paar magale paar a class movie o all times.
நடிகர் திலகத்தின் "பார் மகளே பார்" சாதனைத் துளிகள் :
பார் மகளே பார், நடிகர் திலகத்தின் 89வது திரைக்காவியம் (87வது கருப்பு - வெள்ளைக் காவியம்)
நடிகர் திலகத்தை பீம்சிங் இயக்கிய 13வது படம்; சிவாஜி - பீம்சிங் கூட்டணியின், "ப" வரிசைப் படங்களில், 10வது படம்.
வெளியான தேதி : 12.7.1963 (வெள்ளிக்கிழமை)
சென்னையில் சாந்தி, பிரபாத், சரஸ்வதி ஆகிய 3 அரங்குகளிலும் மற்றும் தென்னகமெங்கும் வெளியானது.
சென்னையில் சாந்தி திரையரங்கில் 64 நாட்கள் ஓடி அமோக வெற்றி கண்டது. சாந்தியில் 12.7.1963 அன்று வெளியாகி 13.9.1963 வரை ஓடியது. 14.9.1963 அன்று சாந்தியில் தேசிய திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது. (சாந்தி 1214 இருக்கைகள்)
பார் மகளே பார் சாந்தியில் 64 நாட்கள் ஓடி முடிய பெற்ற மொத்த வசூல் ரு. 1,24,466 /-.
பிரபாத்தில் 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை, 56 நாட்கள் நல்ல வரவேற்புடன் ஓடியது. 6.9.1963 முதல் 13.9.1963 வரை 8 நாட்கள் பிரபாத்தில் மாயா மச்சீந்திரா என்ற திரைப்படம் நடைபெற்றது. மாயா மச்சீந்திரா முதன்முதலில் 22.4.1939 அன்று வெளியான படம். இதில் திரு. எம்.ஜி.ஆர். , எம்.ஜி. ராம்சந்தர் என்ற பெயரில் சிறிய வேடத்தில் தோன்றியிருப்பார்.14.9.1963 அன்று பிரபாத்தில், பாரத ஜோதியின் இரத்தத்திலகம் வெளியானது. (பிரபாத் 1277 இருக்கைகள்)
சரஸ்வதியில் 56 நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்றது. அதாவது, 12.7.1963 லிருந்து 5.9.1963 வரை ஓடியது. 6.9.1963 அன்று சரஸ்வதியில் நடிகர் திலகத்தின் பாலும் பழமும் மறு வெளியீடாக வெளியானது. (சரஸ்வதி 974 இருக்கைகள்)
மேலும், பார் மகளே பார், மதுரையில் 1662 இருக்கைகள் கொண்ட சென்ட்ரல் சினிமா திரையரங்கில் 12.7.1963 லிருந்து 13.9.1963 வரை 64 நாட்கள் ஓடி சிறந்ததொரு வெற்றியைப் பெற்றது. (64 நாள் மொத்த வசூல் ரு. 1,06,402 /-). 14.9.1963 அன்று சென்ட்ரல் சினிமாவில் தியாகத்திலகத்தின் இரத்தத்திலகம் வெளியானது.
திருநெல்வேலியில், பார் மகளே பார், 1352 இருக்கைகள் கொண்ட லட்சுமி திரையரங்கில், 50 நாட்கள் வெற்றிகரமாக ஓடியது.
நாகர்கோவிலில், 1088 இருக்கைகள் கொண்ட பயனீர் பிக்சர்பேலஸ் அரங்கில் 50 நாட்கள் ஓடி நல்லதொரு வெற்றியைப் பெற்றது.
மொத்தத்தில், 'ஏ' சென்டர்களில் 50 நாட்கள் முதல் 9 வாரங்களும், 'பி' சென்டர்களில் 5 வாரங்கள் முதல் 8 வாரங்களும், 'சி' சென்டர்களில் 4 வாரங்கள் முதல் 5 வாரங்களும் வெற்றிகரமாக ஓடி, சிவாஜி-பீம்சிங் கூட்டணிக்கு சிறந்ததொரு வெற்றியைத் தேடித் தந்த படம் 'பார் மகளே பார்'.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
அன்புடன்,
பம்மலார்.
As mentioned by Raghavendhar,Excellent write up by our fellow hubber Irene Hastings. Great work buddy.(Trend-setting)
Par magale par - Story - part 1
பார் மகளே பார் -கதை பகுதி - 1
http://i949.photobucket.com/albums/a...ofImage027.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image028.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image029.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image030.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image032.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image033.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage036.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage037.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage034.jpg
மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் நடிகர் திலகக்தின் மனைவி சவ்கார் ஜானகி ப்ரசவ வலி எடுத்து ஒரு மருத்துவமனையில் அவரின் பால்ய நண்பரும் தொழிலதிபருமான வி.கே.ஆர்.ரின் உதவியால் சேர்க்கப்படுகிறார். அச்சமயம் தொழில் காரணமாக சிவாஜி சென்னையில் முகாமிட்டிருக்க அவருக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது. உடனே விரைகிறார் மதுரைக்கு.
ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்கிறார் ஜானகி. அடுத்த அறையில் சுலோசனா என பெயருடன் ஒரு நடனமாடும் பெண்ணுக்கும் ஒரு பெண் குழந்தை பிறக்க, பணிப்பெண்கள் இரு குழந்தைகளையும் நீராட்டுவதற்காக இன்னொரு அறைக்குச்செல்ல , அங்கு துரதிர்ஷடவசமாக மின்சாரம் தாக்கி இருவரும் இறக்க, ஒன்றோடு ஒன்றாக இரு குழந்தைகளும் இருக்க தலைமை மருத்துவரும் வேறு வழி தெரியாமல் ( சுலோசனா , திடீரென்று காணாமல் போக குழப்பம் மிகுதியாகிறது ) ஜானகியை வேண்ட அவரும் வழி தெரியாமல் தவிக்க, மருத்தவரின் யோசனைப்படி இருவரும் ஜானகிக்கே பிறந்தவை என ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார். வி.கே.ஆர்.ரும் இதை ஆமோதித்து இந்த உண்மையை எந்த காலத்திலும், எந்த சந்தர்பத்திலும் யாருக்கும் தெரிவிக்க மாட்டேன் என்று வாக்குறுதி கொடுக்க, அப்போது அதற்கு ஜானகி பதில் சொல்லும்முன், சிவாஜி அமர்களமாக வந்து தன் அன்பு மனைவியை முதலில் விசாரித்து விட்டு, அருகில் இருக்கும் குழந்தைகளை கண்டு...ஓ ....இரட்டை குழந்தைகளா !!! என்று வியந்து மிகவும் உற்சாகத்தில் மிதக்க அத்தருணத்தில் ஒன்றும் பேச இயலாமல் ஜானகியும் அதை ஏற்றுக்கொள்ள, குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா இனிதே நடைபெற்று முறையே சந்த்ரா ( விஜயகுமாரி ) காந்தா ( புஷபலதா ) என பெயர்பெறுகின்றனர். சில நாட்களூக்குப்பின் சுலொசனாவின் சகோதரரான எம்.ஆர்.ராதா , மருதுவமனைமூலம் உண்மை தெரிந்து சிவாஜியின் விட்டிற்கு வர அப்போது ஜானகி மட்டும் தனியாக இருக்க , தன் சகோதரியின் குழந்தையை கேட்க, ஜானகி இரு குழந்தைகளையும் தன் உயிராக கருதுவதால் தானே வளர்ப்பேன் என மன்றாட இளகிய மனம் கொண்ட ராதாவும் அதற்கு சம்மதிக்க, அவருக்கு அவ்வீட்டிலேயே குழந்தைகளுக்கு நடனம் பயிற்றுவிக்கும் ஆசானாகவும் ஒரு வேலை கொடுக்கப்படுகிறது. குழந்தைகளும் நல்ல பண்புடனும் தாய் தந்தையின் அரவணைப்புடன் வளர்கின்றன.
Par magale par - the story - part 2
பார் மகளே பார் - கதை பகுதி - 2
நெருங்கிய நண்பர்களான சிவாஜி-வி.கே.ஆர். தங்கள் வர்தகத்தினை நடத்தும் முறை மாறுபட்டது. சிவாஜி சில கோட்பாடுகளுடன் முடிவுகளை எடுப்பார். ஆனால் வி.கே.ஆர்.ரோ அதிரடி முடிவுகளை எடுப்பவர். இந்த போக்கை சிவாஜி பலமுறை கண்டித்தாலும் அதற்கு வி.கே.ஆர். தன்னுடைய விளக்கங்களை கொடுப்பார்.
ஒரு நாள், வி.கே.ஆர். தன்னுடைய தொழிலில் லாபம் கிடைக்கவில்லை. தான் வேரொரு ஊருக்கு சென்று அங்கு புதிய தொழில் செய்யப்போவதாக சொல்வார். சிவாஜிக்கு அது பிடிக்காது. வாதம் செய்வார். முடிவில், " என்னால் முடிந்த்தை ஒரு நல்ல நண்பன் என்ற முறையில் சொல்லிவிட்டேன். இதற்கு மேல் வரும் விளைவுகளுக்கு நீ பின்னர் வருந்துவாய் என்று விடை பெறுவார்.வி.கே.ஆர். கேட்கும் உத்திரவாத தாளினையும் கொடுக்க மறுத்துவிடுவார். " உனக்கு பண உதவி வேண்டுமா ? நான் செய்வேன். மற்றபடி காரன்டி பத்திரம் எல்லாம் தர இயலாது என்று கண்டிப்பாகவும் சொல்வார். ஆப்த நண்பர்கள் ஒருவித வருத்ததுடன் விடை பெறுவர்.
வி.கே.ஆர்.ரின் மனைவிக்கும் ஜானகிக்கும் நெருங்கிய நட்பு பல வருடங்களாக. அவர் விடை பெறுவதை பார்த்து ஜானகி கண்ணீர் சிந்த அவரும் " என்றைக்கானாலும், எந்த சூழ்நிலையிலும் உன் பெண் தான் என்னுடைய மருமகள். இந்த வாக்குறுதியினை என்றும் மறக்காதே என்பார். ஜானகியும் பதிலுக்கு, " இது நான் உங்களுக்கு கொடுக்கும் வாக்கு. அன்பினால் ஏற்ப்பட்டது நம் நட்பு. எந்த சூழ்நிலையிலும் நான் விட்டுகொடுக்க மாட்டேன் " என்று பிரியாவிடை பெறுவர் இருவரும்.
பார் மகளே பார் - கதை பகுதி - 3
HTML Code:
http://i949.photobucket.com/albums/a...ofImage046.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/a...ofImage047.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/a...ofImage048.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/a...ofImage049.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/a...ofImage050.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/a...ofImage053.jpg
HTML Code:
http://i949.photobucket.com/albums/a...ofImage054.jpg
ஜமீந்தார் சிவலிங்கம் ( சிவாஜி ) ஒரு கறார் மனிதர் > தொழிலை பொறுத்தவரை... ஆனால் வீட்டிலோ 2 குழந்தைகளுக்கு உயிரான தகப்பன். மழலையிலிருந்தே அவர்களின் மீது ஒரு பாசம்.கண்ணும் கருத்துமாக வளர்ப்பார். சந்திரா மென்மையான குணமும் , காந்தா சற்று தைரியமான குணமும் கொண்டவர்கள். இதையும் சிவாஜி ரசிப்பார். " பாரேன். சந்திரா உன்னைபோன்றவள்... காந்த்தா என்னை போன்ற சுபாவம் கொண்டவள் " என்று ஜானகியிடம் சொல்லி மகிழ்வார் ! குழந்தைகளும் பெற்றோரிடம் மிகுந்த பாசத்துடன் பழகுவர். குழந்தைகளும் வளர்ந்து பெரியவராகின்றனர்.
விஜயகுமாரியும் முத்துராமனும் காதலர்கள். ஓரு நாள் முத்துவை தந்தையிடம் அறிமுகம் செய்ய முத்துராமனின் மறைந்த தந்தை தனக்கு மிகவும் தெரிந்தவர் என்றும் நல்ல அந்தஸ்து உள்ள குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் உணர்கிறார். உடனே அவரை பிடித்து போகிறது. சிறிது நாட்களுக்குப்பின் ஏ.வி.எம்.ராஜன் ( வி.கே.ஆர்.ரின் பிள்ளை ) , சிவாஜியை சந்தித்து தன் தந்தை இப்பொழுது செல்வம் அனைத்தையும் இழந்து ( தவறான வழிகளினால் ) இன்சால்வன்ஸி கொடுக்கும் நிலையில் இருப்பதாக சொல்ல சிவாஜி வருத்தப்படுகிறார். " உங்கள் நிருவனத்தில் எனக்கு ஒரு வேலை கொடுங்கள் " என் ராஜன் வேண்ட அதற்கு சம்மதிக்கும் சிவாஜி, எக்காரணஙகளுக்கும் தன்னுடைய நண்பனின் பிள்ளை என்று யாரிடமும் சொல்லவோ, அல்லது அதிகாரமோ செய்யக்கூடாது என்று கடுமையாகச்சொல்லி அவருக்கு ஒரு வேலையும் கொடுக்கிறார்.
சிவாஜி ஜானகியிடம் விஜயகுமாரியை முத்துராமனுக்கு மணம் முடிக்கும் ஒரு ஆசையை வெளியிட , அதற்கு ஜானகி சிறு வயதில் வி.கே.ஆர்.ருக்கு கொடுத்த வாக்குறுதியை நினைவுபடுத்த அதற்கு சம்மதிக்காத சிவாஜி, தன் நண்பன் இப்பொழ்து செல்வம் அனைத்தையும் இழந்ததை சொல்லி, தன்னுடைய மறுப்பை வெளியிடுகிறார். ஜானகி , இரு பெண்களுக்கும் ஒரே சமயத்தில் திருமணம் நடக்கவேண்டும் என்று கோரிக்க அதற்கும் சிவாஜி மறுக்கிறார். ஜானகி வி.கே.ஆர். குடும்பத்திற்கு ஏற்பட்ட நிகழ்வுகளுக்கு மிகவும் வருந்துகிறார் செய்வதறியாமல்.
சிவாஜி முத்துராமனின் தாயை சந்தித்து அவரின் ஒப்புதலும் பெற்று நிச்சயதார்த்தத்துக்கு நாளும் குறிக்க, ஜானகியோ " நீங்கள் உங்கள் நண்பருக்கு அவசியம் தெரிவிக்கவேண்டும்" என்று சொல்ல , அதற்கும் மறுத்த சிவாஜி, " அவன் இன்று மிகவும் நொடிந்த நிலையில் இருக்கிறான். இதை சொன்னால் அவன் இந்த நல்ல செய்திக்காக நிறைய செலவு செய்யத்துடிப்பான். பொருளாதாரரீதியாக அவனை நாம் எந்த விதத்திலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்ககூடாது.
நாம் எனவே சொல்லக்கூடாது " என்று கண்டிப்பாக சொல்ல , ஜானகிக்கு ஒரே தவிப்பு.சிவாஜி, தன் பணியாளின் மூலம் உதவி பணம் கொடுத்தனுப்ப அந்த மனிதர் மூலம் வி.கே.ஆர்.ருக்கு நடைபெறவிருக்கும் நிச்சயதார்த்த செய்தி தெரியவருகிறது.
தொடரும்.
Dear Friends,
Even while covering the story part, I am extremely tempted to shower praise on Nadigar thilagam’s body language. See this episode is a classic example of what acting is all about :
1. Muthuraman gets introduced to Sivaji. See, he just gives a casual handshake. And also look at the hand position >>> Dominating, his hand is on top of Muthu’s, indicating that he is the supremo and the Boss.
2. Sivaji now enquires about his background and his father. He also introduces M.R.Radha, out of courtesy.
3. Now he gets into more detailing on Muthuraman. The left hand on the packet indicates , he is more inquisitive now. He is still having some doubts about Muthu. R.
4. Now he is thoroughly convinced that Muthuraman is from a respectable family and rich guy
5. Now, he expresses his intentions to wife
6. Back home, in seated posture, a serious discussion is about to begin. With his wife, he initiates the wedding proposal
7. Now, janaki is worried that the promise given to VKR will be broken. He is slanted on the pillar, trying to explain the issues of VKR and trying to convince that it is not on
8. Even while Janaki pleads, he emphatically puts an end to any scope of VKR proposal
To me, this is a perfect lesson to aspiring actors. See how terrific his body language is and how swiftly changes his handshakes in a deft manner and above all, the posture of cigarette while conversing with Muthuraman. Also, the left hand going inside pocket and finally a very happy and warm handshake to finish his conversation !
That posture of standing erect with shoulders held flat is a clear indicator of his background as a rich business man being introduced for a casual conversation to a common man. The body language will change if he meets another guy who is superior to him !
Now, onto dialogue with Sowcar Janaki ! Again, the positioning of cigarette and the seriousness on the face to express his frank opinion on a major decision to be taken as a Father .It all starts with a casual walk along with wife and slowly and gradually develops into a serious discussion !
Kudos to the entire team to bring the best out of Nadigar thilagam. Long live, Nadigar thilagam’s fame.
Par magale par - Story - part 4
பார் மகளே பார் - கதை பகுதி - 4
http://i949.photobucket.com/albums/a...s/Image008.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image009.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image014.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image016.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage057.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage058.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage059.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage060.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage061.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage063.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage064.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image010.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image021.jpg
நிச்சயதார்தம் தடபுடலாக ஆரம்பிக்க ஊர் பெரிய மனிதர்களின் இடையே ஜமீந்தார் சிவலிங்கம் மிக உற்சாகமாக. அப்பொழுது வி.கே.ஆர். தன் மனைவியோடு வர சிவாஜிக்கு அதிர்ச்சி. முகம் கொடுத்துகூட பேசுவதில்லை. அவரை விட்டு விட்டு மற்ற விருந்தினர்களை சிவாஜி இன்முகத்துடன் உபசரிக்க, வி.கே.ஆர்.ருக்கு அவமான உணர்ச்சி ஏற்பட, அவர் சிவாஜியை தனியாக அழைத்து, " சிவா, உனக்கு பிடிக்காவிட்டால் நான் சென்றுவிடுகிறேன்" என்று சொல்ல, அதற்கு சிவாஜி " ஏண்டா, இப்படி எல்லாம் பேசுகிறாய் "
வி.கே.ஆர் >> நான் இங்கு இருப்பது உன் கவுரவத்திற்க்கு குறைவாக இருந்தால், நாங்கள் உடனே போய் விடுகிறோம்.
சிவாஜ் : ஏன்டா இப்படி எல்லாம் உளருகிறாய் ?
வி : ஓடம் ஒரு நாள் வண்டியில் ஏரும். வண்டீயும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.
சி : தயவு செய்து என் மானத்தை வாங்காதே
இப்படியாக இருவருக்கும் வாக்கு முற்ற , வி.கே.ஆர். கோபத்தின் உச்சியில் சந்திரகாந்தாவின் பிறப்பின் ரகசியத்தை எல்லார் முன்னிலையிலும் உடைக்க, அங்கு ரணகளமாகிறது. வி.கே.ஆர். சிவாஜியை ஒரு நன்றி கெட்டவன் என்று பழித்து.. " உன் குடும்பத்தின் மேன்மைகாக நான் எக்தனையோ உதவிகளை செய்துள்ளேன். ஆனால் நீயோ, ஒரு நன்றி கெட்டவன்.. உன் குழந்தைகளின் பிறப்பு சார்ந்த ரகசியத்தினை என் மனைவிக்குகூட இன்றுவரை நான் சொல்லவில்லை. அது உன் குல கவுரவதிர்காக. ஆனால் , நீயோ, என்னை மதிக்கவில்லை. உன் பணக்கார திமிர் , ஆணவத்தினால் நம் பழைய ச்னேகிதத்தை மறந்துவிட்டாய்.
வி.கே.ஆர். ஜானகியிடம் மன்னிப்பு கேட்கும் தருவாயில் " நான் இந்த உண்மையை ஏன் சொன்னேன் ? என் மகனுக்கு உன் பெண்ணை கொடுக்கவில்லை என்பதற்காக அல்ல. உன் கணவனை பிடித்து ஆட்டுகிறதே அந்த அந்தஸ்து எஙிற பேய் , அது ஒழிய வேன்டும். அதற்காக தான் " என்று சொல்லி அஙிருந்து சென்றுவிடுகிறார். நிச்சயதார்ததிற்காக வந்த அனைவரும் கலைந்து செல்ல, அதிற்ச்சி / கோபத்தின் உச்சியில் சிவாஜி.
தொடரும்..
பார் மகளே பார் - கதை பகுதி - 5
http://i949.photobucket.com/albums/a...s/Image022.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image025.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image024.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage068.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage070.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image023.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
நிச்சயதார்தம் நடைபெறாமல் போக அவமானம். 18 வருடமாக தன் அருமை மனைவி ஒரு மாபெரும் ரகசியத்தை மறைத்துவிட்டாளே . இத்தனை காலமும் தன் மாளிகையில் இருந்து குழந்தைகளுக்கு பணி புரிந்த எம்.ஆர்.ராதா ஒரு பெண்ணின் மாமா. தன் பால்ய நண்பன் அனைவரின் முன்னிலையிலும் தன்னை கேவலப்படுத்திவிட்டான். சமூகத்தில் தனக்கு என்று ஒரு தனி அந்தஸ்து உண்டு. தன் பெண்களில் ஒருத்தி தன்னுடையவள் இல்லை. சக தொழிலபதிகர்கள் தன்னை பற்றி என்ன நினைப்பார்களோ என்று அவமான உண்ர்ச்சி >>> இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து ஜமீந்தார் சிவலிங்கம் வீட்டில் நிம்மதியில்லாமல் தவிக்கிறார்.
ஜானகி எவ்வளவோ மன்றாடியும் சிவாஜியின் கோபம் முற்றிலுமாக அவர் பக்கம் சாய்கிறது.. " என் நண்பனுக்கு தெரிந்த ஒரு பெரிய ரகசியம் ஏன் எனக்கு தெரிவிக்கப்படவில்லை ? இனி நீ எனக்கு மனைவியில்லை. பெயரளவிற்கு தான் நம் உறவு "இரண்டு பெண்களும் மன்றாடியும் சிவாஜிக்கு கோபம், குழப்பம் தீரவில்லை. ஆத்திரத்தின் உச்சியில் அவர் எம்.ஆர்.ராதா.வை வீட்டை விட்டு விரட்ட, ராதா நடுதெருவில்.வீடே களையிழந்து கிடக்க, அருமை சகோதரிகள் இருவரும் தாம் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவரி விட்டுக்கொடுப்பதில்லை என்று தீர்மானமாக இருக்கின்றனர்.
