எப்போதுமே சிங்கம், புலிகளுக்கு பல்லை நறநறவென்று கடிக்காமல் fight ஓர் flight response கொடுத்து விடலாம். எலிகள்,கரப்பான்கள் ,கொசுக்கள் போன்றவற்றிற்கு?எதிர்த்து போரிடுதல் வேஸ்ட்.பல்லை கடித்து கொள்ள வேண்டியதுதான்.
எதற்கு கள்? (எல்லாமே ஒன்றல்லவா?)
Printable View
எப்போதுமே சிங்கம், புலிகளுக்கு பல்லை நறநறவென்று கடிக்காமல் fight ஓர் flight response கொடுத்து விடலாம். எலிகள்,கரப்பான்கள் ,கொசுக்கள் போன்றவற்றிற்கு?எதிர்த்து போரிடுதல் வேஸ்ட்.பல்லை கடித்து கொள்ள வேண்டியதுதான்.
எதற்கு கள்? (எல்லாமே ஒன்றல்லவா?)
நடிகர் திலகத்தின் பாதிப்பு ஸ்டேஜில்
http://i1.ytimg.com/vi/XQXTdJcme9k/maxresdefault.jpg
கார்த்திக் சார்,
ஐட்டம் நடிகையர் வரிசையில் நடிகை சத்யப்ப்ரியாவைப் பற்றி சுவைபட எழுதியுள்ளீர்கள். உங்கள் ஐட்டம் நடிகையர் தொடரில் இன்னும் எத்தனை நடிகைகள் வந்து கலக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஒன்று விடாமல் அனைவரையும் ஒவ்வொருவராக சேர்த்துக் கொண்டு வருகிறீர்கள்.
http://www.jayatv.tv/admin/images/sh...89966_tpn1.jpg
சத்யப்ப்ரியா தீபத்தில் சிறிது நேரமே வந்தாலும் நினைவில் நிற்கக் கூடிய பத்திரம். அழகாகவே செய்திருந்தார். இவருடைய குரல்வளம் அருமை. வித்தியாசமாய் இருக்கும். தெள்ளத் தெளிவான உச்சரிப்பும் இவருக்கு சொந்தம். லேசாக ஆண்மை கலந்த கிறங்க வைக்கும் குரல்.
குகநாதன் துணிச்சலுடன் விஜயகுமாரை வைத்து எடுத்த 'மஞ்சள் முகமே வருக' என்ற 'A' சர்டிபிகேட் படத்தில் முகம் சுளிக்குமளவிற்கு நடித்தவர்.
1979-இல் ஆர்.சி.சக்தி இயக்கத்தில் வெளிவந்த 'மாம்பழத்து வண்டு' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். சுருளிராஜன் நடித்த 'முயலுக்கு மூணு கால்' படத்தில் விஜய்பாபு,பானுச்சந்தர் இவர்களுடன் சேர்ந்து நடித்தார்.
'தீபம்' படத்தில் நடிகை சத்யப்ப்ரியா நடிகர் திலகத்துடன்
http://i812.photobucket.com/albums/z...ps7f80b891.jpg
'பைலட் பிரேம்நாத்' படத்தில் ஜெய்கணேஷுடன்
http://i812.photobucket.com/albums/z...pse3d9d15a.jpg
'பைலட் பிரேம்நாத்' படத்தில் தனியாக
http://i812.photobucket.com/albums/z...ps64cad808.jpg
மகளின் திருமண வரவேற்பில் நடிகை சங்கவியுடன் சத்யப்ப்ரியா
http://tamil.way2movies.com/wp-conte...ception-21.jpg
'பைலட் பிரேம்நாத்' படத்தில் ஜெய்கணேஷுடன் சத்யப்ரியா இணைந்து பாடும் 'அழகி ஒருத்தி இளநீ விக்கிற' சூப்பர் பாடல் வீடியோ
http://www.youtube.com/watch?v=AqOm9...yer_detailpage
Dear Murali ji,
திருமதி.எம்.எஸ் சுப்புலக்ஷ்மியின் சங்கராபரண ராக ஆலாபனை கேட்ட சுகம் உங்கள் இந்த விவரிப்பில் கிடைத்தது. நன்றி.
