Originally Posted by saradhaa_sn
டியர் கே. மகேஷ்
தாங்கள் அளித்திருக்கும் பல்வேறு இணையதளங்களின் (புதிய பறவை திரையரங்க நிகழ்வுகளைப் பாராட்டி எழுதப்பட்டவை) இணைப்புகளுக்கு மிக்க நன்றி. அனைவரும் நன்றாகவும், உண்மையாகவும் எழுதியுள்ளனர். அவர்கள் வியப்படைந்ததில் அர்த்தம் இருக்கிறது.
** 46 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு திரைப்படம்....
** பலமுறை திரையரங்குகளில் திரையிடப்பட்ட ஒரு படம்.....
** பலமுறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டுவிட்ட ஒரு படம்....
** விசிடி / டிவிடிக்களில் வெளியாகிவிட்ட ஒரு படம்...
இப்போதும் கூட திரையரங்க வெளியீட்டில் இத்தகைய வரவேற்பைப் பெறுகிறதென்றால், காண்போர் அதிகபட்ச வியப்படைவது அர்த்தமுள்ளதுதானே. சிவாஜிபடை இன்றைக்கும் பொலிவோடு, வலுவோடு திகழ்கிறது என்பதற்கு, இந்த இணையங்களில் வெளியாகியுள்ள விவரங்களே கட்டியம் கூறும்.
நடிகர்திலகம் வாழ்கிறார்.... என்றும் வாழ்வார்.....