தன்னுடைய உண்மையான குழந்தை யார் என்று தெரியும்வரை சிவாஜி ஓயமாட்டார். இந்த ப்ரச்னை தீரும்வரை வீட்டில் பழைய பொலிவும், உற்சாகமும் வராது என்று விஜயகுமாரி எண்ணி, தானே வீட்டை விட்டு ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் போய்விடுகிறார்.
சில நாட்களுக்குப்பின் ஒரு வயதான பெண்மணி, சிவாஜியின் முன் வந்து " நான் தான் அந்த சுலோசனா. என் பெண் இங்கு தான் வளர்வதாக கேள்விப்பட்டேன். தயவுசெய்து அவளை எனக்கே கொடுத்துவிடுங்கள். அவளுக்கு கழுத்தில் ஒரு மச்சம் இருக்கும். இது தான் அவளின் அடையாளம் " என்று சொல்ல சிவாஜி துள்ளிக்குதித்து , " அந்த பெண் எங்கள் வீட்டை விட்டு ஓடிவிட்டாள் எங்களிடம் சொல்லாமலே. இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது " என்று ஆத்திரமாக சொல்லி அந்த வயதான பெண்ணை அனுப்பிவிடுகிறார். இது தான் உண்மை என்று நம்பி, சிவாஜியோ மிகுந்த உற்சாகத்தில் மிதக்கிறார். " குணாதியசங்களை கொண்டே சொல்லிவிடலாம். என்னுடைய குணாதிசயங்கள் அனைத்தும் கொண்டவள் காந்தா. அவள் தான் என்னுடைய மகள்." என்று நிம்மதியடைய ஜானகியோ கண்ணீருடன். தன் சகோதரி எங்கே போனாள் என்று காந்தாவுக்கு கவலை.
சில நாட்களுக்குப்பின், போலிஸ் சிவாஜியை கண்டு ஒரு பெண்ணின் சடலம் ரயில் தண்டவாளத்தில் கிடைத்தது தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரின் அனைத்து உடைகள், அடையாளங்கள் சந்திராவை ஒத்தவை என்று ஒரு குண்டை தூக்கிபோட , சிவாஜி இந்த அனைத்து ப்ரச்சனை ஒரு முடிவிற்கு வந்ததுபோல உணர்கிறார். வீடோ துக்கம் அனுஷ்டிக்கிறது. மீளாத துயரத்தில் ஜானகியும், புஷ்பலதாவும். " நாம் வளர்த்த பாசத்திற்காக சந்திராவுக்கு எல்லா காரியங்களும் செய்யவேண்டும் " என்று ஜானகி கெஞ்ஜ , சிவாஜி அனுமதி அளிக்கிறார். எல்லா அனுஷ்டானங்களும் முடிந்தபின், சிவாஜி, புஷ்பலதா / ஜானகியிடம் , " இனிமேல் இவ்வீட்டில் சந்திராவை பற்றி யாரும் பேசக்கூடாது . அவள் கொண்ட எல்லா தொடர்பும் முடிந்தது " என்று கடுமையாக சொல்லி வீட்டில் உள்ள சந்திராவின் படத்தையும் எறியச்சொல்கிறார். மீளாத துக்கத்தில் ஜானகி படுத்த படுக்கையாகிறார்.
தொடரும்..
Par magale par - Story - Part - 6
பார் மகளே பார் - கதை பகுதி - 6
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image072-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
உண்மையில் சந்திரா இறக்கவில்லை. அவர் ஒரு தொண்டு நிருவனத்தில் அடைக்கலம் புகுந்து அமைதி தேடுகிறார். அதை நடத்தும் மாதுவிடம் தன்னைப்பற்றி சொல்லி யாரிடமும் உண்மையை சொல்ல வேண்டாம் என்று வேண்ட, அம்மாதுவும் மனமிரங்கி அவருக்கு ஒரு ஆசிரியர் வேலை கொடுக்குறார்.
முத்துராமனுக்கு, தன் நிச்சயதார்த்தம் நின்று போனதில் வருத்தம் . ஆனால் அவர் சந்திராவை விரும்பியது அவர் ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. நல்ல குணங்களும் பண்பும் அவரை கவர்ந்த காரணத்தாலே அவரை மணக்க விரும்பினார். இதை தன் தாயிடமும் சொல்லி சம்மதிக்க வைக்கிறார்.
இதற்கிடையே காந்தாவிற்கு தன் தந்தையின் போக்கு பிடிக்காமல் அவர் மேல் ஒரு வெறுப்பு ஏற்பட்டு, அவர் ஒரு தீர்கமான முடிவுக்கு வருகிறார். அதாவது , எந்த உயிர் நண்பரான வி.கே.ஆர்.ரை அவர் ஏழையாகிவிட்டார் என்ற காரணத்திற்காக அந்தஸ்து, கவுரவம் பார்க்கும் தன் தந்தையை பழி வாங்குவதற்காக , அவர், வி.கெ.ஆர்.ரின் மகனான ஏ.வி.எம்.ராஜனை மணக்கப்போகிறேன் என்று அவரையும் அழைத்து வந்து சபதமிடுகிறார். இந்த போக்கு ஜானகிக்கு துளி கூட பிடிக்கவில்லை. தந்தையின் மனம் நோகும்படி எதையும் செய்யாதே என்று அடிக்கிறார்.
ஒரு நாள், எம்.ஆர்.ராதாவும், கருணாநிதியும் , அந்த போலி சுலோசனாவை இழுத்து வந்து சிவாஜியிடம் எல்லா உண்மைகளையும் சொல்லவைக்கிறார். அதாவது, தன்னுடைய அங்க அடையாளங்களை ஒரு சாட்சியாக வைத்து, தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவமானத்தினையும், கவுரவத்தை நிலைநாட்டவும் காரணமாக்கொண்டு விஜயகுமாரியே ஒரு பொய் சொல்லச்சொல்லி வற்புறுத்தியதால் தான் , குடும்ப நன்மைக்காக இதை செய்யச்சொன்னார் என்று அந்த போலி சுலொசனா அனைதையும் சொல்லி மன்னிப்பு கேட்கிறார்.
இதை கேட்டவுடன் சிவலிஙகத்திற்கு கண்ணீர் பெருக்கெடுக்கிறது. தன் குடும்ப கவுரவத்தையும், அந்தஸ்தையும் காப்பாற்றுவதற்காக அந்த அபலை பெண் செய்த மாபெரும் தியாகத்தினை எண்ணி மனம் நெகிழந்து துடிக்கிறார். முத்துராமனுக்கு தன் காதலி இறந்த செய்தி கிடைக்க அவரும் கதறுகிறார். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருக்கிறார்.
ஜானகியின் உடல்நிலை மிகவும் மோசமடைகிறது.
கதை பகுதி அடுத்த பதிவில் முடியும்..
நண்பர்களே,
இந்தப்பதிவோடு இணைக்கப்பட்ட மூன்று புகைப்படங்களை சற்று பாருங்கள் ! உங்களுக்கு அதன் பிண்ணனி புரியும் உடனே ! . அவை வேறு எந்த தருணத்தில் தெரியுமா ?
அந்த போலி சுலோசனா உண்மையை சொல்லும் கட்டம் தான் !
அனைத்தும் பொய் என்று அறிந்ததும் ஒரு அதிர்ச்சி
தன்னுடைய கவுரவம், அந்தஸ்து எல்லாவற்றையும் காப்பாற்றத்தான் அந்த அபலை ஒரு தியாகத்தினை செய்துள்ளாள் என்று அறிந்ததும் ஒரு மட்டற்ற மகிழ்ச்சி !
உடனே >>> ஓ ஓ.. தன் அருமை பெண் இப்போது நம்மிடையே இலையே. இந்த உலகத்தை விட்டே போய்விட்டாளே என்ற நிலையை மனத்தில் எண்ணி கண்ணீர்.
இந்த மூன்று நிலைகளையும் மின்னல் வேகத்தில் , அதாவது 5 நொடிகள் தான் எடுத்துகொள்கிறார்.
எத்தகைய வியத்தகு வெள்ளிப்பாடு ! பல்கலைகழகம் அல்லவா அவர் ! நடிப்புக்கு ஒரு திலகம் என்று கன்னட நடிகர் திரு ராஜ்குமார் வியந்து போற்றிய ஒரு திலகம் அல்லவா நம்மவர்!
Par magale par - Story - part 7
பார் மகளே பார் - கதை பகுதி - 7
http://i949.photobucket.com/albums/a...Image074-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image079-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image082-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image083-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image084-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
சந்திராவை முத்துராமனால் மறக்க முடியவில்லை. சந்திராவை விரும்பியது ஒரு செல்வந்தரின் பெண் என்பதால் அல்ல. எனவே அவரின் அன்பு துளிகூட குறையவில்லை. தன் தாய் காந்தாவையாவது மணந்துகொள் எனறதையும் அவர் ஏற்கவில்லை. எம்.ஆர்.ராதாவை தன் நண்பராக ஏற்றுக்கொண்டு அவர் போகுமிடமெல்லாம் அழைத்து செல்கிறார்.
அவர் பணி காரணமாக ஒரு ஆசிரமத்திற்கு செல்ல அங்கு ஆசிரியராக சந்திராவை பார்த்து அதிற்ச்சி. ஆனால் தலைமை அதிகாரி அவரின் பெயர் சாரதா என்றும் அவர் சிறு வயதிலிருந்தே அங்கு தான் வளர்ந்தவர் என்றது ஒரே குழப்பம். முத்துராமனும் எம்.ஆர்.ராதாவும் அந்த தலைமைகாக்கும் மாதுவிடம் எல்லா நடந்தவைகளையும் சொல்ல இந்த அனைத்தினயும் சந்திரா மறைவிலிருந்து கேட்டு மிகவும் வருந்துகிறாள் . அதிலும் தான் தந்தை நிம்மதி இழந்து தவிப்பதையும் தன் தாய் நோய்வாய்பட்டு கிடைப்பதையும் தன் சகோதரி தன் வழியில் செல்வதையும் கேள்விப்பட்டு ஒரு முடிவுக்கு வருகிறார். அதாவது, தான் அருகிலிருந்தால் எப்போதாவது அவர்களை பார்க்கும் தவிப்பு ஏற்ப்பட்டுகோண்டே இருக்கும் எனவே அவர்களின் பார்வையிலிருந்தே முற்றிலுமாக சென்றுவிடமேன்று முடிவு செய்து மன்றாட, அவரை கல்கத்தாவிற்கு சென்று சேவை செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
சிவலிங்கமோ முற்றிலும் நிம்மதி இழந்து அமைதியில்லாமல் இருக்கிறார். மகள் தன் அருகில்லில்லை. மனைவியோ படுத்த படுக்கை. தான் செய்த தவறுகளுக்காக வருந்துகிறார்.
எம்.ஆர்.ராதாவிற்கு ஒரு சந்தேகம் எப்போதும் இருந்த வருகிறது. அதாவது தான் பார்த்த பெண் சந்திராதான் என்று ஒரு சந்தேகம். அவர் சதாகாலமும் அந்த ஆசிரமத்தையே சுற்றித்திரிய அப்போது சந்திரா தலைமை அம்மையிடம் உண்மையினை உரைத்து தான் கல்கட்த்தா போகும் செய்தியினை கேட்டு உடனே ஓடோடி முதலில் முத்துராமனிடம் சொல்ல இருவரும் மிகுந்த உற்சாகத்துடன் சிவாஜியிடம் சென்று சொல்கின்றனர்.
செய்திகேட்ட சிவலிங்கம் உன்மத்தரைப்போல உற்சாகம் கொண்டு ஓட , ஒரு சாலையில் தற்செயலாக சந்திராவின் கார் ( கல்கத்தா செல்லும் வழியில் ) சிவாஜியை தாக்க, சிவாஜி அடிபட்டு விழ சந்திரா , அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்க்க , அவருக்கு ரத்தம் தேவைப்பட இரு பெண்களுமே அவருக்கு ரத்தம் அளிக்க , உடல் குணமாகி சிவாஜி, தான் செய்த தவறுகளுக்கும் , அந்தஸ்து என்ற மாயையிலுருந்து தான் வெளியே வந்துவிட்டேன் என்று ஒப்புக்கொண்டு , தன் அருமை பெண்கள் இருவரையும் ஒன்று சேர்ந்து பாசத்துடன் இணைத்துகொண்டு, வி.கே.ஆர்.ரிடன் மன்னிப்பு கேட்டுகொண்டு அவருடைய மகனான ராஜனுக்கு மணமுடிக்கிறார் காந்தாவை.
சந்திராவை முத்து கரம்பிடிக்க ...............சுபம்.
அடுத்து நாம் காண இருப்பது--- படத்தின் மற்ற சிறப்பு அம்சங்கள்
பார் மகளே பார் வெகு சின்ன வயதில் பார்த்த படம் கோபால்.. .. அதன் பிறகு ஒரு தடவை தான் பார்த்திருக்கிறேன் ந.தியின் பெயர் சிவலிங்கம் என்பது நினைவிலில்லை.
வெகு அழகாகக் கதை எழுதியிருக்கிறீர்கள்..மறுபடியும் படத்தைப் பார்த்தாற்போலவே இருக்கிறது.. அந்த முதல் சீனில் உறைந்து போயிருந்திருக்கிறேன்.. என்ன அழகாக ஸ்டார்ட் அண்ட் பின் மெல்ல மெல்ல ந.தியின் குணாதிசயம்..
கடைசியில் இன்னார் தான் மகள் என்று சொல்லாமலேயே முடித்திருப்பதும் அழகு (அப்படித் தானே)
மிக்க நன்றி..மீண்டும் பார்க்க வேண்டும்..( அந்த லிங்க்ஸ் வேலை செய்யவில்லை..)
பார் மகளே பார் - கதாநாயகன் - சிவாஜி கணேசன்
http://i949.photobucket.com/albums/a...ofImage066.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image026.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image012.jpg
http://i949.photobucket.com/albums/a...s/Image007.jpg
http://i949.photobucket.com/albums/a...Image005-1.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage048.jpg
http://i949.photobucket.com/albums/a...ofImage067.jpg
http://i949.photobucket.com/albums/a...Image075-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image076-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image080-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image071-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image073-1.jpg
http://i949.photobucket.com/albums/a...Image081-2.jpg
http://i949.photobucket.com/albums/a...Image085-2.jpg
இப்படம் முற்றிலும் நடிகர் திலகத்தை பல கோணங்களில் காணலாம்:
முதல் காட்சியிலேயே நம்மை கவர்ந்துவிடுவார் ! நண்பர்களுடன் பில்லியர்ட்ஸ் ஆடுவது போல துவங்கம் அவர் வரும் காட்சி. ஒரு நடனமங்கை உங்களை பார்க்கவேண்டுமென்று விரும்புகிறார் என்று பணியாளர் சொன்ன உடனே முகபாவம் சற்று கோபமாக மாறி அந்த மனிதரை அனுப்பிவிடும் விதமே நமக்கு ஒரு செய்தி தரும்.....இவர் மற்றவர்களை போல இல்லை..மாறுபட்டவர் என்று !
தன் மனைவிக்கு ப்ரசவ வேதனை என்று செய்தி கிடைத்ததும் ஒரு வேகம்....
மருத்துவமனையில் தன் மனைவியை கண்டதும் ஒரு அன்பான அரவணைப்பு...
அருகில் 2 குழந்தைகளை கண்டதும்...." ஓ இரட்டை பிறவிகளா " என்று உற்சாகம்.
நண்பனின் போக்கு பிடிக்கவில்லை என்பதில் ஒரு தீர்மானமான முடிவு...அவர் அதில் காட்டும் கடுமை..ஒரு கைதேர்ந்த தொழிலதிபர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு...
குழந்தைகளிடம் அளவற்ற அன்பு....அதே சமயம் அவர்களிடம் ஒரு கண்டிப்பு...அவர்களை வளர்க்கும்விதத்தில்
தானாக வளர்த்துகொண்ட அந்தஸ்து என்ற பிடிவாத குணம்....அதனால் வெளிப்படுத்தும் ஒரு பெரிய மனிதனை போன்ற நடை, உடை , பாவனை
பணியாளர் கருணாநிதியிடம் முதலில் கண்டிப்பு.....
தன் பெண் ஒரு நல்ல குடும்பதை சேர்ந்த வாலிபனை மணக்க விரும்புகிறாள் என்றதும் ஒரு உற்சாகம், முத்துராமனிடம் சாதாரணமாக உரையாடத்துவங்கி உடனே தன் போக்கை மாற்றிக்கொள்ளும் விதம்..
ஒரு பெண் தன்னுடையவள் இல்லை என்று வி.கே.ஆர். சொன்னதும் ஒரு சீற்றம்..அதிற்ச்சி...
தன் அருமை மனைவி கூட தன்னிடம் மறைத்துவிட்டாளே என்று வெறுப்பு...
முதல் பெண் விஜயகுமாரி தன் மகள் இல்லை என்ற செய்தி கிடைத்ததும் ஒரு நிம்மதி..
பின் அவளை பற்றிய செய்தி அனைத்தும் தவறானது என்றதும் மீண்டும் பொங்கி எழும் ஒரு தந்தையின் பாசம். அன்பு.
ஆனால் அவள் இறந்து விட்டாளே என்று தாங்கமுடியாத சோகம்..அவலை நினைத்து நினைத்து வாடுவது... மனைவி படுத்த படுக்கையாகிவிட்டாளே என்று துயரம்..இயலாமை....
முடிவில் தன் பெண்ணை கண்டதும் சந்தோஷம்..மகிழ்ச்சி...
நண்பணிடம் மன்னிப்பு கேட்டுகொண்டு பழைய நட்பின்படி, தன் பெண்ணை நண்பனின் மகனுக்கே மணமுடித்தல்.............
இப்படி ஒரு கம்பீரத்துடன் துவங்கும் அவர், படிபடியாக தளர்ந்து தான் கொண்ட அந்தஸ்து, கவுரவம்..என்ற கோட்பாட்டிலிருந்து வரும் அவர் தான் படத்தின் நாயகன்...
உண்மையிலேயே தன் சொந்த பெண்ணை பறிகொடுத்தவர் போல துடிக்கும் காட்சி தான் தலை சிறந்த நடிப்பு...
மின்னல் வேகத்தில் அவர் காட்டும் முகமாற்றம் இப்படத்தின் சிறப்பு..
அவருடைய நடை , உடை , பாவனையிலேயே ஒரு பணக்கார தொழிலதிபரின் எல்லா குணாதிசயங்களையும் காணலாம்.
படத்தின் 3/4 பகுதி புகை பிடிப்பது போல ஒரு அமைப்பு... அதில் பாதி பகுதி அதை பிடித்துக்கொண்டே பலவிதமாக பேசும் ஸ்டையில் !
வடநாட்டு ஆடையான குர்தா-பைஜாமா ...இந்த உடையை அவர் பொது வாழ்க்கையில் எப்போதும் பயன்படுத்துவார்...இப்படம் முழுவது அதுதான் அவரின் உடை ! ஒரு அழகான குருந்தாடி கூட.!
34 வயதில் ஒரு நடுத்தர/ வயதான வேடம் செய்ய யாருக்கு தான் துணிச்சல் வரும்...
காதலி...மனைவியுடன் ஆடிப்பாட காதல் பாட்டு கிடையாது....
இப்படி படம் முழுவதும் ஆக்ரமித்துக்கொள்ளும் நம் நடிகர் திலகத்தின் திறமையை பற்றி எழுத ஒரு கட்டுரையே வேண்டும்
காலத்தை வென்ற நடிப்பு... நடிகர்களின் திலகம் தான் இவர் !
Thanks to Irene Hastings.
Sivaji Ganesan Filmography Series
89. Par Magale Par பார் மகளே பார்
http://i.ytimg.com/vi/hZjOgz1x_uM/0.jpg
வெளியீடு 12.07.1963
தயாரிப்பு –கஸ்தூரி பிலிம்ஸ்
பட்டு எழுதிய பெற்றால்தான் பிள்ளையா என்ற நாடகத்தைத் தழுவியது
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகவேள் எம்.ஆர்.ராதா, முத்துராமன், சௌகார் ஜானகி, விஜயகுமாரி, புஷ்பலதா, ருக்மணி,
ராஜன், வி.கே.ராமசாமி, ஏ.கருணாநிதி, தங்கராஜ், ஜெமினி பாலு, கே.கே.சௌந்தர், மற்றும்
புதுமுகம் சோ
மனோரமா, எஸ்.ஆர்.ஜானகி, சீதாலட்சுமி, தாம்பரம் ல்லிதா, எம்.எஸ்.எஸ்.பாக்கியம், ராதாபாய்
மற்றும் பலர்
திரைக்கதை – வலம்புரி சோமனாதன்
வசனம் ஆரூர்தாஸ்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், யோகி சுத்தானந்த பாரதியார்
பாடியவர்கள்
டி.எம்.சௌந்தர்ராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், ஏ.எல்.ராகவன், எம்.எஸ்.ராஜு, பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும்
மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்
பாடல்கள் ஒலிப்பதிவு ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி – மெஜஸ்டிக் உதவி ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ அலோஷியஸ்
வசனம் ஒலிப்பதிவு – லோகநாதன் – நியூடோன், ஜி. மோஹன் – பரணி
ஒளிப்பதிவு உதவி – டி.எஸ்.பாண்டியன், எஸ்.கே.அன்வர்ஜான், ஆர்.விஜயராகவன், கே.எஸ்.மணி
நடனம் – பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், சின்னி-சம்பத்
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, கஜபதி, பத்ரையா, கிருஷ்ணராஜ், வீர்ராஜ், எஸ்.வி.மாணிக்கம்.
உடைகள் – பி.ராமகிருஷ்ணன், ஒய்.வெங்கட்ராவ்
கலை – கங்கா
செட்டிங்ஸ் – ராம. சண்முகம்
கார்பெண்டர்ஸ் – என்.கிருஷ்ணன், வி.கண்ணன், பாலசுந்தரம்
பெயிண்டிங்ஸ் – ஆர்.முத்து, ஆர்.ராதா, மாணிக்கம்
எலக்ட்ரீஷியன் – டி.என்.பி. மூர்த்தி
ப்ரோக்ராம்ஸ் – வி.சுப்பையா, ஏ.சுந்தர்ராஜன், என்.எஸ்.நாகப்பன்
அவுட்டோர் யூனிட் – பிரசாத் புரொடக்ஷன்ஸ் பி.லிட்.