கடவுள் தந்த இரு மலர்கள் பாட்டு.சோகத்தை சாறெடுத்து disitil செய்து தன குரலால் சுசீலா வழங்குவார்.
சரணத்தில் "அலையில் மிதந்த மலர் கண்டு" ..என்று ஈஸ்வரி நுழைவார்.
அது எப்படி அந்த சோகத்தை இரக்கமாக மாற்றமுடியுமோ, ஆண்டவன்தான் அறிவார்.
"உன் நிலை கண்டு வருந்துகிறேன் அம்மா; ஆனால் இதில் நாம் செய்ய முடிவது என்ன?எல்லாம் வல்ல இறைவன் உன் துயரை நீக்கட்டும்" என்ற அடிநாதம் அவர் குரலில் ஒலிக்கும்.அதில் "இரண்டும் வாழ்வில் பெருமை பெறும்" என்ற வரியில் "இரண்டும்" என்ற இடத்தில் ஒரு out of the world சங்கதி வேறு!
இவைகளை கண்டு தலைவர் தொடர்ந்து,கொடுக்கும் reactions..
அந்த நாளும் வந்திடாதோ.!!
அன்புள்ள முரளி சார்,
எனக்கு மிகவும் பிடித்த நடிகர்திலகத்தின் மிகச்சிறந்த கருப்புவெள்ளை காவியங்களில் சிறந்த பத்துக்குள் இடம்பெறும் "இருமலர்கள்" பற்றிய கருத்தாய்வு மிக மிக அருமை. முரளி அவர்களின் ஆய்வு விமர்சனம் நன்றாக இருக்கிறது என்று சொல்வது என்பது பத்மாசுப்ரமணியத்தின் நடனம் நனறாக இருக்கிறது, எஸ்.பி.பி.யின் குரல் இனிமையாக இருக்கிறது என்று சொலவ்துபோல universal tuth என்றாலும் சொல்லித்தான் ஆக வேண்டும். பாதிப்படம் படம் பார்த்ததற்கே இவ்வளவு அருமையான ஆய்வு என்னும்போது, முழுப்படமும் பார்த்து எழுதியிருந்தால் எப்படியிருக்கும் என்று எண்ணினேன். இறைவன் செய்வது அனைத்தும் நன்மைக்கே.
ஏனென்றால் படத்தில் முதல் பாதி பத்மினி எபிஸோட். இப்படத்தில் எனக்கு பத்மினியின் நடிப்பு அவ்வளவாகப் பிடிக்காது. எனக்கு எப்போதுமே அவ்வளவாகப் பிடிக்காத கே.ஆர்.விஜயாவின் நடிப்பும் ரோலும் இப்படத்தில் பிடித்ததற்கு காரணமே பத்மினிதான். படத்தின் பின்பாதியில் மிக அட்டகாசமாக ஸ்கோர் செய்துகொண்டு போய்விடுவார் புன்னகை அரசி. ரொம்ப பாந்தமான, அமைதியான, கொஞ்சம் அப்பாவித்தனமான குடும்பத்தலைவி. கணவனும் மக்களுமே உலகம் என்று வாழும் பேதைப்பெண். (அது சரி, அந்த தீபாவளி என்ன 'விஜயா தீபாவளியா?' நம்முடைய இருபடங்களிலும் விஜயா, இதற்கு போட்டியாக வந்த 'விவசாயி'யிலும் விஜயா).
ஒவ்வொரு காட்சியையும் மிக மிக தத்ரூபமாக விவரித்திருக்கிறீர்கள். இம்மாதிரி ப்ரொபசர்கள் எங்கள் கல்லூரி நாட்களில் கிடைத்திருந்தால் டிஸ்டிங்க்ஷனில் பாசாகி இருப்போம்.
