-
chekhov உயிரோடு இருந்திருந்தால் ,இந்த மேதையின் காலில் விழுந்து வணங்கி இருப்பான். True GopalSir.உத்தமபுத்திரன் . புதியபறவை போலவே நடிகர் திலகத்தின் signature movie. இரட்டை வேட நடிப்பில் நடிகர்திலகம் முப்பரிமாணத்தையும் வெளிக்கொணர்ந்த evergreen and immortal movie. கோபால் சாரின் தேர்வு பொருத்தமானதே. ஒரே உருவ அமைப்பில் உடல்மொழி வாயிலாகவே வேறு எந்த ஒரு உலக நடிகனும் கற்பனை கூட செய்ய முடியாத அளவு பாத்திரங்களின் குணாதிசயங்களை வேறுபடுத்துவதில் ரசிகர்களை மெய்மறந்து பிரமிப்பில் ஆழ்த்திய திரைப்பெட்டகம். கதாநாயகன் பார்த்திபனை நேசிக்க வைப்பதிலும் வில்லன் விக்ரமனை வெறுக்க வைப்பதிலும் நடிகர்திலகம் வெளிப்படுத்திய வாழ்ந்துகாட்டிய ஆற்றல் மிக்க நடிப்பினை இவ்வையகம் உள்ளவரை மறக்க இயலுமா?
பார்த்திபன் விக்ரமனாக நடிக்க வேண்டியதையும்விக்ரமன்பார்த்திபனாக கூடுமாறுவதையும் துல்லியமாக வேறுபடுத்தி நடிக்கும் காட்சி அமைப்புகள் NT இப்புவி சுழலும்வரை நடிப்புக்கடவுள் என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக அறுதி செய்கின்றன. ஒரு தன்னிலை உணராத குடிகார மன்னனின் முகச்சோர்வு மற்றும் நடைத்தள்ளாட்டங்களை இவ்வளவு துல்லியமாக எந்தவொரு நடிகனாலும் வெளிப்படுத்தவே இயலாது! யாரடி நீ மோகினி மற்றும் உன் அழகை கன்னியர்கள் சொன்னதினாலே பாடல் காட்சிகளை பார்க்கும் போது இதை நம்மால் ரசித்து மகிழ முடிகிறது. Hats off to Gopal Sir for his meticulous and riveting narrations on this சாகாவரம் பெற்ற நடிப்புக்கடவுளின் ஒப்புவமையோ ஈடு இணையோ இல்லாத காவியம்.
-
Congratulations Mr. Kumareshan for having assumed your coveted post for Vikram Prabhu's promising film career anchored by two films so far, with a difference in his approach and his care not to be in the shadows of his legendary Grandpa. I wish, in line with RKS, you will do a nice job in carving the career graph of Vikram Prabhu with right counselling.
-
Amazing analysis of Mr Gopal and Mr Vikraman. The analysis carries your hardwork which is
unmatched. Awaiting your work on Mr Vijay.
Thanks Mr Gopal Sir.
Regards
-
நடிகர் திலகத்தின்
இந்த ஸ்டைலுக்கு முன்னால்
ஈடு இணை
அன்றும் இல்லை
இன்றும் இல்லை
இனி என்றுமே இல்லை
http://i157.photobucket.com/albums/t...psed1199a5.jpg
-
VIETNAM VEEDU!உன் கண்ணில் நீர் வழிந்தால்....என்ன ஒரு வித்தியாசமான தோற்றம்! சிவாஜி கணேசன் என்பது மறைந்து ஒரு நடுத்தர வர்க்கத்தில் சுமைதாங்கியாக உழைத்து ஓய்ந்து குடும்ப உறவுகளால் இதயத்தில் பட்ட காயங்களை முகச்சுருக்கங்களாக்கி வாழ்க்கைத் துணையின் அரவணைப்பில் இப்பாடல் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் close-up expressions, நம் மனதைப்பிசைந்து கண்களில் ஈரம் முட்ட வைக்கும் பாடல் வரிகள். . பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பாடல் காட்சி! Superb Star of the Golden Era of Tamil Cinema. வியட்நாம் நாட்டாரின் வார்த்தை ஜாலங்களில் ராமனின் பாதம் படவேண்டிய அகலிகைக்கல்!
-
dear Sivaa. No wonder ..... Style had got redefined long back by NT!