செட் ப்ராபர்டீஸ் – சினி கிராஃப்ட்ஸ்
பப்ளிசிடி – எலிகண்ட்
ஸ்டில்ஸ் – ஏ.சிம்மையா, சி.பத்மனாபன்
ப்ராஸஸிங் – சர்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் மேற்பார்வை – ஏ.பீம்சிங்
எடிட்டிங் – ஏ.பால்துரைசிங்கம், ஆர்.திருமலை உதவி – பி.எஸ்.பிரகாஷ், ஜி.என்.ரங்கராஜ், பி.ஸ்டான்லி, ஹெச்மோஹன்
புரொடக்ஷன் நிர்வாகம் – எம்.வி. உமாபதி, சிட்டிபாபு
ஸ்டூடியோ – பரணி நிர்வாகம் ஏ.எல்.எஸ்.புரொடக்ஷன்ஸ், நியூடோன்
ஆர்.சி.ஏ. முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
உதவி டைரக்ஷன் – ஆர்.திருமலை, ஜி.எஸ்.மகாலிங்கம், ஆர்.சடகோபன்
கண்டின்யுடி – டி.பி.அருணாசலம், எஸ்.எஸ்.மணி
ஒளிப்பதிவு – ஜி.விட்டல் ராவ்
தயாரிப்பு – வி.சி.சுப்புராமன்
இசை மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி
உதவி கோவர்த்தனம் ஹென்றி டானியல்
டைரக்ஷன் – ஏ.பீம்சிங்
Quote:
First Release Ad : The Hindu : 10.7.1963
http://i1094.photobucket.com/albums/.../GEDC3842a.jpg
50th Day Ad : The Hindu : 30.8.1963
http://i1094.photobucket.com/albums/...DC3848aa-1.jpg
கோபால் சுட்டிக் காட்டியது போல் ஐஹீன் ஹேஸ்டிங்ஸ் ... (உங்கள் இயற் பெயர் என்ன சார்) அவர்களின் விரிவான ஆய்வு ஒன்றே போதும் பார் மகளே பார் திரைப்படத்தின் சிறப்பை எடுத்துரைக்க...
Hats Off Irene Hastings...
Link for Irene Hastings' Post:
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post458344
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post458383
Sivaji Ganesan Filmography Series
90. Kungumam குங்குமம்
http://i1.ytimg.com/vi/spkV_Gbhs2w/0.jpg
http://i872.photobucket.com/albums/a...damAug63fw.jpg
தணிக்கை 19.07.1963
வெளியீடு 02.08.1963
தயாரிப்பு – கே. மோஹன் (மோஹன் ஆர்ட்ஸ்) - ராஜாமணி பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், விஜயகுமாரி, சாரதா, எஸ்.எஸ். ராஜேந்திரன், முத்துராமன், எஸ்.வி.ரங்காராவ், எம்.வி. ராஜம்மா, மனோரமா, எஸ்.வி.சஹஸ்ரநாமம், நாகேஷ், ஓ.ஏ.கே. தேவர், ஆர். பாலசுப்ரமணியம் மற்றும் பலர்
கதை நிஹர் ரஞ்சன் குப்தா
திரைக்கதை வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
இசை – கே.வி. மகாதேவன், உதவி புகழேந்தி
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன், உதவி பஞ்சு அருணாச்சலம்
ஒலிப்பதிவு – பாடல்கள் T.S. ரங்கசாமி – மெஜஸ்டிக்
ஒலிப்பதிவு – வசனம் – வி.சி.சேகர் – நெப்டியூன்
ரீ ரிக்கார்டிங் – எஸ்.பி. ராமநாதன், ஏவி.எம்.
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, சுந்தரம், ராமசாமி
உடை – பி.ராமகிருஷ்ணன்
நடனம் – ஏ.கே. சோப்ரா, ரத்தன் குமார்
கலை – கே.மோஹன் – மோஹன் ஆர்ட்ஸ், உதவி – ஜெமினி ராமானுஜம், ஏழுமலை
ப்ராசஸிங் – சர்தூல் சிங் சேத்தி
எடிட்டிங் – எஸ். பஞ்சாபி, ஆர். விட்டல்
விளம்பரம் – மோஹன் ஆர்ட்ஸ், எலிகண்ட்
ஸ்டூடியோ – நெப்டியூன், சென்னை 28
ஸ்டில்ஸ் – ஜி.முருகேசன்
புரொடக்ஷன் எக்ஸிகியூடிவ் – வி.எஸ். ராமு
ஆபீஸ் நிர்வாகம் – சி.பாலசுந்தரம், என்.கிருஷ்ணசாமி
புரொடக்ஷன் மேனேஜர் – முகிலன்
ஒளிப்பதிவு – எஸ். மாருதி ராவ்
டைரக்ஷன் – கிருஷ்ணன் பஞ்சு
குங்குமம் விளம்பர நிழற்படங்கள்.. ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து...
Quote:
First Release Ad : The Hindu : 28.7.1963
http://i1094.photobucket.com/albums/...EDC4246a-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 2.8.1963
http://i1094.photobucket.com/albums/...EDC4245a-1.jpg
கதைச் சுருக்கம்
"குங்குமம்"
பெற்ற மகனைக் குற்றவாளி என்று தெரிந்தவுடன் போலீஸாரிடம் ஒப்படைக்கத் துணியும் ஒரு வீரத்தாயின் கதை!
மதுரை மாநகரிலிருந்து, மேற்படிப்புக்கென அமெரிக்கா போகும் சுந்தரத்தை அவன் அன்புத்தாய் மலர் முகங்காட்டி அனுப்பி வைக்கிறாள்.
ஆண்டுகள் நான்கு திரும்பின. சுந்தரம் நாடு திரும்பினான். வீடு சென்றான். மலர் முகங்காட்டித் தாய் அவனை வரவேற்கவில்லை. காரணம் - தந்தை தற்கொலை செய்து கொண்ட கதை அவனுக்கு அப்போது தான் தெரியவந்தது. தன் குடும்பத்தின் இந்த அவல நிலைக்குத் தான் தான் காரணம் என்பதை உணர்ந்தான்.
வேலை தேடி பம்பாய் புறப்பட்டான். அவன் தங்கியிருந்த ஓட்டலில் இரவு ஒரு கொலை நடந்தது. சுட்டவனோ ஒரு நல்ல மனிதன். அவனைத் தப்பி ஓடச் செய்து விட்டுத் தன்னையே கொலைக் குற்றவாளியாகக் காட்டிக் கொண்டான் சுந்தரம்.
கொலையாளி சுந்தரத்தைப் போலீஸ் துரத்தியது.
ஒரு நாள் சுந்தரம் தாயைச் சந்தித்து, தான் ஒரு கொலையாளி என்று சொல்லிவிட, தன் மகனையே போலீஸில் ஒப்படைக்க முனைந்து விடுகிறாள் தாய். அவனுக்கு மாலையிடக் காத்திருக்கும் கோமதியோ, அவனைத் தப்புவிக்க முனைகிறாள்.
சுந்தரத்தின் நண்பன் தாஸ், அவனுக்கு நல்லது செய்யப் புறப்படுகிறான். இடையிலே வந்து புகுந்த சுசீலா என்னும் நங்கை ஒருத்தி சுந்தரத்திற்கெனத் தான் எதையும் செய்யத் தயார் என்று புறப்படுகிறாள்.
ஆனால் 'கொலைக் குற்றம்'என்ற அந்த ஒரே பலத்தால், இவ்வளவு நல்லவர்களையும் போலீஸ் துப்பாக்கி துரத்திக் கொண்டே இருக்கிறது.
* சுட்டவன் யார்? நல்லவன் ஏன் சுட்டான்?
* தாய் மகனைக் கடைசி வரை வெறுத்தாளா?
* கோமதி கடைசியி்ல் தன் அத்தானைக் கடைசியில் காப்பாற்றினாளா?
* தாஸும் சுசீலாவும் சுந்தரத்திற்கென என்ன செய்தார்கள்?
இவற்றுக்குரிய பதிலைத் தருவதுதான் 'குங்குமம்'
பாடல்களின் விவரங்கள்
1. பூந்தோட்டக் காவல்காரா – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
2. குங்குமம் மங்கல மங்கையர் குங்குமம் – பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
3. காலங்கள் தோறும் திருடர்கள் இருந்தார் – பி.சுசீலா
4. தூங்காத கண்ணென்று ஒன்று – பி.சுசீலா, டி.எம்.சௌந்தர்ராஜன்
5. மயக்கம் எனது தாயகம் – டி.எம்.சௌந்தர்ராஜன்
6. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – டி.எம்.சௌந்தர்ராஜன், எஸ்.ஜானகி – பாடலை எழுதியது பஞ்சு அருணாசலம்
7. மங்கல மங்கையர் குங்குமம் – பி.சுசீலா, சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
ஊர்வசி விருது பெற்ற சாரதா அவர்களின் முதல் தமிழ்ப்படம் குங்குமம். இது பற்றி தினகரன் நாளிதழில் சாரதா அவர்களைப் பற்றிய குறிப்பு
http://www.thinakaran.lk/2013/11/12/?fn=f1311124&p=1
குங்குமம் திரைப்படத்தின் நெடுந்தகட்டின் முகப்பு
http://www.buycinemovies.com/images/...363-vcd162.jpg
Kungumam Story in the Plot section of wikipedia :
Reproduced from: http://en.wikipedia.org/wiki/Kungumam_(film)Quote:
Sundharam (Sivaji Ganesan) loves Gomathi (C. R. Vijayakumari), where the latter is an orphan and lives with her uncle's family. Sundharam leaves to the United States of America for further studies. When Sundharam comes back four years later, he was shocked to see that his mother Vedhavalli (M. V. Rajamma) as a widow and was told that his father Sambasivam committed suicide due to of disgrace that unable to pay back the loans.
Sundharam leaves to Bombay for an interview where comes across a murder of broker Govindan tooks place and shocked to see that the murderer is Punniyakodi (S. V. Ranga Rao) who is later introduced as Gomathi's father in a police investigation. Sundharam helps Punniyakodi to escape and in turn is suspected by the police as the culprit instead. Police Superintendent Raja (S. S. Rajendran) is appointed to investigate the murder case. When Gomathi's uncle refuses to let her getting married to Sundharam, she leaves home following Vedhavalli to Madurai. Sundharam travels back to Madras where he bumps into Suseela (Saradha) on the road. Sundaram finds Govindan's family and offers help who initially refuses but later accepts when persuaded and explained. While leaving Gobvindan's house, Sundharam learns that Punniyakodi is living as a fugitive had changed his name as James and staying with a crook Kandhan (O. A. K. Thevar). Sundharam seeks his friend Dhas (R. Muthuraman) help in taking care of Punniyakodi for the time being and goes to Madurai ans explaines to Vedhavalli and Gomathi that he is a murderer and wanted by the police but Vedhavalli refuses to accept Sundharam as her son due to the conviction.
Sundharam upon reading an advertisement in the news paper, joins as a tuition teacher in disguise as Kalamegam. There Sundharam learns that Suseela's father is Justice Somanathan (S. V. Sahasranamam), her cousin is Inspector Raja, servants Arasan (Nagesh) and Kanniamma (Manorama). Meanwhile Superintendent Raja hatches a plan to move Vedhavalli and Gomathi to Dhas's house so that to ease to capture Sundharam if he happens to visit them but James leaves Dhas's home following Kandhan's temptation. Suseela refuses Raja's advances and developes a soft corner for Kalamegam but later finds out that he is Sundharam and his deeds but lies to Justice Somanathan that he is a good man. Suseela also lets Sundharam escape when Raja finds out about this.
Vedhavalli who is a staunch believer of justice, hates Sundharam for his conviction and arranges Gomathi to be married to Dhas but Gomathi refuses. In turn Gomathi pleads Sundhram to marry Suseela as Suseela had help them out a lot to prove Sundharam's innocence before gets shot by the police mistaken for Sundharam. A trial takes place where Sundharam accepts the all the charges onto him. A twist in the story occurs when Somanathan produces Punniyakodi and Kandhan in court. Punniyakodi admits in court that he is cheated by Kandhan into shooting broker Govindan where Kandhan earlier had told Punniyakodi that by the revolver is unloaded. Lastly Punniyakodi admits that he is actually Sambasivam and was introduced as Punniyakodi to the police by Sundharam who was only doing all these in order to save him. The judges sentences Kandhan for murder, further trials for Sambasivam and 6 months for Sundharam. At the end of the story, Sambasivam applies kungumam to Vedhavalli at the request of Sundharam.
And here comes our NOV Sir's writing on Kungumam:
Link for the above post: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post331666Quote:
Since about 15 years ago when I listened to chinnan chiriya vanna paravai ennaththai solludhamma sung on stage during a Thaipoosam festival in Batu Caves, I have been completely floored by the excellent singing by TMS and S Janaki. The song seems like a competition between two vidhwans and both TMS and S Janaki had given all thier best in the song. Repeated hearings only increased my desire to see the action on the screen but my search for the film was fruitless. Until today that is....
Rajamani Pictures
Kungumam
Starring: Sivaji Ganesan, Vijayakumari, SS Rajendran, Saradha, Muthuraman, Rangarao, M Rajamma, Nagesh, Manorama, etc.
Producer: Mohan Arts
Lyrics: Kannadhasan/Panchu Arunasalam
Music: KV Mahadevan
Direction: Krishnan Panju
Story begins with Vijayakumari awaiting for her murai maaman, Sundaram (SG). She sings poonthOtta kaavalkkaaraa poo paraikka iththanai naalaa. Note the lyrics: this is the reason I maintain that new songs can never compete with the olden day songs. How beautifully Kannadhasan scripts of a woman in love awaiting her lover!!!
We learn that Sundaram is going to the States to further his studies. The titles come on with the fabulous kungumam mangala mangaiyar kungumam- sung to perfection by Soolamangalam Sisters - in the background. In the song, Kannadhasan pays tribute to Sivaji's mother in the line: raajamani ennum annai mugaththil milirum mangala kungumam!
When he returns from the States, Sundaram meets with despair written on everyone's face. He learns that his mother (Rajamma) is now a widow without kungumam! He is told that his father had commited a crime, jailed and had comitted suicide. Sundaram leaves for Bombay for business. While in the hotel room, he comes accross Rangarao shooting and killing a jewlery merchant. Sundaram takes the gun from Rangarao ( ) and claims to be the killer! He then escapes to Madras.
In Madras SSR is made the inspector in charge of the crime. Sundaram meets Sharada on the road. kaalangal thOrum thirudargal irunthar sings Sarada. He then seeks the wife and family of the jewler and gives her money to get by. To escape the police Sundaram dons a lady's dress with a big kungumam. Sivaji will be in his element here.
He meets Rangarao and takes him to his friend Muthuraman's house. When he meets his mother in Madurai, the righteous woman tries to turn him to the police. Sundaram once again escapes and returns to Madras. Sarada's father (Sahasranamam) advertises for a home tutor for his son. Sundaram comes in maaruvEdam as thamizh teacher Kaarmegam and joins the household. In the meantime Inspector SSR has eyes for Sarada!
Slowly but surely Sundaram and Saradha develop feelings for each other. thoongaadha kannendru ondru thudikkindra sugamendru ondru thaangaadha manamendru ondru thandhaayE nee ennai kandu. At the end of the song Karmegam removes his wig and make up and Saradha sees the real Sundaram.
SSR tries many ways to catch Sundaram but all his plans fail. In one scene he enters Muthuraman's house while Sundaram is there. Our master than dons another look and acts as Muthuraman's father.
Later Saradha asks Sundaram the reason for his dual personality who refuses to clarify but instead sings the masterpiece: mayakkam enadhu thaayagam mounam enadhu thaai mozhi. Thinking of his running away from th epoolice he sings: naanE enakku pagai aanEn en naadagathil naanE sirai aanEn, thEnE unakku unakku puriyaadhu, andha deivam varaamal vilangaadhu. He also contemplates about his promise to marry Vijayakumari and now his feelings for Saradha: vidhiyum madhiyum veramma, adhan vilakkam naandhaan paaramma, madhiyil vandhaval neeyamma, en vazhi maraithaal vidhiyamma! Hats off to Kannadhasan! And of course KVM and TMS.
To catch Sundaram, SSR comes as a beggar to Muthuraman's house (where Vijayakumari now stays), but Sundaram gets the one up by appearing as another beggar! Yes, five avathars in one movie!
Just as I was wondering when my beloved song will appear, Saradha is asked to do a katcheri and Sundaram/Karmegam follows. She sings chinna chiriya vanna paravai ennaththai solludhamma. Against my expectations, it was not a competition song and was just a song performed in a concert. At the end of the song, SSR recognises Karmegam as Sundaram. Sarasha comes to his rescue and switches off the lights to enable Sundaram to escape.
In the meantime, Sundaram's mother is adamant in wanting to give up Sundaram to the police. Sundaram promises to give himself up when he gets Vijayakumari to agree to marry Muthuraman. The police arrive and corner the house. People start running away and by mistake Vijayakumari is shot dead! As a last request she asks Sundaram to place the kungumam on her forehead.
Sundaram is brought before the judge. He admits to his crime and request to be punished. Rangarao appears and there is a complete twist to story...... best seen on the screen.
Videos
Sinnansiriya
http://youtu.be/UtlVTv1zkMk
title song
http://youtu.be/Tpwf0axbK7U
poonthotta kavalkara
http://youtu.be/FN-foH6RGOo
lady get up
http://youtu.be/spkV_Gbhs2w
thoongadha kannendru ondru
http://youtu.be/M6OJpL6PAUo
kalangal thorum
http://youtu.be/mUpQ74i8nfg
mayyakkam enadhu
http://youtu.be/LSJ1tvHG-m0
Sivaji Ganesan Filmography Series
91. Raktha Thilakam இரத்தத் திலகம்
http://i1094.photobucket.com/albums/...alar/RT1-1.jpg
மேற்காணும் நிழற்படம் உபயம் ஆவணத்திலகம் பம்மலார்
வெளியீடு – 14.09.1963
இரத்தத் திலகம் வெளியீட்டு விளம்பர நிழற்படம் நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
Quote:
முதல் வெளியீட்டு விளம்பரம் :
சுதேசமித்ரன் : 14.9.1963
http://i1094.photobucket.com/albums/.../GEDC4582a.jpg
தயாரிப்பு: கண்ணதாசன், நேஷனல் மூவீஸ்
நடிக நடிகையர் –
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், புஷ்பலதா, மனோரமா, ஜானகி, சீதாலட்சுமி, செந்தாமரை, சண்முக சுந்தரம், பார்த்திபன், கண்ணப்பா, கன்னையா, வீராச்சாமி, நம்பிராஜன், நடராஜன்,
வசனம் கண்ணதாசன், பி.சி.கணேசன், அண்ட் தியாகன்
பாடல்கள் கண்ணதாசன் உதவி – பஞ்சு அருணாச்சலம், முக.நாயகம்
இசை – திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி, இசைக்குழு – வயலின் கே.வி.மகாதேவன்
பின்னணி – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா, எல்.ஆர். ஈஸ்வரி
வசனம் ஒலிப்பதிவு – கே.சீனிவாசன்
ஆபரேடிவ் காமிரா மேன் – சிட்டிபாபு
நடன அமைப்பு – டெஸ்மாண்ட், ராஜ்குமார்.
ஸ்டண்ட் – சாரங்கன்
நடனம் (சசி-கலா) மாலா
கலை – எம். அழகப்பன்
மேக்கப் – ஆர். ரங்கசாமி, நாகேஸ்வர ராவ், ராமசாமி, கிருஷ்ணராஜ், அழகிரி
ஆடை அணி மணி – ஆர்.சி. லிங்கம்
சக நடிகர்கள் ஏஜெண்ட் – டி.கே.பரமசிவம்- பி.கே.திருப்பதி
ஸ்டில்ஸ் – ஏ.சி. ராமனாதன்
விளம்பரம் அருணா & கோ
பப்ளிசிடி டிசைன் ஜி.ஹெச்.ராவ், கே.எஸ்.ராமு
அலங்காரப் பொருட்கள் – சினி கிராப்ட்ஸ்
ப்ராஸஸிங் கே.பரதன் மெஜஸ்டிக் ஸ்டூயோ லேபரட்டரி
எடிட்டிங் ஆர்.தேவராஜன்
ஸ்டூடியோ மெஜஸ்டிக்
ஆர்சிஏ முறையில் ஒலிப்பதிவு செய்யப் பட்டது
ஸ்டூடியோ புரோக்ராம் – எம்.சாகுல்
செட்டிங்ஸ் – எம்.எல்.ராயன்
சீப் எலக்ட்ரீஷியன் – சி.என்.புருஷோத்தமன்
தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.வீரய்யா
அலுவலக நிர்வாகம் – கே.நடராஜய்யர், எஸ்.சிவலிங்கம், எஸ்.வீரப்ப செட்டியார், எஸ்.பெல்.பழனியப்பன், சுப.மாணிக்கம்
ஒலிப்பதிவு டைரக்டர் – டி.எஸ்.ரங்கசாமி, மெஜஸ்டிக்
ஒளிப்பதிவு டைரக்டர் – ஜாகீர்தார்
அஸோஸியேட் டைரக்ஷன் – எஸ்.வி.வெங்ட்ராமன்
கூட்டுத் தயாரிப்பு – பி.வி. கிருஷ்ணன்
தயாரிப்பு – பஞ்சு அருணாச்சலம்
திரைக்கதை டைரக்ஷன் – தாதா மிராசி
இரத்தத் திலகம் திரைக்காவியத்தைப் பற்றிய சில துளிகள்
நடிகர் திலகத்தை இயக்குநர் தாதா மிராசி முதல் முதலாக இயக்கிய படம்
இந்திய சீன யுத்தத்தைப் பின்னணியாக வைத்து எடுக்கப் பட்டது.
அன்பு திரைக்காவியத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் திலகம் நடித்த ஒத்தெல்லோ நாடகம் இடம் பெற்றது.
மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருக்க வேண்டியது. நடிகர் திலகத்தின் படங்களின் தொடர் அணிவகுப்பினால் சற்றே பாதிக்கப் பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
பிரிவுபச்சாரத்திற்கென்று எந்த விழாவிலும் கட்டாயமாக இடம் பெறும் பாடல்
பசுமை நிறைந்த நினைவுகளே
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு - கவியரசர் கண்ணதாசன் தோன்றி நடித்த காட்சி
வாடைக் காற்றம்மா வாடைக் காற்றம்மா - ஈஸ்வரியின் குரலில் இனிமையான பாடல்
பனிபடர்ந்த மலையின் மேலே - மிகச் சிறந்த பாடல். தேச பக்திக்கு மிகச் சிறந்த உதாரணம்.
http://www.indiablooms.com/big_image..._Uthup_300.jpg
உஷா ஐய்யர் [உஷா உதுப்] குரலில் பாடல் இடம் பெற்ற முதல் தமிழ்ப் படம்.
http://youtu.be/LaikZQDFLwo
படத்தில் சாவித்திரி பிறந்த நாள் கொண்டாடும் போது இடம் பெறும் வாழ்த்துப் பாடல் Merry Go Round. இது உஷா அய்யர் அவர்கள் பாடியது. டைட்டிலில் இவர் பெயர் இடம் பெறவில்லை.
பேசும் படம் பத்திரிகையின் ஜூலை 1963 இதழில் இடம் பெற்ற இரத்தத் திலகம் படக் காட்சிகள். உபயம் ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்.
Quote:
காவியக்காட்சிகள் : பேசும் படம் : ஜூலை 1963
http://i1094.photobucket.com/albums/.../GEDC4574a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4575a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4576a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4577a.jpg
[img[http://i1094.photobucket.com/albums/i442/pammalar/GEDC4578a.jpg[/img]
http://i1094.photobucket.com/albums/.../GEDC4579a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4580a.jpg
http://i1094.photobucket.com/albums/.../GEDC4581a.jpg
இரத்தத் திலகம் திரைப்படத்தைப் பற்றிய முரளி சாரின் சிறப்பான கட்டுரையின் மீள்பதிவு
Part 1 Link: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post367309
Part 2 Link: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post367310
Quote:
இரத்த திலகம் - Part I
தயாரிப்பு : நேஷனல் பிலிம்ஸ்
இயக்கம்: தாதா மிராசி
வெளியான நாள்: 14.09.1963
கல்லூரியில் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் குமார், கமலா மற்றும் மதுரை. மதுரையின் தங்கை கமலா. கமலாவின் பெற்றோர் சிறு வயதிலேயே சைனாவின் தலைநகரமாம் பீகிங் (அன்றைய பேர்) நகரத்தில் செட்டிலாகி விட்டவர்கள். படிப்பிற்காக கமலா தமிழகத்திற்கு வந்திருக்கிறாள். குமாரும் கமலாவும் எப்போதும் எலியும் பூனையுமாக இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் இவர்கள் சூழ்நிலை காரணமாக கல்லூரி கலை விழாவில் ஒதெல்லோ நாடகத்தில் இணைந்து நடிக்க நேர்கிறது. அந்த இணைதல் அவர்கள் அடி மனதில் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த ஆசையை வெளிக் கொண்டுவருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பும் செய்தியை சொல்லும் போது கமலாவின் தந்தை ஆபத்தான நிலைமையில் இருப்பதால் உடன் சைனாவிற்கு கிளம்பி வருமாறு அழைப்பு வர அவள் கிளம்பி செல்கிறாள். சிறிது காலத்திற்குள்ளாகவே அவள் தந்தை காலமாகி விடுகிறார், அங்கே இருக்கும் ஒரு தமிழ் குடும்பம் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது. அந்த குடும்பத்தின் ஒரே மகன் டாக்டராக இருக்கிறான்.
குமாருக்கு தாய் தந்தை இல்லை. தந்தை சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகி. தாத்தா பாட்டி மட்டுமே உள்ளனர். பம்பாயில் ஒரு வானொலி நிலையத்தில் வேலைக்கு சேரும்படி குமாருக்கு கடிதம் வருகிறது. அந்த நேரத்தில் சைனா அத்து மீறி நமது எல்லைப் பகுதிக்குள் நுழைந்து சில பகுதிகளை கைப்பற்றிய செய்தி வருகிறது. பஞ்சசீல கொள்கையில் உறுதியாக நின்ற இந்தியா, சைனாவை நண்பனாக நினைக்க, சைனாவோ நம்மை ஆக்ரமித்தது. நமது நாட்டை காப்பாற்ற வீட்டிற்கு ஒருவர் முன் வரவேண்டும் என்று (அன்றைய) பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு வானொலியில் உரையாற்றுவதை கேட்கும் குமார் ராணுவத்தில் சேர முடிவு செய்கிறான். வானொலியில் இருந்து வந்த ஆர்டரை கிழித்து எறிகிறான். ராணுவத்தில் சேர கூடாது என்று தாத்தா மன்றாட, அவரை சம்மதிக்க வைக்கிறான்.
அடுத்து போர் முனையில் குமார். ராணுவத்தில் ஒரு மேஜராக பொறுப்பேற்கும் குமார் இழந்த இடங்களை மீட்க வியூகம் வகுக்கிறான். சீனர்கள் நமது இடங்களை பிடிப்பதற்கே பணம் பெற்றுக் கொண்டு நமது நாட்டினரே துரோகிகளாக மாறி உளவு சொன்னதுதான் காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் குமார் அவர்களில் ஒருவனை சுட்டு கொல்கிறான். துரத்தும் சீன ராணுவத்திடமிருந்து தப்பித்து ஓடும் குமார் ஒரு வீட்டில் தஞ்சம் புகுகிறான். அந்த வீட்டில் இருக்கும் வயதான தாய் அவனை காப்பாற்ற, தனியறையில் தன் திருமணமாகாத மகளுடன் சேர்ந்திருக்க சொல்லிவிட்டு அவனை தேடி வரும் ராணுவத்திடம் தன் மகளும் மருமகனும் உறங்குவதாக சொல்லி காப்பாற்றுகிறாள். அவனுக்கு உணவு கொடுத்து உபசரிக்கிறாள். மகன் என்ன வேலை செய்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. அந்த நேரத்தில் அவளது மகனின் சடலம் கொண்டு வரப்படுகிறது. தான் கொன்றது அந்த தாயின் மகனைத்தான் என்று அறியும் குமார் துடித்து போக, அந்த தாயோ விஷயத்தை புரிந்துக் கொண்டு நான் பெற்ற மகன் தேச துரோகியானான். உன்னை போன்ற ஒரு வீரனை என் மகனாக நினைக்கிறேன் என்கிறாள். மிகுந்த கனத்த மனதோடு குமார் அந்த இடத்தை விட்டு விலகி வருகிறான்.
இதே நேரத்தில் போர் ஏற்பட்டதால் சைனாவில் உள்ள இந்தியர்கள் திருப்பி அனுப்படுகின்றனர். போகாதவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்படுகின்றனர். இந்தியாவிற்கு போய் விடுவோம் என்று தாய் சொல்ல கமலா மறுக்கிறாள். சைனாவிற்கு விசுவாசமாக அங்கேயே தங்கி விடப் போவதாக சொல்லும் கமலாவை தாய் சபிக்கிறாள். என்ன சொல்லியும் கமலா வர மறுப்பதால் தாய் மட்டும் கிளம்பி இந்தியா செல்கிறாள். இவ்வளவு செய்தும் சீன அதிகாரிகளுக்கு அவள் மேல் நம்பிக்கை வராமல் ஒரு சீன குடிமகனை அவள் திருமணம் செய்து கொள்ள தயாரா என்று கேட்க கமலா சம்மதிக்கிறாள். குடும்ப நண்பரின் டாக்டர் மகனையே திருமணம் செய்து கொள்கிறாள். ஆனால் முதலிரவன்று தன்னை நெருங்கும் கணவனிடம் நாடு இன்றுள்ள நிலையில் நாம் மகிழ்வாக இருப்பது சரியாக இருக்காது என்று கூறி விலகுகிறாள். அவனும் அதை அதை ஒப்புக் கொள்கிறான். டாக்டர் என்ற முறையில் காயம்பட்ட வீரர்களுக்கு மருத்துவம் செய்ய அவனை போர் முனைக்கு சீன அரசாங்கம் அனுப்பி வைக்க, அவனுடன் செவிலயராக சேவை செய்ய கமலாவும் புறப்படுகிறாள்.
போர் முனையிலிருக்கும் குமாருக்கு கமலா நினைவு வருகிறது. அந்நேரம் அங்கே அவனுக்கு கிடைக்கும் ஒரு தமிழ் பத்திரிகையில் இந்திய- சைனா போர் நடக்கும் போது ஒரு சைனாக்காரனை ஒரு தமிழ் பெண் திருமணம் செய்துக் கொண்டாள் என்ற சேதியுடன் கமலாவின் புகைப்படமும் வெளியாகியிருக்க மனம் உடைந்து போகிறான் குமார். அவளை அந்த நிமிடம் முதல் அடியோடு வெறுக்க தொடங்குகிறான்.
ஆக்ரமித்துள்ள பகுதிகளில் கமலாவும் அவளது கணவனும் சென்று சீன ராணுவத்தோடு சேர்ந்து தங்குகிறார்கள். அவர்கள் வகுக்கும் போர் திட்டங்களை எல்லாம் கமலா குறிப்பெடுத்து இந்திய படைகளின் கைகளில் கிடைக்குமாறு செய்கிறாள். அவை எல்லாமே தற்செயலாய் குமார் கையிலே கிடைக்கிறது. அதை வைத்து படை நடத்தும் குமார் எதிரிகளை பல இடங்களில் வீழ்த்துகிறான். தாங்கள் போடும் திட்டங்கள் எல்லாம் எப்படி இந்திய படைகளுக்கு தெரிகின்றன என்று சந்தேகப்படும் சீன இராணுவம் ஒரு நாள் கமலாவை பிடித்து விடுகிறது. விசாரணையில் கமலா குற்றவாளி என்று தீர்ப்பாகி மரண தண்டனை விதிக்கப்படுகிறது. தண்டனையை நிறைவேற்றும் நேரம் இந்திய படைகள் அங்கே தாக்குதல் நடத்த கமலா தப்பி விடுகிறாள்.
இதனிடையே போர் முனையில் ஒரு இடத்தை கைப்பற்றும் முயற்சியில் தன் படையிடமிருந்து பிரிந்து விடும் குமார் எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொள்கிறான்.அவனை விசாரித்து ஒரு இடத்தில் அடைத்து வைக்க அங்கிருந்து தப்பி ஓடி வரும் அவன் ஒரு பாழடைந்த மண்டபத்தில் ஒளிந்து கொள்ளும் நேரத்தில் அங்கே கமலாவும் இருப்பதை பார்க்கிறான். அவளை தேச துரோகி என்று குற்றம் சாற்றும் குமார் அவளை கொல்ல முற்படுகிறான். அந்நேரம் எல்லா உண்மைகளையும் கமலா சொல்ல அவனுக்கு நிலைமை புரிகிறது. அவளை ஏற்று கொள்ள நினைக்கும் குமாரிடம் தனக்கு திருமணமாகி விட்டதால் அவனை ஏற்று கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவிக்கிறாள். இருவரும் அங்கிருந்து தப்பி வரும் நேரம் அவள் கணவன் ஒரு சாமியார் வேடத்தில் வந்து அவளை சுட்டு விடுகிறான். அவனை கொன்று விட்டு அந்த பகுதியில் சீன ஆக்ரமிப்பை முறியடிக்கும் விதமாக சீன் கொடியை இறக்கி விட்டு மூவர்ண இந்திய கொடியை ஏற்றி வைக்கும் குமாரை எதிரிகள் நெற்றியிலே சுட அந்த ரத்த திலகத்துடன் இழந்த இடத்தை மீட்டு விட்டோம் என்ற நிறைவுடன் உயிர் துறக்கிறான்.
இரத்த திலகம் - Part II
இந்த படம் ஒரு உயரிய நோக்கத்திற்காக எடுக்கப்பட்டது. தி.மு.கவிலிருந்து விலகி தமிழ் தேசிய கட்சி கண்ட கண்ணதாசன் தன் தேசப்பற்றை இந்த படம் தயாரித்ததன் மூலமாக வெளிப்படுத்தினார். சுதந்திர பாரதம் நான்கு போர்களை சந்தித்திருக்கிறது. [கார்கிலையும் சேர்த்தால் ஐந்து] ஆனால் சீனப் படையெடுப்பு ஏற்படுத்திய கோவம் மிக பெரியது. காரணம் பாகிஸ்தான் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் சைனா நண்பனை போல் நடித்து நம்மை ஏமாற்றியது அதனால் மக்கள் கோபம் அதிகமாக இருந்தது.
இப்படிப்பட்ட நேரத்தில் மக்களின் பூரண ஆதரவு அரசுக்கு இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்தது. ஆகவே பிரிவினை கோரிக்கைக்களை முன் வைக்கும் எந்த ஒரு அமைப்பும் தடை செய்யப்படும், அதன் தலைவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்தது [நமது மாநிலத்தின் வீராதி வீரர்கள் எல்லாம் பெட்டிப் பாம்பாக அடங்கி போனது தனிக் கதை]. இந்த சூழ்நிலையில் கண்ணதாசன் இந்த படம் எடுத்தார். குறை சொல்ல முடியாத முயற்சி. ஆனால் கதை மற்றும் திரைக் கதையமைப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உண்மை
இந்திய சீன போரைப் பற்றி படம் எடுக்க வேண்டும். அதற்காக நாயகியை சைனாவில் பிறந்து தமிழ்நாட்டில் படிக்கும் பெண்ணாக கதை எழுதியாகி விட்டது. போர் நடக்கும் போது அவள் சைனாவில் இருப்பது போலவும் சந்தர்ப்பத்தை அமைத்தாகி விட்டது. இந்தியர்கள் அனைவரும் நாடு திரும்பலாம் என்று சொன்ன பிறகும் நாயகி அங்கேயே இருப்பது ஏன் என்று ஒரு முடிச்சு விழுகிறது. ஆனால் முடிவில் நாயகி சொல்லும் காரணம் [எப்படி சைனா வெளியில் நட்பு பாராட்டி தீடீரென்று இந்தியா மீது படையெடுத்ததோ அது போல நானும் அவர்கள் பக்கம் இருப்பது போல நடித்து அவர்களை கவிழ்க்க முயற்சி எடுத்தேன்] வலுவாக இல்லை. ஏன் என்றால் அவர் நாடு திரும்ப வேண்டாம் என்று முடிவெடுக்கும் போது குடும்ப நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள போகும் எண்ணமே அவருக்கு இல்லை. அப்படியிருக்க இப்படி திருமணம் செய்து கொண்டு போர் முனைக்கு போய் உளவு சொல்வோம் என்று எப்படி திட்டம் போட முடியும்?
அது போல நாயகன் எடுத்தவுடன் மேஜர் பதவிக்கு வருவதும் அப்படியே. ஆனால் கதையை நகர்த்தி செல்ல இவை தேவை என்பதால் லாஜிக்கை மறந்து விடலாம். தந்தைக்கு உடம்பு சரியில்லை என்றவுடன் நாயகி மட்டுமே போகிறாள். அவள் அண்ணன் அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.
மற்றொரு குறை. சைனா நம் மீது போர் தொடுத்தது 1962 அக்டோபர் 20ந் தேதி. அப்போது நாயகன் படிப்பை முடித்து விட்டு ராணுவத்தில் சேருகிறான். ஆனால் அதற்கு முந்தைய காட்சி ஒன்றில் நாகேஷ் பேப்பர் கடையில் புத்தகம் வாங்கும் போது அங்கே தொங்கும் தினத்தந்தி போஸ்டரில் காமராஜர் ராஜினமா பற்றி ---- கருத்து என்று போட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த வேண்டி மூத்த தலைவர்கள் அரசு பதவிகளை விட்டு விலகி கட்சி பணியாற்ற வேண்டும் என்ற கே பிளான் அதாவது காமராஜ் பிளான் அறிவிக்கப்பட்டது 1963 வருடம் ஜூலை/ஆகஸ்ட் மாதம். அதன்படி பெருந்தலைவர் பதவி விலகியது 1963 வருடம் அக்டோபர் 2 அன்று. இதை கவனித்திருக்கலாம். 2008-களிலே கூட இது போன்ற தவறுகள் நடக்கும் போது 45 வருடங்களுக்கு முன் வந்த படத்தில் இது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்றாலும் திரைகதையமைப்பு இன்னும் சுவையாக பின்னப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட நெருடல்கள் மறந்திருக்கும்.
நடிகர்களை பொருத்த வரை நடிகர் திலகம் நிறைந்து நிற்கும் கதை. மறுபடியும் சொல்லாமல் இருக்க முடியவில்லை. ஓவர் என்ற எண்ணமே மனதில் தோன்றாது. படம் முழுக்க இயல்பு.
முதல் பாதியில் படு காஷுவலாக வருவார். சாவித்திரியை கிண்டல் செய்வது எல்லாம் ரொம்ப இயல்பாக பண்ணியிருப்பார். இரண்டாம் பகுதியில் சீரியஸ். ஆனால் தேவையறிந்து பரிமாறியிருப்பார். ஷேக்ஸ்பியரின் மிக பிரபலமான ஒதெல்லோ நாடகம் தமிழ் சினிமாவில் இரண்டு முறை வந்திருக்கிறது. இரண்டுமே நடிகர் திலகத்தின் படத்தில் தான். அன்பு திரைப்படத்தில் தமிழில் வந்தது [அந்த விளக்கு அணைந்தால் இந்த விளக்கு அணையும்]. இந்த திரைப்படத்தில் ஷேக்ஸ்பியரின் ஆங்கில வரிகளே கையாளப்பட்டது. நடிகர் திலகம் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இந்த காட்சியை பார்த்தாலே போதும். அதே ஸ்டைலில் பண்ணியிருப்பார். ஒரே குறை, ராஜபார்ட் ரங்கதுரை போல இந்த படத்திலும் வேறு ஒருவரை பேச வைத்திருப்பார்கள். ஆனால் அதில் இவர் பேசவில்லை என்பது வெளிப்படையாக தெரிந்தது போல் இல்லாமல் இதில் ஓரளவிற்கு பொருத்தமான குரல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இறுதியில் சாவித்திரி தன் நிலையை விளக்கி சொன்னவுடன் பொங்கி வரும் அந்த ஏமாற்றத்தை தாங்கி கொண்டு, தான் உண்பதற்காக வைத்திருந்த ரொட்டி துண்டை சாவித்திரிக்கு சாப்பிட கொடுத்து விட்டு பக்கத்தில் உட்கார்ந்து நகத்தை கடித்தபடியே பார்க்கும் பார்வை இருக்கிறதே, நடிகர் திலகத்தால் மட்டுமே முடியும். இந்த படத்திலும் இமேஜ் பார்க்காமல் தன் உடல் பருமனை கிண்டல் செய்யும் வசனங்களை பேசியிருக்கிறார். "உங்கண்ணனை வேற தேசத்துக்காரன் பார்த்தான்னா, பஞ்சத்திலே அடிப்பட்ட நாடுன்னு நம்ம நாட்டை பத்தி நினைப்பான்" என்று நாகேஷை குறிப்பிட்டு சாவித்திரியிடம் சொல்ல, அதற்கு சாவித்திரி "உங்களை பார்த்தா அந்த பஞ்சத்திற்கே நீங்கதான் காரணம்னு நினைப்பான்" . அது போல ஊரிலிருந்து வரும் பாட்டி சிவாஜியை பார்த்து "என்னப்பா இப்படி இளைச்சு போயிட்டே"? என்று கேட்க "யாரு நானா?" என்று கேட்பார்.
நடிகையர் திலகத்திற்கு அவ்வளவாக வேலை இல்லை. முதலில் வரும் கோபம் குறும்பு மட்டுமே அவருக்கு ஸ்கோர் செய்ய கிடைத்த சந்தர்ப்பங்கள். நாகேஷ் நடிகர் திலகத்தோடு இணைந்த மூன்றாவது படம். அவர் மனோரமாவை திருமணம் செய்ய எடுக்கும் முயற்சியெல்லாம் ஏற்கனவே அது போல பார்த்து விட்டதால் நகைச்சுவை பஞ்சம். மேலும் அது கதையில் ஒட்டாமல் தனியாக இருக்கிறது. கல்லூரி பேஃர்வல் விருந்தின் போது அடுத்தவனிடம் மணி கேட்டு காபியை தன் கப்பில் மாற்றிகொள்வது மட்டும் புத்திசாலித்தனமான நாகேஷ். மற்றவர்கள் எல்லாம் இரண்டு மூன்று சீன் மட்டுமே.
இந்த படத்தின் மிகப் பெரிய பலம் பாடல்கள். கவியரசுவின் சொந்தப் படம் வேறு. மாமா மஹாதேவன் போட்ட அருமையான பாடல்கள்.
கவிஞர் நேரிடையாக திரையில் தோன்றி தன்னை பற்றிய சுய விமர்சனம் செய்த பாடல் [படத்தில் பழைய மாணவன் முத்தையா பாடுவதாக அறிவிப்பு]. அதிலும்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த
நிலையிலும் எனக்கு மரணமில்லை.
என்ற வரிகள் என்றும் சாகாவரம் பெற்றவை.
அடுத்த பாடல் பசுமை நிறைந்த நினைவுகளே. தமிழக கல்லூரிகளில் பேஃர்வல் பார்ட்டி நடக்கின்ற காலம் இருக்கும் வரை இந்த பாடலும் சிரஞ்சீவியாக இருக்கும்.
எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ? என்ற வரியும்
இந்த நாளை வந்த நாளில் மறந்து போவமோ என்ற வரியும்
எப்போது கேட்டாலும் ஒரு காலத்தில் மாணவனாக இருந்த எல்லோருக்கும் அவர்களின் பசுமையான நினைவுகள் திரும்பி வரும்.
புத்தன் வந்த திசையிலே போர்
புனிதர் காந்தி மண்ணிலே போர்
என்ற வரிகள் கேட்பவர்கெல்லாம் உணர்வு ஊட்டக்கூடிய பாடல்.
