-
இன்று முதல் (27-11-2020) கோடிகளில் ஒருவர் வழங்கும்..."ஆயிரத்தில் ஒருவன்" டிஜிட்டல் காவியம்...
1.நெல்லை- ரத்னா
2.தூத்துக்குடி - கிளியோபாட்ரா
3. சங்கரன்கோவில் -கீத்யாலயா,
4.. சாத்தான்குளம் - லட்சுமி,
5ஆலங்குளம் - டிகேவி
6, காட்டுப்புத்தூர்- செந்தில்
குதூகல ஆரம்பம்.........
-
கைபிள்ளைகள் கோபத்தில் விட்ட சாபம்.
மற்ற தரமான MGR ரசிகர் குரூப்பை நாம் ,மதிப்போம் நட்பு பாராட்டுவோம் , முன்ஜென்ம பாவியான ,(பல பேரில் உலாவரும் )டொங்கர் ,தொடர்ந்து, "தெய்வப்பிறவி "யான நடிகர்திலகத்தை ,அவதூறக பேசுவதை கொள்கையாக வைத்துள்ளான் ,மறுஜென்மத்தில் இழி பிறவியாக பிறப்பான் என்பது திண்ணம் !nakiran நக்.குப்தன்.)
"சொர்க்கத்து"க்கு டிக்கெட் இலவசமாக கொடுக்கப்படும்.
போர்டை பார்த்து அவசரமாக "சொர்க்கத்து"க்கு 2 டிக்கெட் கேட்டால் அது நிஜ சொர்க்கமாம். அந்த சொர்க்கத்துக்கு மண்டையை போட்டால் அல்லவா போக முடியும்.
ஆமாம் இங்கே "சொர்க்கம்" தியேட்டரில் டிக்கெட் கிழித்தவனெல்லாம் தேவர்களால் நடத்தப்படுகிற "சொர்க்கத்து"க்கும் டிக்கெட் கிழிக்க கிளம்பி விட்டனர்.
செத்தால் கூட கைபிள்ளைகள் டிக்கெட் கிழிக்கும் பழக்கத்தை கைவிட மாட்டார்கள் போல தெரிகிறது.
அதுவும் அய்யனை துதிப்பவர்களுக்கு "சொர்க்க"மும் அய்யனை பற்றி உண்மையான தகவல் கொடுத்தால் "நரகத்து"க்கும் அனுப்புவார்களாம். அதற்கு முன்னால் "எமனுக்கு எமன்" அய்யன் முன் விசாரணை நடக்குமாம்.
இதோ எமதர்ம ராஜன் முன்னிலையில் வக்கிரன் நக்கீர குப்தன் கணக்கை வாசிக்கும் காட்சி.
நரன்:1. அய்யா சொர்க்கத்தின் வாசலை எனக்காக திறவுங்கள் அய்யா?
நக்.குப்தன்: ம்! நீ பூலோகத்தில் என்ன நன்மை செய்தாய்,அதை முதலில். சொல்!
நரன்:1 அய்யா, நான் பலருக்கும் பயனடைய உணவுச்சாலைகளே கட்டி அவர்களுக்கு இலவச உணவளித்தேன்.
நக்.குப்தன்: அதை யாரையா கேட்டது. நீஅய்யனுக்கு என்ன சேவை செய்தாய்? அய்யன் நடித்த படங்களை பார்த்தாயா? அய்யனின் மிகை நடிப்பை ரசித்தாயா? இல்லை அதை புகழ்ந்து புளகாங்கிதம் அடைந்தாயா? இல்லை அய்யனின் படத்தை பார்க்க அழைத்து வரப்படும் பெண்களுக்கு மஞ்சள் குங்குமம் வளையல் வைத்து தானம் செய்தாயா? குறைந்த பட்சம் அய்யனின் படங்களுக்கு ஒரு 100 டிக்கெட்டாவது கிழித்தாயா? அய்யன் சிவனாக நடித்த திருவிளையாடல்
படத்தை பார்த்த பிறகும் போலி சிவனடியாரை போற்ற வில்லையா?
நரன்:1. இல்லை ஐயா.
நக்.குப்தன்: ஆ! மகா பாவி! நீ பூலோகத்தில் அய்யனை நிந்தனை செய்த பெரும் பாவத்தை பெற்றாய்.
இனி நரகலோகம்தான் உன் வாசம்.
உன்னை அய்யன் நரகத்தில் கவனித்து கொள்வார்.
நரன்:1. ஐயோ அய்யனே நான் ஒரு பாவமும் அறியேன்.
நக் குப்தன் :அடுத்தது யாரப்பா?
பரசு மினி குப்தன்: யாரோ சங்கரோ! டொங்கரோ! பேரிலேயே குழப்பம் அதிகம் நக் குப்தா?
நக் குப்தன். வரச்சொல் அவனை!
சங்கர்: ஐயா: நான் எங்கு இருக்கிறேன்?
நக்.குப்தன்: நீ தேவலோகத்தில் எமனுக்கு எமன் விசாரணை வளயத்தில். உன் பெயர்?
சங்கர்: சங்கர் என்று அழைப்பார்கள்
டொங்கர் என்றும் இன்னும் அமுல் டப்பா மூஞ்சி என்றும் பல பெயர்களில் என்னை அழைப்பதுண்டு அய்யனின் கைபிள்ளைகள்.
நக்.குப்தன். ம்! என்ன திமிர்? உனக்கு இத்தனை பெயரா?
சங்கர்: நானாக வைத்துக் கொள்ளவில்லை.
நக்.குப்தன். இவன் கணக்கு?
கணக்கு வாசிக்கப்படுகிறது.
கணக்கை கேட்ட நக்.குப்தன் அதிர்ச்சியில் மகா பாவி, மகா பாவி.
நீ அய்யனுக்கு பயங்கர துரோகம் செய்திருக்கிறாய்! ஒவ்வொன்றாக வாசிக்கிறேன் கேள்!
நீ அய்யனின் மிகை நடிப்பை விமர்சித்து கைபிள்ளைகளின் பகையை சம்பாதித்திருக்கிறாய்?
அய்யன் பாக்கெட்டிலேயே காசு வைத்துக்கொள்ள மாட்டார் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு அய்யனை தருமி ரேஞ்சுக்கு கொண்டு போய் கருமி என்று விமர்சித்தாய்.
அய்யன் செய்யாத தான தர்மத்தை நாங்கள் வானளாவ புகழ நீ உண்மையை போட்டு உடைத்தாய்.
அது மட்டுமல்ல, நாங்களே இங்கு கணக்கை சரியாக பார்ப்பதில்லை.
ஆனால் பூலோகத்தில் நாங்கள் டிக்கெட் கிழித்த கணக்கு நாங்களே பார்த்ததில்லை நீ துல்லியமாக கணக்கு பார்த்து சொல்லியிருக்கிறாய்!
அந்த சிவனே எங்கள் அய்யனின் நடிப்பை பார்த்துவிட்டு பதவி வேண்டாம் என்று ராஜினாமா செய்து விட்டு ஓடி விட்டார் என்று தெரியுமா? உனக்கு? நாங்கள் எல்லாம் அய்யனின் போலி சிவனடியார்கள்.
இதற்கெல்லாம் என்ன தண்டனை தெரியுமா? இங்கேயிருக்கும் காலத்தில் கொதிக்கும் எண்ணெய் சட்டியின்மேல் நின்று நரகத்தின் வாசலில் டிக்கெட் கிழிக்க வேண்டும். இது உன்னைப்போல் அய்யனின் புகழ் பாடாதவர்களுக்கு கொடுக்கும் சிறப்பு தண்டனையாகும்.
அய்யன் அதை நேரடியாக பார்வை செய்வார்.
சங்கர்: அப்போ உங்க அய்யனும் அங்கேதான் இருப்பாரா???.........KSR.........
-
**********mgr மதகு************
1979-கோவையில் பெய்த கணமழை காரணமாக
நெய்யல் ஆற்றில்
வெள்ளம் கரைபுரன்டு ஒடியது.
கோவையை சுற்றி உள்ள 32 குளங்களும் நீர் நிரம்பி வழிந்தது.
அதில் செல்வ சிந்தாமணி குளம் மற்று சிங்காநல்லூர் குளங்கள் கரை உடைந்து குடியிருப்பு பகுதியில் வெள்ளம் சூழ்ந்து.
கோவையின் ஒரு பகுதி வெள்ளக்காடாய் மாறியது. செட்டிவீதி,செல்வபுரம்
சுண்டக்காமுத்தூர்
ஸ்டேன்ஸ் காலனி, காமாட்சிபுரம், நெசவாளர் காலனி
ஒண்டிப்புதூர் ரயில்வே பள்ளம், ஆணைவாரி பள்ளம் வழியாக பெருக்கெடுத்தது.
இதனால்
ஒட்டர்பாளையம், பட்டணம், பீடம்பள்ளி
ஆகிய கிராமங்கள் நகரப் பகுதியிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்பட்டன.
அன்றைய
தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்தார்.
வேஷ்டியை மடித்துக்கட்டிக் கொண்டு வெள்ளத்தில் இறங்கிய அவர்,
பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி,
நிவாரண உதவிகளை
வழங்க உத்தரவிட்டார்.
எம்ஜிஆருடன் அன்றைய
அமைச்சர்கள்
செ அரங்கநாயகம்,
பா குழந்தைவேலு அவர்களும்
வெள்ள நீரில் நடந்துசென்றார்கள்.
மழை வெள்ளச் சேற்றில் செருப்பு இல்லாமல் நடந்து சென்ற எம்.ஜி.ஆருக்கு முள்குத்தி ரத்தம் வந்தது.
மக்களின்துயரத்தையும்
வெள்ளத்தில் தத்தளித்த குடியிருப்புகளையும் பார்த்த எம்ஜிஆருக்கு அது பெரிய வலியாக தெரியவில்லை.
குளத்தின் கரை உடைந்து பிரதான தார் சாலையை மூழ்கடித்து, இருந்தது வெள்ளம்.
அதிகாரிகளுடன் உடனடி
ஆலோசனையில் இறங்கிய
எம்ஜிஆர்
ஒரு மதகு கட்டி, அதில் திறக்கப்படும் நீர் அங்கிருந்த வாய்க்கால் மூலம் உக்கடம் பெரியகுளத்துக்கு திருப்பி
விட ஆலோசிக்கப்பட்டது.
போர்கால அடிப்படையில் பனிகள் நடந்தது.
பாலம் கட்டி
புதிய மதகும்,
தடுப்புச் சுவரும் அமைக்கப்பட்டது.
இப்போதும் அந்த மதகை எம்.ஜி.ஆர். மதகு என்றே மக்கள் அழைக்கிறார்கள்.
மக்கள் பிரச்சினை என்றால் அங்கே நேரடியாக சென்ற
ஒரே முதல்வர் mgr மட்டுமே !
*எம்ஜிஆர்நேசன்*.........
-
' ஹலோ தியேட்டர் மேனேஜர் பேசுறேன்...இப்ப ஓடிகிட்டிருக்கிற படத்தைப் போட்டு ரொம்ப பேஜாராப் போச்சு...கட்டுப்படி ஆகலீங்க...உடனே எம்ஜிஆர் படம் போட்டே ஆகனும்...இன்னிக்கே எம்ஜிஆர் படம் அனுப்புங்க....' இப்படித்தான் இன்று பெரும்பாலான தியேட்டர்கள் நிலவரம். ஆயிரத்தில் ஒருவன், நாடோடி மன்னன், நினைத்ததை முடிப்பவன், தர்மம் தலை காக்கும், எங்க வீட்டுப் பிள்ளை, ரகசிய போலீஸ் 115, நம்நாடு என டிஜிட்டலில் கடந்த சில ஆண்டுகளாக சக்கை போடு போட்டு வரும் காவியங்கள் கடந்த 10.11.2020 முதல் நவீன திரையரங்குகளில் அதிரடியாக திரையிடப்பட்ட வண்ணம் இருக்கின்றன. காவல்காரன் தேடி வந்த மாப்பிள்ளை, பல்லாண்டு வாழ்க, சிரித்துவாழ வேண்டும், உரிமைக்குரல், நாளை நமதே என பழைய புரஜக்டர் மூலம் திரையிடும் படச்சுருள் உள்ள எம்ஜிஆர் காவியங்கள் இன்னொரு பக்கம் பட்டைய கிளப்பி வருகின்றன. இது மட்டும்தானா? என்று கேட்டால் தமிழகம் முழுவதும் கணக்கெடுக்க மற்றும் தொடர்பு கொள்ள முடியாத நிலை. படம் போட்டால் ரசிகர்கள் வருவார்களா என்ற தயக்கத்தில் இருந்த தியேட்டர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்து உள்ளனர் எம்ஜிஆரும் அவர்தம் ரசிகர்களும். சமூக இடைவெளி கடைபிடித்து அமைதியாக தியேட்டருக்குள் நுழைந்து அமர்ந்தாலும் திரையில் வாத்தியாரைப் பார்த்ததும் 3 மணி நேரமும் ' தலைவா...தெய்வமே...வாத்தியாரே...' என்ற ஆரவாரத்தால் அதிர்கின்றன திரையரங்குகள். 'நவீன திரையரங்குகள் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைக்கும் எம்ஜிஆர் பக்தர்கள், கடந்த 3 வாரங்களாக திரையிடப்பட்டு வரும் எம்ஜிஆர் படங்களை வாட்சப் முகநூல் மூலமாகவும் நண்பர்கள் போன் மூலமாகவும் தகவல் அறிய முடிகிறது என்றும் எம்ஜிஆர் படங்களுக்கு நாளிதழிலோ உள்ளூரிலோ போதிய விளம்பரம் செய்யவேண்டும் என்றும் ' வலியுறுத்துகின்றனர். எம்ஜிஆர் பக்தர் சாமுவேல் கூறும்போது, ' புரட்சித்தலைவர் காவியங்கள் 1950,1960,1970 காலங்களில் ரிலீஸ் செய்யப்பட்டதிலிருந்து நெகடிவ் உரிமை மற்றும் பிரிண்ட உள்ள காவியங்கள் இன்றுவரை தியேட்டர்களில் அடிக்கடி திரையிடப்பட்டுத்தான் வருகின்றன. வசூலிலும் அன்றுபோலவே சாதனை படைக்கின்றன. புரட்சித்தலைவருக்கு அரசியலில் இன்று எவ்வளவு முக்கியத்துவம் உள்ளதோ அதைப்போல அவரது காவியங்களுக்கும் தனி மவுசு உள்ளது. எனவே அனைத்து எம்ஜிஆர் காவியங்களையும் டிஜிட்டல் தொழில் நுட்பத்துக்கு மாற்றினால் உலகம் உள்ளவரை எம்ஜிஆர் படங்களுக்கு இப்போது உள்ள மாஸ் என்றுமே இருக்கும்' என தெரிவித்தார்..........gs.........
-
கொரனா காலமாகட்டும், இல்லை இந்த நிவர் புயல், மழை, பனி காலமாக இருக்கட்டும் ஆஹா, திரையுலகை என்றும் வாழ வைக்க இதோ..........நான் இருக்கிறேன்... என்று ஆபத்பாந்தவனாக, அனாதைரட்சகனாக இறைவன் வழியில் காப்பாற்றுபவர் வேறு யார் உள்ளார்கள்???!!! நமது இதயதெய்வம் புரட்சி நடிகர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம், என்றென்றும் கலை,திரையுலக ஏக வசூல் சக்கரவர்த்தியாம் எம்.ஜி.ஆர்., அவர்கள்... இப்பொழுதும் தம் கலை காவியங்கள்- படங்கள்- பாடங்கள் வழியே உயிர் கொடுக்கிறார்கள். இத்தகைய அருட்பெருஞ் சாதனை, சரித்திரம், சகாப்தம் படைத்து கொண்டிருக்க உங்களை விட்டால் வேறு என்ன வழி?!...எப்பொழுதும் வளர்க, வாழ்க நின் புனித பணி...திரையரங்குகள் மற்றும் அதனை சார்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், அரங்க உரிமையாளர்கள், & பணியாளர்கள் சார்பாக புரட்சி தலைவர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியை மானசிகமாக தெரிவிப்போம்------------
-
தமிழகமெங்கும் புதிய படங்கள் வெளியீட்டும் காலாவதியாகிறது...
நேற்று சேலம் மாவட்டம் குமாரபாளையத்தில் லஷ்மி தியேட்டரில் புதியபடம் திரையிட்டு பார்க்க 10 பேரகள் கூட வரவில்லை...
தியேட்டர் மூடபட்டது..
உடனே "நாடோடி மன்னன்" திரைப்பட காவியத்தை திண்டுக்கல் திரு. நாகராஜன் அவர்களிடம் வாங்கி
இன்று முதல் திரையிட்டு உள்ளனர்...
மேலும்
தலைவரின் க்யூப் சிஸ்டம் படங்கள் தான் பழைய திரைப்படங்களில் அதிகம் உள்ளது...
நாடோடி மன்னன்
ஆயிரத்தில் ஒருவன்
தர்மம் தலைக்காக்கும்
எங்க வீட்டுப்பிள்ளை
அடிமைப்பெண்
ரகசியபோலிஸ் 115
நினைத்ததை முடிப்பவன்
நம்நாடு
ரிக்க்ஷாக்காரன்
உலகம் சுற்றும் வாலிபன்
மற்றும் பல திரைப்படங்கள் க்யூப்பில் தயாரிப்பில் உள்ளது....
விரைவில்
நாடோடி மன்னன்...
அடிமைப்பெண்
மேலும் பல ஊர்களில் திரையிடப்படுகிறது...
கொராணாவுக்கு பின்
1200 திரையரங்கில்...
700 தியேட்டர் திறக்கபட்டது...
இன்று 28.11.2020 முதல்
55 தியேட்டர்கள் மூடப் பட்டது...... Ur...
-
பாட்டாலே புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர்.- வின் டிவியில்*சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*20/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
----------------------------------------------------------------------------------------------------------------
சகாப்தம் நிகழ்ச்சி இன்று எட்டு திக்கிலும் வரவேற்பை பெற்று பல்வேறு தரப்பில்*எங்கெங்கு காணினும் சக்தியடா என்பது போல திரும்புகிற திசையெல்லாம்* மறைந்தும் மறையாத**மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து பல்வேறு தகவல்கள், நெகிழ்வான நிகழ்வுகள் வந்து கொண்டே* இருக்கின்றன .* ஒரு பேரருவியாக,அவருடைய வாழ்க்கை வரலாறு என்பது இந்த மனித ஜீவியத்தில்*,பரவி கொண்டே இருக்கிறது என்பதற்கு பல்வேறு உதாரணங்களை நாம் பார்த்து கொண்டிருக்கிறோம் .*
பாடம் கற்பிக்கின்ற ஒரு பல்கலை கழகமாக திரை அரங்குகளை நினைத்தார் .அதனால்தான் ஒரு* திரைப்படம் என்பது* பல லட்ச ரூபாய் செலவில் தயாரிக்கப்படுகிறது .* அதில் அமையும், ஒவ்வொரு பாடலும், வரியும் , வசனமும், காட்சியும் படிப்பினையாக இருக்க வேண்டும்**மக்களுக்கு அதன் மூலம் பல நல்ல சமூக கருத்துக்கள் பயனுள்ளதாக தரவேண்டும் என்பதை கட்டாயமாக தன்* திரையுலக வாழ்க்கையில் கடைபிடித்தார் . தமிழ் திரையுலகில் எத்தனையோ நடிகர்கள் நடித்தார்கள், சம்பளம் வாங்கினார்கள், புகழ் அடைந்தார்கள், பிரபலம் ஆனார்கள்**ஆனாலும் அவர்களால் சாதிக்க முடியாததை, தனி ஒரு மனிதனாக திரையுலகில் முடிசூடா மன்னனாக, வசூல் சக்கரவர்த்தியாக திகழ்ந்ததோடு,அரசியல் உலகில் நுழைந்து, பட்டொளி வீசி, கொடி கட்டி பறந்து, மக்களை நேசித்து, அபரிமிதமான செல்வாக்கை பெற்று , பத்தாண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்து பொற்கால ஆட்சி புரிந்தார் .என்பது சாதனை, சரித்திரம், சகாப்தம் . இந்த வெற்றிகளுக்கு மூல காரணம் என்னவென்றால், திரையுலகில் தான் சம்பாதித்த பணத்தை தனக்கென்று வைத்து கொள்ளாமல் மக்களுக்கு வாரி வாரி இறைத்தார்**
நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களுடன் எம்.ஜி.ஆர். அவர்கள் ஒருமுறை ஒரு நிகழ்ச்சிக்கு செல்லும்போது தன்* கையில் இருந்த பணத்தை*மக்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்தபடி சென்றாராம் . அதை கண்ட பாகவதர் இப்படி அள்ளி அள்ளி கொடுத்துவிட்டால் எப்படி சம்பாதிப்பீர்கள் என்று கேட்டுள்ளார் .அன்று மாலையில் ஒரு திரைப்படத்தின் 100 வது நாள் விழா நடைபெற்றது .அதில் இருவரும் கலந்துகொண்டனர் . அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது எம்.ஜி.ஆர். சொன்னது என்னவென்றால் காலையில் நான் பார்த்தவர்கள் ஆங்காங்கே அமர்ந்துள்ளார்கள் ,நான் கொடுத்த பணம் எனக்கு திரும்பி வருகிறது . அவர்கள் மூலம் கிடைத்த பணத்தை திரும்ப அவர்களுக்கே கொடுப்பதில்தான் எனக்கு ஆத்ம திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது .என்றாராம் .***
மாட்டுக்கார வேலன் திரைப்படத்தை ஒரு மூதாட்டி 100 நாட்களும் தொடர்ந்து பார்த்தார் .* அந்த படத்தின் 100* வது* நாள் விழாவிற்கு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அரங்கிற்கு வருகை தந்தார் . அரங்கின் மேலாளர் அந்த மூதாட்டியை எம்.ஜி.ஆர். அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அவர் தொடர்ந்து 100 நாட்கள் படம் பார்த்த விவரத்தையும் சொன்னார் .* எம்.ஜி.ஆ.ர் அவர்கள் அந்த மூதாட்டியை அழைத்து ஒரு படத்தை ஒருமுறை பார்க்கலாம்.படம் நன்றாக இருந்து தங்களுக்கு பிடித்து** இருந்தால் தொடர்ந்து ஒருசில முறை பார்க்கலாம் . ஆனால் நீங்களோ தொடர்ந்து 100 நாட்கள் இந்த படத்தை பார்த்து இருக்கிறீர்கள். அதற்கு கணிசமான பணம் செலவழித்து இருக்கிறீர்கள்.நான் கேட்பதற்காக தவறாக எடுத்து கொள்ளாதீர்கள் . அப்படி 100 நாட்கள் தொடர்ந்து பார்ப்பதற்கு இந்த படத்தில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது என்று கேட்டாராம்.**அதற்கு அந்த மூதாட்டி ஐயா, எனக்கு வேலன் என்று ஒரு மகன் உண்மையில் இருந்தான் .அவன் மாடு மேய்த்து கொண்டிருந்தான்* நன்றாக ஆடி பாடி கொண்டிருந்தான் .திருமணத்திற்கு முன்பாக ,குறைந்த வயதில் நோய் வாய்ப்பட்டு இறந்துவிட்டான் .அவன் பெயரில் இந்த படம் வெளியானதால் தினசரி என் மகனை பார்க்கும் விதமாக இந்த படத்தை 100 நாட்கள் பார்த்து வந்தேன் . என் மகனை பார்ப்பதற்கு எனக்கு கசக்குமா, இதெல்லாம் ஒரு பெரிய செலவா என்று சொன்னாராம் . நீங்கள் நான் இது விஷயமாக பணம் , தங்கம் கொடுப்பதற்கு* தவறாக எடுத்து கொள்ளாதீர்கள்**என்றாராம் எம்.ஜி.ஆர். யாராவது தன் பிள்ளையை பார்த்ததற்காக கூலி தருவார்களா ,என்று கூறி அந்த எம்.ஜி.ஆர். அவர்கள் கொடுத்த 100 ரூபாயை திருப்பி கொடுத்தாராம் . உனக்கு தங்கம் போல மிக பெரிய மனசு, அதனால் உன் நினைவாகவும், என் மகன் நினைவாகவும் நீங்கள் அளித்த இந்த ஒரு சவரன்* தங்கத்தை மட்டும் நான் வைத்து கொள்கிறேன் என்று மூதாட்டி சொன்னாராம் .* எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களிடம் இருந்து பெற்ற* பணத்தை மக்களிடமே தருகின்ற குணம் உடையவர் . மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று செல்வி ஜெயலலிதா சொன்ன வார்த்தைகள் அவருக்கு பொருந்துகிறதோ இல்லையோ மக்கள் திலகத்திற்கு சால பொருந்தும்
.நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள்/காட்சிகள் விவரம்*
----------------------------------------------------------------------------------
1.ஆகட்டுமடா*தம்பி ராஜா - நல்ல நேரம்*
2.கொடுத்ததெல்லாம் கொடுத்தான் - படகோட்டி*
3.கண்ணை*நம்பாதே*- நினைத்ததை முடிப்பவன்*
4.ஒரு பக்கம் பாக்குறா*-- மாட்டுக்கார வேலன்*
-
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
தனியார் டிவிக்களில்
20/11/20 முதல் 26/11/20 வரை ஒளிபரப்பான விவரம்
_________
20/11/20
சன் லைஃப்- மாலை 4 மணி- ஆனந்த ஜோதி
21/11/20- சன் லைஃப் - மாலை 4 மணி- கணவன்
மூன் டிவி- பிற்பகல் 12.30 மணி- காதல் வாகனம்
மீனாட்சி - பிற்பகல் 1. மணி- நல்ல நேரம்
22/11/20 - முரசு டிவியில் மதியம் 12 மணி/ இரவு 7 மணி
தாய் சொல்லை தட்டாதே
மீனாட்சி- மதியம் 12 மணி - விவசாயி
மெகா டிவி- பிற்பகல் 2.30 மணி- விவசாயி
23/11/20- சன் லைஃப்
காலை 11 மணி- குடியிருந்த கோயில்
சன் லைஃப் - மாலை 4 மணி- அன்ன மிட்டகை
ஜெயா மூவிஸ்- இரவு 10 மணி- கு லே பகா வலி
24/11/20- மூன் டிவியில் பிற்பகல் 12.30 மணி-
குடும்ப தலைவன்
வசந்த்- பிற்பகல் 1.30 மணி-ஒரு தாய் மக்கள்
சன் லைஃப்- மாலை 4 மணி- அரச கட்டளை
புது யுகம் டிவியில் இரவு 7 மணி- அரச கட்டளை
வசந்த்- இரவு 7 மணி-
நான் ஏ ன் பிறந்தேன்
பா லிமர்- இரவு 11 மணி - ஆனந்த ஜோதி
25/11/20 சன் லைஃப்- காலை 11 மணி-
பல்லாண்டு வாழ்க
வசந்த்- பிற்பகல் 1.30 மணி - குடும்ப தலைவன்
மெகா24 - பிற்பகல் 2.30 மணி- தொழிலாளி
சன் லைஃப் - மாலை 4 மணி- தாயை காத்த தனயன்
ஜெயா மூவிஸ் இரவு-10 மணி- பாசம்
வேந்தர் டிவி - இரவு 10.30 மணி- ஆனந்த ஜோதி
26/11/20- மெகா - அதிகாலை 1 மணி- பணதோ ட்டம்
முரசு டிவியில் மதியம் 12 மணி/ இரவு 7 மணி-
பெற்றால்தான் பிள்ளையா
மெகா- பிற்பகல் 1.30 மணி- சந்திரோதயம்
சன் லைஃப்- மாலை 4 மணி- தேடி வந்த மாப்பிள்ளை
வசந்த்- இரவு 7.30 மணி- பட்டிக்காட்டு பொன்னையா
புது யுகம் டிவியில் இரவு 7 மணி- என் கடமை
ஜெயா மூவிஸ் இரவு 10 மணி- இதய வீணை
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.அகிலம் போற்றும் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் டிஜிட்டல் வடிவில் ஆல்பட் காம்ப்ளக்சில் 190 நாட்களும், சத்யம் காம்ப்ளக் சில் 161 நாட்களும் திரையிடப்பட்டு அரிய சாதனை படைத்தது
தற்போது கொரோனா காலத்தின் இடையில் மீண்டும் மறு வெளியீடு களி ல் பல அரங்குகளில் தென்னகம் எங்கும் வெற்றி வலம் வந்து புதிய சாதனை படைத் து வருகிறது.
