http://i160.photobucket.com/albums/t...ps7hgig8fe.jpg
Printable View
http://i58.tinypic.com/2qak7me.jpg
உலகம் சுற்றும் வாலிபன் - 43 வது ஆண்டு துவக்கம் .-சிறப்பு பார்வை
---------------------------------------------------------------------------------
1.உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் சந்தித்த சோதனைகள் ஏராளம் .
2.உலகம் சுற்றும் வாலிபன் சாதித்த/சாதிக்கின்ற /சாதிக்க போகின்ற
சாதனைகள் அதைவிட ஏராளம்.
3.உ.சு.வாலிபன் தயாரிப்பு பற்றி , பொம்மை மாத இதழில் திரைகடலோடி
திரைப்படம் எடுத்தோம் என்று புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்.
ஏற்கனவே பேட்டி அளித்துள்ளார்.
4. தினமலர் வாரமலரில் கடந்த வருடம் , ஞாயிறு தோறும் உ.சு. வாலிபன் தயாரான விதம் பற்றி புரட்சி தலைவர் எழுதிய "நான் ஏன் பிறந்தேன் "
தொடரிலும் செய்திகள் வெளியாகி இருந்தன.
5. 1973ல் படம் வெளியாகும் முன்பே தி.மு. க.வினர் வரும் . ஆனால்
வராது. என்றனர்.வந்தால் சேலை கட்டிக்கொள்ள தயார் என மதுரை முத்து அறிக்கை வெளியிட்டார். பின்னாளில் அதே மதுரை முத்துவை
புரட்சி தலைவர் தன் வசமாக்கி அவருக்கு பதவி அளித்து பெருமை
சேர்த்தார் என்பது வேறு விஷயம்.
6.தி.மு.க.வினரின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் சென்னை
ஏழுகிணறு (வடசென்னை) பகுதியில் நடந்த பொதுகூட்டத்தில் 1973 மார்ச் மாதத்தின்போது , கூட்டத்தில் இருந்த பகுதியினர் ஆர்வமிகுதியில் உ.சு.வாலிபன் பற்றி கேட்ட போது மே மாதம் 2 வது வாரம் உ.சு. வாலிபன் திட்டமிட்டபடி வெளியாகும் என்று அறிவித்தபோது மக்கள் இடையே எழுந்த மகிழ்ச்சி ஆரவாரம் அடங்க வெகுநேரமானது.
7.சத்யா ஸ்டுடியோவில் பின்னணி இசை சேர்ப்பு நடக்கும்போது, தி.மு.க. வின் அடக்கு முறை, அராஜக ஆட்சியில் வேண்டுமென்றே அந்த பகுதியில் மின்வெட்டை அதிகபடுத்தி மின் விநியோகத்தை சராசரி
அளவைவிட குறைந்த அளவில் அளித்து தொல்லைகள் கொடுத்த காலமும் உண்டு.
8. உ.சு. வாலிபன் வெளியாகும் தருணத்தில் சுவரொட்டிகளுக்கு
மாநகராட்சிகள் வரி அதிகம் விதித்தால் சுவரொட்டிகள் ஓட்ட முடியவில்லை. முதல் வெளியீட்டில் சுவரொட்டி விளம்பரம் இல்லாமல் ஓடிய ஒரே படம்
9. உ.சு. வாலிபன் வெளியான பெருவாரியான் அரங்குகளில், மின்வெட்டு
அமுலில் இருந்த காரணத்தினால் , ஜெனெரேட்டர்கள் பொருத்தப்பட்டு
படம் வெளியானது. மின்வெட்டை பற்றி வாய் கிழிய பேசும் தி,மு.க. வினர் இந்த திரைப்படம் வெளியிடாமல் இருக்க அந்த காலத்தில்
எவ்வளவு நெருக்கடி கொடுத்தார்கள் என்பது ஊரறிந்த விஷயம்.
10. திரை அரங்கு உரிமையாளர்களுக்கும் படத்தை திரையிட்டால் பல
தொல்லைகளுக்கு ஆளாக நேரிடும் என பகிரங்கமாக அரசு இயந்திரம்
பயன்படுத்தப்பட்டது.
11. எக்ஸ்போ 70-ல் படமாக்கப்பட்ட ஒரே தமிழ் படம்.
12. மலேசியா, சிங்கப்பூர் , ஜப்பான், பாங்காக் ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம்.
13. 1973 க்கு முன்பும் , பின்பும் வெளியான/வெளியாகின்ற /வெளியாகபோகிற அனைத்து தமிழ் திரைப்படங்களின் வசூலையும் ,
பார்வையாளர்கள் எண்ணிக்கையிலும்/ திரை அரங்குகளில் ஓடும்
நாட்களையும் முறியடித்த /முறியடிக்கின்ற/முறியடிக்க போகின்ற
ஒரே சாதனை திரைப்படம்.
14.எப்போது திரையிட்டாலும் வசூலை வாரி குவிக்கும் விநியோகஸ்தர்களின் அமுதசுரபி.
15.தமிழ் திரைப்பட உலகில் முதன் முறையாக 25 அரங்குகளுக்கு மேலாக 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது
16.சென்னை தேவி பாரடைசில் அட்வான்ஸ் புக்கிங்கில் 160 காட்சிகள்
தொடர்ந்து அரங்கு நிறைந்தது. கரண்ட் புகிங்கில் தொடர்ந்து 227 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
17.அகஸ்தியா , உமா, வில்லிவாக்கம் ராயல் ஆகிய அரங்குகளிலும்
தொடர்ந்து 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்தது.
18.மதுரை மீனாட்சியில் 250 தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.
19.25 அரங்குகள் மேல் 100 நாட்கள் ஓடிய படம்.
20.சென்னை தேவி பாரடைஸ் 182 நாட்கள். அகஸ்தியாவில் 175 நாட்கள்
(வட சென்னையில் தினசரி 3 காட்சிகளில் ஓடிய ஒரே படம் )
உமாவில் 112 நாட்கள். வில்லிவாக்கம் ராயலில் 100 நாட்கள் ஓடிய ஒரே படம். திருச்சி பேலஸ் -203 நாட்கள். மதுரை மீனாட்சியில் 217 நாட்கள் பெங்களுரு -3 அரங்குகளில் 105 நாட்கள். இலங்கையில்
கொழும்பு கேபிடல் -200 நாட்கள்..
21.மறு வெளியீடுகளில் விநியோகஸ்தர்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
22.பாடல்களில் / பின்னணி இசையில் பிரம்மாண்டம்.
23.முதல் பாடலே (டைட்டில் ) அசத்தலானது. நமது வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும் - 1973-ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்தலில்
வெற்றி. உ.சு. வாலிபன் தயாரிப்பு /படமாக்கம் / வெளியீடு வெற்றி
என்று மக்கள் திலகம் ரசிகர்களுக்கும், புரட்சி தலைவர் தொண்டர்களுக்கும் இரட்டை இலையில் விருந்தளித்தார்.
24 .இரண்டாவது வாரத்திற்கு பின் 25 வது நாள், 50 வது நாள், 75 வது நாள் 100வது நாள், 125 வது நாள், 150 வது நாள், 175 வது நாள் என வெளியான மூன்று அரங்குகளிலும் பார்த்து ரசித்த ஒரே படம்.
25.முதல் நாள் ரிசெர்வேஷன் கியூ வரிசையில் தேவி பாரடைசில் டிக்கட்
வாங்க அண்ணா தியேட்டர் அருகில் காலை 10 மணியளவில் நின்று
இருந்தேன். அதன்பின்னர் வரிசையானது அண்ணா சிலை அருகே வரை சென்று விட்டது. இந்த செய்திகள் செய்திதாள்களில் வெளிவந்தன.
எனக்கு 13 வது நாள் மாலை காட்சிக்குத்தான் டிக்கட் கிடைத்தது . அப்போது நான் எஸ்.எஸ்.எல்.சி., முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்த சமயம். மிகவும்
சிரமத்திற்கு இடையே டிக்கட் ரிசர்வ் செய்தேன். நானும் மற்ற இரு நண்பர்களும்
வீட்டில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் நடந்தவாறு உ .சு.வாலிபன் சிறப்புகள் பற்றி பேசியபடி அரங்கை சென்று அடைந்தோம். முதல் நாள் முதல் 100 காட்சிகள்
அரங்கு நிறையும் வரை தினசரி மாலை காட்சிகளின்போது, ரசிகர்களின் பல்வேறு விமர்சனங்களை அறிந்து கொள்ள தேவி பாரடைஸ், அகஸ்தியா மற்றும் உமா திரை அரங்குகளுக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தேன். அப்போது பல நண்பர்கள் அறிமுகம் ஆனார்கள். இப்போது சிலர் மறைந்து விட்டனர். ஆனாலும் பழைய நண்பர்களின் தொடர்பு நீடிப்பதில்
மகிழ்ச்சி.
26. தியேட்டர்கள் திருவிழா கோலம் பூண்டன. தினசரி மாலை காட்சிகளின்போது தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா தியேட்டர்
களில் ரசிகர்கள் கூட்டம் பெருக ஆரம்பித்து, படத்தை வரவேற்று
ஆவலை அதிகபடுத்தி விமர்சித்தவாறு இருந்தனர்.
27.பகல் மற்றும் மேட்னி காட்சிகள் கண்டுகளித்தவர்கள் மின்வெட்டு
காரணமாக போதுமான அளவில் மின்விசிறிகள் இயங்காததாலும்
ஏ சி வேலை செய்யாததாலும் பல சிரமங்களுக்கு இடையே படத்தை
ரசித்து பார்த்து வெளிவரும்போது சட்டைகள் நனைந்தவாறு
வந்தனர். அந்த அளவில் படத்தோடு ஒன்றி போய்விட்டனர்.
28.,மிக குறைந்த செலவில் உலகம் சுற்றும் வாலிபன் படம் மூலம்
உலகத்தையே சுற்றி பார்க்க வைத்த பெருமை மக்கள் திலகத்திற்கே.
29. படத்தொகுப்பு மிக பிரமாதம்.அடுத்த காட்சி என்ன என்று ஆவலை
தூண்டுவதுபோல் அமைந்தது.
30. மெல்லிசை மன்னர் தன வாழ்நாளில் இந்த படத்திற்கு பின்னணி
இசைக்காகவும், பாடல்களுக்காகவும் உழைத்த உழைப்பு வேறு எந்த
படதிற்காகவாவது இருக்குமா என்பது சந்தேகமே. மக்கள் திலகம்.
எம்.எஸ். வி.யின் திறமையை நன்கு பயன்படுத்தி கொண்டார்.
31.சண்டை காட்சிகள் ஒவ்வொன்றும் ஒரு விதம். ஜூடோ ,
, ஸ்கேடிங் என பலவித வகைகளில் சண்டை
காட்சிகள் அமைத்து தன ரசிகர்களுக்கு மக்கள் திலகம் விருந்து
படைத்தார்.
32. பாடல்கள் புதுமை.இனிமை.அருமை. சிறந்த டைரகஷன் -எம்.ஜி. ஆர். என பெயர் பெற்ற படம்.
33. பத்திரிகைகள் பாராட்டு மழை பொழிந்தன. வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட மிக சிறந்த பொழுது போக்கு படம் என விமர்சித்தன.
ஆர். லோகநாதன்.
ஆனந்த விகடன் - திரை விமர்சனம்.
-------------------------------------------
http://i62.tinypic.com/b6u6x4.jpg
http://i59.tinypic.com/qox6xz.jpg
http://i61.tinypic.com/20gld84.jpg
http://i160.photobucket.com/albums/t...psoyuo6wii.jpg
Thanks to Ferdinand Lacour, FB.
http://i160.photobucket.com/albums/t...pseqrmy5v9.jpg
Thanks to Ferdinand Lacour, FB.
இனிய நண்பர்கள் திரு குமார் . திரு சைலேஷ் , திரு லோகநாதன் வழங்கிய உலகம் சுற்றும் வாலிபன் -படத்தின் மலரும் நினைவுகள் பதிவுகள் மிகவும் அருமை .
11.5.2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் தினம் .
நேற்றைய ஊடகங்களில் மக்கள் திலகத்தின் ஆயிரத்தில் ஒருவன் , கன்னித்தாய் , புதிய பூமி படங்கள் மற்றும் எல்லா ஊடகங்களிலும் மக்கள் திலகத்தின் படப்பாடல்கள் , ஒளிபரப்பாகியது .தமிழகமெங்கும் மக்கள் திலகத்தின் பாடல்கள் எல்லா இடங்களிலும் திருவிழாவாக கொண்டாடப்பட்டது .மக்கள் திலகம் எம்ஜிஆர் சிலைகளுக்கு மரியாதை செய்யப்பட்டது .மொத்தத்தில் மக்கள் திலகத்தின் தினமாக அமைந்து விட்டது .