Article from Today's deccan herald
http://www.deccanherald.com/content/...s-made-of.html
Printable View
Article from Today's deccan herald
http://www.deccanherald.com/content/...s-made-of.html
திரு முத்தையன் அம்மு அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ள மேலே காணப்படும் இரு நிழற்படங்களிலும் மேலும் ஒற்றுமைகள் உள்ளன.
இரண்டுமே மெர்க்காராவில் படமாக்கப்பட்ட காட்சிகள். இரண்டுமே ஒரே ஆண்டில் - 1975ல் - வெளிவந்தவை. இதயக்கனி, டாக்டர் சிவா இரண்டிற்குமே இசை மெல்லிசை மன்னர்.
வேற்றுமைகள் ... இதயக்கனியில் இப்பாடல் காட்சிக்கான பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ். அவர்கள். டாக்டர் சிவா பாடலைப் பாடியவர் ஜேசுதாஸ். இதயக்கனியில் இப்பாடலாசிரியர் நா. காமராசன், டாக்டர் சிவா விற்காக எழுதியவர் வாலி.
இதே போல் பாடலின் சூழல் வேறு.
http://i1065.photobucket.com/albums/...psrt2mpjkj.jpg
இரண்டாவது முறையாக
கோவை மாவட்ட சிவாஜி ரசிகர்
மன்றங்களின் கலந்தாய்வு கூட்டம்இன்று காலை வ.உ.சி .பார்க்கில்நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற சிறிது நேரத்தில் கேன்சர் நோயால் பாதிப்படைந்த நபர்ஒருவர்உதவி கேட்டு வந்தார்.அவருக்கு 5 நிமிடத்தில்1500 ரூபாய் சிவாஜி ரசிகர்களின் சார்பாக வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கட்டபொம்மன் படத்திற்கு சிறப்பாக செய்வது பற்றி கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும்சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்திற்குகோவையில்
்இருந்து100 நபர்களுக்கு மேல் செல்வது என முடிவு செய்யப்பட்டது.
திரு முத்தையன் அம்மு - உங்களிடமிருந்து கற்று கொள்ளவேண்டியவை - பொறுமையும் , கடமை உணர்ச்சியும் , ஒரு புகை படத்தை upload பண்ணுவது எவ்வளவு கடினம் என்பதை சமீபத்தில் தான் உணர்ந்துகொண்டேன் - சரியான புகைப்படமாக இருக்கவேண்டும் , சரியாக கை கால்களுடன் படத்தை upload செய்யவேண்டும் , திரியில் ஏற்றும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்த்துக்கொள்ள வேண்டும் , photobucket மூலம் படம் போடுவதென்றால் நமக்கு கொடுக்கப்பட்ட வரைமுறைக்குள் இருக்கவேண்டும் - ஒரு படத்திற்கே இப்படி என்றால் , மழை பெய்வதுபோல் , அம்புகள் வில்லிலிருந்து வருவதைப்போல போட மிகுந்த பொறுமையும் , திறமையும் இருக்க வேண்டும் . சாதாரண விஷயம் இல்லை சார் ! உங்கள் படங்கள் இரு திரிக்கும் ஒரு பாலமாகவும் , ஒற்றுமையை வளர்க்கக்கூடியதாகவும் இருக்கின்றது - உங்கள் கடமை உணர்ச்சிக்கு ஒரு பெரிய salute !!!
அன்புடன்
ரவி
MADURAI CENTRAL THEATER is the POINT OF ATTRACTION
NADIGAR THILAGAM's CLASSIC BLOCKBUSTER PAAVAMANIPPU ROCKS @ CENTRAL THEATER, MADURAI SINCE FRIDAY.
THIRD CONSECUTIVE DAY, PAAVAMANIPPU HAS SURPASSED THE COLLECTION OF ALL PREVIOUS SCREENED FILMS IF THE INFORMATION FROM THE SOURCE HAS TO BE BELEIVED.
TILL TODAY EVENING, PAAVAMANIPPU HAS COLLECTED A WHOPPING RS.60,000 (APPROXIMATELY).
THANKS TO THE EXCELLENT POSTER DESIGN OF Mr. SUNDERRAJAN & AN EXCELLENT FILM CHOOSING CAPABILITY OF Mr. V.CHANDRASEKHAR.
