-
நடிப்பில் எப்படி கண்ணியம் காத்தாரோ அதே கண்ணியத்தை அரசியலிலும் செய்தவர் சிவாஜி.அரசியலில் வென்றவர்கள், அதாவது ஏதோ ஒரு புரியாத ஈர்ப்பால் மக்கள் அதிகளவு வாக்களித்து வெற்றி பெற்றவர்கள் தங்களது கண்ணியத்தை காத்தார்களா என்றால் வாக்களித்த மக்கள் கூட மறுக்கும் நிலைதான் அதிகம் தமிழ்நாட்டில்.
தான் சார்ந்த கட்சிக்கு தன் புகழை கொடையாக கொடுத்தவர் சிவாஜி. ஏதும் விரும்பாமலேயே.
ஒரு சம்பவம்.
நடிகர்திலகத்தின் முகமடித்த போஸ்டர்களில் சாணத்தை வீசி அழகு பார்த்தனர் விரும்பத்தகாதவர்கள்.பத்திரிக்கையா...ளர் இது பற்றி நடிகர்திலகத்திடம் கேட்டபோது அவர் சொன்ன பதில்,
"சாணம் நல்ல உரம் தானே, நன்றாக வளரலாம் தானே ".
இந்த பதில் ஞானிகள், யோகிகள், சித்தர்கள், ஏதும் விரும்பாத நிலை கொண்டவர்கள், போன்றவர்களிடம் தான் இருந்துதான் வரும்.
அவர் கல்லடி பட்ட மரமல்ல, காலம் முழுவதும் பட்டுக் கொண்டே இருந்த மரம் .
மற்றுமொன்று ..
விலகிய கட்சியின் மேல் கொண்ட கோபத்தால் அதன் தலைவரை ஒழிக கோஷம் போட்டரொருவர் அய்யனின் பாசப் பிள்ளை.அதை கண்டித்து கண்ணியத்தை கற்றுக் கொடுத்த தலைவன் சிவாஜி.நாற்பதாண்டுகளில் எந்த தலைவனிடம் இதை காண முடிந்தது?
இது போன்று ஏராளம் உண்டு.
அதை சொல்லுங்கள் .
நன்றி செந்தில்வேல் செல்வராஜ்
-
1957 முதல் 1961 ஆண்டு வரை 112 முறை வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம் அரங்கேற்றிளார்.அந்த காலகட்டத்தில் ஒரு கோடிக்கும் மேல் வசூல் ஈட்டியது. அப்பொழுது நாடகத்தின் மவுசு குறைந்து சினிமா கலைகட்ட துவங்கியதால் நாடகத்தில் வேலை செய்தவர்களின் வாழ்வு கேள்விக்குறியாகிக் கொண்டிருந்தது.நாடக தொழிலையும், நம்பியிருந்த தொழிலாளர்களுக்கும் உதவும் வகையில் நாடகத்தை நடத்திக் கொண்டிருந்தார்.92 வது முறை நாடகம் நடித்துக் கொண்டிருக்கும் போது வசனம் பேசிக்கொண்டிருக்கும் போது தொண்டையில் ரத்தம் கசிந்தது.டாக்ட...ர் நாடகத்தில் நடிக்கக் கூடாது என்று அறிவுரை கூறியும் கேளாமல் 112 முறை நாடகத்தை நடத்தி அதில் கிடைத்த பணத்தில் நாடகத்தில் பனிபுரிந்தவர்களுக்கு கொடடுத்தது போக மிச்சம் இருந்த தன் பங்கு பணம் 32 லட்சங்கள். அவர் நினைத்திருந்தால் மவுண்ட் ரோட்டில் 32 சாந்தி தியேட்டர்கள் வாங்கி இருக்கலாம். அந்த பணம் முழுவதையும் வருங்கால சந்ததியினருக்காக கல்விக்கும் நூலக வளர்ச்சிக்கும் அளித்தார்
நன்றி வாசுதேவன் s
-
-
-
-
#அந்தமான்காதலி 26:01:1978
#நாற்பத்தோராண்டுகள் நிறைவு
#குடியரசுதினவெளியீடு எண்:5
#முக்தாபிலிம்ஸ் வி.ராமசாமி தயாரிப்பு
#இயக்கம்_முக்தா_V_சீனிவாசன்...
#கதைவசனம் பேராசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்
#இசை_MSவிஸ்வநாதன்
#அந்தமானில்படமாக்கப்பட்ட முதல் #தமிழ்ப்படம்
#நடிகர்திலகத்தின் நாயகியாக #சுஜாதா
#சென்னையில் சிறிய அரங்கான லியோவில் முதலில் இப்படம் திரையிடப்பட்டது. 50நாட்களில் தொடர்ந்து 200 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓட பெரிய அரங்கான மிட்லண்ட் அரங்குக்கு மாற்றப்பட்டு நூறு நாட்களைக் கடந்தது.
தமிழ்த்திரை வரலாற்றில் சிறிய அரங்கிலிருந்து பெரிய அரங்கிற்கு மாற்றப்பட்டு வெற்றிவிழா கொண்டாடிய முதல் படம் இதுதான்.
#சென்னைலியோ_மிட்லண்ட் 106 நாள்
மொத்த வசூல் 5,95,593.60 ரூபாய்
#சென்னைமகாராணி 100 நாள்
#சென்னைராக்ஸி 100 நாள்
#சேலம்ஜெயா 111 நாள்
#மதுரைசினிப்பிரியா 100 நாள்
#கொழும்புசமந்தா 101 நாள்
#யாழ்ப்பாணம் மனோகரா 104 நாள்
#கோவைராயல் 78 நாள்
#திருச்சிபேலஸ் 70 நாள்
#பாண்டிஜெயராம் 50 நாள்
#நெல்லைபூர்ணகலா 50 நாள்
#ஈரோடுகிருஷ்ணா 50 நாள்
#நாகர்கோவில்ராஜேஷ் 51 நாள்
#பல்லவபுரம்லட்சுமி 50 நாள்
(மற்ற ஊரின் விவரம் தெரிந்தவர்கள் கமெண்ட்டில் பதிவிடவும்)
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi68.tinypic.com/2m692qe.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
#மருமகள் 26:01:1986
#குடியரசுதினவெளியீடு எண் :9
#33ஆண்டுகள் நிறைவு
#சுஜாதாசினிஆர்ட்ஸ் தயாரிப்பு
#இயக்கம்கார்த்திக்ரகுநாத்...
#தமிழ்த்திரைப்படவரலாற்றில் இயக்குநர்களாக வலம் வந்த தந்தை - மகன் இருவர் இயக்கத்திலும் நாயகராக நடித்த முதல் நடிகர் நம் திலகமாகத்தான் இருக்கக்கூடும். ( இவருக்கு முன் யாரேனும் இருந்தால் கமெண்ட்டில் குறிப்பிடவும்) அறுபதுகளில் வெற்றி இயக்குநராக வலம் வந்த, ராணிலலிதாங்கி, மருதநாட்டுவீரன் போன்ற படங்களை இயக்கிய TR.ரகுநாத் அவர்களின் மகன் கார்த்திக்ரகுநாத் என்பது குறிப்பிடத்தக்கது.
#இசைசந்திரபோஸ்
#மாமமனார்மருமகள் குடும்பப் பாசத்தை விளக்கி வெற்றி கண்ட இப்படம், #சென்னையில்
தேவிபாலா 125 நாள்
மகாராணி 117 நாள்
சந்திரன் 81 நாள்
அன்னைஅபிராமி 78 நாள்
#மதுரைசிந்தாமணி 70 நாள்
#நாகர்கோவில்மினிசக்கரவர்த்தி 77 நாள்
ஓடியது.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi63.tinypic.com/4llj5u.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
#ரிஷிமூலம் 26:01:1980
#குடியரசுதினவெளியீடு எண் : 6
#39ஆண்டுகள் நிறைவு
#SSKபிலிம்ஸ் SS.கருப்புசாமி தயாரிப்பு
#இயக்கம்SPமுத்துராமன்...
#நடிகர்திலகத்தின் நாயகியாக KR.விஜயா
#திசைகள்திரும்பும் என்னும் பெயரில் நாடகமாக நடத்தப்பட்டு வந்ததே பின்னர் திரைப்படமானது. படமும் அதே தலைப்பில்தான் வளர்ந்தது. ஆனால், வெளியாகும்போது பெயர் மாற்றப்பட்டு ரிஷிமூலம் என்று வெளியானது.
#கதைவசனம் J.மகேந்திரன்
#இசைஇளையராஜா
#சென்னைசாந்தி 104 நாள்
#சென்னைகிரவுன் 105 நாள்
#சென்னைபுவனேஸ்வரி 108 நாள்
#நூறுநாட்களில்_சென்னையில் வசூலானதொகை 19,38,872.35 ரூபாய்.
#கொழும்புகிங்ஸ்லி 105 நாள்
#யாழ்ப்பாணம்வின்ஸர் 91 நாள்
#திருச்சிவெலிங்டன் 69 நாள்
#மதுரைசினிப்பிரியா 62 நாள்
#நாகர்கோவில்ராஜேஷ் 55 நாள்
#சேலம்அலங்கார் 62 நாள்
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi63.tinypic.com/jzz50p.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
#நீதிபதி 26:01:1983
#குடியரசுதினவெளியீடு எண் : 7
#36ஆண்டுகள் நிறைவு
#சுரேஷ்ஆர்ட்ஸ் பேனரில் #சுரேஷ்பாலாஜி நடிகர்திலகத்தை வைத்து தயாரித்த முதல் படம். ( அதுவரை சுஜாதா சினி ஆர்ட்ஸ் பேனரில் நடிகர்திலகம் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
#இயக்கம்Rகிருஷ்ணமூர்த்தி...
