இப்புத்தாண்டில் புதுப்பொங்கல் தருணத்தில் நடிகர்திலகத்தின் புகழார்வலாராக நம்முடன் இணைந்து சிறப்பித்திட திரு சுவாமி துரை வேலு அவர்களை வரவேற்கிறேன்
Printable View
ஸ்வாமி துரைவேலு சார்
வருக வருக தங்களுடைய வருகை இத்திரிக்கு புதிய பரிமாணத்தைத் தரும் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
http://img.dinamalar.com/data/uploads/E_1380273801.jpeg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர், எங்கும் எப்போதும் அவரைப் பற்றி சொல்ல மறக்காத, நமது NTFANS அமைப்பின் தலைவர் திரு ஒய்.ஜீ.மஹேந்திரா அவர்களுக்கு நம் மய்யம் திரி நண்பர்கள் சார்பிலும் என் சார்பிலும் உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
நடிப்புச் சிங்கத்தின் சங்க நாதமாக ஒலிக்கும் திரு ஒய் ஜி மகேந்திரன் அவர்களது பிறந்த நாளில் அன்பின் ராகவேந்திரன் அவர்களை அடியொற்றி என் வாழ்த்துக்களை
உரித்தாக்குகிறேன் ஒரு வேண்டுகோளுடன் .......அவர் மனது வைத்தால் நடிப்பிலக்கணத்தின் மிகச்சிறந்த நடிப்புப் பாடங்களைத் தொகுத்து ஆஸ்கார் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு வேண்டிய வழிமுறைகளை ஒருமுகப்படுத்திட இயலும்......
அவரது முயற்சிகளுக்கு நம்மால் இயன்ற பங்களிப்பினை திரி சார்பாக நல்கிட விழைகிறோம்
Welcome mr swamy duraivelu sir
Many more happy returns of the day y g mahendra sir
Quote:
காதல் கசக்குதையா / (சந்தேக) பிசாசு PART 1 தெய்வப் பிறவி
மிஷ்கினின் பிசாசு மட்டுமே காதல் பாச உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நல்ல நியாயப் பிசாசு! ஆனால் சந்தேகம் என்பது ஒரு மோசமான கொள்ளிவாய் மாயப்பிசாசு!!
காதலிக்கும்போது மேஸ்திரி என்னவெல்லாம் ஆக்ஷன் தருகிறார் எப்படியெல்லாம் கேர் எடுக்கிறார்......... என்ன ஒரு தெய்வீகச் சிரிப்பைய்யா உமது காதல் வழியும் சிரிப்பு!!Quote:
Quote:
காதல் உணர்வுகள் மென்மையானவை. கண்டிப்பாக கல்யாணத்துக்கு முன் இனிமையானவையும் கூட! கல்யாணத்தின் போதே இச்சுவை துவர்ப்பாகவும்உவர்ப்பாகவும் மாறி பின் வாழ்க்கையே கசப்பாகி விடும் சாத்தியக்கூறுகளும் அதிகமே!! காதலிக்கும் போது ருசிகண்ட பூனை ஆனால் கல்யாணத்திற்கு பிறகு சூடுகண்ட பூனையாவதேனோ?! நடிகர்திலகமும் இதற்க்கு விதி விலக்கல்ல !!!
https://www.youtube.com/watch?v=wxt4iEdakxA
https://www.youtube.com/watch?v=shPRgjoiJhw
கல்யாணத்துக்கு பிறகு சந்தேக பிசாசு ஆட்டி வைக்கும்போது.......என்ன ஒரு கடுப்பு!!!
https://www.youtube.com/watch?v=GwIwZbwhmoI
https://www.youtube.com/watch?v=nDdif7Tqyug
Quote:
The End of Part 1 on a mini series.....but NT wants to clear his doubts with M. Banumathi and Padmini in Thillaana Mohanaambaal and Saroja Devi in Aalayaamani!!
செலுலாய்ட் சோழன்
சுதாங்கன் From his Face Book post
வழக்கமாக நான் மேடையில் பேசுவது எதையும் குறிப்பு வைத்துக்கொள்வதில்லை. ஆனால் `பாசமலர்’ படத்தை இப்போது பார்த்தபோது எனக்கு பார்வை கிடைத்தது.
இந்த படத்தில் ஏழை மில் தொழிலாளியான சிவாஜி தீடிரென்று பணக்காரராகிவிடுவார். முதலாளி ஆனதும் ஆங்கில கற்றுக்கொள்கிறார். சிவாஜிக்கு எந்த மொழியில் வசனம் சொல்லிக்கொடுத்தாலும் அதை அவர் அப்படியே திருப்பி சொல்லிவிடுவார். அது ஒன்றும் வியப்பான விஷயமில்லை!
ஆனால் பணக்காரன் ஆனதும் அவரது நடை, உடை, பாவனை மாறும். நடையும் பாவனையும் கூட அவர் ரத்தத்தோடு ஊறியது.
அந்த உடை விஷயம்தான் என்னை இந்த முறை ஈர்த்தது!
அப்படியே நினைவுகளை பின்னோக்கி ஒடவிட்டேன்.
எத்தனை படங்கள், எத்தனை விதமான கதாபாத்திரங்கள், எத்தனை விதமான உடைகள். எல்லா உடைகளுமே அவருக்கு பொருந்துகிறதே என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.
அப்போதுதான் சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் தொகுத்த ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது! சிவாஜி ` ஒரு வரலாற்றின் வரலாறு’. அருமையான தொகுப்பு! அதில் ஒரு பகுதி
பத்திரிகையாளரின் பார்வையில் சிவாஜி!
http://i1234.photobucket.com/albums/...ps950e0ad8.jpg
1.10.2000 நடிகர் திலகத்தின் பிறந்த நாள் விழாவை ரியல் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தார் சென்னை காமராஜர் அரங்கில் நடத்தினார்கள்.! அதில் நானும் கலந்து கொண்டேன். அங்கே நான் பேசியதை `DIRECTORS DELIGHT’ என்கிற தலைப்பில் வெளியிட்டிருந்தார்கள்!
அன்று நான் பேசியது இதுதான்! ` பசியோடு இருப்பவனுக்கு மீனைக் கொடு’ இது அமெரிக்க பழமொழி!
`பசியோடு இருப்பவனுக்கு மீன் பிடிக்க கற்றுக் கொடு’ இது சீனப் பழமொழி.
நடிகர் திலகம் சீனப் பழமொழியில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். தன்னிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு, சில பல ஆயிரங்கள் பணமாகக் கொடுத்து, அன்றைய தேவையை மட்டும் பூர்த்தி செய்வதில் நிறைவு அடையாதவர்.
மாறாக தன்னை நாடி வந்தவர்களிடம் புதைந்துள்ள ஆற்றலை திறமையை வெளிக் கொணர்ந்து, அவர்களை, நடிகர்களாக, கதாசிரியர்களாக, இயக்குனர்களாக, பாடலாசிரியர்களாக திரையுலகில் அறிமுகப்படுத்தி, அவர்கள் யாருடைய உதவியையும் இன்றி தன் சொந்தக் கால்களில் நின்று வெற்றி பெற வைத்தவர்.
சிவாஜி ஒரு DIRECTORS DELIGHT! வயது, அனுபவம் இவற்றில் மிக இளையவராயினும், அவர்கள் இயக்குனர் என்கிற அந்தஸ்தில் இருந்தால், அவர்களிடம் பணிவாக, பொறுமையாகப் பணியாற்றுவது சிவாஜியின் சிறப்பு.
தன்னுடைய நடிப்பு மட்டுமே பிரதானமாக வெளிப்பட வேண்டும் என நினைக்காமல், இயக்குனரின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப, காட்சித் திரையில் வெளிப்பட வேண்டும் என நினைப்பவர் சிவாஜி.
HE IS NOT ONLY DIRECTOR’S DELIGHT BUT ALSO COSTUMERS & MAKE-UP MAN’S DELIGHT’
ஒப்பனைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஒப்பற்ற பொக்கிஷம், சிவாஜியின் அழகான முகம். எந்த வேடத்திற்கும் ஏற்ப அமைந்தது இறைவன் அவருக்கு கொடுத்த வரம்’
இது நான் அன்றைய கூட்டத்தில் பேசியதை எடுத்து இந்த புத்தகத்தில் போட்டிருந்தார்கள்.
இப்போது பாசமலர் பார்த்த போது நான் ஒன்றும் தவறாக பேசவில்லை என்பதை உறுதி செய்து கொண்டேன்.
ஒரு முறை சிவாஜியுடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னேன்` உங்களை விட `பாசமலர்’ படத்தில் சாவித்திரி நல்லா நடிச்சு உங்களை தூக்கி சாப்பிட்டுட்டாங்கனு தோணுது’ என்றேன்.
