பெங்களூரு நடராஜ் தியேட்டரில் 'வசந்த மாளிகை' ஒரு பிளாஷ்பேக் (25-03-2012)
http://i1087.photobucket.com/albums/...5/102_9202.jpg
Printable View
பெங்களூரு நடராஜ் தியேட்டரில் 'வசந்த மாளிகை' ஒரு பிளாஷ்பேக் (25-03-2012)
http://i1087.photobucket.com/albums/...5/102_9202.jpg
பெங்களூரு நடராஜ் தியேட்டர் 'வசந்தமாளிகை' கொண்டாட்டங்கள் (மறு பதிவு)
http://www.youtube.com/watch?feature...&v=yac3fJ9_iRI
'வசந்த மாளிகை' காவியத்தில் உணர்ச்சிமயமான தலைவரின் கொடி நாட்டும் நடிப்புக் காட்சி
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Gj6v7Dsv_aI
http://www.thiraivideo.com/video/wp-...ha-Maligai.jpg
http://i1087.photobucket.com/albums/..._001408768.jpg
இறந்த பிறகுதான் சொர்க்கம் என்பார்கள். ஆனால் நடிகர் திலகத்தின் ரசிகப் பிள்ளைகளோ கொடுத்து வைத்தவர்கள். அதனால்தான் தங்கள் வாழ்நாளிலேயே உயிரோடிருக்கும் போதே சொர்க்கத்தை வசந்த மாளிகையில் கண்டு சொக்கிப் போனார்கள். இனி சொர்க்கம் என்று ஒன்று எதற்கு என்று மாளிகையின் மடியிலே கிறங்கிப் போனார்கள். ஜாதி, இனம், மதம், பேதம் அனைத்தையும் கடந்து மக்கள் அனைவரும் ஒருசேர மாளிகையில் சங்கமித்தார்கள். "நான் அவர் ரசிகன், நான் இவர் ரசிகன்" என்றோரெல்லாம் நாங்கள் வசந்தமாளிகையின் ரசிகர்கள் என்று காலரைத் தூக்கி விட்டுக் கொண்டார்கள். கொண்டாடினார்கள். காதலின் உண்மையான மகத்துவத்தை அறிந்தார்கள். உணர்ந்தார்கள். பிரெஞ்சுப் புரட்சி போல திரையுலகில் ஓர் புரட்சி. தமிழ் சினிமாவுக்கோர் மறுமலர்ச்சி. விளைவு? எங்கும் காணாத எழுச்சி. வசந்த மாளிகை கண்ட தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன.
"நீ எத்தனை முறை வசந்த மாளிகை பார்த்தாய்?"
"பத்து முறை"...
"ச்சே! அவ்வளவுதானா? நான் இருபது முறையாக்கும்"
என்று ரசிகரல்லாதோர் கூட பெருமை கூட்டிக் கொண்டார்கள்.
"மாமா! புதுப்படம் போட்டிருக்கான்டா.. வாடா செகண்ட் ஷோ போலாம்" என்பான். "போடா போடா போக்கத்தவனே... வசந்தமாளிகை ஓடுது.. அதுக்குப் போவானா... போறானாம் புதுப்படத்துக்கு... கெளம்புடா! டிக்கட் கெடைக்காம போகப் போவுது"...
என்று கட்டிய லுங்கியுடன் சைக்கிளில் பறந்து சென்று பார்த்த இளைஞர் கூட்டம். ரிக்ஷா வண்டி இழுத்தவன் முதல் மேல் தட்டு மேனஜர்கள் வரை துக்கங்களை தூர எறிந்துவிட்டு, தூக்கத்தை மறந்து ஏக்கங்கள் கொள்ளவைத்த மாளிகை. இரண்டாவது மூன்றாவது ரீ-ரிலீஸ்களின் போது கிடைத்த வரவேற்பு வாய் பிளக்க வைக்கும்.
நூறாவது மறு வெளியீட்டிலும் அது தொடரும்.
யாரை வேண்டுமானாலும் கேள்.. எவரை வேண்டுமானாலும் கேள்... "நல்லாயில்ல"... என்று வேண்டுமென்றே நம்மை வேதனைப்படுத்தக் கூட ஒரு வார்த்தை வராது. "பின்னிட்டாருய்யா உங்க ஆளு... அசல் குடிகாரன் கெட்டான்யா... கணேசன் கணேசன்தான்யா' என்று மகுடம் சூட்டுவான். "இரண்டு மனம் வேண்டும்" என்று கேட்கும் போதே இவன் இருமி வாந்தி எடுக்க முற்படுவான். "யாருக்காக' என்று கூக்குரலிடுகையில் "தலைவா... உனக்காக" என்று ஒருவன் கத்துவான். "எங்களுக்காக" என்று மற்றொருவன் மகிழ்ந்து சொந்தம் கொண்டாடுவான். வசதி படைத்தவன் ஒயின் கிளாஸை போஸ்ட்டரில் பார்த்தது போலப் பிடித்துப் பார்க்க முயன்று 'ஏன்' இந்த வேலை? என்று தோற்றுப் போவான். சால்வைகள் விலை ஏற்றமடைந்தன. தியேட்டர் ஊழியன் பளபளப்பாகத் தெரிவான். இடைவேளைகளில் பல லிட்டர் பால் கேண்டீன்காரன் வாங்கி வைத்தாலும் தியேட்டரில் பாதிப் பேர் 'டீ' இல்லாமல் அலைவான். ரசிகப் பிள்ளைகள் தலைவர் வராத சீன்களில் தியேட்டர் வெளிவராந்தாவில் இறைவன் புகழ் பாடிக்கொண்டிருக்கும்.
