-
நடிகர்திலகத்தின் பிறந்தநாளை கொண்டாடாத....
நடிகர்திலகத்தின் நினைவுநாளை அனுஷ்டிக்காத....
நடிகர்திலகத்தின் சிலை விவகாரத்தில் அலட்சியம் காட்டிய....
நடிகர்திலகத்தின் நினைவுமண்டப செயலாக்கத்தை கிடப்பில் போட்ட....
நடிகர்திலகத்தின் உழைப்பால் கட்டிய சங்க கட்டத்தை இடித்து தள்ளிய....
சரத்குமார்
ராதாரவி
விஜயகுமார்
ராதிகா
அணி படுதோல்வி.
அடுத்து வரவிருக்கும் பெரிய ரிசல்ட்டுக்கு இது சின்ன ட்ரைலர்.
நடிகர்திலகத்தை சீண்டினோர் / சீண்டுவோர் நாசமாவது உறுதி.
-
"புதியதலைமுறை" தொலைகாட்சியின் ஈனத்தனம்
-------------------------------------------------
நேற்றிரவு தென்னிந்திய நடிகர்சங்க தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருந்தபோது "சங்கம் கடந்து வந்த பாதை" என்ற தலைப்பில் சில விவரங்களை சொன்னார்கள்.
அவை....
"1952-ல் சங்கம் துவங்கப்பட்டது.
1957-ல் என்.எஸ்.கிருஷ்ணன் தலைவராக இருந்தபோது சங்கத்துக்கு நிலம் வாங்கப்பட்டது.
1958-ல் எம்.ஜி.ஆர். தலைவராக இருந்தபோது அனைத்து நடிகர்களும் உறுப்பினராவது கட்டாயம் ஆக்கப்பட்டது.
பின்னர் நாகையா, சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோரும் தலைவர்களாக இருந்தனர்.
விஜயகாந்த் தலைவராக இருந்தபோது சங்க கடன் அடைக்கப்பட்டது,
கடந்த 2006 முதல் சரத்குமார் தலைவராக இருந்து வந்தார்."
இவ்வளவுதான் சொன்னார்கள்.
நிலம் வாங்கப்பட்டது, கட்டாயம் உறுப்பினராக ஆக்கப்பட்டது, கடன் அடைக்கப்பட்டது என்றெல்லாம் சொல்ல தெரிகிறது. ஆனால் யார் தலைவராக இருந்தபோது சொந்த கட்டிடமும், சங்க வருமானத்துக்காக 'தேவர் அரங்கமும்' கட்டப்பட்டது என்று சொல்ல வாய் வரவில்லை.
அட... நாதாரிகளா.
-
நடிகர்திலகத்தை பேட்டி காணும் ஜெயலலிதா
பொம்மை இதழில்வெளியானது
http://i1065.photobucket.com/albums/...pswztdsadr.jpg
-
-
-
-
-
-
-