Thanks Vicky.
As Mr.Murali mentioned it was indeed dubbing. Unbelievable :bow:
Interesting series Mr.MuraLi. Thank You !
Printable View
Thanks Vicky.
As Mr.Murali mentioned it was indeed dubbing. Unbelievable :bow:
Interesting series Mr.MuraLi. Thank You !
:D 8-)Quote:
Originally Posted by Murali Srinivas
சிகரம் தொட்ட நடிகர் திலகம் - முறியடிக்க முடியாத சாதனைகள்
1972 -ம் வருட தொடர்ச்சி
4. தர்மம் எங்கே - 15.07.1972
இந்த வருடத்தில் வெளியாகி 100 நாட்கள் என்ற வெற்றி கோட்டை தொட முடியாமல் போன ஒரே படம்.
மதுரை -ஸ்ரீதேவியில் முதல் 16 நாட்களில் நடைபெற்ற 55 காட்சிகளில் 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
மதுரை -ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 50
5. தவப்புதல்வன் - 26.08.1972
இந்த வருடத்தின் நான்காவது 100 நாட்கள் படம்.
100 நாட்கள் ஓடிய நடிகர் திலகத்தின் கருப்பு வெள்ளை சகாப்தத்தின் கடைசி அத்யாயம் [இந்த படத்திற்கு பிறகு அவர் மூன்று கருப்பு வெள்ளை படங்கள் மட்டுமே நடித்தார். அதில் ஒன்று கௌரவ தோற்றம்].
ஆங்கில படங்களே திரையிடப்பட்ட சென்னை பைலட் திரையரங்கில் வெளியாகி 100 நாட்கள் ஓடிய தமிழ் படம் - தவப்புதல்வன்.
இதன் பின்னணியை பார்த்தால் பட்டிக்காடா பட்டணமா ஓடிக்கொண்டிருக்கும் போதே அதை தாண்டி, வசந்த மாளிகையின் வெற்றி வீச்சையும் சமாளித்து, தமிழகத்தில் அன்று நிலவிய அசாதாரண சூழ்நிலையையும் மீறி, தீபாவளியையும் தாண்டி 100 நாட்கள் ஓடியது என்றால் நடிகர் திலகத்தின் Boxoffice Power என்ன என்பது புரியும்.
மதுரை - சிந்தாமணியில் ஓடிய நாட்கள் - 70
6. வசந்த மாளிகை - 29.09.1972
என்றென்றும் புகழ் மங்கா திரை ஓவியம். ரசிகர்களின் நெஞ்சங்களில் காவியம்.
இந்த வருடத்தின் ஐந்தாவது 100 நாட்கள் படம்
[html:5026924772]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/vm100days.jpg">
[/html:5026924772]
இந்த வருடத்தின் இரண்டாவது வெள்ளி விழா படம்
இந்த காலண்டர் வருடத்தின் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்து ஓடிய மூன்றாவது படம்.
ராஜா
பட்டிக்காடா பட்டணமா
வசந்த மாளிகை
மதுரை - நியூ சினிமாவில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 113.
[அதாவது முதல் 33 நாட்களில் நடைபெற்ற அனைத்து காட்சிகளும் ஹவுஸ் புல்].
மதுரை நியூ சினிமாவில் ஓடிய நாட்கள் - 200
மதுரை நியூ சினிமாவில் அதிக நாட்கள் ஓடிய படம் வசந்த மாளிகை.
200 நாட்களின் மொத்த வசூல் - Rs 5,30,536.15 p
வரி நீக்கி நிகர வசூல் - Rs 2,92,183.53 p
விநியோகஸ்தர் பங்கு - Rs 1,59,098.63 p
மதுரை - நியூ சினிமாவில் ஐந்து லட்சத்திற்கு மேல் வசூல் பெற்ற முதல் படம் வசந்த மாளிகை.
மதுரை நியூ சினிமாவில் அதற்கு முன் அதிக வசூல் பெற்ற படத்தை விட குறைவான நாட்களில் அந்த வசூலை தாண்டிய படம் - வசந்த மாளிகை.
மதுரையில் ஒரே காலண்டர் வருடத்தில் ஒரே நடிகரின் இரண்டு படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய சாதனையை இரண்டாவது முறையாக நடத்தி காட்டினார் நடிகர் திலகம்.
வருடம் - 1959
கட்டபொம்மன் - நியூ சினிமா
பாகப்பிரிவினை - சிந்தாமணி
வருடம் - 1972
பட்டிக்காடா பட்டணமா - சென்ட்ரல்
வசந்த மாளிகை - நியூ சினிமா
மற்றவர்கள் மதுரையில் ஒரு முறை போலும் செய்ய முடியாத இந்த சாதனையை மூன்று முறை செய்தவர் நடிகர் திலகம் மட்டுமே. [மூன்றாவது முறையின் சாதனை அது நடைபெற்ற ஆண்டு வரும் போது வெளியாகும்]
மதுரை தவிர வெள்ளி விழா கொண்டாடிய இடம் - சென்னை
அரங்கு - சாந்தி
ஓடிய நாட்கள் - 176
[இதுவும் கூட நடிகர் திலகத்தின் அடுத்த படமான பாரத விலாஸ் திரையிடப்படுவதற்காக மாற்றப்பட்டது].
மதுரையில் 200 நாட்கள் ஓடிய இந்த படம் ஷிப்டிங்கில் 250 நாட்களை கடந்தது.
இது வெள்ளி விழாவை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் போது[1973 பிப்-மார்ச் மாதங்கள்] தமிழகத்தில் 100% கடுமையான மின் வெட்டு [இன்றைய இதே அரசு தான் அன்றும்]. திரையரங்குகள் முழுக்க முழுக்க ஜெனரேட்டரை வைத்து ஓட்ட வேண்டிய சூழல். அரங்குகள் இதன் காரணமாக காட்சிகளை குறைக்க வேண்டிய நிலை. அப்படி இருந்தும் அதையும் மீறி இமலாய வெற்றி பெற்ற படம் - வசந்த மாளிகை.
7. நீதி - 07.12.1972
இந்த வருடத்தின் கடைசியாக வெளியான படம்
இந்த வருடத்தின் ஆறாவது 100 நாட்கள் படம்.
அதே நாயகன் -நாயகி - தயாரிப்பாளர் -இயக்குனர் - அதே யூனிட் என்று ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே 100 நாட்கள் ஓடிய சாதனையை புரிந்ததும் நடிகர் திலகம் தான்.
ராஜா
நீதி
100 நாட்கள் ஓடிய இடங்கள்
சேலம்
சென்னை - தேவி பாரடைஸ் [99 நாட்கள்]
ஒரே வருடத்தில் மீண்டும் தொடர்ந்து மூன்று படங்கள் 100 நாட்களை கடந்து ஒரு புதிய சாதனையை ஏற்படுத்தியது.
தவப்புதல்வன்
வசந்த மாளிகை
நீதி
இந்த பொன் வருடத்தின் (1972) மேலும் சில சாதனைகளை நாளை பார்ப்போம்.
அன்புடன்
சிங்கம்ல :thumbsup:Quote:
Originally Posted by Murali Srinivas
:2thumbsup: was it before Deepavali ?? Y'day also I was watching it :DQuote:
Originally Posted by Murali Srinivas
காத்திருக்கிறோம்Quote:
Originally Posted by Murali Srinivas
Its a treat to watch sivaji as rich,suave,egoistic,charismatic man.
he has acted quite a lot of movies like this...they are telecasting par magale par now.
The core theme of this film is about an egoistic person's ambiguity to find out his heir. You could'nt imagine this in today's well advanced technological world.Quote:
Originally Posted by Vivasaayi
Oru DNA test panna mudinjipochu :)
yep!Quote:
Originally Posted by rangan_08
the way he carries himself as a charismatic rich man,with cigarette in his hand and the way he uses coat to take the cash from inner pockets etc...so stylish.
This would have solved many, many old films piratchanai's. Imagine, no more revenge flicks ala the 70s/80s, no reuinion after 25 years plot, etc. DNA finding came and ruined the fun :)Quote:
Originally Posted by rangan_08
:2thumbsup: adichikka mudiyadhunnen.....Quote:
Originally Posted by Vivasaayi
டியர் முரளி,
'குலமா குணமா’ 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள்:
சென்னை - பிளாசா
திருச்சி - பிரபாத்
மதுரை - தேவி
சேலம் - ஜெயா
'சவாலே சமாளி' 100 நாட்களுக்கு மேல் ஓடிய திரையரங்குகள்:
சென்னை - சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி
திருச்சி - பிரபாத்
மதுரை - தேவி
சேலம் - ஜெயா
கும்பகோணம் – நூர் மகால் (பிற்பாடு 'செல்வம் தியேட்டர்' என்று பெயர்மாற்றப்பட்டது)
திருச்சி, மதுரை, சேலம் மூன்று நகரங்களிலும் 'குலமா குணமா' 100 நாட்களைக்கடந்தபின் அதே தியேட்ட்ர்களில் 'சவாலே சமாளி' திரையிடப்பட்டது.
டியர் முரளி,
முன்னொருமுறை மதுரை 'தேவி'யில் நடிகர்திலகத்தின் படங்கள் தொடர்ச்சியாக அதிக நாட்கள் ஓடியதாக எழுதியிருந்தீர்கள். சென்னை சாந்தியிலும் 1972,73,74 ஆண்டுகளில் தொடர்ச்சியாக 641 நாட்கள் ஓடியிருக்கிறது.
பட்டிக்காடா பட்டணமா - 06.05.1972 முதல் 28.09.1972 வரை = 146 நாட்கள்
வசந்த மாளிகை - 29.09.1972 முதல் 23.03.1973 வரை = 176 நாட்கள்
பாரதவிலாஸ் - 24.03.1973 முதல் 14.07.1973 வரை= 113 நாட்கள்
எங்கள் தங்க ராஜா - 15.07.1973 முதல் 24.10.1973 வரை = 102 நாட்கள்
கௌரவம் - 25.10.1973 முதல் 06.02.1974 வரை = 105 நாட்கள்
ஆக 1972ல் 239 நாட்கள், 1973 முழுக்க 365 நாட்கள், 1974ல் 37 நாட்கள், மொத்தம் 641 நாட்கள் சென்னை சாந்தியில் தொடர்ந்து நடிகர்திலகத்தின் படமே ஓடியுள்ளது (அனைத்து நாட்களும் தினசரி 3 காட்சிகள் வீதம் தொடர்ந்து 1923 காட்சிகள்).
(பின்னர் 114 நாட்கள் நடிகர்திலகத்தின் படம் சென்னை சாந்தியில் திரையிடப்படவில்லை).
தங்கப்பதக்கம் 01.06.1974-ல் திரையிடப்பட்டு 28.11.1974 வரை 181 நாட்கள் ஓடியது.
1974-ல் சாந்தியில் வெளியான நடிகர்திலகத்தின் ஒரே படம் 'தங்கப்பதக்கம்' மட்டுமே.
இதையடுத்து 11.04.1975 அன்று 'அவன்தான் மனிதன்' சாந்தியில் ரிலீஸானது.
அதே ஆண்டுகளில் மற்ற தியேட்டர்களில் வெளியான படங்கள் (சென்னை மவுண்ட் ரோடு ஏரியா நிலவரம் மாத்திரம்):
ராஜா (தேவி பாரடைஸ் 106 நாட்கள்),
ஞான ஒளி (பிளாசா 113 நாட்கள்),
தர்மம் எங்கே (ஓடியன் 49 நாட்கள்),
தவப்புதல்வன் (பைலட் 112 நாட்கள்),
நீதி (தேவி பாரடைஸ் 99 நாட்கள்),
ராஜ ராஜ சோழன் (ஆனந்த் 103 நாட்கள்),
பொன்னூஞ்சல் (பிளாசா 63 நாட்கள்),
ராஜபார்ட் ரங்கதுரை (பைலட் 102 நாட்கள்),
சிவகாமியின் செல்வன் (தேவி பாரடைஸ் 72 நாட்கள்).
:lol:Quote:
Originally Posted by groucho070
saradha mam, thanks for the Chennai theatre's statistics. Amazing.
A nostalgia about Dharmam Engey. The failure of the film was inevitable. But the hype this film raised among the Sivaji fans is till date not broken by any other film. At the Odeon Theatre, when the reservation counter was opened for the first day a week before the release, booking for 36 shows (for 12 days @ 3 shows) were fully made and tickets sold out and for about 21 days evening shows were full. Before the film was released it reached one month evening shows (30 shows), i.e. in other words on the day of release, the reservation chart showed 36 shows full and 30 evening shows full. The queue for the reservation on the first day of advance booking went till the bisecting lane (pycrofts lane) from the Odeon theatre counter and again took a U shape and came again to the theatre entrance. You can imagine what a command NT had on the fans.Quote:
Originally Posted by rangan_08
Raghavendran
Raghavendra sir, as I've said many times, those were Golden days. You will never get that excitement and fun in today's internet age.
டியர் சாரதா,
அனைத்து தகவல்களுக்கும் நன்றி. சாந்தியில் மிக அதிகமான நாட்கள் ஓடினாலும் கூட முதலில் இந்த சாதனையை செய்தது எங்கள் மதுரை தான். "முதல் மரியாதை" எங்கள் ஊர் ரசிகர்களுக்கு தான். என்ன சரிதானே?
அன்புடன்
டியர் முரளி......Quote:
Originally Posted by Murali Srinivas
அது உண்மைதானே....
'ராமன் எத்தனை ராமனடி', 'என் மகன்', 'உத்தமன்' போன்ற படங்களை 100 நாட்கள் படங்களாக ஆக்கியதன் மூலமும், பல படங்களை வெள்ளிவிழாப்படங்களாக ஆக்கியதன் மூலமும் 'மதுரை நடிகர்திலகத்தின் கோட்டை' என்று நான் எப்போதுமே புகழாரம் சூட்டியதுண்டு. அதே சமயம் சென்னை சாதனைகளும் போற்றப்பட வேண்டியவைதானே.
டியர் ராகவேந்தர்...
நடிகர்திலகம் இணையதளத்தில், செய்தித்தாள் விளம்பரங்களின (Newspaper Cuttings) அணிவகுப்பு பிரமாதம். அதிலும் பல பிரிவுகளாக (50 நாட்கள், 100 நாட்கள், வெள்ளிவிழாக்கள், படம் வெளியிட்ட அன்றைய விளம்பரங்கள் என) அனைத்துமே அருமை.
பார்ப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் (உங்கள் அனுமதியின்றி) அவற்றை சேமித்தும் வருகிறோம்.
உங்கள் அபார உழைப்புக்கு (எவ்வளவு சிரமத்துடன் இவற்றை சேகரிக்கிறீர்கள் என்பதை உணர முடிகிறது) நடிகர்திலகத்தின் பக்த கோடிகளின் கோடான கோடி நன்றிகள்.
புதிது புதிதாக என்ன வெல்லாம் இணைத்துள்ளீர்கள் என்பதை அடிக்கடி சென்று 'செக்' பண்ணுகிறோம். நமது நீண்ட நாள் கனவாயிற்றே...
வாழ்க உங்கள் தொண்டு...
சகோதரி சாரதா அவர்களுக்கு,Quote:
Originally Posted by saradhaa_sn
தங்களுடைய ம்னம் திறந்த பாராட்டுக்கள் என்னுடைய பொறுப்புணர்வினை மேலும் அதிகரிக்கின்றன. நன்றிகள் மிகப்பல. தங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும் ஆதரவும் தான் நம் இணைய தளத்திற்கு மிகப்பெரிய பலம். இது நம்மனைவருடைய இணைய தளம். இதில் தகவல்கள் தரப்படும் நோக்கமே இது ஒவ்வொரு ரசிகருக்கும் பயன்பட வேண்டும் என்பதுதான். ஆகையால் இதில் என் அனுமதி என்ற கேள்விக்கே இடமில்லை. சொல்லப்போனால் தாங்கள் சேமித்து வைப்பதன் மூலம் என் பணியை நீங்கள் தொடருகின்றீர்கள் என்ற தைரியம் எனக்கு மேலும் ஆவலையும் உத்வேகத்தையும் தருகின்றது. அதற்காக நான் தான் உஙளுக்கு என் நன்றியினைக் கூற வேண்டும். மேலும் சிலகிடைத்தற்கரிய பழைய பாட்டுப்புத்தகங்களின் முன் அட்டைகளின் பிம்பங்களும் தற்பொழுது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அடுத்த மிகப்பெரிய முயற்சியாக, நடிகர் திலகத்தின் அனைத்துப் படஙளின் பாடல்களையும் தொகுத்து இணைக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிரது. இறைவன் அருளாலும் தங்களைப் போன்ற எண்ணற்ற ரசிகர்களின் நல் வாழ்துக்களாலும் அது ஈடேரும் என நம்புகிறேன்.
நன்றிகளுடன்,
ராகவேந்திரன்
சாரதா,
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. கலைத்தாயின் தலைமகனுக்கு தலைநகரம் செய்த சிறப்புகளை மறக்க முடியுமா என்ன? நிச்சயமாக பாராட்டப்பட வேண்டியவைதான். அது போல் நீங்கள் எப்போதும் மதுரை புகழ் பாட மறந்ததில்லை என்பதும் எனக்கு நன்றாக தெரியும்.
ராகவேந்தர் சார்,
மிக நன்றாக வந்திருக்கின்றன பாட்டு புத்தகங்களின் பதிவேற்றம். தொடரட்டும் உங்கள் தொண்டு.
அன்புடன்
1972 வருட சாதனைகள் தொடர்ச்சி
இந்த வருடம் வெளியான படங்கள் தமிழகத்தில் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலும் சாதனை புரிந்தன.
இதில் ராஜா, பட்டிக்காடா பட்டணமா மற்றும் வசந்த மாளிகை போன்றவை பெங்களூர்,மைசூர் மற்றும் கேரளத்திலும் பெரிய வெற்றி பெற்றது.
வசந்த மாளிகையின் முடிவு கேரளத்தில் சோகமாக அமைக்கப்பட்டது. அதாவது கேரள மக்களின் ரசனைகேற்ப, நாயகன் விஷம் குடித்து இறந்து விடுவது போல் அமைக்கப்பட்டது. அது அமோக வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, தமிழ் பட வரலாற்றிலேயே ஒரு படத்திற்கு இரண்டு மாநிலங்களுக்கு இரண்டு முடிவுகள் அமைக்கப்பட்டு அவை இரண்டுமே இரு மாநில மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட சாதனையை முதன் முதலாக செய்ததும் நடிகர் திலகத்தின் வசந்த மாளிகை தான்.
வெளி நாடு
இலங்கையில் முதன் முதலாக திரையரங்கு வாசலில் ஒரு நடிகரின் சுழலும் கட் அவுட் வைக்கப்பட்டது நடிகர் திலகத்தின் ராஜா படத்திற்கு தான்.
இலங்கையில் வசந்த மாளிகை பெற்ற வெற்றியை அதற்கு முன் எந்த தமிழ் படமும் பெற்றதில்லை.
இலங்கையில் மூன்று அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடிய இந்த படம் ஓடிய நாட்கள் மற்றும் அரங்குகள்
கொழும்பு - கேபிடல் - 287 நாட்கள்
கொழும்பு - பிளாசா - 176 நாட்கள்
யாழ்பாணம் - வெலிங்டன் - 250 நாட்கள்
யாழ்பாணம் - லிடோ - 100 நாட்கள்
யாழ் - வெலிங்டனில் கட்டுக்கடங்காத கூட்டம். அதற்காக லிடோ அரங்கிலும் திரையிடப்பட்டது.ஒரு அரங்கில் காலை காட்சி 10 மணிக்கு ஆரம்பமானால் மறு அரங்கில் 10.15 மணிக்கு தொடங்கும். இப்படி 15 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு ரீலாக டாக்சி மூலமாக ஒரு அரங்கிலிருந்து மற்றொரு அரங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. இப்படி யாழ் நகரில் 100 நாட்கள் வரை 4 காட்சிகளாக ஓடியது. அன்று வரை இலங்கை காணாத சாதனையாகும்.[ நன்றி யாழ் சுதாகர்].
இது இலங்கையில் எப்படிப்பட்ட வெற்றியை பெற்றது என்றால் இந்த பாடத்தின் பாடல்கள் இலங்கை வானொலியின் தமிழ் சேவையில் ஒலிப்பரப்பட்ட போது படத்தின் பெயரே கூறப்படாமல் பாடல் ஒலிப்பரப்பட்டது. அந்த அளவுக்கு படம் மிக பெரிய வெற்றி.
மறு வெளியீடிற்கு என்றே பிறவி எடுத்த படம் - வசந்த மாளிகை. அனேகமாக எல்லா வருடமும் மதுரையில் மற்றும் தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் வெளியான போது மக்கள் மீண்டும் மீண்டும் பெரிய வரவேற்பு நல்கி ஆதரித்தார்கள்.
பெங்களூரில் - 1984 ம் வருடம் மறு வெளியீட்டின் போது அருணா திரையரங்கில் ஓடிய நாட்கள் - 14 [ நன்றி செந்தில்].
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
//4. தர்மம் எங்கே - 15.07.1972
இந்த வருடத்தில் வெளியாகி 100 நாட்கள் என்ற வெற்றி கோட்டை தொட முடியாமல் போன ஒரே படம்.
மதுரை -ஸ்ரீதேவியில் முதல் 16 நாட்களில் நடைபெற்ற 55 காட்சிகளில் 50 காட்சிகள் அரங்கு நிறைந்தது.
மதுரை -ஸ்ரீதேவியில் ஓடிய நாட்கள் - 50//
டியர் முரளி & ராகவேந்தர்.......Quote:
Originally Posted by RAGHAVENDRA
'தர்மம் எங்கே' படம் 1972 தொடர் வெற்றிக்கோட்டைத் தொட முடியாமல் போனாலும், தரத்தில் எந்தப்படத்துக்கும் குறைந்தது அல்ல. எனக்கு பிடித்த படங்களில் அதுவும் ஒன்று.
இப்படத்தின் சிறப்புக்களைப்பற்றியும், இதன் வெளியீட்டின்போது நடந்த சுவையான நிகழ்வுகளைப்பற்றியும் ஏற்கெனவே முந்தைய பக்கங்களில் நானும் முரளி அண்ணாவும் நிறைய எழுதியிருக்கிறோம். பட வெளியீட்டின்போது நடந்த பிரமாண்ட 'ஒப்பனிங்' பற்றி மதுரை நிகழ்வுகளை முரளியும், சென்னை ஓடியன் அரங்கின் 'ஒப்பனிங்' பற்றி (என் தந்தையின் வாயிலாக அறிந்தவற்றை) நானும் சொல்லியிருந்தோம். இப்போது ராகவேந்தர் அவர்களின் பதிவு அவற்றுக்கு மேலும் கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்திருக்கிறது.
ஆம், 'ஓப்பனிங் திருவிழாவைப்'பொறுத்தவரை, அந்த ஆண்டின் இரண்டு வெள்ளிவிழாப்படங்களைவிட இது முன்னணியில் இருந்தது என்றால் அது மிகையில்லை. அந்த அளவுக்கு படத்தின் ஸ்டில்கள் மக்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தன. அதில் முன்னிலை வகித்தது 'மதி ஒளி' மாதமிருமுறை இதழ்.
1971 துவக்கத்தில் நடிகர்திலகத்துக்கு இருந்த சற்று தொய்வு நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, ஆளாளுக்கு நடிகர்திலகத்துக்கு சவால் விடத்துவங்கினர். (Imagine, that was Public Election time too, where NT was canvassing for Congress (O), headed by Perundhalaivar) தொய்வு நிலைக்குக் காரனம் அவரது படங்களின் புற்றீசல் போன்ற படையெடுப்பு. 'பாதுகாப்பு' படத்தில் துவங்கி 'பிராப்தம்' வரையில் நான்கு மாதங்களில் ஏழு படங்கள்.
'சவாலே சமாளி'யின் வெற்றி, கேலி பேசியவர்களை ஓரளவு வாயடைக்க வைத்தது எனினும் 'பாபு'வில் துவங்கி தொடர்ந்து நான்கும் வெற்றி மேல் வெற்றி பெறத்துவங்க.......
'தர்மம் எங்கே' படத்தில் கையில் வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்கைப்போட்டு, அதன் கீழே... "நாக்குத்தடுப்பேறி சவால் விட்ட தறுக்கர்கள் எங்கே?" என்ற வாசகத்தையும்...
நம்பியாருக்கு எதிராக வாளுடன் நிற்கும் நடிகர்திலகத்தின் படத்தைபோட்டு.... "சவால் விட்டவனெல்லாம் சவக்குழிக்குப் போய்விட்டான்.. நீ எம்மாத்திரம்?" என்ற வாசகத்தையும் 'மதி ஒளி' வெளியிட்டு ரசிகர்களைக் குஷிப்படுத்தி, பெரிய எதிர்பார்ப்பைத்தூண்டி விட்டது.
Yeah Mohan. It was before Deepavali. There was no NT film for Deepavali and the last time it happened before this was in 1965. In fact 1972 was the first Deepavali which did not have any movies of both the thilagams.Quote:
Originally Posted by rangan_08
சாரதா,
தர்மம் எங்கே பற்றி நீங்கள் சொன்னது அனைத்தும் உண்மை. அந்த படத்தின் இடைவேளைக்கு பிறகு வந்த திரைக்கதை அமைப்பு மட்டும் கொஞ்சம் மாற்றப்பட்டிருந்தால் வசந்த மாளிகையையும் தாண்டிய ஒரு வெற்றியாக உருவெடுத்திருக்கும்.
அன்புடன்
சிவாஜியின் சாதனை சிகரங்கள்
தொடர்ச்சி
வருடம் - 1973
1. இந்த வருடம் வெளியான படங்கள் - 7
100 நாட்களை கடந்த படங்கள் - 5
பாரத விலாஸ்
ராஜ ராஜ சோழன்
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/rrcprerelease.jpg">
[/html:cbcf007953]
எங்கள் தங்க ராஜா
கெளரவம்
ராஜபார்ட் ரங்கதுரை
50 நாட்களை கடந்து ஓடிய படம்
பொன்னூஞ்சல்
2. மற்றவர்கள் திக்கி திணறிய ஒரு கால கட்டத்தில், மீண்டும் ஒரே காலண்டர் வருடத்தில் ஐந்து படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை நடிகர் திலகம் சர்வ சாதாரணமாக செய்து காட்டினார்.
3. 1971- ம் வருட இறுதியில் வெளி வந்த பாபு முதல் 1973- ம் வருட இறுதியில் வெளியான ராஜபார்ட் வரை
வெளியான படங்கள் - 15
அதில் வெள்ளி விழா படங்கள் - 2
100 நாட்களை கடந்த படங்கள் - 10
50 நாட்களை கடந்த படங்கள் - 2
[மீதம் உள்ள ஒரே படமும் நடிகர் திலகம் கௌரவ தோற்றத்தில் வந்தது - மனிதருள் மாணிக்கம்].
அந்த பட்டியல்
பாபு - 18.10.1971 - 102 நாட்கள்
ராஜா - 26.01.1972 -106 நாட்கள்
ஞான ஒளி - 11.03.1972 - 111 நாட்கள்
பட்டிக்காடா பட்டணமா - 06.05.1972 - 182 நாட்கள்
தர்மம் எங்கே - 15.07.1972 - 50 நாட்கள்
தவப்புதல்வன் - 26.08.1972 - 112 நாட்கள்
வசந்த மாளிகை - 29.09.1972 - 200 நாட்கள்
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/vmsilver.jpg">
[/html:cbcf007953]
நீதி - 07.12.1972 - 100 நாட்கள்
பாரத விலாஸ் - 24.03.1973 - 112 நாட்கள்
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings2/bharathavilas55.jpg">
[/html:cbcf007953]
ராஜ ராஜ சோழன் - 31.03.1973 - 103 நாட்கள்.
பொன்னூஞ்சல் - 15.06.1973 - 63 நாட்கள்
எங்கள் தங்க ராஜா - 14.07.1973 - 103 நாட்கள்
கெளரவம் - 25.10.1973 - 106 நாட்கள்
மனிதருள் மாணிக்கம் - 07.12.1973
ராஜபார்ட் ரங்கதுரை - 22.12.1973 - 104 நாட்கள்.
இப்படி இரண்டே வருட இடைவெளியில் தொடர்ந்து தொட்டதெல்லாம் பொன்னாக்கிய சாதனையை தமிழ் பட உலகில் செய்த ஒரே நடிகன் அன்றும் இன்றும் என்றும் நடிகர் திலகம் மட்டுமே.
4. முதன் முதலாக இந்திய அரசாங்கமே ஒரு படத்தின் நெகடிவ் உரிமையை வாங்கிய சாதனை நடிகர் திலகத்தின் பாரத விலாஸ் மூலமாக அரங்கேறியது.
இந்த படம் வெளியான நாள் - 24.03.1973
5. 100 நாட்களை கடந்த இடங்கள்
சென்னை - சாந்தி, கிரவுன்
மதுரை - சென்ட்ரல்
திருச்சி
சேலம்
6. தமிழில் முதன் முதலாக சினிமாஸ்கோப்பில் வெளியான படம் - ராஜ ராஜ சோழன்
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings/rrsozhan.jpg">
[/html:cbcf007953]
இந்த படம் வெளியான நாள் - 31.03.1973
எங்கள் தங்க ராஜா - 14.07.1973
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings3/etrrunning.jpg">
[/html:cbcf007953]
7. மதுரை - நியூ சினிமாவில் எங்கள் தங்க ராஜா தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 106
8. எங்கள் தங்க ராஜா மதுரை - நியூ சினிமாவில் ஓடிய நாட்கள் - 103.
100 நாட்களை கடந்த பிற இடங்கள்
சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
திருச்சி- பிரபாத்
சேலம்
கோவை
நாகர்கோவில் - ராஜேஷ்
9. நாகர்கோவில் ராஜேஷில் முதன் முதலாக 100 நாட்களை கடந்து ஓடிய படம் - எங்கள் தங்க ராஜா.