''வெறும் சட்டங்கள் தர்மங்கள் ஏதுமில்லை இன்பச் சக்கரம் சுற்றுதடா... அதில் நான் சக்கரவர்த்தியடா'' எனும் போது திருவண்ணாமலை தீபம் தியேட்டரில் தெரியும்.. ஒவ்வொருத்தர் கையிலும் கற்பூரம் எரியும். கிளாசிலிருந்து தரை வரை கைத்தட்டல் உச்சி பிளக்கும். தரை டிக்கெட் எடுத்தவன் துண்டை சுழற்றி மேலே கிடாசுவான். சில்லறைகள் சிதறும். லாட்டரி சீட் கவுண்டர் பைல்கள் திரையை மறைக்கும். 'மயக்கமென்ன' என்றவுடன் இரு கைகளையும் தூக்கிக் கொண்டு திரையை நோக்கி ஓடுவான். ஆடியன்ஸைப் பார்த்து ஆட்டமாடுவான். "உயிரோடு இருக்கும் என் காதலிக்காகக் கட்டப்பட்ட வசந்தமாளிகை" என்று உச்சரிக்கும் போது இதழ் பிரியாமல் கூடவே உச்சரிப்பான். திருக்குறளை மனப்பாடம் செய்தானோ இல்லையோ... வசந்த மாளிகையின் வசனங்களை வசப்படுத்திக் கொண்டான். "அன்புக் காணிக்கைதான் கண்ணே" என்றால் பக்கத்து சீட்டு நண்பன் மார்பில் இவன் முகம் புதைப்பான். "ஆடிவரும் வண்ண நீரோடை உன்னை பாத பூஜை செய்துவர" வரிகளில் இவன் பூக்களை கைகளில் பின்னால் ஒளித்து வைத்து தெய்வப் பாதங்களில் தூவுவான்.
'கடவுளை தண்டிக்க என்ன வழி?' என்று கையை உதறும் போது காதலியை நினைத்து கதறுவான். 'ஆனா அவகிட்டப் பிடிச்சதே அந்த அகம்பாவம்தான்' என்று சொன்னால் 'எனக்கும் அப்படித்தான் தலைவா' என்று தன்னை மறந்து கத்துவான். "குடிமகனே" என்ற குரல் ஒலிக்கும் முன்பே 'ஓ ஹ ஹா ஹா' என்று இவன் முடித்து வைப்பான். தாய்க்குலம் இருக்கைகள் நிரம்பி வழிந்திருக்கும். 'யாருக்காக'வின் போது பாதிதான் இருக்கும்.."நாசமா போறவனுங்களே! படம் பாக்க உடுறீங்களாடா" என்று தாய்க்குலம் வசவு பாடும். இவனுக்கு பாராட்டுப் பத்திரமாய் இனிக்கும். கூடை கூடையாய் மலர்களை அள்ளித் தெளித்துவிட்டு சிந்திய பூக்களை இருட்டில் அள்ளுவான் மறுபடி தூவ. திருப்தியே இருக்காது. வணக்கம் முடிந்தாலும் வாழ்க கோஷம் தொடரும். மனமில்லாமல் பிரிவான். மறுநாள் அதே கூத்து தான்.
அன்புடன்,
வாசுதேவன்.
வசந்தமாளிகை படத்தில் வரும் பாடல். யாருக்காக இது யாருக்காக பாடலின்போது டி.எம்.எஸ்ஸின் ஆதிக்கம்தான் அதில் அதிகம் இருந்ததாம். அதாவது அந்தப் பாடலில் பல திருத்தங்களைக் கூறி அதை அமல்படுத்தினாராம் டி.எம்.எஸ்.
காரணம், இந்தப் பாடலில் இந்த திருத்தங்களைச் செய்தால்தான் அது சிவாஜியின் நடிப்புக்கு பொருத்தமாக இருக்கும் என்று கூறினாராம். குறிப்பாக பாடலின் இடையே வரும் எக்கோ ... டி.எம்.எஸ். கொடுத்த ஐடியாவாம்,
முதலில் இதை படத் தயாரிப்பாளர் ஏற்கவில்லையாம். ஆனால் வைத்தால்தான் பாடுவேன் என்று கூறி விட்டாராம் டி.எம்.எஸ். பிறகென்ன பாட்டு சூப்பர் ஹிட்.
நன்றி வளர்நிலா
மரணத்தை வென்ற கண்ணதாசன்
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுகூடல்பட்டி என்னும் சிற்றூரில் செந்தமிழ் வளர்த்துப் போற்றும் செட்டியார் குலத்தில், சாத்தப்ப செட்டியார் - விசாலாட்சி அம்மையார் இணையருக்கு 'முத்தையா' எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். எட்டாவதாகப் பிறந்ததனாலோ என்னவோ, எட்டாவது வகுப்பிற்கு மேல் பள்ளிப்படிப்பு அவருக்கு எட்டவில்லை! ஆயினும் இளமையிலேயே இயற்கையாகக் கவிதை புனையும் ஆற்றல் பெற்றிருந்தார். தந்தை தந்த பாசம், தாய் ஊட்டிய பால் இவற்றுடன் கூட, பொழியும் தமிழ் மொழியும் அவரை வளர்த்தது!
