-
அன்புள்ள பம்மலார் / வாசுதேவன் / ராகவேந்தர்,
'கர்ணன்' 101-வது கொண்டாட்டங்களின் நிழற்பட அணிவகுப்பைத் தந்து மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டீர்கள். சத்யம் திரையரங்கு முன்பு நடந்த கொண்டாட்டங்களை நேரில் கண்டுகளித்த உணர்வு ஏற்பட்டது. இதற்காக நீங்கள் மூவரும் பட்டிருக்கும் சிரமங்கள் எவ்வளவு என்பதை உணர முடிகிறது.
ரசிக இதயங்கள் அமைத்திருக்கும் வண்ணப்பதாகைகளில் இடம்பெற்றிருக்கும் வாசகங்கள் அனைத்தும் உண்மையன்றி வேறில்லை. இத்தனை ஆண்டுகளிலும் ரசிகர்கள் படை அதே உற்சாகத்துடனும் உத்வேகத்துடனும் செயல்பட்டு வருவது போற்றுதற்குரியது.
அன்பு வாசுதேவன் சார்,
அவல் கொண்டு வந்திருக்கிறேன் என்று அடக்கத்துடன் சொல்லிவிட்டு, அறுசுவை விருந்தே படைத்து விட்டீர்களே.
தங்கள் மூவருக்கும் பாராட்டுக்கள், நன்றிகள்.
-
அன்பிற்கினிய திரு.சிவாஜிதாசன் அவர்களே!
தங்கள் உன்னத, உயரிய, உண்மையான பாராட்டிற்கும், அன்பிற்கும் மிக்க நன்றி. மன்னர்களுக்கும் மேலாக போற்றி வணங்கக் கூடியவர்கள் தங்களைப் போன்ற நன்மக்கள் அல்லவா! நாங்களல்லவா தங்களுக்கு நன்றிகள் கூற வேண்டும். நன்றி! நன்றி! நன்றி!
ஞானஒளியின் அற்புதக் காட்சியை அழகாகப் பதிவு செய்து கண்களைக் குளமாக்கி விட்டீர்கள். தங்கள் ரசனையும், என் ரசனையும் ஒரே மாதிரி இருக்கிறது. ஞானஒளி படத்தைப் பார்த்து விட்டு நடிகர் திலகத்தின் நடிப்பில் இரவெல்லாம் தூங்காமல் பல சமயங்களில் தலையணை நனையும் அளவிற்கு கண்ணீர் வடித்துள்ளேன்.
-
அன்பு பம்மலார் சார்,
"கணிப்பொறியியலின் தந்தையா ஏலன் ட்யூரிங்(Alan Turing) அவர்களுக்கும், கலையுலகத் தந்தையின் "கர்ணன்" காவியத்துக்கும் என்ன சம்பந்தம்?" என்ற அற்புத வினாவை எழுப்பி அதற்குண்டான விளக்கத்தை அழகுற வர்ணித்த தங்கள் ஆறாவது அறிவுக்கு ஆர்ப்பரித்த நன்றிகள்.
பொக்கிஷாதி பொக்கிஷமான, பேசும் படத்தின் கர்ணன் தயாரிக்கப்பட்ட வரலாற்றின் பத்துப் பக்கங்களைப் பதித்து 'பக்கா பதிவாளர்' என்ற பட்டத்தை நிரந்தரமாகப் பெற்று விட்டீர்கள்.
"கர்ணன்" துணைத் தயாரிப்பாளர் திரு.'சித்ரா' கிருஷ்ணசாமி மிக அற்புதமாக கர்ணன் செதுக்கப்பட்ட வரலாற்றை வரைந்துள்ளார்.
உண்மையிலேயே வரலாற்று சிறப்பு மிக்க பதிவு.
"கர்ணன்"{டிஜிட்டல்}101வது நாள் வெற்றித்திருவிழா புகைப்படங்கள் பிரமாதம். தெளிவான புகைப்படங்கள் அளித்ததற்கு நன்றிகள்.
-
அன்பு கார்த்திக் சார்,
இன்டர்நெட் பழுதடைவால் ஒரு சில நாட்கள் நீங்கள் வராமல் போனதும் மீண்டும் சப்'பென்று ஆகி விட்டது. ஏனென்றால் தங்களுக்கு மிகவும் பிடித்த 'ராஜா'வை நீங்கள் பார்த்திருப்பீர்களோ இல்லையோ என சற்று குழப்பம். நல்லவேளை! நீங்களே உடனே திரிக்கு வந்து விளக்கமளித்து விட்டீர்கள். ராஜா புகைப்படங்களை நீங்கள் அனுபவித்து ரசித்து எழுதியிருக்கும் விதமே ஒரு தனி அலாதி சுகம் தான். கண்டிப்பாக இரு வில்லன்களின் கைகளை மட்டும் காட்டி தலைவரை மட்டும் முழுமையாகப் படம் பிடித்த பொழுது தங்களை மனதில் நினைத்துக் கொண்டேதான் கிளிக்' கினேன். தங்களுக்காகவே அந்த இரண்டு ஸ்டில்களையும் போட்டேன். கரெக்டாக கண்டு பிடித்து அசத்தி விட்டீர்கள். தாங்கள் ஒருமுறை முரளி சாரை நமக்கெல்லாம் மிஞ்சிய 'கில்லாடி கிருஷ்ண மூர்த்தி' ஒருவர் இருக்கிறார் என்று பெயர் குறிப்பிடாமல் குறிப்பிட்டிருந்தீர்கள். இப்போது செல்லமாக எனக்கு 'கில்லாடி கிட்டு' ஆகி விட்டீர்கள். தங்களின் அற்புத ஐ க்யூவிற்கு ஒரு ராயல் சல்யூட்.
ஞானஒளி பதிவுக்குமான தங்கள் பாராட்டும் சுகம். கார்த்திக் ராஜாவும் ஞானஒளி வாசுதேவனும் ஒன்றாக கைகோர்த்து நடப்பது பெருமிதமாய் இருக்கிறது. (மெல்லிய மயிலிறகால் மேனியை வருடிக் கொடுக்கும் தங்கள் பதிவின் சுகமான வரிகளான "உங்களுக்குப் பிடித்த ஞான ஒளியும் எனக்குப் பிடித்த ராஜாவும் ஒன்றாக கைகோர்த்து திரியில் வலம் வரும் காட்சி அருமை" வரிகளைத்தான் ஆனந்தமாகச் சொல்கிறேன்). அன்பான பாராட்டுதல்களுக்கு நிறைவான நன்றிகள் சார்.
திரையுலகமும், எதிரணியும் மூக்கில் விரலை வைத்த 'ராஜா'வின் ரந்தாவாவுடனான சூப்பர் சண்டைக்காட்சியைப் பற்றி தாங்கள் பதிவு எழுதி நான் அதைப் படிக்க மிகவும் ஆசை. அந்த சண்டைக் காட்சியை நானும் நமது திரியில் பதிந்துள்ளதைப் பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். சண்டைக்காட்சியில் நடிகர் திலகத்தின் ஆர்ப்பரிக்கும் அந்த ஸ்டைலைப் பற்றி ப்ளீஸ்.. ப்ளீஸ்...
நீங்கள் குறிப்பிட்டது போல அந்த 'ஆரஞ்சுத் தல' கொஞ்ச நேரமே வந்தாலும் அப்போது நமது ரசிகர்கள் எல்லோரையும் மறக்க முடியாதபடி கவர்ந்த 'தல'. மிகச் சிறிய துணை நடிகரான அவர் பாலாஜியின் பெரும்பாலான படங்களில் தலை காட்டி விடுவார். ரயில்வே ஸ்டேஷனில் அவர் செல்வியை (!) "போலீஸ் பின்தொடர்ந்து வருகிறது... தப்பித்துக் கொள்...போ..போ.." என்பது போல போலீசுக்குத் தெரியாமல் கைகளால் சைகை காட்டியபடியே வருவது சூப்பர்! அவர் பெயரை கூடிய சீக்கிரம் கண்டு பிடித்து விடுவோம்
நீங்கள் கேட்டிருந்த மனோகர் மற்றும் க,வி.கண்ணன் நீங்கள் குறிப்பிட்டது போலவே தலைவருடனான சண்டைக்காட்சிகளில் தரிசனம் தருவார்கள். ஆனால் தங்களுக்காக 'ட்ரிப்பிள் சந்திரபாபு' கள் இப்போதே ரெடி!
