-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 4.
கிழக்கு வெளுத்ததடி - கீழ்வானம் சிவந்ததடி
கதிரவன் வரவு கண்டு கமலமுகம் மலர்ந்ததடி
எங்கள் குடும்பம் இன்று ஏறெடுத்து நடந்ததடி
இன்று வந்த தென்றலுக்கு இதயமெல்லாம்
திறந்ததடி -----
------------------------------------------------------
------------------------------------------------------
" நான் என்று சொல்வதை , நாம் என்று சொல்வதால்
நாடெல்லாம் வாழும் அம்மா !"
அருமையான வரிகள் - " நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடக்கும் என்பது நீதியடி " - அவன் பித்தானா - இது படம் - TMS குரலும் , P சுசீலா வின் குரலும் இணைந்து ஒரு மதுரகானத்தை நமக்கு தரும் , காலத்தால் அழியாத பாடல் இது . உங்களுக்காக !!!
https://youtu.be/vsd_pwkPL50
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 5.
Aakasaana suryudu
"சுந்தரகாண்டா " Telugu Movie - இந்த பாடல் மிகவும் இனியதான ஒன்று - வாழ்க்கையின் எதார்த்தங்களை அழகாக சொல்லும் பாடல்
chala manchi song
https://youtu.be/3361rlABZqA
-
வெகு அழகிய பாட்டு ரவி.. தாங்க்ஸ்.. அவன் பித்தனா படம் பார்த்ததில்லை.. பாடல்கள் கேட்டிருக்கிறேன்.. இறைவன் இருக்கின்றானா ஆ மனிதன் கேட்கின்றான்.. டிஎம் எஸ் குரலும் சுசீலா குரலும் உருக்கும்..
-
நெறைய எழுதி இருக்கீங்க. இன்னும் ரெண்டு வாட்டி படிச்சுட்டு டாபிக்ல என்னோட கமெண்ட் சொல்றேன்.// தாங்க்ஸ் கல் நாயக் பொறுமையா ப் படிச்சுட்டுவாங்க..:)
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 6.
கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே... காதல் பெண்ணின் கனவில் கலந்து மிளுமிளுப்பானே... இனிக்கும் நெஞ்சில் கீதத்தை இசைக்க வந்தவன் மாறன்... அணைக்கும் கண்ணின் கனவினை விதைக்க வந்தவன் தோழன்...
ஸ்ரேயா கோஷால் இன் குரலில் ஒரு அருமையான பாடல் - படம் அன்வார்
-----------------------------
----------------------------
காதல் எனும் சிறகு கொண்டு கவிதைக் கொண்டு பேசுவான்....
https://youtu.be/XtogPAPBQPE
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 7
விண் கதிரவனுடன் , நடிப்பு கதிரவன் இணைந்து பாடும் பாடல் - நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது ?? இந்த பாடலையும் , அவரின் அழகையும் வர்ணிக்க ஒரு தனி திரியே தேவைப்படும் - பாடலிலே கதிரவன் தோன்றாவிடினும் , காட்சியிலே அழகாகத் தோன்றும் அந்த ஆதவன் , அள்ளித் தெள்ளித்த அழகினை , துள்ளிக்குதித்து தன் உடைமையாக்கிகொள்ளும் சிம்மக்குரலோன் !
https://youtu.be/LiK_4pdcvv4
-
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 8
உதய சூரியனின் பார்வையிலே - உலகம் விழித்துக்கொண்ட வேளையிலே -------
தன்னம்பிக்கையும் , தரமான வார்த்தைகளும் சேர்ந்து விளையாடும் பாடல் இது - அன்பை வரவழைத்த மக்கள் திலகம் , புதிய வானத்தையும் , புதிய பூமியையும் ஒருங்கிணைத்து அருமையாக பாடிய பாடல் - காலம் கடந்து இன்றும் இனிமையாக , பசுமையாக ஒலித்து
கொண்டிருக்கின்றது
"There is no question of which country, cast we're. We worship the nature in search of a way to love. We're proving through our life that, Our heart got higher than the height gotten by the mountain."
https://youtu.be/ax39OLi4tw0
-
தொழில் பாட்டுக்கள் – 12
முதலில் ஒரு மு.க.சு ( முன் கதைச் சுருக்கம்)
ராகுல் இளைஞன்..நல்ல எக்ஸர்ஸைஸ் உடம்பு.. (பின்ன வழக்கமா அழகன்னு ஆரம்பிச்சா அதானே என்பீர்கள்).என்ன வேலை..அது பற்றி அப்புறம்..
