http://www.youtube.com/watch?v=1kh1SIBxgAo
Printable View
Theeya-Vela-Seiyanum-Kumaru-Audio-Launch
Kushboo & Chinna Kushboo
Attachment 2348
Kushboo Family(2 daughters & husband) with siddharth
Attachment 2349
http://tamil.webdunia.com/newsworld/...30506010_1.htm
இந்த லட்சுமியை ஏறி மிதிடா..நல்லா ஏறி மிதித்த பாலா, சீமான்
இயக்குனர் பாலா மீது இந்திய பணத்தை அவமதித்தாக கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் காவல்நிலையங்களில் இந்து மக்கள் கட்சி இளைஞர் அணியினர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த மாதம் 25ஆம் தேதி கோயம்புத்தூரில், ‘பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா அல்ல. பரதேசி பாலாவுக்கு பாராட்டு’ என்று நாம் தமிழர் இயக்கத்தினர் விழா ஏற்பாடு செய்திருந்தனர்.
அதில் கலந்து கொண்டு பாராட்டினை ஏற்றுக்கொண்ட டைரக்டர் பாலா, தான் பட வாய்ப்புக்காக ஆரம்ப காலத்தில் பட்ட கஷ்டங்களை மேடையில் விவரித்தார். அப்போது, சீமானும் அவரும் ஒரே அறையில் வறுமைச் சூழலில் தங்கியிருந்ததை சொல்லும்போது, பட வாய்ப்பு கிடைத்து பல லட்சம் ரூபாய் அட்வான்சாக வாங்கினாராம்.
அந்த பணத்தை தாங்கள் தங்கியிருந்த அறைக்குள், கீழே கொட்டி இருவரும் ஏறி மிதித்தார்களாம். ‘இந்த லட்சுமியைத்தானே நாம் தேடிக்கொண்டு இருந்தோம். நல்லா ஏறி மிதிடா’ என்று இருவரும் மிதித்த கதையை அவர் விரிவாக விவரித்தார்.
பாலாவுக்கு பணம் தேவைப்படும்போது, ‘எனக்கு 20 லட்சுமி தேவைப்படுகிறது அனுப்புடா’ என்றும், சீமானுக்கு தேவைப்படும்போது, ’10 லட்சுமி அனுப்பிடா’ என்றும் பேசிக்கொள்வார்களாம்.
இப்படி பாலா பேசியதைக் கண்டு பொங்கி எழுந்த இந்து மக்கள் கட்சி இளைஞர் அணியின் மாநில செயலாளர் குருமூர்த்தி கும்பகோணம் காவல் நிலையத்தில், ‘இந்திய பணத்தையும், இந்துக்களால் கடவுளாக வணங்கப்படும் லட்சுமியையும் அவமதித்திருக்கிறார் பாலா. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று புகார் கொடுத்திருக்கிறார்.
இதைத்தொடர்ந்து அதே கட்சியினர் திருவிடைமருதூர் காவல்நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களிலும் நாளை புகார் மனு அளிக்க இந்து மக்கள் கட்சி இளைஞர் அணியினர் தயாராகி வருகிறார்கள்.
INDIAN FILM INDUSTRY
'Dilwale Dulhania Le Jayenge' voted most favourite Indian film ever - Apun Ka Choice
Wolverine to come in Telugu and Tamil.
Telugu Trailer:
https://www.youtube.com/watch?v=SukW9V-_pZk
Tamil Trailer:
https://www.youtube.com/watch?v=VwuVmw4j7D4
any news about "Kutti puli ?"
Sana Khan
Salman Khan's leading lady Sana charged with attempted kidnap of girl, goes ... - Indian Express
@ bollywood
Aamir, Katrina's Dhoom 3 satellite rights sold for Rs. 75 crore? - Indian Express
தன் பெயரில் போலி பேஸ்புக்! கமிஷனரிடம் சாந்தனு புகார்
சக்கரக்கட்டி, சித்து பிளஸ் 2, அம்மாவின் கைப்பேசி போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சாந்தனு பாக்யராஜ். நடிகரும், இயக்குனருமான பாக்யராஜின் மகனான இவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் தனது பெயரில் ரியாஸ் என்பவர் போலியாக பேஸ்புக் ஒன்றை துவக்கி பல்வேறு மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகிறார். பேஸ்புக் மூலம் பெண்களிடம் ஆபாசமாக சேட்டிங் செய்வது, ஆபாசமாக செய்தி அனுப்புவது, இன்னும் சிலரிடம் பணம் வசூல் செய்வது என்று தனது பெயரை தவறாக பயன்படுத்தி வருவதாக அந்த புகாரில் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Sana Khan: I am not on the run - Hindustan Times
Anjali’s shocks Media in Balupu Audio function
The happenings in film industry are not just stunning but one will wonder if there are any ethics and consequences for such acts. Here comes the story of hot Telugu beauty Anjali and her dangerous Pinni who shot to headlines sometime back.
