My eyes were wet when i read this... :bow:Quote:
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று ரஹ்மான் ஆஸ்கார் விருதை கையில் வாங்கியபடியே தமிழில் சொல்லிய நிமிசம் என்னை அறியாமல் கண்கள் ததும்ப துவங்கியது. அது ரஹ்மான் வாங்கிய விருது மட்டுமல்ல. இத்தனை வருடங்களாக இந்திய சினிமா கண்டு கொண்டிருந்த கனவை ரஹ்மான் நிறைவேற்றி காட்டியுள்ளார் என்ற உச்ச சந்தோஷத்தின் வெளிப்பாடு.
எண்பத்தியோறு வருட ஆஸ்கார் நிகழ்வில் முதன்முறையாக ஒரு தமிழ்குரல் ஒலித்திருக்கிறது. அதுவும் மிகுந்த தன்னடக்கமான குரல். தமிழ் மக்கள் என்றும் பெருமைபட்டுக் கொள்ள கூடிய நிரந்தர கௌரவத்தை ரஹ்மான் சாதித்து காட்டியிருக்கிறார்.
Oru sila vishayangala, oru sila pEr ezhudhinA than rasikka mudiyudhu :bow:
