Abdul Razack
நீயா?நானா? பகுதி.2. அதற்குமுன் சிறு முன்னோட்டம் ஒரு சம்பவத்தை நாம் கற்பனையில் எழுதுவதற்கு எல்லையே கிடையாது எப்படி வேண்டும் என்றாலும் எழுதலாம் அதே போல் கடந்த காலங்களில் நடந்ததை எழுதுவதும் சிரமம் இல்லை சில சம்பவங்கள் மறந்து விட்டாலும் யாருக்கும் தெரியாது ஆனால் இரு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியின் சம்பவத்தை எழுதுவது மிகவும் சிரமம் காரணம் கிட்டதட்ட 100 நபர்கள் அங்கு இருந்தார்கள் இந்தபதிவை அவர்களால் யாரவது படித்து மிகை படுத்தி எழுதி இருக்கிறான் என்று சொன்னால் இந்த பதிவின் நோக்கமே தோற்று விடும் மேலும் நம் அன்பர்கள் சிலர் நாங்கள் தோல்வி அடைந்து வந்துவிட்டது போல் எங்களை கண்டித்தும் ஆறுதல் கூறியும் பதிவிடுகிறார்கள் அதற்க்காக நடந்த சம்பவங்களை இட்டு கட்டி எழுதி பாராட்டு வாங்குவதை விட உண்மையை எழுதி திட்டுவாங்குவதே மேல் சிவாஜியின் பாடல்களில் இரண்டு பாடல்களை நாம் கடைபிடித்தால் எந்த இடத்திலும் நாம் தயங்கி நிற்க மாட்டோம் முதல் பாடல் ,.....,உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி மனிதன் எதையோ பேசட்டுமே மனசை பார்த்துக்க நல்லபடி,...,...........அடுத்த பாடல்,..உள்ளதை சொல்வேன் சொன்னதை செய்வேன் வேறொன்றும் தெரியாது,இந்த இரண்டு பாடல்கள் தான்..சரி நிகழ்ச்சிக்கு செல்வோம் நீங்கள் முதன் முதலாக கேட்டு அடுத்து மீண்டும் மீண்டும் கேட்க தூண்டிய பாடல் என்ன என்று எங்கள் பக்கம் திரும்பினார் கோபிநாத் நம் வரிசையில் நண்பர் ஒருவர் பாடலுக்கான விளக்கம் சொல்ல ஆரம்பிக்கும் போது நேரம் ஆகிறது பாடலை மட்டும் பாடினால் போதும் என்று எதிர் முகாமிற்கு கொடுத்த உரிமையை நமக்க பறித்தார் நாங்கள் எவ்வளவு கேட்டும் பாடல் மட்டுமே போதும் நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்று நமது ஆர்வத்தை குறைத்தார் காரணம் சொல்லாமல் எப்படி பாடமுடியும் நல்ல பாடல்கள் பாடினாலும் காரணம் இல்லாததால் அது எடுபடவில்லை பிறகு நாங்கள் எல்லாம் வற்புறுத்தி கேட்டபிறகு சுருக்கமாக சொல்லி பாடவும் என்றார் அது சமயம் நம் சமூகநலபேரவை சந்திரசேகர் அவர்கள் வசம் மைக் இருந்ததது அவர் விளக்கம் சொல்லி தில்லானமோகணம்பாள் படம் என்றதும் எங்களுக்கு ஆர்வம் குறைந்தது காரணம் அதில் சிவாஜிக்கு பாடல்களே இல்லையே இதை சற்று தாமதமாக புரிந்து கொண்டு அடுத்த சுற்றில் அருமையான பாடலை பாடி கைதட்டலும் பாராட்டும் பலமாக வாங்கினார் சந்திரசேகர் அவர்கள் இந்த நேரத்தில் என் சுயபுரானம் கொஞ்சம் தேவை படுகிறது போட்டியில் கலந்துகொள்வதற்கு நான் ரயில் பயணத்தில் இருக்கும் போது நம் அண்ணன் திரு ஜாஹிர் உசேன் அவர்களிடம் விபரம் சொல்லி சில பாடல் களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வையுங்கள் என்று கேட்டேன் அவரும் மிகவும் மகிழ்ச்சியாக சிரமம் பார்க்காமல் அருமையான 8 பாடல்களை அனுப்பிவைத்தார் அவருக்கு நன்றி சொல்லிபிரிக்க வேண்டாம் நம் குடும்பதேவைக்கு அவர் செய்தார் ஆனால் அந்த பாடல்கள் அனைத்தும் மற்றவர்கள் பாடிவிட்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியின் அம்சமே விளக்கத்துடன் ஒரு பாடல் என்றதால் நான் சிவாஜியின் ரசிகனாக ஆவதற்கு தூண்டுகோலாக இருந்த பாடல் அதன் காரணம் சொல்லலாம் என்று ஆர்வமுடன் இருந்தேன் அங்கே விளக்கம் அளிக்க மறுக்கபட்டதால் இங்கு பதிவிடுகிறேன் வருடம்1992 அந்த கட்டத்தில் எனக்கு ரஜினி விஜயகாந்த் இவர்கள் படம் பார்ப்பேன் காரணம் சண்டைகாட்சிகள் இருக்கும் என்பதால் என் வயது அப்போது19 சிவாஜி படம் பார்ப்பேன் என் பெற்றோர் இருவரும் சிவாஜி ரசிகர்கள் எனக்கு ஒரு பிடிப்பு இருக்காது அந்த காலகட்டத்தில் சிவாஜியின் நிகழ்ச்சிக்கு போட்டோ எடுக்க அவர் ரசிகர்கள் என்னை அழைத்து போவார்கள் அப்போது நான் சென்னையில் என் மச்சானின் ஸ்டுடியோவில் வேலைகற்று வந்த காலம் சிவாஜியோடு அவர்களை வைத்து நிறைய போட்டோக்கள் எடுத்த நான் நானும் நின்று எடுப்பதற்கு பாக்யம் இல்லாதவனாக ஆகிவிட்டேன் இதை நினைத்து இன்றுவரை ஏன் என் உயிர் உள்ளவரையிலும் வருத்தபடுவேன் என்னை அழைத்து போனவர்கள்கூட நீயும் எடுத்துக்கப்பா என்பார்கள் அதற்கு நான் நான் உங்களை எடுத்துவிடுவேன் என்னை யார் எடுப்பார்கள் என்று கேட்பேன் காரணம் இன்றைய நிலைப்போல் அன்று போட்டோ எடுப்பதுஎளிமையானது இல்லை சரி தகவலுக்கு வருகிறேன் அந்த 1992 வருடகாலகட்டத்தில் ராமஜென்ம பூமி பாபர் மஸ்ஜுத் பிரச்சனை இந்தியாமுழுவதும் பரபரப்பாக இருந்தது நம் தமிழ்நாட்டில் அவ்வளவாக இல்லை காரணம் நாம் அனைவரும் தொப்புள்கொடிஉறவுகள் அது சமயத்தில் நன்றாக என்னிடம் பழகி கொண்டு என் பக்கத்துவீடு நண்பர்களும் எங்கள் நண்பர்கள் சிலருக்கும் மனகசப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் திட்டிகொண்டோம் இது எங்கள் வீட்டிற்கு தெரிந்து என் அம்மா என் நண்பர்களின் அம்மா ஐந்து பேர் சேர்ந்து எங்களை வேற்றுமை இல்லாமல் திட்டி கண்டித்து அட அறிவுகெட்டவன்களா நாம் எல்லாம் வேறு வேறு கிடையாது அனைவரும் ஒன்று தான் என்று சொல்லி அடுத்த அரைமணி நேரத்தில் டேப் ரிக்கார்டரில் பாரத விலாஸ் பாடலான இந்தியாநாடு என்வீடு இந்தியன் என்பது என்பேர் என்ற பாடலை போட்டுகாட்டியும் அடுத்த நாளே வீடீயோவில் அந்த படத்தை போட்டுகாட்டியும் எங்களை தெளிவான பாதைக்கு கொண்டு வந்தார்கள் இன்று அவர்கள் இல்லை நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம் அதனால் எனக்கு இந்த பாடல்தான் தேசீயகீதம்,,...,....மன்னிக்கவும் தவிர்க்க முடியாத வேலைவந்து விட்டது இன்று மாலையில் பதிவிடுகிறேன்,
https://scontent.fybz1-1.fna.fbcdn.n...f2&oe=5A7DF9DA