The entire episode of Anjali escaping from the clutches of her pinni Bharati Devi and accusing that her pinni is a dangerous woman is a known thing to everyone. Also Anjali lodged cases on her pinni and baabai, while her pinni Bharati Devi filed a missing complaint against Anjali and dragged her to court. Giving pause and punch to all such fiasco, Anjali appeared along with her pinni the other day during the audio launch of Balupu. It looked like all people including Police, Media and enthusiastic fans are just made fools by our Anjali and her pinni.
Critics are asking how come Anjali got united with her pinni despite those serious accusations. They say that Anjali’s aunt got some vital secrets of this hot beauty, at the same time Anjali made sure that all her earnings are transferred into her bank account and hence the truce.
http://tamil.webdunia.com/entertainm...30606044_1.htm
சிஎம் ஆசை - ஹீரோக்கள் மீது சீறிய கேயார்
இசை விழாவில் ஈயம் காய்ச்சி ஊற்றுவதை ஒரு கடமையாகவே வைத்திருக்கிறார்கள் சில சிறப்பு விருந்தினர்கள். கேயாரை அந்த லிஸ்டில் சேர்க்க முடியாது. அநியாயம் என்று தெரிந்தால் மட்டுமே சாட்டையை சொடுக்கும் சொற்ப நபர்களில் அவரும் ஒருவர்.
மாதவனும் மலர்விழியும் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடந்தது. விழாவில் பேசிய கேயார் முதல்வர் ஆசையில் திரியும் நடிகர்களை ஒரு பிடி பிடித்தார்.
படத்தில் நடித்திருக்கும் அஸ்வினின் நடிப்பை புகழ்ந்தபடி தொடங்கினார் பேச்சை. அஸ்வினுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. சினிமாவில் ஒரு இடத்துக்கு வந்ததும் கரன்சியை மட்டும் நினைக்காமல் கதைக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்றார். இதுவரை ஓகே. அதற்குப் பிறகுதான் சரவெடியை கொளுத்தினார்.
நாலு படம் ஓடினதும் சில நடிகர்கள் பழசை மறந்து முதல்வர் ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட நடிகர்கள் சினிமா விழாக்களுக்கு வந்தால் கோர்வையாக நாலு வார்த்தைக்கூட பேச தெரியவில்லை என ஆவேசப்பட்டார்.
முதல்வர் ஆசையில் இருக்கும் நடிகர் இப்போது ஒருவர்தான். விழாக்களில் ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவார். அவர் மீது கேயாருக்கு அப்படி என்ன கோபமோ?
dont knw where to post..bt very gud article..
http://tamil.webdunia.com/entertainm...30614027_1.htm
போதையில் கரையும் தமிழ் சினிமா
சமீபத்தில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கையில் ஒருவன் சொல்வான். மணி ஒன்பது அம்பதாச்சு. பத்து மணிக்கு கடை மூடிருவான்.
தியேட்டரில் ஒரே விசில் சத்தம், கைத்தட்டல். உயிரே போனாலும் பத்து மணிக்குள் டாஸ்மாக்கில் சரக்கு வாங்க வேண்டும் என்ற அவனின் சின்சியாரிட்டிக்கு ரசிகர்கள் செய்த மரியாதைதான் அந்த விசிலும், கைத்தட்டலும்.
அதிக ரசிகர்களை ஈர்க்க வேண்டும், கமர்ஷியலாக பல மடங்கு லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு படங்கள் எடுக்கப்படுகின்றன. அதிக சிரமமில்லாமல் தங்களின் நோக்கத்தை நிறைவு செய்யவே ஒவ்வொருவரும் விரும்புகிறார்கள். அந்தவகையில் எளிதாக ரசிகர்களை பரவசப்படுத்த இயக்குனர்கள் இப்போது அதிகம் நம்புவது டாஸ்மாக் காட்சிகளைதான். பிராந்தி பாட்டிலை காண்பித்தாலே திரையரங்குகள் ஆர்ப்பரிக்கின்றன.
இருபது வருடங்களுக்கு முன் குடி ஒரு மோசமான செயலாக நமது சமூகத்தில் பார்க்கப்பட்டது. அன்று திரைப்படங்களில் குடி என்பது ஒருவரின் குணத்தை வெளிப்படுத்தும் விஷயமாக கையாளப்பட்டது. அதாவது வில்லன்கள் மட்டுமே எப்போதும் மதுக்கோப்பைகளுடன் இருந்தார்கள். கதாநாயகன் தவறு செய்வதாக காட்சி வந்தால் குடி போதையில் அந்தத் தவறை செய்வதாக காட்டினார்கள். அதாவது போதைதான் அவனை தவறு செய்ய வைத்தது என்பதாக. நடைமுறை வாழ்க்கையிலும் இன்று போல் குடி இயல்பான ஒன்றாக ஆகியிருக்கவில்லை. குற்றவுணர்வுடனே மதுவிடுதிகளை அன்று நாடினர்.
கடந்த இருபது ஆண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் மதுவை ஒரு அத்தியாவசிய பண்டமாக ஆக்கிவிட்டார்கள். ஒரு தலைமுறையை குடிகாரர்களாக மாற்றிய பெருமை இரு திராவிட காட்சிகளுக்குமே உண்டு. சமூக அளவில் மது குறித்து இருந்த மனத்தடைகளையும், குற்றவுணர்வுகளையும் தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் டாஸ்மாக் கடைகள் இல்லாமலாக்கிவிட்டன. குடி இன்று ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிவிட்டது.
1983ல் மது விற்பனை 180 கோடியாக இருந்தது. இருபது வருடங்களில் அதாவது 2003ல் அது 3,600 கோடியாக உயர்ந்தது. 2013ல் 22,000 கோடிகள். உலகில் எந்தவொரு வியாபாரமும் இப்படியொரு வளர்ச்சியை கண்டதில்லை. தமிழகத்தைவிட ஒன்றரை மடங்கு ஜனத்தொகை கொண்ட உத்திரப்பிரதேசத்தில் மதுவினால் கிடைக்கும் வருவாய் 11,500 கோடிகள். தமிழகத்தில் அதுவே 22,000 கோடிகள். தமிழ்நாட்டின் குடிவெறிக்கு இதுவொரு சின்ன உதாரணம்.
குடியே கூடாது என்று சொல்லும் ஒழுக்கவாதியோ, மதுவை அறவே தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் காந்தியின் லட்சியவாதியோ கிடையாது நாம். அதேநேரம் இந்தப் பழக்கத்தின் அசுர வளர்ச்சி அச்சப்படுத்துகிறது.
குடி ஒரு பழக்கமாகிவிட்டது என்றோம். அதுதான் பிரச்சனையின் அடிப்படை. பழக்கம் என்பது நாம் சிந்தித்து நடைமுறைப்படுத்துவது இல்லை. அது நம்மையறியாமல் நம்மிடம் ஒட்டிக் கொள்வது. இருபது வருடங்களுக்கு முன் மெழுகுவர்த்தி ஊதி அணைத்து கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவது அரிது. ஆனால் இன்று அந்த சம்பிரதாயத்தை கடைபிடிக்காத குடும்பங்களே இல்லை. கேக், மெழுகுவர்த்தியுடன் தலையில் வைக்கும் குல்லா முதற்கொண்டு அதற்கான எக்ஸ்ட்ரா தளவாடங்கள் விற்பனை இன்று மிகப்பெரிய சந்தையாக உருவெடுத்திருக்கிறது. இன்று நாம் விரும்பாவிட்டாலும் அந்த சம்பிரதாயத்தை செய்ய வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பழக்கத்தினால் வரும் முக்கியப் பிரச்சனையே அதுதான். நாம் விரும்புகிறோமா இல்லையோ அதை நாம் செய்ய பழக்கப்படுத்தப்படுகிறோம்.
இன்று குடியை நாடும் பெரும்பாலான இளைஞர்கள் குடியை தேர்ந்தெடுத்தவர்கள் என்பதைவிட குடிக்கு பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதுதான் சரி. சென்ற தலைமுறையை ஓரளவு குடிப்பழக்கத்திலிருந்து தடுத்தது, சமூகம் குடி குறித்து உருவாக்கி வைத்திருந்த, குடி மோசமான செயல் என்ற மதிப்பீடும், அந்த மதிப்பீடு உருவாக்கிய குற்றவுணர்வும்தான். அதனை இல்லாமல் செய்ததில் கடந்த இருபதாண்டுகளாக நம்மை ஆண்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். சினிமாவுக்கும் அதில் கணிசமான பங்குண்டு. நிஜத்தைதானே சினிமாவில் காண்பிக்கிறார்கள் என்று சப்பைகட்டு கட்ட முடியாது. நிஜத்தை சினிமா பிரதிபலிக்கிறதா இல்லை சினிமாவைப் பார்த்து நிஜத்தை உருவாக்குகிறார்களா என்பது பதில் கிடைக்காத கேள்வி. ஆறு இரு கரைகளையும் இணைக்கிறதா இல்லை பிரிக்கிறதா என்பது போல. கரைகளை பிரிப்பதும் ஆறுதான், இணைப்பதும் ஆறுதான். குடி விஷயத்தில் யதார்த்தமும், சினிமாவும் ஒன்றையொன்று ஒத்திசைந்து தம்மை வலுப்படுத்திக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும்.
சென்ற தலைமுறை சினிமாவில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்கிற, கொலை செய்கிற வில்லன்கள்தான் மது அருந்தினார்கள். மது கெட்ட மனிதனின் அடையாளமாக இருந்தது (குடிப்பவர்கள்தான் மோசமானவர்கள் அல்லது மோசமானவர்கள்தான் குடிப்பார்கள் என்ற அந்தக்கால சினிமா பார்வையிலும் நமக்கு உடன்பாடில்லை). பருந்து பார்வையில் சொல்வதானால் ஒருவன் கெட்டவன் என்பதை காண்பிக்க அவன் கையில் மதுக்கோப்பையை தந்தார்கள். ஆனால் இன்று காட்சிகள் மாறிவிட்டன. படத்தின் ஆரம்பத்தில் கதாநாயகன் அறிமுகமாவதே டாஸ்மாக் கானா பாடலில்தான்.
படத்தில் வரும் இளைஞன் ஏதாவது சாதித்தால் டாஸ்மாக்... காதலில் வெற்றி பெற்றால் டாஸ்மாக்... தோல்வி அடைந்தால் டாஸ்மாக்... காமெடி என்றால் டாஸ்மாக்... கானா பாடல் என்றால் டாஸ்மாக்... விழுந்தாலும் எழுந்தாலும் டாஸ்மாக். இன்றைய இளைஞனின் தவிர்க்க முடியாத உறுப்பாக டாஸ்மாக்கை மாற்றிவிட்டது தமிழ் சினிமா.
சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் விளம்பரங்கள் எப்படி நம்மை கன்ஸ்யூமராக மாற்றுகிறது என்பது பற்றி அலசப்பட்டது. அதில் பேசிய ஒரு இளம்பெண், சாக்லெட்டை கண் மூடி சுவைப்பதை பெருமையாக குறிப்பிட்டார். விளம்பரத்தில் கண்களை மூடி சாக்லெட்டை சுவைக்கும் பெண்ணை அவர் இமிடேட் செய்கிறார் என்பதுகூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அந்த இளம்பெண்ணைப் போல இன்னதென்று அறியாமலே குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிற இளைஞர்கள்தான் இன்று அதிகம். சிந்தித்துப் பார்க்காமல் எதையும் சுவீகரித்துக் கொள்ளும் சமூகத்தை குடியிலிருந்து ஓரளவு தடுத்து நிறுத்துவது குடி குறித்த குற்றவுணர்வுதான். அந்த குற்றவுணர்வை நமது சினிமா இல்லாமலாக்கிவிட்டது. அதற்கு முக்கிய காரணம் குடியை ஒரு கொண்டாட்டமாக மட்டுமே இதுவரை தமிழ் சினிமா காட்டியிருக்கிறது. அதன் இன்னொரு பக்கத்தை காட்டியதில்லை. குடி குறித்த குற்றவுணர்வை இல்லாமலாக்கியதற்கான பரிசுதான் திரையரங்குகளில் டாஸ்மாக் காட்சிகளுக்கு கிடைக்கும் விசிலும் கைத்தட்டல்களும்.
தமிழ் சினிமாவுடன் ஒப்பிட்டால் வேறு எந்த மொழி திரைப்படமும் இப்படி குடியில் விழுந்து கிடக்கவில்லை. பெரும் குடிகாரர்கள் நிறைந்த கேரளாவிலும்கூட குடி சம்பந்தமான காட்சிகள் கதையோட்டத்தின் தேவையை முன்னிறுத்தி மட்டுமே வைக்கப்படுகின்றன. குடிக்காக காட்சிகள் அமைப்பது தமிழ் சினிமாவில் மட்டும்தான். ஒரு பள்ளி மாணவன் எவ்வித உறுத்தலும் இன்றி டாஸ்மாக்கில் மது அருந்துவதற்கான மனப்பக்குவத்தை தந்ததில் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்கு இருக்கிறது.
இருபத்தைந்தாயிரம் கோடி இலக்கு நிர்ணயித்து சாராயம் விற்கும் நாட்டில் குடி குறித்த குற்றவுணர்வை இனி எதிர்பார்ப்பதற்கில்லை. குடியை வைத்து கைத்தட்டல் வாங்குகிறோமே என்று ஏதாவது இயக்குனர்களுக்கு குற்றவுணர்வு ஏற்பட்டால்தான் உண்டு.
some truth in it...
the cinemas has made it look look cool nowadays...
@ Small Screen
செக்ஸ் டார்ச்சர் - டி.வி தயாரிப்பு நிர்வாகி மீது பெப்சி உமா புகார்!!தான் வேலை பார்த்து வந்த இடத்தில், தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக தயாரிப்பு நிர்வாகி மீது "பெப்சி" உமா கொடுத்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு டி.வி. நிகழ்ச்சியான "பெப்சி உங்கள் சாய்ஸ்" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் உமா. அப்போது முதல் "பெப்சி" உமா என்று அழைக்கப்பட்டவர், பின்னர் டி.வி. நிகழ்ச்சிகளை தவிர்த்து விட்டு ஒதுங்கியிருந்தார். தற்போது மீண்டும் சின்னத்திரையில் கால் பதித்துள்ளார். தற்போது ஒரு டி.வியில் "ஆல்பம்" என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் அந்த டி.வி.யின் தயாரிப்பு நிர்வாகியான சரவணராஜன் என்பவர் உமாவுக்கு அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் வேலையைவிட்டு நீக்கிவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து உமா, சென்னை கிண்டி போலீசிடம் புகார் கொடுத்தார். உமாவின் புகாரை ஏற்ற போலீசார், சரவணராஜனை கைது செய்து, சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர்
டி.ஆருக்கு இணையாக ஆட்டம்போட திணறிய முமைத்கான்
ஒருதலை ராகத்துக்கு இணையாக ஒருதலைக்காதல் என்றொரு படத்தை எடுத்துவிட்டு மீண்டும் என்னோட தில்லை காட்டுக்கிறேன் பார் என்று சொடக் போட்டார் டி.ராஜேந்தர். ஆனால் அந்த படம் 15 நாள் படப்பிடிப்போடு கிடப்பில் கிடக்கிறது. அதில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்த மோனல் கஜார் இப்போது முன்னணி நடிகையாகி விட்டார். இன்னொரு நடிகையோ திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். இந்த நிலையில், ஒருதலைக்காதலைப்பற்றி கப்சிப்பாகி விட்டார் டி.ஆர். ஆனால், தற்போது ஜெயிலில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் பவர்ஸ்டார் நடித்துள்ள ஆர்யா சூர்யா படத்தில் ஒரு குத்துப்பாட்டுக்கு ஆடுகிறார். இந்த பாடலை அவரே எழுதி இசையமைத்தும் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தபோது, அவருடன் நடனமாடிய முமைத்கான், டி.ஆரின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறிப்போனாராம். முதல் நாள் ஆட்டத்திலேயே அவரது முதுகெலும்பு டர்டர்ராகி விட்டதால், அடுத்து இரண்டு நாள் லீவு போட்டுவிட்டு ஹோட்டல் அறையில் படுத்துக்கொண்டாராம். அதையடுத்து இரண்டாவது நாளாக டி.ஆருடன் கோதாவில் குதித்த முமைத்கான் ஒருவழியாக ஆடி முடித்துவிட்டாராம். இதையடுத்து மும்பைக்கு கிளம்பிய அவர், இன்றைய இளவட்ட நடிகர்களையே ஒரு கை பார்த்துவிடும் நான், ஒரு மாஜி ஹீரோவுடன் ஆட முடியாமல் திணறி விட்டேன். அந்த அளவுக்கு இந்த வயசிலும் இளவட்டமாக இருக்கிறார் டி.ஆர்., என்று சொல்லிவிட்டு சென்றாராம்.
@ Bollywood
Salman Khan launches site dedicated to his court cases - Indian Express
Surya donates Rs 10 lakh for Uttarakhand relief fund
Even as the rescue operations are on in Uttarakhand to bring the survivors back home from the flood-hit region, actor Suriya has joined the list of generous actors who donated money for relief operations.
The Tamil star contributed a sum of Rs 10 lakh to the rehabilitation of flood victims.
It is known that more than 10,000 people were killed in the floods and thousands stuck in the marooned areas of Uttarakhand.
Shruti Haasan denies to call Gauthami as mom!
Shruti Haasan is the darling daughter of actors Sarika and Kamal Haasan. Her parents got separated and later Kamal have had a live-in relationship with co-actress Gauthami. When asked about the divorce of her parents by a regional newspaper, Shruti said, “It’s their personal matter to part their ways. I’ve no concerned with that matter and hence I don’t want to talk about it. For me, happiness of their parents matter most. Since, they decided to part the ways happily, I’ve no issues at all.”
On being asked about to whom she is close among her parents, she said, “I’m equally attached to both dad (Kamal) and mom (Sarika). But I’m very close to my mom whom I’ve had a special bond and equation. We’re more than friends.” When quizzed about whether she calls Gauthami as her mom, pat came reply from Shruti. “Why do I call so. I’ve a mom and she is Sarika. Since, my dad finds happy space with her (Gauthami), I’ve no issues.”
அம்பிகா வீட்டில் இருந்து இன்னொரு வாரிசு!
அம்பிகா, ராதா தமிழ் சினிமாவில் ஒரு கட்டத்தில் கொடி கட்டிப் பறந்தனர். அதை அடுத்து ராதாவின் வாரிசுகள் கார்த்திகா, துளசி ஆகியோர் தமிழ் சினிமாவில் வந்தனர். தொடர்ந்து இரண்டு பேருமே பிஸியாக இருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து அம்பிகா, ராதா இவர்களுக்கு இடையில் மல்லிகா என்று ஒரு சகோதரி இருக்கிறார். அவர் திரைக்கு பின்னால், தயாரிப்பாளராக இருந்து வருகிறார். இவரது மகன் விஷாக் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்த, அம்பிகா தீவிரமாக பட வேலைகளில் இறங்கி உள்ளார். அதற்காக அம்பிகா கதை கேட்பதில் இறங்கி உள்ளார்.
MUST READ... :rotfl: :rotfl:
http://tamil.webdunia.com/entertainm...30704017_1.htm
தமிழ் சினிமாவின் டாப் 10 'கெட்ட' வார்த்தைகள்
http://tamil.webdunia.com/entertainm...30709012_1.htm
தமிழ் சினிமாவின் டாப் 10 கெட்ட வார்த்தைகள் - பகுதி 2
Lyricist Vaali put on ventilator
http://www.thehindu.com/features/cin...?homepage=true
http://tamil.webdunia.com/entertainm...30806004_1.htm
புரட்சி நம்பர் ஆயிரத்து ரெண்டு
கோடம்பாக்கத்தில் புரட்சியார்களின் எண்ணிக்கை ஆயிரத்து இரண்டாக உயர்ந்திருக்கிறது.:lol:
இதுவரை சுப்ரீமாக அறியப்பட்ட ஸ்டார், தனது அரசியல் முகத்தை மனதில் வைத்து, புரட்சி திலகம் என்ற புதிய நாமகரணத்தை தனக்குத்தானே சூட்டியிருக்கிறார்.
புரட்சி தலைவர், நடிகர் திலகம் இரண்டின் கலவைதான் இந்த புரட்சி திலகம். அரசியலில் முன்னவர், நடிப்பில் பின்னவர். என்னே காம்பினேஷன். :rotfl:
(ஆனா அரசியலில் பின்னவராக அல்லவா நம்மவர் இருக்கிறார்?) :rotfl:
ஜெய லலிதா விஜய்யை சந்தித்தபின் தலைவா வெளியானால் இத்தனை நாட்கள் இந்த படத்தை முடக்கியது முதல்வர் தான் என்பது போல ஒரு தோற்றம் வரும். எனவே சந்திப்பை தவிர்ப்பதென முதல்வர் முடிவெடுத்திருப்பதாக தகவல்..
ஆனால் தன்னை சந்திக்காமலே படத்தை வெளியிட அனுமதிக்க அவர் அதிகாரிகளிடம் சொல்லி விட்டார்; தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள் இதற்கு மேல் எப்படி வெளியிடப் போகிறார்கள் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்பது தான் இப்போதைக்கு தலைவா சம்பந்தமான லேட்டஸ்ட் தகவல்... இது உண்மையா இல்லை வதந்தியா என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும் ...
Sreedhar Pillai @sri50
Will #MadrasCafe b banned in Tamil Nadu? Y'day there was special screening Tamil dubbed version 4 Tamil nationalist parties led by Seeman
Seeman says: " It is nauseatingly anti-Tamil. The aim is to portray LTTE chief Prabhakaran in bad light. We won't accept the film
Will it b banned in TN ? Prabhakaran is referred to as Bhaskaran! Rajiv Gandhi as "young former PM", played by a look alike!
http://news.vikatan.com/article.php?...news&aid=18459
dont know where is this going - konjam overa thaan poguthu
Prabhu Dheva's wax statue now at Lonavala Wax Museum - Desimartini
பவர் ஸ்டாரிடம் உண்மையிலேயே ஏதேனும் 'பவர்’ இருக்கிறதோ! மோசடி வழக்கு காரணமாக இந்தியாவின் கெடுபிடி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர், அவரது புதிய படம் வெளியாகும் வாரம் ரிலீஸ் ஆகியிருக்கிறார். 'புழல் டு திகார்’ ட்ரிப் முடித்து வந்த சோர்வு காட்டாமல், ஒரு கோட்டிங் அதிக பவுடர் பூச்சுடன் உற்சாகமாக வந்து நிற்கிறார்.
''ஜெயில்ல இருந்த மாதிரியே தெரியலையே... செம ஃப்ரெஷா இருக்கீங்க?''
''அதை ஜெயில்னு சொல்ல மாட்டேன்; அது எனக்கு ஒரு ஆசிரமம். நான் பாவம் சார்... அப்பாவி. சில துரோகிகளால் பழிவாங்கப்பட்டேன். யாரையும் ஏமாத்தணும்னு திட்டம் போட்டு நான் செயல்படலை. வம்படியா ஒரு பொருளை உங்களை ஏமாத்தி வாங்கிட்டு தலைமறைவானாத்தானே என்னை 'ஃப்ராடு’னு சொல்ல முடியும். ஆனா, நீங்களா வந்து வற்புறுத்தி பணத்தைக் கொடுத்துட்டு என்னை ஃப்ராடுனு சொன்னா எப்படி? ஒரு வேலை நடக்கணும்னு பணம் கொடுக்கிறாங்க. நான் அதை இன்னொருத்தர்கிட்ட கொடுத்துதானே காரியம் சாதிக்க முடியும்? என்னை அவங்க ஏமாத்திட்டா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? எல்லாரையுமே ஈஸியா நம்பிடுவேன். அதான் என் பலமும் பலவீனமும்!
சினிமாவுல அறிமுகமாகணும்னு மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் வரை இழந்தவன் நான். அந்த இயக்குநர்கள் பேரெல்லாம் சொல்ல விரும்பலை. உண்மையிலேயே அதிகம் ஏமாந்தது நான்தான். என்னை ஏமாத்தினவங்களை, கடவுள் பார்த்துப்பார்!''
http://cdnw.vikatan.com/av/2013/09/z...mages/p84b.jpg
''ஆனா, உங்க சினிமாவுலக நண்பர்களே 'நீங்க ஃப்ராடு’ங்கிற ரீதியில செய்தி பரப்பினாங்களே!''
''சொன்னவங்க யாருனு பாருங்க. அவங்கதான் பெரிய கிரிமினலா இருப்பாங்க. நல்லவங்க வார்த்தைக்குத்தான் நாம கவலைப்படணும். என்கூட எப்பவும் சுத்திட்டே இருக்கும் பத்து பேர்கூட எனக்கு எதிரியா ஆகிட்டாங்க. என்னை அழிக்கணும்னு கூடவே இருந்து வேலை பார்த்தாங்க. ஆனா, அவங்க எண்ணம் நிறைவேறலை... நிறைவேறாது. நான் வெளில வந்தது நிஜமா காட்ஸ் மிராக்கிள்!''
''இந்தச் சிறைவாசத்தால் நீங்க இழந்தது என்ன?''
''என் லத்திகா மருத்துவமனை. எட்டு கோடி முதலீட்டில் நான் கட்டின ஆஸ்பத்திரி அது. நான் கைதானதும் கொள்ளையடிக்கிற மாதிரி லாரி வெச்சு என் ஆஸ்பத்திரி பொருட்களை எல்லாம் சிலர் தூக்கிட்டுப் போயிட்டாங்க. யார் யார் எடுத்தாங்கனு எனக்குத் தெரியும். அவங்க மேல நடவடிக்கை எடுப்பேன். இந்த எல்லாப் பிரச்னைக்கும் ஒரு லேடிதான் காரணம். சீக்கிரமே அதற்கான ஆதாரங்களை கொடுப்பேன்!''