பனி படர்ந்த மலையின் மீது
படுத்திருந்தேன் சிலையை போல
நட்பு பாராட்டிய நம் மீது அநியாயமாக போர் தொடுத்த சைனா மீது கோபம் கொண்ட ஒவ்வொரு இந்தியனின் மனக் குமுறல். இந்த படத்தில் தான் இந்த பாட்டின் மூலமாக தான் முதலில் காங்கிரஸ் பேரியக்கத்தையும் பெருந்தலைவர் மற்றும் நேரு போன்றவர்களை திரையில் நடிகர் திலகம் காண்பித்தார். இந்த பாடலின் இறுதி வரிகள்
வீரம் உண்டு தோள்கள் உண்டு
வெற்றி கொள்ளும் ஞானம் உண்டு
ஞானமிக்க தர்மம் உண்டு
தர்மமிக்க தலைவன் உண்டு,
என்ற வரிகளின் போது பிரதமர் நேரு அவர்களை காண்பித்து மக்களுக்கு ஒரு தைரியம் கொடுத்து பயப்பட வேண்டாம் என்று சொன்ன பாடல்.
இதை தவிர இசைத்தட்டுகளில் இடம் பெற்று படத்தில் இடம் பெறாமல் போன ஒரு அருமையான பாடல் தாழம்பூவே தங்கநிலாவே தலை ஏன் குனிகிறது. டி.எம்.எஸ் மற்றும் எல்.ஆர். ஈஸ்வரி பாடியது. இது இடம் பெறாததன் காரணம் தெரியவில்லை. எனக்கு தெரிந்த வரை அல்லது யூகிப்பது, இந்த பாடல் நடிகர் திலகம் மற்றும் புஷ்பலதா பாடுவதாக அமைக்கப்பட இருந்தது. தங்கள் வீட்டில் அடைக்கலம் புகும் நாயகனின் மனைவியாக நடிக்க வேண்டிய சூழ்நிலை புஷ்பலதா ஏற்ற கதாபாத்திரத்திற்கு. அந்த நேரத்தில் நடிகர் திலகத்தை ஒரு வித காதலுடன் புஷ்பலதா பார்ப்பதாக ஒரு ஷாட் வரும். அதன் தொடர்ச்சியாக இந்த பாடல் காட்சி அமைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கதையோட்டத்திற்கு தடை செய்யும் என்றோ, பார்த்தவுடன் ஒரு பெண் காதல் வயப்பட்டு கனவு காண்பதை மக்கள் ஏற்பார்களா என்ற தயக்கமோ அல்லது நடிகர் திலகத்தின் மகளாக அந்த நேரத்தில்தான் புஷ்பலதா பார் மகளே பார் படத்தில் நடித்திருந்தார். ஆகவே இந்த நேரத்தில் இந்த பாடல் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டதா என்பதும் தெரியவில்லை. ஆனால் பாடல் அருமையான ஒன்று.
14.09.1963 அன்று வெளியானது இரத்த திலகம். பெரிய வெற்றியை பெறவில்லை. வழக்கம் போல் பார் மகளே பார் வெளியாகி 60 நாட்களே ஆகியிருந்த நிலையிலும் குங்குமம் வெளியாகி 30 நாட்களே ஆன நிலையில் இது வெளியானது. இந்த படம் வெளியாகி 6 நாட்களில் [20.09.1963] நடிகர் திலகத்தின் கல்யாணியின் கணவன் வெளியானது. 60 நாட்களில் தீபாவளி - அன்னை இல்லம் ரிலீஸ். ஆகவே படத்தின் குறைகளும் போட்டி படங்களும் சேர்ந்து வெற்றியின் அளவை குறைத்து விட்டது.
ஆனால் ஒன்று. படத்தின் பின்னில் இருந்த உயரிய நோக்கம் மற்றும் காலத்தால் அழியாத பாடல்களுக்காவும் இந்த படம் என்றும் பேசப்படும்.
அன்புடன்
PS: This review dedicated to dear friend Senthil [Harish] who wanted me to write about this film.
முரளி சாரின் மேற்காணும் கட்டுரைக்கு சகோதரி சாரதா அவர்களின் பதில் பதிவு.
இணைப்பு: http://www.mayyam.com/talk/showthrea...l=1#post367699
Quote:
டியர் முரளி,
'இரத்ததிலகம்' பற்றிய ஆய்வு மிக அருமை.
இப்படம் இந்திய சீன போரை மையமாகக் கொண்டதாயினும், போர் முடிந்தபின் எடுக்கப்பட்டது. (உ-ம்; நீங்கள் குறிப்பிட்ட பத்திரிகைச்செய்தி). ஆனால் போர் நடந்துகொண்டிருக்கும்போதே, நடிகர்திலகம் தன் சொந்த செலவில் 'சிங்கநாதம் கேட்குது' என்ற டாக்குமெண்ட்டரி படத்தை எடுத்து இலவசமாக வெளியிட்டார். இந்த டாக்குமென்டரியில் அப்போதைய பிரபல நடிகர்கள் (ஜெமினி, தங்க்வேலு உள்பட பலர்) இலவசமாக நடித்துக்கொடுத்தனர். தியேட்டரில் அரைமணி நேரம் ஒடும் இப்படம் எல்லாதிரையரங்குகளிலும் காண்பிக்கப்பட வேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் அரசால் உத்தரவிடப்பட்டு, அதன்படி தமிழகத்தின் அனைத்து திரையரங்குகளிலும் இடைவேளை முடிந்து, மெயின் படம் துவங்கும் முன்பாக காண்பிக்கப்பட்டது. அதிலும் தேசத்தலைவர்கள் பலர் காண்பிக்கப்பட்டனர். பார்த்த மக்கள் அனைவரும் தேசப்பற்றால் உந்தப்பட்டனர். யுத்தநிதியாக பணமாகவும், பொருட்களாகவும், நகைகளாகவும் அள்ளி வழங்கினர். நாடே ஒன்றுபட்ட நின்ற நேரம் அது. பாதுகாப்பு அமைச்சர் கிருஷ்ண மேனன், உள்துறை அமைச்சர் ஒய்.பி.சவான் ஆகியோரைக்கொண்ட பாதுகாப்புக்குழுவில், தி,மு,கவைச்சேர்ந்த நாஞ்சில் மனோகரனையும் இடம் பெற வைத்தார் அண்ணாதுரை.
ஆனாலும், சுதந்திரம் பெற்றதிலிருந்து நமது பாதுகாப்புக்காக ராணுவத்தை பலப்படுத்த வேண்டும் என்று தேவையில்லாத நேரமாக இருந்ததால், அந்த போரில் இந்தியா தோற்றது. லடாக் பகுதி சீனர் வசமானது. (இந்தியா தோற்ற ஒரே போர் அதுதான்). அதன்பின்னர்தான் அண்டைநாடுகளின் வஞ்சக எண்ணத்தையறிந்த நேரு, ராணுவத்தை பலப்படுத்த முனைந்தார். நேருவின் உடல்நிலை பலவீனப்பட்டதற்கு சீனப்போரில் அடைந்த தோல்வியும் முக்கிய காரணம்.
இந்நிலையில்தான் இந்திய சீனப் போரை மையமாக வைத்து கண்ணதாசன் இப்படத்தை தயாரித்தார். ஆனாலும் நீங்கள் சொன்ன பலகுறைகளோடு.... தேவையில்லாத, செயற்கையான கல்லூரிக்காட்சிகள். அதோடு 'ஒதெல்லோ' நாடகத்தின் நீளம் அதிகமானதால் திகட்டிப்போனது.
ஆனாலும் போர்முனைக்காட்சிகள் உணர்ச்சியை ஊட்டின. 'பனி படர்ந்த மலையின்மேலே' பாடலின் ஒரு வரியில்...
பண்பில் நிறைந்த மகன், வள நாட்டின் மூத்த மகன்,
இருக்கின்றான் தாயே, ஏங்காதே என்றுரைத்தேன்
என்ற வரிகளின்போது, தனது அலுவலக அறையில் இருக்கும் தொப்பியில்லாத நேருவைக்காண்பிக்கும்போது நம் உணர்ச்சிகள் எல்லையை மீறும். (ஓடுவது காங்கிரஸ் ரத்தமல்லவா?)
சாவித்திரியின் சீனக்கணவராக வரும் சண்முகசுந்தரத்துக்கு இதுதான் முதல் படம். முதல் படத்திலேயே நடிகர்திலகத்துடன் நடித்ததை அவர் அடிக்கடி பெருமையாகச்சொல்வார். (பின்னர் 'கர்ணனில்' தேரோட்டி சல்லியனாக வந்து, போர்க்களத்தில் கர்ணனின் தேரை பள்ளத்தில் விட்டு விட்டுப்போகும் காட்சிதான் நமக்குத்தெரியுமே).
படத்தில் இடம்பெறும் இன்னொரு இனிமையான பாடல், புஷ்பலதாவுக்காக எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய 'வாடைக்காற்றம்மா... வாடைக்காற்றம்மா, வாலிப வயசு நாளுக்கு நாளா வாட்டுவதென்னம்மா'. அன்றைக்கு இலங்கை வானொலியில் பட்டையைக்கிளப்பிய பாடல்.
'பசுமை நிறைந்த நினைவுகளே' பாடல், கல்லூரி ஃபேர்வல் விழா என்று மட்டுமில்லை. எந்த ஒரு பிரிவுபசார நிகழ்ச்சியிலும் ஒலிக்கும் பாடல். அதிலும் அந்த வரிகள்...
'எந்த ஊரில் எந்த நாட்டில் என்று காண்போமோ
எந்த அழகை எந்த விழியில் கொண்டு செல்வோமோ'
அப்படியே மனதை உருக வைக்கும்.
யாரும் நினைத்துப்பார்க்காத நேரத்தில் இரத்தத்திலகம் படத்தோடு வந்துள்ளீர்கள். இன்ப அதிர்ச்சி.
'ஆண்டவன் கட்டளை', 'குலமகள் ராதை', 'இரத்தத்திலகம்' பட ஆய்வுகளைத்தொடர்ந்து அடுத்தது என்ன?. எல்லோருக்கும் அதிகம் தெரியாத வடிவுக்கு வளைகாப்பு, கல்யாணியின் கனவன், வளர்பிறை, சித்தூர் ராணி பத்மினி இவற்றில் ஒன்றாக இருந்தால் நன்றாக இருக்கும்
இரத்தத் திலகம் காணொளிகள்
பசுமை நிறைந்த நினைவுகளே Pasumai niraindha
http://youtu.be/gbjt59-KZDo
பனி படர்ந்த மலையின் மேலே
http://youtu.be/5VjT83Fl4Ww
புத்தன் வந்த திசையிலே போர்
http://youtu.be/oSPLcfIAvT4
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
http://youtu.be/ICSeUl6j66E
வாடைக் காற்றம்மா
http://youtu.be/zmqwLbZzmCg
திரைப்படத்தில் இடம் பெறாத தாழம்பூவே தங்க நிலாவே பாடலைக் கேட்டு மகிழ
http://youtu.be/giVoNX6QRao
larger than life நடிப்பு முறைகளில் அடுத்ததாக நான் எடுக்க விரும்புவது அவருடைய shakespere நாடக பாணி காட்சிகள். பொதுவாக அக்காலத்தையும் ,இக்காலத்தையும் இணைக்கும் கண்ணி என்பது ceremonial military parade ,marches ,drilling . எக்காலத்திலும் மாற்ற முடியாத நிலைத்தன்மை கொண்டதால் ,shakespere நாடக நடிகர்கள் பின்பற்றும் முறை பெரும்பாலும் இதனை சார்ந்ததே.period படங்கள் சார்ந்த larger than life பாத்திரங்களுக்கு ஏற்ற முறை. கண் முன் பார்த்து பின் பற்ற கூடிய பாரம்பரிய தொடர்ச்சி முறை.
shakespere நடிகர்களை நான் லண்டன், நியூயார்க் நகரங்களில் நாடகங்கள் பார்க்கும் வழக்கமுடையவன் என்பதால் கூர்ந்து கவனித்துள்ளேன்.
அவர்கள் நடிக்கும் முறை கீழ்கண்டவாறே அமையும். முறையான பயிற்சியால் ஒவ்வொரு நடிகரிடமும் முறைகள் பெரிதாக மாறாது. ஆனால் உருவ அமைப்பு, குரல், மற்றும் இயற்கை திறமையில் சிறிதே வேறுபாடு தெரியும்.
உடல் மொழி, கால், கைகள் இயங்கு முறை geometric symmetry கொண்ட change in pace &abruptness in transition என்ற முறையில் அமையும்.Traditional ceremonial military parade /drill /marching முறை சார்ந்தே வகுக்க பட்டிருக்கும்.
நடைகளின் முறை பெரும்பாலும் quick march ,slow march ,cut the pace ,double march easy march ,mark time ,step forward முறையில் அமையும். ஆனால் command synchrony இல்லாமல் randomness கொண்டு கலையாக்க பட்டிருக்கும்.
உடலியங்கு முறை attention ,parade rest ,stand at ease என்று நான்கின் பாற்பட்டு advance ,retire ,left ,right ,retreat முறையில் saluting ,turning motions கொஞ்சம் கப்பலின் இயங்கு முறை சார்ந்ததாக இருக்கும்.
முகபாவங்கள் மிக இறுக்கமான தன்மை கொண்டு சிறிதே இள க்கம், சிறிதே மிக இறுக்கம் என்ற மூன்று நிலைகளில் slow transition கொண்டதாய் register ஆகும்.
ஆனால் கண்கள் body motion follow thru மட்டும் இன்றி சிறிதே cautionary alertness கொண்ட inert emotionless vibrations கொண்டு உயிர்ப்புடன் இயங்கும்.
voice pitch ,tonal modulations என்று ஆராய்ந்தால் mid -flat pitch இல் reciting rhythmically என்ற பாணியில் identifier ,precautionary ,cautionary ,executive ,guided emotional overtone என்ற பெரும்பாலும் parade command முறைமை கொண்ட ஏற்ற இறக்கங்கள் கொண்டதே.
இதை வைத்து நம் நடிகர்திலகத்தின் ரத்தத்திலகம் பட ஒதெல்லோ ஆராய்வோம்.
ஒதெல்லோ என்ற ராணுவ தலைவன், வீரன் என்றாலும் ,தன் கோரமான உருவத்தில் தாழ்மையுணர்வு கொண்டதால் உணர்ச்சி வசப்படும் பொறாமை காரன். desdemona தகப்பன் விருப்பம் இல்லாமல் ,அவளை மணந்து இனிய அன்பான மண வாழ்வில் திளைத்தாலும், ஒரு சாதாரண கைக்குட்டையை வைத்து லகோ என்பவன் ,அவளையும் காசயோ என்பவனையும் வைத்து பின்னும் சதி வலையால் சந்தேக பேய் பிடித்தாட்ட ,மனமின்றி, தூங்கும் மனைவியை கொலை செய்ய வரும் காட்சி.(Othello Act 5 scene 2)
ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
முதல் வியப்பு உலகத்தின் அத்தனை விதமான பாத்திரங்களும் பொருந்தும் முக அமைப்பு.இரண்டாவது வியப்பு ஒதெல்லோ பாத்திரத்தில் மற்றவர் குரல் கொடுத்தாலும் அவர் உள்வாங்கி நடித்த சிறப்பு.
ஒதெல்லோ பாத்திரத்தில் மனமின்றி மனைவியை கொல்லும் நோக்கோடு தடுமாறி, அவள் அழகில் மயங்கி முத்தமிட்டு,தாழ்வு மனப்பான்மையும், பொறாமையும் மிக அவர் தன்னைத்தானே காதலும் இரக்க உணர்வும் தலை காட்டுவதை அடக்க முயலும் முக பாவங்களும் ,நடையிலேயே அத்தனை வசன சாரங்களை உள்வாங்கி புரியும் ஜாலங்களும் ,கைகளை தன் பாவத்தில் பங்கு கொள்ள இணங்க வைக்க முயல்வதும் , நான் ஏற்கெனெவே எழுதிய பின்னணியில் பொருத்தி பார்த்தால் புரியும்.Desdemona முழித்த பிறகு இறைஞ்சும் போது எங்கே இளகி மன்னித்து விடுவோமோ என்று அவர் காட்டும் கடுமை ,தடுமாற்றம் எல்லாமே அவரின் அபார பாத்திர உள்வாங்கலை காட்டும்.
ஒத்தெல்லோ நாடகம்
http://youtu.be/lSAcVpljPE0
உபயம் நெய்வேலி வாசுதேவன் சார்
சிறப்பாகச் சொன்னீர்கள். ஷேக்ஸ்பியர் நாடகத்தை அவர்களுடைய பாணியில் அப்படியே செய்யாமல் தன்னுடைய பிரத்யேகமான திறனையும் ஷேக்ஸ்பியர் நாடகக் குழுவிலல்லாத, பிரிட்டனை சாராத, வேற்று நாட்டவர் அந்நாடகத்தை நடித்தால் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உடல் மொழியை பிரயோகித்து அதன் மூலமாக அந்நாடகம் நமக்கு அந்நியமாய்த் தோன்றாதிருக்கும் வண்ணம் தன் நடிப்பைப் பயன்படுத்தி உலகத்தில் சிறந்த நடிகர் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் சான்றையும் படைத்து விட்டார் நடிகர் திலகம்.Quote:
ஒதெல்லோ பாத்திரத்தில் Paul Robeson நடிப்பும் (Stanislavsky கூட இந்த பாத்திரத்தை விரும்பி ஏற்பாராம்),ஹாம்லெட் பாத்திரத்தில் Laurence Olivier நடிப்பும்,சீசர் பாத்திரத்தில் Louis Calhern ,Rex Harrison நடிப்பும் விமரிசகர்கள் பார்வையில் மிக சிறந்ததாகும். ஆனால் நடிகர்திலகம் தனக்கு அந்நியமான இந்த மூன்று பாத்திரங்களையும் ஏற்று புரிதலுடன்,அந்தந்த பாணியில் தன் தனித்தன்மை விடாது நடித்த பாங்கு அலாதி. அவர் நடித்த காட்சிகள் அந்தந்த பாத்திரங்களுக்கு Highlight என்று சொல்ல தக்க உச்ச பட்ச சவால் கொண்ட காட்சிகள்.
இதே போலத் தான் அந்த ராணுவ நடையையும் அருமையாக எடுத்துரைத்திருக்கிறீர்கள். இந்த ராணுவ நடையை பதிபக்தி திரைப்படத்தில் மிக அருமையாக கொண்டு வந்திருப்பார்.
ராணுவ வீரர்களுக்கு அந்த மிடுக்கு நிரந்தரமாக அவர்களுக்குள் தங்கி விடும். பணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சில ராணுவ குணாதிசயங்கள் அவர்களை விட்டு இறுதி வரை மாறாது. இதை நாம் பலரை நேரில் காணும் போது தெரிந்து கொண்டிருக்கலாம். விடுமுறையில் ராணுவ வீரர்கள் ஒன்றாக தங்கள் முகாம்களை விட்டு வீடு திரும்ப புறப்படும் போது அவர்களுக்குள் இருக்கக் கூடிய அந்த மகிழ்ச்சியான மனநிலையும் அதே சமயம் அவர்களையும் மீறி அந்த நடையில் ராணுவ மிடுக்கு ஆளுமை செலுத்துவதையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு அதை அப்படியே பாத்திரத்தில் கொண்டு வந்திருப்பார் பதிபக்தி திரைப்படத்தில். தாங்கள் மேலே சொன்ன விஷயங்களை விஷுவலாக தெரிந்து கொள்ள இதோ அந்தப் பாடல்
http://youtu.be/Yff7wazrz2M
Sivaji Ganesan Filmography Series
92. Kalyaniyinkanavan கல்யாணியின் கணவன்
http://www.thehindu.com/multimedia/d...a_1039536f.jpg
தணிக்கை 13.09.1963
வெளியீடு 20.09.1963
http://www.hindu.com/thehindu/gallery/sg/sg009.jpg
கதைச் சுருக்கம்
கல்யாணி தன் தோழியருடன் ஆற்றில் நீர் விளையாடிக் கொண்டிருக்கும் போது, வெள்ளத்தால் அடித்துச் செல்லப் படுகிறாள்.
கதிரேசன் அவளைக் காப்பாற்றுகிறான்.
அன்று முதல் இருவருக்கும் இடையே காதல் வளருகிறது.அதைக் கண்ட கல்யாணியின் தந்தை விஸ்வநாத் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் தீர்மானிக்கிறார்.
கல்யாணத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாக கதிரேசனுக்கு ஓர் அனாமதேயக் கடிதம் வருகிறது. அதன் விளைவாக அவன் ஓர் பாழடைந்த பங்களாவுக்குச் சென்று, இருட்டில் இனம் தெரியாத ஒருவனுடன் போரிட நேருகிறது. முடிவு .. முதுகில் கத்தி பாய்ந்த ஒரு பிரேதம் கதிரேசன் காலடியில் கிடக்கிறது!
மறுநாள் கல்யாணம்!சபையோர் முன்னிலையில் கல்யாணி நடத்தை கெட்டவள் என்று கதிரேசன் குற்றஞ்சாட்டுகிறான்.
அடுத்த நிமிஷம் இவனைத் தேடி போலீஸார் அங்கு வருகின்றனர். ஆனால் அதற்குள் அவன் மாயமாய் மறைந்து விடுகிறான்!
அன்று முதல் விஸ்வநாத்தின் குடும்பத்தில் அடுக்கடுக்காய்த் துன்பங்கள் தொடர்கின்றன...!
இத்தனைக்கும் காரணம் யார்...?
கல்யாணி கதிரேசன் கதி என்ன...?
படத்தைப் பாருங்கள் ...
(பாட்டுப் புத்தகத்தில் உள்ளவாறு)
http://www.inbaminge.com/t/k/Kalyani...van/folder.jpg
படம் தற்போது குறுந்தட்டில் ஒளிக்காட்சிப் படமாக வெளிவந்துள்ளது.
பங்கு பெற்றுள்ள மற்ற கலைஞர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுனர்கள
பங்கு பெற்றுள்ள கலைஞர்கள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சரோஜா தேவி, எம்.ஆர்.ராதா, எஸ்.வி.ரங்காராவ், டி.ஆர்.ராமச்சந்திரன், ஓ.ஏ.கே.தேவர், டி.பி.முத்துலட்சுமி மற்றும் பலர்.