-
முரளி சார்
பட்டிகாட பட்டணமா வஸ் நான் ஏன் பிறந்தேன்
ஒரு லைவ் டெலிகாஸ்ட் 20/20 மேட்ச் பார்த்த மாதிரி
என்ன ஒரு flawless flow
கோபால் சார்
நிச்சயமாக இங்கும் வருவேன்
நீங்கள் சொன்னது போல் இது தாய் வீடு
-
என்றும் அழியாத கதா பாத்திரங்கள் - 6
கர்ணன் -
மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் - வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம் - பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாலும் மாதம் -------
NT ஒருவரே born actor . He permitted himself to be carved out of great characters , sketched by great writers and sculpted by great directors. அப்படி வரைய பட்ட படங்களில் மறக்கமுடியாத படம் கர்ணன் -கோபால் சொன்னதுபோல , இதுவரை வில்லனாக மகாபாரதத்தில் சித்தரிக்க பட்டவன் , NT யின் மூலம் எல்லோராலும் விரும்பப்படும் கதாநாயகனாக உருவாகினான் - இந்த படத்தின் தாக்கம் , இதில் NT யின் நடிப்பு இவைகளை பற்றி யார் எழுதினாலும் அது முழுமை அடையாதவைகளாகவே இருக்கும் - இந்த படத்தின் தனி சிறப்பு அப்படி ! கர்ணன் கதானாயகனானபின் அவனுடைய மற்ற சிறப்புகளையும் தெரிந்து கொள்வது அவசியம் அல்லவா ?! கர்ணனை பற்றி ஒரு சிறிய பதிவை இடலாம் என்பது என் வெகு நாளைய ஆசை - அந்த ஆசையின் விளைவுதான் நீங்கள் கீழ் காணும் பதிவு
என் அலசலின் விபரம்
Part 1 : கர்ணனை பற்றி சொல்லபடாத சில உண்மைகள்
Part 2 : மகா பாரதத்தில் வரும் சில முக்கிய பாத்திரங்கள் - ஒரு சின்ன அலசல்
Part 3: படத்தில் வரும் மதுர கானங்கள் - ஒரு சிறிய அலசல்
Part 4: NT யின் இனையற்ற நடிப்பு - என் கண்ணோட்டத்தில்
Part 5 : கர்ணனும் NT யும் - ஒரு சின்ன comparison
Part 1
கர்ணன் படத்தில் சொல்லப்படாத சில உண்மைகள் :
1. ஒரு அந்தணன் யாசகம் பெற வேண்டி கர்ணனிடம் சென்றான் - கர்ணன் அப்பொழுது உணவு எடுத்துக்கொள்ளும் நேரம் - பாதியில் உண்ணும் உணவை நிறுத்திவிட்டு தனது left hand மூலம் அவனுக்கு முத்துமாலைகள் சிலவற்றை அளித்தான் - இதை பார்த்த சிலர் கர்ணனிடம் அதை பற்றி கேட்டனர் - கர்ணன் சொன்ன பதில் அவர்களை சிந்திக்க வைத்தது - " நான் செய்தது தவறு தான் - ஆனால் நான் என் கைகளை கழுவிக்கொண்டபின் தர்மம் செய்திருந்தால் அந்த சமயம் எனது மனது சற்றே மாறி இருக்கலாம் - அல்லது அந்த அந்தணருக்கு போதிய முத்து மாலைகளை கொடுக்காமல் இருந்திருக்கலாம் -எப்பொழுது தர்மம் செய்யவேண்டும் என்று தோன்றுகின்றதோ அப்பொழுதே செய்து விடவேண்டும் மனம் மாறிவிடுவதர்க்குள் "
2. கர்ணனின் பெருமையை உயர்த்தும் இன்னும் ஒரு நிகழ்ச்சி :
அந்த காலத்தில் ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது - போர் முடிந்தபின் , அரசர்கள் அனைவரையும் அவர்களின் தேரோட்டிகள் தேரை விட்டு இறங்கி மூன்று முறை சுற்றி வந்து வணங்கி வழிபட வேண்டும் - அர்ஜுனனுக்கு ஒரே பெருமை - தன்னை சுற்றி வந்து வழிபடவேண்டியவர் கண்ணன் - இந்த வாய்ப்பு யாருக்கு கிடைக்கும் ? - அந்த பெருமை கொஞ்ச நேரத்தில் கர்வமாக உருவானது - தன்னை மீறி ஒருவரும் இல்லை - இறைவனே தன்னை சுற்றி வந்து வழி படபோகிறான் - தானே இனி மேலானவன் என்று - ஆவலுடன் காத்திருந்த அர்ஜுனனை , கோபாலனின் உஷ்ணம் நிறைந்த வார்த்தைகள் தட்டி எழுப்பின - இதுவரை கண்டிராத கோபம் - கேட்காத வார்த்தைகள் - அவமானத்தில் குறுகினான் அர்ஜுனன் - கண்ணன் சொன்னான் " அர்ஜுனா தேரை விட்டு இறங்கு உடனே - ஏன் , எதற்கு என்று கேள்விகள் எழுப்பாதே - சொன்னதை செய் !"
அர்ஜுனன் :" கண்ணா மற்ற தேரோட்டிகளை பார்த்துமா என்னை தேரை விட்டு இறங்க சொல்கிறாய் ? "
"ஆமாம் "- கண்ணனின் வார்த்தைகளில் வெப்பம் இன்னும் அதிகமாகின
அர்ஜுனன் வேண்டா வெறுப்பாக தேரை விட்டு குதித்தவுடன் , கண்ணன் அவன் கைகளை பிடித்துகொண்டு வேகமாக அந்த தேரை விட்டு வெகு தூரத்திற்கு அழைத்து சென்றான் - சென்ற சில நொடியில் RDX வைத்ததுபோல அந்த தேர் எரிந்து சாம்பலானது
அர்ஜுனனுக்கு ஒரே ஆச்சரியம் , வியப்பு , அதிர்ச்சி ----
கண்ணன் சொன்னான் " அர்ஜுனா , உன்னை சுற்றி நான் வந்து வணங்கவேண்டும் என்று விரும்பினாய் - தேரை விட்டு நான் கீழே குதித்திருந்தால் உன் கதி என்னவாகி இருக்கும் ? அந்த தேரில் தைத்த அம்புகள் பல - எல்லாமே சக்தி வாய்ந்தவை - துரோணர் , பிதாமகர் , முக்கியமாக கர்ணன் எய்த அம்புகளின் சக்தியை நான் தடுத்து நிறுத்தினேன் - என் சொல்லுக்கு கட்டுப்பட்டு அவைகள் உன்னை ஒன்றும் செய்யவில்லை - நான் தேரை விட்டு இறங்கியவுடன் , பசியுடன் இருந்த அந்த அம்புகள் உன் தேரை உணவாக்கி கொண்டன - நான் யாருடைய அம்புகளுக்கும் பின் வாங்கினதில்லை - ஆனால் கர்ணனின் அம்புகள் என் சக்தியையும் மீறியவைகள் - உன்னை அவைகளிடமிருந்து காப்பாற்றுவதிலேயே என் முழு கவனமும் இருந்தது
அர்ஜுனனின் கர்வம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது
இன்னும் ஒரு நிகழ்ச்சி :
கர்ணனின் கொடைத்தன்மையை பற்றி சில மன்னர்கள் சபையில் விவாதித்தனர் - ஒரு சிற்றரசர் சொன்னார் " கர்ணனின் தர்மம் செய்வதில் என்ன பெருமை உள்ளது - அவனுக்கு கிடைத்த அரசாட்சி ஒரு இரவல் தானே - இரவலாக கிடைத்த ஆட்சியில் தருமம் செய்வது ஒரு பெரிய விஷயமா ?
கர்ணன் காதுகளில் இந்த விஷயம் விழுந்தது - உடனே கர்ணன் அனைவரும் அறிய கூறினான் " இதனால் தவறுதலாக எனக்கும் கொஞ்சம் புண்ணியம் கிடைத்திருந்தால் அதையும் கேட்டவருக்கு கொடுத்துவிடுகிறேன் " கண்ணன் இதை மனதில் வாங்கிகொண்டான் சமயம் பார்த்து இந்த யாசகத்தை கர்ணனிடம் இருந்து பெற்றுக்கொள்ள கண்ணன் தவறவில்லை - அவனை ஏளனம் செய்தவர்கள் வாயடைத்து போயினர் - தனக்கே உரிய கவசத்தையும் , குண்டலங்களையும் இந்திரனுக்கு கர்ணன் தானமாக கொடுத்தபின் -----
இன்னும் ஒரு நிகழ்ச்சி
உடன் பிறந்த கவசமும் , காதுகளில் ஜொலிக்கும் குண்டலங்களும் ஒருமுறை பேசிக்கொண்டனவாம் - நம்மால் தான் கர்ணனுக்கு பெருமை , அவன் தேஜஸாக இருப்பதிருக்கு நாம் தான் காரணம் என்று --- இந்திரன் யாசகம் பெற்றபின் கவச குண்டலங்கள் வெட்கத்தினால் தலை குனிந்தன - அடாடா என்ன பேசிவிட்டோம் , இவன் உடம்பில் இதுவரை இருந்ததால் தானே நமக்கு ஒரு பொலிவு இருந்தது , மற்றவர்களின் கவனமும் நம்மீது இருந்தது - இப்பொழுது கர்ணன் இன்னும் பொலிவுடன் இருக்கிறான் , நாம் தான் அடிப்பட்ட பாம்பாக இருக்கிறோம் "
Part 2
மகா பாரதத்தில் வரும் சில பாத்திரங்கள் - ஒரு அலசல்
குந்தி : நல்ல மக்களை பெற்றவள் - ஆனாலும் highly possessive - செய்த பாவத்தை மறைக்க பெற்ற குழந்தையை நதியில் தவழ விட்டாள் - அந்த மகன் பிறகு என்னவானான் என்பதில் கொஞ்சம் கூட கவனம் செலுத்தவில்லை - கண்ணன் சொல்லிகொடுத்தபடி கர்ணனை அழிக்கவல்ல இரண்டு வரங்களை கேட்டாள் - ஆனால் அதே மாதிரி தன் 5 பிள்ளைகளுக்கும் எந்த விதமான கட்டளைகளும் இடவில்லை - குறைந்த பட்சம் , நிராயுத பாணியாக கர்ணன் போரில் நிற்க வேண்டி இருந்தால் அவனை கொல்ல வேண்டாம் என்ற ஒரு கட்டளையாவது அர்ஜுனனுக்கு போட்டிருக்கலாம்
கர்ணன் : ஒரு பரிதாபமான பிறவி - எல்லாம் இருந்தன அவனிடம் - அனைத்தும் பிடுங்கப்பட்டன விதியின் சதியால் - பிறருக்கு கொடுத்து உதவுவதில் மகிழ்ச்சியை கண்டான் - அவனையே எடுத்துகொண்டதில் மகிழ்ச்சியை அடைந்தான் இந்திரன் - அவனின் வீரத்தை பெற்ற தாயே தானம் கேட்டாள் - தனது இரண்டு வரங்கள் மூலம் - பரசுராமர் அவன் அந்தணன் இல்லை என்று அவன் பாடுபட்டு கற்று கொண்ட பிரம்மாஸ்திரத்தை மறக்க வைத்தார் - என்றுமே புதையாத அவன் தேர் பூமியில் முதலாகவும் , கடைசி முறையாகவும் புதைந்தது - கண்ணன் சிரித்தான் - கர்ணன் அங்கே வாழ்ந்தான்
கண்ணன் : கண்ணன் இல்லையேல் ஏது மகாபாரதம் - ஒவ்வொரு காரியத்தையும் கண கச்சிதமாக செய்தவன் - யாரை எங்கு வைப்பது என்பதை முழுதும் தெரிந்து கொண்டவன் - கர்ணனை கண்ணனாலும் அழிக்க முடியவில்லையே !! கர்ணனிடம் உயிர் யாசகம் பெற்று கொண்டபின் தானே அவனால் கர்ணனை அழிக்க முடிந்தது - யாருக்கும் கிடைக்காத விஷ்வ ரூப தரிசனம் கர்ணனுக்கு கிடைத்தது - பிறர் அந்த தரிசனத்திற்கு ஏங்கினர் - கர்ணனுக்கு மட்டும் தான் அவன் கேட்க்காமல் கிடைத்து
தஸ்மாத் ஸர்வேஷு பூதேஷு தயாம் குருத ஸௌஹ்ருதம்
ஆஸுரம் பாமுன்முச்ய யதா துஷ்யத்யதோக்ஷஜ:
துஷ்டே ச தத்தர இமலப்யமனந்த ஆத்யே கிம்
தைர்குண வ்யதிரேஹாதிஹ யே ஸ்வஸித்தா:
தர்மாதய: கிடகுணேன ச காங்க்க்ஷிதேன
ஸாரம் ஜுஷாம் சரணயோரூபமாயதாம் ந:
தர்மார்த்த காம இதி யோரபிஹிதஸ்த்ரிவர்க:
ஈக்ஷா த்ரயீ நயதமௌ விவிதா ச வார்த்தா
--------( பாகவதம்----ஸ்கந்தம் 7—அத். 6)
இதன் அர்த்தம் :
"One should give up ‘Asura gunas’ ( qualities of Demons ); One should show love and friendship towards all souls . If we do that, God will become happy. If He becomes happy, there is nothing that one cannot achieve"
ஒரு இடத்தில் அர்ஜுனனுக்கு கர்ணனை பற்றி சொல்லும்போது கண்ணன் சொல்கிறான் :
கர்ணனிடம் அசுர குணம் கிடையாது - எல்லோரிடமும் பாசமும் அன்பும் கொண்டவன் - அவனை நான் உன்னைவிட அதிகமாக நேசிக்கிறேன் அர்ஜுனா - ஏன் தெரியுமா - உன் எதிரில் இருப்பவர்கள் உன் உறவினர்கள் என்று தெரிந்து கொண்டபின் , உன்னால் காண்டீபத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை - கர்ணனுக்கும் அந்த எண்ணம் இருந்தும் அவனுக்கு ஒரு கண்ணன் தேவை பட வில்லை - கடமையில் அவன் கருத்தாக இருக்கிறான் - பாஞ்சலியை மான பங்கம் செய்ய முடிவெடுக்கும் முன் துரியோதனை தடுத்தி நிறுத்த முயன்றவன் அவன் ஒருவனே
கண்ணன் , கர்ணனை எவ்வளவு நேசித்தான் என்பது "கர்ணா நானும் உன் பழி கொண்டேனடா " என்று பாடும் ஒர வரியில் புரிந்து விடும்
அர்ஜுனன் : நம் எல்லோருக்குள்ளும் , ஒரு அர்ஜுனன் இருக்கிறான் - நம் மீதோ , நம் திறமையின் மீதோ நமக்கே சந்தேகம் வரும் பொழுது , தன்னம்பிக்கை என்னும் காண்டீபத்தை நழுவ விடுகிறோம் - உள் மனம் கண்ணனாக இருந்து , சொல்பவர்கள் சொல்லட்டும் , உன் மீது நீ நம்பிக்கை வை , உன் உத்தரவு இல்லாமல் யாரும் உன்னை அவமானம் படுத்த முடியாது என்று சொல்லி நம்மை மீண்டும் ஒரு நம்பிக்கை உள்ளவனாக மாற்றுகின்றது - இங்கே நமது மனம் தான் கண்ணன் - அது சொல்வதுதான் பகவத் கீதை !
Part 3: படத்தில் வரும் மதுர கானங்கள் - ஒரு சிறிய அலசல்
மதுர கானங்கள் : இந்த படத்தில் அமைந்தது போல் பாடல்கள் அவ்வளவு இனிமையாக வேறு எந்த படத்திலும் அமையவில்லை - ஆயிரம் படங்களும் , பாடல்களும் வரலாம் - ஆனால் மனதில் நிற்பவை வெகு சில படங்களும் , பாடல்களும் - அப்படி பட்ட படம் தான் கர்ணன் - அதில் வந்தவை எல்லாமே மதுர கானங்கள்
1. உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது என்பது வல்லவன் வகுத்ததடா- கர்ணா வருவதை எதிர்கொள்ளடா -------------------
கர்ணா உன்னை மரணம் தழுவ விரும்பவில்லை - நீ செய்த கொடைகளோ மிகவும் அதிகம் - என் சக்தியால் உன்னை வீழ்த்த முடியவில்லை - என் சாதுரியத்தால் தான் உன்னை வீழ்த்துகிறேன் - அதுவும் உன் அருளுடன் - விதியுடன் வரும் என்னை ஏற்று கொள் கர்ணா ! - கண்ணனின் புலம்பல் மிகவும் அழகாக வெளி வந்த பாடல்
2. என்ன கொடுப்பான் , எவை கொடுப்பான் என்று இவர்கள் எண்ணும் முன்னே -------------
நீயே உனக்கு நிகரானவன் கர்ணா - துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காது - ஆனால் எங்களிடம் இருப்பது உன்னை பற்றிய பெருமைகள் தான் - வலது கை கொடுப்பதை இடது கைக்கு தெரியாமல் தர்மம் செய்தாய் - உன்னிடம் தருமம் பெற்றவர் யார் - சாதாரண குடி மகன் முதல் அந்த பரந்தாமன் வரை அல்லவா - யார் உன்னை விட்டு வைத்தனர் கர்ணா ? அப்படி பட்ட உனக்கு விடாமல் அம்புகளால் சட்டை தைத்து கொடுத்தானே அர்ஜுனன் - அவனை என்ன செய்வது ???