#கதைவசனம்_ALநாராயணன்
#ஜஸ்டிஸ்ராஜா என்னும் பெயரில் மலையாளத்திலும்
#ஜஸ்டிஸ்சௌத்ரி என்னும் பெயரில் #தெலுங்கு மற்றும் #இந்தி மொழிகளிலும் தயாரிக்கப்பட்டது.
#இசை_கங்கைஅமரன்
#நடிகர்திலகத்தின் ஜோடியாக KR.விஜயா
#இளையதிலத்தின் ஜோடியாக ராதிகா
#பெங்களூரில் முதல் வாரத்தில் மட்டுமே5.35 லட்ச ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் இது.
#திருபாலாஜி அவர்கள் நிறுவனம் தயாரித்தப் படங்களிலேயே சென்னையில் 27 லட்சம் ரூபாய் வசூலித்த முதல் படம் நீதிபதி.
#மதுரைசினிப்பிரியா & மினிப்பிரியா 175 நாட்கள் / மொத்தவசூல் ரூ.7,17,413.
#சென்னைசாந்தி 141 நாள்
மொத்த வசூல் : ரூ.14,22,692.50
#சென்னைஅகஸ்தியா 115 நாட்கள்
மொத்த வசூல் : ரூ. 6,38,964.60
#சென்னைஅன்னைஅபிராமி 115 நாட்கள்
மொத்தவசூல் : ரூ. 6,70,740.30
#சேலம்கைலாஷ் 101நாள்/ ரூ.7,38,462.10
#கோவைதானம் 107 நாள் / ரூ. 10,00,036.10
#திருச்சிகாவேரி+வெலிங்டன் 100 நாள்
வசூல். ரூ. 7,18,222.00
#ஈரோடுகிருஷ்ணா 50 நாள்
#திருப்பூர்டைமண்ட் 50 நாள்
#நெல்லைசிவசக்தி 63 நாள்
#நாகர்கோவில்லட்சுமி 52 நாள்
#வேலூர்அப்ஸரா 85 நாள்
#மூலக்கடைவெங்கடேஸ்வரா 50 நாள்
#தஞ்சைராஜராஜன் 50 நாள்
1983 ஆம் ஆண்டில் வெள்ளிவிழா ஓடிய முதல்படம்.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi68.tinypic.com/wtw2lh.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
பந்தம் 26:01:1985
#குடியரசுதினவெளியீடு எண் : 8
#34ஆண்டுகள் நிறைவு
#சென்னைசாந்தி105 நாட்கள்
#சென்னைகிரவுன் 76 நாட்கள்...
#சென்னைபுவனேஸ்வரி 76 நாட்கள்
#சென்னைஉதயம் 76 நாட்கள்
#மதுரை_ஷா 55 நாட்கள்
#நெல்லைராயல் 50 நாள்
#நாகர்கோவில்லட்சுமி 57 நாட்கள்
மற்ற ஊர் நிலவரங்கள் தெரிந்தவர்கள் கமெண்ட்டில் பதிவிடவும்
#சுஜாதாசினிஆர்ட்ஸ் K.பாலாஜி தயாரிப்பு
#இயக்கம்Kவிஜயன்
#இசை_சங்கர்கணேஷ்
#வசனம்_ஆரூர்தாஸ்
#குழந்தைநட்சத்திரமாகபேபிஷாலினி மற்றும் இந்தி நடிகை காஜல்கிரண் நடிகர்திலகத்துடன் இணைந்து நடித்த முதல் படம்.
#தாத்தாவுக்கும்பேத்திக்கும் இடையிலான பாசத்தை விளக்கிய படம்.
தொகுப்பு : வான்நிலா விஜயகுமாரன்
http://oi65.tinypic.com/iqijk6.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இன்று (31/01/2019) பிறந்த நாள் காணும் திரு முரளி சிறிநிவாசன் அவர்கட்கு
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
-
-
Tinypic ல் பதிவேற்றம் செய்வதில் சிரமம் ஏற்பட்டதால் பல விடயங்களை பதிவிடமுடியாமல் போய்விட்டது
தற்பொழுதும் சிரமத்தின் மத்தியிலும் சில பதிவுகளை மேற்கொள்கின்றேன்.
-
-
"பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது " ( குறள் - 227)
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்துண்ணும் பழக்கம் உடையவனைப் பசியென்ற நோய் தீண்டுவதில்லை என்கிறார் தெய்வப்புலவர்.
