It was based on a Hindi movie. Nagaiah was the producer and director. He was also the music director. It was not Sandilyan's story. It was also produced in Telugu as Naa Illu.
Printable View
தகவலுக்கு நன்றி ராஜ் ராஜ் சார்
வசனம் சாண்டில்யன் என்று நினைக்கிறன்
("அங்கீகாரம்' என்ற தன் சுயசரிதை நூலில் கலைமாமணி பி.ஆர்.துரை).
ஆர்.எஸ்.மணி அவர்களின் மூலமாக எனக்கு சங்கர்கிரி அவர்களின் (முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் புதல்வர்) அறிமுகம் கிடைத்தது. அவர் ஓர் ஆங்கிலப் படம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். சங்கர்கிரி அவர்களே கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் படப்பிடிப்பையும் துவக்கினார்.
திருவாங்கூர் மகாராஜா பேலஸ், ஐ.ஜி.ஆபீஸ், கவர்னர் மாளிகையின் உட்புறம், அடையார் போட்கிளப் என அரசாங்க அனுமதியோடு படப்பிடிப்பு பல இடங்களில் நடத்தப்பட்டு அதன்பின் சகல பணிகளும் துரிதமாக நடைபெற்று முடிந்து ஒரே மாதத்தில் படம் ராஜகுமாரி தியேட்டரில் வெளியிடப்பட்டது. அந்தத் தியேட்டர் முன்பு சாஹ்னிங் என்று அழைக்கப்பட்டது. அங்கு ரிலீஸôன ஆங்கிலப் படம்தான் "எபிசில்'. இந்தப் படத்திற்குப் பல சிறப்புகள் உண்டு. ஜனாதிபதியின் மகனே இயக்குநர். கதை வசனம் அதுவும் அவரேதான். கதாநாயகனாக அறிமுகம் ஆனவர் வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா என்ற நிறுவனத்தில் பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன். அவரது தந்தையாக நடித்தவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த். ரமண மூர்த்தியும் அதில் நடித்திருக்கிறார். மேலும் ஒரு சிறப்பு அந்தப் படத்திற்கு உண்டு. திருமதி சந்தியா நடித்து இருக்கிறார்கள். இன்றைய துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ நகைச்சுவை பாத்திரம் ஏற்று நடித்தார். பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல நானும் அந்த நகைச்சுவைப் பகுதியில் சோ அவர்களோடு சேர்ந்து நடித்தேன். அதுதான் என் முதல் திரைப்படம். அந்த ஆங்கிலப் படத்திற்கு இன்னும் முக்கியமான ஒரு தனிச்சிறப்பு என்னவென்றால் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் இன்றைய முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள்தான்.
"எபிசில்' என்றால் லெட்டர், கடிதம் என்று பொருள். இன்றைய நம் தமிழக முதல்வர் ஜெயலலிதா கதாநாயகியாக நடிக்க நம் தமிழ்நாட்டில் ஒரு ஆங்கிலப் படமும் தயாராகி இருக்கிறது என்றால் நமக்கும் கலையுலகிற்கும் பெருமைதானே!
29.9.1972
vasu sir / krishna sir
can you recollect?
watched at vellore apsara theater on 29.9.1972 - opening show 9 am.
http://i57.tinypic.com/2d9soqr.jpg
எஸ்வி சார்
நேற்று நீங்கள் போட்ட விடுகதைக்கு விடை
சி கே கண்டு பிடித்து விட்டார் .
2991972 என்பதை நான் ஏகப்பட்ட permutation போட்டு பார்த்தும் அதை தேதி என்று கொள்ளாமல் தமிழ் ஆங்கில எழுத்துகள் என்று கணக்கிட்டு மண்டை பணால் . அருமை சார்
இன்று தேதி 29/9/14 -42 -ஆண்டுகள் - ஆனந்த், லதா ,விஜயகுமார்,திவான்,பஞ்சவர்ணம்,கௌரி மறக்க கூடிய கதாபாத்திரங்களா
வசந்த மாளிகை ரிலீஸ் நெல்லை சென்ட்ரல்
100 நாட்கள் கண்டு இருக்க வேண்டிய படம் .70 நாட்கள் என்று நினைவு
தீபாவளிக்கு கூட மாற்றவில்லை .
நினைவு ஊட்டிய எஸ்வி சார் அவர்களுக்கு நன்றி
இப்படத்தைப் பற்றிய சில சிறப்புத் தகவல்கள் பிரேம் நகரம் என்ற பெயரில் 1971 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான படத்தின் ரீமேக்தான் ‘வசந்த மாளிகை’.
தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வரர ராவ், வாணி ஸ்ரீ முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
பின்னர் இந்த படம் ஹிந்தியிலும் தயாரிக்கப்பட்டு ராஜேஷ் கண்ணா, ஹேமமாலினி நடிக்க பிரேம் நகர் என்ற பெயரில் 1974 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது.
மூன்று மொழிகளிலும் படத்தை இயக்கியவர் கே. எஸ். பிரகாஷ்ராவ்.
கொடூரி கெளசல்யா தேவி எழுதிய ‘பிரேம் நகர்’ என்ற நாவலை மையமாக வைத்துதான் இந்த படத்தையே உருவாக்கினார்கள்.
தமிழ், தெலுங்குப் படங்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். ஹிந்திப் படத்திற்கு இசையமைத்தவர் எஸ். டி. பாமன்.
மூன்று மொழிகளிலுமே இந்த படத்தின் பாடால்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்தன.
தமிழில் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்து இன்று வரை ரசிக்கப்படுகின்றன.
படத்தின் கதையும் கவிஞரின் வாழ்க்கையில் நடந்த சம்பவமும் ஒன்றாக இருந்ததாம். அதனால் கவிஞர் இப்படத்திற்கு மிகவும் சிறப்பாக பாடல்களை எழுதி தந்தார் என்று அப்போது சினிமா வட்டாரத்திதில் பேசிக் கொண்டார்களாம்.
‘ஏன் ? ஏன் ? ஏன் ? ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்’, ‘குடிமகனே பெருங்குடி மகனே நான் கொடுக்கட்டுமா’, ‘கலைமகள் கைப் பொருளே உன்னை கவனிக்க ஆளில்லையோ’, ‘மயக்கமென்ன இந்த மெளனமென்ன’, ‘குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை மறந்து விடலாம்’, ‘யாருக்காக இது யாருக்காக’ என அனைத்துப் பாடல்களுமே கேள்வியின் வடிவம் அதிகம் இருக்கும்.
இப்படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்தவுடன் ஹீரோவாக சிவாஜிகணேசன் மட்டுமே நடிக்கப் பொருத்தமானவர் என தயாரிப்பாளர்கள் முடிவு செய்தார்கள்.ஹீரோயினாக நடிக்க பலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு கடைசியில் தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயின் அழகான தோற்றம் தமிழிலும் நடிக்க வைத்து விட்டது.
சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ, நாகேஷ், மேஜர் சுந்தர்ராஜன், பண்டாரிபாய், பாலாஜி, சுகுமாரி, ரங்காராவ், வி. கே. ராமசாமி, புஷ்பலதா, ராமதாஸ், சி கே. சரஸ்வத, சி. ஐ. டீ. சகுந்தலா, ரமா பிரபா, செந்தாமரை என படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.
படத்தின் வசனம் மிகவும் பாராட்டப்பட்ட ஒன்று அதை எழுதியர் பாலமுருகன்.
இப்படத்தில் முதலில் கிளைமாக்கில் சிவாஜிகணேசன் இறந்து விடுவதாக காட்சியமைத்திருந்தார்கள். தியேட்டரில் மக்கள் அதை விரும்பவில்லை என்று அறிந்ததும், பின்னர் சிவாஜியும் வாணிஸ்ரீயும் ஒன்று சேர்வது போல காட்சியை மாற்றி தியேட்டர்களுக்கு பிரின்ட் போட்டு அனுப்பி வைத்தார்கள். படத்திற்கு கூட்டம் அலை மோதியது.
இலங்கையில் அதிக ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடிய முதல் படம் ‘வசந்த மாளிகை’ 12 ஊர்களில் 14 அரங்குகளில் ஓடியது.
இலங்கையில் இரண்டு அரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடும் வித்ததில் ஓடிய முதல் படமும் ‘வசந்த மாளிகை’ தான்.
கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கில் 287 நாட்களும், யாழ்ப்பாணம் வெலிங்டன் திரையரங்கில் 208 நாட்களும் ஓடியது.
தமிழ் நாட்டில் மதுரை நியூ சினிமா திரையரங்கில் 200 நாட்களும், சென்னை சாந்தி திரையரங்கில் 175 நாட்களும், கிரெளன், புவனேஸ்வரி திரையரங்குகளிலும், திருச்சி ராஜா திரையரங்கிலும் 140 நாட்களுக்கும் ஓடியது.
மேலும், தஞ்சை, கோவை, சேலம், வேலூர், ஈரோடு, கடந்தை, மாயவரம் ஆகிய ஊர்களிலும் 100 நாட்களுக்கும் மேலும், மற்ற பல ஊர்களில் 50 நாட்களுக்கும் மேல் ஓடியது. இது அந்த காலத்தில் மாபெரும் சாதனை.
இப்படத்தின் 100வது நாள் விழா ஒரே நாளில் திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மாயவரம் ஆகிய நான்கு ஊர்களில் 1973 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடப்பட்டது.
காலை 10 மணிக்கு திருச்சியிலும், பகல் 3 மணிக்கு தஞ்சாவூரிலும், மாலை 7 மணிக்கு கும்பகோணத்திலும், இரவு 10 மணிக்கு மாயவரத்திலும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளில் ஏராளமான காதல் திரைப்படங்கள் வந்திருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளாக அடிக்கடி திரைப்பிடப்படுவதும் வசூலில் மாபெரும் சாதனை படைப்பதுமாக இருந்து வருவது இந்த ஒரு படம் மட்டுமே.
ஒரே வருடத்தில் இரண்டு வெள்ளி விழாப் படங்களை 1959, 1961 ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு 1972 ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மூன்றாவது முறையாக 2 வெள்ளி விழாப் படங்களை தந்தது.
‘வசந்த மாளிகை’ படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது சிவாஜி கணேசனின் தாயார் ராஜாமணி அம்மாள் திடீரென்று காலமாகிப் போனார். இறுதிச் சடங்குகள் முடிந்த ஐந்தாம் நாள் வீட்டிலிருந்த சிவாஜி, தயாரிப்பாளரைத் தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்தால் அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வந்து நெஞ்சில் துக்கத்தை உண்டாக்குகிறது. எனவே படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள் மனம் அமைதியாவது இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
தயாரிப்பாளரும் சரி என்று சொல்லி படப்பிடிப்பை ஊட்டியில் துவக்கியிருக்கிறார். நடிகர் திலகம் அப்போது நடித்த காட்சி எது தெரியுமா ? ‘மயக்கம் என்ன இந்த மெளனமென்ன’ என்ற காதல் ரசம் சொட்டும் பாடல் காட்சி கவலையின் ரேகையே முகத்தில் தெரியாத அளவு மிகவும் இயல்பான ஒரு காதலனைப் போல் அக்காட்சியில் நடித்திருப்பார் அதுதான் சிவாஜி தொழில் வேறு, குடும்பம் வேறு என்று கடைசி வரை உறுதியாக இருந்தவர்.
இப்படத்திற்காக ‘அடியம்மா ராசாத்தி’ என்று தொடங்கும் ஒரு டூயட் பாடல் பாடமாக்கப்பட்டது. அது ரெக்கார்டு பிளேயார்களிலும் இடம்பெற்று வானொலிகளிலும் வெகுகாலம் ஒலிபரப்பாகி வந்தது ஆனால் திரைப்படத்தில் ஏனோ இடம் பெறவில்லை. முதன் முதலாக வண்ணத்தில் ‘ஸ்லோமோஷன்’ முறையில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட தமிழ்ப் படம் ‘வசந்த மாளிகை’. இப்படி பல சிறப்புக்களையும் சாதனைகளையும் புரிந்தது வந்த மாளிகை.
காதலை காதலிப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.
http://cinema.vikatan.com/images/gal...tills_(24).jpg
thanks-maalaimalar
வசந்த மாளிகை 1972 மதுரை நியூ சினிமா வில் தானே ரிலீஸ் சி கே சார் /முரளி சார்
வசந்த மாளிகை-1972
எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.
மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்
ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்
கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை
தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க
குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது
தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்
வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்
மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்
மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட
திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து
அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.
மானிட ஜாதியை விளித்து துவங்கும் நடிப்பு தேவன்
வானிடை உலவும் வனிதா தேவதையின் கை கோர்க்கும்
வைபவம் காண வசந்த மாளிகைகளின் கொட்டகை வாசல்களில்
எய்பவன் எங்கோ இருக்க எங்கள் மீதெல்லாம் மன்மத அம்புகள்
கிண்ணத்தை ஏந்தி களிநடம் புரிபவன் விசையுறு பந்தாக
எண்ணத்தை எல்லாம் வண்ண ஜாலமாய் வாரியிறைப்பதை
கண்ணதாசன் பாடலுக்கு என்னத்தை சொல்ல இதய கண்ணனின்
விண்ணதிரும் சிருங்கார ஜால வித்தை விண்ணவரும் காணா விந்தை
கன்னியருடன் கன்னமிடும் இக்கள்வனா எல்லோரின்
இன்னுயிரை கவ்வி சென்ற ஆலம் விழுதுகள் போல் வந்த
ஆயிரம் உறவுகளுடன் கண்ணீர் கடலில் குளிக்க செய்தவன்
பாயிர பாடல்களில் ஆலத்துடனே ஆடி களிக்கிறான்
வண்ண காஞ்சனாவுடன் சிவந்து மண்ணில் ஒருநாள் கண்டு
கன்னமிட்டவன் இந்த சின்ன காஞ்சனாவையும் கொஞ்சி சுவைக்கிறான்.