கெளரவம் - 25.10.1973
10. மதுரை சிந்தாமணியில் கெளரவம் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள் - 101
11. சென்னை சாந்தியில் தொடர்ந்து 100 காட்சிகளுக்கு மேல் அரங்கு நிறைந்து ஓடிய கெளரவம் 50 நாட்கள் வரை தினசரி மாலை காட்சி ஹவுஸ் புல் ஆனது.
12. குவைத் நாட்டில் முதன் முதலாக திரையிடப்பட்ட தமிழ் படம் கெளரவம்.
13. கெளரவம் 100 நாட்களை கடந்த அரங்குகள்
சென்னை - சாந்தி, கிரவுன், புவனேஸ்வரி
மதுரை - சிந்தாமணி
திருச்சி
கோவை
ராஜபார்ட் ரங்கதுரை - 22.12.1973
14. மருத நாட்டு வீரனுக்கு பிறகு நடிகர் திலகம் 14 கெட்அப்- களில் தோன்றிய படம் ராஜபார்ட் ரங்கதுரை
[html:cbcf007953]
<img
src="
http://www.nadigarthilagam.com/papercuttings2/rrdurai200hf.jpg">
[/html:cbcf007953]
15. தேசிய பற்றுணர்வு நிறைந்த இந்த படம், திரைப்படமே பார்க்காத பெருந்தலைவர் அவர்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்பட்டது
16. பைலட் திரையரங்கில் நடிகர் திலகத்தின் இரண்டாவது 100 நாட்கள் படம் ராஜபார்ட் ரங்கதுரை.
(சாதனைகள் தொடரும்)
அன்புடன்
PS: Rakesh, நீங்கள் பிறந்த இந்த வருடத்திற்கு இந்த சாதனைகள போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
திரு. முரளி ஸ்ரீநிவாஸ் - எத்தனை அரிய தகவல்கள்! குறிப்பாக ராஜா, வசந்த மாளிகை படங்களுக்கு அடிக்கப் பட்ட விளம்பரங்கள் மிக அருமை. வசந்த மளிகை விளம்பரத்தில் சிவாஜியும் வாணிஸ்ரீயும் கரம் கோர்ப்பது போலவே அந்த நூறில் உள்ள பூஜியங்கள் இணைந்திருப்பது - such visual synchronicity!
:lol: POthAthu! POthAthu!Quote:
Originally Posted by Murali Srinivas
What great years (nothing to do with my birth of course), Murali-sar.
And here is the sad part, I am always told by my paternal side of family (of the other camp) that Rajaraja Sozhan was a flop! How on earth were they deceived!
TO ALL HUBBERS, SPECIFICALLY FANS OF THE NADIGAR THILAGAM, I'D LIKE TO WISH A HAPPY DEEPAVALI. DRIVE SAFE, EAT RESPONSIBILY AND LET'S NOT STOP SHARING THE GREAT ENDEAVOURS AND RECORDS OF NT.
Wish all NT fans a happy Deepavali
நன்றி complicateur அவர்களே. விளம்பரங்களை பொறுத்தவரை உங்கள் பாராட்டுகள், இந்த விளம்பரங்களை சேகரித்து வைத்து, அதை ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்ட ரசிகர்களுக்கும், அதையும் தான் வைத்திருந்த தொகுப்பையும் தன்னுடைய நடிகர்திலகம் வெப் சைட்-ல் வெளியிட்ட ராகவேந்தர் அவர்களுக்கும், அதை இங்கே பதிவிறக்கம் செய்த ஜோ அவர்களுக்குமே சேரும். இனியும் பல அரிய விளம்பரங்களையும் ஜோ இங்கே உள்படுத்துவார்.
ராகேஷ்,
நன்றி.
சென்ற வாரத்தில் சவாலை சமாளித்த தவப்புதல்வனை ராஜாவாக்கி வசந்த மாளிகையில் பொன்னூஞ்சலில் அமர வைத்து எங்கள் தங்க ராஜா என்று பாராட்டி கெளரவம் செய்தோம். தீபாவளிக்கு பிறகு அவருக்கு "தங்கப்பதக்கம்" அணிவிப்போம்.
அனைவருக்கும் தித்திக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ஆம்... வரும் வாரத்தில்...Quote:
Originally Posted by Murali Srinivas
சிவகாமியின் செல்வனது சீரிய தொண்டனாய், வாணி ராணி மட்டுமல்ல, தமிழகத்தின் மொத்த தாய்க்குலமும் என் மகன் என்று தங்கள் அன்பைத் தேடியெடுத்து தங்கப் பதக்கமாய் அணிவித்த சாதனையைப் பகிர்ந்துகொள்ள காத்திருக்கிறோம்....
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் தீப ஒளித் திரு நாள் வாழ்த்துக்கள்.
ராகவேந்திரன்.
Deepavali greetings to all!
Dear Mr. Raghavendra,
A wonderfull work on nadigar thilagam website, especially old ads - silver jubilee ads, 100 day ads and so on. One suggestion: Could you please enable those ads as clickable images? Some of these ads have small images that it is difficult to read them.