ஒவ்வொரு பருக்கையிலும் எவனோ ஒருவனின் பசி அடைபட்டிருப்பதை அறிந்தேதான் உண்டானது அன்னதானம் என்றால் மிகையல்ல....
இல்லாதார்க்கு ஈயும் அந்த ஒரு பிடி கவளச் சோற்றினாலும் பிழைத்துக் கொண்டிருக்கிறது உலகெங்கும் பலவுயிர்கள்....
அதனால்தான் கோபத்துடனும், ஏக்கத்துடனும் சொன்னான் நம் தேசியக்கவி..."வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் இங்கு வாழும் உயிர்கட்கெல்லாம்...!"என்று.
அந்தச் சீரிய சிந்தனையின் அடிப்படையிலேதான் துவங்கி, இன்று பதினெட்டாம் வாரத்தை எட்டியுள்ளது
நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு குரூப்ஸ் ஆஃப் கர்ணனின் 52 வார தொடர் அன்னதான நிகழ்ச்சி.
( 27:01:2019 )இன்று நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சியின் உபயதாரராக பங்கேற்றவர்கள் சென்னையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஸ்வரா கேட்டரிங்கைச் சேர்ந்த திரு. BP.ராகவன் அவர்கள், மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கையை சேர்ந்த, திரு வல்லிபுரம் சிவானந்தன் அவர்கள்.
இன்றைய நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்து நிகழ்ச்சியைச் சிறப்படையச் செய்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர் திரு.ராசி. அழகப்பன், திரைப்பட நடிகர் திரு.கணேஷ்பிரபு, திரைப்பட இயக்குநர் திரு.சலீம், பிரபல எழுத்தாளர் திரு. சுந்தரபுத்தன், திரைப்பட தயாரிப்பாளர் திரு.இசக்கி முத்தைய்யா, கோவை மாவட்ட சிவாஜி மன்றத்தைச் சேர்ந்த திரு.துளசிராஜ், அகில இந்திய சிவாஜி மன்றத்தின் CS.குமார் ஆகியோர் என்றென்றும் எம் நன்றிக்குரியவர்களாவர்.
இவ்வார உபயதாரர்களுக்குரிய நினைவுக்குறிப்பேடுகளை திரு. இசக்கிமுத்தைய்யா வழங்க வல்லிபுரம் திரு.சிவானந்தன் சார்பாக திரு.முரளி ஸ்ரீநிவாஸ் அவர்களும், திரு.CS.குமார் அவர்கள் வழங்க திரு.BP.ராகவன் சார்பாக அம்பத்தூர் சுப்பிரமணியன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.
வருகை புரிந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக புத்தகங்களை மன்றத்து நண்பர்கள் வழங்கினர்.
பின்னர், சிறப்பு அழைப்பாளர் திரு. ராசி.அழகப்பன் அவர்கள் அன்னதானத்தைத் துவக்கி வைத்தார். அவரோடு, திரைப்பட நடிகர் கணேஷ்பிரபு, இயக்குநர் திரு. சலீம், எழுத்தாளர் திரு.சுந்தரபுத்தன், திரு.இசக்கிமுத்தைய்யா ஆகியோரும் பொதுமக்களுக்கு உணவைப் பரிமாறினர்.
திரு. ML.கான் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திட, திரு. RS.சிவா, திரு. ஏழுமலை, திரு. பாண்டியன், திரு. நவீன், திரு. பாலாஜி, திரு. காமராஜ், திரு.சங்கர், திரு.நட்ராஜ், திரு. ராமஜெயம், திரு. துவாரகேஷ், திரு. நந்தகுமார், அம்பத்தூர். திரு. வெங்டேசன், திரு. KS. நரசிம்மன், திரு. சுகுமார், திரு. தணிகாசலம், திருமதி. ஜெயாதணிகாசலம், திரு.ராமசாமி GH, திரு.குமார், கொச்சினைச் சேர்ந்த திரு.தேசிகன், திரு.தீனன், தம்பி. தங்கமாரியப்பன் என்று ஏராளமான சென்னை நகர்வாழ் நடிகர்திலகத்தின் அன்பு இதயங்களோடு பொதுமக்களும் பெருமளவு கலந்து கொள்ள நிகழ்ச்சி இனிதே நிகழ்ந்தேறியது.
அடுத்த பத்தொன்பதாம் வார அன்னதானத்தின் உபயதாரர் அரபு மண்ணான மஸ்கட்டில் வசிப்பவரும் நடிகர்திலகத்தின் ரசிகையுமான திருமதி.சாவித்திரி அவர்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொண்டு விடைபெறுவது....
வான்நிலா விஜயகுமாரன்.
http://oi65.tinypic.com/2qn5dp2.jpghttp://oi64.tinypic.com/2s1lytd.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்.
-
-
-
-
-
-
-
-