''ஆசிரமத்து (ஜெயில்) வாழ்க்கை எப்படி இருந்துச்சு?''
''நான் எப்பவுமே சாப்பாடு, வசதிகளை பெருசா எடுத்துக்க மாட்டேன். மனக் கவலையில்தான் கொஞ்சம் வெயிட் குறைஞ்சிருச்சு. நாலு மாசம் ரெஸ்ட் கிடைச்சதுனு நினைச்சுக்கிட்டேன். உள்ளே போனவன்லாம் அக்யூஸ்டும் இல்லை; வெளியில இருக்கிறவன்லாம் யோக்கியனும் இல்லை. குடும்பத்தைப் பிரிஞ்சு இருந்ததுதான் கஷ்டமா இருந்துச்சு. இதுவே இன்னொருத்தனா இருந்தா, இந்நேரம் தற்கொலை பண்ணிட்டு செத்திருப்பான். ஆனா, நான் சமாளிச்சுட்டேன். பாசம்தான் பெரிசுனு நினைச்சேன். பணம்தான் பெரிசுனு உணரவெச்சுட்டாங்க!''
''போலீஸ்ல அடிச்சாங்களா?''
''இல்லை. தமிழ்நாட்டு போலீஸ் தங்கமானவங்க. நிறைய அறிவுரை சொன்னாங்க. ஒரு வாரத்துக்கு அப்புறம் எல்லாரும் எனக்கு ஃபேன்ஸ் ஆகிட்டாங்க!''
''எப்படி, சரியா உங்க படம் ரிலீஸ் சமயம் நீங்களும் ரிலீஸ் ஆனீங்க?''
''90 நாள் ஆகிடுச்சு. பெயில் கிடைச்சுடுச்சு. சட்டம்கூட நம்ம பக்கம்தான்... பார்த்தீங்களா!''
''சிறைல இருந்தப்போ சினிமா நண்பர்கள் யாரெல்லாம் விசாரிச்சாங்க, சந்திச்சாங்க?''
''பிரசாந்த் மட்டும் விசாரிச்சார். மத்தபடி யாருமே என்னாச்சுனுகூட கேட்கலை. யார் யாரையோ 'தம்பி’னு சொன்னேன். அவங்கள்லாம் எட்டிக்கூட பார்க்கலை. அவங்க எல்லா ருக்கும் ஒண்ணே ஒண்ணு சொல்லிக்கிறேன். ஒருத்தன் நல்லா இருக்கும்போது, பக்கத்துல இருக்கிறது முக்கியமில்லை. அவனுக்குப் பிரச்னை வரும்போதும் பக்கபலமா இருக்கணும். அதுதான் உண்மையான நட்பு. இந்த மாசம் மட்டும் நான் நடிச்ச மூணு படங்கள் வருது. இன்னும் நிறையப் படங்கள் புக் ஆகுது. 'ரசிகர்கள் என்னை வெறுக்கணும்... நான் சினிமாவுலயே இருக்கக் கூடாது’னு நினைச்சவங்க எண்ணத்தை அடிச்சு நொறுக்குவான் இந்த பவர்!''
''ஆனா, நீங்க நிஜத்துலயும் நடிக்கிறீங்கனு சொல்றாங்களே!''
''அட... எல்லாருமே வாழ்க்கையில நடிச்சுட்டுத்தானே இருக்கோம் பிரதர்!''
In Tollywood
History repeats this September 9th
Finally, the date has arrived for a memorable moment in the history of Telugu cinema. That’s the three generations of actors from the same family sharing the screen. It has happened only once in Indian cinema until now and the feat was achieved by Kapoor khandhan – Prithviraj Kapoor, Raj Kapoor and Randhir Kapoor with the movie ‘Kal Aaj Aur Kal’ which released in 1971.
History is repeating after 42 years with Akkineni family making the unbelievable happen – ANR, Nagarjuna and Naga Chaitanya coming together for Manam which is being directed by Vikram (Ishq fame). The trio will start shooting their combination scenes from September 9th.
Speaking about the Akkineni multistarrer, ANR says finding a script for such a combination is an herculean task but Director Vikram managed to come up with a highly entertaining subject. He,however, turns down the request of his fans to appear in a duet keeping his age in mind.
Nagarjuna reveals that the script has been filled with so many light-hearted moments between the trio to make it a laugh riot. He went on to say Chaitu will be very nervous with the idea of sharing screen space with him and his grandfather for the first time.
Naga Chaitanya admits being excited and nervous at the same time. He, however, is confident of getting over that jitters after the first few days of their combination scenes.