அப்பராக அப்பர் மக்களை அதி உன்னத அமைதியால் அசத்தியவன்
தப்பராக தோன்றி லோயர் தளத்தையும் துதி பாட துள்ளுகிறான்
வானத்து தேவதையோ வரவேற்பறையில் வரவேற்க வாலிப வண்ணங்கள்
கானத்தின் கணத்தில் காமுகன் கண்களுக்கு கன்னல் கரும்பாக
வாலிப வண்ண எண்ண விடலை கனவுகளில் கடலை கடக்கும் காற்றாக
ஜாலி பண்ண ஜோலி பார்க்கும் வெறி வேங்கையின் வெற்றிகாணா
இந்த நேரம் இன்னும் கூடாதா என் கனவு கன்னியின் தனங்கள் தரிசனம்
வந்த வாலிப மதனோ காக்கும் கரங்களாய் கனவை கலைக்க
உந்தலுடன் உன்மத்தினிடம் வேண்டாமெனில் விடு விரும்பினால் தொடு
கந்தலை மேலுடையால் போர்த்தி கன்னியை கனிய காண்பான்
குடிமகனை களிக்க வரும் கணிகையை காம கண்களால் களித்து
கடித்து முடிக்கும் கள்வெறியுடன் காந்த கவர் கண்களின் கவர்ச்சி
உதைத்து தள்ளி உன்மத்தம் ஊட்டி பதைத்து எழுப்பி பஞ்சணையில்
கதைத்து நெஞ்சணைத்து உடையென்ற திரை உடைக்கும் ஆனந்தனின் ஆனந்தம்
வீணை மீட்டும் வாணியை வீண் பொருளாய் வாட்டிஎடுத்து வெகுண்டவன்
இணை தேடும் இன்ப பரப்பின் பரபரப்பின் பார்வையில் கனிந்த நோக்கு
காந்தமென்ற சொல்லுக்கு கண்ணழகன் கண்களே காணு பொருளாய் கண்டோம்
சாந்தம் வென்ற சந்தத்தில் சாந்தியை பெற்றவன் சாந்தி பெரும் சாரம்
பறப்பதை தடுக்க விரும்பா திருந்திய குறும்பனின் விருதா விருப்பம்
திறப்பதை திறந்த திருமகளை தீர தீண்டுமன கரும்பனான விரும்பன்
ஆதி மனிதன் ஆடும் நடனம் வருணனையே வானம் திறக்க செய்யும்
பாதியில் நின்று ராசாவுடன் ராணி இணைவு காண குடிலில் மன்மத
பாணத்துடன் பருவ தாக போக பார்வையுடன் பழத்தை சுவைக்கும்
நாணத்துடன் நல்கி நாடும் நல்லிதயம் விளித்து கொள்ளியால் புகை நாடும்
இளமானுடன் இளமானுடன் இதம் காணும் இளமையுடன் தனிமை
வளமான வாலிபனுக்கு வருமோ உளம்நாடும் உள்ளத்துணிவு
குடிலிலே இணைவு காணும் இணைக்கு இல்லம் காண மாளிகை
மடியிலே மகிழ்ந்து கன்னத்தில் முத்தமிட்டு கள்வெறி கொள்வதும்
கழுத்திலே முத்தமிட்டு காண்போரையல்லாம் கனவு கடலில் கவிழ்த்து
எழுத்திலே வடிக்கவொன்னா ஏந்திழையாளுடன் மெல்லிசைவு அசைவு நடமாடி
பிரிவு துயருக்கு பெருங்காப்பியமே படித்து துவண்டு துடித்து
பரிவு துயர் ஊட்டி இருமனம் வேண்டிய பெருமன வேள்வி வடித்து
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை
பாருக்காக இது ஊருக்காக என்று உலகே வியந்து ஊரறியா வெற்றி தந்து
முடியா மாளிகையாய் காதல் காவியங்களுக்கு கதை மாளிகையாய்
அடிமுடியறியா நடிப்பு சுரங்கத்தின் விடிவெள்ளி வடிவு வண்ணம்
கண்டங்கள் கண்டு வென்ற நடிப்பினை கண்டெங்கள் இதயம்
வண்டென நாடி நல்கும் வண்ண மலர் வாணிக்கும் வாழ்த்து சொல்லி வணங்கும்