சென்னையில் வெளியான திரையரங்குகள் - காஸினோ, ஸ்ரீகிருஷ்ணா, ராக்ஸி
கதை வசனம் - வேலவன்
பாடல்கள் - கவியரசர் கண்ணதாசன்
இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு
நடன அமைப்பு - ஹீராலால்
ஒப்பனை - கஜபதி, பி.வி.ராகவன்
கலை - சி.கே.ஜான், பழனிவேலு
ஒலிப்பதிவு - எம்.டி.ராஜாராம்
ஒளிப்பதிவு - ஷைலன் போஸ்
படத்தொகுப்பு - ஜி.வேலுச்சாமி
லேபரட்டரி – எஸ்.வி.நாதன், ஏ.மோகன்
புரொடக்ஷன் – ஏ.பி. மணி
விளம்பரம் - மவுலீஸ்
தயாரிப்பு – பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் பிரைவேட் லிமிடெட், கோயம்புத்தூர்
திரைக்கதை,இயக்கம் S.M. ஸ்ரீராமுலு நாயுடு
பாடல்கள்
1.எனக்கு வாய்க்கும் மாப்பிள்ளை - பி.சுசீலா, கௌசல்யா, கமலா மற்றும் குழுவினர்
2.விருத்தம் ஐயா நின் கருணை - டி.எம்.சௌந்தர்ராஜன்
3.சொல்லித் தெரியாது சொல்ல முடியாது - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
4.கையிருக்குது காலிருக்குது முத்தையா - டி.எம்.சௌந்தர்ராஜன்
5.ஆசை கொண்ட மனம் அதோ அதோ - பி.சுசீலா
6.எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம் - டி.எம்.சௌந்தர்ராஜன் பி.சுசீலா
7.தோட்டத்துப் பூவுலே வாசமிருக்கு - ஏ.எல்.ராகவன், கௌசல்யா
8.கல்யாணப் புடவை கட்டி - பி.சுசீலா
9.சீதா அக்னிப் பிரவேசம் நடன நாடகம் - தங்கப்பன், பி.லீலா, டி.கமலா குழுவினர்
10.நொளொன்றும் பொழுதொன்றும் செல்லச் செல்ல - பி.சுசீலா
11.இதுவும் வேண்டுமடா - டி.எம்.சௌந்தர்ராஜன்
கல்யாணியின் கணவன் விளம்பர நிழற்படம் – நன்றி ஆவணத் திலகம் பம்மலார் அவர்கள்
Quote:
முதல் வெளியீட்டு விளம்பரம் : சுதேசமித்ரன் : 20.9.1963
http://i1094.photobucket.com/albums/...EDC4626a-1.jpg
அரிய நிழற்படம்
http://i1094.photobucket.com/albums/...alar/KK1-1.jpg
கல்யாணியின் கணவன் திரைப்படத்தைப் பற்றி ஹிந்து நாளிதழில் வெளிவந்துள்ள கட்டுரை
நன்றி - http://www.thehindu.com/news/cities/...cle3265936.ece
Quote:
http://www.thehindu.com/template/1-0-1/gfx/logo.jpg
CHENNAI » COLUMNS
March 31, 2012
BLAST FROM THE PAST
Kalyaniyin Kanavan 1963
RANDOR GUY
HTTP://WWW.THEHINDU.COM/MULTIMEDIA/D...A_1039536F.JPG
Sivaji Ganesan, B. Saroja Devi, M. R. Radha, S. V. Ranga Rao, T. R. Ramachandran, O.A.K. Thevar, A. Karunanidhi, S. Rama Rao, K. V. Srinivasan, T. P. Muthulakshmi, Seethalakshmi, Radhika and Shantha Devi.
S. M. Sriramulu Naidu had a successful track record, producing and directing movies not only in Tamil but also in Telugu, Kannada, Malayalam, Sinhala and Hindi. Besides, he owned a studio in his hometown Coimbatore and later shifted his activities to Bangalore where for many reasons he was not as successful as he was in his earlier days in his native turf.
One of the movies he produced and directed under his famous banner Pakshiraja Films for some wealthy friends of Coimbatore was Kalyaniyin Kanavan, with Sivaji Ganesan and Saroja Devi in the lead.
The heroine Kalyani (Saroja Devi) goes swimming with friends in a river when she is carried away by strong waves. As she struggles, a bold young man Kathiresan (Sivaji Ganesan) saves her — expectedly, the saving of the damsel in distress leads to both falling in love.
Kalyani's father (Ranga Rao) is impressed by the young man's bravery and wishes to get them married on an auspicious day. Two days before the wedding, the hero receives an anonymous letter inviting him to an abandoned bungalow in the back of beyond. He goes and, in the cover darkness, fights an anonymous foe. At the end of it, he finds at his feet a body with a knife sticking out of its back! He leaves the place hurriedly….
The next morning, the hero, much to the shock of one and all, screams at the bride saying she is not of good conduct and refuses to go ahead with the wedding rituals. Meanwhile, cops enter the scene, looking for the bridegroom and cleverly he escapes! With the marriage stopped in a dramatic fashion, problems arise in the unhappy father's family. How they are solved and the marriage is performed much to the joy of all forms the rest of the story.
The story and dialogue were written by Velavan, a fairly popular writer then, while the screenplay was by Sriramulu Naidu. The lyrics were by Kannadasan, and the music was composed by S. M. Subbaiah Naidu. Noted cinematographer Sailen Bose handled the camera. The film was shot at Pakshiraja Studios, Coimbatore.
The scheming villain was played by the cult figure of Tamil Cinema, M. R. Radha, while S. V. Ranga Rao as the parent was brilliant. Sivaji Ganesan as usual was in his element, well supported by Saroja Devi, one of the most successful star-actors of Indian Cinema. One of the songs rendered off the screen by T. M. Soundararajan and P. Susheela, ‘Enathu Raaja sabhayiley orey sangeetham,' became popular. Ramachandran took care of the comedy assisted by Radhika who played supportive roles and performed dance sequences for a brief period. The two also sang a comedy number (voices A. L. Raghavan and Kausalya,)
Despite its impressive cast, Kalyaniyin Kanavan did not fare well at the box office.
Remembered for the excellent performances by Sivaji Ganesan, Ranga Rao, Radha and Saroja Devi, the pleasing music and excellent cinematography.
காணொளிகள்
எனது ராஜ சபையிலே
http://youtu.be/je40aunJDSs
கை இருக்குது காலிருக்குது
http://youtu.be/v2mZUk6vm_c
சொல்லித் தெரியாது
http://youtu.be/I-D7R60l_-g
இதுவும் வேண்டுமடா
http://youtu.be/M-606kg8rA8
பராசக்தி '
படத்துக்கு ' திராவிடநாடு '
ஏட்டில் வந்த விளம்பரம் .
http://i1170.photobucket.com/albums/...psb173a88c.jpg
அன்புச் சகோதரர் ஆவணத் திலகம் பம்மலார் அவர்களின் பொக்கிஷத்திலிருந்து பராசக்தி விளம்பர நிழற்படத்தினை மீள்பதிவு செய்து நினைவூட்டிய யுகேஷ் பாபு அவர்களுக்கு மிக்க நன்றி.
அன்னை இல்லம்-1963
1963 வது வருடம் நடிகர்திலகம் -கே.வீ.மகாதேவன் இணைவில் ஒரு மறக்க முடியாத வருடம். மொத்தம் வந்த பத்து படங்களில் ஆறு படங்கள் மாமாவிற்கு(K.V.Mahadevan).ஒன்று எஸ்.எம்.எஸ்,ஒன்று G .ராமநாதன்,ஒன்று எஸ்.வீ.வெங்கட்ராமன்,ஒன்றே ஒன்று விஸ்வநாதன்-ராமமுர்த்தி.
பொன்னான வருடம் .இருவர் உள்ளம்,நான் வணங்கும் தெய்வம்,குலமகள் ராதை,குங்குமம்,ரத்தத்திலகம்,அன்னை இல்லம் என்று திரை இசை திலகத்தின் கொடி பறந்து எங்களை திக்கு முக்கில் ஆனந்த களியாட்டம் போட வைத்த வருடம்.
அன்னை இல்லத்தின் மடி மீது தலை வைத்து பாடல், சிவாஜி,தேவிகா,கண்ணதாசன்,மகாதேவன்,மாதவன் இணைவில் வந்த ஒரு erotic அதிசயம். ஒரு மெல்லிய இனிய இசையில் ,கஹுரஹொ வன்மையை சேர்த்து,ஆயிரம் சர வெடி காமத்தை ஆபாசமில்லாமல் தந்தனர் 60 களின் காதல் கிளிகள்.மெல்லிய வருடலுடன்,(உதட்டிலும்)காதலர்களின் விழைவு நோக்கு கொண்ட பார்வையில் ஆரம்பித்து,போகன் வில்லா மரத்தடியில் காம விளையாட்டு தொடங்கி,காதலர்களுடன் நம் உள்ளமும் உருளும்.சேவல் குரலை நிறுத்தி ,இரவை விடியாமல் வைக்க நம் மனமும் ஏங்கும் .சிவாஜியின் erotic விளையாட்டில் தேவிகா காம விழைவுடன் அள்ளும் பார்வை.அழைப்பு பார்வை.இணக்க பார்வை.கிரக்க பார்வை.
அய்யய்ய்யோ....காலடிகளின் கலப்புடன் ,காதலர்கள் கலந்து உறவாடுவதை, இன்ப வதையுடன் நாம் கனவோடை கலந்த நினைவில் இருத்தி ,இன்ப வாதையில் துடிப்போம் அல்லவா?
Blast from Sarathy past on annai illam.
நடிகர் திலகத்தின் நுணுக்கமான நடிப்பாற்றல்:-
நடிகர் திலகத்தின் நடிப்பைப் பற்றி பலர் பலவிதமாக ஆராய்ச்சி செய்து நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்தத் திரியில், நாமும் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம்.
எந்த ஒரு சிறந்த கலைஞனும் ஒரு படைப்பினைத் தரும்போது, முதலில், தன்னை அந்தக் கட்டம் மற்றும் கணத்துக்குள் தன்னுடைய மனதை மட்டும் நுழைத்துக் கொண்டு, அதுவாகவே பாவித்து, தன்னுடைய அனுபவம், அறிவு மற்றும் திறமை மூலம், ஒரு படைப்பினைத் தர முயற்சிக்கிறான். இந்த internalisation பரிபூரணமாக அமையப் பெற்ற உன்னதக் கலைஞன் உலகில் நடிகர் திலகம் ஒருவரே என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. அவருக்கு நடிப்புக் கலை என்பது கலைமகள் அருளிய வரம். அவரிடம் இருந்த spontaneity இதனை நிரூபிக்கும். இருப்பினும், தன்னுடைய வாழ் நாளில் கடைசி வரை, எப்போதும், தன்னுடைய கலையை அவர் மெருகேற்றிக் கொண்டே வந்திருக்கிறார் - பல வித முறைகள் மூலம். இதில், மிக முக்கியமானது அவரது ஆழ்ந்த, கூர்ந்து நோக்கி அணுகும் திறன். எந்த ஒரு விஷயத்தையும், அவர் மேம்போக்காக அணுகாமல், நூறு சதவிகித பரிபூரணத்துவத்துடன் தான் அணுகிக் கொண்டு வந்திருக்கிறார். இதனால் தான், அநேகமாக அவருடைய எல்லா படங்களும் கனமாகவே இருக்கும். இலேசான படங்கள் (so called light movies) அவரிடமிருந்து மிகவும் குறைவு தான்.
சில நாட்களுக்கு முன்னர், நண்பர் திரு. வாசுதேவன் அவர்கள், "அன்னை இல்லம்" படத்தில் ஒரு (இல்லை இது மூன்று ஒன்றோடொன்று தொடர்புடைய காட்சிகள்) காட்சியைத் தரவேற்றியிருந்தார். இந்தக் காட்சியில், நடிகர் திலகம் முத்துராமன் வீட்டிற்கு வந்து, உண்பதற்கு அமர்ந்து எம்.வி.ராஜம்மா அவர்களைப் பார்த்து (அவருடைய சுமங்கலித் தோற்றத்தைப் பார்த்து), பக்கத்தில், அவருடைய கணவருக்காக வைக்கப் பட்டிருக்கும் இலையையும் பார்த்து, 'அம்மா! உங்களது இந்த சுமங்கலிக் கோலம் சீக்கிரம் போகப் போகிறது' என்று நினைத்து வெதும்பி, எதுவும் சொல்லாமல், வெறும் முக பாவனைகளின் மூலம் அந்த சோகத்தைக் காண்பித்து அங்கிருந்து சென்று விடுவார். (எம்.வி. ராஜம்மா அவருடைய கணவர் எஸ்.வி. ரங்கா ராவ் உயிருடன் தான் இருக்கிறார் என்று வலுவாக நம்பி எப்போதும், அவருக்காக ஒரு இலையைப் போட்டு அதில், உணவு வகைகளை எப்போதும் பரிமாறி வைப்பார், என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து சேர்ந்து உண்டு மகிழ்வார் என்ற நம்பிக்கையில்!. எம்.வி ராஜம்மாவிற்கு, ரங்காராவ் கூடிய சீக்கிரம் மரண தண்டனை பெற்று இறக்கப் போகிறார் என்று தெரியாது. இது நடிகர் திலகத்துக்கும் தேவிகாவுக்கும் மட்டுமே தெரியும்.). அடுத்து, வழக்கறிஞரை சந்தித்து விட்டு ஏமாற்றத்துடன் திரும்பி, இப்போது, வாய் விட்டுக் கூறிக் கதறுவார், தேவிகாவிடம்! முதல் இரண்டு காட்சிகளில் ஒரு சிகை அலங்காரத்துடன் வரும் நடிகர் திலகம், அடுத்த காட்சியில், வேறொரு சிகை அலங்காரத்துடன் வருவார். அதாவது, முதல் இரண்டு காட்சிகளில் நீளமாக இருக்கும் கிருதா உடனே வரும் அடுத்த காட்சியில், சிறியதாக இருக்கும். ஆக, அடுத்தடுத்து வரும் இந்த மூன்று காட்சிகளில், முதல் இரண்டு காட்சிகளும், மூன்றாவது காட்சியும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், முதல் இரண்டு காட்சிகளுக்கும் அடுத்த காட்சிக்கும் இருக்கும் அந்த உணர்ச்சிமயமான தொடர்பு சிறிதும் குறைந்திருக்காது. சரிய்யா, அவர் நுணுக்கமான நடிகர் என்று இப்போது தானே சொன்னீர், அதனால், அவருக்கு இருக்கும் நுணுக்கமான அறிவினாலும், ஈடுபாட்டினாலும், அவரைப் பொறுத்த வரை இது சுலபம் என்று நீங்கள் சொல்லலாம். ஒத்துக் கொள்கிறேன்.
இப்போது, அதே படத்தில் இடம் பெற்ற வேறொரு காட்சியைப் பார்ப்போம்.
இந்தக் காட்சி, முந்தைய காட்சியைப் போல பெரிய உணர்ச்சிக் குவியலான காட்சியல்ல. முந்தைய காட்சி படத்தின் இறுதிக் கட்டத்தில் வரும். இந்தக் காட்சியோ, படத்தின் நடுவில் வரும்.
நடிகர் திலகமும், முத்துராமனும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். வழக்கம் போல, பக்கத்தில் ரங்கா ராவுக்காக ஒரு இலை போடப்பட்டு உணவு பரிமாறப் பட்டிருக்கும். அப்போது தான், முதன் முதல், அந்த வீட்டில் நடிகர் திலகம் சாப்பிடுவார். அப்போது தான், அவருக்கு அந்த இலையின் முக்கியத்துவம் தெரியும். எம்.வி. ராஜம்மாவின் பண்பை வியந்து பாராட்டி (எல்லாம் சாப்பிட்டுக் கொண்டே!), அவர்களை தன்னுடைய வீட்டிற்கு விருந்து சாப்பிட வர வேண்டும் என்னும் போது, எம்.வி. ராஜம்மா அவரிடம் "கண்டிப்பாக வருகிறோம். கல்யாண சாப்பாட்டிற்கு, வடை பாயாசத்துடன்" என்பார். அதற்கு, நடிகர் திலகமோ, "வடையாவது பாயாசமாவது, இங்கு உங்கள் வீட்டில், அந்த விருந்து, எனக்கு முன் வரப் போகிறது" என்று சொல்லி, முத்துராமனுடைய காதலைப் பற்றிக் கூறி, அந்தப் பெண் நல்ல நிறம், செக்கச் செவேரென்று இருப்பாள் என்று கூறி, மேலும் சில சம்பாஷணையுடன் அந்தக் காட்சி முடியும். இந்தக் காட்சி இரண்டு நிமிடங்கள் தான் வரும். இந்தக் காட்சியில், துவக்கத்திலிருந்து நீளமான கிருதாவுடன் வரும் நடிகர் திலகம், "அந்தப் பெண் செக்கச் செவேரென்று இருப்பாள்" என்று கூறும் அந்த ஒரு சில நிமிடங்கள் மட்டும், சடாரென்று, சிறிய கிருதாவுடன் காட்சி தருவார்! இது க்ளோசப்பில் எடுக்கப் பட்டிருக்கும். உடனே, மறுபடியும் அந்த சம்பாஷனை தொடரும் போது, பழைய நீள கிருதாவுக்கு மாறி விடுவார்! இத்தனைக்கும், முந்தைய காட்சியைப் போல, வேறு வேறு காட்சிகளல்ல இந்தக் காட்சி. தொடர்ந்து, இரண்டு நிமிடங்களுக்கு, நடிகர் திலகம், முத்துராமன் மற்றும் எம்.வி. ராஜம்மா நடிக்கும் காட்சி. இரண்டு வேறு வேறு காட்சிகள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் படும் போதே (எனக்குத் தெரிந்து குறைந்த பட்சம் இரண்டு நாட்கள் கழித்து தான் எடுக்கப் பட்டிருக்கும்), தொடர்பு காட்டுவதற்கு நிறைய மெனக்கெட வேண்டியிருக்கும். நிலைமை இப்படியிருக்க, ஒரே நேரத்தில் எடுக்கப் பட்ட, நாம் மேலே கூறிய இந்தக் காட்சியில், தொடர்ந்து வரும் இரண்டு நிமிடங்களில், ஒன்றே முக்கால் நிமிடம் ஒரு ஒப்பனை, நடுவில், சில நொடிகள் மட்டும் வேறொரு ஒப்பனை; உடனே, கடைசி சில நொடிகளில் வேறொரு ஒப்பனை! இதுவும், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எடுக்கப் பட்ட காட்சிகள். அப்படி என்றால், எந்த அளவிற்கு, நடிகர் திலகம் ஈடுபாடும், அர்ப்பணிப்பும், முனைப்பும், முயற்சியும் செய்திருக்கிறார்!!
இது போல், பல படங்களில் காணலாம். ஆனால், அவை எல்லாம் வேறு வேறு காட்சிகளாய் வரும். உதாரணத்திற்கு, புதிய பறவையில், வரும் "சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து" பாடலின் முதல் சரணம் பூராவும், படம் தொடங்கும் போதே எடுக்கப் பட்டிருக்கும். வேறொரு நீள கிருதாவுடன் வருவார். பல்லவியிலும், அனு பல்லவியிலும், இரண்டாவது சரணத்திலும், படம் நெடுகிலும் வரும் சிறிய கிருதாவுடன் வருவார். ஆரம்பத்தில், ஊட்டி ரேஸ் கோர்ஸில், சரோஜா தேவியுடன் பேசும் ஒரு காட்சியிலும், அடுத்தடுத்து, இதே போல், வேறு வேறு கிருதாக் கோலங்களில் வருவார்.
நடிகர் திலகம் 1953-லிருந்து, 1987 வரை, தொடர்ந்து, மூன்று ஷிப்டுகளில், நடித்துக் கொண்டே இருந்தார். வருடத்திற்கு ஆறு, ஏழு படங்களில் (சில வருடங்கள் நீங்கலாக - 1965, 1966, 1977, மற்றும் சில வருடங்கள்) நடித்துக் கொண்டு! வேறு வேறு கெட்டப்புகளில், வேறு வேறு பாத்திரங்களில், ஒவ்வொன்றும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில், காலங்களில்! அப்படி இருந்தும், காட்சித் தொடர்பினைத் (continuity) தொடர்ந்து நூறு சதவிகிதம் கடைப்பிடித்தார். இப்போதெல்லாம், ஒரு நடிகர் ஒரு நேரத்தில், ஒரு படம் மட்டுமே நடிக்கின்றார், நன்றாக concentrate செய்து நடிப்பதற்கு! இன்னும் சொல்லப் போனால், வட நாட்டின் புகழ் பெற்ற நடிகர் திலீப் குமார் அவர்கள், அந்தக் காலத்திலேயே, ஒரு நேரத்தில், ஒரு படம் தான் நடித்தார், மேற்கூறிய காரணத்துக்காக!
வேறு வேறு காட்சிகள் என்றால், ஓரளவு நடித்து விடலாம். ஒரே காட்சியில், இரண்டே நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வசனக் காட்சியில், இடையில், ஒரு சில நொடிகள் மட்டும் வேறு ஒரு கட்டத்தில் எடுக்கப்படும் போது கூட, எப்படி அவரால் பரிபூரணத்துவத்தைக் காட்ட முடிந்தது? இத்தனைக்கும், அப்போதெல்லாம் நேரடியாக பேசி நடித்தாக வேண்டும். இப்போது போல தனி ட்ராக் எல்லாம் கிடையாது! எல்லாம் அந்தக் கலைக் கடவுளுக்கும், அவரை தமிழ் நாட்டிற்கு ஈந்த அந்தக் கலைமகளுக்கும் தான் வெளிச்சம்!!
நடிகர் திலகத்தின் பாடல் கட்டுரைகளினூடே, இந்த சிறிய பதிவை இட சந்தர்ப்பமளித்த திரு. வாசு மற்றும் திரு. வெங்கிராமுக்கு நன்றிகள்.
இந்தக் காட்சி பற்றி சொல்லி, திரு. ராகவேந்திரன் அவர்களிடம் கேட்டு, மீண்டும் ஒரு முறை அந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு, அவரிடம் உதவும்படிக் கோரிய போது, அவரும் உடனே, எனக்கு அந்தக் காட்சியை மட்டும், என்னுடைய சொந்த மெய்லுக்கு அனுப்பினார். அவருக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
திரு. ராகவேந்திரன் அவர்களே, எனக்காக ஒரு முறை அந்தக் காட்சியைப் பதிந்து, கோடானு கோடி சிவாஜி ரசிகர்களின் நெஞ்சை நிறையச் செய்யுங்கள்.
Namma Ooru Velan sir's Review.