ஷ்ஷ்யாமா.. கொஞ்சம் சுமாரான ஆனால் ரஸ்ட்ரஸ்ட் துறுதுறு அழகி.. வளர்வது அக்கா மாமா அரவணைப்பில்.. ஷ்ஷ்யாமா என்று சொன்னதற்குக் காரணம் அவளுக்கு அவ்வப்போது திக்கும்..ஆனால் அழகாயிருக்கும்..வேலை பார்ப்பது ஒரு ப்ரைவேட் கம்பெனியில்
இருவரும் எங்கிட்டு மீட் பண்ணிக்கொண்டார்கள் என்பது முக்கியமில்லை..இருவருக்கும் கல்யாணம் பேச முடிவெடுத்தார் ஷ்யாமாவின் மாமா ரங்கசாமி.. ராகுலிடமிருந்து ஜாதகம் வாங்கி பொருத்தம் பார்க்க்க்க… பொருத்தமெல்லாம் ஓக்க்க்கே.. ஆனால்…..
ஆனால் ஒரே கோத்திரம்.. சாஸ்திரப் படி செய்துகொள்ளக் கூடாது நோ என்று விடுகிறார்.. ராகுலின் அப்பா ராகுலுக்கு, ராகுலின் காதலுக்கு உதவுவதற்காக ராகுலை வீரராகவன் என்பவருக்கு தத்துக் கொடுத்துவிட – அப்ப வேற கோத்திரம் ஆகிவிடுமே – வந்து ரங்கசாமியிடம் கேட்டால் வந்த ரிப்ளை.. நோ.,..
அக்கா அத்திம்பேருடன் அடக்கவொடுக்கமாக இருந்த, அவர்களை அம்மா அப்பாவாக நினைத்திருந்த ஷ்யாமாவிற்குக் கோபம் வருகிறது.. ராகுலையே கல்யாணம் செய்து கொள்கிறேன் எனச் சொல்ல ரங்கசாமிக்கும் கோபம்.. அப்படிப் பண்ணினா நாசமாப் போய்டுவே.. ஓஹ்.. கல்யாணம் பண்ணினாத் தானே நாசமாப் போவேன்..கல்யாணம் கட்டாமயே வாழறேன் ராகுல் கூட…
ராகுலிடம் வந்து சொன்னால் முதலில் மறுக்கிறான்..பின்னர் ஒரு வீடு எடுத்துக் கொண்டு குடித்தனம் வைக்கிறான்..முதலில் தனித்தனியாகத் தூங்கும் இருவரும் சில நாளில் சேர்ந்து ‘தாச்சி’த் தூங்கியும் விடுகிறார்கள்..
ராகுலின் தத்துத் தகப்பனார் வந்து தாலியைக் கொண்டு வருகிறார்..என்ன தான் ரிஜிஸ்டர் மேரேஜா இருந்தாலும் தாலி வேண்டும்ப்பா.. அங்க்கிள்.. நாங்க தாலி கட்டாமயே வாழலாம்னு இருக்கோம்….
கொஞ்சம் யோசித்து.’சரி’ எனப் போய்விடுகிறார்..
சூழ் நிலையில் ஷ்யாமாவிற்கு நாள் தள்ளிப் போகிறது..ஒரு நாள் ராகுலின் ஆஃப் தினம்.. அப்போது ராகுல் இப்பவாவது கல்யாணம் கட்டிக்கலாம்..குழந்தைக்கு அப்பா பேர் கேப்பாங்கள்ள..
நீங்க தான் என் குழந்தைக்கு அப்பா..இல்லையா.. ஸோ அதை எதுக்கு வெட்டியா கன்ஃபர்ம் பண்ணனும்.. ஏன் ஏன் இப்படிப் படுத்தறீங்க..நான் அலுத்துப் போய்ட்டேனா என்ன..
ராகுலுக்கும் கோபம் வருகிறது.. உனக்குத் தான்..உனக்குத் தான் என்னப்பார்த்தாலே கோபம் வருது.. நான் ஆஃபீஸ் போறேன்..