MORE SPECIFICALLY, THIS THE 4th TIME THAT Mr. CHANDRASEKHAR & Mr. SUNDERRAJAN TEAM PROVED ONE OF THE UNREALISTIC BIASED CRITIC OF MADURAI WRONG & WHO DELIBERATELY HAD GIVEN NEGATIVE OPINION ABOUT "PAAVAMANIPPU" TO THE THEATER MANAGEMENT.
I PITY THAT UNREASONABLE, UNREALISTIC BIASED CRITIC FOR HIS CONTINUOUS FAILURE IN TRYING TO DAMAGE THE IMAGE OF A GOOD FILM IN THE MIND OF THE THEATER MANAGEMENT IN TERMS OF THE FILM's CURRENT CAPABILITY AT BOX OFFICE ! AN ATTEMPT PURELY AIMED @ BRAINWASHING THE THEATER MANAGEMENT SO THAT THEY DO NOT SCREEN SUCH EXCELLENT FILMS OF NADIGAR THILAGAM!
THEATER MANAGEMENT HAS ALREADY UNDERSTOOD HIS INTENTIONS AND AM SURE, THEY WILL POOH - POOH THIS PERSON SHORTLY !!!!
CONGRATULATIONS CHANDRASEKHAR SIR & SUNDERRAJAN SIR FOR YOUR UNTIRING EFFORTS IN ONCE AGAIN ESTABLISHING OUR FOOTING @ MADURAI CENTRAL !!!
THOUGH, WE DO NOT HAVE THE ADVANTAGE OF ONE MORE GOVERNMENT HOLIDAY IN THE NEXT FEW DAYS, AM SURE, PAAVAMANIPPU WILL REMAIN THE TOPPER FOR THE FIRST 4 DAYS COLLECTION & WILL CLIMB UP THE LADDER TO NO.1 !
EXCELLENT WORK TEAM SIVA MOVIES !!!! CONGRATS...!!! WISHING YOU MANY MORE LAURELS & ACHIEVEMENTS IN THE YEARS TO COME !!!
YOU HAVE SHOWCASED AN EXCELLENT THEME FILM ...NEED OF THE HOUR SUBJECT !!!
AM SURE SUCH FILMS SHOULD RECEIVE THIS WARM WELCOME.
ELLORUME KONDAADUGINDRANAR PAAVA MANIPPU THARUM NADIGAR THILAGAM NADIPPAI !
REGARDS
RKS
திருச்சியில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்து விட்டார் திரையுலக மன்மதன் சின்ன ஜமீன்.
கடந்த 10 வருட வரலாற்றில் திருச்சி கெயிட்டியில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் ஆன ஒரே படம் வசந்த மாளிகை
இன்று மாலை காட்சியில் வெகு நாட்களுக்கு பிறகு ரசிகர்களே 150 க்கும் அதிகமாக வருகை புரிந்தது விசேஷமாக இருந்தது. ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தால் திரை அரங்கு திணறியது.
வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்களில் மட்டும் வினியோகஸ்தர் லாபமாக ரூபாய் 8000 ஐ தாண்டியது ம்கப்பெரிய சாதனையாகும்.
படத்தை வெளியிட்ட ஏ வி எம் நிறுவனத்திற்கு மிக்க சந்தோஷம். எல்லோருக்கும் கைகொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
மேலும் வேர்ல்டு கப் மற்றும் ipl சீசன் ஆரம்பித்து அதிக லாபம் அடைந்த படமே இது ஒன்றே. இதற்கும் ஏற்கனவே ராமக்ரிஷ்ணாவில் திரையிட்டு 10 மாத இடைவெளியில் தற்போது கெயிட்டியில் வெளியாகி சாதனை படைத்து விட்டது வசந்த மாளிகை.