இன்று முதல்(27/11/20)
நெல்லை ரத்னா
தூத்துக்குடி கிளியோபாட்ரா
காட்டுபுத்தூர் செந்தில்
தினசரி 4 காட்சிகள்
தகவல் உதவி திரு.சொக்கலிங்கம்
திவ்யா பிலிம்ஸ் மற்றும் நெல்லை திரு வி.ராஜா
மதுரை நாகமலை புதுக்கோட்டை காசி அரங்கில் தினசரி 4 காட்சிகள்
தகவல் உதவி திரு எஸ் .குமார்
_________
இன்று முதல் (27/11/20)
கோவை டிலைட்டி ல்
பல்லாண்டு வாழ்க
தினசரி 2 காட்சிகள்
-
இன்று முதல் (27/11/20) சென்னை பாலாஜியி ல்
மக்கள் திலகம் எம் ஜி ஆரின் பெரிய இடத்து பெண் திரைப்படம் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
-
இன்று முதல் (28/11/20)* குமாரபாளையம் ஸ்ரீ லட்சுமியில் புரட்சி தலைவர் /மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய*நாடோடி மன்னன்*தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : நெல்லை*திரு.வி.ராஜா .
-
எம்.ஜி.ஆர் தனது படங்களில் பல்வேறு நாட்டிய வகைகளை அமைத்து ரசிகர்களைக் கவர்ந்தார். லாவணி என்பது எதிர்பாட்டு பாடுவதாகும். அதாவது பாட்டு வடிவில் கேள்வி எழுப்பி பாட்டு வடிவில் பதில் அளிப்பதாகும். இதை என் அண்ணன் படத்தில் ஒரு நடனக்காட்சியாக அமைத்திருந்தார். சக்கரவர்த்தி திருமகன் படத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுடன் பாடல் காட்சியாக அமைந்திருக்கும். இதைத் தொடர்ந்து அடுத்து வரும் நடனப் போட்டியில் (ஆடவாங்க அண்ணாத்தே) இ.வி. சரோஜா மற்றும் சகுந்தலாவுக்கு இணையாக ஆடி வெற்றி பெறுவார்.
குடியிருந்த கோயில் படத்தில் பங்க்ரா நடனமும் மன்னாதி மன்னனில் பரதமும், தாயின் மடியில் படத்தில் பொய்க்கால் குதிரை ஆட்டமும் (ராசாத்தி காத்திருந்தா ரோசா போலே பூத்திருந்தா), ரிக்ஷாக்காரன் படத்தில் உறுமி கொட்டுக்கான ஆட்டமும், பெரிய இடத்துப் பெண்ணில் மேலைநாட்டு நடனமும், எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் இந்தோனேஷியா நடன உடையில் பச்சைக்கிளி முத்துச்சரம் பாட்டில் டபுள் எக்ஸ்போஷர் காட்சியில் நடன காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
மதுரை வீரன், ராஜா தேசிங்கு, ஒளிவிளக்கு எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. மதுரை வீரன் மற்றும் ராஜா தேசிங்கு படங்களில் பத்மினிக்கு இணையாக எம்.ஜி.ஆர் ஆடியிருப்பார். ஒளிவிளக்கு படத்தில் ஜெயலலிதாவுடன் சிங்கா சிங்கி என்று அழைத்தபடி ஆடுவார். திமுக அரசின் சாதனை விளக்கமாக இந்நடனக்காட்சி அமைந்திருந்தது. மூன்றுமே மாறுவேடக் காட்சிகளாகப் படத்தில் இடம் பெற்றன.
நடனத்தில் வீரவிளையாட்டு அசைவுகள்
எம்.ஜி.ஆருக்கு நடனத்திலும் சண்டையிலும் சம அளவு ஈடுபாடு இருந்ததால் நடனக்காட்சிகளில் வீரவிளையாட்டு நடைகளை இணைத்திருப்பார். பறக்கும் பாவை படத்தில் முத்தமோ, மோகமோ என்ற கனவுப் பாடலில் காஞ்சனாவோடு ஆடும் போது அவர் கையில் “கலர் ரிப்பனைச் சுற்றுவது போலிருக்கும். அது சுருள்வாள் சுற்றுவதாகும். சுருள்வாள் என்பது இருபுறமும் கூர்மையான சுருள் சுருளாக உள்ள பல அடி நீளம் உடைய கத்தி இதைச் சுற்றும் போது தரையில் படாமல் சுற்ற வேண்டும். அப்போதுதான் வேகமாகவும் தடங்கல் இல்லாமலும் சுற்ற முடியும். இதை லாவகமாக எம்.ஜி.ஆர் அப்பாட்டில் சுற்றுவார். இதுவும் ஒரு நடனம் போலவே தோன்றும்.
எங்க வீட்டுப் பிள்ளை படத்தில் வரும் ‘நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்’ பாட்டில் சாட்டையை வீசியும் சொடுக்கியும் பாடும்போது சிலம்பாட்ட முறைப்படி அவர் கால்களை அடி வைத்து ஆடுவார். இந்தக் கால்வைப்பை சிலம்பாட்டக்காரர்கள் ‘சவடு’ (காலடிச்சுவடு) வைத்தல் என்பர், பின்னும் முன்னும் அடி வைத்து அவர் கையில் சவுக்கை வீசி ஆடி வருவது இரண்டு கால்களைப் பொருத்தமான இணைப்பாகும்.
நீரும் நெருப்பும் படத்தில் ‘கடவுள் வாழ்த்து பாடும் இளம் காலை நேரக் காற்று’ பாட்டுக் காட்சி முழுக்கவும் சிறுவர்களின் வீரவிளையாட்டுப் பயிற்சிப் பாடலாக அமைந்தது.
பொய்க்கால் குதிரை ஆட்டம்
‘தாயின் மடியில்’ படத்தில் எம்.ஜி.ஆர் ரேஸ் குதிரை ஜாக்கியாக நடித்திருப்பார். அதில் ஒரு மேடைக் காட்சியில் இவரும் சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரையாட்டம் ஆடுவார்கள்.
“ராசாத்தி பூத்திருந்தா, ரோசாபோலே காத்திருந்தா
ராசாவும் ஓடிவந்தான் ராகத்தோடே பாடி வந்தான்
ராசாவே ராசாவே ராசாவே ராசாவே
ராசாத்தி ராசாத்தி ராசாத்தி ராசாத்தி “
என்ற பாட்டும் நடனமும் அந்தப் படத்தை அக்காலத்தில் ஓடவைத்தது. அந்தக் கதை ரசிகர்களுக்குப் பிடிக்காததால் படம் நூறுநாள் ஓடவில்லை. ஆனால், இந்தப் பாட்டில் எம்.ஜி.ஆரும் சரோஜாதேவி நாட்டுப்புறக் கலைஞர்களைப் போலவே முகபாவமும் உடலசைவும் காட்டி நடித்திருப்பார். இதைக்கண்டு ரசிக்க ரசிகர்கள் விரும்பினர். திரையரங்கிற்குச் சென்றனர்.
பங்க்ரா நடனம்
பஞ்சாபியர் அறுவடை முடிந்த பின்பு ஆடும் மகிழ்ச்சியான நடனம் பங்க்ரா நடனம் ஆகும். இந்த நடனத்தைக் குடியிருந்த கோயில் படத்தில் அமைத்தபோது சிறந்த நடனக் கலைஞரான எஸ்.விஜயலட்சுமிக்கு இணையாக தான் ஆடவேண்டும்’ என்ற அக்கறையில் அவர் ஒரு வாரம் பயிற்சி எடுத்துக் கொண்டார். படத்தில் அவரது தோற்றமும் நடன அசைவும் துள்ளலும் எல்.விஜயலட்சுமியை விடச் சிறப்பாக அமைந்திருந்தது. அது மிக நீண்ட பாடல் என்பதால் ‘டபுள் சைட்’ ரெக்கார்டு என்பார்கள்.
மேலை நாட்டு நடனம்
பெரிய இடத்துப் பெண் படத்தில் எம்.ஜி.ஆர் பட்டிக்காட்டு முருகப்பனாக இருந்து படித்த அழகப்பனாக மாறிய அறிமுகக் காட்சியில் சரோஜாதேவியைக் கவர்வதற்காக ஒரு மேலை நாட்டு நடனக்காட்சி அமைக்கப்பட்டது. அதில் எம்.ஜி.ஆர் ஆட வேண்டும் என்று இயக்குநர் ராமன்னா கூறியபோது அவர் மிகவும் தயங்கினார். “என் ரசிகர்கள் நான் மேலை நாட்டு நடனம் ஆடுவதை விரும்புவார்களா? என்று கேட்டார்.” நிச்சயம் விரும்புவார்கள். இந்த நடனக் காட்சியைப் பிரமாதமாக எடுப்போம் என்று இயக்குநர் கூறவும் எம்.ஜி.ஆர் ஆட சம்மதித்தார். அந்தப் பாட்டும் நடனமும் ரசிகர்களின் மறக்கமுடியாத பெட்டகக் காட்சியாக அமைந்துவிட்டது.
அன்று வந்ததும் இதே நிலா - சச்சச்சா
இன்று வந்ததும அதே நிலா - சச்சச்சா
என்று இருவரும் பாடிய ஜோடிப் பாட்டும் சச்சச்சா நடனமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.
புலியூர் சரோஜா பாராட்டிய “பிரேம்’ டான்ஸ்
டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா எம்.ஜி.ஆர் காலத்தில் டான்ஸ் மாஸ்டரின் உதவியாளராக இருந்தார். பின்பு, கமல் ரஜினி காலத்தில் மாஸ்டர் ஆகிவிட்டார். அவர் ஒரு பேட்டியில் எம்.ஜி.ஆரின் மேலைநாட்டு நடனத் திறமையைப் பாராட்டி “அன்பே வா” படத்தில் நாடோடி, நாடோடி, போகவேண்டும், ஓடோடி, ஓடோடி” என்ற பாட்டில் எம்.ஜி.ஆர் ஆடிய நடனம் இன்றைய ‘பிரேக்’ டான்சை விட சூப்பராக இருக்கும்”, என்றார்.
டான்ஸ் மாஸ்டர்கள்
எம்.ஜி.ஆர் தன் படத்தில் டான்ஸ் மாஸ்டராக இருப்பவர்கள் தூய்மையான பழக்க வழக்கங்களோடு எளிமையான செயற்பாடுகளுடன் தொழில்பக்தி மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டினார். ஒருமுறை எம்.ஜி.ஆர் தன் குழுவினருடன் பம்பாய் போன போது அங்குக் குடித்துவிட்டு வந்த டான்ஸ் மாஸ்டரை டிக்கெட் எடுத்துக் கொடுத்து உடனே சென்னைக்கு அனுப்பிவிட்டார். குடித்து விட்டு வந்து தொழில் செய்வது தொழிலின் மீதான மரியாதையைக் கெடுத்துவிடும் என்று எம்.ஜி.ஆர். நம்பினார்.
ஓர் இளம் டான்ஸ் மாஸ்டர் ராமாவரம் தோட்டத்துக்கு எம்.ஜி.ஆர் படங்களில் வாய்ப்பு கேட்க பெரிய ‘ஒசி’ கார் ஒன்றில் வந்தார். எம்.ஜி.ஆர் அவரைத் திருப்பி அனுப்பி விட்டார். மீண்டும் அந்த டான்ஸ்மாஸ்டர் எம்.ஜி.ஆரை சத்யா ஸ்டூடியோவில் போய்ப் பார்த்தார். தன் படங்களில் அவருக்கு வாய்ப்பளித்தார். அவரும் எம்.ஜி.ஆருக்குச் சிறப்பாக நடனக்காட்சிகளை அமைத்தார். ஒருநாள் எம்.ஜி.ஆரே அவருக்கு ஒரு பெரிய கார் வாங்கி பரிசளித்தார். அதன்பிறகு அவர் தன் சொந்த பெரிய காரில் வலம் வந்தார். அவர்தான் டான்ஸ் மாஸ்டர் சலீம்.
எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் ஒரே மாதிரி இரண்டு பாடல் / நடனக் காட்சிகள் அமைக்காமல் வித்தியாசங்களைப் புகுத்தியதால்தான் ரசிகர்கள் விசிலடித்து கை தட்டி அனைத்துக் காட்சிகளையும் ரசித்தனர்.
Courtesy - net...VND...
-
இதேபோல் எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த நேரம். வெளி நாட்டு கலைஞர்கள் ஸ்வர்ட் பைட்(வாள் சண்டை) பார்க்க ஆசைப் பட்டார்கள். உடனே தலைவர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சம்பந்தப்பட்ட ஆட்களை வரவழைத்து தலைவர் நடித்த சில முக்கியமான வாட்சண்டை காட்சிகளை போட்டு காட்டச் சொன்னார். அப்போதுதான் சர்வாதிகாரி,அரசிளங்குமரி போன்ற எம்ஜிஆர் படங்களை பார்த்து அவர்கள் வியந்து போனார்கள். தமிழ் படங்கள் வாள் சண்டையில் மிகவும் சிறந்து விளங்குவதாக பாராட்டினார்கள்.
ஏன் எம்ஜிஆர், சிவாஜியின் வாள் சண்டை படங்களை பார்க்கச் சொல்லியிருக்கலாமே. என் தம்பி,மருத நாட்டு வீரன்,வணங்காமுடி போன்ற படங்களை போட்டுக் காட்டியிருக்கலாமே. அப்படி போட்டு காட்டியிருந்தால் பார்த்தவர்கள் சிவாஜியின் வாள் சண்டையும் அந்த நேரத்தில் அவரது உடல்மொழியையும் பார்த்து சண்டை காட்சியை காட்டச்சொன்னால் காமெடி காட்சியை காட்டுகிறார்களே
என்று தவறாக நினைத்து விட மாட்டார்களா.
எம்ஜிஆர் எப்போதும் யார் மீதும் துவேஷம் காட்ட மாட்டார்.
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லி நிறைவு செய்கிறேன். எல்லோரும்
தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்திருப்பீர்கள். அதில் நாட்டிய போட்டி முடிந்தவுடன் சகாதேவன் கத்தியை தூக்கி சிவாஜி கையின்மேல் எறிவாரே அந்த காட்சியில் சிவாஜியின் நடிப்பை கவனியுங்கள். சிறு பிள்ளைகள் மிட்டாய் கேட்டு தாயிடம் தரையில் உருண்டு அடம் பிடிப்பார்களே அதை மிஞ்சி விடும் அந்த காட்சி. அப்படி உருளும் போது கையில் குத்தி நீளமாக இருக்கும் கத்தி கையில் மேலும் உள்ளே இறங்கி விடாதா. கொஞ்சம் பணம் அதிகம் A P N கொடுத்து விட்டார் என்றே நினைக்கிறேன். அதற்கு தகுந்தாற்போல் நடித்திருப்பார்
சிவாஜி.
உலகத்திலேயே ஒரு சாதாரண கத்திக்குத்துக்கு இவ்வளவு தூரம் உருண்டு புரண்டு நடித்தவர் யாரும் இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்.
இதேபோல் குடியிருந்த கோயில் படத்தில் ஒரு காட்சி வரும். எம்ஜிஆர் கையில் குண்டடிபட்டவுடன் முகத்தில் அந்த வேதனையை காட்டுவார். உடனே கத்தியை எடுத்து கையை குத்தி ரவையை வெளியே எடுக்கும் காட்சி நம்மையே அதிர வைக்கும்.
அதில் இயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியதால் தான் அந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகர் பட்டத்தை வென்றார் எங்கள் நடிகப்பேரரசர்.
சிலர் எம்ஜிஆரின் மனிதநேயத்துக்காகவும்,
ஏழைகளுக்கு அவர் கொடுக்கும் கொடைக்காகவும் படத்தை பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன் வைக்கிறார்கள். அப்படியானால் அவருடைய எல்லா படங்களும் ஒரே மாதிரி அல்லவா ஓட வேண்டும், இல்லையே. சில நல்ல கதையம்சமும், நடிப்பும் உள்ள படங்கள் மிகச்சிறப்பாக ஓடுகின்றன.
மற்ற படங்கள் சுமாரான வெற்றியை
பெறுகின்றன. எனவே மற்றவர்கள் நடிப்பைக் காட்டிலும் நடிகப்பேரரசர் எம்ஜிஆருடைய நடிப்பையும், அவருடைய நடிப்புடன் கூடிய துடிப்பையும் ரசிகர்களும்,மக்களும் விரும்பி பார்ப்பதால் தான் மற்ற நடிகர்களின் படங்களை காட்டிலும் மிகப் பெரிய வெற்றியை பெறுகின்றன.
மாமா பத்திரிகை அதிமுக வை சீண்டுவதை நிறுத்தாவிட்டால் மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் குருஜி..........Suje.Kum..
-
நம் அனைவரையும் அந்த காலத்து பத்திரிகைகள் குறிப்பாக "தினத்தந்தி" குடும்ப பத்திரிகைகள் மற்றும் "குமுதம்" போன்ற ஆபாசத்தை அரங்கேற்றும் பத்திரிக்கைகள் எம்ஜிஆரை சிறுமை படுத்துவதாக எண்ணி அவரது படங்களுக்கு தரக்குறைவான விமர்சனங்கள் எழுதுவதை கடமையாக நினைத்தன.அதிலும் "அடிமைப்பெண்" படத்திற்கு அவர்கள் எழுதிய விமர்சனம் ஆத்திரமூட்டுவதாக இருக்கும்.
எம்ஜிஆர் கூனனாக குனிந்து இருக்கும் வரை படம் நிமிர்ந்து நின்றது. எம்ஜிஆர் நிமிர்ந்தவுடன் படம் குனிந்து விட்டது என்றும் எம்ஜிஆர் சிங்கத்துடன் சண்டையிடுகிறார் (கேமராவுடன் அல்ல)என்றும், படம் முழுவதும் ஒரே காட்டுக்கத்தல் என்றும் எம்ஜிஆர் எவ்வளவு சிரமப்பட்டாரோ அத்தனையும் கிண்டல் செய்தனர் விமர்சனம் என்ற பெயரில். இப்படி பொய் புரட்டுகளை அவிழ்த்து விடுவதில் தலை சிறந்து விளங்கியது குமுதம்.
நான் சொல்வதை சற்று கவனமாக கேட்டு பதிவிடுங்கள் உங்கள் கருத்துகளை.. அதற்கு முன் சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்ற எண்ணத்தை மறந்து விட்டு பாருங்கள். அப்பாதுதான் நேர்மையான விமர்சனம் கிடைக்கும்.
அனைத்து சிவாஜி ரசிகர்கள் மட்டுமல்ல, நமது எம்ஜிஆர் ரசிகர்களும் தலைவரே, "தில்லானா மோகனாம்பாள்" படத்தை பார்க்க சொல்லியிருக்கிறார் என்றால் சிவாஜி ஒரு சிறந்த நடிகர் என்று தானே அர்த்தம் என்கிறார்கள். ஒன்றை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். எம்ஜிஆர் சொன்னது உண்மைதான். ஆனால் எதற்காக "தில்லானா மோகனாம்பாள்" படத்தை பார்க்க சொன்னார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
வெளிநாட்டினர் சிலர் தலைவரை அணுகி தமிழ் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் தெரிந்து கொள்ள வசதியாக எங்களுக்கு ஒரு தமிழ் படத்தை காட்டுங்கள் என்றதும் எம்ஜிஆர்
நாதத்தையும்,பரதத்தையும் விளக்கி சொல்லும் படமான தில்லானா மோகனாம்பாள் படத்தை சிபாரிசு செய்தார். படத்தில் A P நாகராஜன் தமிழர்களின் பாரம்பரிய இசையான நாதஸ்வரத்தின் பெருமையை அழகாக சொல்லி இருப்பார். அதுபோல் பரதநாட்டியக்
கலையையும் பெருமை படுத்தி இருப்பார்.
படம் முழுவதும் நாதமும் பரதமும் தமிழகத்தின் பெருமை மிகுந்த கலைகள் என்று சொல்லியிருப்பார்கள். மதுரை
பொன்னுசாமி, சேதுராமனின் அற்புதமான நாதஸ்வர இசையையும் பத்மினி அவர்களின் தெய்வீக
நாட்டியமும் போட்டி போட்டுக்கொண்டு படம் முழுவதும்
நமது கலாசாரத்தை பரப்பும் விதமாக அமைந்திருப்பதால் தலைவர் படத்தை பார்க்க சொன்னார்.
மதுரை பொன்னுசாமி,சேதுராமனின் நாதஸ்வர இசையை அந்த காலத்திலேயே கவர்னர் மாளிகையில் அவர்கள் வாசிக்க கவர்னர் ரசித்திருக்கிறார். காமராஜரும் இவர்களின் வாசிப்பை மிகவும் ரசிப்பார். நமது தலைவரும் ஒரு அற்புதமான இசை ரசிகரே. அதனால் அவர்களை பார்க்க சொன்னதில் வியப்பில்லை..
இதை வைத்துக் கொண்டு ஏதோ நாதஸ்வரமே சிவாஜி ஊதிதான் நாதஸ்வர இசையே கிடைத்த மாதிரி பெருமை கொள்வதேன்? நாதஸ்வரத்திற்கு சிவாஜி நன்றாக வாயசைப்பார் போய் பாருங்கள் என்றா எம்ஜிஆர் சொன்னார்...........Su.Ku..
-
"எம்.ஜி.ஆரும் விடுதலைப் புலிகளும் பிரிக்க முடியாத பந்தம்."
இலங்கையில் இருக்கும் கண்டியில் பிறந்தமையால் தமிழ் ஈழம் குறித்தான ஆர்வமும், செயல்பாடுகளும் எம்.ஜி.ஆரிடம் அதிகம் காணப்பட்டன. ஈழத்திற்காக வெளிப்படையான ஆதரவினை எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருக்கும் போது தந்தார்.
