அபூர்வ நிழற்படம்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...09765595_n.jpg
குங்குமம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் திரு கே.மோகன் அவர்களுடன் நடிகர் திலகம்.
நன்றி, திரு எம்.எல்.கான், முகநூல் இணைய தளம் மூலமாக.
Printable View
அபூர்வ நிழற்படம்
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...09765595_n.jpg
குங்குமம் திரைப்படத்தின் படப்பிடிப்பு இடைவேளையில் தயாரிப்பாளர் மோகன் ஆர்ட்ஸ் திரு கே.மோகன் அவர்களுடன் நடிகர் திலகம்.
நன்றி, திரு எம்.எல்.கான், முகநூல் இணைய தளம் மூலமாக.
கல்தூண் திரைப்படத்தின் 105வது நாள் விழாவில் சஞ்சீவ் குமார்,கருப்பையா மூப்பனாருடன் நடிகர் திலகம்
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...65872808_n.jpg
நன்றி, திரு எம்.எல்.கான் முகநூல் மூலமாக
I am one of the regular readers of the Mahabharatam in net. a good one . But in that thread also they discussed about karnan and sivaji
just made cust and paste for information
Regards
Gk
வெள்ளி, ஆகஸ்ட் 09, 2013
கர்ணன் பதிவுகளுக்கு சிவாஜி படத்தைப் பயன்படுத்தலாமா?
I am reading your Mahabharatam daily. Its interesting and just flowing like river.
In the mahabharatam the hand made paintings you selected is good and also in the Karnan Part you had put actor Sivaji pictures which is not appropriate (am feeling). In all places hand made paintings makes the presence a nice one. Sorry if I mentioned anything wrong.
Really good work you are doing. Keep going on. If you need any support please mail us, whatever support possible I lend you
Regards
Panneer Selvam
************************************************** *********
நண்பர் திரு.பன்னீர் செல்வம் அவர்களே,
முழு மஹாபாரதம் வலைப்பூவை நீங்கள் தொடர்ந்து வாசிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
உதவிக்கரம் நீட்ட முற்பட்ட உங்கள் உள்ளத்திற்கு நன்றி.
கோட்டோவியங்கள் குறித்து சொல்லியிருந்தீர்கள். பல கோட்டோவியங்களை Backtogodhead என்ற வலைத்தளத்திலிருந்தே எடுக்கிறேன். அங்கிருந்து எடுக்கப்படும் படங்கள் கருப்பு வெள்ளையாக இருக்கும். நான் வரைகலைஞனனானதால் (Graphic Designer), அப்படங்களை வண்ணமயமாக மாற்றி எனது மொழிபெயர்ப்பில் பயன்படுத்திக் கொள்கிறேன்.
சிவாஜியின் படம் குறித்து சொல்லியிருந்தீர்கள். என்னைப் பொருத்தவரை கர்ணன் என்றாலே சிவாஜிதான் நினைவுக்கு வருகிறார். நான் என்ன செய்ய? (மற்றுமொரு காரணம் கூகுளில் படம் கிடைப்பதில்லை. அப்படிக் கிடைக்காத சமயத்தில்தால்சிவாஜியின் படத்தைப் பயன்படுத்துகிறேன்.)
படங்களைக் குறித்து எனக்கு ஒரு எண்ணம் உண்டு, வரையத் தெரிந்த நமது வாசக நண்பர்களில் யாராவது தகுந்த படங்களைக் கோட்டோவியமாக வரைந்து அனுப்பினால், அப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, எனது பதிவுகளில் பிரசுரிக்கலாம் என்று நினைக்கிறேன். படங்கள் பென்சில் ஓவியங்களாக இருப்பினும், நான் அவற்றுக்கு வண்ணம் தீட்டி அமைத்துக் கொள்வேன்.
பார்ப்போம். இப்பதிவைப் பார்த்து யாராவது படம் வரைந்து ஸ்கேன் செய்து அனுப்பினால், நிச்சயம் பிரசுரிப்பேன்.
நண்பரே, உங்கள் எண்ணங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
Dear Ragavendran Sir,
Thanks for Nadigarthilagam's rare photos.
பழைய பதிவு(It has Connection with today. Wishing you the best for Youth Festival NTF Members.)
சுமதி என் சுந்தரி-1971
எழுபதுகளில் என் மீசை அரும்பும் பருவத்தில் ,என் சக வயது தோழர்களுடன் திரும்ப திரும்ப பார்த்து ,அதை பற்றி உரையாடி(எதை பற்றி என்று பிறகு)மகிழ்ந்து ,லயித்த நகைச்சுவை தெளித்த காதல் காவியம்(ஆங்கிலத்தில் ரொமாண்டிக்-காமெடி).ரோமன் ஹாலிடே என்ற படத்தை தழுவிய வங்காள மூலத்தில்(பிரசாந்த்)இருந்து கோபு-சி.வீ.ராஜேந்திரன் இணைப்பில் உருவான ரசிக்கத்தக்க படம்.(அசல் பெயர் விட்டில் பூச்சி??)
நடிகர் திலகம் ,நடிப்பில் முன் மாதிரியாய் இருந்தது போல் உடையில்,சிகை அலங்காரத்தில் ,ஸ்டைலில், அனைத்து வயதினருக்கும் (முக்கியமாய் கல்லூரி இளைஞர்கள்) முன் ரோல் மாடல் அண்ட் டிரென்ட் செட்டர்.ஏன் இந்தியாவுக்கே எனலாம்(ஐம்பதுகளில் வட இந்திய பத்திரிகைகள் அவரை நன்கு உடையணிந்த இந்திய ஆண் நடிகராய் தேர்வு செய்து மகிழ்ந்தன. இந்த படத்தில் மிக மிக அழகாய் (படத்தில் ஜோசிய காரன் சொல்வது போல்) அழகான சிகை அலங்காரம்,உடைகள் என அதகளம் புரிவார்.ஜெயலலிதா மிக அழகாய் தோன்றி பொருத்தமான ஜோடியாய் காதல் காட்சிகளில் பொருந்துவார்.. நடிகர் திலகம் சற்றே தூக்கி சடாரென்று நெற்றிக்கு இறங்கும் நிறை குடம் பாணி hair ஸ்டைல்.வெளுறிய காவி நிற சட்டை ,சிவப்பு தொப்பி,பிரவுன் சட்டை ,கட்டம் போட்ட ஹாட்,ஜெர்கின்,லெதர் ஜாக்கெட்,கிரே சட்டை,கட்டம் போட்ட பிரவுன்,மஸ்டர்ட் சட்டை,லவேண்டேர் டி ஷர்ட்,காகி ஷார்ட்ஸ்,அருமையான கூலிங் கிளாஸ், வைட் அண்ட் வைட் (சிவப்பு காலர்),அருமையான இரவு உடைகள்,கிரே பான்ட்,seersucker Madras Check patterns என்று பொருத்தமான ஸ்டைல் ஆன உடைகளில் தோன்றி இள மனசுகளை அள்ளோ அள் என்று அள்ளுவார்.கலைச்செல்வியும் பாந்தமான மித வர்ண புடவைகளில் ஜொலிப்பார்.
ஒரு ஸ்டாம்ப் சைஸ் கதை.மிதமான ,இதமான வசனங்கள்.ஆரம்பமே களை கட்டும்.டைட்டில் ஓடும் போதே ஹாலிவுட் நடிகை புகைப்படங்களை பட கதையமைப்புக்கு பொருத்தமாய் ஓட விடுவார்.ஒரு காதல் பாடல் சம்பந்தமே இல்லாத நபருடன் எடுத்த எடுப்பிலேயே நாயகி பாடி ரசிகர்களை அதிர வைப்பார்.சாரி சொல்லி கதா நாயகி பாடல் இடையில் திரும்பும் போது ரசிகர்கள் மூச்சு விடுவார்கள்.அதிலிருந்து கதை பயணிக்கும் பாணி தமிழ் ரசிகர்களுக்கு புதிது.சி.வீ.ஆர் உடை நிறத்திலேயே கலர் சைகாலஜி உபயோகித்து காட்சியின் தரத்தையே மாற்றுவார்.(உடை-ராமகிருஷ்ணன்)
பாஸ்கர் ராவ்-தம்பு காம்போ இதமாய் ஒளிப்பதிவை குளுமையாய் தரும்.