இன்று மாலை காட்சி சரியாக 6.45 க்கு ஹவுஸ்புல் ஆகி தியேட்டரில் ஹவுஸ்புல் போர்டு இல்லாமல் நமது ரசிகர்களே போர்டில் எழுதி வெளியில் விட்டார்கள்
தியேட்டரில் எடுக்கப்பட்ட அலங்கார பதிவுகள் நாளை பதிவிடப்படும்
திலக சங்கமம் *
Sivaji Ganesan - Definition of Style 19
பாவை விளக்கு
http://i1110.photobucket.com/albums/...laar/PV1-1.jpg
படிக்காத மேதை வெற்றியைத் தொடர்ந்து திரை இசைத்திலகம் கே.வி.எம். நடிகர் திலகத்துடன் இணைந்து வெளிவந்த அடுத்த படமாக பாவை விளக்கு அமைந்தது. சொல்லப் போனால் நடிகர் திலகத்திற்குள் இருந்த பாடகரை மிகப் பிரபலமாக அடையாளம் காட்டியவர் திரை இசைத்திலகம் கே.வி.எம். அவர்கள். தமிழ்நாட்டில் மட்டுமின்றி புவியெங்கும் தமிழர் வாழும் பகுதிகளனைத்திலும் தவறாமல் சென்று சேர்ந்து உச்சாணிக் கொம்பில் சென்று அமர்ந்து கொண்ட பாடல் வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடலாகும். வித்தியாசமான பாணியில் நடிகர் திலகத்தின் கவிதைக் குரலில் இசைச்சித்தரின் பாட்டு ஒலிக்க எஸ்.ஜானகியின் ஹம்மிங்குடன் இணைந்து கேட்போரைப் பரவசப்படுத்தியது வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல். அன்று தொடங்கி இன்று வரையிலும் இன்னும் பல ஆண்டுகளுக்கும் ரசிகர்களின் நெஞ்சில் இப்பாடலுக்கு சிறப்பான இடம் உண்டு. இதே பாவை விளக்கு திரைப்படத்துடன் அதே நாளில் வெளியான பெற்ற மனம் திரைப்படத்திலும் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கும் பாடல் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் படம் சரியாக மக்களை சென்றடையாத காரணத்தால் அப்பாடல் அதிகம் அறியப்படவில்லை.
பாவை விளக்கு திரைப்படத்தைப் பொறுத்த வரையில் அகிலனின் நாவல் முழுமையான திரைவடிவம் பெறவில்லை என்று ஓர் விமர்சனம் இருந்ததுண்டு என்றாலும் அதையெல்லாம் புறந்தள்ளி இன்றளவிலும் இத்திரைப்படம் மிகவும் ரசிக்கக் கூடிய வகையில் இருப்பது மகிழ்வூட்டக்கூடியதாகும்.
குறிப்பாக இயல்பு நடிப்பு என்ன வெனத் தெரியாதவர்கள் இப்படத்தைப் பார்த்து அதனைக் கற்றுக் கொள்ள வேண்டும். Casual என்றால் அப்படி ஒரு Casual நடிப்பினை வழங்கியிருப்பார். சுமார் ஒரு நிமிடம் ஓடக் கூடிய மங்கியதோர் நிலவினிலே பாடலில் சௌகார் ஜானகியைப் பார்த்து நடிகர் திலகம் பாடுவதாக வரும் காட்சியில் அவருடைய மந்தகாசப் புன்னகை ஆஹா.. பார்த்துக்கொண்டே இருக்கலாம். கே.வி.எம். அவர்கள் மிக இனிமையான மெட்டில் பாட்டை அமைத்திருப்பார்.
வண்ணத்தமிழ்ப் பெண்ணொருத்தி பாடல் காட்சியில் கதாநாயகியின் பெயரையே பாடலில் பயன்படுத்தி வரியை முடித்திருப்பார் மருதகாசி அவர்கள். கமலம் செங்கமலம் என குமாரி கமலா அவர்களை வைத்து எழுதியிருப்பார்.
இப்பாடல் காட்சியில் குறிப்பாக கவனிக்க வேண்டிய வரிகள்...
அன்னம் கூட அவளிடத்தில் வந்து நடை பயிலும்
ஆடல் கலை இலக்கணத்தை அறியவரும் மயிலும்
இன்னிசையைப் பாடம் கேட்க எண்ணி வரும் குயிலும்
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும்
இந்த சரணத்தின் போது இன்னிசையைப் பாடம் கேட்க பாடிய பின் ஜானகியின் ஹம்மிங் ஒலிக்கும் போது நடிகர் திலகத்தின் நடை இருக்கிறதே... ஆஹா...கடவுள் நமக்கு கண் படைத்ததற்காக மனம் கோடிக்கணக்கில் நன்றியைக் கொட்டும்...இந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.. அந்தப் புன்னகையைப் பாருங்கள்..