பழ நெடுமாறன் கருத்து
1980களில் ஈழப்போராட்டம் தீவிரமடைந்த போது அதற்கு ஆதரவளித்தார் எம். ஜி. ஆர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழர்களுக்கென்று தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். பிரபாகரனின் தலைமையிலான புலிகளின் போராட்டத்துக்குத் தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை தந்தார் என நெடுமாறன் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர் பற்றிப் பிரபாகரன்
விடுதலைப் புலிகளுக்கும் பிரபாகரனுக்கும் வெளிப்படையான ஆதரவு அளித்தார் எம்.ஜி.ஆர். ஆயுதம் வாங்கி இலங்கை கொண்டு சென்று தமிழ்மக்களை காப்பாற்ற, முதலில் இரண்டு கோடி ரூபாயை தந்தார். அந்த உதவி இல்லையென்றால் இந்தளவிற்கு இயக்கம் வளர்ந்திருக்க இயலாது என்று பிரபாகரன் பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் எம்.ஜி.ஆரை அண்ணன் என்றே அழைத்ததாகவும் கூறியிருக்கிறார். மத்திய அரசு விடுதலை புலிகளுக்கு நெருக்கடி கொடுத்த காலக்கட்டத்திலும், பெரிய தொகையைக் கொடுத்து உதவி செய்தார். மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றே எம்.ஜி.ஆர் தன் நிலையை பற்றிப் பிரபாகரனிடம் கூறியுள்ளார். எம்.ஜி.ஆர் உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாகப் பிரபாகரனே கூறியுள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பிரபாகரன் வெளியிட்ட இரங்கல் செய்தியில் ”தமிழீழ மக்கள் சுதந்திரமாக வாழவேண்டுமென விரும்பிய மாண்புமிகு முதலமைச்சர் எம்.ஜி.ஆர், அவர்களுக்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்” என்று கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் ஈழக்கனவுப் பற்றி ஆன்டன் பாலசிங்கம்[மூலத்தைத் தொகு]
1984 ஆம் ஆண்டு அளவில் எம்.ஜி.ஆருக்கும், விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட தோழமைப் பற்றி ஆன்டன் பாலசிங்கம் விடுதலை கட்டுரைத்தொகுதியில் தந்துள்ளார். "எதிர்பாராத விதமாக எம்.ஜி.ஆருக்கும் விடுதலை இயக்கத்திற்குமான உறவு மலர்ந்தது. தலைவர் பிரபாகரனின் தலைமைப் பண்பும், வீரமும் எம்.ஜி.ஆரைக் கவர்ந்தது. அது நாளடைவில் நட்பாக மாறியது." என்று விடுதலை கட்டுரைத் தொகுதியில் தந்திருக்கிறார்.
இயக்குனர் சீமான் நம்பிக்கை
"முன்னாள் தமிழக முதல்வர் அமரர். எம்.ஜி.ஆர். போன்று ஈழத்தமிழர்களுக்கு உதவி செய்தவர்கள் யாருமில்லை. அவர் மட்டும் மேலும் 10 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்குத் தனி நாடு கிடைத்திருக்கும். அது நடக்காததுதான் வரலாற்று துயரம்" என்று இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோது தெரிவித்தார்..........mgn.........
-
அய்யன் நடித்த "தெய்வ மகன்" ஒரு மாபெரும் மிகை நடிப்பின் உச்சக்கட்டம் என்று சொன்னால் அது மிகையல்ல.. மூன்று வேடங்களிலும் மிகை நடிப்பை புகுத்தி வெகு நேர்த்தியாக இதைவிட வேறு எந்த நடிகரும் மிகை நடிப்பை காட்ட முடியாது என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டிய படம்.
அதனால் ஆஸ்கருக்கு அனுப்பி ஹாலிவுட் நடிகர்களை பதற வைக்கலாம் என்று பார்த்தால் படம்
தேசத்தை தாண்டி வெளியே போகாததால் தமிழர்களின் மானம் காக்கப்பட்டது.
மேலும் ஆஸ்கருக்கு போகாத படத்தை அய்யனின் மூன்று வேடங்களையும் செய்தது ஒரே ஆள் என்பதை நம்ப மறுத்தார்களாம். எப்பேர்ப்பட்ட கரடி விடுகிறார்கள்.
தகப்பனும் மகனும் அச்சு அசலாக ஒரே ஆள் போல தோன்றுகிறார்கள்.
முகத்தில் உள்ள கசடுகளை வழித்தால் இன்னொரு மகனின் முகம். இதில் எங்கு இருக்கிறது வித்தியாசம். உலகத்திலேயே இப்படி ஒரு செல்ல பணக்கார மகன் போல
யாரும் கிடையாது என்றே நினைக்கிறேன். அவருடைய நடிப்பு கொஞ்சம் அலியின் நடிப்பை ஒத்து போகிறது. அலிகளின் பிரதிபலிப்பில் தெரியும் மிகை அய்யன் நாணி கோணி நடிப்பதில் தெரிகிறது.
பிறகு யாரை பார்த்து அய்யன் காப்பி பண்ணினார்? அலியை பார்த்தா? என்று தெரியவில்லை.
டணால் தங்கவேலு போல கைபிள்ளைகள் காமெடி குபீர் சிரிப்பை வரவழைத்தாலும் மேலும் மேலும் அவர்கள் காமெடி தொடருவது எப்படி அடித்தாலும் தாங்குறான்யா என்ற வடிவேலு காமெடியையும் நினைவு படுத்துகிறது. அய்யன் முக்கி முக்கி நடித்தும் அவரால் வித்யாசம் காட்ட முடியவில்லை.
ஆனால் புரட்சி தலைவர் "உலகம் சுற்றும் வாலிபனு"க்காக மேடா ரூங்ராத்தை புக் பண்ணும் போது தொப்பி கண்ணாடி சகிதம் ஒரிஜினல் கெட்டப்பிலே இருந்திருக்கிறார். அதன்பின் 'பச்சைக்கிளி' பாடலுக்கு எம்ஜிஆர் மேக்கப்புடன் வந்ததும் மேடா ரூங்ராத் வேர் இஸ் மிஸ்டர் எம்ஜிஆர்? என்று கேட்டதும் எல்லோரும் எம்ஜிஆரை அடையாளம் காட்டியவுடன் அவர் நம்ப மறுத்திருக்கிறார். அதுதான் அற்புதமான கெட்-அப். இனி கைபிள்ளைகள் கண்படி டூப் விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இந்தியாவிலேயே தலை சிறந்த நடிகரான பாரத் எம்ஜிஆர் இருக்கும் போது மாற்று நடிகரின் மிகை நடிப்பை இங்கு பினாத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறோம்.
நல்லவேளை ஆங்கில நடிகர்களும் ஆஸ்கர் தேர்வுக்குழுவினரும் தப்பித்துக் கொண்டார்கள். நடிப்பா அது? பதறி குதறி கதறி வளைந்து நெளிந்து நாணி கோணி என்று அத்தனை விதமான நடிப்புகளையும் ஒருங்கே காண்பித்து பார்த்தவர்களை கண் மண் தெரியாமல் பர்லாங்கு தூரம் ஓட வைத்து சினிமா ரசிகர்களை திக்கு முக்காட செய்த படம்தான் "தெய்வ மகன்".
சரி ஆஸ்கர் வேண்டாம், உள்ளூர் மக்களாவது ரசித்தார்களா? என்றால் ஐயோ பாவம் 'ஜில்லு என்னை கொல்லாதே' என்று எள்ளி நகையாடுவதை போல அய்யா எங்களை விட்டு விடுங்கள் என்று பார்த்தவர்கள் 'சாமி என்ன நாங்க தப்பு செய்தோம்' என ஓடியதால் படம் சென்னை சாந்தியில் 50.நாட்களுக்குள்ளே வாயை பிளந்து விட்டது. கிரவுனில் 5 வாரமும் புவனேசுவரியில் 4 வாரமும் ஓடிய பின்பு 100 நாட்கள் பெரிய பெரிய வடக்கயிறு துணையுடன் ஓட்டப்பட்டது. ஒரு சில படங்களுக்கு பட்டறை வசூலை வாரி வழங்கும் கைபிள்ளைகள் "தெய்வ மகனு"க்கு அதைக்கூட தரவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள் "தெய்வ மகனி"ன் நிலையை.
படத்தின் தயாரிப்பு அய்யனின் குடும்ப நண்பர் பெரியண்ணன் என்று நினைக்கிறேன். இதற்குமுன் "பந்த பாசம்" "அன்புக் கரங்கள்" ஆகிய படங்களை எடுத்து தானும் ஒரு தயாரிப்பாளர் என்பதை அடையாளப்படுத்திக் கொண்டிருந்தார். "தெய்வ மகனு"ம் வசூல் ரீதியில் தோல்விப்படமானவுடன் தன் முழு சக்தியையும் திரட்டி "தர்மம் எங்கே"?
என்ற கேள்வியை எழுப்பி தர்மம் அவர் பக்கம் இல்லை என்பதை உறுதி செய்ததுடன் அய்யனின் ராசி வேலை செய்து அத்துடன் அவரின் படத்தயாரிப்பு முடிவுக்கு வத்தது.
இந்தப் பெரியண்ணன்தான் திருச்சி பிரபாத் தியேட்டர் அதிபர். அய்யனின் அருமை குடும்ப நண்பர் என்பதை உணர்ந்து ஆப்பு வைக்கப் பட்டது . சென்னை சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி, திருச்சி பிரபாத் இந்த 4 சொந்த மற்றும் குத்தகை தியேட்டர் தவிர வேறு மற்ற தியேட்டர்களின் கணக்கை பார்த்தால் மிக சொற்பமாகத்தான் 100 நாட்கள் கண்டிருக்கும். அதிலும் இழுவை தியேட்டர்கள்தான் அதிகம் இருக்கும்..........ksr...
-
அனைவருக்கும் வணக்கம்...... நமது ரசிக சகோதரர்கள், சகோதரிகள் எல்லோரும் என்றும் விரும்பும், பூஜிக்கும், நிழலை உண்மையிலேயே நிஜமாகவே, நிஜமாக்கிய வள்ளல் பெருந்தகை இதய தெய்வம் மக்கள் திலகம் அவர்களின் எப்பொழுதும் வற்றாத ஜீவ நதியாக அவர் தம் புகழ், மாண்புகள், பெருமைகளை எடுத்து கூறவே நேரமில்லை..... அவ்வளவு தகவல்கள் ஒவ்வொரு அணு தினமும் வந்து கொண்டேயிருக்கிறது. அப்படிப்பட்ட நம் ரசிகர்கள் சில தேவையில்லாத நபர்களின் தவறான, அடிப்படையில் ஆதாரங்கள் இல்லாத செய்திகளுக்கு சரியான நேர்மறையான, இன்றைய தலைமுறையினர் (அறியாதவர்கள்) நற் விளக்கங்கள் அளிக்க வேண்டும் என்ற கோட்பாட்டை நாம் பிறருக்கு தெரியப்படுகிறோம். அப்படி தான் சில விடயங்களை தெளிவு படுத்த பதில் பதிவுகள் சொல்ல நேரிடுகிறது. அவ்வாறு சில முட்டாள்தனமான மாற்று முகாம் குழுவினர் பொய்யான, கேலித்தனமாக எழுதும் பதிவுகளுக்கு திரு சங்கர் அவர்கள் பதில் அளிக்கிறார்கள்... சில மடத்தனமான உதாரணங்கள்... நவராத்திரி படத்தில் 9 நபர்கள் நடிப்பை திரைப்பட தேர்வு குழுவினர் மற்றும் நீதிபதிகள் நம்பவில்லை. நடித்தது ஒரே ஆள் இல்லை. அதேபோல் தெய்வ மகன் படம், கௌரவம் படம் இதெற்கெல்லாம் அந்த ரசிக குரூப் இட்டுகட்டிய படு மோசமான பொய் சொல்லி வேறு என்ன சாதிக்க முடியும்? தங்கள் நிலை இன்னும், இன்னும் மோசமாக கீழிருங்கி போய் கொண்டுள்ளதை உணராத மடையர்களாக உள்ளது உள்ளபடி வேதனை தரும் செய்தி...
-
பாட்டாலே புத்தி சொன்ன*வாத்தியார் எம்.ஜி.ஆர். -* வின்*டிவியில் சகாப்தம்*நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி*24/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
---------------------------------------------------------------------------------------------------------------------
சத்யா*ஸ்டுடியோவில் உழைக்கும்*கரங்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது .அதில் கலந்து*கொண்டு*நடித்த*பின் வீட்டுக்கு காரில்*புறப்படும்*சமயம்*ஒருவர் காரை*மறித்து* பத்திரிகையை*எம்.ஜி.ஆர். அவர்களிடம் தருகிறார்*.* காரின்*குறுக்கே*அவர் விழுந்ததும்*,கார்*ஓட்டுநர் நல்ல வேளையாக*பிரேக்கை* வேகமாக அழுத்தி வண்டியை*நிறுத்துகிறார் .பதற்றமான எம்.ஜி.ஆர். அவர்கள்* அவரை*அழைத்து*ஏன் இப்படி குறுக்கே*விழுந்தாய். தவறிப்போய் ஏதாவது அசம்பாவிதம் நடந்து இருந்தால்*என்ன செய்வது*,உன்னுடைய நல்ல நேரம் .நல்லபடியாக ஒன்றும் பாதிப்பில்லை. சரி*என்ன விஷயம் என்று கேட்க, தலைவரே*, உங்கள் தலைமையில் திருமணம் நடந்தால்தான் திருமணத்திற்கு நான் ஒத்து கொள்வதாக,கடந்த*இரண்டு வருடமாக* குடும்பத்தினரிடம் சபதம் செய்துள்ளேன் . நீங்கள் கண்டிப்பாக திருமணத்திற்கு வருகை*தருவீர்கள் என்றும் சொல்லிவிட்டேன் .* ஆகவே நீங்கள் அவசியம் வந்து எங்களை*ஆசிர்வதிக்க வேண்டும் என்றார்.* தலைவர் என்றைக்கு , எங்கே திருமணம் என்று கேட்க , ஒரு குறிப்பிட்ட தேதியில்*காலை*9 மணிக்கு*திருமணம் நடைபெறுகிறது என்கிறார் .பத்திரிகையை*வாங்க பெற்ற தலைவர் எம்.ஜி.ஆர். தன்* உதவியாளரிடம்*திருமண*தேதியை*முன்கூட்டியே எனக்கு*ஞாபகப்படுத்து* என்கிறார் . ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில்*திருமண*ஏற்பாடுகள் விமரிசையாக நடைபெற்றன. மணமக்கள் தயாராகி விட்டனர் .* முகூர்த்த*நேரம் முடியும்*தருவாயில்*உள்ளது ஆனால் தலைவர் எம்.ஜி.ஆர். வருவதாக*எந்த சகுணமும்* தெரியவில்லை*.
அந்த குறிப்பிட்ட நாளன்று*எம்.ஜி.ஆர். அவர்கள் ஸ்டுடியோவிற்கு வந்து மேக்கப்*அறையில்*நுழைகிறார் . மேஜையின்மீது ஒப்பனை பெட்டி அருகில் அந்த திருமண*பத்திரிகை கிடக்கிறது .* எதேச்சையாக* எடுத்து பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் பதறிப்போய் தன் உதவியாளரிடம் உடனே இந்த திருமணத்திற்கு போக வேண்டும்.* உடன் ஏற்பாடு செய்து, புறப்படு என்கிறார் .* ஆனால் அந்த திருமணம் நடைபெறும் கிராமத்திற்கு சென்னையில் இருந்து செல்வது என்றால் குறைந்த பட்சம்*ஒரு மணி நேரமாவது*ஆகும் .* உழைக்கும்*கரங்கள் படப்பிடிப்புக்கான ஒப்பனையுடன் காரில்*புறப்படுகிறார் .* ஆனால் முகூர்த்த*நேரம் தவறிவிட்டது .**திருமண*மண்டபத்திற்கு எம்.ஜி.ஆர். வந்தடைகிறார் .* திருமண*வீட்டார், மணமகள் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர் . ஆனால் மணமகனை*காணவில்லை .* ஒரே குழப்ப*நிலை. அனைவரும் பதற்றமாக உள்ளனர் . நிலைமையை*நேரில் கண்டறிந்த எம்.ஜி.ஆர். அவர்கள் வேதனை அடைந்து, தன் உதவியாளரை*அழைத்து*எதற்கும் சத்யா*ஸ்டுடியோவிற்கு* உடனே புறப்படலாம் என்று காரில் செல்கிறார் . அங்கு கண்ட*காட்சி*எம்.ஜி.ஆர் அவர்களை வியப்படைய செய்தது.தலைவர் வந்து நடத்திவைத்தால்தான் திருமணம் செய்து கொள்வது என்று மணமகன் ஸ்டூடியோ*வாசலில்*தவம் கிடக்கிறார் . தலைவர் எம்.ஜி.ஆர்.** . உடனே மணமகனை*அழைத்து கொண்டு*மீண்டும் திருமண*மண்டபத்திற்கு வந்தடைந்தார் .தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் முகூர்த்தம் தவறினாலும் பரவாயில்லை . நான் தாலி எடுத்து தருகிறேன். அதை மணமகள் கழுத்தில்*கட்டு என்றார் . தாலி கட்டி முடித்ததும்*,மணமகன் காதில்*சில*அறிவுரைகள்*எம்.ஜி.ஆர். சொல்கிறார். பின்னர் மணமக்கள்* இருவரையும்** சத்யா*ஸ்டுடியோவிற்கு அழைத்து*செல்கிறார் . அங்கு ஒரு பெரிய திருமண*பந்தல் அமைக்கப்பட்டு ,விருந்திற்கு சிறப்பான*ஏற்பாடுகள் செய்யப்பட்டன* .திருமண*வீட்டார் அனைவரையும்*வரவழைத்து சிறப்பான, , வகை வகையான*உணவுகள் பரிமாறப்பட்டன .* மணமக்கள் அருகில் எம்.ஜி.ஆர். அமர்ந்து*உணவருந்துகிறார் .* படப்பிடிப்பு குழுவினருக்கும் திருமண*விருந்து*அளிக்கப்பட்டது . மணமக்கள் மனம் குளிர*சிறப்பான*ஏற்பாடுகளை தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் உதவியாளர் மூலம் செய்திருந்தார் . திருமண விருந்து சாப்பிட்டு*மணமக்கள் புறப்படும்போது ஒரு லாரியில்*மனமக்களுக்கான கட்டில்*,* பீரோ, பித்தளை ,அலுமினியம், எவர்சில்வர் சாமான்கள் ,வெள்ளி பூஜை சாமான்கள் அனைத்தும் சீர் வரிசை பொருட்களாக* வந்து இறங்கின . அந்த சீர்*வரிசை பொருட்கள்*தனி லாரியிலும் , மணமக்கள் ஒரு காரிலும்*தொடர்ந்து செல்லும்படி ஏற்பாடுகள் செய்திருந்தார் தலைவர் எம்.ஜி.ஆர் .* *
திரு. கா. லியாகத்*அலிகான்*பேட்டி*
-----------------------------------------------------------மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். பலருக்கும்*பல உதவிகள்*செய்த வண்ணம் இருந்தபோது சிலர்*நீங்கள் எதற்காக* ஒருவருக்கு*மீனை*கொடுக்கிறீர்கள். அவருக்கு*மீன் பிடிக்க கற்று கொடுங்கள் என்று சொன்னார்கள் . அப்போது தலைவர் எம்.ஜி.ஆர். அவனுக்கு மீன் பிடிக்க , வலை, மற்றும் உபகரணங்கள் வாங்கி கொடுத்து*, மீன் பிடிக்க கற்று*கொடுப்பதற்குள் அவன் இறந்துவிடுவான்*மீன் பிடிக்க கற்று கொடுக்கிறேனோ இல்லையோ, அவனுக்கு மீனை கொடுத்து*அவனை*பிழைக்க வைக்க வேண்டும் என்பதுதான் எனது கொள்கை*என்று தான் ஆட்சி செய்த*தமிழக*மக்கள் அனைவர்க்கும் உணவு கிடைக்க வேண்டும்* என்கிற*சித்தாந்தத்தின் அடிப்படையில்தான்* ரேஷன் கடைகள்*மூலம் பொதுமக்களுக்கு வழங்கும் அரிசியின் விலையை*கிலோவுக்கு*ரூ.1/- க்கு*மேலாக உயராத*வண்ணம் பார்த்து கொண்டவர்தான் நமது*அருமைத்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் . 1984ல் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று கொண்டிருந்த அந்த கால கட்டத்தில்**சிகிச்சை முடிந்து மூன்று மாத காலம் தொடர்ந்து அமெரிக்காவில் தங்க வேண்டிய சூழ்நிலையில்*நிதியமைச்சராக இருந்த*நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள்* ரேஷன் கடைகளில் பொது வினியோகத்தில் கிலோ*ரூ.1/-க்கு அரிசி போடுவது*அரசிற்கு பெரிதும் இழப்பு ஏற்படுகிறது . ஆகவே 25 பைசாவை கூட்டி*ரூ.1.25க்கு அரிசி போட்டால்*வருவாய் இழப்பு ஏற்படாது. அதற்கு முதல்வரின் அனுமதி வேண்டும்*என்று கருதி*அந்த கோப்புகளை*விமானத்தில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தனர் . அந்த கோப்புகளை கண்ட முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள்* 1 நயா*பைசா கூட*விலை ஏற்றம் செய்து பொதுமக்கள் மீது திணிக்க நான் அனுமதிக்க மாட்டேன். வேண்டுமானால் இதைவிட* குறைந்த விலையில் அரிசி விநியோகம் பொதுமக்களுக்கு செய்ய முடியுமானால் அதை நான் வரவேற்பேன் என்று முடிவு எடுத்தவர்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**
ஏழை உலை வைக்கின்ற*அந்த அரிசிதான்*ஒருவனுக்கு உயிர் கொடுக்கும்*உயிர்நீராக இருக்கும் .. ஒரு பழமொழியை*சொல்வார்கள் . தவிப்பவனுக்கு தாகத்திற்கு தண்ணீர் தரவேண்டுமே* ஒழிய ,அவன் இறந்த பிறகு வாயில் பாலை ஊற்றக்கூடாது என்பார்கள் .***அந்த தத்துவத்தின்படி ஏழை, எளியோர்*அரிசியை ரூ.1/-க்குத்தான் வாங்க முடியும்*என்று சொன்னவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அவருக்கு*பின்னால் ஆட்சிக்கு வந்த செல்வி ஜெயலலிதா*அவர்கள்**ஏழை எளியோருக்கு இலவச அரிசி திட்டத்தை*அமுல்படுத்தினார் . அதை செவ்வனே இன்றைய அ.தி.மு.க. அரசு எடப்பாடி*பழனிசாமி அவர்கள் தலைமையில் அதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறது . அரிசிதானே* என்று ஏளனமாக*நினைக்கவேண்டாம். ஒரு காலத்தில் இதே அரிசி ஒரு கிலோவுக்கு ரூ.4.25 க்கு விற்றது .* இதை விமர்சிப்பவர்களை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் ,நீங்கள் பருத்தியை சாப்பிடுங்கள். எலியை*சமைத்து சாப்பிடுங்கள் என்று பதில் சொன்னார்கள்* இவற்றையெல்லாம் பேரறிஞர் அண்ணா*மேடைகளில் விமர்சித்து பேசினார்*இப்படியெல்லாம் பேசுபவர்கள் ஆட்சியில் நீடிப்பது*அவசியமா*என்று கேள்வி எழுப்பினார் . பேரறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்ததும், அந்த ரூ.4.25 க்கு*விற்ற அரிசியை*படிக்கு ஒரு ரூபாய் நிச்சயம், மூன்று படி நிச்சயம் என்ற கொள்கையின்படி ரூ.1/-க்கு படி அரிசி தந்ததை, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தன் இறுதி காலம் வரையில் கடைபிடித்து பொதுமக்களுக்கு பொது விநியோகம் மூலம் அரிசி கிடைக்க செய்தது வரலாறு .*மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள்*விழ வேண்டும் என்று பேரறிஞர் அண்ணா பாராட்டினாரே , அவருடைய நெறிமுறையில் வழிநடந்தாரே*. .நிச்சயமாக பெருமைப்படத்தக்க இடத்தை நாம் அடைவோம்*என்பதில் எந்த குறையும்** கிடையாது. அதை எப்படியும் அடையலாம். அதை மனதில்*கொண்டு குறைந்தபட்சம் தினசரி 8 மணி நேரம் உழைக்க வேண்டும் . 8 மணி நேரம் ஒய்வு. 8 மணி நேரம் உறக்கம். இவைதான் வாழ்க்கையின் சித்தாந்தம் என்பது*சிக்காகோ*நகரில் நடைபெற்ற தொழிலாளர் பேரணி, மற்றும் மாநாட்டில் எடுத்த முடிவு . 8* மணி நேரம் வேலை என்பது* 12 மணி நேரம்* 14 மணி நேரம் என்று* உழைத்த காரணத்தால்**புரட்சி வெடித்து* அங்கே தொழிலாளர்களுக்கு தரப்பட்ட*8 மணி நேரம் உழைப்பு, 8 மணி நேரம் ஒய்வு, 8 மணி நேரம் உறக்கம்* என்கிற*சித்தாந்தத்தின் அடிப்படையில் அ. தி.மு.க. அரசு .செயல்படுகின்ற வகையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உறுதிப்படுத்தி தொழிலாளர்களுக்காக தன்னுடைய*வாழ்க்கையை அர்ப்பணித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .
ஒரு கால கட்டத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளர் திரு.துரை பாரதி*குறிப்பிட்டு சொல்லும்போது திருச்சியில்*ரகுநாதன் என்கிற தோழர்* தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை கூட்டத்தில் பார்க்கின்றபோது இன்றைக்கு தொழிலாளர்களுக்கு*கடை சட்டம் என்கிற கடையில் வேலை செய்பவர்களுக்கு உரிய சட்டத்தை கொண்டு வந்தால்*நன்றாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டு எழுதி கொடுத்ததை*எம்.ஜி.ஆர் அவர்கள் பெற்று கொண்டார். ஆனால் தலைவர்**அவருக்கு இருக்கும் நெருக்கடியில்*இதை*எங்கே பார்க்க போகிறார் என்ற*சந்தேகம் எழுந்ததாம். ஆனால் மனுவை வாங்கிய தலைவர் ஓரிரு மாதங்களில் சட்ட மன்றத்தில்* அமைப்பு சாரா*தொழிலாளர்களுக்காக கடை சட்டம் ஒன்றை*அறிமுகப்படுத்தி, அதை நிறைவேற்றி காட்டி ,செய்திகளை பத்திரிகைகளில் வெளிவரச்செய்தபோது அதை கண்ட*திருச்சி*ரகுநாதன் என்பவர் பூரித்து போய்*தலைவர் அவர்களுக்கு நன்றியை காணிக்கையாக்கி ,பெருமைப்படுத்தி*திருச்சியில்*கழக*தோழர்களிடம் பேசியிருக்கிறார் . புரட்சி தலைவரின்*ஆட்சி காலத்தில், ஒரு விஷயத்தை, பிரச்னையை*பெரிய அளவில் பிரபலமான ஒருவர்தான்*அவருடைய கவனத்திற்கு கொண்டுவர வேண்டும் என்ற நியதி இல்லை. ஒரு சாதாரண, சாமான்ய*மனிதனின், வேண்டுகோள் அல்லது மனு என்பது*அவரது கவனத்திற்கு சென்றால் அதை நினைவில் வைத்து உரிய கால*நேரத்தில் முடிவு எடுத்து செயல்படுத்த கூடியவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .**
ஒரு இஸ்லாமியர் தலைவரிடத்தில் ஒரு பிரச்னையை*அவர் கவனத்திற்கு கொண்டு வந்தார். சைக்கிளில் செல்பவர்கள் பொதுவாக ஏழை எளியோர்கள் .கணவன்*மனைவி இருவர் சைக்கிளில் செல்லும்போது ,எதிரில் காவலர்*தென்பட்டால் சைக்கிளை*நிறுத்தியதும், மனைவி இறங்கி*ஓடக்கூடிய சூழ்நிலை உள்ளது . மனைவி தவித்து கொண்டிருக்க, கணவன்*காவல் நிலையத்திற்கு அழைத்து*செல்லப்பட்டு*தண்டனைக்கு உள்ளாவான் .**இந்த நிலை மாற வேண்டும் .அதற்குரிய சட்டம் இயற்ற*வேண்டும். சைக்கிளில் இருவர் செல்ல முறையான சட்டம் இயற்றி*ஏழை எளியோரை*வழக்கில் இருந்தும், தண்டனையில் இருந்தும் காப்பாற்ற வேண்டும் .தலைவர் எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்ததும்*சில சட்டங்களை உடனடியாக நிறைவேற்றினார். அதில் சைக்கிளை*இருவர்*செல்லலாம் என்பதும் ஒன்று . புகழின் உச்சியில் இருந்த முதல்வர் எம்.ஜி.ஆர். ஒரு சாதாரண*தொண்டனின் கோரிக்கையை ஏற்று ,அதை சட்டமாக்கி,நிறைவேற்றியதால்* ,தொண்டர்கள்* மீது எவ்வளவு அன்பு, பாசம் காட்டினார் என்பதை*இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம் இன்றைக்கு எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். முகலாயர் ஆட்சியில் பாபர்*தன*மகன் ஹுமாயூனிடம் சொன்னாராம். எனக்கு பின்னால் நீதான்*குடும்ப வாரிசு .பின்னர் அமைச்சர்களிடம் சொன்னாராம்.என்னுடைய காலம்,நேரம் நெருங்கி கொண்டிருக்கிறது . நான் எப்போது இறப்பேன் என்பது*எனக்கே தெரியாது .அதனால் எனது வாரிசாக*என் மகன் ஹுமாயூனை*அறிவிக்கிறேன் .அந்த காலத்தில்**வாரிசுதாரரை முன்கூட்டியே அறிவிக்கலாம் . பாபர்*தன் மகன் ஹுமாயூனிடம் மகுடம் தலையில்*ஏறிவிட்டதால் மமதையோடு*அலையாதே*.ஏழை எளியோரை எந்த நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும் உதாசீனப்படுத்தாதே நாம் முஸ்லீம்*மதத்தை சார்ந்தவர்கள். ஆனால் இங்கு வசிக்கும்*மக்களில் பெரும்பாலானோர்*இந்து மதத்தை சார்ந்தவர்கள் . இந்துக்கள் மனம் புண்படும்படி நீ எந்த காரியமும் செய்ய கூடாது. நம்முடைய மூதாதையர்*.பலர் இந்து கோயில்களை அடித்து நொறுக்கி இருக்க கூடும். அந்த செயலை*மட்டும் நீ கண்டிப்பாக செய்ய கூடாது .இந்துக்கள் வழிபடும்*பசுக்களுக்கும் நீ எந்த இடையூறும் செய்யக்கூடாது .என்று பாபர் தன் மகன் ஹுமாயூனுக்கு அறிவுரைகள் கூறினாராம் .****
முகலாய*மன்னர்*பாபர்*போல ,புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு அரசியல் வாரிசாக*யாரையும் அறிவிக்கவில்லை .* ஆனால் கலையுலக வாரிசாக*நடிகரும், இயக்குநருமாகிய பாக்யராஜ் அவர்களை கலைவாணர் அரங்கில்*ஒரு நிகழ்ச்சியில் அறிவித்தார் . தான் எழுதிய உயிலில்*நான் வாரிசு என்று யாரையும்*நியமிக்கவோ, அறிவிக்கவோ மாட்டேன் .ஏனென்றால் இது மன்னராட்சி காலமல்ல. மக்களாட்சி காலம் . இந்த காலத்திலே, அ.தி.மு.க. ஆட்சியில் 80 % யாருக்கு ஆதரவாக*இருக்கிறார்களோ, அவர்தான் இந்த கட்சியை வழிநடத்த வேண்டும்* ஒரு வேளை கட்சியில் பிளவு ஏற்படுமேயானால் 80% பேர் யாருக்கு*ஆதரவு தருகிறார்களோ, அவர்தான் கட்சியையும், அரசையும்*வழிநடத்த கூடியவர் . என்று உயில் எழுதி இருக்கிறார் அன்னை ஜானகி அம்மையார் அவர்கள் பெயரில் இருந்த அலுவலகத்தை* அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு*. நான் தானமாக தருகிறேன் என்று எழுதி கொடுத்து , முறைப்படி*ஜானகி அம்மையாரை*நேரில் அழைத்து வந்து**கட்சியின் பெயரில் பதிவு செய்து ,தானமாக*வழங்க செய்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.**அதற்கு பின்னால், ஒரு கால கட்டத்தில் ,ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரு பிரிவுகள்*ஏற்பட்ட*போது செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு அமோக ஆதரவு பெருகி இருந்த காரணத்தை முன்னிட்டு, ஜானகி அம்மையார் அவர்கள்*ஜெயலலிதா அவர்களுக்கு இருந்த*மக்கள் செல்வாக்கை உணர்ந்து, நான் கட்சி, ஆட்சி பொறுப்புகளில் இருந்து விலகி கொள்கிறேன். நீங்கள் கட்சியையும், ஆட்சியையும் தொடர்ந்து நல்லபடியாக வழி நடத்துங்கள் .என்று சொல்லி*அ.தி.மு.க. அலுவலகத்தையும் எழுதி கொடுத்து , புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கமான அ.தி.மு.க. தொடர்ந்து செல்வி ஜெயலலிதா*தலைமையில் ஆட்சியை*பிடித்து, இன்றைக்கு எடப்பாடி*பழனிசாமி அவர்கள் தலைமையில் வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறது . தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு மட்டும் 8 முறை ஆட்சி பீடத்தில் அமர்ந்து*சாதனை படைத்துள்ளது*
.ஆரம்ப*காலத்தில் இருந்து தன் இறுதி காலம் வரையில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் மக்களாட்சி தத்துவம் என்பதில் இருந்து இம்மியளவு கூட*மாறியதில்லை . மன்னராட்சியின் கொடுமைகளை விவரிக்க நாடோடி மன்னன் படத்தை உருவாக்கினார் .* அந்த படத்தில் புரட்சிக்காரராக வரும் வீராங்கன் தாடி வைத்திருப்பார்**மன்னராட்சியை எதிர்த்து நடிகர் சந்திரபாபுவுடன் புரட்சி செய்யும்போது காவலர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் மன்னரை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும் .* மன்னர் மார்தாண்டனை சந்திக்கும்போது மக்கள் படும் அவதிகளையும் . பிரச்னைகளையும் விவரமாக எடுத்து சொல்வார் . அதை தெளிவாக கேட்ட மன்னர் நானும் உங்கள் புரட்சி கூட்டத்தில் சேர்ந்து விடுகிறேன் என்பார் .அப்போது வீராங்கன்* பலமாக வாய்விட்டு சிரித்து, நீங்களும் எங்கள் கூட்டத்தில் சேர்ந்துவிட்டால் நாங்கள் யாரை எதிர்த்து போராடுவது என்பார் . புரட்சி என்றதும் பயந்துவிடாதீர்கள்.*புரட்சி என்றால் ஆயுத புரட்சி அல்ல. ஆட்களை நாங்கள் கொல்வதில்லை*நாங்கள் கொள்ளை அடிப்போம் மக்களின் உள்ளங்களை. தீயிடுவோம் தீமைக்கு*என்பார். மன்னர் நாம் இருவரும் ஒன்று சேர்ந்து, மற்றவர்களுக்கு எதிராக போராடுவோம் என்பார் . வீராங்கன், மன்னரை பார்த்து ,மன்னா நீங்கள் இவ்வளவு நல்லவரா என்று கேட்பார் . அதுபோலத்தான் உண்மையான உள்ளம் கொண்டவராக புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திகழ்ந்தார் .* இவ்வாறு*திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .*
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் /காட்சிகள் விவரம்*
-------------------------------------------------------------------------------------
1.கண் போன போக்கிலே - பணம் படைத்தவன்*
2.அன்பே வா சோக பாடல்* - அன்பே வா*
3.வாரேன் , வழி பார்த்திருப்பேன் -உழைக்கும் கரங்கள்*
4.திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி**
* *.***
*
-
மக்கள் திலகத்தின் ''சிரித்து வாழவேண்டும்'' - 30.11.1974
7.11.1974 அன்று வெளிவந்த மக்கள் திலகத்தின் ''உரிமைக்குரல் '' வேலூர் தாஜ் அரங்கில் 24 வது நாளை கடந்த நேரத்தில்
சிரித்து வாழ வேண்டும் - வேலூர் .கிரவுன் அரங்கில் வெளியானது . 30.11.1974 அன்று காலை 6 மணிக்கு வேலூர் நகர தலைமை எம்ஜிஆர் மன்றத்தின் சிறப்பு காட்சி நடைபெற்றது . திரை அரங்கமே திருவிழாவாக காட்சி அளித்தது .கிரவுன் அரங்கில் மெயின் அரங்காக நீண்ட வருடங்களுக்கு பிறகு மக்கள் திலகத்தின் படம் வந்தது குறிப்பிடத்தக்கது . இந்த அரங்கில் முதல் வாரம் நடைபெற்ற மொத்தம் 33 காட்சிகளும் தொடர்ந்து அரங்கு நிறைந்து சாதனை படைத்தது .
சிறப்பு காட்சி துவங்கியதும் ரசிகர்களின் ஆராவராம்- டைட்டில் மற்றும் .மக்கள் திலகம் அறிமுக காட்சியில் கைதட்டல்கள் - விசில் தூள் பறந்தது .அப்துல் ரஹமான் அறிமுக பாடல் காட்சி ரசிகர்களை மேலும் பரவசமாக்கியது .சூதாட்ட விடுதியில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் ஆக்ரோஷமான சண்டை காட்சி புதுமையாக இருந்தது .
நீ என்னை விட்டு போகாதே பாடல் காட்சியில் மக்கள் திலகம் போலீஸ் அதிகாரி மிடுக்குடன் நடந்து கொள்ளும் காட்சியிலும் , காஞ்சனா மக்கள் திலகத்தை தொடும்போது அவரை தட்டி விடும் காட்சியில் அவரது ஸ்டைல் அபாரம் .
லதா கனவு பாடலில் மக்கள் திலகத்தின் பல வண்ண உடைகள் - கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் பாடல் - ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை .ஒரே கைதட்டல் மயமாக இருந்தது .
மக்கள் திலகம் - ஜஸ்டின் சண்டை காட்சி மிகவும் புதுமையாக இருந்தது . சுவரில் மோதி ஜஸ்டினை புரட்டி எடுத்த இடத்தில ரசிகர்களின் ஆராவாரம் காதை பிளந்தது . மக்கள் திலகம் - வி.எஸ். ராகவன் தொலைபேசி உரையாடல் மற்றும் கல்லறையில் இருவரும் நேரில் உரையாடும் காட்சியிலும் மக்கள் திலகத்தின் நடிப்பை ரசிகர்கள் பெரிதும் ரசித்தார்கள் .
உலகமெனும் நாடகமேடையில் ..பாடல்காட்சி துவங்கியது முதல் கிளைமாக்ஸ் வரை பரப்பரப்பான காட்சிகள் - சண்டை காட்சிகள் - ரீரெக்கார்டிங் எல்லாமே ரசிகர்களை கட்டி போட வைத்தது . ஒரு பக்கம் உரிமைக்குரல் படத்தின் இமாலய வெற்றி - களிப்பில் இருந்த ரசிகர்களுக்கு சிரித்து வாழ வேண்டும் மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ரசிகர்களை மூழ்கடித்தது .
1974ல் வேலூர் லஷ்மியில் நேற்று இன்று நாளை - வசூலில் சாதனை படைத்தது . வேலூர் தாஜில் உரிமைக்குரல் பிரமாண்ட வெற்றி பெற்றது . சிரித்து வாழ வேண்டும் வேலூர் -கிரவுனில் 7 வாரங்கள் ஓடி அந்த அரங்கில் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்ந்தது.........VND.........
.
-
சிரித்து வாழ வேண்டும் – விகடன் விமர்சனம்
டிசம்பர் 8-ம் தேதி அன்று ‘சிரித்து வாழ வேண்டும்’ படத்தைப் பற்றி ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் பிரபல டைரக்டர் திரு. ப. நீலகண்டன், நடிகை திருமதி ஷீலா, கலாக்ஷேத்ரா நாட்டியக் கலைஞர் திருமதி கிருஷ்ணவேணி, டாக்டர் திருமதி சரோஜா, வர்த்தகர் ஜனாப் வதூது, வழக்கறிஞர் திரு. பழனியப்பன், தொழில் துறைப் பணியாளர் திரு. பாலசுப்ரமணியம், கல்லூரி மாணவி குமாரி உதயா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ப.நீலகண்டன்: படத்தைப் பார்த்த உடனேயே இது ஒரு ஜனரஞ்சகமான படம்னு சொல்லத் தோணித்து. கதையைச் சொல்லியிருக்கிற முறை ரொம்பப் பிடிச்சிருக்கு. படம் பார்க்கிறவங்களுக்கு எந்தக் குழப்பமும் இல்லாம, ஒழுங்கா, நேரடியாகச் சொல்லுகிற முறைக்காக டைரக்டரைப் பாராட்டணும். எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரைக்கும், எந்தக் கதையாக இருந்தாலும், தான் சொல்ல விரும்புகிற சில நல்ல கொள்கைகளை, எந்த இடத்திலேயாவது புகுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு, அது அந்தக் கதையோடு ஒட்டுகிற மாதிரியாகப் பண்றாரு பாருங்க, அது அழகாக இருந்தது. உதாரணமாக, ஒரு முஸ்லிம் ‘நமாஸ்’ பண்றாரு; அதே நேரத்திலே ஒரு பெண் அதே வீட்டிலே, முருகன் படத்துக்கு வணக்கம் பண்ணிக்கிட்டிருக்கா. மத சுதந்திரம் உண்டு என்கிறதை அது நல்லா எடுத்துக் காட்டுது.
பழனியப்பன்: இப்பொழுதெல்லாம் கடத்தல் மன்னர்களைப் பத்தியே பேசிக்கிட்டிருக்கோம். சமுதாயத்துக்கு அவர்கள் எந்த வகையிலே எதிரிகள் என்பதை இதுலே நல்லா எடுத்துச் சொல்லியிருக்காங்க.
உதயா: ஸ்டோரியைப் பொறுத்தவரைக்கும் அது ஒரிஜினல் இல்லை. இங்கிலீஷ் கதையைத்தான் இந்தியிலும், தமிழிலும் எடுத்திருக்காங்க. ஆனா, ஒவ்வொண்ணும் டிஃப்ரண்ட் வெர்ஷனா இருக்கு. இந்தியிலே இன்ஸ்பெக்டர் பாகத்தையும், முஸ்லிம் நண்பன் பாகத்தையும் வெவ்வேறு நடிகர்கள் செஞ்சிருக்காங்க. இந்தப் படத்திலே எம்.ஜி.ஆரே இரண்டையும் செய்திருக்கார். இரண்டும் ஒரே நபர்தான் என்பது தெரியாதபடி தனித்தன்மைகளோடு நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டர், அப்துல் ரஹ்மான் இரண்டு பேரும் சந்திக்கிறபோது கூட, அப்படித் தோன்றாமல் செய்திருக்கிறார்.
கிருஷ்ணவேணி: ஆனா, நடிப்பிலே அந்த முஸ்லிம் காரெக்டர்தான் மேலோங்கி நிற்கிறது.
வதூது: ஆமாம்! எம்.ஜி.ஆர். அவர்கள் முஸ்லிம் காரக்டரை ரொம்ப நல்லா செஞ்சிருக்காரு. பேச்சு, தொழுகை, சாப்பிடும் விதம் எல்லாமே இயற்கையாக இருக்கிறது.
ப.நீலகண்டன்: ‘மலைக்கள்ளன்‘லே இருந்தே, முஸ்லிம் வேஷம் போடறதிலே அவருக்குத் தனித்தன்மை உண்டு. அதுவும் இந்தப் படத்திலே முஸ்லிம் பாத்திரம் உங்க மனசிலே நிக்கறதுக்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு இந்து, தன்னுடைய காதலியை முஸ்லிம் நண்பர்கிட்டே கொண்டு போய் ஒப்படைக்கிற அளவுக்கு நம்பிக்கைக்குரிய பாத்திரமா அவன் இருக்கான்னு சொல்லும்போது, உங்க மனசுக்குள்ளே குடியேறுது அந்த முஸ்லிம் பாத்திரம்.
கிருஷ்ணவேணி: ராமு ஒரு வார்த்தை சொன்னதுக்காக, அவ்வளவு பெரிய கிளப்பை ஒரே நாள்லே மூடிடறாரே… நட்புக்காக உயிரைக்கூடக் கொடுக்கத் தயார்னு சொல்றாரே, அப்ப அவர் நடிப்பு உயர்ந்திருக்குது.
ஷீலா: ஸ்லோமோஷன்லே எடுக்கப்பட்ட காட்சிகள் நன்றாக இருக்கின்றன. அந்த ஸ்லோ மோஷன் சண்டை இன்னும் கொஞ்சம் கூட இருக்காதா என்று இருக்கிறது.
கிருஷ்ணவேணி: ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ பாட்டுக்கு, எம்.ஜி.ஆர். கையில் டேப் வைத்துக்கொண்டு டான்ஸ் ஆடுகிறாரே, அது பிரமாதம். அதுக்காகவே இரண்டாம் தடவை அந்தப் படத்தைப் பார்த்தேன்.
ஷீலா: காமெடின்னு தனி டிராக்கே இல்லை. இது தமிழ்ப் படத்திலே ரொம்ப அபூர்வம். ஆனால், நகைச்சுவை இல்லாத குறையே தெரியலை.
சரோஜா: தேங்காய் சீனிவாசன் கேடியாக வர்ற காட்சிகள் தமாஷாக இருக்கே!
கிருஷ்ணவேணி: நம்பியார் பேசுறதே சில இடத்திலே நகைச்சுவையா இருக்கு. தான் செய்த கொலைகளைப் பற்றி அவர் கூலாகப் பேசுவது தமாஷ்தான்!
(லதா கத்தி தீட்டும் பெண்ணாக வரும்போது போட்டுக்கொண்டிருக்கிற உடையைப் பற்றி பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டன. பொதுவாக, அந்த உடை வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்று கருதினார்கள். உப பாத்திரங்கள் ராகவன், தேங்காய் சீனிவாசன், மோதிரத்தைக் கழற்றும் வீரப்பன் அனைவருமே நெஞ்சை அள்ளும்படி நன்றாக நடித்திருப்பதாகக் கருத்து தெரிவித்தனர். பாடல் களில் ‘கொஞ்ச நேரம்‘, ‘பொன் மனச் செம்மல்‘ ‘மேரா நாம் அப்துல் ரஹ்மான்’ ஆகிய பாடல்கள் மிகவும் நன்றாக இருப்பதாகக் கூறப்பட்டது.)
உதயா: ‘சிரித்து வாழவேண்டும்’ என்ற தலைப்புக்கும் படத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை.
பாலசுப்ரமணியம்: ஒரு பெரிய சரித்திரப் படத்தைப் பார்க்கிற உணர்ச்சி இருந்தது. ரொம்ப ரிச்காஸ்ட்யூம்ஸ்; ரிச் ஸெட்ஸ்; இந்த மாதிரி ஒரு படம் சமீபகாலத்திலே பார்க்கலேன்னு சொல்லலாம்.
ப.நீலகண்டன்: அது, காலம் சென்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களுடைய பிரதிபலிப்புன்னுதான் சொல்லணும். பிரமாண்டமா தயாரிக்கிற பாரம்பரியம். அவர் மகன் எஸ்.எஸ்.பாலன் அந்தப் பாரம்பரியத்தைக் காப்பாற்றி ஒரு புதிய சாதனையைச் செய்திருக்கிறார்.....vs.........
-
#mgr_அவர்களின்_தமிழ்ப்_புலமை
m.g.r. முறைப்படி பள்ளி, கல்லூரிகளில் பெரிய படிப்பு படித்தவர் அல்ல. என்றாலும் கல்லூரிகளில் படித்தவர்களைவிட அதிக விஷயங்களை படித்தவர். தமிழிலே ஆழமான புலமை மிக்கவர்.
சினிமா, அரசியல் என்று இருதுறைகளிலும் முதல் இடத்தில் இருந்தவர் எம்.ஜி.ஆர்.! அதற்காக அவர் உழைத்த உழைப்புக்கே நேரம் போதாது எனும்போது, மற்ற துறைகளிலும் ஆழ்ந்த கவனம் செலுத்துவதற்கு எங்கிருந்து அவருக்கு நேரம் கிடைத்திருக்கும் என்று யோசித்தால் பிரமிப்புடன் கூடிய வியப்பு ஏற்படுவது நிச்சயம்.
பல துறைகளிலும் எம்.ஜி.ஆர். பெற்றிருந்த பரந்த, ஆழமான அறிவுக்கு அவர் அதிக அளவில் பல விஷயங்களைப் படித்ததே காரணம். தனது ராமாவரம் தோட்டத்து வீட்டில் நிலவறை கட்டி அதில் ஏராளமான நூல்களை வைத்திருந்தார். கிடைக்கும் நேரத்தில் நூல்களைப் படித்து ஆழமான பொது அறிவையும் தமிழறிவையும் பெற்றிருந்தார். அவர் பயன்படுத்திய நூல்களின் ஒரு பகுதி நினைவு இல்லத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
‘இணைந்த கைகள்’ என்ற படத்தை எடுக்க எம்.ஜி.ஆர். திட்டமிட்டார். பூஜை போடப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்டன. என்றாலும் பல்வேறு காரணங்களால் படம் நின்றுபோனது. அந்தப் படத்துக்காக நாயகனை எண்ணி நாயகி பாடுவதுபோல, கவிஞர் வாலி எழுதிய ஒரு பாடலின் பல்லவி இது:
‘உன் கைக்கிளையில் நானமரும் கிளியாக மாட்டாமல்
கைக்கிளையில் வாடுகிறேன் கண்ணீரில் ஆடுகிறேன்’’
பல்லவியைக் கேட்டு எம்.ஜி.ஆர்., ‘‘பிரமாதம், பிரமாதம்’’ என்று வாலியைப் பாராட்டினார். அப்படி அவர் பாராட்டுகிறார் என்றால், ‘கைக்கிளை’ என்ற சொல்லை சிலேடையாக வாலி பயன்படுத்தியதை அவர் வெகுவாக ரசித்திருப்பதன் வெளிப்பாடு அது. தமிழ் அறிந்தவர்களுக்கே அந்த சிலேடை புரியும். முதலில் வரும் ‘கைக்கிளை’க்கு, ‘உன் கையாகிய கிளையில்’ என்று பொருள். இரண்டாவதாக வரும் ‘கைக்கிளை’க்கு ‘ஒருதலைக் காதலில் வாடுகிறேன்’ என்று அர்த்தம். அதன் பொருளை எம்.ஜி.ஆர். புரிந்து ரசித்திருப்பதன் மூலம் அவரது தமிழறிவை புரிந்து கொள்ள முடியும்.
‘இன்றுபோல் என்றும் வாழ்க’ படத்தில் ஆரம்பத்தில் ‘இது நாட்டைக் காக்கும் கை…’ என்ற பாடல் இடம் பெறும். பாடலின்போது ஒரு இடத்தில், மாணவர்களுக்கு ஆசிரியர் திருக்குறளை கரும்பலகையில் எழுதி பாடம் நடத்துவது போல காட்சி. ‘சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம், அதனால் உழந்தும் உழவே தலை’ என்ற குறள் கரும்பலகையில் எழுதப்பட்டிருக்கும். காட்சி படமாக்கப்படுவதற்குமுன், கரும்பலகையில் எழுதப்பட்டிருந்த அந்தக் குறளில் பிழை இருப்பதை எம்.ஜி.ஆர். கவனித்து திருத்தினார். அந்த அளவுக்கு தமிழறிவு மிக்கவர்.
நீதியரசர் மு.மு.இஸ்மாயிலை தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். நீதியின் மறுவடிவமாக விளங்கிய நடுநிலை தவறாதவர். கம்பனில் தோய்ந்து கரை கண்ட இலக்கியவாதி. கம்பன் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.
ஒருமுறை, கம்பன் கழகம் சார்பில் சென்னையில் நடந்த கம்பன் விழாவை எம்.ஜி.ஆர். தொடங்கி வைத்தார். நீதியரசர் மு.மு.இஸ்மாயில் உட்பட தமிழறிஞர்களே வியக்கும் அளவுக்கு கம்பராமாயணத்தில் கம்பனுடைய கவிதைகளில் இருந்து இலக்கிய நுணுக்கமும் பொருட்செறிவும் நிறைந்த சில கவிதைகளை எந்தக் குறிப்பும் இல்லாமல் எடுத்துக் காட்டிப் பேசினார். தமிழறிஞர்களின் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
எம்.ஜி.ஆர். பேசி முடித்து இருக்கை யில் அமர்ந்ததும் அருகே அமர்ந்திருந்த நீதியரசர் மு.மு.இஸ்மாயில் அவரை பாராட்டிவிட்டு, ‘‘உங்களுக்கு கம்பனைப் படிக்கும் வாய்ப்பு எப்படி ஏற்பட்டது?’’ என்று கேட்டார். அதற்கு எம்.ஜி.ஆர்., ‘‘நான் சிறுவனாக இருக் கும்போது ‘சம்பூர்ண ராமாயணம்’ நாடகத்தில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது கம்பராமாயணத்தைப் படித்திருக்கிறேன். அதனால்தான், அந்தப் பாடல்களைப் பற்றி இப்போது என்னால் பேசமுடிந்தது’’ என்றார். எம்.ஜி.ஆரின் தமிழறிவை மட்டுமின்றி, நினைவாற்றலையும் கண்டு வியந்து போனார் நீதியரசர் இஸ்மாயில்.
இதேபோல, மற்றொரு முறையும் கம்பன் கழகம் நடத்திய விழாவிலே எம்.ஜி.ஆர். கலந்து கொண்டபோது, பரிசு பெற்ற சில இளைஞர்கள் பேசினர். தமிழ் இலக்கணத்தில் மெய்ப்பாடு என்று ஒன்று உண்டு. தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்திலே மெய்ப்பாட்டு இயல் என்று ஒரு இயலே உண்டு. அந்த இயலின்படி, நகை, அழுகை, இழிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டும் மெய்ப்பாடுகள் என்பது தொல்காப்பியரின் கூற்று.
விழாவில் பேசிய ஒரு இளைஞர், இந்த எட்டையும் குறிப்பிட்டுவிட்டு ‘சம நிலை’ என்பதையும் சேர்த்து மெய்ப்பாடு கள் ஒன்பது என்று பேசினார்.
பின்னால் பேசிய எம்.ஜி.ஆர். அந்த இளைஞர் பேசியதை சுட்டிக்காட்டி, ‘‘தமிழ் இலக்கண மரபுப்படி மெய்ப்பாடு கள் எட்டுதான். சமநிலை என்பது வடமொழி இலக்கியத்தில் இருந்து வந்து பின்னால் சேர்ந்தது’’ என்று கூறினார். எம்.ஜி.ஆரின் தமிழறிவைக் கண்டு இஸ்மாயில் உள்ளிட்ட தமிழறிஞர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றனர். எம்.ஜி.ஆரிடம், ‘‘இது எப்படி உங்களுக்குத் தெரியும்’’ என்று இஸ்மாயில் கேட்டார். அமைதியாக எம்.ஜி.ஆர். பதிலளித்தார்… ‘‘தொல்காப்பியம் படித்திருக்கிறேன்.’’ அசந்துபோனார் நீதியரசர் இஸ்மாயில்!
எவ்வளவோ விஷயங்கள் படித்திருந் தாலும் தனக்கு எல்லாம் தெரிந்தது போல எம்.ஜி.ஆர். காட்டிக் கொள்ள மாட்டார். ‘இதய வீணை’ படத்தில், ‘காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்...’ பாட லின் நடுவே, எம்.ஜி.ஆரைப் பார்த்து நடிகை மஞ்சுளா, ‘‘ஆமா, நீங்க எதுவரைக்கும் படிச்சிருக்கீங்க? ’’ என்று கேட்பார்.
அதற்கு, தான் படித்த உலகின் உயர் வான புத்தகம் குறித்தும், அந்தப் புத்தகம் தந்த தாக்கத்தால் அறிந்த தத்துவம் பற்றியும் பாடலின் மூலமே அடக்கத்துடன் எம்.ஜி.ஆர். இப்படி பதிலளிப்பார்...
‘சத்தியம்தான் நான் படித்த புத்தகம் அம்மா;
சமத்துவம்தான் நான் அறிந்த தத்துவம் அம்மா!’
நன்றி : இந்து தமிழ் நாளிதழ்.........vsk.........
-
தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜியார்.
மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர்.
இளமையில் வறுமையில் வாடினாலும் திரைத்துறைக்கு வந்தபின் செல்வச் செழிப்பில் மகாராஜாவாகவே வாழ்ந்தார்.
தமிழகம் முழுவதும் வெறித்தனமான ரசிகர் கூட்டம்.அவர் படங்கள் திரையரங்கத்துக்கு வந்தால் அது ஒரு திருவிழா.
அரசியலிலும் வெறித்தனமான தொண்டர்கள்.அவர் கட்சிக்கு மட்டுமே ஓட்டுப்போடும் வழக்கம் கொண்டவர்கள். யார் எந்த விமர்சனம் வைத்தாலும் அது உண்மையா பொய்யா என அதைப் பற்றியெல்லாம் சிந்திப்பதே இல்லை.ஓட்டு அவர் கட்சிக்குத்தான்.
திரையுலகையும் சரி அரசியலையும் சரி தனது கட்டுப்பாட்டுக்குள்ளேயே வைத்திருந்தார்.அவர் எது சொன்னாலும் அதுவே இறுதி முடிவானது.பத்தரை ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்துள்ளார்.
இவ்வளவு செல்வாக்கு,பணம்,புகழ்,பதவி, படைபலம் என அவ்வளவும் இருந்தும் இவர் தனது பிறந்தநாளை தன் வாழ்நாளில் கொண்டாடியதே இல்லை.இவருடைய தொண்டர்களும் ரசிகர்களும்கூட இவர் மறையும்வரை இவருடைய பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை.
இன்றைய இளைஞர்களுக்கு இது நம்ப முடியாத தகவலாக இருக்கும்.ஆனால் இதுதான் உண்மை.
இவரின் மறைவுக்குப் பிறகே இவரது ரசிகர்களாலும் தொண்டர்களாலும் இவருக்கு வெகு விமரிசையாகப் பிறந்தநாள்விழா கொண்டாடப்படுகிறது........ Rajendran Raj
-
மருத்துவமனையில் எம்.ஜி.ஆர் வாங்கிய சத்தியம்!
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி பல அரிய சம்பவங்களை கடந்த சில வாரங்களாக நம்முடன் பகிர்ந்து கொண்டு வருகிறார் நடிகர் சிவகுமார்.
சிவகுமாரின் தாயார் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த மரியாதை, குண்டடிபட்டு ஆஸ்பத்திரியில் இருந்தபோதும் “அம்மா எப்படி இருக்காங்க?” என்று கனிவுடன் விசாரித்த பண்பு என ஒவ்வொரு வாரமும் பல உருக்கமான சம்பவங்களை விவரித்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆரை முதன்முறையாக சந்திக்க தன் தாயாரை அழைத்து சென்றதை பற்றியும், எம்.ஜி.ஆர். உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்போது அவரை பார்க்க வந்த இந்திராகாந்தி அடைந்த அதிர்ச்சி குறித்தும் நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் கலையுலக மார்கண்டேயன்.
“எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த காலகட்டத்தில் நாகப்பட்டணத்தில் புயல் வீசி பெரிய அளவிலான சேதம் ஏற்பட்டது. நிவாரணப் பணிகளை முழுவீச்சில் செய்து வந்தது தமிழக அரசு. என் பங்காக முதல்வரிடம் 10,000 ரூபாய் கொடுக்க விரும்பினேன்.
அப்போது என் சம்பளம் 25,000 ரூபாய். என் வீட்டுக்கு பின்னாடி தெருவில் தான் எம்.ஜி.ஆர். அலுவலகம் இருந்தது. போன் செய்து புயல் நிவாரண நிதி தரணும்ணே என்று சொன்னதும். “நீ இப்ப எங்க இருக்க” என்று கேட்டார். “வீட்டுல தான்ணே இருக்கேன்” என்றேன்.
“இங்க கூட்டம் அதிகமா இருக்கு. நீ கோட்டைக்கு வந்திடேன்” என்றார்.
எம்.ஜி.ஆரை பார்க்கணும்னு எங்கம்மா ரொம்ப நாளா சொல்லிகிட்டு இருந்தது ஞாபகம் வர, “அம்மா… எம்.ஜி.ஆரை பார்க்க போறேன் வர்றியா”ன்னு கேட்டேன்.
அன்னைக்கு அவங்களுக்கு காய்ச்சல் வேற. எதுவுமே பேசல. கடகடனு உள்ள போச்சு. முகத்தை கழுவி, புடவையை மாத்திகிட்டு, நெத்தி நிறைய விபூதியை பூசிக்கிட்டு, கண்ணாடி போட்டுகிட்டு ரெடியாகி வந்து நின்னுட்டாங்க.
கோட்டைக்கு போய் தகவல் சொல்லிவிட்டு காத்திருந்தோம். முதல் மாடியில் தான் முதல்வர் அறை. சிவகுமார் தன் அம்மாவோடு வந்திருக்கார்னு தகவல் சொல்லி இருக்கிறார்கள். சொன்னா நம்பமாட்டீங்க… அடுத்த அஞ்சாவது நிமிஷம், எம்.ஜி.ஆர். மேலே இருந்து இறங்கி வந்தார். அம்மாவை கையெடுத்து கும்பிட்டு எங்களை அவரே மாடிக்கு அழைத்துச் சென்றார்.
பெரியவர்களை வரவேற்கையில் தங்கள் பிருஷ்ட்டத்தை (பின் பகுதி) காட்டக்கூடாது என்று சொல்வார்கள். அதனால் படிக்கட்டுகளில் ஏறும்போது கூட வாங்கம்மா… வாங்க…. என்று அம்மாவை வரவேற்றபடி ரிவர்ஸிலேயே படியேறினார். அவரது அறைக்கு சென்றதும், அம்மா தன் கையால் எம்.ஜி.ஆர் இடம் செக்கை கொடுத்தார்.
அம்மாவைப் பார்த்து, “அம்மா… இதமாதிரி ஒரு பிள்ளை உங்களுக்கு கிடைக்க மாட்டான்மா…” என்றார்.
என்னைப் பார்த்து, “டேய்… தம்பி, இதமாதிரி உனக்கொரு அம்மா கிடைக்க மாட்டாங்க. அவங்கள நல்லா பார்த்துக்க” என்றார்.
அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு திரும்பினோம்.
அதன்பிறகு 1979-ல் என்னுடைய 100-வது பட வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தார். மேடையில் என் அம்மாவையும் அமர வைத்திருந்தேன்.
அந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். பேசும்போது, “இந்தக் கோலத்திலே ஒரு தாய் வீட்டில் இருந்தால், அந்தத் தாயாரை அழைத்து வந்து இந்த மேடையிலே அமர்த்துகின்ற துணிவு, தைரியம் இங்கு இருக்கும் எத்தனை பேருக்கு இருக்கிறது.
தான் இந்த உலகத்தில் தோன்றுவதற்கு காரணமான தெய்வம், அன்னையை மிஞ்சிய தெய்வம் இவ்வுலகில் வேறில்லை என்ற எண்ணம் கொண்ட ஒருவரால் தான் இப்படி செய்ய முடியும். சிவகுமாரை நான் போற்றுகிறேன்” என்று பேசினார்.
இப்படி என் அம்மாவை சந்தித்த இரண்டு சந்தர்பங்களிலும் அவர் மீதிருந்த பெரும் மதிப்பை வெளிப்படுத்தினார் புரட்சித் தலைவர்” என்று சொன்ன சிவகுமார், அடுத்து சொன்ன சம்பவம் எம்.ஜி.ஆரின் மன உறுதியை இந்தத் தலைமுறையினருக்கு விளக்கும் ஒரு அற்புதமான அனுபவம்.
“எம்.ஜி.ஆருக்கு உடல்நிலை பாதிக்கப்படுகிறது. சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்போகிறார்கள். ஆஸ்பத்திரிக்கு போவதையே சுத்தமாக வெறுத்தவர் அவர். ஒருமுறை கண் ஆபரேஷன் செய்ய வேண்டும் என சொன்னபோது அந்தக் கருவிகளையெல்லாம் வீட்டுக்கு எடுத்துவர சொன்னார்.
“சார்…. அதெல்லாம் நட், போல்ட் பதியம் போட்டு தரையோட தரையா நிரந்தரமா ஃபிக்ஸ் பண்ணின மிஷின்ஸ்” என்றதற்கு, “அப்படி தூக்க முடியாம உலகத்துல ஒன்னு இருக்குதா? எடுத்துட்டு வரசொல்லுய்யா. என்ன செலவோ நான் கொடுத்திடறேன்” என்றார். ஒரு கண் ஆபரேஷனுக்கே ஆஸ்பத்திரியை தூக்கி வர சொன்னவர், வேற வழி இல்லாம அன்னிக்கி அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு போனார்.
அதன் உரிமையாளர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டியிடம், “என் முழு ரகசியத்தையும் நான் உங்க முன்னாடி வைக்கிறேன். இது எந்தக் காரணத்தை கொண்டும் வெளியே போகக்கூடாது” என்று சத்தியம் வாங்கிக் கொண்டுதான் அட்மிட் ஆனார்.
ஜானகி அம்மாவைத் வேற யாரும் உள்ளே வரக்கூடாது என்று உத்தரவிட்டார் ரெட்டி. ஜானகி அம்மாவைத் தவிர ரெண்டாவதா உள்ளே சென்று எம்.ஜி.ஆரை சந்தித்த வெளி ஆள் இந்திராகாந்தி ஒருவர் மட்டும் தான்.
உடல் மெலிந்து, கண்களில் குழி விழுந்து, கன்னங்கள் ஒட்டிப்போய், சோர்ந்து போன மனிதராக ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். படுத்திருந்த நிலைமையைக் கண்டு அதிர்ந்து போனார் இந்திரா.
நான்கு மாதங்களுக்கு முன்னால் தெலுங்கு கங்கா திட்டத்தில் கையெழுத்திடுவதற்காக இந்திரா சென்னை வந்திருந்தபோது பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த விழா மேடையின் மிக நீண்ட படிக்கட்டுகளில் அன்று இளைஞனைப் போல துள்ளிக் குதித்து படியேறி வந்த எம்.ஜி.ஆர். இன்று ஆஸ்பத்திரியில் கிடக்கும் கோலத்தைக் கண்டு, “இஸ் ஹி த சேம் மேன், ஐ மெட் ஃபோர் மன்த்ஸ் பேக்?” என்று அதிர்ச்சியில் கேட்டார் இந்திரா.
“எத்தனை லட்சம் செலவானாலும் பரவாயில்லை, அமெரிக்காவுக்கு மாத்துங்க” என்று சொல்லிவிட்டு சென்றார். உடனடியாக ஒரு நாள் நள்ளிரவில் டாக்டர்கள் குழுவோடு எம்.ஜி.ஆர். அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் இருக்கும் புரூக்ளின் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இனி எம்.ஜி.ஆர். பிழைத்து வர மாட்டார் என்று தமிழகத்தில் செய்தி பரவத் தொடங்கியது. அவரது அமைச்சரவையைச் சேர்ந்தவர்களே நம்பிக்கையின்றி இருந்தனர்.
எனவே, அவருக்கு பிறகு யார் முதல்வர், யார் நிதியமைச்சர், யார் கல்வி அமைச்சர் என்று அவர்களுக்குள்ளேயே ரகசியமாக பேசி ஒரு உடன்படிக்கையை கூட எட்டிவிட்டிருந்தனர். அவர்கள் யார் யார் என்று இப்போது பெயர் சொல்ல விரும்பவில்லை.
சிகிச்சை முடிந்து எம்.ஜி.ஆர். தமிழகம் திரும்புகிறார் என்று செய்தி வருகிறது. ஆம்புலன்சில் படுத்தபடுக்கையாக வரப்போகிறாரா இல்லை சக்கர நாற்காலியில் வரப்போகிறாரா என்று சொந்த கட்சிக்காரர்கள் மத்தியிலேயே குழப்பம்.
யாருக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அவரை விமானத்தில் இருந்து அப்படியே தூக்கி கீழே வைக்கும் ஒரு ஸ்பெஷல் லிப்ட் கூட தயார் நிலையில் இருந்தது.
புரட்சித் தலைவரை சுமந்து வந்த அமெரிக்க விமானம் சென்னையில் தரை தொட்டது. மந்திரிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை தங்கள் மன்னவனைக் காண தவம் கிடந்தனர்.
ஓடுபாதையில் மெல்ல ஊர்ந்து வந்து நின்றது அந்த விமானம். பயணிகள் எல்லோரும் வெளியேறிய பிறகு சில நிமிடங்கள் உருண்டோடின. முதலில் டாக்டர்கள் வெளியே வர, பின்னால் தெரிந்தது அந்த ரோஜா முகம். காத்திருந்த அத்தனை கண்களிலும் கண்ணீர்…!
தாய் வார இதழ்
Published – அருண் சுவாமிநாதன்
Posted : MG.Nagarajan .........
-
மக்கள் மனதில் என்றுமே நிலைத்திருக்கும் பெயர் #எம்ஜிஆர்
எம்ஜிஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி
எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது அவரது மூத்த அமைச்சரின் வாரிசு திருமணம் வடபழனியில் உள்ள பிரபல மண்டபத்தில் காலையில் நிகழ்ச்சி
காலையில் கோட்டைக்கு சென்றிருந்த எம்ஜிஆர் கையசைக்க உடனே அவரின் கார் வடபழனி நோக்கி பறக்கிறது மண்டபத்தில் இருந்தவர் மத்தியில், எம்ஜிஆர் வருகிறார் என்று ஒரே பரபரப்பு/
ஆனால் கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் வந்தவுடன் பாலத்தின் மேல் செல்லாமல் முன்னே செல்லும் கான்வாய் கார்களுக்கும் தெரியாமல் திடீரென உஸ்மான் ரோடு திரும்பி தியாராய நகர் வழியாக முதலமைச்சரின் கார் பயணிக்கிறது நேராக சைதாப்பேட்டை பாலத்தில் சென்று வலதுபுறம் திரும்பி சலவைத்தொழிலாளார்கள் குடியிருப்புக்கு செல்கிறார் எம்ஜிஆர்
ஏற்கனவே பலத்த மழை பெய்ததில் அந்த பகுதியே வெள்ளத்தில் மிதக்கிறது ஆனால் எம்ஜிஆர் எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரை நிறுத்தச்சொல்லிவிட்டு வேட்டியை மடித்துக்கொண்டு சரசரவென ஒரு சந்தில் கால்நடையாக செல்கிறார்.. பாதுகாப்பு அதிகாரிகளும் புரியாமல் அவர் பின்னே ஓடுகிறார்கள்.
கடைசியில் அங்கே ஒரு வீட்டில் திருமணம் நடந்துகொண்டிருக்கிறது
எம்ஜிஆர் வருவதை பார்த்ததும் அவசரமாக நாற்காலியை தேடுகிறார்கள் ஒரு காலுடைந்துபோன நாற்காலிக்கு நான்கைந்து செங்கற்களை முட்டுக்கொடுத்து அதிலே எம்ஜிஆரை உட்கார வைக்கிறார்கள்.
எம்ஜிஆரும் மணமக்களை வாழ்த்திவிட்டு, வழக்கம்போல் யாருமே எதிர்பார்க்காத பெரும் தொகையை அன்பளிப்பாக கொடுக்கிறார். அதனபிறகு அவர் கோட்டைக்கு மீண்டும் பறந்துவிடுகிறார்.
முதலமைச்சர் எம்ஜிஆர் போன திருமணம் வேறு யாருயுடையதுமல்ல, அவருக்கு வழக்கமாக துணிகளை சலவைசெய்துகொடுப்பவரின் குடும்பத்துடையது.
அப்படியே, சின்ன பிளாஷ்பேக்
அந்த சலவைத்தொழிலாளி தன் குடும்பத்து திருமண அழைப்பிதழை ஜானகி அம்மையாரிடம் கொடுக்கிறார் ஜானகியும் அதை வாங்கிக்கொண்டு அப்போதே ஒரு தொகையை திருமண சீதனமாக கொடுத்திருக்கிறார்
முடிந்தால் மட்டுமே தலைவர் திருமணத்துக்கு வருவார் என்று சொல்லிஅனுப்புகிறார்.
அப்போது சலவைத்தொழிலாளி, தலைவர் திருமணத்துக்கு வராவிட்டாலும் பரவாயில்லை
பத்திரிகையையாவது பார்க்கும்படி செய்துவிட்டால் அதுவே போதும் என்கிறார். ஜானகியும் உடனே வாக்குறுதி அளித்துவிட்டு எம்ஜிஆர் தினமும் எழுதும் டைரியில் தேதிக்கேற்ற இடத்தில் அந்த பத்திரிகையை வைத்துவிடுகிறார் அதைப்பார்த்துதான் முதலமைச்சர் எம்ஜிஆர் திருமணத்திற்கு போயிருக்கிறார்.........sk...
-
பதவி ஆசை ...
கோடிகள் சேர்த்த பின் ஆசை... முதல்வர் ஆக நடிகர்களுக்கு
சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை...
நடிகர்களுக்கு
வயதாகி மார்கெட் போன பின் பொழுதை கழிக்க தமிழக அரசியலில் இறங்கும் நடிகர்கள் நினைப்பது கிடைத்தால் முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் பொழுது போகுமே என்று
நடிக்க வரும் முன்னே கதர் உடையுடன் நாட்டு சுதந்தரம் வேட்கையோடு வாழ்ந்து கொள்கையால் ஈர்க்க பட்டு தி மு க வில் இணைந்து பொருள் கொடுத்து உழைப்பை கொடுத்து பதவியில் அமர்த்தி அழகு பார்த்த எம் ஜி ஆர் கருணாநிதி ஊழல் ஆட்சி செய்ததால் தனியாக கட்சி கண்டு முதல்வர் ஆகி ஒரு பொற்க்கால ஆட்சி கொடுத்தார் ,தன் பொருள் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்ததார் எம் ஜி ஆர் தமிழகத்தில்
எம் ஜி ஆரை கண்டு எம் ஜி ஆர் ஆக துடிக்கும் நடிகர்களுக்கு
எம் ஜி ஆர் போல் பதவி இல்லாத பொழுதும் மக்கள் சேவை செய்து மக்களை காக்காத உங்களை மக்கள் துரத்தி அடிப்பார்கள் ...
வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்.........am.........
-
தமிழக மக்களின் நெஞ்சமெல்லாம் நிறைந்தி௫க்கும் சாதனை மனிதா் மக்கள்திலகம் எம்ஜிஆ௫க்கு பக்கபலமாக
இ௫ந்தவா் தோட்டத்தம்மா என்று அழைக்கப்பட்ட தி௫மதி ஜானகி எம்ஜிஆா் !தி௫.பி .நாராயணனின் உடன்பிறந்த மூத்த சகோதாிதான் தி௫மதி ஜானகி ராமச்சந்திரன் கேரள மாநிலம் வைக்கம் எனும் ஊாில் பொன்மனச்சோி இல்லத்தில் 1923ஆம் ஆண்டு நவம்பா் 30ம்தேதி (30/11/1923) ராஜகோபால் அய்யா் வைக்கம் நாராயணி தம்பதிய௫க்கு மகளாய்ப் பிறந்தவா் வி.என்.ஜானகி .இவரது தந்தை கும்பகோணத்தை பூா்விகமாக கொண்டவா்!
சிறந்த தமிழாசிாியரான இவா் பல திரைப் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளாா்.இவரது தம்பி தமிழ்த்தியாகராஜா் என்று அழைக்கப்பட்ட பாபநாசம் சிவன் ஆவாா்!ராஜ
கோபால் அய்யா் ஜெமினி ஸ்டுடியோ மாா்டன் தியேட்டா்ஸ்உள்பட இடங்களில் பணியற்றியவா் அவ௫டைய மனைவி வைக்கம நாராயணி கேரள மாநிலம் வைக்கத்தை பூா்விகமாகக்
கொண்டவா் !
கும்பகோணத்தில் பள்ளிப்படிப்பை முடித்த வி.என்.ஜானகி.தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் மராட்டியம் ஆங்கிலம் என பன்மொழிப் புலமைப்பெற்றவா் தென்னிந்திய
நடனக்கலை
கலைகளான பரத நாட்டியம் மோகினி ஆட்டம் குச்சிப்புடி போன்றவற்றில் சிறப்பான பயிற்சி பெற்றவா் !
இயக்குநா் கே.சுப்பிரமணியம் தோற்றுவித்த நி௫த்யோதயா நடனப் பள்ளியின் முதல் மாணவி ,நடன கலாசேவா என்ற நாட்டியக்
குழுவில் சோ்ந்து பல ஊா்களில் ஏராளமான நாட்டிய நாடகங்களில் நடித்துள்ளாா் . அது தவிர சிலம்பம் கத்திச சண்டை உள்ளிட்ட தற்காப்பு கலைகளிலும் இவா் கைதோ்ந்தவா் !
1937 ஆம் ஆண்டில் தனது திரைப்பயணத்தைத் தொடங்கிய இவா் 25க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளாா் !
திரைத்துறையில் இ௫ந்த காலங்களில் முன்னனி கதாநாயகியாக வலம் வந்தவா்!எம்ஜிஆா் திரைத்துறை
யிலும் அரசியலிலும் வளரத் தொடங்கிய காலக்கட்டத்தில் இ௫ந்தே தோட்டத்தம்மா எம்ஜிஆ௫க்கு பக்கபலமாக இ௫ந்தாா் .சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் சமயங்களில் வீட்டிலி௫ந்து உணவைக் கொண்டுவரச்
சொல்லி அதையும் தோட்டத்தம்மா கையால் பாிமாறிச்
சொல்லி சாப்பிடுவதையே வி௫ம்பி இ௫க்கிறாா் எம்ஜிஆா் !
உண்மையில் எம்ஜிஆா் கொடுக்கும் குணத்திற்கு சற்றும் சளைத்தவரல்ல தோட்டத்தம்மா உதவி கேட்டு வந்தவரை எம்ஜிஆா் வீட்டுக்கு அனுப்பினால் வந்தவாின் சூழ்நிலைப்புாிந்து எம்ஜிஆா் சொன்ன தொகையை விட ௯டுதலாகவே கொடுத்து அனுப்புவாராம் தோட்டத்தம்மா !
1950 களில் சென்னை லாயிட்ஸ் சந்தில் உள்ள ஒ௫ வீட்டில் எம்ஜிஆ௫ம் தோட்டத்தம்மாவும் வசித்து வந்தனா் .அப்போது தோட்டத்தம்மாவின் சொந்த உழைப்பில் வாங்கப்பட்டது
தான் தற்போதைய அஇஅதிமுக வின் தலைமை அலுவலமாகவுள்ள இடம் !
1956ல் எம்ஜிஆா் பிக்சா்ஸ் தொடங்கப்பட்ட போது எம்ஜிஆ௫டன் தோட்டத்தம்மாவும் எம்ஜிஆாின் சகோதரா் எம்ஜி.சக்ரபாணியும் நிறுவனத்தின் இயக்குநா்களாக இ௫ந்தனா்!எம்ஜிஆா் தயாாித்து இயக்கிய "நாடோடி மன்னன் " வெற்றித்திரைப்
படம் உ௫வாக மிக முக்கியக்காரண
மாக இ௫ந்தவா் தோட்டத்தம்மா !
எம்ஜிஆ௫ம் ஜானகி அம்மையா௫ம் திரை உலகில் உச்சம் தொட்டி௫ந்த காலத்தில் எம்ஜிஆாின் மனைவி சதானந்தவதி மறைவுக்குப்பின் 1962 ஆம் ஆண்டு எம்ஜிஆ௫க்கும் ஜானகி அம்மையா௫க்கும் தி௫மணம் நடைப்பெற்றது ! தி௫மதி ஜானகி ராமச்சந்திரன் பிறந்த தினம் இன்று ! தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சா் இவரே ! --எம்.எஸ்.சேகா்
கோவை-641103.
-
இயேசு கூட “தட்டுங்கள் திறக்கப்படும் கேளுங்கள் தரப்படும்” என்று கூறியுள்ளார். எனவே அப்படிப்பட்டவர்களைக் கேளுங்கள் தரப்படும்.
எம்.ஜி.ஆர். இப்பொழுது மட்டுமல்ல; ஏற்கெனவே வேறு பல காரியங்களுக்குத் தாராளமாக அளித்துள்ளார்.
போட்டி மனப்பான்மை வளரவேண்டும்
அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்கள் இப்படிப்பட்ட காரியங்களில் அளிப்பதற்குப் போட்டி மனப்பான்மை வளரவேண்டும் என்று. இதை நானும் வரவேற்கிறேன். சட்டமன்றத் தலைவர் அவர்கள் பேசும்போது, ‘அப்படி ஏற்படும் போட்டியிலும் என் தம்பி எம்.ஜி.ஆர். அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்’ என்று சொன்னார். இதை நான் வரவேற்கிறேன்.
இப்படி அளிக்கப்பட்ட தொகையைப் பற்றி ‘விளம்பரத்துக்காக அளித்தார் என்று இன்று அல்ல நாளை கூறுவர் சிலர். அப்படிப் புகழுக்காக அளிக்கப்படுகிறது என்றாலும் அது ஒன்றும் தவறில்லை. தமிழர்கள் தங்கள் வாழ்வில் ஈதல் இசைப்பட வாழ்தல் என்று கூறியிருக்கிறார்கள். ஈதல் மூலம் அவன் இசைபட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பணத்தை வழங்கி இசைப்பட வாழலாம். நல்ல கருத்துகளை எடுத்துச் சொல்லி இசைபட வாழலாம். நல்ல எண்ணங்களை வழங்கியும் இசைபட வாழலாம்.
நிதியமைச்சர் அவர்கள், ‘இப்படிப்பட்ட விழாவில் கட்சி எதுவும் கிடையாது’ என்று கூறினார். எம்.ஜி.ஆர். அவர்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அப்படியிருப்பினும் நிதியமைச்சர் அவர்கள் கட்சியைப் பற்றிக் கவலைப்படாமல் இவ்விழாவில் கலந்து கொண்டு அவ்வை இல்லத்தின் வளர்ச்சிக்கு நல்ல பல வழிவகைகள் கூறியுள்ளதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.
எம்.ஜி.ஆர் அவர்களின் உடல் மட்டும் அல்ல உள்ளம் கூட தங்கம் போன்றதாகும். தங்கம் உருக்கி வார்க்கப்பட்டு அடிதெடுக்கப்பட்ட பின்னரே பளபளப்பைப் பெறுகிறது. எம்.ஜி.ஆர் அவர்களும் வாழ்வில் வறுமையால் வாட்டப்பட்டு உருக்கி எடுக்கப்பட்டவர்.
தம்பி எம்.ஜி.ஆர் தன் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாது இந்தத் தொகை தன்னிடமே இருந்தால் பின்னால் பயன்படுமே என்றும் நினைக்காது குறைவின்றிக் கொடுத்து வருகிறார். ரூ.10 லட்சம் சம்பாதிப்பவர் ஒரு லட்சத்தில் மண்டபம் கட்டுவதை நாம் பார்க்கிறோம். கட்ட ஆரம்பிக்கும்போதே பணம் சம்பாதிப்பவர்களையும் கூட நாம் சந்திக்கிறோம்.
அப்படியில்லாது எம்.ஜி.ஆர் காத்திருக்கிறார் பணத்தை நோக்கி. எங்கே வருகிறது எங்கே வருகிறது என்று வழி பார்த்திருக்கிறார். வந்ததும் கொடுக்கிறேன் கொடுக்கிறேன் என்று வழங்குகிறார். இந்த அனாதைகள் இல்லத்திற்கு அவ்வை இல்லம் என்று பெயர் இருப்பதை மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.! "
( டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தொடங்கிய சென்னை
அவ்வை இல்லத்திற்கு மக்கள் திலகம் எம்ஜியார்
ரூ.30 ஆயிரம் நன்கொடை வழங்கிய விழாவில்
அறிஞர் அண்ணா . விழா தலைவர் , அப்போதைய
நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் , 30 - 01 - 1961).........sk...
-
'நான் பார்த்தால் பைத்தியக்காரன் கைபிள்ளைகளுக்கும் வைத்தியம் பார்ப்பேன்', அப்படி வைத்தியம் பார்த்து கைபிள்ளைகளுக்கு உண்மை என்ற கசப்பு மருந்து கொடுத்ததால் எதிரில் பார்ப்பவர்களை எல்லாம் மனநிலை தவறியவர் போலவும் ஒருவரே 10,15 ஐடி வைத்திருப்பவராக தெரிவதும் கைபிள்ளைகளுக்கு சகஜமே.! மேலும் சில நாட்கள் உண்மை என்னும் கசப்பு மருந்து குடித்தால் எல்லாம் சரியாகி விடும்.
"ஒளிவிளக்கு" தலைவரின் 100 வது படம். சென்னையில் ஒரு திரையரங்கில் கூட 100 நாட்கள் ஓடவில்லை. ( ஓட்டுவதற்கு கிஞ்சித்தும் முயற்சிக்காத மஹான்) ஆனால் 1968 ல் வெளியான "ஒளிவிளக்கு" எண்ணற்ற சாதனைகளை குவித்து வசூலில் இந்தியாவிலும் இலங்கையிலும் நிகரற்ற சாதனையை செய்தது.
அதே நேரத்தில் மாற்று நடிகரின் 100 வது படம் "நவராத்திரி". சென்னையில் திரையிட்ட 4 திரையரங்குகளிலும் 100 நாட்கள் முரட்டு வடக்கயிற்றின் உதவியால் ஓட்டப்பட்டு கண்ணுக்கு தெரியாத வசூலை சாதனையாக சமர்ப்பித்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 13 திரையரங்குகளில் 50 நாட்கள் ஓட்டப்பட்டு மொத்தம் 6 திரைகளில் 100 நாட்கள் ஓட்ட......ப்பட்டது.. ஒரு வேடத்தில் நடித்தாலே மிகை நடிப்பில் பதறும் பாமரர்கள் அய்யன் 9 வேடத்தில் வந்தால் தாங்குவார்களா? மேக்கப்புக்கு பெருந்தொகை பிலிம்சுருளுக்கு பெரும்தொகை என்று மிகவும் கஷ்டகாலத்தில் நாகராஜன் சிக்கி அதில் இருந்து படிப்படியாக முழுவதுமாக கடனில் மூழ்கிய சோகம் பரிதாபகரமானது.
மதுரை தேவியில் 108 நாட்கள் ஓட்டப்பட்டு மொத்த வசூலாக ரூ 187738.13 பெற்றது. இதுவும் அவர்கள் அளித்த சினிமா பட்டறை வசூல்தான். ஆனால் "ஒளிவிளக்கு" தமிழகத்தில் மொத்தம் 3 திரையரங்குகளில்தான் 100 நாட்கள் ஓடியது. இலங்கையில் முதல் வெளியீட்டில் 4 திரையரங்கில் 100 நாட்களை கொண்டாடியது. 2வது 3வது மற்றும் 4வது வெள்யீடுகளில் தலா 1 தியேட்டரில் 100 நாட்களும் ஓடி 9 திரையரங்கில் 100 நாட்கள் ஓடி யது.
இருப்பினும் சென்னையில் 4 தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டப்பட்ட "ஆலயமணி""நவராத்திரி" "கை கொடுத்த தெய்வம்" போன்ற படங்களின் மொத்த வசூலை வெறும் 40 நாட்களில் ஒளிவிளக்கு தூக்கியெறிந்தது கைபிள்ளைகளுக்கு பேரதிர்ச்சியாக இருக்கத்தானே செய்யும்... 9 வேடமல்ல, 100 வேடங்கள் போட்டு பாமர மக்களை விரட்டி அடித்தாலும் புரட்சி நடிகரின் ஒரே முகமான தன் திருமுகத்தை காட்டி மீண்டும் வரவழைக்க முடியும் என்பதை நிரூபித்த படம்தான் "ஒளிவிளக்கு".
மதுரையில் மீனாட்சி திரையரங்கில் 147 நாட்கள் ஓடி ரூ316714.80 ஐ வசூலாக பெற்றது. தொடர்ந்து 100 காட்சிகளுக்கும் அதிகமாக அரங்கு நிறைந்து சாதனையை தொடர்ந்தது. நெறி கெட்டு 100 நாட்கள் ஓட்டிய அய்யனின் படத்தை தறி கெட்டு ஓடி புழுதி பறக்க வெற்றிக் கொடியை பறக்க விட்ட படம்தான் தலைவரின் "ஒளிவிளக்கு".
சென்னையில் 100 நாட்கள் ஓடாமலே "ஒளிவிளக்கு" பெற்ற வசூல் ரூ928171.28 ஆனால் 4 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓட்டப்பட்ட "நவராத்திரி" பெற்ற வசூல் 6 லட்சத்தை கூட
எட்டவில்லை என்பது கைபிள்ளைகளின் சோகம்.
இப்படித்தான் தகுதியில்லாத படங்களை 100 நாட்கள் ஓட்டி தியேட்டர் முதலாளிகளை வாழ வைத்த தெய்வங்கள்தான் அய்யனின் கைபிள்ளைகள்.
ஆனால் "ஒளிவிளக்கு" தமிழகத்தில் மொத்தம் 64 அரங்குகளில் 50 நாட்களும் இலங்கையில் 8 அரங்குகள் சேர்த்து மொத்தம் 72 அரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை செய்ததே 100 வது படங்களில் செய்த அதிகபட்ச சாதனையாக திகழ்கிறது. கைபிள்ளை நாயகனின் சாதனை கையளவே, ஆனால் மக்கள் திலகத்தின் சாதனை மலையளவு என்பதை மனதில் கொண்டு மனம் வெம்பாமல் புரட்சி நடிகரை நினைத்து பெருமை படுங்கள் கைபிள்ளைகளே.
இப்படி வடக்கயிறு போட்டு ஓட்டியே அய்யன் தனக்கு ஆதரவு இருப்பதாக நினைத்து ஏமாந்து தேர்தலில் தான் படுதோல்வி அடைந்ததுடன் தனது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெப்பாசிட்டை பறிகொடுத்தது அவரது கட்சியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
அந்த டெப்பாசிட்டையாவது திரும்ப கொடுத்திருந்தால் வேட்பாளர்கள் மகிழ்ந்திருப்பார்கள். அதை செய்தாரா உங்கள் அய்யன்?....(அதோடு அன்னை திருமதி ஜானகி அம்மையாரையும் ஏரு கட்ட வைத்தது)
அனைத்திந்தியாவிலும் வசூலில் தன்னிகரற்று விளங்கிய "சக்கரவர்த்தி திருமகனை" நினைத்து பெருமைபடுவதை விடுத்து அவரிடம் போட்டி போட கனவிலும் எண்ண வேண்டாம். நாம் தகுந்த ஆதாரங்களோடு பதிவிடுவதால் கைபிள்ளைகள் கதறுவதும் பதறுவதும் தெளிவாக தெரிகிறது..........ksr.........
-
டிசம்பர் மாதத்தில் வெளியான மக்கள் திலகத்தின் படங்கள் .
1. பிரஹலாதா 12.12.1939
2. ரத்னகுமார் 15.12.1949
3.தாய் மகளுக்கு கட்டிய தாலி - 31.12.1959.
4.தாயின் மடியில் 18.12.1964.
5. ஆசைமுகம் 10.12.1965
6.பெற்றால்தான் பிள்ளையா 9.12.1966.
7. ஒரு தாய் மக்கள் 9.12.1971..........vs...
-
பதவி ஆசை
கோடிகள் சேர்த்த பின் ஆசை முதல்வர் ஆக நடிகர்களுக்கு
சேர்த்த பணம் என் பணம் அதில் மக்கள் சேவை செய்ய மனம் இல்லை
நடிகர்களுக்கு
வயதாகி மார்கெட் போன பின் பொழுதை கழிக்க தமிழக அரசியலில் இறங்கும் நடிகர்கள் நினைப்பது கிடைத்தால் முதல்வர் பதவி கிடைக்காவிட்டால் பொழுது போகுமே என்று
நடிக்க வரும் முன்னே கதர் உடையுடன் நாட்டு சுதந்தரம் வேட்கையோடு வாழ்ந்து கொள்கையால் ஈர்க்க பட்டு தி மு க வில் இணைந்து பொருள் கொடுத்து உழைப்பை கொடுத்து பதவியில் அமர்த்தி அழகு பார்த்த எம் ஜி ஆர் கருணாநிதி ஊழல் ஆட்சி செய்ததால் தனியாக கட்சி கண்டு முதல்வர் ஆகி ஒரு பொற்க்கால ஆட்சி கொடுத்தார் தன் பொருள் அனைத்தையும் மக்களுக்கே கொடுத்ததார் எம் ஜி ஆர் தமிழகத்தில்
எம் ஜி ஆரை கண்டு எம் ஜி ஆர் ஆக துடிக்கும் நடிகர்களுக்கு
எம் ஜி ஆர் போல் பதவி இல்லாத போதும் மக்கள் சேவை செய்து மக்களை காக்காத உங்களை மக்கள் துரத்தி அடிப்பார்கள்
வாழ்க எம் .ஜி .ஆர்., புகழ்..........va...
-
"சிரித்து வாழ வேண்டும்"
‘சிரித்து வாழ வேண்டும்’... பெயரே உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கக் கூடியது. இதயவீணைக்கு பிறகு பத்திரிகையாளர் மணியனின் உதயம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட படம் இது. ஆனந்த விகடனின் ஆசிரியராக இருந்தவரும் ஜெமினி அதிபர் திரு.எஸ்.எஸ்.வாசன் அவர்களின் புதல்வருமான திரு.பாலசுப்பிரமணியன் அவர்களும் ஒரு பங்குதாரராக சேர்ந்து கொண்டதுடன் படத்தை எஸ்.எஸ்.பாலன் என்ற பெயரில் இயக்கியும் இருந்தார். மதுரையில் 100 நாள் கொண்டாடியதுடன் மற்ற சென்டர்களிலும் வசூலை அள்ளிக் குவித்த வெற்றிப் படம்.
படம் வெளியான நேரம் சரியில்லை என்பது என் கருத்து. உரிமைக்குரல் படம் வெளியான 24வது நாளில் ‘சிரித்து வாழ வேண்டும்’ வெளியானது. உரிமைக்குரல் படம் 12 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியது. மதுரையிலும் நெல்லையிலும் வெள்ளிவிழா கண்ட காவியம். மதுரையில் 200 நாட்கள் ஓடியது. உரிமைக்குரல் முழுமையாக ஓடி முடிந்த பின் சிரித்து வாழ வேண்டும் வெளியாகி இருந்தால் உரிமைக்குரல் 20 சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும். அதுமட்டுமல்ல, சிரித்து வாழ வேண்டும் படமும் மதுரையைப் போல பல சென்டர்களில் 100 நாட்கள் ஓடியிருக்கும்.
* இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த ‘ஜன்ஜீர்’ படத்தின் தமிழாக்கம் சிரித்துவாழ வேண்டும்.
*தலைவர் இதில் அப்துல் ரகுமானாகவும் இன்ஸ்பெக்டர் ராமுவாகவும் இரட்டை வேடங்களில் அருமையாக வித்தியாசம் காட்டியிருப்பார்.
*ரகுமானாக வரும் தலைவரின் குரல் கொஞ்சம் கரகரப்பாக இருக்கும். போலீஸ் ஸ்டேஷனில் ராமுவாக வரும் தலைவரோடு வாக்குவாதம் செய்து விட்டு லுங்கியை பின்னால் லேசாக உயர்த்தியபடி காலை அகட்டி வைத்து நடந்து வருவார்.
*தனது வீட்டில் தொழுகை செய்யும் காட்சி ஒரு இஸ்லாமியர் செய்வதைப் போலவே இருக்கும்.
*அப்துல் ரகுமான் நடத்தும் கேளிக்கை விடுதிக்கு இன்ஸ்பெக்டர் ராமு வரும் சீனில் சிவப்பு நிற சூட்டில் விடுதியை சுற்றிலும் பார்வையை ஓடவிட்டு எடைபோட்டபடியே தலைவர் நடந்து வரும் ஸ்டைல் அவருக்கே உரியது. ரகுமான் பாய் வீசும் கத்திகளை மேக்னடிக் பெல்ட்டில் அனாயசமாக தேக்கும் காட்சியில் ரசிகர்களின் உற்சாக ஆராவரத்தில் தியேட்டரில் இருக்கைகள் உடையும்.
* இரண்டு பேரும் மோதிக் கொள்ளும் சண்டை காட்சிகள் தலைவரின் சுறுசுறுப்புக்கு மட்டுமின்றி எடிட்டிங் திறமைக்கும் சான்று.
*சிறுவயதில் கண்ணுக்கு எதிரே பெற்றோர் சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரத்தை பார்த்ததால் குற்றவாளிகளை கண்டால் உணர்ச்சிவசப்பட்டு புரட்டி எடுக்கும் மன உணர்வை, மனோகரை அடித்து துவைக்கும் காட்சியில் தலைவர் அருமையாக வெளிப்படுத்தியிருப்பார்.
* நம்பியார் வைக்கும் பார்ட்டியில் கலந்து கொள்வதற்காக பிளாக் சூட்டில் வரும் தலைவரின் அழகைக் காண கண் கோடி வேண்டும். ‘என்னை விட்டு போகாதே..’ பாடலுக்கு ஆடும் நடிகை (காஞ்சனா) தலைவரை கையைப் பிடித்து ‘வாருங்கள்’ என்று இழுப்பார். தலைவர் அசையாமல் அவரை உற்றுப் பார்த்தபடியே நிற்பார். ‘ப்ளீஸ்’ என்று கோரிய பிறகுதான் நகர்வார். தன் அனுமதியின்றி யாரும் தன்னை இழுக்க முடியாது என்பதையும் பெண்கள் கூப்பிட்டால் போய்விடுபவன் அல்ல என்பதையும் அற்புதமாக இந்த ஒரு உடல் மொழியிலேயே காட்டியிருப்பார்.
*பாடல்கள் தேனாறு. ‘கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்’... பாடல் உண்மையிலேயே நம்மையும் சூழ்நிலையை மறக்க வைக்கும். தலைவர் ஒரு பாடல் காட்சியில் அதிகமான உடைகளில் (8 உடைகள்) வந்த பாடல் இதுதான்.
*‘பொன்மனச் செம்மலை புண்படச் செய்தது யாரோ?’ பாடல் ஆரம்பிக்கும் முன், நம்பியாரின் ஆட்கள் தாக்கியதால் காயமடைந்து கட்டுக்களோடு சிகிச்சை பெற்று வரும்போது, இப்படி பண்ணி விட்டார்களே? என்ற கோபத்தையும், அடுத்து இவர்களை என்ன செய்யலாம்? என்ற யோசனையையும் முகத்தில் தேக்கியபடி வசனமே இல்லாமல் சுவற்றை வெறித்துப் பார்த்தபடி இருக்கும் காட்சி தலைவரின் நடிப்புத் திறனுக்கு உதாரணம்.