Annai Illam
Starring Sivaji Ganesan, Devika, Muthuraman, Ranga Rao, Kannamba, Nagesh, MN Nambiar, OAK Devar, VK Ramasamy etc
Producer: Kamala Pictures
Lyrics: Kannadhasan
Music: KV Mahadevan
Director: P. Madhavan
Paramasivam (Ranga Rao) is a rich man who believes in utmost charity. In the first 3 mins of the film, he gives away all his riches and becomes a destitude. In the meantime, his wife Gowri (Kannamba) is pregnant and is ready for delivery but Paramasivam is unable to collect money for treatment. In a moment of anger he fights with a moneylender and fearing for his life escapes. Nambiar seizes the moment and offers him refuge, saying that his wife had died in childbirth.
Nambiar is involved in smuggling and makes Paramasivam his accomplice. Meanwhile Paramasivam's elder son, Kumar, is raised by him while the new born Shanmugam is raised by Gowri (each unknowing of the other.) All these happens within 10 mins of the film.
Film opens with the grown Kumar (Sivaji) being pampered by his father. He drives to Geetha's (Devika) home who mistakes him as a driver and commands him to take her to college etc. A bemused Kumar plays along and one day deserts her along a lonely road. Angry Geetha attempts to walk off... nadaiyaa idhu nadaiyaa oru naadagam andrO nadakkudhu, idaiyaa idhu idaiyaa adhu illaadhadhu pOl irukkudhu
Geetha, daughter of rich judge VKR later realises the truth and promptly falls in love with Kumar. madi meedhu thalai vaiththu vidiyum varai thoonguvOm, marunaal ezhundhu paarppOm
In the meantime, Kumar meets Shanmugam and they become best of pals. Shanmugam has a girlfriend and in turn he asks Kumar if he has anyone special and if so, to describe her.... ennirandu padhinaaru vayadhu At the end of the song Kumar falls and hits a rock. Shanmugam brings him home and Kumar gets to know of Gowri (to whom he feels a strange affliation.)
Through Kumar, Shanmugam's wedding is arranged for and when the bride's side questions Shanmugam's ancestry, Paramasivam stands guarantee although he has yet to meet Gowri.
Things move fast and the police are on Nambiar's trail. Paramasivam is framed and once again he runs from the police (presumably) killing a constable along the way. He seeks refuge along the corridors of Gowri's house and is shocked to learn that she is alive. Unable to face her, he finally gets caught and is sentenced to death by the same judge friend VKR! In prison Paramasivam reveals the secret to Kumar but extracts a promise not to tell anyone about it.
Gowri chances on a newspaper report and learns that her husband is to die soon! Both mother and son (without the knowledge of Shanmugam) try all means to save the life of Paramasivam, by making appeals right up to the president.
When all fails a dejected Kumar sings sigappu vilakku eriyuthammaa.
In the meantime Shanmugam's in laws are adamant of holding the wedding on the earlier agreed date, which coincidentally is the date Paramasivam is scheduled to hang!
Will the wedding happen? Will Shanmugam learn the truth? What will happen to Paramasivam? To Gowri? To Kumar? See the silver screen for answers!
Sivaji Ganesan Filmography Series
93. Annai Illam அன்னை இல்லம்
http://i1146.photobucket.com/albums/...psa4c925c8.jpg
தணிக்கை 11.11.1963
வெளியீடு 15.11.1963
கதைத்துளி
வாழ்ந்தவன் தாழ்ந்து விட்டால் மீண்டும் அவனால் வாழ முடியாதா?
இந்த உலகில் கெட்டவர்கள்தான் வாழ்வுச் சக்கரத்தை சுலபமாக உருட்ட முடியுமா?
கெட்டுப்போன பிறகு, தனக்குத் தானே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவன், மற்றவர்களுக்காகவும் பகிரங்கமாக வாழ முடியுமா
இந்தக் கேள்விகளுக்குக் கிடைக்கும் விடைதான் 'அன்னை இல்லத்'தின் வரலாறு!
பரமேசன், கௌரி, குமரேசன், ஷண்முகம் - இது கயிலைநாதனின் தெய்வீகக் குடும்பம் அல்ல; கருணையே உருவான ஒரு மனித ஜீவனின் திருக்குடும்பம்!
'இல்லை' என்போருக்கு இல்லாது என்னாமல், அள்ளி அள்ளிக் கொடுத்தான். இறுதியில் அவனுக்கே இல்லை எனும் பொல்லாத நிலை வந்தது. மனைவியின் பிரசவத்துக்குப் பணம் தேவைப்பட்டது. கொடுத்தவர்களிடம் எல்லாம் கையேந்தினான் - யாரும் கொடுக்கவில்லை. மனம் மாறியது - குணம் மாறியது - கொலைகாரன் என்ற பழியோடு சட்டத்துக்கு பயந்து ஓடினான்.
வேடனின் வலையிலிருந்து தப்பிய மான் வேங்கையின் விழியில் பட்டது போல் நமது கொடைவள்ளல் ஒரு கொடியவனின் வலையில் சிக்கினான்.
வருடச் சக்கரம் இருபத்தைந்து முறைகள் சுழன்றது!
இந்த இடைக்காலத்தில் உலகில் எத்தனையோ மாற்றங்கள்!எத்தனையோ தோற்றங்கள்!பிரிந்து போன எத்தனையோ மனிதர்கள் கூடினர் - கூடியிருந்த எத்தனையோ உயிர்கள் பிரிந்தன! - ஆனால் நம் கொடைவள்ளலின் குடும்பமோ பிரிந்தது பிரிந்தபடியே தான் இருந்தது! அதற்காக உலகம் விடியாமலா போயிற்று? கருவிகள் இயங்காமலா இருநதது? இல்லை - இல்லை!
அந்தோ ?
ஒரு கணவன் - மனைவியைப் பிரிகிறான்.
ஒரு மனைவி - கணவனையும் மகனையும் பிரிந்தாள்.
ஒரு மகன் - தந்தையையும் தமையனையும் பிரிந்தான்.
இன்னொரு மகன் - தாயைப் பிரிந்தான்.
இவர்கள் எல்லோருமே ஒரே குடும்பமாக இருக்க வேண்டியவர்கள். ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலே இந்த உலகில் அவர்கள் பழகுகின்றனர்.
தந்தையும் மூத்த மகனும் ஒரு இல்லத்தில்!
தாயும் இளைய மகனும் இன்னொரு இல்லத்தில்!
இந்த இரண்டு இல்லங்கள் ஒன்று சேர்ந்தனவா!
- அன்னை இல்லம் திரைப்படத்தைப் பாருங்கள்
தயாரிப்பு – எம்.ஆர்.சந்தானம் - கமலா பிக்சர்ஸ்
நடிக நடிகையர்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், தேவிகா, எஸ்.வி.ரெங்கராவ், எம்.வி.ராஜம்மா, எம்.என்.நம்பியார், ஆர்.முத்துராமன், வி.கே.ராமசாமி, நாகேஷ், எம்.எஸ்.சுந்தரிபாய், குமாரி ச்ச்சு, ஜெயந்தி, ஓ.ஏ.கே.தேவர், எஸ்.ஏ.கண்ணன் மற்றும் பலர்
மூலக்கதை – தாதா மிராஸி
திரைக்கதை – ஜி.பாலசுப்ரமணியம்
வசனம் – ஆரூர்தாஸ்
பாடல்கள் கவிஞர் கண்ணதாசன், உதவி-பஞ்சு அருணாச்சலம்
பின்னணி பாடியவர்கள் – டி.எம்.சௌந்தர்ராஜன், ஏ.எல்.ராகவன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி
சங்கீதம் – திரை இசை திலகம் கே.வி.மகாதேவன், உதவி – புகழேந்தி
பாடல்கள் ஒலிப்பதிவு & ரீரிகார்டிங் – டி.எஸ். ரங்கசாமி – மெஜஸ்டிக் ஸ்டூடியோ
மேக்கப் – ஹரிபாபு, ரங்கசாமி, பத்ரையா, பாண்டியன்
உடைகள் – பி.ராமகிருஷ்ணன் உதவி – டி.எம்.சாமினாதன், கே.பி.குப்புசாமி
ஒலிப்பதிவு – வி.சி.சேகர் – நெப்டியூன், உதவி ஹெச்.குப்புராவ், எம்.எஸ்.மணி
செட் சாமான்கள் – சினி கிராஃப்ட்ஸ்
செட்டிங்ஸ் – எஸ்.ரங்கசாமி, எம்.சொக்கலிங்கம்
எலக்ட்ரீஷியன் – வி.சேஷாத்திரிநாதன், W.முருகேசன், ஜி.பாஸ்கர்
பெயிண்டிங்ஸ் – வி.வேங்கைமலை
புரொடக்ஷன் நிர்வாகம் – கே.எஸ். துரை
ஆபீஸ் நிர்வாகம் – சி. மாணிக்க வாசகம்
ஆர்ட் – கங்கா உதவி – செல்வராஜ்
ஸ்டில்ஸ் – திருச்சி அருணாசலம்
விளம்பரம் – எலிகண்ட் பப்ளிசிடீஸ்
ஒளிப்பதிவு – பி.என்.சுந்தரம்
எடிட்டிங் – என்.எம். சங்கர்
பிராஸஸிங் – விடி.எஸ்.சுந்தரம், விஜயா லாபரட்டரி
ஸ்டூடியோ – நெப்டியூன்-வாஹினி
உதவி டைரக்ஷன் – கே.தங்கமுத்து, எஸ்.தேவராஜன், யூ.மோஹன்
டைரக்ஷன் – பி. மாதவன்
அன்னை இல்லம் விளம்பர நிழற்படங்கள் .. ஆவணத் திலகம் பம்மலாரின் பொக்கிஷத்திலிருந்து
Quote:
ஜூலை 1963-ல் வெளிவரப்போவதாக வெளியான விளம்பரம் : The Hindu : 14.4.1963
http://i1110.photobucket.com/albums/...GEDC5127-1.jpg
பின் அட்டை விளம்பரம் : பேசும் படம் : நவம்பர் 1963
http://i1110.photobucket.com/albums/...ackCover-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம்
http://i1110.photobucket.com/albums/...GEDC5128-1.jpg
முதல் வெளியீட்டு விளம்பரம் [மதுரை]
http://i1110.photobucket.com/albums/...hangamAd-1.jpg
50வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 3.1.1964
http://i1110.photobucket.com/albums/...GEDC5130-1.jpg
50th Day Ad : The Hindu : 3.1.1964
http://i1110.photobucket.com/albums/...50DaysAd-1.jpg
100வது நாள் விளம்பரம் : தினத்தந்தி : 22.2.1964
http://i1110.photobucket.com/albums/...0DaysAd1-1.jpg
100th Day Ad : The Hindu : 22.2.1964
http://i1110.photobucket.com/albums/...0DaysAd2-1.jpg
நமது நெஞ்செல்லாம் நீக்கமற நிறைந்த நெய்வேலி வாசு சாரின் அற்புதமான பதிவு
(http://www.mayyam.com/talk/showthrea...l=1#post768704)
Quote:
டியர் ராகவேந்திரன் சார்,
.....
தங்களுக்கு மிகவும் பிடித்த 'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா"...பாடலைத் தங்களுக்காகத் தருவதில் மிகுந்த மகிழ்ச்சி.
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தின் "சிகப்பு விளக்கு எரியுதம்மா" வீடியோ வடிவில்.
http://youtu.be/4n1ZQfVfD0c
முன்னொருமுறை தங்களை சென்னையில் நேரில் சந்தித்தபோது 'அன்னை இல்லம்' திரைப்படத்தில் வரும் நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த ரசனையான
காட்சியைப் பற்றி தாங்கள் என்னிடம் மிகவும் ரசித்துப் பேசி மகிழ்ந்தது நன்றாக நினைவில் இருக்கிறது. இப்போது நீங்கள் மறுபடியும் நடிகர்திலகத்தின் அந்த அட்டகாசமான நடிப்புக் காட்சியைக் கண்டு ரசிக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் தன் தாயிடம் தன் தந்தைக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனை வேதனையை வெளியேசொல்லமுடியாமல் மென்று விழுங்கி வசனமே இல்லாமல் அமைதியாக சில நிமிடங்கள் அசத்துவார் என்றால், அடுத்த காட்சியில் முன் நடித்த காட்சிக்கு எதிர்மறையாக தன் காதலி (தேவிகா) யிடம் தன் தந்தை (S.V.ரங்காராவ்) தன்னிடம் எப்படியெல்லாம் அன்பாக இருந்தார், எப்படியெல்லாம் தனக்கு பணிவிடைகள் செய்தார், எப்படியெல்லாம் தன்னை வளர்த்தார் என்று தந்தையின் அன்பை நினைத்து நினைத்து புலம்பித் தீர்த்து விடுவார்.
தன் தந்தையை தூக்கு தண்டனையில் இருந்து ஒரு மகனாகத் தன்னால் காப்பாற்ற முடிய வில்லையே என்ற இயலாமை, ஆற்றாமை,வேதனை, சோகம்,துக்கம் என்று அனைத்துவித உணர்ச்சிகளையும் ஒரு சேர மாறி மாறி பிரதிபலித்து, (குறிப்பாக தன் தந்தையின் தூக்குதண்டனை நிறுத்தத்திற்காக அளிக்கப் பட்ட கருணை மனு நிராகரிப்பை பற்றி தேவிகாவிடம் கூறும்போது," கருணை மனுவை நிராகரிச்சுட்டாங்க கீதா" என்று வேதனையோடு உரக்க சிரித்துக் கொண்டே சொல்வார்...பின் மீண்டும் ஒரு முறை சிரித்த படியே சொல்லி அப்படியே அதை அழுகையாய் அரை நொடியில் மாற்றுவார் பாருங்கள்... (அற்புதப் பிறவியே! எங்களைத் தவிக்க விட்டு விட்டு ஏன் அய்யா பிரிந்தீர்கள்)... அப்படியே அள்ளிக் கொண்டு போகும்.)
தாயிடம் அமைதி...
தாரமாகப் போகிறவளிடம் ஆர்ப்பாட்டப் புலம்பல்.
இரண்டையும் வேறுபடுத்திக் காட்ட அவரை விட்டால் வேறு யார்?...
அதே சீனில் இன்னொரு முத்திரை...தன் தந்தையின் அன்பைப் பற்றி தேவிகாவிடம் கூறுவார். "தாயில்லாதக் குறைய நான் உணரக் கூடாதுங்கறத்துக்காக அவர் (தன் தந்தை)எப்படியெல்லாம் கஷ்டப்பட்டார்... என்னென்ன ஏற்பாடெல்லாம் செய்தார்" என்று புலம்பிவிட்டு 'அடாடாடாடா'....என சிலாகித்து தன் தந்தையைப் பற்றி நினைவு கூர்வார். அந்த 'அடாடாடாடா' என்ற வார்த்தையை அவர் உச்சரிக்கும் விதம் அடடா...இவரல்லவோ நடிகர் என்று நம்மக் கூக்குரலிட வைக்கும் .
இந்த குறிப்பிட்ட சீனில் அவர் செய்யும் அட்டகாசங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்....
முகத்தில் பெருமை பொங்க தேவிகாவிடம்,"கீதா! எங்க வீட்டு வேலைக்காரன் இல்லே! கண்ணன்! (இந்த இடத்தில் ஒருவேலைக்காரன் தன் முதலாளி முன் எவ்வாறு கையைக் கட்டிக் கொண்டு நிற்பானோ அப்படிக் கையைக் கட்டிக் கொண்டு நிற்பார்) அவன் ஒரு நாளாவது எனக்கு காப்பி போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?..
ஒரு நாளாவது சாப்பாடு போட்டுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?....
ஒரு நாளாவது எனக்கு படுக்கை விரிச்சுக் கொடுத்திருப்பான்னு நெனைக்கிறியா?"....
என்று சொல்லிவிட்டு
"இல்ல கீதா! அவ்வளவு பணிவிடையும் எனக்கு எங்க அப்பாதான் கீதா...எங்க அப்பாதான்" என்று சொல்லியவாறே தன் தந்தையை நினைத்து பொங்கிக்கொண்டு அழ ஆரம்பிப்பது அவருடைய அசுரத் திறமை!
"உங்களுக்கு ஏன்ப்பா இவ்வளவு கஷ்டம்?...நான் என்ன குழந்தையான்னு கேப்பேன். அதுக்கு எங்கப்பா என்ன சொல்லுவார் தெரியுமா? என்று சொல்லிய படியே பின்னால் கைகளைக் கட்டிக் கொண்டு தன் தந்தை கூறுவது போல மகா தோரணையுடன் ,"ஏய்! நீ என்ன மனசுல பெரிய மனுஷன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியா?... ஒனக்கு கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்து அந்தக் குழந்தை உன்ன அப்பான்னு கூப்பிட்டாலும் நீ எனக்குக் குழந்தை தாண்டா..ன்னு சொல்லுவார்"....என்று நடிகர் திலகம் ரசித்து ஒரு அட்டகாசச் சிரிப்பை தந்தையின் பாச நினைவாக உதிர்த்து நினைவலைகளில் மூழ்கியபடி தலையை ஆட்டிக்கொள்வது அதியற்புதம்.
இப்படிப்பட்ட தந்தையை தனக்கு கொடுத்ததற்காக கடவுளிடம் தான் தன் ஆயுசு முழுதும் நன்றி சொல்லக் கடமைப் பட்டிருப்பதைப் பற்றிக் கூறும் போது, "எத்தனை ஆயிரம் தடவை" (நன்றியை) என்று அந்த வீட்டின் சிறு தூணைப் பிடித்தபடி கூறி நிறுத்திவிட்டு தலையை மேல்நோக்கித் தூக்கியவாறு மறுபடியும் இரண்டாவது முறை "எத்தனை ஆயிரம் தடவைசொல்லியிருப்பேன்" என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுவது மெய்சிலிர்க்க வைத்துவிடும்.
ம்..... சொல்லிகொண்டே போகலாம். ஆனால் ஆயுசுதான் போதாது அவர் அசாத்தியத் திறமைகளைப் பற்றி எழுத...
அந்த மெய்சிலிர்க்க வைக்கும் அன்புத் தெய்வத்தின் அற்புத நடிப்புக் காட்சியை ராகவேந்திரன் சாருடன் நாமும் கண்டு களிக்கலாம்.
'அன்னை இல்லம்' திரைக்காவியத்தில் அதியற்புதமான நடிகர் திலகத்தின் நடிப்பில் மிளிரும் காவியக் காட்சி.
http://www.youtube.com/watch?v=zNE0LicphLM
நமது அன்பிற்குரிய மாடரேட்டர் நவ் அவர்களின் அற்புதமான பதிவு
http://www.mayyam.com/talk/showthrea...l=1#post257451
Quote:
Annai Illam
Starring Sivaji Ganesan, Devika, Muthuraman, Ranga Rao, Kannamba, Nagesh, MN Nambiar, OAK Devar, VK Ramasamy etc
Producer: Kamala Pictures
Lyrics: Kannadhasan
Music: KV Mahadevan
Director: P. Madhavan
Paramasivam (Ranga Rao) is a rich man who believes in utmost charity. In the first 3 mins of the film, he gives away all his riches and becomes a destitude. In the meantime, his wife Gowri (Kannamba) is pregnant and is ready for delivery but Paramasivam is unable to collect money for treatment. In a moment of anger he fights with a moneylender and fearing for his life escapes. Nambiar seizes the moment and offers him refuge, saying that his wife had died in childbirth.
Nambiar is involved in smuggling and makes Paramasivam his accomplice. Meanwhile Paramasivam's elder son, Kumar, is raised by him while the new born Shanmugam is raised by Gowri (each unknowing of the other.) All these happens within 10 mins of the film.
Film opens with the grown Kumar (Sivaji) being pampered by his father. He drives to Geetha's (Devika) home who mistakes him as a driver and commands him to take her to college etc. A bemused Kumar plays along and one day deserts her along a lonely road. Angry Geetha attempts to walk off... nadaiyaa idhu nadaiyaa oru naadagam andrO nadakkudhu, idaiyaa idhu idaiyaa adhu illaadhadhu pOl irukkudhu
Geetha, daughter of rich judge VKR later realises the truth and promptly falls in love with Kumar. madi meedhu thalai vaiththu vidiyum varai thoonguvOm, marunaal ezhundhu paarppOm
In the meantime, Kumar meets Shanmugam and they become best of pals. Shanmugam has a girlfriend and in turn he asks Kumar if he has anyone special and if so, to describe her.... ennirandu padhinaaru vayadhu At the end of the song Kumar falls and hits a rock. Shanmugam brings him home and Kumar gets to know of Gowri (to whom he feels a strange affliation.)
Through Kumar, Shanmugam's wedding is arranged for and when the bride's side questions Shanmugam's ancestry, Paramasivam stands guarantee although he has yet to meet Gowri.
Things move fast and the police are on Nambiar's trail. Paramasivam is framed and once again he runs from the police (presumably) killing a constable along the way. He seeks refuge along the corridors of Gowri's house and is shocked to learn that she is alive. Unable to face her, he finally gets caught and is sentenced to death by the same judge friend VKR! In prison Paramasivam reveals the secret to Kumar but extracts a promise not to tell anyone about it.
Gowri chances on a newspaper report and learns that her husband is to die soon! Both mother and son (without the knowledge of Shanmugam) try all means to save the life of Paramasivam, by making appeals right up to the president.
When all fails a dejected Kumar sings sigappu vilakku eriyuthammaa.
In the meantime Shanmugam's in laws are adamant of holding the wedding on the earlier agreed date, which coincidentally is the date Paramasivam is scheduled to hang!
Will the wedding happen? Will Shanmugam learn the truth? What will happen to Paramasivam? To Gowri? To Kumar? See the silver screen for answers!