நடிகர் திலகம் நடிக்காமல் ரெஸ்ட் எடுப்பார்.அதுதான் இந்த படத்தையே தூக்கி நிறுத்தும்.சினிமா பற்றியே தெரியாமல் டீ எஸ்டேட் டையே உலகமாய் கொண்டிருக்கும் மது என்ற இளைஞனாய் ....ஆரம்ப காட்சியில் இருந்து ஜாலியாய் நடிப்பார். தங்க வேலு தவறாய் அர்த்தம் செய்து வீட்டில் குளிக்க சொல்லி மிரட்டும் இடத்தில்(மூன்று முறை டவல் உடன் திரும்பும் காட்சி),முதலிரவு காட்சியில் மிரளும் போது,பொட்டு வைத்த முகமோ (எஸ்.பீ.பாலு முதல் NT பாடல்) மிதமான இளமை கொஞ்சும் ஸ்டைல்(தரையோடு வானம்-புகழ் பெற்ற ஸ்டில்),ஏய் புள்ளே பாடலில் ஆட தெரியாதவன் போல் ஆடுவது,தொடர்ந்த இளைஞர்களை பைத்தியமாக்கிய பலூன் காட்சி, பூவின் ஒரு இதழை சுவைத்து காமத்தை அழகாய் வெளிப்படுத்தும் காட்சி,(வசந்த மாளிகை ப்ளம் ஞாபகம் வருமே!!),சட்டென்று ஜெயலலிதா அழும் போது எல்லா திசைகளிலும் அப்பாவியாய் பார்ப்பது,கிளி-ஜோசிய காட்சி, என்னுடைய பேவரிட் ஒருதரம் (காலை ஸ்டைல் ஆக தூக்கி நிற்பது,பௌலிங் ஆக்க்ஷன்) என்று இந்த பாணி படத்திலும் தான் தான் கிங் என்று நிரூபிப்பார்.ஒருதரம் பாடல் கலாட்டா கல்யாணம் படத்திற்காக உருவானது.ஆனால் மழை வந்து படமாக்க முடியாமல் இந்த படத்தில் உபயோகித்தனர்.
விஸ்வநாதன் இசையில் இளமையை கொட்டுவார்.ல ல லா ஹம்மிங் ,ஹும் ஹம்மிங் என்று கலக்குவார்.
எனக்கு மிக மிக பிடித்த நடிகர் திலகத்தின் லைட் movie .(மற்றவை ராஜா,என்னை போல் ஒருவன்,எங்கள் தங்க ராஜா)
இந்த படம் இளைஞர்களை குறி வைத்து எடுக்க பட்டதால்,நடுத்தர வயதினர்,முதியவர் என மற்றோருக்கு அதிக நாட்டம் வரவில்லை.இளைஞர்கள் இக்காலம் போல் பணப்புழக்கம் கொள்ளாத காலம்.அதனால் மிதமான வெற்றியை அடைந்த இளமை திருவிழா இப்படம்.
அருமையான அறி்முகம், கோபால் சார், சு...சுந்தரி படத்திற்கு... மிக்க நன்றி.
http://thumbnails103.imagebam.com/26...e266041328.jpg
கோபால் சார் சொன்னது போல், நமது NTFANS அமைப்பின் இன்றைய நிகழ்ச்சி, மாலை 6 மணிக்கு சுமதி என் சுந்தரி திரைப்படம் திரையிடப் படுகிறது.
Nadigar Thilagam's films in TV Channels this week - 12.08.2013 - 17.08.2013
DEEPAM VASANTH TV 12.08.2013 2 PM
SIVANDHA MANN POLIMER TV 12.08.2013 2 PM
ALAYAMANI RAJ DIGITAL PLUS 13.08.2013 1 PM
GARUDA SOWKKIYAMA RAJ DIGITAL PLUS 13.08.2013 10 AM
PALADAI JAYA TV 13.08.2013 10 AM
IRU MALARGAL ZEE TAMIZH 13.08.2013 2.30 PM
ENGA MAMA RAJ DIGITAL PLUS 14.08.2013 1 PM
PENNIN PERUMAI J MOVIES 14.08.2013 1 PM
RATHA THILAGAM J MOVIES 14.08.2013 6 AM
KARNAN RAJ TV 15.08.2013 1.30 PM
UTHAMA PUTHIRAN MEGA TV 15.08.2013 12 NOON
THUNAI J MOVIES 16.08.2013 1 PM
PASAMALAR JAYA TV 16.08.2013 10 AM
LAKSHMI KALYANAM MEGA 24 16.08.2013 11 AM
MARUMAGAL MEGA TV 17.08.2013 12 NOON
அனைவருக்கும் இளைஞர் தின நல்வாழ்த்துக்கள்.
இன்று நடைபெற இருக்கும் 'சுமதி என் சுந்தரி' திரைவிழா சிறக்க வாழ்த்துக்கள். அருமை நண்பர் எஸ்.கோபால் அவர்களின் 'சுமதி என் சுந்தரி' பதிவுக்கு முதலில் பாராட்டுக்கள். இதைப்படித்ததும், சில ஆண்டுகளுக்கு முன் இந்த திரியில் ஆக்டிவ் ஆக இருந்த சாரதா அவர்கள் பதித்திருந்த சுமதி என் சுந்தரி ஆய்வுப்பதிவை மீள்பதிவு செய்தால் என்ன என்று தோன்றியதால் பழைய பாகங்களில் தேடிக்கொணர்ந்து பதித்துள்ளேன். உங்களனைவரோடும் நானும் படித்து இன்புறுகின்றேன். மேலும் போரடிக்காமல் விலகிக்கொண்டு...... ஓவர் டூ சாரதா.....
"சுமதி என் சுந்தரி"
(a movie... Frame by frame for fans)
இப்படி ஒரு படம் எப்போது வரும் என்று காத்திருந்த ரசிகர்களுக்கு, எந்த வித ஆர்ப்பாட்டம் இன்றி, எந்த விதமான சத்தமும் இன்றி வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட வைத்தபடம்.
1970ல் வந்த 'பாதுகாப்பு' படம் ஓடிக்கொண்டிருந்தபோதே, 1971ல் நான்கு மாதங்களுக்குள், ஆறு படங்கள் (இருதுருவம், தங்கைக்காக,அருணோதயம், குலமா குணமா, சுமதி என் சுந்தரி, பிராப்தம் என) வரிசைகட்டி வந்ததில், தனித்து நின்ற படம். மிகவும் ரம்மியமான படம் என்று ரசிகர்களாலும் மக்களாலும் போற்றப்பட்ட படம்.
சிறுவர்கள் முதல், முதியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த படம். குறிப்பாக ஏராளமான பள்ளி, மற்றும் கல்லூரி மாணவர்களை நடிகர்திலகத்தின் ரசிகர்களாக மாற்றியபடம். அந்த ஆண்டு வெளியான தமிழ்ப்படங்களிலேயே கல்லூரி மாணவ, மாணவியரின் 'முதல் சாய்ஸாக' தெரிவு செய்யப்பட்ட படம். காதலை மையமாகக்கொண்ட படமானாலும், அனைவரும் ஒன்றாக சேர்ந்து பார்க்கும் அளவுக்கு, விரசமின்றி எடுக்கப்பட்ட படம்.
'நடிகர்திலகத்தின் படங்களைக் காணச்செல்வதென்றால் கைக்குட்டையை தவறாமல் எடுத்துச்செல்ல வேண்டும்' என்று கேலி பேசிய தறுக்கர்களின் முகத்தில் கரியைப்பூசிய படம்.
கதாநாயகி கிராமத்துப் பெண்ணோ அல்லது குடும்பத்துப் பெண்ணோவாக இருந்தாலும் கூட, ஒரு காட்சியிலாவது அவளைக் கவர்ச்சியாக காட்டிவிடத் துடிக்கும் திரையுலகில், கதாநாயகியை ஒரு திரைப்பட நடிகையாக காண்பித்த போதிலும் கூட, ஆரம்பம் முதல் இறுதி வரை அவளை சேலையிலேயே காண்பித்த படம். ஒளிப்பதிவு, வண்ணம், வெளிப்புறக் காட்சிகளில் நம் கண்களையும், தேனான இசை மற்றும் பாடல்களில் நம் காதுகளையும் கொள்ளையடித்த படம்.