Regards
What are the Sivaji movies directed by the recently deceased director, Sridhar? I remember:
1. ooty varai uravu
2. nenjirukkum varai
3. sivandha mann
4. vidivelli
Anything else? Was vaira nenjam a Sridhar movie as well?
Does this thread have a review of Sivandha mann?
Please do let me know, I am trying to review as many Sridhar movies as possible in my blog http://awardakodukkaranga.wordpress.com/
Sridhar-NT combo:Quote:
Originally Posted by Bhoori
Story-Dialogues:
Edirpaaraadadu, Amara Deepam, Utthama Puthiran, Punar Jenmam
Direction:
Vidivelli, Ooty Varai Uravu, Nenjirukkum Varai, Sivandha Mann, Vaira Nenjam, Mohana Punnagai
Raghavendran.
Dear Sir,Quote:
Originally Posted by tacinema
Thank you for your kind compliments. I shall definitely try to fulfill your request. At present I am coming across some limitations and as soon as they are overcome, these would be resolved.
Thank you very much once again,
RAghavendran.
Thanks, Ragavendra! I didn't realize that Sridhar directed Mohanap Punnagai as well. If I remember right, the song "Kalyanamaam Kaccheriyaam Kondaattamaam Oorkolamaam Jojojojojjarjo" is in that movie...
Thanks for the list of the movies for which Sridhar wrote the story/dialog as well...
Surprising gap between Vidivelli & Ooty varai uravu. 8 years!
I read somewhere that Sivaji in Dheiva magan modelled his performance on Sridhar. Apparently Sridhar's body language was like the second son as well...
Probably this has already been posted - This week's vikatan had republished an article written by Sivaji in its 1967 Deepavali malar on the roles that challenged him most - I had reposted that on my blog here - http://awardakodukkaranga.wordpress....2975;-ப/
:ty:Quote:
Originally Posted by Bhoori
I am not sure whether this has been (re)posted somewhere here. I stumbled on this Sivaji interview this morning, hopefully you all would enjoy it!
I think this interview happened around the time he got the Phalke award.
http://tamilmagan.blogspot.com/2006/07/missed-bus.html
Ragavendhra,
Thanks for the info and I have an updated list of Sridhar movies at http://awardakodukkaranga.wordpress....#2975;்/
Haha...Valee would be proud of this type of writing. Bring on the Tanggapathakam!!!Quote:
Originally Posted by Murali Srinivas
Belated Diwali Wishes to one and all.
இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று வெகு நாட்களாக எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால், DVD வாங்குவதை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தேன்.
சமீபத்தில் நண்பர் Joe கூட இந்தப் படத்தைப் பற்றி one line comment எழுதியிருந்தார், " those who say over acting, must watch this.." என்பது போல.. இது என் ஆவலை அதிகரித்து விட்டது. DVD வாங்கினேன். பார்த்தேன். என்ன சொல்வது ? Opening காட்சியே அசத்தலாக இருந்தது.
பிதாமகனில் ஒரு காட்சி. குடித்து விட்டு பாதி மயங்கிய நிலையில் இருக்கும் சூர்யாவுக்கு உணவை ஊட்டி விடுவார் விக்ரம். சாப்பிடாமல் உளறிக் கொண்டே மயங்கி விடுவார் சூர்யா. இது எனக்கு பிடித்தமான ஒரு காட்சி.
இந்தப் படத்தில் நம் நடிகர் திலகம் இதை அன்றே செய்து விட்டிருந்தார். குடித்து விட்டு மயங்கிக் கிடக்கும் இவரை கைத்தாங்கலாக வீட்டிற்குக் கொண்டு வந்து உணது பறிமாருவார் தாய் கண்ணாம்பா. அப்பொழுது ஏதோ உளறிக் கொண்டு சோற்றைப் பிசைந்து கொண்டே மயங்கி சாய்ந்து விடுவார். அற்புதம். இது வரை பார்க்காத படங்களைப் பார்க்கும் பொழுதுதான், அந்தப் படத்தில் என்ன சாகசம் நிகழ்த்தியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. நடிப்புக் கலையில் இவர் நிகழ்த்திக் காட்டாத விஷயமோ அல்லது தொடாத உச்சங்களோ ஏதாவது இருக்கிறதா என்ன ?
அந்தக் காலத்துப் படமாகையால், வசனங்களிலும் காட்சியமைப்பிலும், Sentiment சற்று தூக்கலாகவே இருந்தது (Story & dialogues by late Sridhar). ஆனால் அதற்கெல்லாம் ஈடு செய்வது போல் அமைந்திருந்தது தங்கவேலு அய்யாவின் இயல்பான நகைச்சுவை வெள்ளம். இரட்டை அர்த்தங்களோ, வசவுச் சொற்களோ , பிறரை நோகடிகும் செயல்களோ எதுவும் இல்லாமல் சூழ்நிலைக்கேற்ற நகைச்சுவையை அள்ளித் தெளித்திருந்தார். He was ably supported by T.R. Ramachandran & Sundaribai.