3. ஆயிரம் கரங்கள் நீட்டி , அணைகின்ற தாயே போற்றி - அருள் செய்யும் முகத்தை காட்டி இருள் நீக்கம் செய்வாய் போற்றி -----------
ஒளி கடவுளுக்கு இந்த பாடல் ஒரு காயத்திரி மந்திரம்
4. போய் வா மகளே போய் வா - நெஞ்சில் புன்னகை சுமந்து போய் வா - போய் வா ----
மடியில் மழலையை சுமக்கின்றாய் - நெஞ்சில் எந்த குறையும் இல்லாமல் புன்னைகையையும் சுமந்து கொள் - உன் கணவனோ பல தர்மங்கள் செய்து புண்ணியங்களை சுமக்க முடியாமல் சுமக்கிறான் - அவன் வீரத்தின் சுவடுகளை மழலையாக உன் மடியில் நீ சுமக்கின்றாய் - உனக்கு எல்லா மங்கலங்களும் உண்டாக்கட்டும் - மகிழ்ச்சியுடன் உன் தாய் வீடு சென்று வா
5. மஞ்சள் முகம் நிறம் மாறி - மங்கை உடல் உரு மாறி - கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே ------
அன்று அஞ்சி அஞ்சி நடந்தவள் , இன்று அந்த நடையை மறந்து போனாள் - ஒரு கார்மேகத்தை மடியில் சுமக்கின்றாள் - அந்த பெருமையில் சுமப்பது ஒரு வலியாக தெரியவில்லை - இதுவரை பிறருக்கு கொடுத்தே வளர்ந்தவன் , முதல் முறையாக மழலை என்னும் இன்பத்தை மனைவியிடம் இருந்து பெற்றுக்கொண்டான்
6.
"கண்கள் எங்கே? நெஞ்சமும் எங்கே? - கண்டபோதே சென்றன அங்கே
கால்கள் இங்கே , மேனியும் இங்கே , காவல் இன்றி வந்தன இங்கே
காதலை இவ்வளவு அருமையாக விவரிக்க முடியுமா ? - தலைவனை எண்ணி உருகி பாடும் பாடல் - அவன் இல்லாமல் வாழ்வே இல்லை - துயிலாத பெண்மைக்கு ஏன் இந்த வெட்கம் என்றே தலைவிக்கு புரியவில்லை - தலைவனின் குணம் தெரியாது , குலம் தெரியாது - ஈடு ஒன்றும் கேட்காமலே தலைவி அவளை அவனிடம் தந்துவிட்டாள் - ஒரு மத யானை உயிர் கொண்டு நடப்பது போல நடந்தவனை மீண்டும்
சந்திக்க முடியுமா ?
7.மகாராஜன் உலகை ஆளலாம் - இந்த மகாராணி அவளை ஆளுவாள் -
உலக இன்பத்தை இந்த பாடலின் மூலம் அனுபவிக்கலாம் , புரிந்து கொள்ளலாம் - மான் கொடத்த சாயல் அங்கே மயங்கும் - அந்த மயக்கத்தில் தலைவியிடம் தலைவன் தஞ்சம் - வள்ளலுக்கு வள்ளலான அந்த பெண்மை அவன் செய்தகொடைகள் போறாது என்றே சொல்லும் --- இந்த பாடல் ஏனோ படத்தில் இடம் பெற வில்லை
8. கண்ணுக்கு குலமேது - கண்ணா ??
அருமையான பாடல் - கொடுப்பவர்கள் மேலோர்கள் - நீ கொடுப்பவன் அல்லவா - உன் கைகள் என்றுமே உயர்ந்து தான் இருக்கும் - தன்னம்பிக்கை ஊட்டும் பாடல் காதல் ரசத்துடன் -----
9. இரவும் நிலவும் வளரட்டுமே -------
மடி மீது தலை வைத்து விடியும் வரை இந்த பாடலை ரசிக்கலாம் - அவ்வளவு நயம் , எதார்த்தம்
10. என் உயிர் தோழி - கேளொரு செய்தி - இதுதானோ உங்கள் மன்னவன் நீதி ??
எவ்வளவு அழகாக தன்னுடைய தன்னுடைய மன குறைகளை தோழியிடம் கூறுகிறாள் தலைவி - இலை மறை காயாக - இப்பொழுது வரும் பாடல்களில் நல்ல விஷயங்களை இலை மறை காயாக சொல்கிறார்கள் - எவ்வளவு வித்தியாசங்கள் !!! - அரண்மனை அறிவான் , அரியணை அறிவான் - அந்தபுரம் ஒன்று இருப்பது தெரியுமா உன் தலைவனுக்கு ? அரசியல் விவகாரங்களை தீர்க்கும் உன் தலைவன் ஏன் என் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதில்லை ?
11. மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா -
பகவத் கீதையை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா - சுருக்கமாக அதே சமயத்தில் ,எல்லோருக்கும் புரியும் படியாக ???
Yours and mine, big & small
erase these ideas from your mind.
Then everything is yours and
you belong to everyone.
This body is not yours,
neither are you of the body.
The body is made of fire, water, air, earth and
ether, and will disappear into these elements.
But the soul is permanent - so who are you?
12. Paritranaya sadhunam vinashaya cha dushkritam. Dharma sansthapanarthaya sambhavami yuge yuge. -
For the upliftment of the good and virtuous, For the destruction of evil, For the re-establishment of the natural law, I will come, in every age
இதையே NT சொல்வதாக இருந்தால் இப்படி தான் இருக்குமோ ?!
எப்பொழுதெல்லாம் , தமிழும் , நடிப்பும் கொலை செய்ய படுகின்றதோ - எப்பொழுதெல்லாம் இறைவன் நம்பிக்கை குறைகின்றதோ , எப்பொழுதெல்லாம் தேச பக்தி மறைகின்றதோ அவைகளை sansthapanarthaya sambhavami yuge yuge. -
Part 4: NT யின் இனையற்ற நடிப்பு - என் கண்ணோட்டத்தில்
இனி NT yin நடிப்பை அலசலாமா ?
NT : படத்தில் கர்ணன் என்று பெயர் போடுவதில் இருந்து - கடைசி முடிவு வரும் வரை - நடிப்பை வாரி வாரி வழங்கிய படம் - கர்ணனின் கொடைகளும் , இவரின் நடிப்பின் கொடைகள் முன் தலை குனிந்தன
சிங்கங்கள் , பூனைகளாக மியாவ் மியாவ் என்று குரல் கொடுத்த கால கட்டத்தில் ஒரு சிங்கமாக கர்ஜிப்பது எப்படி என்று அவைகளுக்கு NT கற்பித்து கொடுத்த படம் - பல வேட்டை காரர்களை வந்தால் என்ன - துண்டை காணோம் , துணியை காணோம் என்று அவர்களை புற முதுகு காட்டி NT ஓடவைத்த படம் - ஆயிரத்தில் ஒருவனாக வரவில்லை - கோடியில் வையிரமாக NT ஜொலித்த படம் - இன்றும் என்றும் , ஏன் மகாபாரதம் என்ற இதிகாசம் இருக்கும் வரை இந்த படம் நிலைத்து நிற்கும் -
நன்றி , கிலோ விற்கு எவ்வளவு என்று கேட்க்கும் இந்த காலத்தில் - இந்த படம் ஒரு revolution யை ஏற்படுத்தியது - பார்த்தவர்கள் நேற்றைய தலைமுறை மட்டும் இல்லை , நாளய பாரதத்தை உருவாகும் இன்றைய தலைமுறையும் தான்
- வில்லில் நாண் ஏத்தி அர்ஜுனனை போட்டிக்கு கூப்பிடும் காட்ச்சியில் ஒரு ஜொலிப்பு
- சுபாங்கியின் கட்டுக்கு அடங்காமல் ஓடும் குதிரைகளை நிறுத்தி காதல் வலையில் சிக்க வைக்கும் இடத்தில் ஒரு மன்மத பொலிவு
- தான் ஒரு தேரோட்டியின் வளர்ப்பு மகன் என்று தெரிந்ததும் ஏற்படும் ஒரு நன்றி உணர்வு - அதே சமயத்தில் தன் தாயை பற்றிய கேள்விகள் - அவளை சந்தித்தவுடன் ஏற்படும் கோபம் , பின்பு வரும் பணிவு , மடியில் கிடந்தது அவள் அன்பை கேட்டுக்கும் பரிதாபம் - அவளுக்கும் வரங்கள் தந்து , தன் வாழ்விற்கு ஒரு முடிவு தேடிக்கொள்ளும் அழகு
- வந்திருப்பது இந்திரன் என்று தெரிந்தபின்னும் அவனுக்கே கண்ணன் சொல்லாத ஒரு உபதேசம் - அங்கே ஒரு பணிவான மிடுக்கு
- நண்பனிடம் ஒரு பரிவு - அவனின் மனைவியை தன் தங்கையை விட அதிகமாக மதிக்கும் ஒரு பெரும் தன்மை - சொல்வதற்கு இனி வார்த்தைகள் தமிழில் இருக்க முடியாது
Part 5 : கர்ணனும் NT யும் - ஒரு சின்ன comparison
கர்ணன் - நன்றியை தன் உயிர் நாடியாக கொண்டவன் - நன்றி பாடம் எடுத்து கொண்டது NT யிடம் - இவரை மறந்தவர்கள் பலர் - அப்படி மறந்தவர்களுக்கும் உதவிகள் புரிந்ததில் கர்ணனை விட ஒரு படி மேலாக NT இருக்கிறார்
கர்ணன் - இவனை வஞ்சித்தவர்கள் பலர் - அவன் வீரத்தை வரங்களும் , சாபங்களும் தடுத்து நிறுத்தின - NT யை வசை பொழிந்தனர் பலர் - திட்டுவதற்கு என்றே ஒரு கூலிப்படை வேலை செய்தது - கர்ணன் அவமானத்தால் ஒவ்வொரு தடவையும் கீழே விழுந்தான் - மீண்டும் எழுந்து கொள்ள அவனுக்கு நேரம் தேவை பட்டது - ஆனால் NT ஒரு Phoenix ஆக மீண்டும் மீண்டும் வெளி வந்து வெற்றி கொடியை நிலை நாட்டினார் - எழுந்து வர அவருக்கு நேரம் தேவை படவில்லை
கர்ணன் - யாருக்குமே கிடைக்காத பரந்தாமணனின் திவ்விய தரிசனம் கிடைத்து - நீங்காத புகழை பெற்றான் - யாருக்குமே கிடைக்காத பட்டங்களும் , பரிசுகளும் , கோடான கோடி ரசிகர்களின் இதயத்திலும் வாழும் பெருமையும் NT க்கு கிடைத்தது
NT கர்ணனுக்கும் ஒரு படி மேல் என்றால் மிகையாகாது
மகாபாரத சண்டை மொத்தமே 18 நாட்கள் தான் - ஆனால் கர்ணனில் NT யின் நடிப்பை அலச வேண்டுமென்றால் 18 யுகங்களும் போறாது -
இத்துடன் என் பதிவு முழுமை பெறுகின்றது - படிக்கும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றி
அன்புடன்
-
ரவி.. நன்றாக எழுதியிருக்கிறீர்கள்..கலக்கல் என்றால் மிகையல்ல..அழகாய் அனலைஸ் செய்து எழுதியிருக்கிறீர்கள்..ம்ம் எனக்குக் கொஞ்சம் வேலைப்பளு அண்ட் சோம்பல் எனில் லைட் வெர்ஷனாக எழுதிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்..
//7.மகாராஜன் உலகை ஆளலாம் - இந்த மகாராணி அவளை ஆளுவாள் - // இந்தப் பாடல் கேட்டதோடு சரி.. நான் பார்த்த போது திரையில் இடம் பெறவில்லை..
கர்ணன்.. துரத்தித் துரத்தி நான் பார்த்த படம்..இரண்டு மூன்றுமுறை ரீ ரன்னின் போது ஹவுஸ் ஃபுல்லாகி விட ஏமாந்து ஏமாந்து கடைசியில் மீனாட்சியில் பார்த்ததாய் நினைவு..
கடைசியில் கண்ணன் லிஸ்ட் போடும் காட்சி.. என்னமோ நீ கொன்னுட்டேன்னு சொல்றயேடா மடையா..எனச் சொல்லும் காட்சி மறக்க இயலாது
ந.தி..தேர்ச்சக்கரத்தில் அம்பு துளைத்து அடிபட்டு இருக்கும் துடிப்பு.. க்ளாஸ்..
ம்ம் நினைவுகளைப் பின்னோக்கி ஓடவிட்ட அலசலுக்கு மறுபடி ஒரு தாங்க்ஸ் ரவி..தொடருங்கள்..
-
ரவி சார். தங்கள் வருகையும், மனதை வருடும் நிகரற்ற கர்ணன் காவியத்தின் பதிவின் புதுப்பொலிவும் ..... நன்றிகள் நண்பரே. நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள் பற்றி வெவ்வேறு கோணங்களில் அவரவர் எழுத்துத்திறன், ஆய்வறிவு மற்றும் கருத்துவெளியீடுகள் வாயிலாக படிக்கும்போது எதிர்மறை நாயகர்களான கர்ணனையும் விக்ரமனையும் விரும்பத்தக்க நாயகர்களாக மாற்றிய மாயாஜால நடிப்பின் நடிகப்பேரரசரின் ரசிகனாக இருந்திட என்ன தவம் செய்தோம், இனி நம் பங்களிப்பு எந்தத் தரத்தில் இருக்கவேண்டும் போன்ற சிந்தனைகள் சிறகடித்துப் பறக்கின்றன. இந்தத்திரியின் மாண்புக்கும், பெருமைக்கும் உங்கள் பங்களிப்பு இன்றியமையாதது என்பதில் எந்தவொரு ஐயமும் இல்லை. மறு வெளியீட்டில் கர்ணன் காவியத்தின் முத்திரை வெற்றி ஈடு இணையில்லாதது.