` அதுதான் சத்தியம். அவ இல்லாம `பாசமலர்’ படம் ஏது’?’ இது சிவாஜி உடனே சொன்ன பதில்
சிவாஜியே தொடர்ந்தார்,` அந்த படம் என்னதான் அண்ணன் தங்கை பாசத்தை வைத்து எடுத்த படமாக இருந்தாலும் கூட அது பெண்கள் சப்ஜெக்ட்! நான் மட்டும் அந்த கதையில நல்லா நடிச்சா போதாது, அந்த தங்கை எனக்கு இணையாகவோ, என்ன மிஞ்சறமாதிரியோ இருக்கணும். அப்பதான் அந்த கதை ஜெயிக்கணும்னு படம் எடுக்கும் போதே நாங்க எல்லோரும் பேசிக்கிட்டோம். சில காட்சிகள் எடுக்கும் போது, டைரக்டர் சொன்னதை விட அதிகமாக நடிப்பா சாவித்திரி! காட்சி எடுத்து முடிஞ்சதும் ஒரு நாள் பீம்பாய், பீம்சிங்கை நாங்க அப்படித்தான் கூப்பிடுவோம். கேட்டார் இந்த காட்சியை வேணும்னா இன்னொரு தடவை எடுத்திடலாமா?’ ஏன்னு கேட்டேன். இல்லை இந்த சீன்ல உங்கள் பர்ஃபாமென்ஸ் …’ என்றபடி இழுத்தார் பீம்பாய் ` நான் சொன்னேன், ` இதோ பாருங்க டைரக்டரே இந்த படத்தில் சிவாஜியை விட சாவித்திரி நல்லா நடிச்சிருக்கான்னு சொன்னாதான் இந்தப் படம் நிக்கும். டைரக்டரே இந்த படத்தை பொறுத்தவரையில் சிவாஜியை மறந்துடுங்க. இந்த படம் முடிகிறவரையில் நான் அவளுக்கு அண்ணன். தன் தங்கை மேலே உயிரையே வெச்சிருக்கிற ண்ணன், தன் தங்கை தன்னை விட படுசுட்டியா,புத்திசாலியா இருக்கணும்னு நினைப்பான்’ என்றாராம்! அதுதான் சிவாஜி! அவருக்கு படத்தின் கதாபாத்திரங்கள் தான் முக்கியம்!
அடுத்த அந்தப் படத்தின் அவர் முக்கியமாக இசையமைப்பாள்ர்கள் விஸ்வனாதன் ராமமூர்த்தி – கண்ணதாசன்!
இப்போது நான் யோசித்துப் பார்க்கிறேன்! அந்த முதல் பாடல், சாவித்திரி தூங்கிக் கொண்டிருப்பார். தங்கையின் முகத்தை பார்த்தபடியே அண்ணன் கனவு காணும் பாடல்தான் `மலர்களைப் போல தங்கை உறங்குகிறாள்! அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்’ என்று பாடல் துவங்கும்.
அடுத்த சிலவரிகளில் `அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்’ என்று அந்த் அண்ணன் கற்பனையில் மிதப்பான்! ஏழைக் குடிசையில் படுத்துக்கொண்டிருக்கிறாள் தங்கை, ` கலைந்து கனவுகள் அவள் படைத்தாள், அண்ணன் கற்பனை தேரினில் பறந்து சென்றான்; என்கிற வரிகள் வந்தவுடன் காட்சி மாறும், ஏழை சிவாஜி பார்க்க, ஒரு பணக்கார சிவாஜி, புகை மண்டலங்களோடு போய் ஒரு ஆடம்பர கட்டிலில் படுத்திருப்பதை பார்ப்பார்! வரிகள் முடிந்ததும், பாட்டின் பின்னனி இசை வரும். இப்போது அந்த பணக்காரக் கட்டிலில் படுத்திருந்த சாவித்திர், எழுந்திருப்பார், இப்போது ஒரு ஊஞ்சலில் ஆடுவார்! உடையில்,உடல் ஆபரணங்களில் ஒரு பணக்கார மிடுக்கு தெரியும். ஒரு பெண் அந்த பணக்கார சாவித்திரியின் ஊஞ்சலை ஆட்டிவிடுவாள். இப்போது மூன்று ஊஞ்சல்! மூன்று சாவித்ரிகள்! எதிரே அண்ணன் சிவாஜி நடந்து வருவார்!
`மாமணி மாளிகை மாதர்கள் புன்னகை, மங்கல மேடையின் பொன்வண்ணம் கண்டான்! மாவிலைத் தோரணம் ஆடிடக் கண்டான், மணமகன் வந்து நின்று மாலை சூடக் கண்டான்’
இப்படி போகும் வரிகள்!
காட்சிக்கான பாடலா! இசைக்கான வரிகளா, வரிகளுக்கான காட்சிகளா ?
சில வரிகளில் கண்ணதாசன் ஒரு அசத்து அசத்தியிருப்பார்!
இரு திலகங்கள் ஒரு மேடையில். ...
http://i1170.photobucket.com/albums/...pse73481c9.jpg