இளைஞர்களைக்கவரும் வண்ணம் புதுமையான முறையில் டைட்டில் அமைந்திருக்க, டைட்டில் ஓடி முடிந்ததும் 'ஆலயமாகும் மங்கை மனது' பாடலோடு கதாநாயகி சுமதி (ஜெயலலிதா) அறிமுகமாகும் முதல் காட்சியிலேயே நமக்கு அதிர்ச்சி. 'என்னது ஜெயலலிதாவுக்கு சுதர்சனுடன் கல்யாணம் முடிந்து கணவன், குழந்தை என்று குடும்பம் நடத்துகிறாரா?. அப்படீன்னா இந்தப்படத்தில் நடிகர்திலகத்துக்கு அவர் ஜோடியில்லையா?' என்று மனம் சோர்ந்துபோகும் நேரத்தில்தான், பாடிக்கொண்டே நடந்து வரும் ஜெயலலிதா, வாசற்படியில் கால் தடுக்கி கேமராவைப் பார்த்து 'ஸாரி' என்று சொல்லி விட்டு, மீண்டும் 'கட்டில் தந்த பாட்டு பாராட்டு தொட்டில் தந்த பாட்டு தாலாட்டு' என்று தொடரும்போது, 'அடடே இது ஏதோ வேறே' என்று நாம் நிமிர்ந்து உட்கார, பாடல் முடிவில் அரிக்கேன் விளக்கின் திரியை சுருக்கும்போது நம்முடைய கேமரா பின்னோக்கி நகர, அங்கு படப்பிடிப்பில் இருக்கும் கேமரா மற்றும் மொத்த யூனிட்டையும் நம் கேமரா படம் பிடிக்க, (படத்தில்) இயக்குனரான வி.கோபாலகிருஷ்ணன் "கட்" என்று சொல்லி விட்டு, நடிகை சுமதியைப்பாராட்ட, 'அடடே ஷூடிங்தான் நடந்ததா' என்று நாம் ஆசுவாசப்பட.... ("யப்பா ராஜேந்திரா (சி.வி.ஆர்) எங்க வயித்துல பாலை வார்த்தேப்பா”). கதாநாயகி அறிமுகம் முடிந்தது. அடுத்து காட்சி மாற்றம்...
தேயிலை எஸ்டேட்டில், , கொழு கொழுவென்றிருக்கும் குதிரையில் சவாரி செய்தபடி வெள்ளை பேண்ட், 'பிங்க்'கலர் ஃபுல் ஸ்லீவ், தலையில் ஸ்டைல் தொப்பி, கண்களில் குளிர்க்கண்ணாடியுடன், (யார் யாரெல்லாமோ இப்படி ஸ்டைலாக அறிமுகமாகிறார்களே, இவர் ஒரு படத்தில் கூட இப்படி ஒரு இண்ட்ரொடக்ஷன் கொடுக்க மாட்டேன்கிறாரே என்று ஏங்கி நின்ற ரசிகர்கள் கை வலிக்குமளவுக்கு, கை சிவக்குமளவுக்கு, தியேட்டர் சுவர்கள் விரிசல் விடும் அளவுக்கு, ரோட்டில் போகிறவர்களுக்குக் கூட கேட்குமளவுக்கு கைதட்டலால் குலுங்க வைக்க) அழகான, இளமையான, ஸ்லிம்மான 'நடிகர் திலகம்' அறிமுகம்.
(ராஜேந்திரா, நீதான்யா ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்த ஒரு இயக்குனர். நடிகர்திலகத்தை படத்துக்கு புக் பண்ணிய கையோடு, 'எத்தனை பாட்டில் கிளிசரின் வாங்கலாம்' என்று கணக்குப்போடும் இயக்குனர்களுக்கு மத்தியில் நீ ரொம்ப வித்தியாசமானவன். நடிகர்திலகத்தை எப்படி ஜாலியாக, ஜோவியலாக, இளமையாக காண்பிக்கலாம் என்றே உன் மனம் சிந்திக்கும். 'கலாட்டா கல்யாணத்'தில் துவங்கினாய், 'சுமதி என் சுந்தரி'யில் அதை முழுமையாக்கினாய். 'ராஜா'விலும் அதைத் தொடர்ந்ததன் மூலம் நடிகர்திலகத்தின் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானாய்).
காதல் கல்யாணம் இவற்றை கட்டோடு வெறுக்கும் கட்டை பிரம்மச்சாரி மது (நடிகர்திலகம்). தன் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளச்சொல்லி நச்சரிக்கும், எஸ்டேட் ஓனரின் தொல்லை தாங்க முடியாமல், தனக்கு ஏற்கெனவே கல்யாணம் ஆகி விட்டதாகவும் மனைவி கோபித்துக்கொண்டு பிறந்த வீட்டுக்குப் போய் விட்டதாகவும் பொய்யை சொல்லி சமாளிக்கிறார்.
ஒட்டு மொத்த நகைச்சுவைப் பட்டாளமும் (சோ தவிர) படத்தில் இறக்குமதியாகி இருந்தது. அங்கே எஸ்டேட்டில் நாகேஷ், தங்கவேலு, சச்சு... இங்கே சென்னையில் படப்பிடிப்பு யூனிட்டில் வி.கோபாலகிருஷ்ணன், தேங்காய் சீனிவாசன், மாலி, டைப்பிஸ்ட் கோபு, வெண்ணிற ஆடை மூர்த்தி என படம் களை கட்டியிருந்தது.
"சுமதி என் சுந்தரி" (PART - 2)
பிரைவஸி என்ற சிறையில் இருந்து வெளியே வந்து மக்களோடு மக்களாக பழக விரும்பும் நடிகை சுமதி, கொத்தவால் சாவடிக்கு வந்து பேரம் பேசி காய்கறி வாங்க, அதிசயத்தைக்கண்ட மக்கள் கூட்டம் கூடிவிட அங்கிருந்து மீட்டு அழைத்துச்செல்லப்படுகிறார். (பேரம் பேசி வாங்கும்போது ஜெயலலிதா வின் முகத்தில் ஒரு குழந்தையின் குதூகலம்). வெளிப்புறப் படப்பிடிப்புக்கு ரயிலில் முதல் வகுப்பு பெட்டியில் (கதாநாயகியாயிற்றே) தன் 'டச்சப்' பெண்ணுடன் பயணம் செய்யும்போது, தன் யூனிட்டில் இருக்கும் சக ஊழியர்கள், மூன்றாம் வகுப்பு பெட்டியில் (இரண்டாம் வகுப்பு பெட்டி இப்போது ஒழிக்கப் பட்டதால், பழைய முன்றாம் வகுப்பு இப்போது இரண்டாம் வகுப்பு ஆகிவிட்டது) ஜாலியாக ஆடிப் பாடிக்கொண்டு வருவதை அறிந்து, அங்கே போய் அவர்களோடும் சந்தோஷமாக பயணம் செய்ய விரும்பி, தன் தோழியிடம் சொல்கிறாள். இதனிடையில், கூட வந்த பெண் தூங்கிக்கொண்டு இருக்கும் சமயம், ஏதோ காரணத்துக்காக (சிக்னல் கிடைக்காமல்..??) ரயில் நின்றுகொண்டு இருக்க தன் பெட்டியில் இருந்து மற்றவர்கள் இருக்கும் பெட்டிக்குச் செல்ல சுமதி (ஜெ) இறங்கி நடக்க முறபடும்போது சட்டென வண்டி புறப்பட, அவர்கள் இருக்கும் இடத்துக்கும் போக முடியாமல், தான் இருந்த பெட்டிக்கும் திரும்ப முடியாமல் திகைக்க... ரயில் போயே விடுகிறது. நள்ளிரவில் தன்னந்தனியாக நடந்து செல்லும் சுமதியின் கண்ணில் தூரத்தில் ஒரு வீடு தெரிய அதை நோக்கி நடந்து அந்த வீட்டுக்குள் நுழைய, அதுதான் மது தனியாக தங்கியிருக்கும் அழகான, வித்தியாசமான சின்னஞ்சிறிய வீடு.