கல்வி என்னும் 'கற்பக விருட்சத்தில்' பள்ளிப்படிப்பு என்னும் பசுமையான கிளை பாதியிலேயே முறிந்துபோன நிலையில், தன்னைப் பற்றிக்கொண்டிருந்த எழுத்தார்வத்தினால் புதுக்கோட்டைக்குப் புறப்பட்டு வந்து, ஓர் இதழுக்கு இளம் ஆசிரியராக அமர்ந்தார்.
அந்நாட்களில், இயற்பெயர் அல்லது இட்டுக்கொண்ட புனைப்பெயருடன் 'தாஸ்', 'தாசன்' என்ற சொல்லை இணைத்துக்கொள்வது எழுத்தாளர்கள், கவிஞர்கள், நாடகத் திரைப்பட ஆசிரியர்கள் சிலருக்கு வழக்கமாக இருந்தது.
எடுத்துக்காட்டாக 'தவத்திரு' சங்கரதாஸ் சுவாமிகள் (நாடக ஆசிரியர்) விசுவநாததாஸ் (நாடக நடிகர் - தேசபக்தர்) கோவை சி.ஏ.லட்சுமணதாஸ் (சினிமா கதை வசனப் பாடலாசிரியர்) 'புதுக்கம்பன்' பூமிபாலகதாஸ் (பாடல் ஆசிரியர்) 'கும்பகோணம்' குருசாமிதாஸ் ('டேப்' பாடகர்) 'தஞ்சை' ராமையாதாஸ் (நாடக - திரைப்படக் கதை வசனப் பாடலாசிரியர்) பாஸ்கரதாஸ் (தென்பாங்குப் பாடலாசிரியர் - பாடகர்) 'புரட்சிக்கவிஞர்' பாரதிதாசன் (சினிமா கதை வசனப் பாடலாசிரியர்) கம்பதாசன் என்னும் ராஜப்பா (சினிமா பாடலாசிரியர்) இவர்களுக்கெல்லாம் 'ஆதி' - மூலக்கவிஞனான 'கவிரத்ன' காளிதாசன் ஆடு மேய்க்கும் அறிவில்லாத மூடனாக இருந்து, அற்புதமான சமஸ்கிருதக் காவியங்களைப் படைத்த - காளி வரம் பெற்ற கவிஞன்! இவன்தான் முதன் முதலில் 'தாசன்' என்று பெயர் வைத்துக்கொண்ட முன்னோடி!
இவர்களைப் பின்பற்றியும் 'மகாகவி' சுப்பிரமணிய பாரதியாரைப் போன்று கண்ணன் மீது கொண்ட காதல் காரணமாகவும், இளைஞர் முத்தையா தன் இயற்பெயரை 'கண்ணதாசன்' என்று மாற்றிக்கொண்டு கதை, கட்டுரை, கவிதைகள் எழுதலானார்.
சிறு வயது முதல் சினிமா மீது கொண்ட மோகத்தினால் அந்தத் துறையில் ஈடுபட ஆவலுற்று சேலம் 'மாடர்ன் தியேட்டர்ஸ்' நிறுவனத்தில் சேர்ந்தார். அதன் அதிபரான டி.ஆர்.சுந்தரம் இவருடைய தமிழார்வத்தையும், பத்திரிகை அனுபவத்தையும் அறிந்து, அப்பொழுது அவர் நடத்தி வந்த 'சண்டமாருதம்' என்ற இதழின் ஆசிரியராக அமர்த்தினார்.
('சண்டமாருதம்' என்னும் சமஸ்கிருதச் சொல்லுக்கு பெருங்காற்று அல்லது சூறைக்காற்று என்று பொருள். பின்நாட்களில் கவிஞர் நடத்தி வந்த இதழுக்கு சண்டமாருதத்தின் எதிர்ப்பதமான 'தென்றல்' எனப் பெயரிட்டார்!)
http://www.dailythanthi.com/Section/...8_L_styvpf.gif
'பார் மகளே பார்' படத்தில் சிவாஜிகணேசன், சவுகார் ஜானகி
ஆனால், கண்ணதாசனின் கனவும், கவனமும் 'சினிமா' மீதே படர்ந்திருந்தது. சேலத்தில் தன் கனவு நிறைவேறாத நிலையில் அங்கிருந்து நீங்கி, கோயம்புத்தூர் சென்ட்ரல் ஸ்டூடியோவில் நுழைந்து, அன்றைய புகழ் பெற்ற ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.ராம்நாத்திடம் அப்பொழுது அவர் இயக்கிக் கொண்டிருந்த 'கன்னியின் காதலி' படத்தில் பாட்டு எழுத தனக்கு ஒரு வாய்ப்பளிக்கும்படி வேண்டினார். அவருடைய ஆர்வத்தையும், ஆவலையும் அறிந்து கொண்ட ராம்நாத் தன் படத்தில் ஒரு சூழலைச் சொல்லி அதற்கேற்றாற்போல் பாடல் எழுதும்படி கூற, சேலத்தில் இருந்து கலங்கிய மனதுடனும், கனவுகளுடனும் கோவை வந்த கண்ணதாசன், கதை நிகழும் சூழலுக்கேற்ற ஒரு பாடல் இயற்றி இயக்குநரிடம் காட்ட அது அவருக்குப் பிடித்துப்போய் ஒலிப்பதிவாகி படத்தில் இணைக்கப்பட்டது. அந்தப்பரிட்சார்த்த முதல் பாடலின் பல்லவி இது:-
"கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே."
படத்திற்கு மட்டும் அல்ல. கண்ணதாசனுக்கும் அன்றைய சூழலில் இந்தப் பல்லவி பொருந்தியது எனலாம்.
1945-க்கும், 1950-க்கும் இடைப்பட்ட அந்தக் காலக்கட்டத்தில் கண்ணதாசன் தொடங்கிய எழுத்துப்பணியும், கவிதை பாடுவதுமான அந்த வித்தை 1957-1958 வரையில் நத்தையாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது. இதற்கிடையில், 'பன் மொழிப்புலவர்' கா.அப்பாத்துரையாரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்து தனது புலமையை வளமையாக்கிக் கொண்டார். அத்துடன்கூட, திராவிட முன்னேற்றக் கழகத்தில் அவர் கொண்ட இணைப்பு, ஈடுபாடு மற்றும் 'பேரறிஞர்' அண்ணாவின் மேடைப்பேச்சு, எழுத்து, மேலும் 'புரட்சிக்கவிஞர்' பாரதிதாசனின் கவிதைகள் - இவை எல்லாமாகச் சேர்ந்து கண்ணதாசனின் தமிழுக்கும், அறிவிற்கும் தக்க 'உரம்' போட்டு வளர்த்தன.
பின்நாட்களில் கண்ணதாசன் 'நாத்திகம்' துறந்து 'ஆத்திகம்' வந்து, காஞ்சீபுரத்தில் அண்ணாவின் இல்லத்திலிருந்து நீங்கி, சங்கர மடத்தில் நுழைந்தபோதும், தன்னைத் தழுவிக்கொண்டவர்களும், தட்டிக்கொடுத்தவர்களும் ஒரேயடியாய் உதறி விட்டும்கூட, அவர் பெற்ற தமிழ் மட்டும் அவரைக் கைவிட்டுவிடவில்லை. அது அவரைக் காத்தது!
திரைப்படத்துறைத் தாழ்வாரத்தில் அவர் தவழ்ந்து கொண்டிருந்த அந்தக் காலக்கட்டத்தில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்கள் பலராலும் புகழப்பெற்று, அவரது கொடி பட உலகில் பறந்து கொண்டிருந்தது. ஒருமுறை கண்ணதாசனே கூறினார்:-
http://www.dailythanthi.com/Section/...6_L_styvpf.gif
'தாயைக்காத்த தனயன்' படத்தில் எம்.ஜி.ஆர். சரோஜாதேவி
"பாடல்கள் எழுதுவதில் எனக்குப் போட்டியாக வேறு யாரையுமே நான் கருதவில்லை. ஒரே ஒருவர் மட்டுமே எனக்குப் போட்டியாக இருக்கிறார். அவர்தான் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்! அவர்தான் என்னை முந்துகிறார்."
1959-ல் 'நடிகர் திலகம்' சிவாஜிகணேசன் நடித்து வெற்றிப்பட இயக்குனர் ஏ.பீம்சிங் இயக்கிய 'பாகப்பிரிவினை' படத்தில் கல்யாணசுந்தரம், கண்ணதாசன் இருவருமே பாடல்கள் புனைந்திருந்தனர். கைவிளங்காத தன் கணவனைக் குறித்து மனைவி பாடுவதாக கண்ணதாசன் இயற்றிய "தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ. உங்கள் அங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் அன்பு குறைவதுண்டோ."
மற்றும் குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டிக்கொண்டு சிவாஜி பாடிய...
"ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ? - நான் பிறந்த காரணத்தை நானே அறியுமுன்னே நீயும் வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே?" போன்ற காட்சிச் சூழலுக்கேற்றுக் கனிந்த கண்ணதாசனின் பாடல்கள் அவருக்குத் தேவையான புகழைத் திரட்டியும், தேடியும் கொடுத்தன.
பாகப்பிரிவினையைத் தொடர்ந்து சிவாஜி நடித்து வெளிவந்த 'பாசமலர்', 'பாவமன்னிப்பு', 'படிக்காத மேதை', 'பார்த்தால் பசி தீரும்', 'படித்தால் மட்டும் போதுமா', 'பார் மகளே பார்', 'புதிய பறவை', 'தெய்வ மகன்', 'அன்னை இல்லம்', 'அன்பளிப்பு' முதலிய படங்களில் 'மெல்லிசை மன்னர்கள்' விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில் அமைந்த கண்ணதாசனின் பாடல்கள் அனைத்துமே பிரபலமாகி 'அவருக்கு நிகர் அவரே' என்னும் நிரந்தர நிலையை ஏற்படுத்தி அவரை புகழின் சிகரத்தில் கொண்டுபோய் நிறுத்தின.
