http://i59.tinypic.com/245yomu.jpghttp://i58.tinypic.com/292br0o.jpg
Printable View
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்
https://www.youtube.com/watch?v=8ZhB...ature=youtu.be
இனிய நண்பர் திரு செல்வகுமார் சார்
இன்றைய உங்களது பதிவுகள் அனைத்தும் அருமை . மக்கள் திலகத்தின் 101 வது படம் காதல் வாகனம் - இன்று 46 ஆண்டுகள் நிறைவு . காதல் வாகனம் விளம்பரங்கள் சூப்பர்..
தீபாவளி அன்றும் , தீபாவளிக்கு முன்பு அல்லது பின்பு வந்த மக்கள் திலகத்தின் படங்களை முதல் நாளில் பார்த்து
மகிழ்ந்த அந்த இனிய தீபாவளி நாட்களை எண்ணி பார்க்கிறேன் .
எனக்கு நினைவு தெரிந்து தீபாவளி அன்று பார்த்த முதல் படம் ''பறக்கும் பாவை '' - 1966
வேலூர் - அப்சரா அரங்கில் பார்த்தேன் . ஏராளமான நட்சத்திர பட்டாளம் . சர்க்கஸ் காட்சிகள் - இனிய பாடல்கள்
சண்டை காட்சிகள் .மக்கள் திலகத்தின் எழிலான தோற்றம் - சுறுசுறுப்பான சண்டை காட்சிகளில் அவருடைய
ஸ்டைல் என்னை மேலும் தீவிர ரசிகனாக மாற்றி விட்டது .
''விவசாயி ''- 1967 தீபாவளி
திருவண்ணாமலை - அன்பு திரை அரங்கில் பார்த்தேன் . கேட்கவா வேண்டும் . மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில்
மனதை பறிகொடுத்து எம்ஜிஆரின் மீது அளவு கடந்த பற்று வைக்க ஆரம்பித்தேன் .
''காதல் வாகனம் ''- 1968
வேலூர் - கிரவுன் அரங்கில் பார்த்தேன் . மக்கள் திலகத்தின் சாட்டை சுழற்றும் போஸ் - போஸ்டரில் மின்னியது .
மக்கள் திலகம் திலகம் ஆங்கிலோ பெண்மணியாக போட்ட வேடம் மறக்க முடியாது .மிகவும் ரசித்து பார்த்த படம் .
'நம்நாடு'' -1969
திருவண்ணாமலை - மீனாக்ஷி
மறக்க முடியாத தீபாவளி . எம்ஜிஆர் என்ற இமயத்தின் மீது தீவிர பற்றும் பாசமும் உண்டாகிவிட்டது நம் நாடு
படம் . என்ன ஒரு பிரமாண்டம் . மக்கள் திலகத்தின் நடிப்பு - கதை - பாடல்கள் -.வரலாற்று காவியம் .
''எங்கள் தங்கம்'' - 1970
சென்னை - நூர்ஜெஹான்
தீபாவளிக்கு முன் வந்த படம் . எம்ஜிஆரின் அருமையான நடிப்பில் வந்த படம் . கதா காலட்சேபம் சூப்பர்.
மாறுவேட உடையில் ஒரு நாள் கூத்துக்கு மீசையை ...பாடல் அமர்க்களம் . சென்னையில் பல ரசிகர்கள் நட்பு
கிடைத்தது . எம்ஜிஆர் மன்றத்தில் தீவிரமாக என்னை ஈடு படுத்தி கொண்ட இனிய நாட்கள் .
''நீரும் நெருப்பும்'' - 1971
சென்னை தேவி பாரடைஸ் அரங்கில் முதல் சிறப்பு காட்சியில் மக்கள் திலகத்துடன் ரசிகர்கள் படை சூழ
முதல் முறையாக பார்த்த இனிய அனுபவம் மறக்க முடியாது . நீரும் நெருப்பும் படம் ஆங்கில படங்களுக்கு
இணையாக இருந்தது . மக்கள் திலகத்தின் வித்தியாசமான இரண்டு வேடங்கள் அபாரம் .