இயற்கையெல்லாம் அவள் குரலின் இனிமையிலே துயிலும் வரிகளின் போது ஒரு சின்ன சீண்டல், துடுக்கு ... இளமையின் பிரதிபலிப்பை எவ்வளவு அழகாக சித்தரிக்கின்றனர் இவர்கள்...
அது மட்டுமா...
கமலம் செங்கமலம் எனப் பாடி முடித்தவுடன் புரண்டு வருவார் பாருங்கள்... அழகு என்றால் அவ்வளவு அழகாகப் புரண்டு வருவார்..
மனுஷன் புரண்டு வருவதில் கூட ஒரு ரசனையைத் தருகிறார்...
இவரைப் போய் மிகை நடிப்பு என்று கூறுகின்றார்களே.. அந்த ஈனபுத்திக் காரர்களையெல்லாம் என்ன செய்ய...
இயற்கை நடிப்பிற்கும் இலக்கணம் வகுத்த அவதாரமல்லவா நடிகர் திலகம்...
இனியென்ன பாருங்கள் காட்சியை... உணருங்கள் அந்த அற்புத அனுபவத்தை...
https://www.youtube.com/watch?v=7Vs3tTDYAyY
பாவ மன்னிப்பு - இன்று - மதுரை சென்ட்ரல் - 26.04.2015
எத்தனை எத்தனை சந்தோஷ செய்திகள்! திருச்சியில் வரலாறு காணாத வசூல் என்றால் மதுரையில் புதிய வரலாற்றை உருவாக்கிய வசூல்.
வானம் இடிப்பட்டது! பூமி பொடிப்பட்டது என்று எதுகை மோனையாக சொல்வது வழக்கம்! ஆனால் இன்று மதுரை டவுன் ஹால் ரோடிலும் சரி உள்ளே சென்ட்ரல் திரையரங்கத்துக்குள்ளிலும் நடைபெற்ற அலப்பரை அந்த வகையைத்தான் சார்ந்திருந்தது என்று சிலரும் இல்லை இல்லை அதற்கும் மேலே என்று பலரும் சொல்லியவண்ணம் இருக்க ரஹீம் பாய்க்கு அமோக வரவேற்பு.
நாளது தேதிவரை எந்த படத்திற்கும் வந்திராத கூட்டம். ஹவுஸ் புல் என்பதையெல்லாம் தாண்டி ஓவர் டிக்கெட் என்று சொல்வார்களே அது போல மக்கள் வெள்ளம். நாங்கள் நின்று கொண்டு பார்க்கிறோம் அல்லது அரங்கத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து படம் பார்க்கிறோம். டிக்கெட்டை மட்டும் கொடுங்கள் என்று தியேட்டர் ஊழியர்களை சுமார் 150 பேர் சுற்றி நின்று கேட்ட காட்சியை சென்ட்ரல் திரையரங்கம் வெகு நாட்கள் கழித்து கண்டது.
சரம் சரமாய் சர வெடிகள். கணக்கிலாத 5000 மற்றும் 10000 வாலாக்கள். மற்றொரு தீபாவளி திருநாள் டவுன் ஹால் ரோட்டில் மட்டும் அரங்கேறிய காட்சியை கண்டவர் வியந்தனர். அந்த வழியாக நடக்கும் போக்குவரத்து ஸ்தம்பிக்க வெடிக்கும் பட்டாசும் நடிகர் திலகத்தை வாழ்த்திய கோஷங்களும் பானருக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளையும் பார்த்தபோது அங்கே நின்ற பல பேருக்கு நாம் ஒருவேளை 1969 நவம்பரில் இருக்கிறோமோ இல்லை 1972 மேயில் நிற்கிறோமோ அல்லது 1974 ஜூனில் போய் மீண்டும் இறங்கி விட்டோமோ என்ற ஐயப்பாடு தோன்றிக் கொண்டே இருந்ததாம்.
இந்த களேபரத்திற்கு இடையில் இரண்டு மூன்று கார்கள் வர தியேட்டர் வாசலில் நடக்கும் கொண்டாட்டங்களை சொல்லி அவர்களை வேறு பக்கம் போக சொல்ல அய்யா! நாங்கள் வந்திருப்பதே இந்தப்படம் பார்க்கத்தான் என்று அவர்கள் சொல்ல அசந்து விட்டார்களாம்.