நியூஸ் ரீல்
http://i1087.photobucket.com/albums/..._000782147.jpg
இன்டர்வெல்
http://i1087.photobucket.com/albums/..._000075371.jpg
ஜன கன மன
http://i1087.photobucket.com/albums/..._001121356.jpg
(எங்கள் 'கில்லாடி கிட்டு'விற்கா புரியாது?)
அன்புடன்,
வாசுதேவன்.
-
வீடியோக் காட்சி 1
மகிழ்ச்சி!..... ஆரவாரம்!..... ஆர்ப்பாட்டம்!..... உற்சாகம்!
'கர்ணன்' 101- ஆவது நாள் வெற்றிவிழாவில் ரசிகர்களின் உற்சாகக் கொண்டாட்டங்கள்.(வீடியோவாக)
இடம்: 'சத்யம்' சினிமாஸ், சென்னை
தேதி: 24-6-2012, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை 4.00 மணி
அன்பு ரசிகர்கள் தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டி இதய தெய்வத்திற்கு ஆனந்த வழிபாடு.
ஆர்ப்பாட்டமான வீடியோக் காட்சி (முதன் முதலாக உங்களுக்காக)
http://www.youtube.com/watch?v=plJr1...yer_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
-
வீடியோக் காட்சி 2
திரு E.V.K.S.இளங்கோவன் அவர்கள் 'கர்ணன்' 101 நாட்கள் கண்ட மெகா வெற்றி விழாவில் ஆற்றிய நடிகர் திலகத்தைப் பற்றிய புகழுரை.(வீடியோ முதன் முறையாக உங்களுக்காக)
இடம்: 'சத்யம்' சினிமாஸ், சென்னை
தேதி: 24-6-2012, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை
http://www.youtube.com/watch?v=W-Gv0cZPCMU&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
-
டியர் பம்மலர்சிவாஜி இல்லையேல் சினிமா இல்லை என்ற வில்லிவாக்கம்
சிவாஜி பக்தர்கள் வாசகம் மிஹவும் கவர்ந்தது
வாசகங்கள் -neenga vazangiya banners அருமை
-
வீடியோக் காட்சி 3
திரு.Y.G.M மற்றும் அவரது மகள் மதுவந்தி கௌரவிக்கப்படும் காட்சி.
திரு Y.G.M அவர்களின் நடிகர் திலகத்தின் புகழ் பாடும் பேச்சுரை.
முதன் முறையாக உங்களுக்காக வீடியோ வடிவில்
இடம்: 'சத்யம்' சினிமாஸ், சென்னை
தேதி: 24-6-2012, ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மாலை
http://www.youtube.com/watch?v=NzugRZyxXRA&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
-
வீடியோக் காட்சி 4.
நடிகர் திலகத்தின் தீவிர பக்தர் ஒருவர் அப்படியே 'பராசக்தி' காவியத்தின் நீதிமன்ற காட்சி வசனத்தைப் பேசி அசத்துவதைக் காணுங்கள்.
முதன் முறையாக உங்களுக்காக வீடியோ வடிவில்
இடம்: 'சத்யம்' சினிமாஸ், சென்னை
தேதி: 24-6-2012, ஞாயிற்றுக் கிழமை
http://www.youtube.com/watch?v=pMPWyzyq858&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.
-
Dear Pammalar,
THE MAKING OF KARNAN
"கர்ணன்" செல்லுலாய்டில் செதுக்கப்பட்ட வரலாறு
வரலாற்று ஆவணம் : பேசும் படம் : ஜனவரி 1964
It is really சர்ப்ரைஸ் பதிவு.
Very nice one.
Thanks