''இதய வீணை'' - 1972
வேலூர் - தாஜ்
மக்கள் திலகம் எம்ஜிஆர் ''பாரத் '' - புரட்சித்தலைவர் என்ற பெருமையுடன் வந்த படம் . காஷ்மீர் .. பாடல்
பொன்னந்தி மாலை பொழுது ..இரண்டு பாடலே போதும் படத்தின் வெற்றிக்கு .
''உரிமைக்குரல்'' / ''சிரித்து வாழ வேண்டும்'' - 1974
http://i62.tinypic.com/2u960ar.jpg
வேலூர் - தாஜ் / வேலூர் - கிரவுன்
உரிமைக்குரல் - முதல் நாளே படம் வெள்ளி விழா படம் என்று கூறும் அளவிற்கு பிரமாதமாக ரிசல்ட் கிடைத்தது
எம்ஜிஆர் - ஸ்ரீதர் கூட்டணி - பிரம்மாண்ட வெற்றி . பல சரித்திர சாதனைகள் நடந்தது .
சிரித்து வாழ வேண்டும் - உரிமைக்குரல் பிரம்மாண்ட ஓட்டத்தால் சற்று பாதிக்கப்பட்ட படம் . இருந்தாலும் மதுரையில் 100 நாட்களும் வசூல் ரீதியாக நல்ல லாபம் தந்த படம் .
''பல்லாண்டு வாழ்க'' - 1975
வேலூர் - லக்ஷ்மி
இதயக்கனியின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து வந்த படம் .மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பில் வந்த
புதுமையான படம் . வெற்றி காவியம் .
''ஊருக்கு உழைப்பவன்'' - 1976
பெங்களுர் - லக்ஷ்மி
மக்கள் திலகத்தின் இரட்டை வேட நடிப்பில் வந்த உன்னத காவியம் . சென்சார் பிடியில் சிக்கியதால் சற்று ஏமாற்றமே . இருந்தாலும் மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு மற்ற குறைகளை நிவர்த்தி செய்து விட்டது .
http://i1170.photobucket.com/albums/...psf495a767.jpg
DEEPAVALI onwards AAERATHIL ORUVAN in the following
screens grand gala opening as daily 4 shows
1 TUTICIRIN -CLEOPATRA A/C Dts
2 Rajapalayam- SHANTHI A/C Dts
3.Palani -SWAMI Dts
courtesy - chokalingam shared in his facebook
http://i1170.photobucket.com/albums/...psbd0e74ce.jpg
எனக்கு என்ற எண்ணம் வராமல் நமக்கு என்ற எண்ணம் வரவேண்டும். அப்படிப் பட்ட எண்ணம் வளர்ந்தால் நாட்டில் ஒற்றுமை வளரும். சாதிக் கொள்கை ஒற்றுமையை ஏற்படுத்தாது. மத்த்தில் பெயரால் தூய்மை தெரியவில்லை. தாழ்வு தான் தெரிகிறது. இத்தகைய சாதி , மத உணர்வுகளை அகற்றச் சூளுரை ஏற்போம்.
again started
http://www.youtube.com/watch?v=JnZ5QR6E8PI
என் ஆண்டவன் ராமசந்திரன் "பிறந்த இடம் தேடி" வந்த தினமே எனக்கு தீபாவளி.
http://i1170.photobucket.com/albums/...ps11b9644e.jpg
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்து தீபாவளி அன்று வெளியான திரைப்படங்கள். 1.ராஜகுமாரி 2.11.1947.2,மோகினி 26.10.1948.3.மன்னாதி மன்னன்.19.10.1960. 4.தாய் சொல்லை தட்டாதே 7.11.1961.5,விக்கிரமாதித்தன் 27.10.1962,6.பரிசு 15.11.1963 7.படகோட்டி 3.11,1964 8.ப.றக்கும் பாவை 11.11.1966.9.விவசாயி 7.11.1967 10.காதல் வாகனம் 21.10.1968. 11.நம்நாடு 7.11.1969, 12.நீரும் நெருப்பும் 18.10.1971 13.உரிமைக்குரல் 7.11.1974. 14.பல்லாண்டு வாழ்க 31.10.1975.15.அவசர போலீஸ் நூறு 17.10.1990.