*படத்தில் வசனம் இன்னொரு சிறப்பு. திரு.நம்பியாரின் வசனங்களிலும் ஆங்காங்கே நகைச்சுவை தெளிக்கப்பட்டிருக்கும். ‘இனிமேல் மோசடி கும்பலில் இருக்க மாட்டேன்’ என்று தனது பாஸிடம் திருச்சி சவுந்தரராஜன் சொல்லிவிட்டு செல்லும்போது, ‘என்ன பாஸ், சூடா ஒரு டம்ப்ளர் ஞானப்பால் குடிச்ச மாதிரி பேசறான்?’ என்றும், உங்களது பாஸ் இப்போது என்ன செய்கிறார்? என்று நம்பியாருடன் இருக்கும் பெண் கேட்க, ‘ஒரு இடத்தில் இரண்டு அறிவாளிகள் இருந்தால் அங்கு வேலை நடக்காது, விவாதம்தான் நடக்கும். அதனால், நான்தான் அவரை கொன்றேன்’ என்றும் நம்பியார் கூலாக சொல்லும் காட்சிகளில் தியேட்டரில் சிரிப்பலை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்கு வசனம் எழுதிய திரு.ஆர்.கே.சண்முகம்தான் இந்த படத்துக்கும் வசனகர்த்தா.
சதியால் இன்ஸ்பெக்டர் ராமுவாக வரும் தலைவர் சிறைக்கு அனுப்பப்படுவார். அங்கு தன்னைப் பார்க்க வரும் லதாவிடம், ‘கசப்பான அனுபவங்கள்தான் ஒரு மனிதனை பக்குவப்படுத்தும்’ என்று தலைவர் கூறுவார். எத்தனை உண்மையான வார்த்தைகள்..........vs.........
-
‘"துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன’ என்பது எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும்"..! -
"நிஜத்திலும் நடிகையரின் காவலர் எம்.ஜி.ஆர்"
‘துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன' என்பது இறைவனுக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் பொருந்தும். இக்கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் அவர் வாழ்வில் பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எம்.ஜி.ஆர் திரையுலகில் இருந்த போதும் முதல்வரான பிறகும் தன்னை வளர்த்துவிட்ட திரையுலகுக்கு ஒரு காவலனாக இருந்தார். யாருக்குக் கஷ்டம் என்றாலும் நஷ்டம் என்றாலும் அத்தகவல் இவர் கவனத்துக்கு வந்தால் உடனே அவர்களை அந்த சிரமத்திலிருந்து மீட்கும் ரட்சகராக இருந்திருக்கிறார் என்பது பலரது பேட்டி வாயிலாகத் தெரிகிறது.
"எம்.ஜி.ஆரை நம்பினோர் கைவிடப்படார்"....
சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருக்கும் பிரபல ஜுவல்லரி ஒன்றில் நகை வாங்கிக்கொண்டு காரில் வந்த சரோஜாதேவியிடம் இருந்து திருடர்கள் அந்த நகையைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். காவல் நிலையம் சென்று புகார் அளித்த சரோஜாதேவி ‘எம்.ஜி.ஆர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா’ என்று கவலையுடன் தெரிவித்தார். எம்.ஜி.ஆர் இருப்பது தனக்கு ஒரு பாதுகாப்பு என்று அவர் நம்பியிருந்தார். இதுபோன்ற நம்பிக்கை பலருக்கும் இருந்திருக்கிறது.
நடிகை என்கிற ஒரே காரணத்தால் பெண்களுக்கு மற்றவர்கள் நெருக்கடி கொடுத்தபோது அவர்களை அந்தக் கயவர்களின் பிடியிலிருந்து எம்.ஜி.ஆர் விடுவித்த சம்பவங்கள் ஏராளம். இவரும் நடிகையரிடம் மிகவும் கண்ணியத்துடன் நடந்து கொண்டார் என்பதற்கும் சான்றுகள் உண்டு. அவர்களின் கண்ணியத்தைக் காக்க வேண்டிய சந்தர்ப்பங்களில் அவர் உறுதியுடன் இருந்தார். எனவே, அந்தக் காலத்தில் எம்.ஜி.ஆர் தங்களின் காவலராக இருக்கிறார் என்ற நிம்மதி நடிகையருக்கு இருந்தது.
Published: யாழ் இணையம் in வண்ணத் திரை......... MGN...
-
புரட்சி தலைவர் MGR அவர்களுக்கு ரசிகர் மேல் உள்ள பாசம், அன்பு போல், வேறு எந்த நடிகருக்கும் கிடையாது. இதை பல முறை நான் நேரில் பார்த்து உள்ளேன். உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி மூலம் நடந்ததை தெரிவிக்க ஆசை படுகிறேன். மும்பையில் எங்க ரசிகர் மன்றத்தின் சார்பாக "இதயக்கனி" படம் ரிலீஸ் அன்று இரவு காட்சியில் படத்தின் நாயகி ராதாசலுஜா அவர்களை வரவைத்து விழா எடுத்து கொண்டாடினோம். மன்றம் சார்பாக சிறப்பு மலர் ஒன்றை ராதாசலுஜா கையால் வெளியிட்டோம். தலைவர் சந்தித்து மலர் காண்பிக்க சென்னை புறப்பட்டு சத்யா ஸ்டூடியோ சென்றோம். தலைவர் அவர்களை சந்திக்க டைரக்டர்கள், படம் அதிபர்கள், மற்றும் கட்சி நிர்வாகிகள் என்று பல பேர் காத்து கொண்டு இருந்தார்கள். தலைவர் உதவியாளர் மூலம் நாங்க வந்த விஷயம் தெரிந்தவுடன் உடனே தலைவர் எங்களை உள்ளே வருமாறு கூறினார். தலைவர் சந்தித்து மலர் கொடுத்தோம். முதல் பக்கத்துல இருந்து கடைசி பக்கம்வரை படித்தார். மிகவும் சந்தோசம் அடைந்தார். விழாவை அதிகம் செலவு செய்து நடத்தி உள்ளீர்கள் என்று அன்புடன் கடிந்து கொண்டார்.சுமார் 10 நிமிடம்வரை எங்களுடன் இருந்தார். நாளை தோட்டத்தில் வந்து சந்திக்கவும் என்று கூறி அன்புடன் எங்களை வழிஅனுப்பி வைத்தார். எவ்வளவு பேர் காத்து இருந்தும் எங்களை உடனே சந்தித்து பேசியது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி ஆக இருந்தது. ரசிகர் மேல் தலைவருக்கு உள்ள பாசம் பரிவு, அன்பு கண்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தோம். இது போல பல நிகழ்ச்சிகளை பிறகு தெரிவிக்கிறேன். இது போல தலைவர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகளை நண்பர்கள் பகிந்து கொள்ளலாம். நன்றி.... Albert Paul...
-
"படகோட்டி"...கொடுத்ததெல்லாம் பாடல் காட்சிகளில்.........
------------------
இப் பாடலை நன்கு கவனித்து பாருங்கள்
மீனவர்களின் ஏழ்மையை பயன் படுத்திக் கொள்ளும் முதலாளித்துவம்
தான் எவ்வளவு முயன்றும் இவர்களின் அறியாமையை போக்க முடியவில்லையென்ற ஆதங்கம்
உழைத்தவர்கள் தெருவில் நின்று விட்ட விரக்தி
தன் ஆற்றாமையை , மனக்குமுறலை முகபாவங்களாலும் தன் நடையினாலும் வெளிக் கொணரும் விதம் அபாரம்
வார்த்தைகளையும் , வாக்கியங்களையும்
தன் உடல் மொழியால் நம்மை முழுமையாக உணரவைக்கும் நடிகர் உலகிலேயே எம் ஜி ஆர் ஒருவர் தான் .
குறிப்பு : இப்பாடலில் ஒரு முதியவர் ஒருவர் அமர்ந்திருப்பது தற்செயலாக நடந்த ஒன்று அம்முதியவருக்கு மக்கள் திலகம் பணம் இரண்டாயிரம் கொடுத்து உதவினார் ....Hyd...
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். திரைக்காவியங்கள்* மறுவெளியீடு*தொடர்ச்சி .................
------------------------------------------------------------------------------------------------------------------------
26/11/20 முதல் ஸ்ரீவில்லிபுத்தூர் -ரேவதி -மக்கள் திலகம் /புரட்சி நடிகர்*எம்.ஜி.ஆர். இருவேடங்களில் அசத்திய*டிஜிட்டல் நினைத்ததை முடிப்பவன்* தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .**
தகவல் உதவி : திரு.பந்தமுத்து , மம்சாபுரம்*.
27/11/20 முதல் ஆத்தூர்*என்.எஸ். அரங்கில்*கலை*வேந்தன்*எம்.ஜி.ஆர். வழங்கும்*நம் நாடு தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
30/11/20 முதல் ஆலங்குளம்*டி.பி.வி. மல்டிப்ளக்ஸ் அரங்கு ஸ்க்ரீன் 2ல்*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்*தர்மம் தலை காக்கும்*தினசரி 3 காட்சிகள்*
30/11/20 முதல் விக்கிரமசிங்கபுரம் (தென்காசி மாவட்டம் )தாய் சினீஸ்*அரங்கில்*பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். ஆயிரத்தில் ஒருவன் தினசரி 2 காட்சிகள்*(மாலை / இரவு ) நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.வி. ராஜா, நெல்லை.*
30/11/20 முதல் சேலம்*ராஜேஸ்வரியில் நடிக மன்னன் /நடிக பேரரசர்*எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் கலக்கிய* எங்க*வீட்டு*பிள்ளை தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
தகவல் உதவி : திரு.சத்தியமூர்த்தி, சேலம்*.* *
-
பாட்டாலே* புத்தி சொன்ன வாத்தியார் எம்.ஜி.ஆர். -வின் டிவியில்*சகாப்தம் நிகழ்ச்சியில் திரு.துரை பாரதி* 25/11/20 அன்று அளித்த*தகவல்கள்*
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு கால கட்டத்தில் தவிர்க்க முடியாத தலைவராகவும், திரை உலகின் முடிசூடா மன்னனாகவும் விளங்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தி.மு.க.வில் இருந்து எப்படி நீக்கப்பட்டார் ,அதற்கான நெருக்கடிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பதை காலம் அறியாதது அல்ல.* மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரிக்ஷாக்காரன், குமரிக்கோட்டம், நல்லநேரம் போன்ற வெற்றி படங்கள் வந்த கால கட்டத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தன் மகன் மு.க. முத்து நடிப்பில் பிள்ளையோ பிள்ளை படம் தயாரித்து வெளியிட்டார். அந்த படத்தின் பூஜை நாளன்று* கிளாப் அடித்து துவக்கி வைத்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .* படம் முடிவுற்று ,பிரிவியூ காட்சிக்கு எம்.ஜி.ஆர். வருகை தருகிறார் . முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் வருகை தருகின்றனர் .* பொதுவாக எம்.ஜி.ஆர். அவர்களின் படங்கள் வெளியாகின்றபோது மு.க.ஸ்டாலின் , மு.க. முத்து, மு.க. அழகிரி போன்றவர்கள்*எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த பாடல், இந்த காட்சி, இந்த வசனம் நன்றாக இருந்தது . சண்டை காட்சிகள் அபாரம் என்று குழந்தை பருவத்தில் இருந்தே பாராட்டுவது வழக்கம் . பிள்ளையோ பிள்ளை படத்தை பார்த்த எம்.ஜி.ஆர். அவர்கள் அவரவர்க்கென்று தனி பாணி இருக்க வேண்டும்* யாரும் மற்றவர்களை போல நடிக்க முயற்சிக்க கூடாது. தனித்தன்மை இருக்க வேண்டும். அப்போதுதான் திரையுலகில் நிலைத்து நிற்க முடியும் என்று விமர்சனம் செய்து பேசியதோடு மு.க. முத்து வுக்கு*கடிகாரம் பரிசளித்தார் .* *.**
இல்லை ஒரு பிள்ளை என்று ஏங்குவோர்க்கு பதிலடி கொடுப்பதற்காக வந்திருக்கிறது பிள்ளையோ பிள்ளை என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது .தமிழகம் முழுவதும் பல இடங்களில் எம்.ஜி.ஆர். மன்றங்கள் கலைக்கப்பட்டு,*மு.க. முத்து மன்றம் துவக்கப்பட்டது .* எம்.ஜி.ஆர். அவர்கள் மனம் புண்படும்படி*தி.மு.க.வினரின் செயல்பாடுகளும், தலைமையின் செயலும் அமைந்தன .*அந்த கால கட்டத்தில்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டார் .* உதாசீனப்படுத்தப்பட்டார் .* அந்த சமயத்தில்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் கணக்கு கேட்கும் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது*இந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்த பலர் மூலம் ரகசியமாக தகவல்கள் கிடைத்தன .* மு.கருணாநிதி, கே.அன்பழகன் போன்றவர்களின் வீட்டு மின்சார கட்டணங்கள் தி.மு.க. கட்சி நிதியில் இருந்து கட்டுவதாக ரகசிய தகவல்கள் கிடைத்தன .* கட்சி பணத்தை பல்வேறு வகைகளில் கையாடல் செய்கிறார்கள் என்று பகிரங்கமாக தெரிந்தபின்னர் தான் கணக்கு கேட்கும் விவகாரத்தை எம்.ஜி.ஆர். அவர்கள் எழுப்பினார் .* இன்றைய கால கட்டத்தில் முரசொலியில் எழுதுகிறார்களே* அது போல துரோக மனப்பான்மையுடன் எம்.ஜி.ஆர். அவர்கள் செயல்படவில்லை .* எம்.ஜி.ஆர். அவர்களுடன் நடித்த ஓ.ஏ .கே..தேவர்* சிவாஜி நாடக மன்றத்திலும், சிவாஜி கணேசனுடன் பல படங்களில் நடித்துள்ளார் .எம்.ஜி.ஆர். அவர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார் . தி.மு.க. வின் பிரச்சார நாடக குழுவில் உறுப்பினராக இருந்தவர ஓ.ஏ.கே. தேவர் . ஓ.ஏ..கே.தேவர்*மறைந்ததும் ,முதல் ஆளாக சென்று அஞ்சலி செலுத்தியவர் எம்.ஜி.ஆர். தான் .
திரு.கா.லியாகத் அலிகான் பேட்டி ::* நாடோடி மன்னன் படத்தில் மன்னன் மார்த்தாண்டன் முடிசூட்டு விழாவிற்கு முன்பு புரட்சிக்காரன் வீராங்கன்*மந்திரிகள் அனைவருக்கும் விருந்து ஏற்பாடு செய்வார் . அதில் மன்னரை கொல்ல பழ ரசத்தில் விஷம் கலந்து கொடுக்க ஏற்பாடு நடக்கும்.* விஷம் கலந்த பழ ரசத்தை அருந்தியதும் மன்னர் மயக்கமடைவார் . அப்போது மந்திரிகள், வீராங்கனை மன்னராக வேஷமிட்டு தற்காலிகமாக நடிக்க சொல்வார்கள். வீராங்கன்* நடிக்கிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. சட்டம் இயற்றும் அதிகாரம் என் கையில் இருக்க வேண்டும். அப்போதுதான் மன்னனாக நடிக்க இணங்குவேன்* என்பார் . அப்போது மந்திரிகள் முன்பின் தெரியாதவனிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது ஆபத்தை விளைவிக்கும் .நீ புதியவன். விவரங்கள் போதாது என்று மறுத்து பேசுவார்கள் . வீராங்கன்* எனக்கு ஏர் பிடித்து உழவும் தெரியும். கத்தி பிடித்து களத்தில் சண்டையிடவும் தெரியும். உழ முடியாத மாடு, உதவாத கலப்பை இவற்றை நாங்கள் நம்புவதே இல்லை .* அமைச்சர்கள் உன் பேச்சை நம்பி அதிகாரத்தை உன் கையில் ஒப்படைக்கிறோம் . நம்பிக்கை துரோகம் செய்யமாட்டாய் என்று நம்புகிறோம். அப்போது வீராங்கன் சொல்வார் .அமைச்சரே, என்னை நம்பாமல் கெட்டவர் பலர். நம்பி கெட்டவர்கள் இன்றுவரை இல்லை என்பார்.* பின்னர் மன்னராக முடிசூட்டி கொண்டு வீராங்கன் மக்களுக்கான திட்டங்கள், கொள்கைகளை அறிவிப்பார் . குடிசைகள் அகற்றப்பட்டு . தேவையில்லாத காரணத்தால் அவை கொளுத்தப்படும் .எதிர்க்கட்சியினர்* கேள்வியில் அப்படி என்றால் பணக்காரர்களே இருக்க மாட்டார்களா என்பதற்கு பணக்காரர்கள் இருப்பார்கள்,* ஏழைகள் இருக்கமாட்டார்கள் என்பார் .* 1958ல் நாடோடி மன்னன் படத்தின் மூலம் அறிவித்த பல திட்டங்களை 1977ல் ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றினார் .*பல இடங்களில் குடிசைகளுக்கு பதிலாக குடிசை மாற்று வாரியம் மூலம்*கட்டிடடங்கள் கட்டப்பட்டு ஏழைகள் அதில் குடி புகுவதற்கு வழி வகுத்தவர்தான்* தங்க தலைவர் ,வாரி கொடுத்த வள்ளல், ஏழைகளின் இதயவேந்தன், வற்றாத ஜீவநதி, மறைந்து 33 ஆண்டுகளுக்கு பின்னரும் என்றும் ஏழைகளின் நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்*ஏழை* எளியோர் மீது அளவு கடந்த அன்பு, பாசம்* வைத்திருந்தார் .****
குடிசை வாழ் மக்களை ஒருமுக்கிய கட்சி பிரமுகர் , வந்து என்னுடைய இடத்தில நான் மருத்துவமனை கட்ட வேண்டி இருப்பதால் அங்குள்ள 40 குடிசை வாழ் மக்களை காவல்துறையினரை விட்டு விரட்ட சொல்லுங்கள் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களிடம் விண்ணப்பிக்கிறார் . பதிலுக்கு முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ,நீங்கள் அந்த ஏழை மக்களுக்கு வேண்டிய பணம் கொடுத்தால் அவர்கள் இடம் பெயர்ந்து அந்த பணத்தில் வீடு கட்டி கொள்வார்கள்.* என்றதும். அந்த பிரமுகர் அதற்கு ரூ.40 லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் கைவசம் இல்லை. நீங்கள் காவல்துறைக்கு தகுந்த உத்தரவிட்டு அந்த குடிசை வாழ் மக்களை அந்த இடத்தில இருந்து விரட்டி அடித்து ,காலி செய்து தாருங்கள் என்று மீண்டும் கேட்டு கொண்டார் .இதனால் கோபமுற்ற எம்.ஜி.ஆர். அவர்க.ள் , குடிசை வாழ் மக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அந்த பிரச்னைக்கு தீர்வு காண என்னைத்தான் அணுகுவார்கள் நீங்கள் எனக்கு முக்கியமானவர்தான் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்*.* அவர்களை நிராதரவாக விட நான் தயாரில்லை. அந்த இடம் உங்களுக்கு சொந்தமாக இருந்தாலும், நீங்கள் பணம் கொடுத்து பிரச்னையை சுமுகமாக தீர்க்க பாருங்கள். இல்லையேல் ,இந்த பிரச்னையில் உங்களுக்கு சாதகமாக எந்த முடிவும் ,ஏழைகளுக்கு எதிராக எடுக்க என்னால் முடியாது. நீங்கள்போய் வாருங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார் .* இதனால் மன வருத்தத்தோடு வீடு திரும்பிய அந்த பிரமுகரிடம், அவரது கார் ஓட்டுநர் ,ஐயா, தலைவர் எம்.ஜி.ஆர். வீட்டில் இருந்து ரூ.40 லட்சம் பணம் வந்துள்ளது . கார் டிக்கியில் ஒருவர் வைத்துவிட்டு உங்களுக்கு தகவல் தரும்படி சொல்லிவிட்டு போனார் என்றதும். ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சி அடைந்தார் அந்த பிரமுகர் . கட்சி பிரமுகரின் மனம் புண்படும்படி பேசிவிட்டோம். அனால் அவரை விடக்கூடாது என்று . அவருக்கு ஆறுதல் தரும் வகையில் பணத்தை கொடுத்து அனுப்பினார் தலைவர் நேரடியாக அந்த பிரமுகரிடம் கொடுத்திருந்தால் அது கௌரவ பிரச்னையாக இருந்திருக்கும் .அதனால் அவர் தலைவர் எம்.ஜி.ஆர். அளித்த தேநீர் அருந்தும் வேளையில் அவருடைய கார் ஓட்டுநர் மூலம் ரகசியமாக பணம் கொடுத்து உதவியிருந்தார் .****. அதே சமயத்தில் ஏழைகள் மனம் வாட கூடாது என்று கருதி கட்சி பிரமுகர் மூலம் உரிய பணத்தை கொடுக்க செய்தார்* எம்.ஜி .ஆர் . எம்.ஜி.ஆர். அவர்கள் நினைத்திருந்தால் ஒரே உத்தரவின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு சாராருக்கு சாதகத்தையும் .ஒரு சாராருக்கு பாதகத்தையும் அது விளைவித்திருக்கும். ஆனால் ஒரே சமயத்தில் இரு சாராருக்கும் உதவும் வகையில் செயல்பட்டு பிரச்னையை சுமுகமாக முடித்தார் எம்.ஜி.ஆர். இந்த பிரச்னைக்கு பிறகு, அந்த பிரமுகர் தலைவர் எம்.ஜி.ஆர். பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கினார் .**அத்தகைய பெருமைமிகு தலைவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்..