சொன்னாற்போல அவனுக்கு ஆஃபீஸிலிருந்து ஒரு அர்ஜண்ட் கால் வர…அவன் கிளம்புகிறான்..
இனி ஒருகாட்சி..
//ஸாரி முன்கதைச் சுருக்கம்னு சொல்லி நீளமாய்டுச்சு//
*
ராகுல் ஆஃபீஸ் கிளம்புகிறேன் என்று சொன்ன ஆஃபீஸ் தீயணைப்பு நிலையம்.. யெஸ்.. ராகுல் ஒரு தீயணைப்புப் படை வீரன்..
*
ஒரு காக்கை, ஒரு குடிகாரன், ஒரு ரிட்டயர்ட் ஆர்மி மேஜரின் மனைவி…
இவர்கள் மூவருக்கும் எந்த சம்பந்தமுமில்லை.. ஆனால் ஒரு நிகழ்வில் சம்பந்தப் பட்டவர்கள்..
அந்தக் காக்கை ஒரு அவலட்சணமான காக்கை..அன்று முழுதும் பறந்து திரிந்து எதுவும் பூச்சி புழுவும் கிடைக்காமல் பசி வயிற்றில் கவாங்க் கவாங்க் என இருட்டும் நேரம் அந்த ஹோட்டலுக்கு முன்னால் இருந்த எலக்ட்ரிக் கேபிளில் உட்கார்ந்து கொண்டு தன் கண்ணை அங்கிட்டும் இங்கிட்டும் சுழற்றி சுழற்றிப் பார்த்தது..
நேர் கீழே ஒரு ஹோட்டல்..அதில் ஒரு பால்கனி…என்னவோ நேரமா அல்லது ஏதாவது கோளாறா திடீரென கரெண்ட் கட்..ஜெனரேட்டரும் ஆன் ஆகவில்லை.. எனில் அந்த ஆர்மி மேஜரின் வயதான மனைவி- தன் பேரன் ரூமில் உறங்கிக் கொண்டிருக்க – சரி பால்கனியிலாவது கொஞ்சம் வெளிச்சம் வரட்டும் என மெழுகுவர்த்தியைப் பற்ற்ற்
டபக்கென்று ஞானிகளின் மனத்தில் தெரியும் ஒளியைப் போல கீழே ஒரு வெளிச்சம்..காக்கை குறுகிப் பார்த்ததில் கிழவி..கையில் வெளிச்சம்..ஹை..ஏதோ சாப்பிடுறதைக் கையில் வச்சுருக்கா பாட்டி என நினைத்த வண்ணம் தொபீரெனப் பாய்ந்து மெழுகுவர்த்தியின் உடம்பு பாகத்தை அலகால் கவ்விக்கொண்டு பறக்க காற்றும் அவ்வளவாக இல்லாததனால் நெருப்பும் அணையாமல் இருக்க ஒரு ஆங்கிளில் மெழுகு உருகி அதன் அலகைச் சுட …தொபக்….
விழுந்த எரிந்துகொண்டிருக்கும் மெழுகுவர்த்தி எங்கோ தட்டுமுட்டுச் சாமான்கள் வைத்திருக்கும் அறையா எதுவோ.. எதிலோ பட்டு படபட என நெருப்பு பிடிக்க சில மணி நேரங்களிலந்த ஹோட்டல் முழுக்க ராவணனின் இலங்கை அரண்மனைபோல் பற்றி எரிய.. அதில் பால்கனியில் இருந்த ஆர்மி மேஜரின் பேரன் அறையும் தப்பவில்லை. மேஜரின் மனைவி மட்டும் எதற்கோ வெளியேவந்தவள் மறுபடி உள்புக முடியவில்லை..
ராகுலுக்கு வந்த கால் அவனது நண்பன் சாம்சனுடையது.. ராகுல் ஒரு ஹெல்ப் பண்ணறியா ப்ளீஸ்.. எனக்கு காலைலருந்து வயத்தால.. ரொம்ப டயர்ட்டா இருக்கு.. நீ போறியா.. இன்ன ஹோட்டல்…
ஷ்யாமாவிடம் டூ விட்டுவிட்டு ராகுல் ஹோட்டலை அடைய ஏற்கெனெவே சிகப்புக்கலர் பூதமாய் தீயணைப்பு வண்டி நின்று கொண்டிருக்க சுறுசுறுப்பாய் வண்டியிலிருந்த் பைப்பை எடுத்து நீர்பாய்ச்சி நெருப்பை அணைக்க ராகுல் மெல்ல மெல்லமாய் முன்னேற..
தொடரும்..
-
தொழில் பாட்டுக்கள் - 12 தொடர்ச்சி..
மனிதனுக்கு வேடிக்கை பார்ப்பது என்பது தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம் (இந்தக்காலத்தில் அது இன்னும் மோசம்) அதுவும் விபத்தா நெருப்பா ..கண்களை அகலவிழித்து வேடிக்கை பார்ப்பார்கள்..அதுவும் கூட்டமாக..
அங்கும் அப்படித்தான் ஒரே கூட்டம் ஹோட்டலைச் சூழ்ந்திருக்க..
ராகுல் பைப்பை எடுத்து ஹோட்டல் முதல்மாடி பால்கனிக்குத் தொற்றி நெருப்பை அணைத்து பேரனைக் காப்பாற்றி மற்றவரிடம் பால்கனிமூலமாக விட்டுவிட்டு உள் நுழைந்து படிகளில் இருக்கும் நெருப்பை அணைத்து புகையுடன் தாவித்தாவி முன்சுவற்றுக்குப் பக்கமிருக்கும் வாசல் பக்கம் வர முயற்சிக்க…….
அவன் பேர் கண்ணுசாமி..செம குடிகாரன்..அதுவோ டாஸ்மார்க் இல்லாத காலம்.. எனில் கிடைத்த நாட்டுச்சரக்கை போட்டு வந்துவிட்டு என்னவோ எரியுதே..இங்க என்ன மக்கள் பூத்தானமா வேலை பாக்கறாங்க.. ஒரு பயலுக்கும் நெருப்பணைக்கத் தெரியலை..
ஹோட்டல் வாசப்பக்கச் சுவர்ப்பக்கம் ராகுல் வரும் வேளையி.ல்…
வெளியில் கண்ணுசாமி ஏற்கெனவே பைப்பில் நீர் பாய்ச்சி அணைத்துக் கொண்டிருந்த ஒரு தீயணைப்பு வீரனிடமிருந்து பைப்பைப் பிடுங்கி ராகுல் வரும் சுவர்ப்பக்கம் விட..
அந்த வீரன் பதறினான்.. பக்கத்தில் போனால் குப் வா்டை.. டேய் அங்க தண்ணீர் விடாதே ஏற்கெனவே சுட்ட சுவர்.. தாங்காது..
எல்லாம் எங்களுக்குத் தெரியும்ல…. எகத்தாளம் பேசி தண்ணீர்விட..சுவர் நெருப்புடன் கணகணத்துக்கொண்டிருந்த சுவர் – பொத்தென நெகிழ்ந்து விழுந்தது..உட்புறமாக…ராகுல் வந்துகொண்டிருந்த இடத்தில் அவன் மீது….
இங்கே ஷ்யாமாவிற்கு வலி.. பதறி ஹாஸ்பிடலில் உடன் குடித்தனக்காரர்கள் சேர்க்க…
அங்கே நெருப்போ பிரிந்த காதலி போல அவனை அணைத்துக் கொண்டது..
**
ஸோ.. இது என்னவாக்கும்ங்கறீங்களா. கதைங்க்ணா… நாவல் … ரா.கி.ரங்கராஜன் எழுதிய ராசி என்ற நாவல்..
க்ளைமாக்ஸ் அப்புறம் சொல்றேன்.. ஏன் இந்த்க் கதை சொன்னேன்..(ஆரம்பிச்சுட்டான்யா)
*
விருப்பு வெறுப்பின்றி வேகமாய்ப் பாயும்
நெருப்பும் வதந்தியும் நேர்..
உண்மை தானே..
ஆனால் நாம் பார்க்கப் போவது நெருப்பு.. (யோவ் தொழில் பாட்டுன்னுல்ல டைட்டில் போட்டிருக்க.. ப்ளீஸ் வெய்ட் மன்ச்சு..)
thodarum..
-
தொழில்பாட்டுக்கள் - 12 - பகுதி மூன்று
தீயணைப்புப் படை வீரன் என்பதும் ஒரு தொழில் தான்.. அதுவும் எப்பேர்ப்பட்டது..உயிர்களைக் காப்பது – கிட்டத் தட்ட போர்வீரனைப் போல..போர்வீரன் நாட்டுக்காக போர்புரிந்து உயிரை விடுகிறான்..இந்த தீயணைப்புப் படை வீரர்கள் மக்களுக்காக வரிந்து கட்டிக்கொண்டு காத்தாலும் அவர்கள் இறந்தால் போதிய ரிகாக்னிஷன் என்பது இல்லை என்பதே உண்மை..
தீ விபத்துக்களை க் கொஞ்சம் தொலைதூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன்.. ரொம்பவெல்லாம் இல்லை..பார்த்ததெல்லாம் படங்களில் தான். ஒரு சில சமயங்களில் தீக்காயம் பட்டிருக்கிறது.. தீபாவளிசமயங்களில்..அவையெல்லாம் புகையாய்.. பட் தீயணைப்புப் படையின் வேலை தீயணைப்பு மட்டும் இல்லாமல் எல்லாவிதமாகவும் தகவல்கள் தெரிந்திருக்க வேண்டிய ஒன்று..உடம்பு ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக வைத்துக் கொள்ளவேண்டு..ம் .. இக்கட்டான சூழ் நிலைகளில் எப்படி ரியாக்ட் செய்து ஆபத்தைச்சமாளிக்க வேண்டும் எனப் பல திறமைகள் வேண்டும்..
சமீபத்தில் பார்த்த மலையாளப் படம் ஃபயர் மேன்.. மம்முட்டியுடையது.. ஒரு பெரிய்ய்ய எல்பிஜி கேஸ் கண்ட்டெய்னர் லாரியிலிருந்து கழன்று டபக் டபக் டபக்கென தரையில் உருண்டு ஓரிடத்தில் மோதி நின்று விட அதனிடமிருந்து லீக் ஆகி வாயு விரைவாகப் பரவுகிறது.. ஒரு சிறு பொறி பட்டால் போதும் மூன்று கிலோமீட்டர்களுக்கு நெருப்புப் பரவிக் கருக்கிவிடும்..
எல்லாரையும் வெகேட் செய்ய வேண்டும் என மம்முட்டி சொல்ல போலீஸிற்கு ஒரு ப்ரச்னை.. என்னவெனில்.. ஒரு கிலோமீட்டரில் இருப்பது ஒரு ஜெயில் அதில் ஐநூறுக்கும் மேற்பட்ட கைதிகள்..
ஒரு சூழ் நிலையில் நடந்தது விபத்தல்ல என மம்முட்டி கண்டுபிடிக்க சமையல் வாயுவோ பக் பக் பக் கென திகிலெல்லாம் கொள்ளாமல் அதுபாட்டுக்குக் காற்றில் பரவ தீயணைப்பு வீரர் தலைவர் மம்முட்டி என்ன செய்தார்.. நின்றதா. ஜெயில் என்ன ஆனது.. என்றெல்லாம் சுவாரஸ்யமாகப் போகும் கதை.. பட ஆரம்பத்தில் படிக்கும் மாணவ மாணவிகளைக் கேட்பார் மம்முட்டி.. நீங்கள் என்னவாக ஆவீர்கள்.. ஒவ்வொருவரும் டாக்டர் இஞ்சினியர் ஐடி எனச் சொல்ல ஏன் யாருமே ஃபயர் மேன் எனச் சொல்ல மாட்டீர்கள் எனக் கேட்பார்.. மெளனம் தான் அவருக்குப் பதிலாகக் கிடைக்கும்..
நல்ல படம்..
தமிழில் ஃபயர் இஞ்சினை வைத்து மைக்கேல் மதன காமராஜனில் கமல் நடனம் ஆடியிருப்பார்.. ரம்பம் பம் ஆரம்பம் .. ( குஷ்பூவையும் காப்பாற்றுவார் ஆரம்பக்காட்சிகளில்) பட் நாட் ஸோ ஸீரியஸ்..
இன்னொரு படத்தைப் பார்க்குமுன் ராசி கதையை முடித்துக் கொள்ளலாம்..
