It is bad time for tamil cinema..
Hindi and telugu cinema are outperforming tamil cinema these days! :(
Printable View
It is bad time for tamil cinema..
Hindi and telugu cinema are outperforming tamil cinema these days! :(
It's going to be real challenge for prabhas to choose his next movie :roll: people expectation would be so high,I think he's is going to have hard time...
rajamouli ss @ssrajamouli Oct 6 Baahubali will be screened three times and this is the 5000 capacity outdoor auditorium that will play it on 7th..
https://pbs.twimg.com/media/CQowRd0U8AA6lAj.jpg
rajamouli ss @ssrajamouli Oct 6 Audience. Many Koreans took my autograph on the dvd cover of EEGA... That film did so much to my career...thanks EEGA...:)
படப்பிடிப்பு தாமதமாவதால் தள்ளிப்போகும் 'பாகுபலி 2' ரிலீஸ் - TAMIL HINDU
http://tamil.thehindu.com/multimedia...i_2419910f.jpg
2016 கோடை விடுமுறைக்கு வெளியிட திட்டமிடப்பட்டு இருந்த 'பாகுபலி 2' திரைப்படம் தற்போது 2016 நவம்பரில் வெளியிட திட்டமிட்ட்டுள்ளனர்.
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'பாகுபலி'. ஆர்கா மீடியா நிறுவனம் தயாரித்தது, தமிழில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய படத்தை, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
இந்திய அளவில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், வசூலையும் வாரிக் குவித்தது. தற்போது, சீனாவில் 'பி.கே' படத்தை வெளியிட்ட இ-ஸ்டார்ஸ் நிறுவனம் 'பாகுபலி' படத்தின் உரிமையையும் வாங்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இப்படத்தை விளம்பரப்படுத்த படக்குழு களம் இறங்கியிருப்பதால், 'பாகுபலி' இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை படக்குழு இன்னும் தொடங்கவில்லை.
'பாகுபலி' படத்தை விளம்பரப்படுத்தி, வெளிநாடுகளில் முதலில் வெளியிடும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள். அதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை முடித்து 2016 நவம்பரில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதற்கு முன்பு 2016 கோடை விடுமுறை வெளியீடாக 'பாகுபலி 2' வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
'பாகுபலி' முதல் பாகத்துக்கான படப்பிடிப்பின் போதே இரண்டாம் பாகத்துக்கான 40% படப்பிடிப்பை ராஜமெளலி முடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர முதல்வர் கொடுத்த வாய்ப்பை நிராகரித்த ராஜமௌலி!
மாவீரன், ஈ, பாகுபலி படங்களின் மூலம் இந்தியப்புகழடைந்த ராஜமௌலி தற்போது அனைவரின் எதிர்பார்ப்பான பாகுபலி 2 படத்தின் உருவாக்கத்தில் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் ஆந்திராவில் புதியதலைநகர் அமைக்கும் பணி விரைவில் துவங்கப்பட இருக்கிறது. மேலும் இந்தத் தலைநகர் அமைப்பில் சில சினிமா இயக்குநர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அரங்கங்களும், விழாவும் உருவாக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு பொயாபதி மற்றும் ராஜமௌலி இருவரிடமும் கேட்டார்களாம். செட்டிங் அமைக்கும் பணிக்கு ஆந்திர முதல்வர் சந்திர பாபு அளித்த தொகையில் விருப்பமில்லை எனக் கூறி பொயாபதி விலகியுள்ளார்.
அடுத்தகட்டமாக இந்த வாய்ப்பு, ராஜமௌலிக்குப் போயிருக்கிறது. அவர் எதுவுமே கேட்காமல் மறுத்துவிட்டாராம். பாகுபலி 2 படத்தை முடிக்கும் வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபட முடியாது என திட்டவட்டமாக கூறி மறுத்துவிட்டாராம்.
வரவேற்பு நிகழ்ச்சியை மிக விமரிசையாக சினிமா பாணியில் நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. காரணம் இந்த விழாவிற்கு இந்தியப்பிரதமர் நரேந்திர மோடிக்கும் அழைப்பு விடுக்க உள்ளனர் என்பதுதான் இவ்வளவு ஏற்பாடுகளுக்கும் காரணமாம்.
எனினும் தற்போது இரு பெரும் இயக்குநர்களும் நிராகரிக்க வேறு ஒரு இயக்குநருக்காக காத்திருக்கிறார்கள் ஆந்திர அரசியல் பிரமுகர்கள்.
நேரடி தமிழ் படங்களே 100 நாளை கடப்பது அரிதாகிவிட்ட சூழ்நிலையில் தெலுங்கு, தமிழில் உருவாகி தெலுங்கு வாசனையுடன் வெளிவந்த பாகுபலி 100 வது நாளை கடந்து சாதனை படைத்திருக்கிறது. இதற்கு முன்பு, இதுதாண்டா போலீஸ், அருந்ததி போன்ற படங்கள் இத்தகைய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. அவை டப்பிங் படங்கள் இது இரு மொழிப்படம்.பிரமாண்ட தயாரிப்பு, சீனுக்கு சீன் திருப்பம் நிறைந்த திரைக்கதை. பிரபாஸ், ராணாவின் வீரமான நடிப்பு, தமன்னாவின் அழகு எல்லாமுமாக சேர்ந்து படத்தை 100 வது நாளில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது. சென்னையில் 6 தியேட்டர்களில் 100 நாளை கடந்திருக்கிறது. மற்ற ஊர்களில் ஓரிரு தியேட்டர்களில் எட்டிப்பிடித்திருக்கிறது.இந்திய சினிமா சரித்திரதில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். அதிக வசூலைக் கொடுத்த படம். வெளியான அத்தனை மொழிகளிலும் வெற்றி பெற்ற படம். உலக சினிமா ரசிகர்களை இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்த படம் என பலவேறு சிறப்புகளை பெற்றிருக்கிறது பாகுபலி.ஆந்திராவில் 100 வது நாளை வெகு விமர்சையாக கொண்டடுகிறார்கள். இதன் அடுத்த பாகத்தின் பணிகளும் வேகமாக தொடங்கி இருக்கிறது. இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலிக்கு தெலுங்கு திரையுலகம் வாழ்த்துக்களை அள்ளி வழங்கி வருகிறது.
Baahubali 100 Days Poster
https://pbs.twimg.com/media/CRgkfJcUwAAJjsa.jpg
தமிழ் வேர்ஷன் வெளியிட்டது யாரு? விநியோகஸ்தர்கள்??
ஞானவேல்ராஜா தமிழில் விநியோகம் செய்ததாக வருகிறது. கார்த்தி, சூர்யா படங்களில் விட்ட காசையெல்லாம் இப்படி பிடிச்சாத்தான் சமாளிக்க முடியும். :)