நூறு பதிவுகள் கண்ட கலைவேந்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
http://i1170.photobucket.com/albums/...ps4af5fca1.jpg
அனைவருக்கும் உளமார்ந்த தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தங்கையின் வாழ்வுக்கு நியாயம் கேட்கும்போது, ‘எவ்வளவு அடித்தாலும் இடத்தை விட்டு நகரமாட்டேன்’ என்று நிராயுதபாணியாக நிற்கும் தலைவரை திரு.சிவக்குமார் கைத்தடியால் ரத்தம் சொட்ட, சொட்ட அடிக்கும்போது திரையரங்கில் நமது தோழர்கள் உணர்ச்சிப் பிழம்பாக மாறினர். ஸ்கிரீன் அருகே உள்ள வகுப்பில் அமர்ந்திருந்த தோழர்கள் சிலர் தன்னிலை மறந்து திரு.சிவக்குமாரை அடிக்க திரையை நோக்கிப் பாய, நண்பர்கள் அவர்களை கட்டிப் பிடித்து இழுத்து சுய நினைவுக்கு கொண்டு வந்து ஆசுவாசப்படுத்தியபோது.. உணர்ச்சிப் பிரவாகத்தினூடே எழுந்த சிரிப்பலையும், அடுத்த இரு நிமிடங்களில் நிலைமை மாறி தங்கை லட்சுமியை அடித்த சிவகுமாரை அதே கைத்தடியால் தலைவர் புரட்டி எடுக்கும்போது அடிக்கப் பாய்ந்த தோழர்கள் ஆனந்தக் கூத்தாடிய காட்சியும்.... ஆஹா..அந்த நாளும் வந்திடாதோ?
கலைவேந்தன் சார் இந்த காட்சியீனை அழகி திரைபடத்தில் நடிகர் சூர்யா காந்த் மிக
அழகாக செய்து இருப்பார் சார்
கிளிப் 23.10 டு 24.00 வரை வரும் காட்சினை காணவும்
http://www.youtube.com/watch?v=W8T9CYanhKQ
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
https://www.youtube.com/watch?v=Tx9z_-bZye4
அனைவருக்கும் இதயம் கனிந்த தீப ஒளி திரு நாள் வாழ்த்துகள்
இதய வீணை படம் தலைவர் புதிய கட்சி ஆரம்பித்து வெளி வந்த படம் . அதில் வரும் காஷ்மீர் காஷ்மீர் பாட்டு உள்ள வரிகள் எப்படி தலைவருக்கு அமைந்ததை பார்த்தால் அவர் ஒரு தெய்வ அவதாரமாக தெரிவார் நமது எல்லோர் கண்களுக்கும் . அந்த வரிகள்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட நான் இருக்கிறேன்
வந்தாரை வரவேற்க காத்திருக்கிறேன்
"ஆமா , நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க ?"
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அறிந்த தத்துவமம்மா
ஆடைகள் கூடைகள் கம்பளம் ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும் ஏழை கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால் நாடெல்லாம் முன்னேறும்
மண்ணெல்லாம் பொன்னாகும் பொற்காலம் உண்டாகும்
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
என் தாய் திருநாட்டுக்கு வாசல் இது
என்னாட்டவர்க்கும் கலை கோயில் இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேருவின் புகழ் சொல்லும் பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்
நேரு வின் புகழ் சொல்லும் பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக் கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப் போகுமோ
எல்லைக்கு காவல் நிற்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்
mk தொலைகாட்சியில் தீபாவளி அன்று தொழிலாளி படம் மாலை 6.00 மணிக்கு ஒளிபரபபடுகிறது .
நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார். தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-
"என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள். என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.
என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். "நாடோடி மன்னன்'' படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை' சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார். நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார்.
அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன. ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. "கலங்கரை விளக்கம்'' படத்தில், "காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்'' என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும்.
என்னுடைய "நலந்தானா'' நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன். "நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு'' என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர். ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.
"இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்'' என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார். "அந்த ஜோக் அவசியம் வேண்டும்'' என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்'' என்று கூறினார்.
courtesy malaimalar
உலகம் சுற்றும் வாலிபன்
http://i62.tinypic.com/es5aoi.jpg
http://i62.tinypic.com/1q0qw0.jpg
SS Rajini used similar wordings during the Audio release of "Annamalai" @ Chola Sheraton. One more similarity will follow soon re. "one rupee" advance - "Aayirathil Oruvan", SS Rajini also took "one rupee" as advance from AVM for Sivaji.
மிகவும் அருமையான பதிவு திரு செல்வகுமார் சார்
கிட்டத்தட்ட 55 அல்லது 56 வயது இருக்கும் நம் தலைவருக்கு பட்டிகாட்டுப்போன்னையா படம் நடிக்கும் போது என்ன ஒரு ஆச்சரியம் 25லிருந்து 30 வயது இலஞ்சனாக,அபாரம் சார் என்ன ஒரு ஸ்டைல் என்னமாதிரியான உடல் வாகு எந்த பெண்ணும் இந்த அழகை பெண் என்ன ஆணும் தான் காதல் செய்யாமல் இருக்கவே முடியாது
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
VENTHAR TV TELECAST THALAIVAR LIFE STORY NAME OF THADAM PATHITHAVARGAL
https://www.youtube.com/watch?v=Tx9z_-bZye4
"ஆயிரத்தில் ஒருவன் - முன்பணம் ஒரு ரூபாய்"
http://i57.tinypic.com/ny8xgg.jpg
SS Rajini also took Re.1/= only as advance from AVM for Sivaji, another similarity.
http://i58.tinypic.com/2m783sx.jpg
இந்த வார ஜூனியர் விகடன் இதழில் வெளியான புகைப்படம்.
-------------------------------------------------------------------------------
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் சொத்து குவிப்பு
வழக்கில் இருந்து உச்ச நீதி மன்றத்தின் ஜாமீனில் விடுதலை
செய்தி வெளியான பின் , அனைத்திந்திய அண்ணா தி.மு.க.
தலைமை அலுவலகத்தில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு , கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும்,
இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
அப்போது ஒரு பெண் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு
முத்தம் தரும் காட்சி.
இந்த வார நக்கீரன் இதழில் வெளியான செய்தி.
--------------------------------------------------------------------------
http://i60.tinypic.com/2nkj6sx.jpg
திருமதி கே. பி. சுந்தராம்பாள் அவர்கள் சற்று இளம் வயதில்
தோற்றம் அளிக்கும், காட்சி.
http://i60.tinypic.com/xkx314.jpg
முத்தான 100 பதிவுகள் கடந்த நமது திரியின் நண்பர் திரு கலைவேந்தன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
http://i58.tinypic.com/6rt5z7.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்
மதுரை சென்ட்ரலில் நாளை முதல் (22/10/2014)
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் " நான் ஆணையிட்டால் " ரசிக பெருமக்களுக்கு தீபாவளி விருந்தாக தினசரி 4 காட்சிகள் திரைக்கு வருகிறது.
சுவரொட்டிகளின் புகைப்படங்கள் நமது திரி நண்பர்களுக்காக உதவியவர் :மதுரை திரு. எஸ்.குமார்.
http://i61.tinypic.com/aqnvr.jpg
கடந்த 03/10/2014 முதல் மதுரை மீனாட்சியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் ஜொலித்து மக்களின் உள்ளங்களை கவர்ந்த "மாட்டுக்கார வேலன் " வெளியாகி
வெற்றி முரசு கொட்டியது.
http://i62.tinypic.com/2lal3l.jpg
சுவரொட்டிகளின் புகைப்படம் நமது திரி நண்பர்களுக்காக உதவியவர் :மதுரை திரு. எஸ்.குமார்.
மையம் திரியின் நண்பர்கள் அனைவருக்கும் தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் மற்றும் மக்கள்திலகத்தின் ஆசிகள்
http://i57.tinypic.com/14j24cn.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜிஆர்