http://i68.tinypic.com/bf165u.jpg
Printable View
Completion of 53 Years tomorrow. Kulamamal Radhai Write up by Murali.
குலமகள் ராதை
தயாரிப்பு: ஸ்பைடர் பிலிம்ஸ்
திரைக்கதை இயக்கம் : A.P. நாகராஜன்
வெளியான நாள் : 07.06.1963
திருச்சி. அங்கே வள்ளுவன் அச்சகம் வைத்து நடத்திக் கொண்டிருக்கும் சந்திரன். கலப்பு திருமணம் செய்து கொண்ட பெற்றோருக்கு பிறந்தவன். இன்று அவர்கள் இல்லை. அத்தை மட்டுமே. வேலையாட்கள் இருவர், வீட்டுக்காரர்கள் போலவே வாழ்கிறார்கள். சந்திரன் காதலிக்கும் பெண் ராதா. தாய் மற்றும் தனயன் அரவணைப்பில் வாழ்கிறாள். அண்ணி சுடு சொல்காரி. அந்த குடும்பத்தின் நெருங்கிய உறவினர் சாம்பமூர்த்தி. அவருக்கு ராதா சந்திரனை காதலிப்பது பிடிக்கவில்லை, போததற்கு ஒரு சமயம் அவரை சந்திரன் அவமானப்படுத்தி விட அவர்கள் காதல் நிறைவேறக் கூடாது என்று நினைக்கிறார். அவருக்கு ஒரு மகள் பத்மினி. தந்தையின் பணத்தாசை காரணமாக அவள் ஒரு காச நோய்க்காரனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனை இழந்து இன்று தந்தை வீட்டிலேயே வாழ்கிறாள் பத்மினி. அவள் நிலையை பார்த்தும் அவர் தந்தை மனம் மாறவில்லை.
ராதாவின் தாய் மட்டும் கல்யாணத்திற்கு ஒத்துக்கொள்கிறாள். சந்திரன் உள்ளூரில் கல்யாணம் நடந்தால் எதிர்ப்பு வரும் என்று நினைத்து அத்தையையும் வேலைக்காரப் பெண்ணையும் பழனிக்கு அனுப்பி அங்கே கல்யாண ஏற்பாடுகள் செய்ய சொல்கிறான். கல்யாணத்திற்கு பிறகு சென்னைக்கு போய் வேலை தேடி கொள்ளலாம் என்று திட்டமிட்டு நண்பர்கள் உதவியுடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கும் எடுத்து வைக்க ஏற்பாடுகள் செய்கிறான். முதல் நாள் இரவு வீட்டிலிருந்து ராதா வந்து சேர வேண்டும், பிறகு டாக்சியில் பழனி சென்று கல்யாணம் செய்து கொள்வது என்பது பிளான்.
ராதா வீட்டை விட்டு கிளம்பும்போது எதிர்பாராது அண்ணி வந்து விட, திட்டமெல்லாம் தவிடு பொடியாகி விடுகிறது. சாம்பமூர்த்தி வேறு வந்து விடுகிறார். ராதாவை காணாமல் அவளை தேடி அவள் வீட்டிற்கு வருகிறான் சந்திரன். அவனிடம் இந்த கல்யாணம் நடக்காது.இங்கிருந்து போய் விடுங்கள் என்று ராதாவே சொல்ல வேண்டும், இல்லாவிட்டால் தன்னிடம் இருக்கும் துப்பாக்கியால் சந்திரனை சுட்டு விடுவேன் என்று சாம்பமூர்த்தி மிரட்ட, வேறு வழியில்லாமல் அதேபடி செய்கிறாள் ராதா. மனம் உடைந்து வரும் சந்திரனை மீண்டும் சென்று பார்க்க சொல்கிறான் வேலைக்காரன். விருப்பத்திற்கு மாறாக நடந்த சம்பவத்தால் மன உளைச்சலுக்கு
ஆளான ராதாவிற்கு டாக்டர் தூக்க மருந்து இன்ஜக்சன் கொடுக்க அவள் ஆழ்ந்த மயக்கத்தில் இருக்கிறாள். இது தெரியாமல் ஜன்னல் வழியாக அவளை எழுப்ப முயற்சிக்கும் சந்திரன் அவள் தூக்கத்தை கண்டு கோபம் கொள்கிறான். தன்னை ஏமாற்றி விட்டாள் என்ற நினைப்பில் வீட்டையே காலி செய்து கொண்டு சென்னை புறப்பட்டு விடுகிறான். அத்தையையும் சென்னைக்கு வரவழைக்கிறான். மறு நாள் காலை அவனை தேடி வரும் ராதா அவன் ஊரை விட்டு போன சேதி கேட்டு உடைந்து போகிறாள். வீட்டை விட்டு வெளியேறும் அவளையும் அவள் தாயையும் சாம்பமூர்த்தியின் மகள் தனி வீட்டில் குடி வைக்கிறாள்.
இதனிடையே சந்திரன் சென்னை செல்லும் வழியில் ஒரு பெண் லிப்ட் கேட்கிறாள். அவள் ஒரு சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகள் லீலா. திண்டிவனத்திற்கு ஒரு கல்யாணத்திற்கு வந்த அந்த பெண் கார் வழியில் ரிப்பேர் ஆனதால் மாலை காட்சிக்கு முன்பாக சென்னை சென்று சேர்வதற்காக லிப்ட் கேட்கிறாள். அவளை ஏற்றி கொண்டு அவள் இடத்திற்கு சென்று இறக்கி விட்டு அந்த சர்க்கஸ் காட்சியையும் பார்த்து விட்டு செல்கிறான். இப்போது வீட்டில் அத்தை, வேலையாட்கள் இருக்கிறார்கள். சென்னையில் வீடு வாடகைக்கு எடுத்த விவரம், அதன் அட்ரஸ் எல்லாம் ராதாவிற்கு தெரியுமாதலால் அந்த முகவரிக்கு, நடந்த முழு விவரங்களையும் ஒரு லெட்டரில் எழுதி ரிஜிஸ்டர் போஸ்ட் அனுப்புகிறாள். அனுப்பியவர் பெயர் பார்த்து விட்டு சந்திரன் அதை வாங்காமல் திருப்பி அனுப்பி விடுகிறான். லெட்டர் திரும்பி வந்தவுடன் ராதா தளர்ந்து விடுகிறாள்.
இதனிடையே வேலைக்கு முயற்சி செய்யும் சந்திரனுக்கு தன் சர்க்கஸ் கம்பெனியிலே வேலை வாங்கி தருகிறாள் லீலா. பார் விளையாட்டை விரைவில் கற்றுக் கொண்டு சந்திரன் அந்த குழுவில் ஒரு முக்கியமான நபராகிறான். லீலா மனது சந்திரனை நாடுகிறது. ஆனால் சந்திரன் பிடி கொடுக்காமல் இருக்கிறான். அவன் அத்தை அதை பற்றி பேச்செடுக்கும் போது கூட அடக்கி விடுகிறான். லீலாவின் தந்தை இது போன்ற ஒரே தொழில் செய்பவர்கள் கல்யாணம் செய்து கொள்வதால் ஏற்பட கூடும் சிக்கல்களை விளக்குகிறார். ஆனாலும் அவள் மனம் மாறவில்லை.
சென்னை ப்ரோக்ராம் முடிந்து கம்பெனி திருச்சி கிளம்புகிறது. அதை தவிர்க்க நினைக்கும் சந்திரனை கட்டாயப்படுத்தி கூட்டி செல்கிறாள் லீலா. அவள் தன் மன விருப்பத்தை சந்திரனிடம் தெரிவிக்க அவன் மறுத்து விடுகிறான். இந்நிலையில் திருச்சி வருகிறது சர்க்கஸ் கம்பெனி.
ராதாவின் தாய் மாமன் மலேசியாவிலிருந்து திருச்சி வருகிறான். அவனை மணந்து கொள்ள சொல்லும் தாயின் வார்த்தையை ராதா மறுக்கிறாள். மாமன் அவளின் கதையை கேட்டு அவளுக்கு உதவி செய்வதாக உறுதியளிக்கிறான். சென்னை சென்று சந்திரனை சந்தித்து எல்லா உண்மைகளையும் சொல்லி அவர்கள் இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்கிறான். ஆனால் அவன் சென்னை செல்லும் போது சந்திரன் திருச்சி வந்து விட அவனது அத்தையை சந்தித்து நடந்த உண்மைகளை கூறி அவர்களை திருச்சிக்கு கூட்டி வருகிறான்.
சர்க்கஸ் கம்பெனி போஸ்டரில் சந்திரனை பார்த்து விட்டு, அவனை காண சர்க்கஸ் கூடாரம் செல்லும் ராதா அங்கே லீலாவை சந்திக்கிறாள். அவள் சந்திரன் இல்லை என்று சொல்லி அனுப்பி விடுகிறாள். லீலா மனதில் ஒரு சந்தேகம். அதை சந்திரனிடம் கேட்க இருவருக்கும் சண்டை வருகிறது. காட்சி நடக்கும் போது ராதாவை பார்த்து விடும் சந்திரன் பாரிலிருந்து நிலை தடுமாறி வலையையும் தாண்டி கீழே விழ தலையில் அடிப்பட்டு விடுகிறது. மருத்துவமனைக்கு பார்க்க செல்லும் ராதாவை அனுமதிக்க லீலா மறுக்க, அவள் லீலாவிற்கு தெரியாமல் உள்ளே வர, கட்டிலில் கிடக்கும் சந்திரன் ராதாவை பார்த்து கோபப்பட்டு கத்த, கிளைமாக்ஸ் அரேங்கேறுகிறது.
அகிலன் எழுதிய வாழ்வு எங்கே நாவலே குலமகள் ராதை திரைப்படமானது.
இந்த படத்தை ஓரிரு முறை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது பார்த்த போது பளிச்சென்று தெரிந்த இரண்டு விஷயங்கள். லாஜிக் மற்றும் இயல்பு தன்மை.
பொதுவாக படங்களில், தமிழ் படங்களில் லாஜிக் எதிர்பார்ப்பது பெரிய ஏமாற்றத்தைக் கொடுக்கும். ஆனால் ஆச்சரியமாக இந்த படத்தில் அது இருக்கிறது. காதலித்து ஊரை விட்டு ஓடி போய் கல்யாணம் செய்து கொள்ள திட்டமிடும் போது செய்யும் ஏற்பாடுகளில் லாஜிக் இருக்கிறது. திட்டப்படி காதலி வரவில்லை என்றால் காதலன் தேடி போக மாட்டானா என்ற கேள்விக்கு லாஜிக்கான பதில் இருக்கிறது. திடீரென்று காதலி மறுத்து பேசினால் காதலன் சந்தேகப்பட மாட்டானா என்ற கேள்விக்கு பதில் இருக்கிறது. சென்னையில் காதலனின் அட்ரஸ் எப்படி தெரியும்? பதில் இருக்கிறது. இரண்டாவது நாயகி நாயகனை சந்திப்பதில் லாஜிக். சென்னையில் வேலை, வருமானம் இல்லாமல் ஒருவன் வாழ முடியுமா என்ற கேள்வி வரும் அதற்கும் பதில் இருக்கிறது. அதன் பின் நிகழும் சம்பவக் கோர்வைகளில் எல்லாம் லாஜிக் இருக்கிறது. ஒரு வேலை அகிலன் கதையிலே இப்படி தான் எழுதியிருந்தாரோ தெரியவில்லை (படித்ததில்லை). எப்படியிருப்பினும் ஏ.பி.என் அதை அழகாக செய்திருக்கிறார்.
இரண்டாவது விஷயம் வசனம். ரொம்ப ரொம்ப இயல்பான வசனம். கூடுதலோ குறைவாகவோ இல்லாமல் எந்த இடத்திற்கு எது தேவையோ அதை மட்டுமே எழுதியிருக்கிறது ஏ.பி.என்னின் பேனா. ஒரு பெண் தான் காதலிக்கும் ஆணைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சொல்லும் போது அந்த வீட்டில் உள்ள பெரியவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை இதில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அது போல் ஒவ்வொரு பாத்திரமும் தன் நிலையை விளக்கும் போது கொஞ்சம் கூட செயற்கை தன்மை இல்லாமல் இருப்பது சிறப்பு.
நடிகர் திலகத்தை பொருத்த வரை அவர் ஹேர் ஸ்டைல்(சொந்த முடி) தொட்டு ஒவ்வொரு விஷயமும் இயல்போ இயல்பு. இந்த மாதிரி படங்களை பார்க்கும் போது அவரைப்பற்றி அவர் படங்களை பற்றி எந்தளவுக்கு தவறாகவே மதிப்பிடப்பட்டிருக்கின்றன என்பது புரிந்து கொள்ள முடிகிறது. எந்த ஒரு காட்சியிலும் இயல்பான நடிப்பை தாண்டி அவர் எதுவும் செய்யவில்லை. இந்த காலக்கட்டதில் இப்படி ஒரு நடிப்பு வந்திருந்தால், அந்த நடிகர் இயல்பாகவே வாழ்ந்திருக்கிறார் என்று உயர்வு நவிற்சி செய்திருப்பார்கள்.
முதல் காட்சியில் கொஞ்சி பேசும் கன்னடத்து பைங்கிளியை மிமிக்ரி செய்வதில் ஆரம்பித்து கிளைமாக்ஸ் வரை ஒரே லெவல் மெயின்டெயின் செய்திருக்கிறார். உணர்ச்சி வசப்படும் வாய்ப்பு வரும் போது கூட(காதலி வரமாட்டேன் என்று சொல்லும் போது) என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார். அது போல் ஊருக்கு திரும்பி போகலாம் என்று சொல்லும் அத்தையிடம் பேசும் இடமும் அப்படியே. காதலி மேல் கோபமாக இருக்கும் அவர் ராதா கல்யாணம் என்ற போஸ்டரை கிழித்து விட, அவரை ஒருவன் துரத்த, திருடன் என்று நினைத்து ஒரு கும்பல் துரத்த, சர்க்கஸ் கம்பெனி கூடாரத்தில் நுழையும் அவரை கூர்கா பிடிக்க அங்கு வரும் தேவிகா கூர்காவை போக சொல்லிவிட்டு எதாவது தேவை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாமே என்று சொல்ல, இந்த மாதிரி காட்சியில் நாயகன் ரோஷம் பூண்டு பேசுவதைத்தான் கேட்டிருக்கிறோம். ஆனால் இவர் அந்த இடத்தில் "அடங்கொப்புரானே! திருடன்னே முடிவு கட்டியாச்சா? விவரம் தெரியாமே ஒருத்தன் துரத்த, விஷயம் தெரியாமே ஒரு கூட்டம் துரத்த, பாஷை தெரியாமே உங்க கூர்காகிட்டே நான் மாட்டிக்கிட, உங்க பங்குக்கு நீங்களும் அட்வைஸ் பண்ணுறீங்களா?".
காரில் லிப்ட் கேட்டு ஏறிக்கொள்ளும் தேவிகா இவர் படித்துக்கொண்டிருக்கும் பாரதி கவிதைகளை வாங்கி தீர்த்தக்கரையினிலே -- என்று படிக்க ஆரம்பித்து, வார்த்தை தவறி விட்டாய் கண்ணம்மா என்று படிக்க, இவர் பிடுங்கி வைக்க, ட்ரான்சிஸ்டர் எடுத்து பாடல் வைக்க, அது காதல் பாட்டு பாட அதையும் பிடுங்கி வைத்து விட்டு " சும்மா உட்கார்ந்து வர மாட்டீங்களா?" என்று அவர் சொல்லும் அழகு பார்த்து ரசிக்க வேண்டிய ஒன்று. அவரது அத்தை இவரிடம் லீலாவே தன் ஆசையை உன்னிடம் வெளிப்படுத்தினால் என்று கேட்க எதோ பதில் சொல்வது போல் எழுந்து "போ தூங்கு! அப்புறம் பேசிக்கலாம்" என்று பதில் சொல்வது கிளாஸ். அது போல இமேஜ் பற்றி துளி கூட அலட்டி கொள்ளாதவர் இவர் என்பதற்கு இன்னொரு உதாரணம், தேவிகா நடிகர் திலகத்திடம் தன் ஆசையை வெளிப்படுத்தும் சீன். "நாம் இருவரும் சேர்ந்து சர்க்கஸ் அரங்கில் நிற்பதை பார்க்கும் மக்கள் என்ன நினைப்பாங்கா" என்று தேவிகா கேட்க, அதற்கு நடிகர் திலகம் சொல்லும் பதில் " இவ்வளவு எக்ஸ்ஸர்சைஸ் பண்ணியும் இவ்வளவு குண்டா இருக்காங்களேன்னு நினைப்பாங்க". எந்த நாயகன் சொல்லுவான்? இப்படி நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
சரோஜாதேவி முற்பகுதியில் அழகு + குறும்பு. அச்சகத்திற்கு வரும் அவரை சிவாஜி ஏன் வந்தாய் என்று கேட்க அவர் வரக்கூடாதா என்று திருப்பி கேட்க இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லுவார். சரோஜாதேவி கிளம்பும் போது நடிகர் திலகம் பக்கத்தில் வர இது நம்ம லொக்கேஷன் இல்லை என்று சொல்லிவிட்டு போவது அவருக்கே உரித்தான குறும்பு. கதையின் போக்கிலே அவரது அந்த குறும்பு தொலைந்து போனாலும் கூட சோகத்தை அடக்கியே வாசிக்கிறார்.
தேவிகா எப்போதும் போல குறை வைக்காத நடிப்பு. அழகாக இருப்பதிலும் சரி, பாத்திரத்தை உணர்ந்து நடிப்பதிலும் சரி தான் ஒரு நல்ல நடிகை என்பதை நமக்கு உணர்த்துகிறார்.
சிறிது நேரமே வந்தாலும் சந்தியா அண்ணி கதாபாத்திரத்தில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். சரோஜா தேவியின் தாயாக கண்ணாம்பா, நடிகர் திலகத்தின் படத்தில் கடைசியாக இடம் பெற்றது இந்தப் படத்தில்தான். வேலைக்காரி முனியம்மாவாக வரும் மனோரமா தில்லானா டயலாக் ஸ்டைலை இந்த படத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார். வில்லன் மனோகர் நல்லவனாக வர, சாரங்கபாணி வில்லனாக வருகிறார். சரோஜாதேவியின் அண்ணனாக பகவதி ஜஸ்ட் like that வருகிறார். அது போல சர்க்கஸ் முதலாளியாக வி.கே.ஆர். பத்மினியாக வந்து சரோஜா தேவிக்கு உதவி செய்யும் ரோலில் டி.வி.குமுதினி.
முதலில் சொன்னது போல ஏ.பி.என். வசனங்கள் வெகு இயல்பு. போனஸ் மற்றும் சம்பள உயர்வு கேட்கும் சர்க்கஸ் கோமாளிகள் கூட்டத்தில் தன் வேலையாளும் இருப்பதை பார்த்து விட்டு "உன்னை மாதிரி விஷயம் தெரியாமலே கூட்டம் கூடறவன் நாட்டிலே அதிகமாகிட்டான்" என்று நடிகர் திலகம் சொல்லும் வசனம் அன்றைய சூழலுக்கு எழுதப்பட்டது போலும்.
இசை மாமா மஹாதேவன். எட்டு பாடல்கள் முற்பகுதி முழுக்க டி.எம்.எஸ். பிற்பகுதி முழுக்க சுசீலா. அனைத்துமே நல்ல பாடல்கள்.
உலகம் இதிலே அடங்குது - பத்திரிக்கை செய்திகளை பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் கண்ணதாசன் கலந்து எழுதிய பாடல்.
சந்திரனை காணாமல் அல்லி முகம் மலருமா- ஒரே டூயட். கண்ணதாசனின் வார்த்தை விளையாட்டு.
ராதே உனக்கு கோபம் ஆகாதடி- தன் ரோல் மாடல் பாகவதரின் பாடலை டி.எம்.எஸ். பாட கிடைத்த சந்தர்ப்பம்.
உன்னை சொல்லி குற்றமில்லை- படத்தின் மிக பெரிய ஹிட் பாடல்.
இரவுக்கு ஆயிரம் கண்கள்- மற்றுமொரு ஹிட் பாடல்.தேவிகா பாடுவது.
ஆருயிரே மன்னவரே- சரோஜாதேவி, லெட்டர் திரும்பி வந்தவுடன் பாடுவது.
கள்ள மலர் சிரிப்பிலே- தேவிகா தனி பாடல்
பகலிலே சந்திரனை பார்க்க போனேன்- மீண்டும் கண்ணதாசனின் வார்த்தை ஜாலம்.
ஆற்றொழுக்கு போன்ற கதை, தெளிந்த நீரோடை போன்ற பாத்திரங்கள் அதேற்கேற்ற நடிகர்கள், நடிகர் திலகத்தின் வெகு இயல்பான நடிப்பு, இவை அனைத்தும் இருந்தும் இந்த படம் பெரிய வெற்றியைப் பெறாமல் ஒரு average வெற்றியை மட்டுமே பெற்றது. ஒரு வேளை சினிமாடிக் திருப்பங்கள் எதுவும் இல்லாத கதை என்பதே கூட ஒரு மைனஸ் பாய்ன்டாக இருந்திருக்கலாமோ? இல்லை இந்த கதைக்கு இவ்வளவு பெரிய நடிகர் திலகம் தேவையில்லை என்று நினைத்திருப்பார்களோ? இல்லை வழக்கம் போல் இதற்கு எழுபது நாட்களுக்கு முன்பு வந்த இருவர் உள்ளம், இந்த படம் வெளியாகி 35 நாட்களில் ரீலீஸான பார் மகளே பார் என்று இரண்டு பவர்புல் படங்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டது தான் காரணமோ?
எப்படியிருப்பினும் பெற வேண்டிய வெற்றியை பெறாமல் போன படங்களில் குலமகள் ராதைக்கும் இடம் உண்டு.
http://i1065.photobucket.com/albums/...psgv0zymou.jpg
ராயல் தியேட்டரில்
http://i1065.photobucket.com/albums/...pszwws0ng6.jpg
டவுன்ஹால் பகுதியில்
கர்ணன் யார்?
இந்தக்கேள்வியைக் கேட்டால் சிறு குழந்தை கூறி விடுமே பதிலை.
அப்படியிருக்க கர்ணனின் முகத்தை மறைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட வேண்டியதின் காரணம் என்ன? நான் பார்த்த இரண்டு போஸ்டர்களை மட்டுமே படம்பிடித்து பதித்துள்ளேன்.இன்னும் எத்தனை இடங்களில் இந்த குளறு படிகளோ?
அதுவும் இரண்டு வேறு வேறு போஸ்டர்கள் இணைத்து ஒட்டப்பட்டுள்ளன.இதனால் இரண்டு போஸ்டர்களின் மீதி பாதி பழைய பேப்பர்கடைக்குச் சென்றுவிடும்.இல்லையென்றால் காழ்ப்புணர்ச்சியில் கிழிக்கப்பட்டுவிடும்.
போஸ்டர் ஒட்டிகளுக்கு கூட இன்னும் இவ்வளவு காலம் ஓடியும் கூட அந்த சரித்திர சாதனையாளர் மேல் என்ன வெறுப்போ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.ஒன்றை மட்டும் அவர்கள் புரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.அல்லது பகுத்தறிவை மூளையில் ஏற்றிக்கொள்ள மறுக்கிறார்களா? எதுவும் விளங்கவில்லையே?அவருடைய படங்களின் போஸ்டர்களை ஒட்டியதால் எத்தனை குடும்பங்கள் நிரந்தர வருமானம் பெற்றிருக்கும்?அதுவும் அரை நூற்றாண்டு காலத்திற்கும் அதிகமாக அல்லவா?
நல்ல படம்.நல்ல கருத்துக்கள்.மிகச் சிறந்த நடிப்புக்கு நாங்கள் பயன்பட மாட்டோம் என்பது எந்த கொள்கையில் சேர்த்தி என்பது விளங்கவில்லை.
கோவை ராயலில் கர்ணன்.
--------------------------------------------------
படம் திரையிடப்பட்ட விவரமே பெரும்பான்மையோர்க்கு தெரியவில்லை.டவுன்ஹால் அதனை சார்ந்த பகுதிகளில் மட்டுமே போஸ்டர்களையே காண முடிந்தது.நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்கே படம் திரையிடப்பட்டது தெரியவில்லை.வருகை புரிந்த ரசிகர்கள் பத்து பேர் மட்டுமே.அப்படியும் பொதுமக்கள் 100 நபர்களுக்கு மேல்
வந்திருந்தனர்.வழக்கமாக வரும் தீவிர சிவாஜி ரசிகர்கள் ஒருவர் கூட இல்லை.போன் செய்து வரவில்லையா?என கேட்டால் படம் திரையிடப்பட்டுள்ளதா என ஆச்சரியக் கேள்வியை பதிலாக தந்தனர்.
இதற்கு முன் திரையிடப்பட்ட படம் ஒன்று நகரில் எல்லா இடங்களிலும் ஆக்கிரமித்திருந்தது. ஆனால் இவருடைய படங்களுக்கு மட்டும் ஏன் விளம்பர தணிக்கைககள்?
இந்த செயல்கள் இந்தப்படத்திற்கு மட்டுமல்ல.பல வருடங்களாகவே நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன.அதற்காகத்தான் இந்தப் பதிவு.
இதை காழ்ப்புணர்ச்சி என்று கொள்வதா?இன்னும் அவரால் செய்யப்படும் சாதனைகளை ஏற்க முடியாத மன திடம் என்று கொள்வதா?தங்களது அர்ப்பணிப்பு உணர்வைஇப்படி வெளிப்படுத்தி அதன்மூலம் தங்களுக்கு ஒரு சிற்றின்பம் கிடைக்கின்றது என்ற எண்ணங்களா?
மந்தையில் திரிந்து சந்தைக்கு மட்டுமே வரும் ஆடு மாடுக் கூட்டங்களையா அவர் வளர்த்து விட்டார்.பெரும்படை, அதிகாரம் பலம் ஏதுமின்றி உண்மையாயும் உழைப்பிலேயும் வந்த பணத்தாலே வளர்ந்த கூட்டத்தை சீண்டுவதே வாடிக்கையாகி விட்டது சிலருக்கு. இதுவே அவரின் புகழ் மங்கி விடவில்லை என்பதற்கான அத்தாட்சிதானே.இதுவே அவர் பெற்ற வெற்றியல்லவோ.சிவகாமியின் செல்வன் சொல்கிறானே அதற்கு சாட்சி.
பார்வைக்கு:
1.திரு.சாந்தி சொக்கலிங்கம்
2.அனைத்து சிவாஜி மன்றங்கள்
3.பொது ஜனம்.
(இது எனது யூகம் மட்டுமே)
இது பழைய போஸ்ட்டர்ஸ்டர்போல் தெரிகிறது
முன்னர் மறுவெளியீடு செய்யதபொழுது ஒட்டியதுபோக
மிகுதி இருந்ததை மீண்டும் பாவித்துள்ளார்கள் என்று தெரிகிறது.
போஸ்ட்டர் அச்சடிக்கும்பொழுது பகுதி பகுதியாக அச்சடித்து
ஒட்டும்பொழுது சேர்த்து ஒட்டி முழுமையாக்குவார்கள்
இங்கே ஒட்டப்பட்டது பழைய போஸ்ட்டர் எனவே அந்த இடைப்பட்ட பகுதி
காணாமல் போயிருக்கலாம் அல்லது தேடும்பொழுது கிடைக்காமல் இருந்திருக்கலாம
என்பது எனது யூகம்.
இது பழைய போஸ்ட்டர் என்பதற்கு மேலே குறிப்படப்பட்டிருக்கும் தியேட்டர் பெயர்களை கவனியுங்கள்
மற்றும் ராயல் தியேட்டர் என்பது தனியாக ஒட்டப்பட்டுள்ளது
எனவே ஒட்டியவர்கள் தவறாக ஒட்டவில்லை என்றே தோன்றுகிறது.
எதற்கும் நல்லதையே நினைப்போம்.
what an actor
யாழ்- ராணி உத்தமன்
50 வது நாள்
http://oi65.tinypic.com/24kyx69.jpg
மையம் திரியில் 4000 பதிவுகளைக் கடந்தமைக்கு சிவாஜி செந்தில் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
கோபு.
Sivajisenthil congrats for the 4000 landmark acheived. Continue tour valuable postings
blessings
http://quintype-01.imgix.net/thequin...&w=976&fm=pjpg
நடிகர் திலகத்தைப் பற்றி வித விதமான கான்செப்ட்கள் எடுத்து, வித்தியாச தலைப்புக்கள் தந்து, அறிவுபூர்வ ரத்ன சுருக்கமாக விளக்கங்கள் தந்து, பதிவுகளை அள்ளி வழங்கும் சிவாஜி செந்தில் சார் 4000 பதிவுகளை நச்சென்று கடந்து தொடர்வதற்கு என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் செந்தில்வேல் சார்.
Congrats Mr. Senthilvel for your 4000 posts.
சிவாஜி செந்தில் சார்
4000பதிவுகள் கடந்தைமைக்கு பாராட்டுக்கள்.மேலும் புது புது கோணங்களில் பதிவுகளை நீங்கள் பதிய வேண்டும் அதை நாங்கள் ரசிக்க வேண்டும்.நடிகர்திலகத்தின் புகழ் பரவ வேண்டும்.
நடிகர்திலகத்தின் பட ஆய்வுக் கட்டுரைகளை தங்கள் எழுத்தில் காண விரும்புகிறோம்.ஆங்கில மற்றும் இந்தி படங்களின் ஒப்பீடுகளைத் தவிர்த்து முழுக்க நடிகர்திலகத்தின் படங்களின் சிறப்புக்களை எழுத வேண்டுகிறோம்.உங்களுடைய எழுத்து பாணியில் படிக்க ஆவலாக உள்ளது.
நன்றி.
சிவாஜி செந்தில்,
திரு.செந்திலின் கருத்தை நான் வரவேற்கிறேன். தாங்கள் கொஞ்சம் பாணி மாற்றி நடிகர்திலகத்தின் சிறப்பை மட்டும் கொண்டு பதிவுகளை போடவும். நாங்கள் எதிர்பார்ப்பது,எங்கள் ஒரே சக்ரவர்த்தி நடிகர்திலகம் சார்ந்த பதிவுகளை. இதைத்தான் நாசுக்காக செந்தில் சொல்கிறார். ஜெமினி வரை ஓகே.(நண்பர் என்ற வகையில்) மற்ற முகங்கள் வேண்டாமே.
உத்தமன் 125 வது நாள்
http://oi63.tinypic.com/35m1dab.jpg
பயங்கர சண்டை (ராஜா)
http://oi66.tinypic.com/2hoxlpl.jpg
பறக்கும் அடி (ராஜா)
http://oi65.tinypic.com/abtsm0.jpg
'ராஜா' நினைவுகள்
புதிய பதிவு
http://i1087.photobucket.com/albums/..._000049564.jpghttp://i1087.photobucket.com/albums/..._001000550.jpg
நேற்று முன்தினம் என்னைப் பொறுத்தவரை வருடம் மீண்டும் 1972. தேதி 26 ஜனவரி. 'ராஜ'போக தினம். காலை ஷிப்ட் முடிந்து வந்து மதியம் 2.15 க்கு சாப்பிட உட்கார்ந்தால் ஜெயா மூவிஸில் 'ராஜா'. அப்புறம் சாப்பாடு இறங்குமா? முழு கவனமும் நம் 'ராஜா' மீதே. கூடவே விஸ்வத்தின் மீதும். அந்தக் கணமே கோபாலும், கிருஷ்ணாவும், கார்த்திக் சாரும், முரளி சாரும், ஆதிராம் சாரும் நெஞ்சில் 'டபக்'கென புகுந்து குந்திக் கொண்டார்கள். 'சாப்பிடுங்க...சாப்பிடுங்க' என்று மனைவி படுத்த, கைவிரல்கள் தட்டில் கோலம் போட, எதையுமே செய்யத் தோணாமல் மெய் மறந்து 'மெய்யழ'கனை இமையாமல் மெய்யாக ரசித்துக் கொண்டிருந்தேன். என்னவோ அப்போதுதான் பார்ப்பது போல அனைத்துக் காட்சிகளையும் புத்தம் புதுமையாக உணர முடிந்தது. பிரிண்ட் வேறு பளிங்கு போல இருந்ததால் பேராண்மை மிக்க 'ராஜா' பேரழகன் இன்னும் நங்கூரமிட்டு நெஞ்சில் புதைந்தார்.
'ராஜா'வின் ஹேர் ஸ்டைலும், டிரெஸ் கலக்கல்களும், குறும்பு கொப்பளிக்கும் கண்களும், நீள்கிருதாவும் ஒரு காதலி அவள் காதலனை இன்ப இம்சை செய்வதை விடவும் அதிகமாக நம்மை இம்சை செய்பவை. பிறந்தால் 'ராஜா' போல பிறக்க வேண்டும். வாழ்ந்தால் அவனைப் போல ஜாலியாக வாழ வேண்டும். கிருஷ்ணனின் குறும்பும், சகுனியின் தந்திரமும் கலந்த வித்தியாசக் கலவை 'ராஜா'. 'தேவி சொர்க்க'த்தின் ஒரே வசூல் ராஜாவும் இவனே.
எந்தக் காட்சியை சொல்வது?
எத்தனயோ முறை அலசி விட்டாலும் அலுக்காத காட்சிகள். ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. 'ராஜா'வுக்கு கீழே ராஜாங்கம் பண்ணும் விஸ்வம், நாகலிங்க பூபதி, தர்மலிங்க பூபதி, தாரா டார்லிங், 'ராஜா'வின் ராதா டார்லிங், குமார், பட்டாபி, சீதா, ஜானகிராமன்கள், எதிரணி 'கவர்ச்சி வில்லன்' ஜம்பு, செம்பட்டைத்தலை பின்தொடர்பவர், சந்தர் என்ற பாபு, அந்த வயசிலும் கூட ஊசியில் நூலைக் கோர்த்து விடும் நம்பிக்கை கொண்ட தாய் பண்டரி, காரியத்தில் கண்ணாயிருக்கும் போலீஸ் கமிஷனர் சி.கே.பிரசாத் என்று பார்த்து பார்த்து செதுக்கப்பட்ட ராஜேந்திரன் சி.வி.ஆரின் வார்ப்புகள். சொல்லாமல் விட்டதும் நிறைய.
உண்மை அசலை விட இந்த நகலுக்கு பவர் ஜாஸ்தி. வசூல் ஜாஸ்தி. வரவேற்பும் ஜாஸ்தி. அசலை நகலாக்கவும், நகலை அசலாக்கவும் என் 'ராஜா'வுக்குத் தெரியாதா என்ன! கை தேர்ந்த கில்லாடி கிட்டு அல்லவா அந்த அழகன்! 'ஜானி'யை மண்ணைக் கவ்வச் செய்தவன் இந்த 'ராஜா'.
பார்க்கும் போதே பரவசத்தின் உச்சத்தில் டைப் செய்ய கை பரபரத்தது. 'மெல்லிசை மன்னரி'ன் வல்லிசையில் கேப் அணிந்த பச்சைக் கலர் உருவ கார்ட்டூன் மனிதர்கள் திகிலூட்ட டைட்டிலில் ஓடிவரும் போதும், 'ராஜா ராஜா ராஜா ராஜா' என்ற ஆண்களின் பின்னணி கோரஸ்களின் மத்தியில் 'ததததததம் ததததததம் தஜதம்...'ததததததம் ததததததம் தஜதம்' என்ற ஆரவார சத்தங்களுக்கிடையில் மன்னரின் பிரம்மாண்ட இசைப் பின்னணி புகுந்து விளையாட, இதுவரை நாம் அனுபவிக்காத இன்பமெல்லாம் ஒன்று சேர அனுபவிப்பது போன்ற பிரமை இந்த ராஜாவின் டைட்டிலில் மட்டும்தான் கிடைக்கும். மன்னரின் பேங்கோஸ் உருட்டல்கள் மிரட்டல்கள்தானே? அப்படியே 'ஜெமினி கலர் லேப்' என்று டைட்டில் பச்சை நிற பட்டை சூர்யக் கதிர்களுக்கிடையில் ஒளிரும்போது அந்த பிரம்மாண்ட இசை அப்படியே தடம் புரண்டு வெறும் விசில் ஒலியாக பியானோவுடன் மட்டுமே இணைந்து மாயாஜாலங்கள் செய்யுமே! விதவிதமான வண்ண வண்ண சுழலும் கட்டங்களுக்கிடையே டைட்டில் ஏற்படுத்தும் பரவசத்தை இதுவரை உலகில் எந்தப் படத்திலுமே நான் கண்டதில்லை. டைட்டில் என்றால் அது 'ராஜா' மட்டுமே. அது போல 'ராஜா' என்ற டைட்டிலுக்கு 'அவர்' ஒருவர் மட்டுமே.
http://i1087.photobucket.com/albums/..._000052992.jpghttp://i1087.photobucket.com/albums/..._000134479.jpg
முக்கியமாக அந்த வீராணம் குழாய் வடிவிலான தொடர் வட்ட வளையங்கள் படுவேகமாக நம்மை நோக்கி நகரும் காட்சி. 'கலை R.B.S.மணி, தோட்டா' என்ற டைட்டில் வரும் போது இந்த அற்புத காட்சி நம் கண்களுக்குள்ளே விரியும். அதே போல 'மெல்லிசை மன்னர்' என்று டைட்டில் போடும்போது வந்து அலங்கரித்து படுக்கை வாக்கிலும், குறுக்கிலும், நெடுக்கிலுமாக அசையும் ரிங்குகள் இன்னும் பிரமாதம். சி.வி.ஆருக்கு பருந்து ஷேப்பில் வடிவங்கள். நடிகர் திலகத்துக்கும் அப்படியே.
டைட்டில் முடிந்து சேகரும், சந்தரும் சிறுவர்களாய் 'பாக்ஸிங்' மோதும் அந்த ஆரம்ப நொடிக் காட்சியிலிருந்து இறுதியில் ஒன்று சேர்ந்து இளைஞர்களாக நடிகர் திலகமும், 'சுஜாதா சினி ஆர்ட்ஸ்'காரரும் முன்னம் மோதிய விளையாட்டை மீண்டும் ஒரு தடவை 'லெப்ட்.. ரைட்' சொல்லி விளையாட்டாக மோதிப் பார்க்கும் அந்த 18 ரீல்களுமாகிய 4543.34 மீட்டர் படச் சுருள்களும் நம்மை அப்படியே சுகத்தில் சுருள வைப்பவை.
அந்த திகிலான பயமுறுத்தும் இரவுப் பின்னணியில் நாயகர்களின் இன்ஸ்பெக்டர் தந்தையை அவர்கள் கண்முன்னமேயே கருப்பு கம்பளி அணிந்த, சின்னப்ப தேவரை முக ஜாடையில் ஞாபகப்படுத்தும் வில்லனின் கையாள் தன் கையால் கூர்வாள் கொண்டு முதுகில் குத்தும் போது அதைப் பார்க்கும் பலரில் ரத்தம் உறையாமல் இருப்பவர்கள் குறைவு. அந்த கத்தியின் கூர்மை போலவே அர்த்தம் பொதிந்த ரசமான வசன கூர்மைகள் நம்மை அவை வசமாக்குகின்றன.
நடிகர் திலகம் அறிமுகமாகும் காட்சிக்கு முன்னர் வரை 'மன்னர்' என்னவோ நம் 'விஸ்வம்'தான். ஆரம்பக் காட்சிகளை அப்படியே குத்தகை எடுத்துக் கொள்வார். மீதியை பின்னணியில் 'மெல்லிசை மன்னர்' பார்த்துக் கொள்வார். ரீரிக்கார்டிங் காதுகளில் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கும்.
விஸ்வம் சூயிங்கம் மென்றபடி tennis racquet டைப் பிடித்து 'இண்டர்நேஷனல் டிபார்ச்ச'ருக்கு வெளியே 'சிகப்பு விக்' களவாளி போலிஸ் எச்சரிக்கை செய்ததும் கொஞ்சமும் பதறாமல் சர்வ அலட்சியமாக டாக்ஸியில் ஏறும் 'கெத்'தே தனிதான் போங்கள்.
தங்கியிருக்கும் ஹோட்டலின் பால்கனியிலிருந்து தன்னை கழுகாக வட்டமிடும் காவலர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு தண்ணி காட்டும் 'தண்ணி' மாஸ்டர் விஸ்வம் செய்யும் விபரீத விளையாட்டுத்தனங்கள் விழுந்து விழுந்து ரசிக்கக் கூடியவை. டென்னிஸ் பிளேயர் உடையில் ஹோட்டலிலிருந்து வெளியே டென்னிஸ் கோர்ட்டுக்கு வந்து அவர் எம்.எஸ்.வியின் 'டடடடடடங் டங் டங் டங்' கிடார் பிரம்மாண்டங்களுக்கு நடுவே கவலையில்லாமல் டென்னிஸ் விளையாடுவது ஜோரான ஜோர்.
காவலாளிகள் விஸ்வத்தின் அறையை 'செக்' செய்து ஏமாந்து திரும்புகையில் tennis விளையாடிவிட்டு வரும் விஸ்வம் 'ராஜா'வை இயக்கிய இளம் ராஜேந்திரன் பில்லியர்ட்ஸ் பார்வையில் பட்டு, அங்கு விளையாடிக் கொண்டிருக்கும் ஒருவருக்கு விளையாட்டு நுட்பத்தை சொல்லிக் கொடுத்து செல்வது ஆபத்து சூழ்ந்திருக்கும் விஸ்வத்துக்கு இருக்கும் மகா நெஞ்சுத் துணிவை நமக்கு உணர்த்தும்.
Racquet ஸ்டாண்டில் அந்த குறிப்பிட்ட சிகப்பு கைப்பிடி போட்ட tennis racquet டை வைத்துவிட்டு கண்ணாடியில் வேறு தன்னைப் பார்த்து வேர்வையை ரிலாக்ஸாக டவலால் துடைத்துக் கொண்டு, கழுத்திலும் மப்ளர் அணிந்து, ஸ்டாண்டிலிருந்து வேறு ஒரு racquet டை எடுத்து யாராவது கவனிக்கிறார்களா என்று கவனிக்கும் விஸ்வத்தின் ராஜ்ஜியம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
http://i1087.photobucket.com/albums/..._000662660.jpghttp://i1087.photobucket.com/albums/..._000706660.jpg
தன் ரூமை சோதனை செய்து விட்டு கேண்டீனில் ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் 'மப்டி' காவலர்கள் இருவர்களுக்கு மத்தியில் அனாயாசமாக புகுந்து, வாயில் சிகெரெட்டை வைத்து, அவர்களிடமே சிகரெட்டுக்கு நெருப்பு கேட்கும் விஸ்வத்தின் துணிவை அவன் கெட்டவன் என்றாலும் அவனுடைய சாமர்த்தியத்திற்காக அவனை மனதார பாராட்டலாம். சற்று வயதான வழுக்கைக் காவலர் ஒன்றும் செய்யத் தோன்றாமல் விஸ்வத்தின் சிகரெட்டுக்கு மேட்சஸ் கொண்டு நெருப்பு பற்ற வைக்க, அருகில் இருக்கும் பரிதாபமான அந்த இளம் காவலரைப் பார்த்து வாயில் சிகரெட்டுடன் விஸ்வம் விடும் நக்கல் நையாண்டி சிரிப்பு ஓஹோஹோ! அந்த காவலர்கள் இருவருமே விஸ்வத்தின் கிண்டலால் படா பரிதாபம்.
அதே போல விஸ்வத்தை ஏதாவது காரணம் காட்டி உள்ளே தள்ள போலீஸ் கமிஷனர் பிரசாத் ஐடியாவின்படி கான்ஸ்டபிள் பட்டாபி, இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் இருவரும் விஸ்வம் மதுவிலக்கின் போது பெர்மிட் இல்லாமல் குடித்துக் கொண்டு இருக்கையில் அவனிடம் செய்யும் கலாட்டாக்கள்.... அதையும் மீறி விஸ்வம் முதலில் செய்யும் புத்திசாலித்தனமான தப்பித்தல் முறை கையாளுமை முயற்சிகள் ...(கான்ஸ்டபிள் பட்டாபி சரக்குக்கு ஆசைப்படுவதை 'சட்'டெனப் புரிந்துகொண்டு "நீங்களும் சாப்பிடுங்களேன்...ஆளுக்கொரு பெக்!" என்று குழைந்து பின் அதைத் தனக்கு சாதகமாக்கி கொள்ள பின்னும் சாமர்த்தியத் தந்திர வலை)
http://i1087.photobucket.com/albums/..._001065233.jpghttp://i1087.photobucket.com/albums/..._000148830.jpg
பின் கான்ஸ்டபிள் பட்டாபியின் எரிச்சல் போக்கை தாங்க முடியாமல் ('டியூட்டில நான் குடிக்கறதே இல்ல...டியூட்டி ஆர் நோ டியூட்டி..--நாம குடிக்கறதே இல்லே'):) விஸ்வரூப விஸ்வமாய் மாறி கோபத்தில் தன்னையே இழந்து, போலீஸை அடித்து 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்று அந்த இடத்தில் மட்டும் ஆத்திரம் காட்டி மாட்டிக் கொள்ளும் (பின்னால் கிளைமாக்ஸிலும் படுபுத்திசாலித்தனமாக நடக்கும் விஸ்வம் இதே போல கோபத்தில் அவசரப்பட்டு ராஜா, கமிஷனர் இவர்களின் சிலந்தி வலைப் பின்னலில் மாட்டும் ஈயாக கொஞ்ச நேரம் மாட்டி, நாகலிங்க ரங்காராவின் நம்பிக்கையை தற்காலிகமாக இழப்பது விஸ்வத்தின் கேரக்டரை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரே சீராக அழகாக நமக்கு உணர்த்தும். அதற்கேற்றார் போன்று அருமையான காட்சி அமைப்புகள் தப்பு தவறு என்னவென்றே தெரியாமல் அழகாக பொருள்பட எடுக்கப்பட்டிருக்கும்) என்று அதுவரை நம்மை ஆளும் விஸ்வத்தின் ஆளுமையை தகர்த்தெறிய வருவார் தோன்றும் முதல் சிறைக் காட்சியிலே எல்லாவற்றிலும் சிகரம் தொட்டுவிடும் நம் ஸ்டைல் 'ராஜா'. ஆர்ப்பாட்ட அறிமுகம். அப்புறம் விஸ்வமென்ன?... யாராயிருந்தாலும் என் 'ராஜா'விடம் 'பஸ்பம்'தான்.
என்னடா இது 'ராஜா' திலகத்தைப் பற்றி எழுதுவான் என்று பார்த்தால் 'நாடகக் காவலரை'ப் பற்றி எழுதுகிறானே என்று நினைக்கிறீர்களா? எப்படி திரையுலகிற்கு ஒரே ஒரு 'ராஜா'வோ அது போல விவகாரமான வில்லனுக்கு ஒரே ஒரு சுவாரஸ்ய 'விஸ்வம்'தான். அதனால்தான் தலைவர் படத்திலும் கூட அவனுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனிப்பு. இரண்டாவது படத்தின் ஓப்பனிங் காட்சிகள் விறுவிறுப்பு விஸ்வத்தை நம்பியே.
நடிகர் திலகத்தின் நடிப்பு பிளஸ் ஸ்டைல் அக்கிரமங்களைப் பற்றி எழுத நாள் போதுமா என்ன! ஒரு ஆள் போதுமா என்ன! அதுவும் 'ராஜா'வாக அவர் செங்கோலோச்சும் போது கேட்கவும் வேண்டுமோ!
தொடருகிறேன் விரைவில்.
இதோ 'ராஜா'வின் ரசிகர்களுக்காக யூ டியூபில் முதன்முறையாக இன்று தரவேற்றப்பட்ட 'ராஜா' டைட்டில் மியூஸிக்.
https://youtu.be/ivRbjxqlato
Vasu Sir
http://www.animatedimages.org/data/m...image-0011.gif
ஸ்டைல் ராஜா மட்டுமல்ல வசூல் ராஜாவும் கூட என்று மீண்டும் நிரூபித்த ராஜா வைப் பற்றிய தங்களின் அமர்க்களமான கட்டுரை நமக்கெல்லாம் ராஜ யோகம் தான். படத்தில் தலைவர் வைக்கும் பஞ்ச் சை விட தங்களின் கட்டுரை இன்னும் ஆழம்.. தூள்...மெல்லிசை மன்னரின் பின்னணி இசையைக் குறிப்பிட்டு எழுதியதற்காக இன்னும் ஸ்பெஷல் தாங்க்ஸ்...
வில்லன் நடிகர்களுக்கும் நடிப்புக்கும் கூட இயல்புத் தன்மை நம் தலைவரின் படங்களில் கிடைக்கும் என்பதையும் மீண்டும் நிரூபித்த படம் ராஜா.
தூள் கிளப்புங்க...இந்த டைட்டில் இசையை தேவி பேரடைஸில் கேட்டிருக்க வேண்டும்... நிஜமாகவே பேரடைஸ் தான்..
அதுவும் அறிமுகக் காட்சியில் அவர் அணிந்த சட்டை... கனவுக் காட்சிகளில் கண்ணை உறுத்துவதைப் போல இல்லாமல் அழகாக நம் கண்களைக் கவர்வது ஆடைகளுக்கென்றே பிறந்த ஆணழகன் என்கிற தங்களுடைய கூற்றை மீண்டும் மெய்ப்பிக்கும்..
வாசு சார்,
அருமையான பதிவு. நம் நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் மட்டும்தான், வில்லன், காமெடி நடிகரில் இருந்து , குழந்தை நட்சத்திரம் வரை நடிப்பதற்கான, அவர்களுடைய திறமைகளையும் வெளிக்கொண்டு வருவதற்கான opportunity இருக்கும்.
இரண்டு நாள் முன்புதான் r .s .மனோகருடைய 92ஆவது பிறந்தநாள் ஜூன் 29 ஆம் தேதி வருவதையொட்டி, அவருடைய நாடக சாதனைகளைப் பற்றி ஒரு கட்டுரை times of india நாளிதழில் படித்தேன். இப்போது தாங்கள் "ராஜா"வில் r .s .மனோகருடைய நடிப்பைப் பற்றி எழுதியிருந்ததைப் பார்த்தேன்.
நடிகர்திலகத்தின் படங்களில் மற்ற நடிகர்களுக்கு நடிக்க opportunity இருக்கும் என்றால், நடிகர்திலகத்தின் ரசிகர்களுக்குத்தான் எல்லா நடிகர்களையும் ரசிக்கும், பாராட்டும் உள்ளம் இருக்கும் என்பதை தங்கள் பதிவின்மூலம் மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்.
அசத்தல்களுக்கு
நன்றி+ பாராட்டுக்கள்
1.சிவா சாருக்கு ஆவணப்பதிவுகளுக்காக
2.வாசு சாருக்கு
ராஜாவுக்காக
பெரும்பாலான தமிழ் திரைப்படங்களில் இரண்டாம் வரிசை வில்லனாகவோ அல்லது வில்லனின் கைத்தடியாக தலைகாட்டி ' எஸ் பாஸ்' சொல்லும் அடியாளாகவோ வலம்வந்த திரு எஸ்வி ராமதாஸ் அவர்கள் மீது நடிப்பின் புகழ் வெளிச்சம் முதன்முதலாகப் பாய்ந்தது இந் நூற்றாண்டின் இணையற்ற நடிகர்திலக அமர காவியமான கர்ணன் வாயிலாகவே! புத்திர பாசத்தில் அர்ஜுனனைக் காத்திட இந்திரன் வயோதிகர் வேடத்தில் வந்து கர்ணனின் கவச குண்டலங்களை யாசித்திடும் குறும் பாத்திரமேயாயினும் நடிகர் திலகத்தின் பெருந்தன்மையான புரிதலும் விட்டுக் கொடுத்தலும் அடிப்படையில் ராமதாசும் மின்னல் கீற்றாக தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி டி எஸ் பாலையா, எம் ஆர் ராதா, ரங்காராவ், நாகேஷ், அசோகன், டிஆர் ராமச்சந்திரன்.............வரிசையில் ரசிகர்களை ஈர்க்க முடிந்தது !!
watch 09:30 to 13 : 50
https://www.youtube.com/watch?v=dKJW6htH83A
உயர்ந்த மனிதன் விளையாட்டுப் பிள்ளை பாரத விலாஸ் மற்றும் வசந்த மாளிகை திரைப் படங்களிலும் ராமதாஸ் அவர்களுக்கு அருமையான குணாதிசய வெளிப்பாடுகளை தந்திட நடிகர் திலகம் சந்தர்ப்பமளித்து ஊக்குவித்தார் !
Dear Vasu Sir,
Excellent nerration about the role of our beloved Viswam (R.S.Manohar) in the evergreen entertainer Raja. As you rightly said, he Viswam took the responsibility of the 'viruviruppu' of the begining part of Raja.
When Commisioner Prasad (Major) showing the photo of the Singapore smuggler and asking about their meeting , see how casually Viswam is reacting for the questions of the commissioner.
After Raja's entry Viswam put the responsibilty on the shoulders of Raja, and get disappeared. Then just before the climax only he will re-enter. In the climax also his role is very interesting. In the very first of his re-entry, it will be very intersting to watch how Babu (Balaji) nand Viswam (Mahohar) talking with each other by turning the revolving chair and in one scene sitting back-to-back and talking. Hats off Darling CVR.
Waiting for more.......................
As RAGHAVENDHAR sir rightly said, it was beautiful moment to watch 'Raja' in Devi Paradise when it was released in 1972 January. For the special effects of the re-recording BGM by Mellisai Mannar, and for the excellent title music, they will open the side speakers and it was a suprb experience for the audience to watch and hear.
Beautiful days.
வாசு சார் பாராட்ட வார்த்தைகள் இல்லை ,ஒவ்வொன்றையும்
நுணுக்கமாக கவனித்து அனைத்தையும் அழகாக வர்ணித்து, விபரமாக எழுதுவதில்
உங்கள் பாங்கு தனிதான் சார்.
ராஜாவில் தாய் பண்டரிபாயை மனோகர் அடித்து சித்திரவதை செய்யும்பொழுது
உண்மை தெரிந்துவடக்கூடாதென்பதற்காகவும் தாயை மனோகர் அடிப்பதை
தடுக்கவும்முடியாமல் அழுதுகொண்டே சிரிப்பாரே நம் திலகம்
அந்தக்காட்சியை உங்கள் வர்ணனையில் ரசிக்க் காத்திருக்கிறேன்.
Mr Neyveliar,
I am waiting