திருலோகசந்தர் உட்பட எல்லா இயக்குனர்களும் தங்கள் படங்களுக்கு ஒரு திருஷ்டிப்போட்டு வைப்பது வழக்கம். இருமலர்களில் அப்படி அமைந்தது நாகேஷ் - மனோரமா காமெடி. சீராக சென்றுகொண்டிருக்கும் படத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் அறுவை எபிஸோட். (ஏ.சி.டி. இப்படி சறுக்குவதுண்டு, இன்னொரு உதாரணம் அதே கண்களில் நாகேஷின் ஆங்கிலோ இண்டியன் பெண் வேடம்).
எப்போதாவது வந்து இப்படி எங்களை பைத்தியமாக்கி விட்டு (பொது நலம் கருதி) ஒளிந்து கொள்கிறீர்கள். பொது நலம்..???. யெஸ்... உங்கள் பதிவு வந்தால் வானத்தில் பௌர்ணமி அன்று நிலவு வந்தது போல. அந்த சமயம் வானத்திலிருக்கும் ஒரு நட்சத்திரமும் கண்களில் படாது. அதனால் மற்ற நட்சத்திரங்களும் ஒளிரட்டும் என்று நீங்கள் ஒளிந்துகொள்கிறீர்கள். ஆனால் திரி எந்நாளும் பௌர்ணமியாக இருக்க வேண்டுமென்பதே எங்களுடைய/என்னுடைய ஆசை. மெயின் பேச்சாளர் வரும்வரை கத்துக்குட்டி பேச்சாளர்களை வைத்து சமாளிப்பதுபோலத்தான் என்னுடைய பங்களிப்புகள் அமைந்துள்ளன.
தங்களை இங்கு வரவைப்பதற்காகவே தங்கள் இதயத்துக்கு நெருக்கமான படங்கள் தொலைக்காட்சிகளில் வரட்டும் என்பதே எங்கள் வேண்டல்.
//உங்கள் பதிவு வந்தால் வானத்தில் பௌர்ணமி அன்று நிலவு வந்தது போல. அந்த சமயம் வானத்திலிருக்கும் ஒரு நட்சத்திரமும் கண்களில் படாது. அதனால் மற்ற நட்சத்திரங்களும் ஒளிரட்டும் என்று நீங்கள் ஒளிந்துகொள்கிறீர்கள்// முரளி சார்..வாசுவை நான் வழி மொழிகிறேன்.. நல்ல டெடிகேட்டட் பதிவு.. மிக் நன்றாக இருந்தது..மாதவிப் பொன் மயிலாள் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று. பத்மினி கேஆர்வியைக் காட்டிலும் ந.திக்காக பார்த்த படங்களில் இதுவும் ஒன்று..
பத்மினி படம் முழுக்க குண்டுக் கொழுக்கட்டையாகத் தான் வருவார் என நினைவு..மா. பொன்மயிலாளில் இது இன்னும் நன்றாகத் தெரியும்..கூடவேவயதும்..(தி.மோ விற்குப் பிறகு வந்த படமில்லையா இது..தி.மோவில் தன் வயது 39 என்று பத்மினியே எழுதியிருந்த்தாக நினைவு..இன்னும் எழுதுங்கள்
டியர் முரளி சார்,
நீங்கள் குறிப்பிட்டிருந்த 'அன்னமிட்ட கைகளுக்கு' பாடலைப்பற்றிய சாரதா அவர்களின் பதிவு எனக்கும் பிடித்தமான ஒன்று. நடிகர்திலகம் திரி பக்கம் மூன்றிலோ அல்லது நான்கிலோ பதித்திருந்தார். அதைத்தேடிஎடுத்து தங்களுக்காக மீள்பதிவு செய்யவேண்டும் என்று நினைத்தபோது, அப்பதிவை அவர் ‘எம்.எஸ்.வி.டைம்ஸ்’ தளத்திலும் பதித்திருந்தது நினைவுக்கு வந்தது. கடலில் தேடுவதைவிட ஏரியில் தேடுவது உசிதமல்லவா? ('அப்பா, உசிதமணி' - விவேக்கின் குரல்). அப்படி தேட இறங்கியதுமே கிடைத்தது. இதோ. இனிமேல் வருபவை சாரதாவின் பங்களிப்பு.........................
"அன்னமிட்ட கைகளுக்கு...." (இரு மலர்கள்)
'மெல்லிசை மன்னரின்' இனிய இசையில் விளைந்த எத்தனையோ அற்புதப் படைப்புகளில் ஒன்றுதான் "இரு மலர்கள்". பாடல்கள் அத்தனையும் இனிமை. அவற்றில் அதிகம் பேசப்படாத ஒன்றைத்தான் இப்போது உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
உயிருக்குயிராய் காதலித்த காதலி, காரணமே சொல்லாமல் காணாமல் போய் விட, தனக்காகவே காத்திருந்தவளை மணமுடித்து அமைதியாய் வாழ்ந்திருந்த நேரத்தில், பழைய காதலி மீண்டும் தோன்றுகிறாள். அதுவும் தன்னுடைய மகளுக்கே ஆசிரியையாக. தர்ம சங்கடத்தில் கதாநாயகனும் அவனது முன்னாள் காதலியும்.
திரும்பி நிற்பவள் முன்னாள் காதலி என்ற நினைப்பில் பழைய கதைகளை கணவன் கொட்டிவிட, கேட்டுக்கொண்டிருந்த மனைவிக்கு மாபெரும் அதிர்ச்சி, கணவனின் மனதில் இப்படி ஒரு காயமா என்று. முடிவு...?. கணவனின் நிம்மதியையே பெரிதாக நினைத்த அந்த பேதைப்பெண், (உண்மையில் கணவனின் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல்) அவர்களுக்கு இடைஞ்சலாக இல்லாமல் விலகிப்போகும் முடிவெடுக்கிறாள்.
ஆனால் குழந்தை..?. அவளைப்பிரிய மனமின்றி ஆனாலும் வேறு வழியின்றி அவளைத் தூங்க வைத்து விட்டு வீட்டை விட்டு சென்று விடும் முடிவில் தான் இந்த அருமையான பாடல்.
கதாநாயகனாக 'நடிகர் திலகம்', முன்னாள் காதலியாக 'நாட்டியப்பேரொளி', மனைவியாக 'புன்னகை அரசி'. போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். மெல்லிசை மன்னரின் இனிய இசையில் வாலியின் பாடல்களில் சப்தமெல்லாம் பூப்பூத்தது.
இப்படத்தின் மற்ற பாடல்களான 'மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்' மற்றும் 'மன்னிக்க வேண்டுகிறேன்' ஆகிய பாடல்கள் களத்தின் ஜாம்பவான்களால் ஏற்கெனவே அருமையாக அலசப்பட்டு விட்டது.
'இசையரசி' பி.சுசீலா தனக்குப்போட்டியின்றி தன்னாட்சி செய்து வந்த காலம் அது. எல்.ஆர்.ஈஸ்வரி என்ற அருமையான பாடகி, கவர்ச்சிப்பாடல்களுக்கும் இரண்டாம் நிலை கதாநாயகிகளுக்கும் மட்டுமே என்ற, தமிழ்த்திரைப்படத்தின் (கொடுமையான) எழுதப்படாத விதியினால் ஒதுக்கி வைக்கப்பட, இன்னொரு இசைக்குயில் எஸ்.ஜானகி எப்போதாவது அத்தி பூத்தாற்போல் மட்டுமே பாட அழைக்கப்பட, ஜமுனாராணியும் ஜிக்கியும் முழுதுமாக ஓரம் கட்டப்பட்டிருக்க, வாணி ஜெயராம் அப்போது அறிமுகமே ஆகாமல் இருக்க....... எந்தப்பக்கம் திரும்பினாலும் சுசீலா அம்மாவின் குரலே ஒலித்துக்கொண்டிருக்க, அவரது எல்லாப்பாடல்களுமே நல்லதாக இருந்ததால், நல்லவற்றில் மிக நல்லதாக தேர்ந்தெடுத்து வானொலிகள் ஒலிபரப்ப.......