1960-ல் இருந்து 1980 வரையில் அந்த 20 ஆண்டுகளிலும் திரைப்படப்பாடல் துறையில் கண்ணதாசன் ஈடும் இணையும் இன்றித் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்தார்.
எல்லா இசையமைப்பாளர்களுமே தங்களுடைய இசையில் அவருடைய பாடல்கள் அமைவதைப் பெருமையாக எண்ணினர். அதன் காரணமாக அவர் அதிகப் படத்தயாரிப்பு நிறுவனங்களையும், அவை தயாரித்த பல நல்ல நல்ல படங்களையும் ஆக்கிரமித்துத் தனக்கென 'தனி உரிமை' ('மோனோபொலி') ஆக்கிக்கொண்டார்.
'காலம்' கண்ணதாசன் வீட்டுக் கூரையைப் பிய்த்துக்கொண்டு காசுகளைக் கொட்டியது. செந்தமிழைச் சேமித்து வைக்கத் தெரிந்த செட்டுக்கு சிக்கனத்திற்குப் புகழ் பெற்ற செட்டியார் குலத்தில் பிறந்த இந்தச் செல்வப் புதல்வருக்கு பாட்டெழுதி ஈட்டிய பொருளைப் பத்திரமாகப் பாதுகாத்து வைக்கமட்டும் ஏனோ தெரியவில்லை.
"கல்லாகப்படுத்திருந்து களித்தவர் யாருமில்லை. கைகால்கள் சோர்ந்த பின்னே துடிப்பதில் லாபமில்லை. வந்ததை வரவில் வைப்போம் சென்றதைச் செலவில் வைப்போம்" என்று 'பாவமன்னிப்பு' படத்தில் பாட்டெழுதியவர், தனக்கு வந்த பொருளை வரவில் வைக்காமல், படங்கள் தயாரித்தும், அரசியல் சேற்றில் கால் பதித்து அதனால் தேவை இல்லாத பல காரியங்களைச் செய்தும் அவர் தேடிய திரவியத்தை அதன் அருமை தெரியாமல் செலவு செய்தார் - அல்ல செலவழித்தார்.
படங்களுக்குப் பாட்டெழுதும் பணியில், அவரது காலத்திலும், அதற்கு முன்பும் எவருமே பெறாத - பெறமுடியாதப் பெருந்தொகையைப் பெற்றும், அதனை ஆக்கவும், காக்கவும் அறியாது போனார்.
1960-களில் என் கண் எதிரிலேயே தேவரண்ணன் தனது ஒவ்வொரு படத்திற்கும் ஒரே தவணையில் 20, 25 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கட்டை ஒரு தட்டில் பழங்களுடன் வைத்துக்கொடுப்பார். கவிஞர் அதை அப்படியே கொண்டு போய் மொத்தமாக தன் சொந்த புரொடக்ஷனுக்காகவோ அல்லது அதற்காக வாங்கிய கடனுக்காகவோ கொடுத்து விடுவார். அந்த நாட்களில் இருபத்தைந்தாயிரம் ரூபாய் என்பது ஒரு நல்ல புகழ் பெற்ற நடிகருடைய சம்பளம் ஆகும்.
அந்நாட்களில் எம்.ஜி.ஆர். படமாகட்டும் அல்லது சிவாஜி படமாகட்டும் கவிஞரும் நானும் கண்டிப்பாக இருப்போம். அண்ணன் எம்.எஸ்.விஸ்வநாதன், அண்ணன் கே.வி.மகாதேவன் இருவர் இசை அமைக்கும் பெரும்பாலான படங்களிலும் நாங்கள் எழுதுவோம்.
அவ்வப்போது, அந்தந்த படங்களில் நான் எழுதிய நல்ல வசனங்களை எடுத்துக்காட்டி என்னைப் பாராட்டிப் புகழ்ந்து பேசுவார். நாங்கள் இருவரும் இணைந்து பணிபுரிந்த பல வெற்றிப்படங்களில் ஒன்றான 'இதயக்கமலம்' படத்தின் நூறாவது நாள் விழாவில் என்னைப்பற்றி அவர் குறிப்பிட்டுக் கூறி வாழ்த்தியது:-
'தாமரைபோல இன்னொரு மலர் இல்லை
தாஸ் போல இன்னொரு வசனகர்த்தா இல்லை'.
இந்த அன்பின் ஆதாரத்தில், உறவும் - உரிமையும் கொண்டு கவிஞரிடம் நான் இப்படிக் கூறுவேன்:-
'அண்ணே! படம் எடுக்கிறதையும், அரசியலையும் அடியோடு விட்டுத் தொலைச்சிட்டு, பாட்டெழுதுறதுல மட்டும் கவனம் செலுத்துனீங்கன்னா, நீங்க சம்பாதிக்கிற பணத்தை வச்சு இந்த தியாகராயநகர்ல உங்க ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒரு வீடு வீதம் பத்துப்பன்னிரெண்டு வீடுகளை வாங்கலாமே'.
இதற்கு அவருடைய பதில் என்ன தெரியுமா?
'தம்பி! நீ கொடுத்து வச்சவன். அதனாலதான் கடவுள் உனக்குக் கெட்டிக்காரத்தனத்தைக் கொடுத்திருக்காரு. ஆனா நான் அப்படி இல்லை. நான் முழுக்க நனைஞ்சவன். இனி எனக்கு முக்காடு எதுக்கு? அவ்வளவுதான், விடு'.
http://www.dailythanthi.com/Section/...B_L_styvpf.gif
பாரதியார்போல, பாட்டு எழுதுவதற்கென இருந்த பழைய முறையை மாற்றி, எளிமையாக்கித் தனித்தனியாக இரண்டு இரண்டு வரிகளில் எதுகை மோனைகளை வைத்துக்கொண்டு பாடல்கள் இயற்றி, ஏனைய இளைய கவிஞர்களும் அதனைப் பின்பற்றும் வண்ணம் செய்தவர் கண்ணதாசன். எடுத்துக்காட்டாக-
"கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண் பட்டதோ அதை நானறியேன்
புண் பட்ட செய்தியைக் கேட்டவுடன் - இந்தப்
பெண் பட்ட பாட்டை யாரறிவார்?"
- படம் 'தில்லானா மோகனாம்பாள்.'
கவிதை புனையும் ஆற்றலுடன்கூட, போதிய கதை அறிவும் கண்ணதாசன் பெற்றிருந்த காரணத்தால், காட்சிச் சூழலுக்கேற்ற கருத்துமிக்கப் பாடல்களை நல்ல நயமுடன் அவரால் பாடமுடிந்தது. எடுத்த எடுப்பிலேயே, பல்லவியிலேயே, அப்பாடலைப் பாடும் பாத்திரத்தின் மனோநிலையைக் கதையை ஒட்டிப்பாடும் அனுபவ அறிவாற்றலை அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எடுத்துக்காட்டாக ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் புற்று நோய் முற்றி மரணத்தை எதிர்பார்த்திருக்கும் கணவன் - அவன் இறந்த பிறகு மறுமணம் புரிந்து கொள்ளும்படி தன் மனைவியிடம் கூற, அந்தத் துன்பச் செய்தி கேட்டுத் துடித்துப்போன அவள் பாடிய சோகப்பாடல் 'மெல்லிசை மன்னர்' விஸ்வநாதனின் மெட்டுக்குப்போட்ட பாடல் இது:-
"சொன்னது நீதானா? சொல் சொல் என்னுயிரே;
இன்னொரு கைகளிலே நான் - நான் நானா?
எனை மறந்தாயோ?
தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா?
தெருவினிலே விழுந்தாலும் வேறோர் கை தொடலாமா?
ஒரு கொடியில் ஒரு முறைதான் மலரும் மலரல்லவா?
ஒரு மனதில் ஒரு முறைதான் வளரும் உறவல்லவா!"
கண்ணதாசன் கவிதைகளையும் கரும்பனைய பாடல்களையும் குயவர் பானையை லாவகமாக வனைவதைப் போல வனைந்தார்! புனைந்தார்! யாத்தார்! கோர்த்தார்!
"கட்டித்தங்கம் வெட்டி எடுத்துக்
காதல் என்னும் சாறு பிழிந்துத்
தட்டித் தட்டி சிற்பிகள் செய்த உருவமடா, அவள்
தளதளவென்று ததும்பி நிற்கும் பருவமடா!"
என்று 1962-ல் நான் கதை வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த தேவர் பிலிம்ஸ் "தாயைக்காத்த தனயன்" படத்தில் கவிஞர் பாட்டமைத்தாரே, அதே போல, கையைத் தட்டித்தட்டித் தமிழைக் கூப்பிட்டுக் கூப்பிட்டு அவர் விரும்பிய வண்ணம் பாடிக்கொண்டார்.
ஆம், எனக்குத் தெரிந்து அவர் எழுதுகோல் ஏந்தி எழுதியதே இல்லை. பாடல் புனைவது அவருக்குக் கைவந்த கலை என்பதைவிட 'நாவந்த கலை' என்பேன் நான்!
புலவரும், போர் வீரரும் பயிற்சி அளிக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றனர். ஆனால் பிறவிக் கவிஞன் என்பவன், அவனுக்கு அவனாகவே உருவாகிக் கொள்கிறான்!
வேதாந்த, ஆன்மிக, சாஸ்திர, சம்பிரதாய, ஆசார, அனுஷ்டங்கள் அனைத்தையுமே நன்கு அறிந்திருந்தும்கூட, ஏற்கனவே அவருக்கென்று விதிக்கப்பட்டிருந்த அந்த விதியின் வலையிலிருந்து அவரால் மீள முடியவில்லை.
ஆம், சொந்தத்தாய் மண்ணை விட்டுக் கடல் கடந்து சென்று எங்கோ இருக்கும் அயல் மண்ணில் 'ஆவி' துறக்க வேண்டும் என்பதுதான் அவருடைய விதி! காலதேவன் தருணம் பார்த்து தன் காரியத்தை முடித்துக்கொண்டான்.