தியேட்டருக்கு வெளியேதான் இத்துணை ஆர்ப்பாட்டம் என்றால் அரங்கதில் நுழைந்து படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் முகத்தை மறைக்கும் டேப்பை கையால் தட்டிக்கொண்டே மெல்ல டேப்பை விலக்க பூரணச்சந்திரன் போன்ற அந்த முகத்தை கண்டதும் உள்ளே சரம் சரமாய் வெடித்திருக்கிறது 5000 வாலா பட்டாஸ்.
பல பல பழைய ரசிகர்கள் எல்லோரும் மீண்டும் இன்று ஒன்று கூடிய ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் நடந்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் உணர்ச்சிமயமாக மிகுந்த சந்தோஷத்துடன் இன்றைய மாலைப்பொழுதை இனிமையாக கழித்திருக்கிறார்கள்.
தியேட்டர் அதிபர் சுந்தரம் அவர்களுக்கு ரசிகர்கள் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கில் பார்த்து மகிழ அருமையான பிரின்ட்டோடு படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் மதுரை சிவா மூவீஸ் பங்குதாரர்களுக்கும் நன்றி சொல்லியிருக்கின்றனர்
உண்மையிலே இப்படிப்பட்ட அருமையான படத்தை நல்ல பிரிண்டுடன் திரையிட்ட விநியோகஸ்தருக்கு நமது நன்றியும் உரித்தாகட்டும். இதே படத்தை விரைவில் தமிழகமெங்கும் திரையிட அவர் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்வோம்.
நண்பர் ஆர்கேஎஸ் குறிப்பிட்டது போல முதல் மூன்று நாட்கள் வசூலிலும் புதிய சாதனை படைத்திருக்கிறது பாவ மன்னிப்பு.
சந்தோஷ செய்திகளுடன் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்
RKS,
It is not that we don't have one more public holiday! We never had any public holidays during any of our films release. But we hardly need them!
Regards
முரளி சார்
பாவமன்னிப்பு வசூல் செய்தி சூப்பரோ சூப்பர்... இதை நடத்திக்காட்டிய மதுரை மக்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்கள்.
அருமை முரளி - ஒருபக்கம் நிஜமான நிலநடுக்கம் - மறுபக்கம் பாவ மன்னிப்பு ஏற்படுத்தும் நிலநடுக்கம் . உண்மையில் நாடு இருக்கும் நிலைமையில் நாம் அழுதுகொண்டே சிரித்துகொண்டிருக்கின்றோம் . பாவ மன்னிப்பை இந்த உலகம் கேட்க்காததால் தானோ இப்படியெல்லாம் தாறு மாறாக நடந்து கொண்டிருக்கின்றது.
எது எப்படியோ , அல்லாவின் பெயரை சொல்லிக் கொண்டு கொண்டாடும் நேரம் நமது திரியில் இப்பொழுது - உங்கள் பாவ மன்னிப்பு தொகுப்பு பிரமாதம் - மிகவும் ரசிக்கும் படி இருந்தது
இந்த பாடலை நாம் எல்லோரும் பாடும் நேரம் இது
https://youtu.be/ruMVBLeUsEw
அன்புடன்
ரவி
திருச்சியில் வரலாறு காணாத வசூல் சாதனை படைத்து விட்டார் திரையுலக மன்மதன் சின்ன ஜமீன்.
கடந்த 10 வருட வரலாற்றில் திருச்சி கெயிட்டியில் ஞாயிறு மாலை காட்சி ஹவுஸ்புல் ஆன ஒரே படம் வசந்த மாளிகை
https://pbs.twimg.com/media/CDm48ApWYAAcG3s.jpg
https://pbs.twimg.com/media/CDm4wvuWoAUidBq.jpg
https://pbs.twimg.com/media/CDm5I8yWgAErVUj.jpg
https://pbs.twimg.com/media/CDm5OsWXIAIFSwF.jpg
https://pbs.twimg.com/media/CDm5TojW0AEC3IX.jpg
https://pbs.twimg.com/media/CDm5ZQ9WEAAXOfQ.jpg
இன்று திங்கள் கிழமை காலை காட்சி மேட்னி இரண்டிலும் நேற்று ஞாயிறு கிழமை விட ரூபாய் 1100 அதிகம் வசூலாகி வீரநடை போடுகிறது . இன்று மாலை காட்சியுடன் ரூபாய் 9500 க்கு மேல் விநியோகஸ்தர் லாபம் கிடைத்துள்ளது.