.............நல்ல பாடலான இப்பாடல் கண்டுகொள்ளாமல் விடப்பட்டது.
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்வழி நீ நடக்க தந்தை வழி பேரெடுக்க
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நான் அதைப்பார்த்திருக்க நேரமில்லை மகளே
நேரமில்லை மகளே
கைவிளக்கை ஏற்றிவைத்தேன் கோயிலுக்காக
என் தெய்வத்தின்மேல் எனக்கிருக்கும் காதலுக்காக
வாழ்ந்திருந்தேன் அன்பு என்றும் வளர்வதற்காக
ஒருதாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
தாய் வருவாள் மகளே உன் காவலுக்காக
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தாய்க்குலத்தின் மேன்மையெல்லாம் நீசொல்ல வேண்டும்
என் தலைமகளே உன் பெருமை ஊர்சொல்ல வேண்டும்
நல்லவர்கள் வாழ்த்துரைக்கும் நாள் வரவேண்டும்
அதை கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும்
கண்குளிர காண்பதற்கு நான் வர வேண்டும் .
அன்னமிட்ட கைகளுக்கு அன்பு செய்த கண்களுக்கு
உன்னை விட்டு போவதற்கு உள்ளமில்லை மகளே
உள்ளமில்லை மகளே
தான் பெற்று வளர்த்த குழந்தையைப் பிரிந்து போகிறோமே என்ற ஏக்கம் நெஞ்சைப் பிழிந்தெடுக்க சோகமே உருவாய் கே.ஆர்.விஜயா (சொல்லணுமா, அவருக்கு இந்த மாதிரி ரோல்கள் அல்வா சாப்பிடுவது போல), தன்னுடைய அம்மா எதைப்பற்றிப் பாடுகிறாள் என்று புரியாமல் கட்டிலில் கொட்டக் கொட்ட முழித்துக்கொண்டு விழியோரங்களில் கண்ணிருடன் ரோஜாரமணி. (இது குறித்து ரோஜாரமணியுடன் (தற்போது நடிகர் தருணின் அம்மா) சமீபத்தில் 'காமராஜர் அரங்கில்' நான் உரையாடியதை அடுத்த முறை விவரமாகத் தருகிறேன்).
எப்போது பார்த்தாலும் கண்களில் நீரை வரவழைக்கும் பாடல் இது. எனக்குப்பிடித்த சுசீலா அம்மாவின் மிக நீண்ட பாடல் பட்டியலில் இதுவும் உண்டு.
(thank you Saradha mam)
இரு மலர்கள் பதிவு
டியர் முரளி சார்,
தங்களுடைய இருமலர்கள் (மீள்பதிவு) மிகவும் சிறப்பாக இருந்தது. தங்களின் பதிவினைப் படித்து மீள்வதற்குள் அடுத்தடுத்த தாக்குதல்கள்.
வாசுதேவன் அவர்களின் விமர்சனமும், புகைப்பட வரிசைகளும் பார்த்துக்கொண்டே இருக்கையில், கார்த்திக் அவர்கள் தனது விமர்சனத்துடன், சாரதா மேடம் அவர்களின் முந்தைய விமர்சனத்தையும் பதிவிட்டு அடுத்தடுத்த ஆச்சர்யங்கள்.
மொத்தத்தில் இருமலர்கள் திரைப்படத்தை முதல் காட்சி ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்த முழு திருப்தியை ஏற்படுத்திய அனைவருக்கும் பாராட்டுக்கள். நன்றி.
கார்த்திக் சாரே சிறு நட்சத்திரம் என்றால்,நாங்களெல்லாம் சாதா எரி கற்கள் மட்டுமே.
ரொம்ப நாள் கழித்து வந்த முரளியின் பதிவு ஒரு அலாதி சுகம்.
சின்ன கண்ணரே, கார்த்திக் quote செய்து விட்டு ,வாசுவின் பதிவை வழி மொழிவது....விவேக் சொல்வது போல் ரைட் சிக்னல் போட்டு,லெப்ட் சைடு கைகாட்டி ,திரும்பாமே நேரா போவது போல....