யாராவது புகார் கொடுத்து*விட்டால்,**அவர்கள் வேண்டியவர்கள் என்பதற்காக, அந்த புகாரின் நியாயத்தை உணர்ந்து பார்க்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து எதிர் முகாமில் உள்ளவர்கள் வேதனை அடையும்படி எந்த நிகழ்வையும் நடத்த மாட்டார் .தலைவர் எம்.ஜி.ஆர்.* ஈரோடு மாவட்டம், சென்னிமலை*பகுதியில்**உள்ள கந்தசாமி என்பவர் அ.தி.மு.க. அலுவலகத்தில்**குறை*கேட்கும் நேரத்தில் தலைவரை சந்தித்து* முறையிடுகிறார் . எங்கள் பகுதியில்*வரும் தண்ணீரை சென்டெக்ஸ் என்கிற நிறுவனம் பெரும்பாலான*அளவில் எடுத்து கொள்வதால் பொதுமக்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் திண்டாடுகிறார்கள் . தலைவர் நேரடியாக*இந்த விஷயத்தில் உத்தரவிடாமல், அந்த தண்ணீரை* சென்டெக்ஸ் நிறுவனம் எப்படி பயன்படுத்துகிறது .என்று கேட்கிறார் .தொழிற்சாலைக்கு பயன்படுத்துகிறீர்களா. அந்த தொழிற்சாலையில் எத்தனை பேர்* வேலையில்**இருக்கிறார்கள். சுமார்*200 பேர்.* அவர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போனால் வேலை இழப்பு ஏற்படும். தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கும். உரிமையாளருக்கு வருமானம் இருக்காது*,இதற்கு மாற்று வழி காண வேண்டும் ,பொதுமக்களுக்கும் தண்ணீர் பிரச்னை தீரவேண்டும்*,*. என்று கருதி*சுகாதார அமைச்சர் திரு.ஹண்டே*அவர்களிடம் இந்த பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண சென்னிமலை பகுதி முழுவதும் 60 ஆழ்துளை கிணறுகள் அமைத்து*உதவுங்கள் என்றார். அமைச்சர் அங்கு* .ஆழ்துளை கிணறுகள்** சுமார்*30 அமைத்து தண்ணீர் போதுமான அளவிற்கு மேலாக வருவதை அறிந்து*, மீதம் உள்ள 30 ஆழ்துளை கிணறுகளை சென்னிமலையின் சுற்றுவட்டார பகுதிகளில் அமைத்து* தண்ணீர் பிரச்னையில் இருந்து அந்த பகுதி பொதுமக்களும்* நிரந்தரமாக* விடுபட*. வித்திட்டு உதவியவர்*தலைவர் எம்.ஜி.ஆர்.**இந்த வேலைகள்*நடந்து பொதுமக்கள் தண்ணீர் பிரச்னையை தீர்த்து வைத்ததற்கு தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு நன்றி செலுத்தியதை நண்பர்கள் சென்னிமலை*விஸ்வநாதன், தங்கவேலு போன்றவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்கள் . இப்படி ஒரு பிரச்னையை அணுகும்போது தொழிலாளர்கள் வேலை இழப்பு, தொழிற்சாலை முடக்கம், உற்பத்தி பாதிப்பு, உரிமையாளர் வருமானம் , ஆகியவற்றை மட்டுமே கணக்கில் கொள்ளாமல்,*பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாது*தண்ணீர் பிரச்னையை*தீர்த்து*வைத்து,சமயோசிதமாக* சிந்தித்து**செயல்பட்டு அவர்களது உள்ளங்களில் எல்லாம் ஊடுருவிஅவர்களது இல்லங்களில் தந்தையாக, தாயாக, தனயனாக,அண்ணனாக, தம்பியாக மாறுபட்ட* பல்வேறு உருவங்களில் வாழ்ந்துஅனைவரும்*இதயதெய்வம் என்று போற்றுகிறார்கள் என்று சொன்னால்*எப்போதும் ஏழைகளுக்காகவே சிந்தித்து***இரு சாராரின் பிரச்னைகளையும் ஒரே சமயத்தில் தீர்த்து வைத்தவர்தான் நமது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.**
கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தில் ஏழைகளை பற்றி மட்டுமே சிந்தித்த*, ஏழைகளுக்காகவே வாழ்ந்த லெனின்*என்கிற மாபெரும் புரட்சி வீரன் பற்றி கவிஞர் பாரதிதாசன்*எழுதிய கவிதை*. யுகமாக வாழ்ந்த*லெனினே, உலகாக*நின்ற**லெனினே*, உறவாக, அகமாக*, அறிவாக, அரசாக*நின்ற லெனினே*என்று வடித்ததை அப்படியே புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு யுகமாக, உலகாக*, உறவாக, அகமாக*. அறிவாக, அரசாக, ஆள பிறந்த , ஆண்டு கொண்டிருக்கிற எம்.ஜி.ஆர். அவர்களே என்று நம் உள்ளங்களில் எல்லாம் மனநிறைவோடு* புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் உருவாக்கிய இயக்கத்தை வெற்றிகரமாக இன்றைக்கு திரு.எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையில் ஆட்சி நடைபெறும் வேளையில்*கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை*மனதில் நிலை நிறுத்தி கொண்டவர்தான் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .காரல் மார்க்ஸ், பிரடெரிக்*ஏன்ஜெல்ஸ்**ஆகியோர் முதலீட்டு கொள்கையை உருவாக்கியவர்கள் . காரல் மார்க்ஸ் சொல்கிறார். எங்கே வேண்டுமானாலும் புரட்சி வரும் .*புரட்சி வராத இடம் என்று சொன்னால்ஒரு இடம்தான் உள்ளது அது**இந்தியாவில்தான் .* மிக எளிதாக* இந்தியாவில் புரட்சி வெடிக்க வாய்ப்பில்லை . காரணம்*மதங்கள், கொள்கைகளால் சூழப்பட்டு,* ,தங்களுக்கு தாங்களே சமாதானப்படுத்தி கொண்டு, அடிமை வாழ்வோ, அரசன் வாழ்வோ, எந்த வாழ்வாக இருந்தாலும் ,அவர்கள் ஏற்று கொள்வார்கள்** என்று சொன்ன அந்த நெறியில்தான் இந்தியாவில்தைமூர் காலம்,* முகலாயர்கள், காலம்** மங்கோலியர்கள், ஆங்கிலேயர்கள் காலம் வரையில் பல்வேறு வகைகளில், பல்வேறு காரணங்களுக்காக நாம் அடிமைப்பட்டு கிடந்தோம் .நாட்டின் சுதந்திரத்திற்காக புரட்சி வெடித்தது . சுதந்திரம்*கிடைத்தபின், தமிழகத்தில் 1972ல் புரட்சி வெடித்தது .வெறும் 4 எம்.எல்.ஏக்களை எதிர்த்து அல்ல. 184 எம்.எல்.எங்களுடன் மிருகபலம் கொண்ட*தி.மு.க. ஆட்சிக்கு வந்த*ஓராண்டிலேயே**தனியொரு, சாமான்ய*மனிதராக இருந்து முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கேள்வி கணைகள்*தொடுத்தார் .* நான் அனைவரையும்*கணக்கு கேட்பேன். சாதாரண நிலையில் இருந்தவர்களில் பலர்*ஊழல்கள், குற்றங்கள், தவறுகள் செய்து கோடீஸ்வரர்கள் ஆகி இருக்கிறார்கள் . அவர்கள் முறையாக கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும். குற்றமற்றவர்கள் என்று தங்களை*நிரூபித்து கொள்ள வேண்டும் .என்று தைரியமாக, பயப்படாமல், ஒரு புரட்சி வீரனாக***தன்னை மக்களுக்கு அடையாளம் காட்டி கொண்டு*காரல்*மார்க்ஸ்*,ஏன்ஜெல்ஸ் போன்றவர்களை மிஞ்சியவர்,தான் நமது*புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் .* அவர் தி.மு.க.வில் இருந்து தூக்கி எறியப்பட்டபோது தனியொரு தலைவராக இருந்தார். அவரை பின்பற்றி வந்தவர்கள்தான்* எம்.எம்.துரைராஜ், முனு ஆதி, ஜி.ஆர். எட்மண்ட் ,வேலப்பன், எஸ்.ஆர்.ராதா, காளிமுத்து*போன்றவர்கள் .*அதன் பின்னால் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள்* கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம் போன்றவர்கள் வந்தார்கள் . இவர்களை மட்டுமே வைத்து, கட்சி ஆரம்பித்து ,தமிழகத்தின் ஏழை எளியோருக்காக நான் புரட்சி செய்வேன் .ஊழலை ஒழிப்பேன் என்று**கூறி, காங்கிரஸ் ஆட்சியில் ரூ.4.25க்கு தந்த அரிசியை* கிலோவுக்கு ரூ.1/- கொடுத்த பேரறிஞர் அண்ணாவை போல* தன்னுடைய இறுதி காலம் வரையில் முதல்வராக இருந்து அதை நீடிக்க செய்த ஒப்பற்ற தலைவர்தான் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.*இவ்வாறு திரு.லியாகத் அலிகான் பேட்டி அளித்தார் .**
நிகழ்ச்சியில் ஒலித்த பாடல்கள் ;/காட்சிகள் விவரம்*
-----------------------------------------------------------------------------------
1.நினைத்ததை நடத்தியே முடிப்பவன் - நம் நாடு*
2.பேசுவது கிளியா , இல்லை பெண்ணரசி மொழியா - பணத்தோட்டம்*
3.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் - மகாதேவி*
4.எம்.ஜி.ஆர். - ஓ.ஏ.கே.தேவர் உரையாடல் -மதுரை வீரன்*
5..திரு.கா. லியாகத் அலிகான் பேட்டி*
***
****
-
இந்த காட்சியை எல்லாம் பார்க்கும் போது விழிகள் பனிக்கின்றது , இப்படி எல்லாம் இனி ஒரு சீன் இப்ப வரும் படத்தில பார்க்க முடிகிறதா! தயவுசெய்து குழந்தைகளுக்கு நல்ல பாடத்தை சொல்லிக் கொடுங்கள், நல்ல படத்திற்கு அழைத்து செல்லுங்கள், இளவயசிலேயே நாம் நல்லவற்றை நல்ல எண்ணங்களை விதைத்தால் தான் அன்பு, பாசம், இரக்கம், மனிதாபிமானம், மரியாதை, கீழ்படிதல், இதை எல்லாம் கற்றுக் கொள்வார்கள். தலைவரோட தலைப்பே பாடம் சொல்லும். நான் மார்தட்டி மண்டை கர்வத்தோட கூட சொல்வேன் எங்கள் தலைவர் மாதிரி தலைப்பு வைக்க உலக சினிமா சரித்திரத்தில யாருமே கிடையாது . தர்மம் தான் ஜெயிக்கும், உண்மைக்கு அழிவேயில்லை, நல்ல குணங்களே சிறந்த மனிதனாக்கும், நற்செயல்களே பண்புள்ளவனாக மாற்றும். தலைவர் திரையுலக ஔவையார் னு கூட சொல்லலாம். தயவுசெய்து கண்டநாதாரிப்பயலுக படத்துக்கு கூட்டிட்டு போகாதீங்க! சின்ன மச்சான், கிறுக்கு மச்சான் பாட்டெல்லாம் கேட்க சொல்லாதீங்க. தலைப்ப பாருங்க "உங்களை நல்லா போடணும் சார்" னு ஒரு படமாம் கேவலமா இல்லை.இப்ப படமெடுக்கும் எல்லாருக்கும் அடுத்தவனுடைய பசிக்கு சோறு வைக்கவும் தெரியாது, அவங்க படத்துக்கு பேரு வைக்கவும் தெரியாது. அதனால தான் பழைய படப் பெயர்களையே மீண்டும் திருப்பி சூட்டுகிறார்கள் என்னதான் இருந்தாலும் மீதியுள்ள உணவை பிரிஜ்க்குள்ள வச்சு பரிமாருகிற மாதிரி தான் , சொந்த புத்தியும் இல்லை, சுயபுத்தியும் இல்லை. எனவே நான்கு தலைவர் படம் வாங்கி வீடியோவில் போட்டு காட்டுங்கள் அதுவே போதும் ....gvn...
-
அனைத்து தலைவர் நெஞ்சங்களுக்கும் வணக்கங்கள் பல.
தலைவரின் நாளை நமதே படத்தில தலைவருக்கு அப்பா வாக சிறந்த குணசித்திர நடிகர் ராகவன் அவர்கள் நடித்து இருப்பார்.
ராகவன் அவர்கள் தலைவரை விட எட்டு வயது மூத்தவர் என்பதை கவனத்தில் கொள்ளவும்...ஜாலி ஆக சுற்றி திரியும் தலைவர் படத்தில் ஒரு நண்பர் அழைப்பின் பேரில் வெளிஊர் சென்று வேலைக்கு போகும் காட்சி படத்தில்.
புறப்படும் முன் மகன் எம்ஜிஆர் அப்பா வி.எஸ்.ராகவன் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி புறப்படுவது போல காட்சி அமைப்பு.
இயக்குனர் சேது மாதவன் அவர்களிடம் ராகவன் அவர்கள் அவர் என் காலில் விழுவது போல காட்சி வேண்டாம்...கொஞ்சம் முடிந்தால் மாற்றுங்கள் என்று சொல்ல...
தலைவர் செய்தி அறிந்து ஏன் அவர் விருப்பம் போல காட்சியை மாற்றுங்கள் என்று சொல்ல அதன் படி...
வெளிஊர் புறப்படும் தலைவர் தந்தை அவரிடம் சொல்லி விட்டு கை கூப்பி அவரை வணங்கி புறப்படுவது போல காட்சி மாற்ற பட..
அந்த காட்சியில் தலைவர் ராகவன் அவர்களை கும்பிடும் போது அவர் தந்தை ஆக வாழ்த்து சொல்லுவது போல காட்சிகள் எடுக்கப்படும் போது ஆசீர்வாதம் செய்வதற்கு பதில் தலைவர் கும்பிட அவரும் திருப்பி கும்பிட்டு விட..
6 முறை திருப்பி திருப்பி எடுத்தும் மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார் ராகவன் அவர்கள்.
ஒரு கட்டத்தில் தலைவர் விடுங்க அப்பிடியே காட்சி இருந்து விட்டு போகட்டும் என்று சொல்ல படத்தில் காட்சி அப்பிடியே வந்த புகைப்படம் பதிவில்.
இந்த காட்சி பற்றி ஐயா வி.எஸ்.ராகவன் சொல்லும் போது என்னை விட மூத்தவர் அவர் என்றாலும் என் மீது அவர் கொண்ட பாசத்தில் அவரை ஆசீர்வாதம் செய்வதை என் மனம் ஒப்பவில்லை.
எனக்கு அவர் செய்த பல உதவிகள் கண் முன் எப்போதும் நிற்கும்... அவர் முதல்வர் ஆகி ஒரு விழாவில் எனக்கு கேடயம் வழங்கி சிறப்பித்த போது அந்த மேடைக்கு நான் வந்த போது...
என் குடும்ப சூழ்நிலை காரணம் ஆக அன்று என் முகத்தில் சந்தோசம் இல்லை.
அவருக்கு என்றே விழாவுக்கு வந்தேன்.
எனக்கு கேடயம் வழங்கும் போது என் வாடிய முகத்தை கவனித்த அவர் அதை கொடுத்த பின்.
என் காதில் என்ன 7 டேக் அப்பா என்ன வருத்தம் என்று கேட்க நான் கவலை மறந்து சிரித்து விட்டேன் என்று பொன்மனம் பற்றி சொல்லி மகிழ்கிறார் அவர்.
மேடையில் கவலை தோய்ந்த முகத்துடன் தலைவர் கையால் பரிசு வாங்கும் அவரின் படமும் பதிவில் இணைக்க பட்டுள்ளது.
நடிப்புக்கு கூட நம் தங்க தலைவரை வாழ்த்தும் தகுதி உலகில் ஒரு சிலருக்கே உண்டு என்பதை இந்த நிகழ்வு எடுத்து காட்டி இருக்கும் என்று நம்பும் நம் குழுவினர் சார்பாக.
உங்களில் ஒருவன்.
நன்றி...தொடரும்.
வாழ்க தலைவர் புகழ்
அடுத்து அடுத்து சந்திப்போம்.......
-
இன்றைக்கு சில பல நடிகர்கள் புதுக்கட்சி துவங்கி அல்லது துவங்க பயணம் கொண்டு இருக்கும் நேரம்..
ஆனால் நெருப்பு ஆற்றை கடந்து வந்து வெற்றி கொடி ஏற்றிய ஒரே இயக்கம் இந்த உலகில் தலைவர் கண்ட இயக்கம் மட்டுமே.
10.10.1972 இல் குண்டு துளைக்க முடியாத நம் இதயக்கனியை வண்டு துளைத்து விட்டது என்று ஒரு மண்டு கண்டு பிடித்து அவரை புறந்தள்ள நினைத்த நாட்கள் அவை.
அப்போது தலைவர் தனிக்கட்சி கண்ட ஆறாம் நாள்...
விருத்தாசலம் நகரில் மாணவர்கள் தலைவருக்கு ஆதரவாக ஊர்வலம் போக தீயசக்தி உத்தரவில் காவல்துறை தடியடி நடத்தி பலர் காயம்.
இந்த நிகழ்வை பார்த்த தேனி உத்தமபாளையம் போடி z.k.m. உயர்நிலை பள்ளி மாணவர்கள் அன்று கௌரி மனோகர் என்ற மாணவர் தலைமையில் திலகர், முத்துவேல், போதுமணி ஆகியோர்
பெரியகுளம், தேனி, ஆண்டிபட்டி, மீனாட்சிபுரம் போன்ற பகுதிகளில் இருந்து மாணவர்களை திரட்டி மாபெரும் ஊர்வலம் நடந்தது தலைவருக்கு ஆதரவு தெரிவித்து.
எதிரே தனது ஜீப்பில் வந்த தீயசக்தி எம்.எல்.ஏ... சுருளிவேல் ஊர்வலத்தில் வந்த மாணவ செல்வங்களை பார்த்து தமிழ் அகராதியில் இல்லாத பொல்லாத வார்த்தைகள் கொண்டு நம் பொன்மன செம்மலையும் அதற்கு துணை நின்ற மாணவர்களையும் காவல்துறை முன்னிலையில் அவ்வளவு சிறப்பாக அவரின் தரத்துக்கு ஏற்றபடி பேசுகிறார்.
மாணவர்கள் கொந்தளித்து புது வேகத்துடன் புறப்பட்டு அவரை நோக்கி ஓட தன் சொந்த ஜீப்பை திருப்பி கொண்டு தன் சொந்த ஊர் சில்ல மரத்து பட்டியில் தஞ்சம் அடைகிறார்.
கொதித்து போன மாணவர் சமுதாயம் மூன்று நாட்களுக்குள் அந்த சட்டமன்ற உறுப்பினர் தன் வார்த்தைகளுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை என்றால் போராட்டம் தீவிரம் அடையும் என்று சொல்ல.
சுருளிவேல் பயந்து வீட்டுக்குள் சுருண்டு விட மூன்று நாட்கள் கழித்து 10000 பேர் கொண்ட மாபெரும் ஊர்வலம் மாணவர்கள் திரண்டு கௌரிமனோகர் தலைமையில் நடத்த..
காவல்துறையினர் நடத்திய கண்ணீர் புகை குண்டு வீச்சில் 242 பேர் நிலைமை மோசம் ஆகி மயக்கம் அடைய.
விளைவுகளின் விபரீதம் புரிந்த தலைவர் மாணவர் குழுவினருக்கு உதவிகள் செய்ய ஆணை இட... அவர்கள் சற்றே நலம் பெற்று வீடு திரும்பிய மறுநாள் முக்கிய மேலே குறிப்பிட்ட அனைவரையும் தன் வீட்டுக்கு அழைத்து இனி இப்படி நீங்கள் செய்யக்கூடாது.
உங்கள் எதிர்காலம் பாதிக்க பட்டு விட கூடாது என்று கண்டிப்புடன் சொல்லி அவர்கள் கையில் அந்த காலத்தில் அவர்கள் கண்டு இருக்க முடியாத பணத்தை கொடுக்க.
சொந்த ஊர் திரும்பிய அவர்கள் அந்த பணத்தை கொண்டு போடி நாயக்கன் ஊர் பகுதியில் முப்பது வீடுகளுக்கு மின்சார இணைப்புக்கு முன் பணம் கட்ட...
தலைவர் அடுத்த நாட்களில் முதல்வர் ஆக பொறுப்பை ஏற்ற பின் மாணவர் கௌரி மனோகர் அனுப்பிய வேண்டுகோள் கடிதத்தை படித்து முதல் முக்கியத்துவம் கொடுத்து.....
அவரின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி கொடுத்தார்...
பின்னாட்களில் அதே கௌரிமனோகர் தலைவரின் கொள்கைகளை இன்று வரை கடைபிடித்து வந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறார் அவர் நிலனவில்..
பணம் சம்பாதிக்க என் பக்கம் யாரும் வரவேண்டாம் என்று சிலர் பகிரங்கமாக அறிக்கை விடும் அளவுக்கு இன்றைக்கு பொது வாழ்வு சீர் கெட்டு கிடக்கும் நம் நாட்டில்....தலைவர் போலவே வாழ வேண்டி அதன் படி நடந்து கொண்டிருக்கும் நல்ல உள்ளங்களுக்கு.
இந்த பதிவு சமர்ப்பணம்....
Z.k.m.. உயர்நிலை பள்ளி மேல்நிலை பள்ளி ஆக தரம் உயர்த்த பட்ட நிகழ்வு, பதினெட்டாம் கால்வாய் திட்டத்தில் சோத்து பாறை அணை கட்டுதல் திட்டம், தாங்கள் முன்பணம் செலுத்திய 30 கிராமத்து வீடுகளுக்கு ஒளி விளக்கு ஏற்றியவை போன்ற நிகழ்வுகள் அந்த கௌரிமனோகர் கடிதத்தில் குறிப்பிட பட்டு இருந்தவை.
உலகத்தில் பல கட்சிகள் தோன்றி இருக்கலாம்... இன்னும் தோன்ற இருக்கலாம் ஆனால் தான் போட்டி இட்ட முதல் பொது தேர்தலில் தான் கண்ட மக்கள் இயக்கத்தை ஆட்சி கட்டிலில் அமர்த்திய ஒரே தலைவன்...
இந்த உலகில் நம்
எம்...ஜி... ஆர்...என்ற அந்த மந்திர சொல் நாயகன் மட்டுமே.
நன்றி...தொடரும்.
உங்களில் ஒருவன்..
நெல்லை மணி.
பதிவில் படத்தில் தலைவர் நினைவு இடத்தில் இன்று நடைபெற்ற பூ அலங்காரம்...நன்றி.
அடுத்தவர்களை குறை சொல்ல இல்ல இந்த பதிவு..
நம்மையும் நாமே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் மட்டும்.
தலைவர் நெஞ்சங்கள் எப்படி என்பதை உணர்த்தவே.............nm...
-
கொஞ்சம் ரிலாக்ஸ் 29
--------------------------------
இன்றையப் பதிவு முக்கியமானது மட்டுமல்ல,,சுவாரஸ்யமானதும் கூட.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் தமிழுக்கும் தமிழ்ப் பல்கலைக் கழகங்களுக்கும் அதிக வளர்ச்சி ஏற்பட்டது என்பது நமக்குத் தெரியும்!
அண்ணா,,,பாராதியார் ,,பெரியார்,,பாரதி தாசன்--இப்படி ஒருவரைக் கூட விட்டு வைக்காமல் அனைவர் பெயர்களிலும் பல்கலைக் கழகங்கள் துவங்கங்கப்பட்டதுடன்--
தஞ்சை தமிழ்க் கல்லூரி விருத்தி செய்யப்பட்டதுடன் தமிழ் ஆராய்ச்சி மன்றங்களும் நிறுவப்பட்டன!
எம்.ஜி.ஆர் மலையாளி. ஒரு நடிகன் என்றெல்லாம் அன்னாட்களில் ஏகடியம் செய்தோருக்கும்,,அவரது வம்சாவளியினருக்கும் மேற் குறிப்பிட்டவை சமர்ப்பணம்!!
எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல--
உலகத் தமிழ் நாடு மதுரையில் நடக்கிறது!
அரசவைக் கவிஞர் கண்ணதாசன் தலைமையிலும் புலமைப் பித்தன் தலைமையிலும் கவி அரங்கம் நடத்தப் பெற ஏற்பாடாகிறது!
விழாக் கமிட்டியின் ஏற்பாட்டாளர் அவ்வை நடராஜன்!
கண்ணதாசன்,,வாலியைத் தொடர்பு கொண்டு ஒரு உதவி கோருகிறார்--
அதாவது அவரது கவியரங்கத்தை வாலி துவக்கி வைக்கும்படியும்,,பின்னால் தாம் வந்து சேர்ந்து கொள்வதாகவும் கூறுகிறார்!
வாலி,,அவ்வை நடராஜனைத் தொடர்பு கொண்டு தம் கருத்தைத் தெரிவிக்கிறார்--
சீனியர் கண்ணதாசனின் தலைமையிலான கவியரங்கத்தை அவரது சீடனான நான் துவங்கி வைப்பது நன்றாக இருக்காது. தவிர அது மரியாதையாகவும் இல்லை. சின்னவரிடம் -எம்.ஜி.ஆரிடம் சொல்லி என் தலைமையில் ஒரு கவியரங்கத்தை ஏற்பாடு செய்து கொடுங்கள்!!
அவ்வை நடராஜன்,,தயங்கியபடியே இதனை எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்க--
எம்.ஜி.ஆரோ திகைக்கிறார்--
வாலி நல்லாப் பாட்டெழுதுவார்ன்னு தெரியும். அவருக்கு இதுமாதிரியான கவியரங்கத்தை நடத்துவது சிரமமாக இராதா?
அவ்வையார் அடக்கத்துடன் செவ் வையாரிடம் சொல்கிறார்--
இல்லேங்க வாலிக்கு அந்த அனுபவம் இருக்கு. சொல்லப்போனால் கம்பன் கழகத்தில் கண்ணதாசனுக்குப் பிறகு கவியரங்கத்துக்கு அனுமதிக்கப்பட்டவர் வாலி தான்!
எம்.ஜி.ஆர் உடனே சொல்கிறார்--
சரி! அப்ப மா நாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் வாலியின் தலைமையில் ஒரு கவிரங்கத்தை ஏற்பாடு செய்துடுங்க!!
ஆனால்??
மறு நாளே வாலிக்குப் போன் செய்து காய்ச்சுகிறார் எம்.ஜி.ஆர்--
இங்க நான் முதல்வரா நீங்க சி.எம் மான்னு தெரியலே? நீங்க சொல்லறதை நான் கேட்க வேண்டியிருக்கு??
இந்த இடத்தில் உன்னிப்பாக நோக்க வேண்டும்--
புலமைப் பித்தனைப் போல் வாலி கட்சிக்காரர் இல்லை. எம்.ஜி.ஆரோ நாட்டின் முதலமைச்சர்!
வாலியின் வேண்டுகோளை சிரித்தபடியே மறுத்திருக்கலாம்!
வாலியின் விருப்பத்தை நிறைவேற்றி விட்டு வாலியிடம் சீறுகிறார் என்றால்--
ஒரு குடும்பத் தலைவன் தன் பிள்ளையிடம் காட்டும் பாசம் கலந்த கோபத்தைப் போல் தானே--
நீ சுற்றுலா போவதற்கு அம்மா கிட்டே பணம் கொடுத்திருக்கேன் வாங்கிக்கோ. ஆனால் சும்மா இப்படி ஊர் சுத்தக் கூடாது--அப்பா!!
இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்---
தம் கவியரங்கத்தை வாலியை விட்டு துவங்க வைக்க இசைந்த கண்ணதாசனின் நம்பிக்கை சார்ந்த பெருந்தன்மை---
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பாமல்,,கண்ணதாசனுக்கு தம்மால் சிறுமை ஏற்படக் கூடாது என்ற விதத்திலான வாலியின் அடக்கம் சார்ந்த பெருந்தன்மை---
நாட்டின் முதல்வராயிருந்தும் வாலியின் கவியரங்கச் சிறப்பைக் கேள்வியுற்ற மாத்திரம் அவர் தலைமையில் கவியரங்கம் நடத்த உத்தரவிட்ட எம்.ஜி.ஆரின்--பெருந்தன்மை சார்ந்த பெருந்தன்மை!!
அன்று தமிழ் எட்டு திசைகளிலும் ஏகாந்தமாக மணம் பரப்பியது என்றால் ஏன் பரப்பாது???.........vt...