எனக்குத் தெரிந்து உயிரும் உணர்வுமாகக் கடல் கடந்து அயல் நாட்டிற்குச் சென்று, தாய்த்தமிழ் மொழியில் சிறப்புரைச் சொற்பொழிவாற்றி நம் மண்ணுக்குப் பெருமை சேர்த்துத் திரும்பி உயிரற்ற வெறும் உடலாக விமானத்திலிருந்து இங்கு இறக்கப்பட்ட தமிழன்னையின் தவப்புதல்வர்கள் இருவர்.
ஒருவர் திருமுருக கிருபானந்தவாரியார்! மற்றொருவர் 'கவியரசர்' கண்ணதாசன்!
ஏதோ இன்னிக்கு வெடி போடற வேலையை எஸ்வி சார் பண்ணிட்டார்..ம்ம் மன்னிச்சு விட்டுறலாம்..:)
நிழற்படங்கள், காட்சிகள் பதிவுகள் இட்ட வாசு சார் கிருஷ்ணா ஜிக்கு ஒரு ஓ..
**
வசந்த மாளிகைன்னு சொன்னா பலப் பலபதிவுகள் எண்ண அலைகள் எல்லாம் சுனாமி உயரத்திற்கு நிறைய பேரிடமிருந்து எழும்பியிருக்கின்றது..எழும்புகின்றது..எழும்பும்..உ ண்மை தான்..அனைவரும் கதை நடிப்பு என்றெல்லாம் சொல்லிவிட்ட போதினில் நா.சொ.ஒன்றுமில்லை என்பதுபோன்ற பிரமை..
மதுர கானங்கள்னு சொல்லி விட்டு படம் மட்டும் பத்தி ப் பேசினால் தவறு தான்..எனில் பாடல்கள்..
காலையில் சூரியன் உதிக்கின்றது அது
மதுவைக் கடலினில் குடிக்கின்றது
மாலை வரைக் குடித்துச் சிவக்கின்றது
என் கண்களும் அது போல் இருக்கின்றது..
குடித்துக் குடித்துப் பழக்கப் பட்ட ஒருவர் பாடுகின்ற பாட்டு..அதைப் பாடும் ந.தியின் ஸ்டைல்..எல்லோரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ எனச் சொல்லும் நகைச்சுவை.. வெகு நன்று என்பது கூட ப் பொருத்த்மான வார்த்தை இல்லை..
துரே பிறந்த நாள் துரே..
அப்படியா அப்ப ஈவ்னிங்க் பார்ட்டி தான்...என்று அடுத்த காட்சியில் ஏன் ஏன் ஏன்..
துள்ளித் துள்ளி வரும் ஆலம்..
கட்டழகானதோர் கற்பனை ராஜ்ஜியம் கட்டில் அமைந்ததயா
கட்டிலினில் அமர்ந்ததய்யா
எனப் பாட கம்பீர சிவாஜி.. இந்தக் கொக்குக்குத் தேவை கூரிய தூண்டிலில்
சிக்கிடும் மீன் மட்டுமே.. நம் தேவைகள் வாழட்டுமே.. என முடித்துத் தொடர்ந்து பாடலை முடித்ததும்..
“முதலாளி..அவங்களை என்ன செய்ய” என குடித்து மயங்கி விழுந்திருப்பவர்களை வி.எஸ்.ராகவன் கேட்க..”எல்லாரையும் லாரி புக் பண்ணி ஏத்தி அனுப்பு” என்ச் சொல்லும் அலட்சியம்.. நைஸ்..
கண்ணதாசனின் வார்த்தை விளையாடும் பாடல்..குடிமகனே பெருங்குடிமகனே..
கடலென்ன ஆழமா கருவிழி ஆழமா
இறங்குங்கள் மயங்கி நாம் நீந்தலாம்
ஆயிரம் கண்களில் அடிக்கடி நீந்தினேன்
ஆரம் பம் இன்று தானே காணலாம்..
**
இடை விட்ட பூவினில் கடை வைத்துக் காட்டுவேன் என்ற பெண்ணிற்கு
எதுவரைபோகுமோ அதுவரை போகலாம்
புதுவகை ரசனையோடு பார்க்கலாம்..
என்ற வரிகள் பிற்காலத்தில் தான் எனக்குப் புரிந்தது!
*
சொர்க்கமும் நரகமும் நம் வசமே
நான் சொல்வதை உன் மனம் கேட்கட்டுமே
சத்தியம் த்ர்மங்கள் நிலைக்கட்டுமே என பிசுசீலாவின் தழுதழுக்கும் குரலில் வாணிஸ்ரீ பாடுவதைக்
கண்சிவந்து கேட்டுக் கொண்டிருக்கும் ந.தியின் பாங்கு..
கலைமகள் கைப்பொருளே உனைக் கவனிக்க ஆளில்லையோ அப்படியே உருக்க வைக்கும் குரலில் பாடக்
கொடுத்த வரி கண்ணதாசனுடையது..
*
தேர் போலே ஒரு பொன்னூஞ்சல் அதில் தேவதை போலே நீ ஆட
பூவாடை வரும் வீதியிலே உன் புன்னகை இதழ்கள் விளையாட
கார்காலம் என விரிந்த கூந்தல் கன்னத்தின்மீதே கோலமிட
கைவளையும் மைவிழியும் கட்டியணைத்துக் கவி பாட..
அன்னத்தைத் தொட்ட கைகளினால்
மதுக் கிண்ணத்தை இனி நான் தொட மாட்டேன்
கன்னத்தில் இருக்கும் புன்னகை எடுத்து
மதுவருந்தாமல் விட மாட்டேன் (அந்தக்காலத்தில் கன்னத்தில் இருக்கும் கிண்ணத்தை எடுத்து என்று பாடிக்கொண்டிருப்பேன்)
ரொமான்ஸ் பாட்டிற்கு வெகு பொருத்தமான வரிகள்..வெகு பொருத்தமான ஜோடி..(வாணிஸ்ரீயின் கொண்டை தான் கொஞ்சம் நெருடும்) என்னா பாட்டுங்க இது..
*
இரவும் பகலும் இரண்டானால் இன்பம் துன்பம் இரண்டானால்
உறவும் பிரிவும் இரண்டானால் உள்ளம் ஒன்று போதாதே.. ஹெள ட்ரூ..
கண்களின் தண்டனை காட்சி வழி காட்சியின் தண்டனை காதல் வழி
காதலின் தண்டனை கடவுள் வழி கடவுளைத் தண்டிக்க என்ன வழி? - மனம் நொந்த
காதலனின் உணர்வுகளை சிறப்பாக வரியிலும் சிறப்பாக நடிப்பிலும் வந்த காட்சியன்றோ இது..
*
பிற்காலத்திலோ படம் வெளிவந்த காலத்திலோ .. காதலில் தோல்வியடைந்தவர்கள் கண்டிப்பாக் கீழ்க்கண்ட
வரிகளை உச்சரித்திருப்பார்கள்..
எழுதுங்கள் என் கல்லறையில்
அவள் இரக்கம் இல்லாதவள் என்று
பாடுங்கள் என் கல்லறையில்
இவன் பைத்தியக்காரன் என்று
*
நாற்பத்திரண்டு வருடங்கள் கடந்த பின்னும் கொஞ்சம் உண்மைக்குப் பக்கத்தில் வரும் வரிகள் இவை..
(என்னய்யா எழுதிக்கிட்டிருகக்..
ஒண்ணுமில்லம்மா..கொஞ்சம் வேலை!)
கண்கள் தீண்டும் காதல் என்பது
அது கண்ணில் நீரை வரவழைப்பது
பெண்கள் காட்டும் அன்பு என்பது
நம்மை பித்தனாக்கி அலையவைப்பது
காதலியின் பிரிவு தான் அந்தக் காதலனை இவ்வண்ணம்பாட வைக்கின்றது எனலாம்..
**
ம்ம் நிறைய எழுதலாம்..அப்புறம் ஒங்களுக்கெல்லாம் போரடிச்சுடும்னு சின்ன பயம்..அதான் இத்தோட நிறுத்திக்கறேன் :)
ராணி வார இதழ் தினத்தந்தி ஆரம்பித்த காலம்தொட்டே வருவது நம்மில் பலருக்கும் தெரியும். இதனை "வாராந்தரி ராணி, குடும்ப இதழ்" என்றே அழைப்பார்கள். ஆரம்ப காலங்களில் இதன் எடிட்டிங் மிகவும் திறம்பட செய்யப் பட்டு சிறப்பாக வந்தது - அதாவது, தினத்தந்தி படிப்பவர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் வந்தது. சிறுவர்களுக்கு என்று ஒரு சிறப்பு பகுதி, ஒவ்வொரு வாரமும் ஒரு தொடர் படக் கதை, சிறுவர் சிறுமியருக்கு போட்டிகள் என்று சிறுவர்கள் படிக்க இரண்டு முதல் மூன்று பக்கங்கள் ஒதுக்கப் பட்டு இருந்தது குறிப்பிடத் தக்கது.
அதில் ஆரம்ப காலத்தில் மிகவும் புகழ் பெற்ற ஒரு காமிக் ஸ்டிரிப் தொடர் குரங்கு குசலா ஆகும். இது ஒரு சிறுவர் பகுதி ஸ்டிரிப் அல்ல. ஏனெனில் இதில் வந்த கருத்துக்கள் எல்லாமே அரசியல் மற்றும் சமூக சிந்தனைகளை மைய்யமாக கொண்டு அந்த சந்தர்ப்பங்களில் நடைபெற்ற நிகழ்வுகளை சார்ந்தே அமைந்து இருக்கும். மேலும் இவர்களின் மூலமாக ராணி நிர்வாகம் தங்களுடைய கருத்துக்களையும் வெளிப்படுத்தினர்
http://lh3.ggpht.com/_sEsdnTYdgAY/Sr...jpg?imgmax=800
மேலே உள்ள படத்தில் இருக்கும் சம்பவம் 1967இல நடைபெற்றது. மிகவும் புகழ் பெற்று, பர பரப்பாக பேசப் பட்ட ஒரு சம்பவம் ஆகும். அதனை ஒட்டியே இந்த இதழின் குரங்கு குசலா அமைந்து இருந்தது. இந்த புகழ் பெற்ற காமிக்ஸ் ஸ்டிரிப் தொடரை வரைந்தவர் பெயர் வாலி ஆகும். இதற்கான கருத்தை அனேகமாக ஆசிரியர் நிர்ணயித்து இருக்க வேண்டும். சரியாக தெரியவில்லை.