பெண்கள் வாடையே பிடிக்காத மதுவிடம், தன் நிலைமையை சொல்லி கெஞ்சி அங்கு இரவு மட்டும் தங்க அனுமதி பெற்று, தங்கும் நடிகை சுமதி, பேச்சு வாக்கில் மதுவுக்கு சினிமா என்பதே பிடிக்காது என்பதைத் தெரிந்துகொண்டு, தான் ஒரு சாதாரணப்பெண்ணாக காண்பித்துக்கொள்கிறார். அதனால்தான், மது தன் பெயரைக்கேட்டபோதுகூட சுமதி என்று சொல்ல வாயெடுத்தவர் 'சு' வரையில் வந்துவிட்டு சட்டென்று 'சுந்தரி' என்று மற்றிச்சொல்வார். (அதனால்தான் பிற்பாடு சிலமுறை மது அவரை 'சு..சுந்தரி' என்று அழைப்பார்).
பால்காரன் மூலமாக மதுவின் மனைவி திரும்பி வந்துவிட்டதாக தங்கவேலு நினைத்து சுந்தரியை தன் மருமகளாகவே நினைத்து கொண்டாட, மது தர்ம சங்கடத்தில் சிக்கி தவிக்க, பாலம் உடைந்து ரயில்பாதை சரியாகாததால் சுமதி (சுந்தரி) மேலும் சில நாட்கள் மது வீட்டிலேயே தங்க, பரபரப்பான நகர சூழ்நிலையில் உழன்ற சுமதிக்கு அமைதியான அந்த எஸ்டேட் சூழலும், மதுவின் அன்பும் பிடித்துப்போய் அங்கேயே தங்கி விட முடிவு செய்ய, இதனிடையில் மதுவுக்கும், சுமதிக்கும் காதல் அரும்ப, தங்கவேலுவின் மகள் சச்சுவின் முறைமாமன் நாகேஷுக்கு, சுந்தரிதான் நடிகை சுமதி என்று ஒரு (மேஜர் சந்திரகாந்த்) பேப்பர் விளம்பரம் மூலம் தெரிந்துபோக, அதை அவர் சுந்தரியிடமே கேட்டு ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளும்போது, தனக்கு நடிகை வாழ்க்கை பிடிக்கவில்லையென்றும், மதுவின் காதலும் அந்த ரம்மியமான சூழ்நிலையும் பிடித்துப்போய் விட்டதாகவும், அதிலிருந்து தன்னை பிரித்து விட வேண்டாமென்றும் நாகேஷிடம் கெஞ்ச, அவரும் சுமதிக்கு உறுதியளிக்க.... அப்பாடா நிம்மதியென்று சுமதி இருக்கும்போது, அதிர்ச்சி தரும் விதமாக, அவரை வைத்து படம் இயக்கிக்கொண்டிருக்கும் டைரக்டர் வி.கோபாலகிருஷ்ணன், தன் ஒன்றுவிட்ட அண்ணன் தங்கவேலுவைப் பார்க்க அங்கே வர, மீண்டும் சுமதிக்கு குழப்பம் ஆரம்பம்.
ஏற்கெனவே தன் படக் கதாநாயகியைக் காணாமல் படப்பிடிப்பு நின்று போயிருக்கும் நிலையில், அவரைபோலவே ஒரு பெண் தன் அண்ணன் வீட்டில் எப்படி என்று யோசித்து நாகேஷிடம் விவரத்தைக்கேட்க, சுதாரித்துக்கொண்ட நாகேஷ், 'ஏற்கெனவே சுந்தரியைப் பார்த்து நடிகை சுமதி மாதிரி இருக்கிறாள் என்று சொன்னதற்காக ஒருத்தன் மதுவிடம் செருப்படி வாங்கிக்கொண்டு போனான்' என்று சொல்லி மிரட்டி வைக்க, வி.கோ. பயந்து போகிறார். (ஒரு கட்டத்தில் சுந்தரியைப்பார்த்து, 'இவரைப்பார்த்தால் யார் மாதிரி இருக்கு தெரியுமா?' என்று மது (சிவாஜி) முன்னால் வி.கோ. குட்டை உடைக்கப்போகும் சமயம், நாகேஷ் தன் காலில் இருந்து செருப்பை கழற்றி தட்டிக்காட்ட, பயந்துபோன வி.கோ. 'அதாவது இவங்க மகாலட்சுமி மாதிரி இருக்காங்க என்று சொல்ல வந்தேன்' என்று சமாளிக்கும் இடம், அரங்கில் பெரிய சிரிப்பலையை வரவழைக்கும்).
ஆனாலும் தன் முயற்சியை விடாத வி.கோ., நடிகை சுமதி இங்கே இருப்பதாக தன் படப்பிடிப்பு குழுவினருக்கு தகவல் கொடுக்க, தேங்காய் தலைமையில் மொத்த யூனிட்டும் எஸ்டேட்டில் ஆஜர். சுமதியை தூக்கி வருவதற்காக ஒரு அடியாளை நியமிக்க, அவர்கள் தவறுதலாக மதுவீட்டில் இருந்து வெளியே வரும் சச்சுவை கோணியில் கட்டி தூக்கிப்போகும் சமயம், குதிரையில் வரும் மது அந்த கடத்தலைப்பார்த்து அவர்களைத்தொடர்ந்து சென்று சண்டை போட்டு காப்பாற்றி, கடத்தல்காரர்களைப்பிடித்து விசாரிக்க, அவரகள் படப்பிடிப்பு கம்பெனியின் ஆட்களிடம் கூட்டிச்செல்ல, அவர்களிடம் மது விவரம் கேட்க, அவர்கள் சுமதியின் போட்டோ ஆல்பத்தைக்காட்டி விவரத்தைச்சொல்ல..... மதுவின் தலையில் பேரிடி. (Contd..Part-3)
"சுமதி என் சுந்தரி" (PART – 3)
'இத்தனை நாளும் தன் வீட்டில் தன் காதலி சுந்தரியாக தங்கியிருந்தவள் நடிகை சுமதியா?' என்று அதிர்ந்து போகும் மது, அவர்களிடம் 'நீங்க சொலறது மட்டும் உண்மையா இருந்தால் நானே அவளை உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று உறுதியளித்து அவர்கள் காட்டிய ஆல்பத்துடன் வீட்டிற்குப்போகும் மது, அங்கே எந்த கவலையுமில்லாமல், தன் புதிய வாழ்க்கையை நினைத்து ஆனந்தமாக பாடிக்கொண்டிருக்கும் சுந்தரியிடம், ஆல்பத்தக் காட்டி விவரம் கேட்க, அதிர்ச்சியின் உச்சிக்குப்போகும் சுமதி, வேறு வழியின்றி அதை ஒப்புக் கொண்டாலும், தன்னுடைய பழைய வாழ்க்கைக்கு திரும்பிப்போக கொஞ்சமும் விருப்பமில்லை என்றும் மதுவை மணந்துகொண்டு வாழப்போகும் இந்த நிம்மதியான வாழ்க்கையைப் பறித்து விட வேண்டாமென்றும் கெஞ்சிக்கதறி மன்றாட, அதற்கு கொஞ்சமும் இரங்காத மது அவளை ஜீப்பில் ஏற்றி ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று யூனிட்டாரிடம் ஒப்படைக்கப்போகும் சமயம், தன் பிடிவாதத்தை விடும்படி தங்கவேலுவும் நாகேஷும் மதுவிடம் கெஞ்சியும் விடாப்பிடியாக, சுமதியை ரயிலில் ஏற்றிவிட்டு ரயில் நகர, சோகம் கப்பிய முகத்துடன் தண்டவாளத்தின் மீது மது நடந்துபோக, அதே நேரம் மதுவுடன் வாழ்ந்தே தீருவது என்ற தீர்மானத்துடன், ரயிலில் இருந்து குதிக்கும் சுமதி (சுந்தரி) "மதூ...." என்று சத்தமிட்டு கத்த, திடுக்கிட்டுப்பார்க்கும் மது, தண்டவாளத்தின் மீது ஓடிவரும் சுமதியப் பார்த்து, சந்தோஷ அதிர்ச்சியில் அவரை நோக்கி ஓடிவர... படம் முழுக்க ரீரிக்கார்டிங்கில் நம்மை மயக்கிய அந்த HUMMING இசை மயக்கத்தை மெல்லிசை மன்னர் பரவ விட, கொஞ்சம் கொஞ்சமாக இருவரும் ஒருவரை நோக்கி ஒருவர் ஓடிவரும் வேகம் அதிகரிக்க, அதே வேகத்தில், தன் சுந்தரியாகிவிட்ட சுமதியை மது தூக்க, அந்த காட்சி அப்படியே ஸ்டில்லாக உறைந்து போக.... திரையில் 'வணக்கம்'.
வரிசையாக நடிகர்திலகத்தின் சீரியஸான படங்களைப்பார்த்து வந்த ரசிகர்களுக்கு, ஒரு பெரிய ரிலாக்ஸாக, ஒரு திருப்பமாக, ரசிகர்களின் ஆவலைப்புர்த்தி செய்யும் வண்ணமாக வந்த படம்தான் இந்த 'சுமதி என் சுந்தரி'. இப்படத்தின் சிறப்பம்சங்களை துவக்கத்திலேயே பட்டியலிட்டு விட்டதால் அதையே திரும்ப சொல்ல வேண்டியதில்லை. இதே நாளில் (1971 தமிழ்ப்புத்தாண்டு) வெளியான 'பிராப்தம்' (நடிகையர் திலகத்தின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்ததால்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தபோது, இப்படமும் சேர்ந்து வெளியானதால் இப்படம் (சு.எ.சு) தேறாது என்று, படம் வெளியாகும் முன்பு ரசிகர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் படம் வந்ததும் நிலைமை தலைகீழானது.
a) அது கருப்பு வெள்ளையில், இதுவோ வண்ணத்தில்
b) அது முழுக்க சோகம் மற்றும் செண்டிமென்ட், இதுவோ முழுக்க முழுக்க நகைச்சுவை என்று மட்டும் சொன்னால் போதாது, அத்துடன், ரம்மியம், அழகு, மனதைக்கவரும் எல்லா அம்சங்களும்.
c) அது ரொம்ப எதிர்பார்க்கப்பட்டு சிறிது ஏமாற்றிய படம். இதுவோ எந்த எதிர்பார்ப்பும் இன்றி இன்ப அதிர்ச்சியளித்த படம்.
d) அது, நடுத்தர வயது ரசிகர்கள் கூட தயங்கி தயங்கி சென்று பார்த்த படம். இதுவோ 'ஆறிலிருந்து அறுபது வரை'.
(நடிகர்திலகத்தின் ஒரு படத்தை உயர்த்தி சொல்வதற்காக இன்னொன்றை குறைத்து சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை நிலை அதுதான். தன் அபிமான நடிகரின் படத்தைப்பார்த்து விட்டு, அது நன்றாக இல்லையென்றால், நன்றாக இல்லையென்று தயங்காமல் சொல்பவர்கள் நடிகர்திலகத்தின் ரசிகர்/ரசிகைகள் என்பது ஊரறிந்த உணமை).
மெல்லிசை மன்னரின் மனதைக்கவரும் இசையில் பாடல்கள் அனைத்தும் முத்துக்கள், வைரங்கள், நவரத்தினங்கள். படத்தின் முதல்காட்சியாக அமைந்து நம்மை ஏமாற்றும் "ஆலயமாகும் மங்கை மனது" பாடல் பின்னர் சிவாஜி வீட்டில் ஜெயலலிதா தங்கியிருக்கும்போது மீண்டும் முழுமையாகப் பாடுவார். பி.சுசீலாவின் குரலில் அழகான அமைதியான பாடல். சிதார், புல்லாங்குழலுடன் மூன்றாவது இடையிசையில் 'ஷெனாய்' கொஞ்சும்.
படப்பிடிப்பு குழுவினர் ரயிலில் போகும்போது பாடும் "எல்லோருக்கும் காலம் வரும், சம்பாதிக்கும் நேரம் வரும்.. வருவது என்ன வழியோ" ஏ.எல்.ராகவன், எல்.ஆர்.ஈஸ்வரி மற்றும் குழுவினர் பாடியிருப்பார்கள். பின்னணியில் ரயில் ஓடும் சத்தம் (மெல்லிசை மன்னருக்கு இதெல்லாம் அத்துப்படி)
எஸ்டேட் தொழிலாளர் விழாவில், டி.எம்.எஸ்., ஈஸ்வரி பாடும் "ஏ புள்ளே சஜ்ஜாயி" பாடலில் நடிகர்திலகம், ஜெயலலிதா, நாகேஷ், சச்சு ஆகியோர் ஆடுவார்கள். தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்து நடப்பது போல நடிகர் திலகம் காட்டும் அபிநயம் கைதட்டல் பெறும். (இப்பாடல் முடிந்து காட்டு வழியே வீட்டுக்கு நடந்து போகும்போது, ஏதோ சத்தம் கேட்டு பயந்து சுமதி, மதுவை அணைத்துக்கொள்ள... நிலா வெளிச்சத்தில் சுமதி கையிலிருந்த பலூன்கள் காற்றில் பறந்து போக அப்போது மெல்லிசை மன்னர் கொடுக்கும் அந்த HUMMING)
(Cotd...Part-4)
"சுமதி என் சுந்தரி" (part – 4)
எஸ்டேட்டை சுற்றிப்பர்ப்பததற்கு மதுவுடன் ஜீப்பில் வரும் சுமதி, இயற்கை சூழலில் கவரப்பட்டு, ஜீப்பை விட்டு இறங்கி தோட்டத்துக்குள் சுற்றிபாடும் "ஓராயிரம் பாவனை காட்டினாள்" பாடலில் துவக்கத்தில் வரும் humming சுசீலாவுக்கு ஒரு சின்ன சவால். ஊதித்த்ள்ளி விடுவார். ஆரஞ்ச வண்ன அரைக்கை சட்டை, அதே வண்ண பேண்ட்டில் நடிகர் திலகம், கையில் குச்சியுடன் அட்டகாச நடை நடந்து வருவார். இந்தப்படத்தில் அவருக்கு என்ன அருமையான டிரஸ் சென்ஸ். காஸ்ட்யூமருக்கும் இயக்குனருக்கும் பாராட்டுக்கள். (இதற்கு முன் ஒரு பாவி கூட எங்கள் நடிகர்திலகத்தை இவ்வளவு அழகாக காட்டியதில்லை).
வெள்ளை பேண்ட், வெள்ளை ஆஃப் ஸ்லாக்கில் நடிகர்திலகம், ஆரஞ்சு வண்ண சேலையில் கலைச்செல்வி, இயற்கை எழில் சிந்தும் ஏரிக்கரையில் யாருமில்லாத்தனிமை பாடலுக்கு என்ன குறை?. "ஒருதரம் ஒரேதரம்... உதவி செய்தால் என்ன பாவம், இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்" பல டூய்ட் பாடல் சவால்களை அனாயாசமாக சந்தித்த டி.எம்.எஸ்., சுசீலா ஜோடியின் இன்னொரு தேன் சிந்தும் பாடல். இடையிசையில் வேகமான ஃப்ளூட், திடீரென வேகம் குறைந்த கிடாராக மாறும் புதுமை, ஒரு கட்டத்தில் நடிகர்திலகம், கிரிக்கெட் பௌலர் போல பாவனை செய்யும் அழகு. சொலறதுன்னா சொல்லிக்கிட்டே போகலாம்.
கிளைமாக்ஸில் (மதுவுக்கு உண்மை தெரிய சில நிமிடங்களுக்கு முன்) சுமதி பாடியாடும் இண்டோர் பாட்டு "கல்யானச்சந்தையிலே ஒரு பெண் பார்க்கும் நேரமிது" சுசீலாவின் இன்னொரு மாஸ்டர் பீஸ்.
எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் இசை வரிசையில், எம்.ஜி.ஆருக்காக பாடிய எத்தனையோ பாடல்கள் இருப்பினும் அடிமைப்பெண்ணில் வரும் "ஆயிரம் நிலவே வா"வுக்கு தனிச்சிறப்பு இருப்பதுபோல (காரணம், அது எம்.ஜி.ஆருக்காக அவர் பாடிய முதல் பாடல்), நடிகர்திலகத்துக்கு அவர் பாடிய முதல் பாடல் என்ற பெருமை பெற்றது "பொட்டு வைத்த முகமோ.. கட்டி வைத்த குழலோ" என்ற சூப்பரோ சூப்பர் பாடல். 1971 'டாப் டென்' பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றைக்கும் எந்த ஒரு வி.ஐ.பி.தேண் கிண்ணம் வழங்கினாலும், இப்பாடலின் அழகைக்குறிப்பிட்டு, அதை ஒளிபரப்பாதவர்கள் குறைவு. அந்த அளவுக்கு அழகான மெட்டு, அழகான குரல், அழகான பாடல் வரிகள், அழகான படப்பிடிப்பு, அழகான காட்சியமைப்பு, அழகான, இளைமையான நடிகர்திலகம் மற்றும் அழகான கலைச்செல்வி.... மொத்தத்தில் அழகு.
இப்பாடலில் நடிகர்திலகம் அணிந்து வரும் ஷர்ட் டிசைன் அப்போது ரொம்ப ஃபேமஸ். அன்றைய இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் அந்த டிசைனை தேடியலைந்து வாங்கி அணிந்து மகிழ்ந்தனர். அந்த டிசைன் சட்டையை அணிந்துகொண்டு சுமதி என் சுந்தரி படத்துக்குப்போக, அங்கிருப்பவர்கள் அதைச்சுட்டிக்காட்டிப் பேசுவதைக் கண்டு ஜென்ம சாபல்யம் அடைந்தது போன்ற உணர்வு இளைய ரசிகர்களை ஆட்கொண்டது.
பாடல்களில் மட்டுமல்லாது, ரீரிக்கார்டிங்கில் படம் முழுக்க மெல்லிசை மன்னர் அளித்திருக்கும் அந்த பெண்கள் கோரஸ், என்ன ஒரு அழகு, என்ன ஒரு அருமை, படத்தின் இளமைக்கேற்ற இளமை இசை. மொத்தத்தில் படத்தின் இன்னொரு பெரிய பலம் மெல்லிசை மாமன்னர் அண்ணன் எம்.எஸ்.வி. அவர்கள்.
தம்புவின் கண்ணில் ஒற்றிக்கொள்ளும்படியான ஒளிப்பதிவு. ('தரையோடு வானம் விளையாடும் நேரம்' என்ற பாடல் வரிகளுக்கான அந்த லொக்கேஷனை எங்கே கண்டு பிடித்தார்கள்..!)
இயக்குனர் சி.வி.ராஜேந்திரனைப்பற்றி சொல்வதென்றால், நண்பர் ராகவேந்திரன் குறிப்பிட்டது போல, அவர் 'சிவாஜி ரசிகர்களின் டார்லிங்'. அந்த ஒரு வரியே போதும் அது ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும்.
உண்மையில் இந்தக்கட்டுரையை முடிக்க எனக்கு மனம் வரவில்லை. எழுதிக்கொண்டே இருக்கணும் போல இருக்கிறது. காரணம், பார்த்துக்கொண்டே இருக்கத்தூண்டும் படம் இது. இப்படத்தின் மேட்னி காட்சி பார்த்து விட்டு வெளியே வந்து, அப்படியே மாலைக்காட்சிக்கான கியூவில் போய் நின்றவர்கள் பலர்.
'சுமதி என் சுந்தரி' படம் பற்றிய என்னுடைய கருத்துக்களைப் படித்த அன்பு இதயங்களுக்கு என் நன்றி.
மிக்க நன்றி சாரதா மேடம் அவர்களே.
அன்பு நண்பர்களே, சாரதா அவர்களின் இந்த ஆய்வுக்கட்டுரைக்கு நமது வரலாற்று விற்பன்னர் முரளி சீனிவாஸ் சார் அவர்களின் பின்னூட்டமும் மிக அருமையாக உள்ளது. எனவே அதையும் மீள்பதிவு செய்துள்ளேன்.
ஓவர் டூ நமது 'கிரேட்' முரளி சார்........
எப்போதுமே (நான் ஏற்கனவே சொன்ன மாதிரி) சாரதா ஒரு படத்தைப்பற்றி எழுதி விட்டார் என்றால் அது முழுமையாக இருக்கும். இந்த சுமதி என் சுந்தரி ஆய்வும் அப்படியே. படம் பார்க்காத ஆட்களுக்கே பார்த்த உணர்வு ஏற்படுகின்றது என்றால் பார்த்தவர்களுக்கு இது ஒரு பரவசமான அனுபவம்.
இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான படம் என்பது 100% சரி. குறிப்பாக இளைஞர்கள் இந்த படத்தை மிகவும் ரசித்தார்கள். அப்போது கல்லூரி மாணவனாக இருந்த என் கஸின் இந்த படத்தை எத்தனை முறை பார்த்தான் என்பது அவனுக்கே தெரியாது.( சாரதா, அப்போது நான் இளைஞன் இல்லை. 6th Std படித்து கொண்டிருந்த சிறுவன்). நானும் இந்த படத்தை ரசித்து பார்த்திருக்கிறேன். என் நினைவிற்கு வரும் ஒரு சில விஷயங்கள்.
இயல்பான நகைச்சுவையான வசனங்கள் இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட். நடிகர் திலகமும் ஜெயலலிதாவும் பேசி கொள்ளும் காட்சி எல்லாமே அதற்கு உதாரணம். JJவின் குடும்பத்தை பற்றி விசாரிக்கும் NT அடிக்கும் கமெண்ட் ஜாலியாக இருக்கும்.[ ஆர்வத்தோடு "உங்க அப்பாவிற்கு ரெண்டு பொண்டாட்டி! சொல்லு சொல்லு!", " உனக்கென்னமா, அம்மா இல்லை, சித்தி கொடுமை, ஓடி வந்துடே! இங்கே நல்ல இடம், சாப்பாடு கிடைக்குதா, வசதியா தங்கிடே" , குட் நைட் சொன்ன பிறகு தூக்கம் வராமல் மீண்டும் கதை கேட்க, JJ தன் அப்பாவின் மூன்றாவது கல்யாணம் பற்றி வாய் திறக்க " சத்தியமா இப்போ குட் நைட்" என்று இழுத்து போர்த்திக்கொண்டு படுப்பது] தன்னை பேச விடாமல் தடுக்கும் தங்கவேலுவிடம் முகத்தை அஷ்ட கோணலாக வைத்துக்கொண்டு முனுமுனுப்பது, எல்லோர் முன்னிலும் தன்னுடன் உரிமை கொண்டாடும் JJ மீது வரும் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் முறைப்பது, பிறகு மெல்ல மெல்ல அந்த மனதில் அரும்பும் விருப்பம், காதலை அழகாக வெளியிடுவது என்று நடிகர் திலகம் பின்னியிருப்பார். அனைத்து காமெடி artist-கள் இருந்தாலும் எல்லோருக்கும் நல்ல வாய்ப்பு. தங்கவேலுவின் casual -ஆன காமெடி("அவனுக்கு சந்தனத்தை பூசாதே! சாம்பாரை பூசு" ), சச்சு நாகேசிடம் "உன்னை எவ கல்யாணம் பண்ணிக்குவா?" என்று கோபப்பட உடன் நாகேஷ் " நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான்" என்று கொடுக்கும் counter . சச்சு JJ விடம் "சுந்தரத்தை பார்த்ததற்கு அப்புறமும் அவர் குழந்தைகளை பார்க்கணும் நினைக்கிறே பாரு" என்பது எல்லாமே ரசிக்க கூடியவைகளாக இருக்கும்.
தேங்காய் இந்த படத்திற்கு பிறகு ஒரு ஆறரை ஆண்டு காலம் NT படங்களில் நடிக்கவில்லை.(1977-ல் அண்ணன் ஒரு கோயில்-ல் தான் ஒரு கௌரவ தோற்றத்தில் மீண்டும் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்). அவர் பங்குக்கு " என்னய்யா பெரிய writer! ஒரு கதை சொன்னான். நைட் ஷோ காசினோ போறேன்,இதே கதை அங்கே இங்கிலீஷ் படமா ஓடிட்டிருக்கு" , " முழிச்சிடிரிக்க வேண்டியவ தூங்கிட்டா" என்று JJ assistantai வைவது என்று அவர் முத்திரைகள் இருக்கும்.
பாடல்கள் மற்றும் பாடல் காட்சிகள் பற்றி நிறைய சொல்லலாம். அதற்கு முன்னால் ஒரு தகவல். 1971 ஜனவரி மாத இறுதியில் தன் பங்கை முடித்துவிட்டு நடிகர் திலகம் பொது தேர்தல் பிரசாரம் செய்ய புறப்பட்டு போய்விட்டார். மீண்டும் தேர்தல் நாளன்றுதான் சென்னை வந்தார். சூறாவளி சுற்றுப்பிரயாணம் அவர் உடல் நலத்தை பாதித்தது. பொன்னுக்கு வீங்கி என்று சொல்லப்படும் மம்ஸ் வந்தது. அப்போது ஒரு பாடல் மட்டும் படமாக்கப்பட வேண்டும். அது ஒரு தரம் ஒரே தரம் பாடல். இதற்கு பின்னாலும் ஒரு கதை. இந்த பாடலை எழுதியவர் வாலி.இது கலாட்டா கல்யாணம் படத்திற்க்காக எழுதப்பட்ட பாடல். அந்த படத்தில் சேர்க்க முடியவில்லை. எனவே இந்த படத்தில் படமாக்கப்பட்டு இணைக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் மட்டும் நடிகர் திலகத்தின் கிருதா சற்று நீளமாக இருக்கும். பாடலை பற்றி சாரதா நிறைய சொல்லிவிட்டார். எனக்கு இந்த பாடலில் ஆரம்ப வரிகளை சுசீலா பாடியிருக்கும் விதம் ரொம்ப பிடிக்கும். "இருவருக்கும் மு--தல் மயக்கம் இடம் கொடுத்தால் அது எது வரைக்கும்" என்ற வரிகளில் தேன் வந்து பாய்வது போல இருக்கும்.
அதே போல "ஓராயிரம் நாடகம் ஆடினாள்" பாடல். முதலில் வரும் ஹம்மிங் தேன் கலந்த பால். இந்த பாடலின் ஆரம்பத்தில் patch up shot வரும். அதாவது NT-யும் JJ-வும் ஜீப்பில் வருவது போல காட்சி. Back Projection-ல் எடுத்திருப்பார்கள். அதாவது செட்டில் பின்னால் screenil ரோடு தெரிய NT ஜீப் ஓட்டுவது எடுக்கப்பட்டிருக்கும். தேர்தலுக்கு பின் எடுக்கப்பட்ட இந்த patch up shot லும் நீளம் கூடிய கிருதாவை பார்க்கலாம். பாடலை மூணாறு தேயிலை தோட்டத்தில் எடுத்திருப்பார்கள். சரணத்தின் போது JJ தேயிலை செடிகளுக்கு நடுவே நின்று பாட கீழே தெரியும் ஹேர் -பின் பெண்டில் ஒரு பஸ் மற்றும் லாரி வளைந்து திரும்பும். இதை எல்லாம் தெளிவாக ஒரே Fram - il capture செய்திருப்பார் ஒளிப்பதிவாளர் தம்பு.(அண்மையில் மூணாறு சென்றிருந்த போது அந்த ஹேர் பின் பெண்ட் எங்கேயாவது தென்படுகிறதா என்று நாங்கள் நண்பர்கள் பார்த்து கொண்டே சென்றோம்). மற்ற பாடல்களை பற்றி சாரதா சொல்லி விட்டார்.
சாரதா சொன்ன அந்த Background ஹம்மிங் பற்றி குறிப்பிட வேண்டும். படம் முழுக்க வரும் அந்த ஹம்மிங் அவ்வளவு சுகமானது. அன்று முதல் இன்று வரை அதை கேட்கும் போதெல்லாம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு சுகானுபவம் மனதில் அலையடிக்கும்
இதை எல்லாம் சொல்லும்போது முதல் முதலாக இந்த படத்தை பார்த்தது நினைவிற்கு வருகிறது. படம் வெளியானது 14.04.1971, புதன்கிழமை. நான் 5வது நாள் ஞாயிற்றுக்கிழமை evening ஷோ மதுரை அலங்காரில் பார்த்தேன். மனதில் இருந்த ஒரு சந்தேகத்திற்கு அன்று விடை கிடைத்தது. அப்போதெல்லாம் படத்திற்கு முன்னால் Indian News Review போடுவார்கள். அன்றைக்கு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்தும் இந்திராகாந்தி அம்மையார் பதவி ஏற்பதும் காட்டப்பட்டது. அரங்கம் அமைதியாக இருந்தது. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை காண்பித்து கொண்டே வந்த கேமரா கடைசியாக தமிழக தென்கோடி தொகுதியின் உறுப்பினரை காட்டிய போது காதை செவிடாக்கும் கைதட்டல். வாழ்க முழக்கங்கள். எத்தனை இடர்பாடுகள் தோல்விகள் நேரிட்டாலும் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் பெருந்தலைவரை விட்டு விலக மாட்டார்கள் என்பது அப்போது புரிந்தது.
(Thank you verymuch MURALI sir)
Thank you for rare photos Ragavendran Sir
டியர் கோபால் சார்,
சுமதி என் சுந்தரி - மீள் பதிவு அருமை.
Thanks for making me watch the movie through you writing Gopal Sir,
Special Mention of thanks to Karthik Sir for reproducing Murali sir's & Saradha's Mam Write ups
Murali sir, Gopal sir and Saradha Mam's article gives a 3 Dimension approach to classic Sumathi en Sundhari
டியர் கார்த்திக் சார்,
சுமதி என் சுந்தரி - சாரதா மேடம், மற்றும் முரளி சாரின் பதிவை மீண்டும் பதிவிட்டுள்ள தங்களுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டது மாதிரி சாரதா மேடம் மற்றும் முரளி சாரின் பதிவுகள் சுமதி என் சுந்தரி திரைப்படத்தின் முழுமையான ஒரு விமர்சனப் பதிவாக அமைந்துள்ளது. திரும்பத் திரும்பப் படித்தாலும், ஒரு திரைக்கதையைப் படிக்கின்ற சுவாரசியம். மீள் பதிவுகளுக்கு மீண்டும் நன்றி.
Great Karthik Sir. We are all missing Saradha Madam very badly and your reproduction of the past brought glory and light to our thread again. Special Thanks to you and you have done my day. I wish Murali becomes active again as all the past hubbers were lucky to get his attention and feedback.
Thanks to karthik the great, saradha madam and murali.
Ragavendar Sir, Wishing you a great time as you will be yayadhi today.
A RECAP........2012 ......
https://www.youtube.com/watch?v=KmKHgPwJERs
2013 - AUGUST 15th - PAASAMALAR
https://www.youtube.com/watch?v=v0iZto946EQ
கோபால் சார்
தங்களையும் நமது மற்ற நண்பர்களையும் நாங்கள் நிச்சயமாக உணர்வுடன் துணைகொண்டிருப்போம். தலைவர் தான் அநைவரையும் பிணைத்து விடுகிறாரே...
என்றைக்கும் நிரந்தரமாக வசூலில் சாதனை செய்து வரும் வசந்த மாளிகை திரைக்காவியம் இந்த வாரமும் தவற வில்லை. கடந்த இரு நாட்களாக சிறப்பான வெற்றியோடும் நல்ல வசூலோடும் சென்னை கிருஷ்ணவேணி திரையரங்கில் பீடு நடை போட்டு வருகிறது. நவீன மயமாக்கினாலும் இல்லாவிட்டாலும் எக்காலத்திலும் நடிகர் திலகத்தின் படங்கள் வசூலை வாரிக்கொடுப்பதில் தவறுவதேயில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்.
தகவலுக்கு நன்றி ராமஜெயம் சார்
இன்றைய மாலைப் பொழுது மிக இனிமையாக கழிந்தது. நடிகர் திலகத்தின் இளமை ததும்பும் காதல் காவியம் சுமதி என் சுந்தரி பார்த்த அனுபவம் அருமையான பல பழைய கால நினைவுகளை அசை போட விட்டது. நமது மூத்த ரசிக வேந்தர் அவர்களே தன இளமை கால நினைவுகளை [இந்த படம் வெளியான் அச்சமயத்தில்] பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொண்டார் என்றால் அவர் எந்தளவிற்கு இந்தப் படத்தோடு ஒன்றியிருப்பார் என புரிந்தது.
Highlight of the function என்றால் அது நமது ஹப்பர் நண்பர் திரு. காவேரி கண்ணன் அவர்களை சந்தித்ததுதான். இந்த இனிய மாலைப் பொழுதிற்கு மீண்டும் நன்றி.
அன்புடன்
சுமதி என் சுந்தரி பற்றிய என்னுடைய பழைய பதிவை தேடி எடுத்து மீள் பதிவு செய்த கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. அதை விட மகிழ்ச்சியானது சாரதா அவர்களின் படத்தைப் பற்றிய பதிவுகளை மீண்டும் படிக்க வாய்ப்பு கிட்டியது. நன்றி கார்த்திக்!
Google Transliteration from english to Tamil is Malfunctioning . I am trying to downlod Azhagi software. Once this is done,I will be back with you.
நெய்வேலி வாசுதேவன் சார் அவர்களுக்கும் திரு முரளி சார் அவர்களுக்கும் என் உடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகள் உரித்துஆகுக. என் உடைய பள்ளி கல்லூரி நண்பர் ஒருவரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கழித்து தேடி கண்டுபிடித்து கொடுப்பதற்கு வாசு சார் செய்த பணிகளை என்ன என்று சொல்வது என்றே தெரியவில்லை . எந்தவித பலனும் இல்லாத ஒரு காரியத்தை நடிகர்திலகத்தின் ரசிகர் மற்றும் முரளி சார் அவர்களின் நண்பர்(எல்லா சிவாஜி ரசிகர்களுக்கும் நான் நண்பன் தான் ) என்ற ஒரே காரணத்திற்காக செய்து கொடுத்த வாசு சார் அவர்களை எத்தனை முறை பாராட்டினாலும் தகும்
என்றும் அன்புடன் கிருஷ்ணா
நேற்று ராத்திரி யம்மா தூக்கம் போச்சுதெ யம்மா
சுமதி என் சுந்தரி பார்த்த விளைவு 1971 நினைவுகள் நெஞ்சை ரீங்காரம் செய்து தூக்கம் இல்லாமல் மீண்டும் ஒரு முறை நடிகர் திலகம் பிறந்து அதே இளமையுடன் அதே ஜோடியுடன் இணைந்து டார்லிங் டைரக்டர் direction கலக்க மாட்டாரா என்று
Soon.....
I am going to start 1972 Special. Reviews on all Films of 1972 from Raja to Needhi in the order of their releases.
Raja
Gnana Oli
Pattikkada Pattanama
Dharmam Enge
Thava pudhalvan
Vasantha Maligai
Needhi.
இப்பவே ஒரு துண்டு..இல்லை படுதாவையே விரித்து வைக்கிறேன். வாசித்து ரசிப்பதற்கு. ரசித்து வாசிப்பதற்கு.
The Pair that I would have loved to see more often but not happened(1966-1976 Period)
1)Sivaji-Kanchana(Only one movie as Pair)-My favourite Scene Oru Nalile(Atleast one song possible in Avan oru Charithram in Manjula's imagination)
2)Sivaji-Bharathi(Again only one)-Santhana kudathukkulle-I would have repeated the pair in Raja,Needhi,En magan and Vaira Nenjam
3)Sivaji-Vijaya Nirmala(Only One)-Amma Kannu- What a chemistry and why not a repeat!!??
4)Sivaji-Shardha-Not exploited enough after Kungkumam.-Ennai Pol oruvan-Wasted.
5)Sivaji-Vennira Adai Nirla-Only One-unnai thedi Varum,Thangaikaga -run into rough weather in Sivakamiyin selvan due to being late for shooting(Reprimanded)but could have been a nice Pair
6)Sivaji-Latha-(Only One)-Aadikku pinne- Got missed in Yemanukku Yemen(Could have used in Engal Thanga Raja as Bairavan pair)
7)Sivaji-Hema malini-3 misses-Sivantha Mann,Ilaya Thalaimurai,Lorry driver rajakannu(She gave an interview that she would act in only one Tamil Movie with her favourite Sivaji)
8)Sivaji-rekha- missed in Avanthan Manithan-She openly said that she was pining to have an affair with sivaji)
9)Sivaji-Smitha Patil, Sivaji-Vidya Sinha-Tried but couldn't materialise due to dates
10)Sivaji-Vaijayanthi mala-Only 3 Films-I would have casted her in Thillana Mohanambal instead of Padmini(It was agreed by my friend's Father Kothamangalam Subbu-The story writer)
11)Sivaji-Srividya-Instead of 16 Films with Sujatha ,I could have given chance to Srividya in atleast 6 of them)
12)Sivaji-Padmapriya(Only two)- Atleast 50% of Sripriya's Film could have been shared(11 Total)
13)Sivaji-Rajshri-(Only One)- What a chemistry in Oh Little flower-Could have been repeated during 1971-1973.
14)Sivaji-Lakshmi-Paired only after Unakkaga Naan from 1976-Could have been Earlier in 1970-1973-G.N.Velumani started a movie with this pair "Punidha Payanam" in 1969 but got shelved.We could have tried her in Thirudan,Iru Dhuruvam,Thava Pudhalvan.
15)Sivaji-Jayapradha-Tried in Yemanukku Yeman but dropped due to call-sheet issue.
16)Sivaji-Chandra Kala-Praptham -Wasted without a duet.Moondru deivangal-Watching her singing duet with sivakumar.Could have been a cute pair could have been tried in Anbai Thedi,Chitra Pournami.
அன்புள்ள கோபால் சார்,
1972-ஐ கலக்கியெடுக்கப்போகிறேன் என்ற தங்கள் அறிவிப்பு தேனாய் இனிக்கிறது. நண்பர் வெங்கிராம் அவர்களுக்குப் பக்கத்தில் நானும் துண்டு விரித்துவிட்டேன். தங்களது சீரிய அலசலில் இப்படங்கள் இதுவரை இல்லாத வகையில் புதுப்பொலிவுடன், புதிய கோணத்தில் பார்க்கப்படும் என்பது திண்ணம்.
வளத்தோடு வாழ்பவர்களை மகிழ்ச்சியோடு பார்ப்பதைவிட நலிவடைந்தவர்களை பரிவுடன் பார்ப்பதை விரும்புபவன் நான். அந்த வகையில் நான் ஆவலுடன் எதிர்பார்ப்பது "தர்மம் எங்கே"....
அன்புள்ள கோபால் சார்,
நடிகர்திலகத்துடன் மிகப்பொருத்தமான ஜோடிகளாக அமைந்தும் ஒன்றிரண்டு படங்களில் மட்டும் நடித்த (அல்லது நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட) நடிகைகளைப்பற்றிய பற்றிய பட்டியல் தொகுப்பு ஜோர் (திரிசூலம் 'ரீனா' எங்கே).
எல்லாப்படங்களிலும் நடிகர்திலகத்தை முந்த நினைத்து மூக்குடைபட்ட பத்மினியுடனும், தொட்டதுக்கெல்லாம் 'என்னங்க' என்று கதறும் விஜயாவுடனும், சந்தோஷ தருணங்களில்கூட அழுதுகொண்டே பேசும் சுஜாதாவுடனும், அலட்டல் ஸ்ரீபிரியாவுடனும் அவரை அதிகப்படங்களில் ஜோடியாகப் பார்த்தது நம் துரதிஷ்டம்தான்.
இருந்தபோதும் 'அண்ணி' தேவிகாவுடனும், அழகு வாணியுடனும், கலைச்செல்வியுடனும், அவ்வளவாக உறுத்தாத மஞ்சுளா மற்றும் உஷா நந்திநியுடனும் பார்த்து மகிழ்ந்தது மகிழ்ச்சியே.
ரொம்பவும் பழைய காலகட்டத்துக்குப்போய் விடாமல், எடுத்துக்கொண்ட கால வரையறை மிகவும் ஸ்மார்ட்...
Exactly said by Gopal.
I am waiting a long period to join this hub. I read most of the parts. I am very glad to join this new friends NT fans.
Gopal's school of acting, NT three sixty degree's quotes, Murali srinivas's Collections of NT film records, as usual Ragavendra, Vasudevan, another Vasudevan and un forgetable Pammalar's positings i liked very much. And more over i don't know how to congragulate all. And accept me also as a one of our NT fan group.
I am eagrly waiting for Gopal's 1972 NT film review. Later i will try to write in tamil.
Thank you Mr. Joe
Welcome Mr.Barani. looking forward to your valuable contributions to this thread. Thanks for your compliments to our fellow hubbers.