வசூலில் நான் சக்ரவ்ர்த்தியடா என வீரநடை போடுகிறார் திரையுலக மன்மதன்
https://pbs.twimg.com/media/CDm5TojW0AEC3IX.jpg
https://pbs.twimg.com/media/CDm-D7QW0AIMeAc.jpg
ஹவுஸ்புல் போர்டை அசால்ட்டாக இன்று வரை பார்க்கும் ஒரே சாதனையாளர் சிவாஜி மட்டுமே. சிவாஜி படங்கள் இருப்பதை எண்ணி தியேட்டர்காரர்கள் ஹவுஸ்புல் போர்ட்களை பத்திரமாக பாதுகாத்து வைக்கட்டும்.
மக்கள் தலைவரின் அன்பு இதயங்கேள,
மதுரையில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் குதுாகல கொண்டாட்டத்தின் நிழற்படங்கள்.
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...78dcc7d3994993
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...4d156dc79641e1
https://fbcdn-sphotos-g-a.akamaihd.n...10c13d3c70f272
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...9e&oe=55D92753
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மக்கள் தலைவரின் அன்பு இதயங்கேள,
மதுரையில் வசூல் சக்கரவர்த்தி சிவாஜியின் பாவமன்னிப்பு திரைப்படத்திற்கு ஞாயிறு மாலைக் காட்சிக்கு ரசிகர்களின் ஆரவாரம் மற்றும் குதுாகல கொண்டாட்டத்தின் நிழற்படங்கள்.
https://fbcdn-sphotos-d-a.akamaihd.n...d05d9f8c57db9e
https://fbcdn-sphotos-f-a.akamaihd.n...01112c2217b2e2
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...5f&oe=559DA975
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
தலைவரின் முகமே தெரியாமல் அள்ளி குவிக்கப்பட்ட பூமாலைகளுடன் மக்கள் தலைவரின் பேனர்.
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...00&oe=55E34BA4
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
மதுரை மாவட்ட தலைவன் சிவாஜி மக்கள் இயக்கம் மற்றும் மதுரை மாவட்ட சிவாஜி சமூகநலப் பேரவை சார்பில் ரசிகர்கள் அனைவருக்கும் இனிப்புப் பொங்கல் மதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அன்னபூரணா தங்கராஜ் அவர்களால் வழங்கப்பட்டது.
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...2d&oe=5597DFB3
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
வசூல் சக்கரவர்த்தியின் படங்கள் திரையிடுவதில் போட்டி பலமாக இருந்த சமயத்தில் ( வசந்த மாளிகை, ராஜா, தியாகம், பாவமன்னிப்பு) தியேட்டர் உரிமையாளர் பெரியவர் திரு.சுந்தரம் ஐயா அவர்கள் பாவமன்னிப்பு திரைப்படம் முதலில் திரையிடுங்கள் மற்ற படங்கள் அடுத்த சிவாஜி படங்கள் போடும் போது போடுேவாம், என்று சொல்லி திரையிட்டதற்கு மதுரை சிவாஜி ரசிகர்கள் ஒன்று கூடி அவருக்கு சால்வை அணிவித்து நன்றி கூறினார்கள்.
https://fbcdn-sphotos-e-a.akamaihd.n...bc827b8c5b5dc8
https://fbcdn-sphotos-a-a.akamaihd.n...8e285c761087b3
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...26&oe=55C97E83
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
https://scontent-mxp.xx.fbcdn.net/hp...3d&oe=55C9ABCA
சிவாஜி எட்டாவது அதிசயம் அல்ல, எவரும் எட்டாத அதிசயம்.
Delete
URL=http://s1065.photobucket.com/user/senthilvels96/media/Mobile%20Uploads/FB_IMG_1430227838546_zpsdhdejsbd.jpg.html]http://i1065.photobucket.com/albums/...psdhdejsbd.jpg[/URL]
http://i1065.photobucket.com/albums/...ps3sjvcw5o.jpg
http://i1065.photobucket.com/albums/...pstxqvztzg.jpg
நடிப்பின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவர்-
டி ராஜேந்தர்.
பொம்மை வெளியிட்ட சிவாஜி மணிவிழா மலரில் இருந்து...
http://i1065.photobucket.com/albums/...psdvzqxrwy.jpg