*
ஷ்யாமாவிற்குவலி ஏற்பட்ட போது ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப் படுவதை அவளால் உணர முடிந்தது..
மெல்ல மயங்கி சில நேரம் கடந்து விழித்த போது ஹாஸ்பிடல் பெட்..இன்னும் மயக்கம் கலையவில்லை.. கலங்கிய விழிகளுக்கு தட்டுப் பட்டது அக்கா மாமா.. பக்கத்தில் புதிதாய்ப் பிறந்த பிஞ்சு..
அக்கா அவர் எங்கே.. – எதிர்பார்ப்புடன் எழும் கேள்வி
அக்கா பொங்கும் விம்மலை அடக்கி “ இப்ப வந்துடுவார்…”
“ஹச்சோ அக்கா..ஏதோ உத்வேகத்துல திட்டிட்டேன் .. நீங்க என்ன பண்றேள்னாக்க அவர் வர்றச்சே ஒரு தாலி வாங்கிட்டு வரச்சொல்லுங்க” மறுபடி ஷ்யாமா மயங்கிக் கண்மூட ரங்கசாமியும் ஷ்யாமாவின் அக்காவும் வெளியில் வர..ஷ்யாமாவின் அக்காவுக்கு கோபம்.. வந்தது..” எல்லாம் உஙக்ளால் தான்..ஒழுங்கா கல்யாணம் பண்ணிவச்சுருக்கலாம் இவங்களுக்கு… மாட்டேன் முடியாதுன்னு சொல்லி இவனும் ஏதோவேகத்துல சண்டை போட்டு ட்யூட்டி இல்லாத நேரத்துல ட்யூட்டிக்குப் போய்” ஷ்யாமாவின் அக்காவின் குரல் கம்ம…” இப்ப முழிச்சுக்கேட்டா நான் என்னபதில் சொல்ல”
ரங்கசாமியின் இளகிய மனது இறுகி” ம்ம் பெரியவாள்ளாம்சும்மா வைக்கலை சில விஷயங்களை..” என நினைத்து மைத்துனியின் நிலைமையில் மனம் இறங்கி…
ராம
ராம
ராம…
எனச் சொல்லிக்கொண்டேயிருந்தார் திரும்பத் திரும்ப..
*
வெகு அழகான நாவல்..சந்தர்ப்பம் கிடைத்தால் படித்துப் பாருங்கள்..
*
தீயணைப்புப் படையின் சிரமங்களைப் பற்றிசற்றே விரிவாக ச் சொல்லும் படம் விரும்புகிறேன்..
ஒரு கிராமத்தில் இரண்டு கோஷ்டி..இரண்டுக்கும் எப்போதும் சண்டை..இதற்கிடையில் வயல்வரப்புகளில் அவ்வப்போது ஏற்படும் தீவிபத்து..
கிராம மக்கள் பேசி ஒரு தீயணைப்பு இஞ்சினையும் சில வீரர்களையும் கிராமத்திலேயே நிறுத்தி வைத்துவிடுகிறார்கள்..ஹீரோவாய்ப் ப்ரஷாந்த் ஹீரோயினாய் சினேகா (முதல் படம் பட் இரண்டாவதாய் வந்தது)
அவ்வப்போது ஏற்படும் தீவிபத்துகளை அணைக்க முற்படும் போது ஹீரோவிற்கு சந்தர்ப்பவசத்தில் ஹீரோயினையும் அணைக்க முடிகிறது.. காதலால்..காதலுக்கு ஊர் எதிர்ப்பு..
கடைசியில் க்ளைமேக்ஸ் தான் உச்சமே.. நெருப்பை நீரால் தான் அணைக்க முடியும் எனத் தான் தெரியும்.. நெருப்பை நெருப்பாலேயே அணைப்பார் ஹீரோ..
கொஞ்சம் இயல்புக்கு மாறுபட்டு வந்த நல்ல படம்..பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டதால் லேட்டாக வந்து அவ்வளவாக ஓடவில்லை என நினைக்கிறேன்..
*
அதில் ஒரு பாடல்..
https://youtu.be/AiY1NryWwbo
ம்ம் ரொம்ப நீளமாய்டுச்சா.. பின்ன வாரேன்..(ஹோப் போரடிக்கவில்லை என நினைக்கிறேன்) :)