ளே-பாயாக நீச்சல் குளத்தில் சுறுசுறு ஆட்டம். இதுவும் வண்ணமே.
ஷப்னம், ரேணுகா, மீனா, விஜயலட்சுமி என்று துணை நடிகைகளுடன் 'பதிலுக்கு பதில்' தரும் 'ஜலசா'ராமன். ஜலக்கிரீடை ராமன்.(இந்தப் படத்தில் ஜெய்சங்கர் இருப்பதாக இணையத்தில் தவறான தகவல். கௌபாய் என்றால் அது ஜெய் தான் என கண்மூடித்தனமான முடிவு. 'நடிப்புச் சுடர்' கனைக்கும் குதிரையில் குந்தி 'கன்' ஏந்தி சுட மாட்டாரா?) 'குட்டி' பத்மினி இதில் குமாரி பத்மினி ஆகி விடுவார் டைட்டிலில். அப்போ ஏ.பி.நாகராஜனின் ஆஸ்தான 'குமாரி' பத்மினி?
https://youtu.be/K6BG05uMXHk
முத்து அடிக்கும் கூத்து.4
இங்கே கொடியிடை ஜெயகுமாரி கிளப்பில் ஆட 'அநாதை ஆனந்தனை'த் தீர்த்துக் கட்டத் துடிக்கும் வில்லன் முத்துராமன் சரக்கு போட்டுக் கொண்டு போதையில் குமாரி மேல் 'குபீர்' என்று பாய ரெடியாய் இருகிறார். உடன் தள்ளாடி ஆடவும் செய்கிறார். இதுவும் கலரே.
ஜெயகுமாரிக்கு மட்டுமே பாடல். பின்னணி? வேறு யார் இதற்கெல்லாம் சூட் ஆவார்கள்? ஒரே ஒரு ராட்சஸி தானே?
ஆனால் பாடல் அமர்க்களமோ அமர்க்களம்.
இங்கு பார்ப்பதை யாருக்கும் சொல்லாதே
நீ பார்
இனி பள்ளிக்கு வேறெங்கும் செல்லாதே
என்னைப் பார்
கண்ணைப் பார்
ஹோ..பெண்ணைப் பார்.
https://youtu.be/ADwqGQstoSk
முத்து அடிக்கும் கூத்து.5
இது ரொம்ப அபூர்வம்.
'குல கௌரவம்' காக்கும் தந்தை முத்துராமன் பெற்ற முத்து தோழி தோழர்களுடன் 'நான் வாழ்கிறேன்...தேன் இசையிலே' என்று வயலின் துணை கொண்டு பாடுகிறார். பாட்டு ரொம்ப நாளாச்சு கேட்டு.
https://youtu.be/8yx23rknt2s