காணொளிகள்
எண்ணிரண்டு பதினாறு வயது
http://youtu.be/wvAJ7FqPLrs
என்ன இல்லை எனக்கு
http://youtu.be/bX6zzXQgCP0
மடி மீதூ தலை வைத்து
http://youtu.be/w_R5KhMJlzs
நடையா இது நடையா
http://youtu.be/oSOv4hTHdo0
Karnan- 1964
கதைகளில் மகாபாரதத்தை மீறிய Epic உலகளவில் இல்லாதது போல ,கர்ணனை மீறிய பாத்திர படைப்பு இது வரை உலகம் கண்டதில்லை. வீரபாண்டிய கட்டபொம்மனை குறிப்பிடும் போது ஒரே single agenda , ஒரே பகைவன், ஒரு சில ஆள்காட்டிகள் என்பதோடு பன்முக தன்மை இல்லாத பாத்திரம். ஆனால் கர்ணனோ மிக பெரிய பராக்கிரம சாலியும் அவன்தான். உலகத்தின் மிக துர்பக்கியசாலியும் அவன்தான். மிக மிக போற்ற பட்ட மனிதனும் அவன்தான். ஆனால் எதிரிகளாலேயே சூழ பட்டு வாழ்ந்த மனிதனும் அவன்தான். எல்லோரும் கவனம் செலுத்திய மனிதனும் அவன்தான். ஆனால் தாய் முதல் ,வாழும் குலம்,பெண் கொடுத்தவர் முதல் உதாசீனம் செய்து ஒதுக்கிய மனிதனும் அவன்தான்.
அவன் நல்லியல்புகளே அவனுக்கு பகையாவதுடன், பகைகளும் உறவாடியே கெடுக்கின்றன. கண்ண தாசனின் வரிகள். செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழும் பாத்திரம்.மனோதத்துவ பின்னல்களுடன், non -linear முறையில்,multi -dimensions உடன் படைக்க பட்ட இந்த காவிய நாயகன் பாத்திரத்தை இன்னொரு காவிய உலக நடிகன் ஏற்று நடிக்கும் பொது நமக்கு கிடைத்த அனுபவம் சுனாமி போன்ற Psychedelic Trip .இன்றும் நம் மனதை பிசைந்து கண்ணீர் விட வைத்தாலும், ஒரு ecstatic உணர்வை தரும் அருமையான நடிப்பின் உன்னத சாதனை.
இதில் நான் குறிப்பிட விரும்பும் மூன்று கட்டங்கள்- இந்திரா தேவன் வேடம் புனைந்து கவச குண்டலங்களை கவரும் காட்சி.. கிருஷ்ணன் தூது வரும் காட்சி. குந்தி தூது (சூது?)வரும் காட்சி.
முதலில் இந்திரன் கவச குண்டலங்களை கவரும் காட்சி. தன் ஒளி கடவுளை கும்பிட்டு முடிக்கும் தருணத்தில் யாரோ ஒரு அந்தணர் வந்திருப்பதாக தகவல் வர , கர்ணனுக்கு வந்திருப்பவன் யார் என்றும் ,அவன் நோக்கம் என்ன என்று கடவுளால் குறிப்புணர்த்த பட்டும் அந்தணர் வேடத்தில் வந்த இந்திரனை வரவேற்று வேண்டுவதை கொடுக்கும் காட்சி...
இந்திரனுடன் இயல்பாக இருக்கும் மரியாதை உணர்வை மீறி , பொய் வேடமிட்டு தன் ஈகை குணத்தையே எள்ளுவதாக கர்ணன் துடித்து போய் ,தனக்கு தெரிந்து விட்டதை குறிப்புணர்த்தி , செயலை சினந்து நகையாடி,வேண்டுவதை கொடுக்கும் இடத்தில் நடிகர்திலகத்தின் மனோதத்துவ ஆழம் நிறைந்த நடிப்பு இந்த காட்சியை இமயத்தில் உயர்த்தும்.இந்திரனின் பொய்யான வர்ணனைகளை கேட்டு உவகை கொண்டாலும், நோக்கத்தினால் ஒரு எள்ளல் சிரிப்புடன் அதை ஏற்பதும், கவச குண்டலங்களை யாசித்ததும் கர்ணன் எதிர்பார்த்த ஒரு எள்ளலுடன் கேட்டதும், இந்திரன் பயம் கொண்டவன் போல பாவிக்க, கர்ணன் தள்ளாடிய தேகம், தள்ளாடாத நோக்கம், பொய்யான நடிப்பு,அதன் பின் மெய்யான பிடிப்பு, என்னிடம் வர வேஷம் வேண்டுவதில்லை, ஆனால் எடுத்த காரியத்தின் தன்மை அப்படி...அப்படி பொய்யுடம்பு போர்த்தி வர தூண்டியுள்ளது உம்மை என்று குறிப்பிடும் கண்களின் சத்திய ஒளி கொண்ட தீட்ஷன்யத்துடன்,இந்த சதி செயலை இடித்து ,தன்னுடன் இந்த நாடகம் தன்னை அவமதிக்கும் செயலே என்று உணர்த்தி , இந்திரன் தன் அசல் உருவில் வந்து கேட்டிருந்தாலே கொடுத்திருப்பேனே என்று உரைத்து ,அதனை செயல் படுத்தும் அந்த காட்சி ... நடிப்பால் மட்டுமே ஒரு காட்சியின் சிறப்பு எத்தனை உயரம் தொட சாத்தியம் கொண்டது என்று தன்னுடைய கவச குண்டலமான நடிப்பை அந்த நடிப்பு கர்ணன் நமக்கு வழங்கி விடுவார்.
கண்ணன் தூது வரும் காட்சியில் கர்ணன் ஒரு மௌன சாட்சி போல ,அவன் பங்கு அதில் குறைவு.துரியோதனன் சமாதானத்திற்கு ஒவ்வாமல் முரண்டு பிடிப்பான் என்றும் ,அங்கிருக்கும் அனைவரும் மனதளவில் பாண்டவர் பக்கம் நியாயம் என்று நம்புபவர்கள் என்றும், திருதராஷ்டிரன் பாசம்-நியாயம் இரண்டுக்கும் நடுவில் ஊசலாடுபவன் என்றும் தெரிந்த கண்ணன் , தூதில் சாதிப்பது விதுரன்-துரியோதனன் ,கர்ணன்-பீஷ்மர் இவர்களுக்கிடையில் பிரித்தாளும் சூழ்ச்சி ஒன்றைத்தான். இதில் கர்ணனின் பங்கே ,தனித்து விட படும் (சகுனி துணை என்றாலும் )துரியோதனனுக்கு அரணாக aggressive unconditional support தருவதுதான் என்று உணர்ந்து , தனக்கு ஒவ்வுகிறதோ இல்லையோ ,அவனுக்கு சார்பாக பேச வேண்டிய கடமையை உணர்ந்து செய்ய வேண்டும்.இந்த காட்சியில் நடிகர்திலகம் இதை உள்வாங்கி நடிக்கும் மேதைமை ,உடல்மொழி,பேசும் பாணி எல்லாவற்றிலும் பிரதிபலிக்கும்.
கண்ணன் உள்ளே வரும் போது ,முள் மேல் உட்காருவது போல மற்றவர் துரியோதனன் கட்டளைக்கு பணியும் போது ,கர்ணன் இதை ஓரக்கண்களால் உணரும் அழகே தனி.(இதில் தனக்கும் ஒப்புமை இல்லை என்ற ஒரு உடல்மொழி),துரியோதனன் தடுமாறி விழ வைக்க படும் நிலையில் எழும் கர்ணனின் முகத்தில் சிறிதே ஆசுவாசம் தெரியும்.கண்ணனுடன் வலுவில் வாதாடினாலும்,மனமின்றியே அதை வலுகட்டாயமாக செய்ய படுவதை காட்ட சிறிதே உரத்த வலுவான உடல் மொழியில் ,பாண்டவர் மனைவியை சூதாடிய இழிவை குத்தி (கண்ணன் கோப படும் அளவு)அந்த பேச்சு முறையில் தானே தனக்கு உரத்து சொல்லி ,தன்னை தானே convince பண்ணி கொள்ள முயலும் strain தெரியும்.மற்றோர் மன ரீதியான துரியோதனன் எதிர்ப்பை கூர்மழுங்க செய்யும் முயற்சி என்பது தெரியும் வகையில் நடித்திருப்பார்.
ஆனாலும் அடக்க முடியாமல் பீறிடும் நிலைக்கு தள்ள படுவார் ,விதுரன் பிறப்பை சொல்லி அவமான படுத்த படும் போது .கிட்டத்தட்ட தன நிலைக்கு சமமான அவமானத்தை ,தன்னிலை மறந்து உணர்ச்சி வச பட செய்யும்.
மற்றோருக்கும் ,நடிகர்திலகத்துக்கும் உள்ள வேற்றுமையே அதுதானே?கதாபாத்திரத்தின் ஆன்மாவில் புகுந்து கூடு விட்டு கூடு மாறும் மந்திரம்?கர்ணனுக்கு பங்கில்லா காட்சியிலும்,இந்த அற்புதமான உளவியல் புரிந்த அபார நடிப்பினால்,கர்ணனே முன்னிலை படுவான்.
குந்தி தேவியின் தூது காட்சி இந்திய சினிமா வரலாற்றிலேயே பொன்னெழுத்துக்களில் பொறிக்க பட வேண்டிய மிக சிறந்த ஒன்றாகும். வீரபாண்டிய கட்டபொம்மனின் laser sharp உணர்வு குவி மையம் என்ற நிலைக்கு முற்றிலும் மாறுபட்ட பல்வேறு உணர்வு நிலைகளின் கலவை கொண்ட விரிந்த தளத்தை ,பரப்பை உடைய உன்னத காட்சி. இது ஒரு emotional Roller coaster ride என்ற வகையில் ஏழு வகை மனநிலைகளின் கலப்பு போராட்டம் . Joy (சந்தோசம்),Hatred (வெறுப்பு),Sadness (துக்கம்),Reconciliation (தேற்றிகொள்வது),Surrender (சரணாகதி), Cynicism (எள்ளல் ),Assertion (இருப்புநிலை) . அற்புதமான வசனத்தை துணையாக கொண்ட துரித உணர்வு நிலைகளில்(concurrently running and at times in cocktail manner) மாற்றம் காட்டும் மாயாஜால நடிப்பு வித்தை.
சந்தோசம்- குந்தி தன் வீடு தேடி வந்ததை ஒரு பாக்கியமாக கருதும் போது ,அவர்தான் தன் அன்னை என்று அறியும் போது .தன் பிறப்பறியா களங்க நிலை மாறி தன் உயர்வை தானே உணரும் போது அடையும் உவகை.
வெறுப்பு- தன் அன்னையின் புறக்கணிப்பால் தான் பட்ட அவமானங்களை எண்ணும் போது
தாயை சபிக்கும் அளவு பெருகும் வெறுப்பு. தான் தன் முயற்ச்சியால் இவ்வளவு உயரங்களை அடைந்தும் பிறப்பின் அறியாமை, வளர்ப்பின் பின்னணியால் அடையும் அவமானம் சார்ந்த சுய வெறுப்பு நிலை.
துக்கம்-தன்னுடைய தாயை தேடி அலைந்த துயரம், பலர் வந்தும் சோதனையில் தோற்று ஓடியது, தன் தொடர் அவமானங்கள் சுமந்த பிறப்பறியா வேதனை,தன்னுடைய தாயின் பக்கம் செல்ல முடியாத இயலாமை,அவள் தன் தாயே என்று உலகத்திற்கு தான் உயிரோடிருக்கும் போது சொல்ல முடியாமல் சொல்லும் போங்கள் தாயே.
தேற்றி கொள்ளும் நிலை-குந்தி தன் தாய் என்று சொல்வது தன்னை அன்னையின் மீதுள்ள ஆத்திரத்தை தணிய வைப்பதற்காக என்று எண்ணும் போது , இன்றேனும் என்னை பெற்றேடுத்தாயே என்று மடியில் ஆயாசம் கொள்ளும் போது ,அர்ஜுனனோ,நானோ இருவரில் ஒருவர் என்று ஐந்து மகன்கள் என்று தாயிடம் உரைக்கும் போது ,துரியோதனன் நற்பண்புகளை சொல்லி தன் இருப்பை உணர்த்தி, தாயெனும் உண்மையை மறைக்க சொல்லும் போது ,தர்மம் வெற்றி பெற தெய்வம் போன்ற துணைவர் காட்டிய வழியில் அன்னையும் கைப்பாவையாய் மாற வேண்டிய நிலையை உணர்ந்து உணர்த்தும் நிலை.
சரணாகதி-நட்பின் உயர்வுக்கு தான் இறக்கும் வரை செய்ய வேண்டிய கடமைக்கு,தாயின் சுயநல வரங்களை மறுக்காமல் அளிக்கும் போது ,கேள்வி கேட்காமல் தாயின் நிலையை உணர்ந்து தாய்க்கு உரிய ஸ்தானம் அளிப்பது , தன்னையே அழித்து கொள்ளும் அளவு தன்னை மீறிய சுயம் கருதா பண்புக்கு என்று கேள்வி கேட்காத சரணாகதி நிலை.
எள்ளல்- தாயின் அணி மாற சொல்லும் வேண்டுகோளை நிராகரிப்பது.(இது சரியான பேச்சா தாயே), நாகாஸ்திரத்தை ஒரு முறைக்கு மேல் பிரயோகம் செய்வதில்லை என்ற சத்தியத்தை கேட்கும் போது ,அதன் மூலத்தை உணர்ந்த எள்ளல் .
இருப்புநிலை- தானிருக்க வேண்டிய இடம்,தாய்க்கு உரிய இடம், தான் சாகும் வரை நடக்க வேண்டியவை, செத்த பிறகு பிறப்பறியா இழிவை நீக்க வேண்டிய அவசியம்,தர்மம் வெற்றி பெற விழைவு, என்று அனைத்து இருப்பு நிலைகளின் நிதர்சனங்களும் உணர்த்த படும்.
இது அத்தனையும் மீறி மற்றோர் உணர்வு,இது வரை கர்ணனிடம் அந்த படத்தில் அதுவரை வெளிப்படாத ஆயாசம் நீங்கிய பெருமித உணர்வு .தன்னை பற்றி தானே அறிந்து விட்டதை உணர்ந்து ,இனி அடைய கடமையை தவிர எதுவுமில்லை என்ற உணர்வு நிலை.
இந்த உணர்வுகள் ஒரே குவி மையத்தில் இயங்காமல் ,ஒளி சிதறல்கள் போல தெறித்து நொடிக்கு நொடி முக பாவத்திலும்,உடல் மொழியிலும்,பேசும் மொழியிலும் நடிப்பின் வானவில் கலவை போல ஜாலம் காட்டி முடிவை அடையும்.
இந்த காட்சி போன்று இனி ஒன்று அமைய நடிகர்திலகம்,சக்தி கிருஷ்ணசாமி,பந்துலு இவர்கள் வியாசருடன் சேர்ந்து பிறந்து வந்தால் மட்டுமே சாத்தியம்.
Gopal,
what a deep analysis about karnan charector and the involvement of nadigarthilagam on that role.
I am totally surrender.
Sivaji Ganesan Filmography Series
94. KARNAN கர்ணன்
http://i.ytimg.com/vi/6pBWrbxGb-g/0.jpg
தணிக்கை – 24.12.1963
வெளியீடு – 14.01.1964
தயாரிப்பு – பி.ஆர். பந்துலு - பத்மினி பிக்சர்ஸ்
வசனம் – சக்தி கிருஷ்ணசாமி
பாடல்கள் – கவிஞர் கண்ணதாசன்
இசை – விஸ்வநாதன் – ராமமூர்த்தி
துணைத் தயாரிப்பு – சித்ரா கிருஷ்ணஸ்வாமி
தயாரிப்பு-டைரக்ஷன் – பி.ஆர்.பந்துலு
நடிக நடிகையர் –
கொடை வள்ளல் கர்ணனாக – நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
என்.டி.ராமராவ் – கிருஷ்ணன்
எஸ்.ஏ.அசோகன் – துரியோதனன்
முத்துராமன் – அர்ஜூனன்
ஓ.ஏ.கே.தேவர் – கனகன்
ஜாவர் சீதாராமன் – பீஷ்மர்
முத்தையா – சகுனி
கே.நடராஜன் - தேரோட்டி அதிரதன்
முஸ்தபா – கிருபாச்சாரியார்
வீராச்சாமி – துரோணாச்சாரியார்
ஆர்.பாலசுப்ரமணியம் – பரசுராமர்
வி.எஸ்.ராகவன் – விதுரர்
எஸ்.வி.ராமதாஸ் – இந்திரர்
குலதெய்வம் ராஜகோபால் – சுமந்தன்
பழ.செல்வராஜ் – துர்முகன்
எஸ்.ஏ.ஜி.சாமி – திருதராஷ்டிரன்
கண்ணன் – சஞ்சயன்
பிரேம்குமார் – தருமர்
சாண்டோ இந்திரஜித் – பீமர்
தங்கராஜ் – நகுலன்
சின்னையா – சகாதேவன்
சண்முகசுந்தரம் – சல்லியன்
கே.வி.ஸ்ரீநிவாசன் – முனிவர்
மாஸ்டர் ஸ்ரீதர் – அனாதைப் பையன்
மாஸ்டர் சுரேஷ் – விருக்ஷசேனன்
பிரபாகர் ரெட்டி – சூரியன்
சாவித்திரி கணேஷ் – பானுமதி
தேவிகா – சுபாங்கி
எம்.வி.ராஜம்மா – குந்தி தேவி
ஸந்தியா – கனகன் மனைவி
ருக்மணி – ராதை
ஜி.சகுந்தலா – தோழி மங்களா
கல்பனா – தரும தேவதை
ஜெயந்தி – திரௌபதி
ராஜேஸ்வரி – தோழி சத்யவதி
சரோஜா – இளம் குந்தி
மற்றும் ஸ்டண்ட் சோமு குழுவினரும், ராஜஸ்தான் போலீஸ் படையினரும், ஆயிரக்கணக்கான துணை நடிகர் நடிகைகளும்.
கலை நுணுக்கப் பொறுப்பு
ஒளிப்பதிவு டைரக்டர் – வி.ராமமூர்த்தி
தந்திரக்காட்சிகள் – ரவி உதவி – பி.எல்.நாகப்பா, வி.சூர்யகுமார்
ஒலிப்பதிவு பாடல்கள் & ரீரிக்கார்டிங் – டி.எஸ்.ரங்கசாமி
வசன ஒலிப்பதிவு – வி.சிவராம் உதவி – எஸ்.ஜே.நாதன், எச்.நாகபூஷணராவ், ஆர்.எஸ்.வேதமூர்த்தி, ஜோ.அலோஷியஸ், கே.ஜி.சீனிவாசன்
கலை – கங்கா உதவி – செல்வராஜ்
இசை உதவி – கோவர்த்தனம் – ஹென்றி டேனியல்
பாடல்கள் உதவி – பஞ்சு அருணாச்சலம்
திரைக்கதை – ஏ.எஸ்.நாகராஜன்
நடன அமைப்பு – பி.எஸ்.கோபால கிருஷ்ணன், பி.ஜெயராமன் உதவி – லட்சுமி நாராயணன்
எடிட்டிங் – ஆர்.தேவராஜன் உதவி – வி.பி.கிருஷ்ணன், சி.பழனி
ஒப்பனை – ஹரிபாபு, ஆர்.ரங்கசாமி, எம்.கே.சீனிவாசன், பீதாம்பரம், எஸ்.பார்த்தசாரதி உதவி – மணி, என்.ஏ.தாமோதரன்
ஆடை அலங்காரம் – எம்.ஜி.நாயுடு உதவி – மு.கணேசன், எல்.ராதா, ஏ.டி.சண்முகம்
தலை அலங்காரம் – ஜோஸஃபின்
அரங்க ஓவியம் – முத்து உதவி – என்.சுப்பய்யா, பி.சுப்பிரமணி
அரங்க நிர்மாணம் – ஏ.நாகரத்தினம் உதவி – டி.எஸ்.வெங்கடேசன்
சிற்ப வேலைப்பாடு – கே.ஜி. வேலுசாமி உதவி – பாட்சா
மின்சார மேற்பார்வை – வி.எஸ்.ராதாகிருஷ்ணன், வி.சந்திரன்
வர்ண ரசாயனம் – பிலிம் சென்டர் பம்பாய்
தயாரிப்பு நிர்வாகம் – பி.எஸ். சுப்ரமணியம்
அரங்க அலங்காரம் – எம்.சுப்ரமணியம், எஸ்.மணி
அரங்க அலங்காரப் பொருட்கள் – சினி கிராஃப்ட்ஸ், கிரி மியூஸியம்
புகைப்படம் – ஆர்.வெங்கடாச்சாரி
விளம்பர ஓவியம் – ஜி.ஹெச். ராவ்
விளம்பர நிர்வாகம் – அருணா & கோ.
அரங்க நிர்வாகம் - ஆர். பாலு உதவி – என்.வி.மூர்த்தி, டி.வெங்கடாச்சலம்
வில்வித்தை நிபுணர் – ராமமூர்த்தி
அணிகலன், ஒப்பனை சாதனங்கள் – கிரிஷ்கோ, கணேஷ் ஜுவல்லரி
துணிமணிகள் – இந்தியா சில்க் ஹவுஸ், ஸாரி சென்டர்
ஸ்டூடியோ – விஜயா, நிர்வாகம் – வீனஸ்-பத்மினி கம்பைன்ஸ்
உதவி டைரக்ஷன் – கே.சிங்கமுத்து, இரா.சண்முகம், பழ.செல்வராஜ்
கர்ணன் திரைக்காவியத்தில் இடம் பெற்ற பாடல்களின் விவரம்
https://i.ytimg.com/vi/Aa08VgC1YkE/hqdefault.jpg
1. மன்னவர் பொருள்களைக் கை கொண்டு நீட்டுவார் – டி.எம்.சௌந்தர்ராஜன்
2. என்னுயிர்த் தோழி – பி.சுசீலா
3. மழை கொடுக்கும் கொடையுமொரு – சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன்
4. என்ன கொடுப்பான் – பி.பி.ஸ்ரீநிவாஸ்
5. ஆயிரம் கரங்கள் நீட்டி – டி.எம்.சௌந்தர்ராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ், திருச்சி லோகநாதன்
6. கண்கள் எங்கே – பி.சுசீலா கோரஸ்
7. இரவும் நிலவும் வளரட்டுமே – டி.எம்.சௌந்தர்ராஜன், பி.சுசீலா
8. கண்ணுக்கு குலமேது – பி.சுசீலா
9. போய் வா மகளே – சூலமங்கலம் ராஜலக்ஷ்மி
10. மஞ்சள் முகம் நிறம் மாறி – பி.சுசீலா கோரஸ்
11. மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா – சீர்காழி கோவிந்தராஜன்
12. உள்ளத்தில் நல்ல உள்ளம் – சீர்காழி கோவிந்தராஜன்