http://i58.tinypic.com/2ch3yw3.jpg
Printable View
இனிய நண்பர் திரு கலைவேந்தன் சார்
ஆந்திர மாநிலத்தில் நடந்த கொடிய சம்பவம் அதிர்ச்சி தருகிறது . இங்குள்ள அரசியல்வாதிகள் அரசியல் செய்கிறார்கள் நீங்கள் சொன்னது போல் கேட்க நாதியில்லை .மத்திய அரசும் வேகமான நடவடிக்கை எடுக்கவில்லை .37 எம் பிக்கள் இருந்தும் வலுவான மாநில அரசு இருந்தும் , தீவிர நடவடிக்கை எடுக்காதது வியப்பளிக்கிறது .
புரட்சி தலைவர் mgr தவறு, கார்ல் மார்க்ஸ் புரட்சி தலைவர். அது mgr இமேஜ். அவர் குழந்தைகளுக்கு பாடுவார்.
"அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தை இடம் நீர் அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்"
மணமக்களை வாழ்த்துவார்.
"இருவர் ஒன்றானால் ஒருவர் என்றானால்
இளமை முடிவதில்லை...
மணமகளை வாழ்த்துவார்
"உன் கால் பட்ட இடமெல்லாம் மலராகனும்
கை பட்ட பொருளெல்லாம் பொன்னாகணும்
உன் கண் பட்டு வழிகின்ற நீரெல்லாம்
ஆனந்த கண்ணீரே என்றாகணும்
நாகாரிகம் பேசுவார்
"புரியாத சில பேர்க்கு புது நாகரிகம்
அறியாத சில பேர்க்கு இது நாகரிகம்
முறையோடு வாழ்வோர்க்கு எது நாகரிகம்
முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரிகம்"
பெரிய மனிதர்கள் சின்னத்தனமாக நடக்கும்போது சொல்வார்
எத்தனை பெரிய மனிதனுக்கு
எத்தனை சிறிய மனமிருக்கு
எத்தனை சிறிய பறவைக்கு
எத்தனை பெரிய அறிவிருக்கு
தொழிலாளர்களுக்கு பாடுவார்
உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
மேடுபள்ளம் இல்லாத சமுதாயம் காண
என்ன வழி என்று எண்ணி பாருங்கள்
அண்ணா சொன்ன வழி சென்று நன்மை தேடுங்கள்
மீனவர்களுக்கு பாடுவார்
கடல் நீர் நடுவே பயணம் போனால்
குடிநீர் தருபவர் யாரோ...
முடிந்தால் முடியும் தொடர்ந்தால் தொடரும்
இது தான் எங்கள் வாழ்க்கை
அள்ளி அள்ளிக் கொடுப்பவர்களுக்கு பாடுவார்
நாம் பாடு பட்டு சேர்த்த பணத்தை கொடுக்கும்போதும் இன்பம்
வாடும் ஏழை மலர்ந்த முகத்தை காணும்போதும் இன்பம்
கொடுக்காதவர்களுக்கும் பாடுவார்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காக கொடுத்தான்
ஒருவருக்கா கொடுத்தான்
இல்லை ஊருக்காக கொடுத்தான்
அரசியலுக்கு வந்த பிறகு கலைஞரையும் சாடினார்
மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார்
தன் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்
மக்களின் முதல்வர் சொன்னதை போல் எனக்கு எதிரிகளே இல்லை என்று மமதையுடன் சொல்ல மாட்டார். என் எதிரிகளுக்கு தோல்வியையே பரிசாக கொடுத்து பழக்கப் பட்டவன் நான் என்பார்..
இப்படி சமூகத்தின் பல் வேறு தரப்பினருக்கும் அவர் பாடினார் - இல்லை வாய் அசைத்தார் அது mgr - அவரவர்களுக்கு சொன்ன அறிவுரையாகவே மக்கள் பார்த்தார்கள். அதனால்தான் அவர் மரணிப்பதை கூட விரும்பாத அவர் ஆதரவாளார்கள் இப்படி பாடினார்கள்..
உள்ளமது உள்ளவரை அள்ளி தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்ன செய்யும்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
எப்போதும் ஒருவனுடைய இமேஜ் முக்கியமானது. அதை இழந்தால் எல்லாவற்றையும் இழந்து விடுவோம் என்பதற்கு அந்த மூன்றெழுத்து நாயகன் ஒரு நல்ல முன்னுதாரணம்.
Thanks c.s.kumar sir