திரு ராஜேஷ் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - நல்ல மனமும் , ஆரோக்கியமான குணமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தினமுமே பிறந்த நாள் தான் - தனியாக ஒரு நாளை நினைவில் வைத்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை .
அன்புடன்
Printable View
திரு ராஜேஷ் - இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் - நல்ல மனமும் , ஆரோக்கியமான குணமும் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தினமுமே பிறந்த நாள் தான் - தனியாக ஒரு நாளை நினைவில் வைத்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை .
அன்புடன்
http://3.bp.blogspot.com/_6Vr9b9OoZn..._photos_06.jpg
ராஜநடை போடும் ராஜேஷ்ஜி!
பன்மொழிப் பாடல்களில் புலமை
தென்னக மொழிகளில் திறமை
தெய்வப் பாடகியின் அடிமை
தெவிட்டாத பாடல்கள் அளிக்கும் வளமை
வாலி அய்யாவின் தமிழ் வளர்ப்பு
வான் புகழ் கொண்ட சிறப்பு
நடிகர் திலகத்தின் மீது மதிப்பு
அது என்றும் நீர் கொண்ட சிறப்பு
கன்னட கானங்களின் கர்ணன்
மலையாள கானங்களில் மன்னன்
இந்திப் பாடல்களின் இந்திரன்
சமத்துவமே நாடும் சந்திரன்
ராட்சஸியை ரசிக்கும் ரசிகன்
ராப்பகலாய் உழைக்கும் ராஜன்
முகநூல் நடத்தும் முதல்வன்
முத்தாய் விவரம்தரும் முனைவன்
அந்நிய நாட்டில் வாழும் தமிழன்
அருமைப் பாடல்கள் தருவதில் தலைவன்
மதுரை தந்த மாணிக்கம்
மறக்கவே முடியாத அன்பு ஆதிக்கம்
பிறந்தநாள் காணும் சுசீலாவின் பித்தனே
அன்புப் பித்து பிடிக்க வைத்த எத்தனே
இந்த நெய்வேலி வாசுதேவன் வாழ்த்துகிறேன்
பல நூறு ஆண்டுகள் வாழ வேண்டுமென்று.
ராஜேஷ்ஜி!
என் இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய நண்பர் திரு ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .
மதுர கான திரியின் நிறுவனர் திரு வாசுதேவன் அவர்களின் வரவு மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்கள் அனைவரின் பதிவுகளும் மிக சிறப்பாக இருக்கிறது .
https://youtu.be/gFTGHCIc9lk
பிறந்த நாள் நேற்று பிறந்த நாள் நேற்றே
திரிக்கு வந்த வேளை தெரிய வில்லை விவரம்
இருப்பினும் இல்லையென்பதற்கு தாமதம்
சிறந்தது என்பதால் தெரிந்த இப்போதாவது
வாழ்த்துவோம் பன்மொழி பாடல்கள் அறிந்த
இசையரசியின் பெருமை உணர்த்தும் இனியவர்
மதுர கானத் திரியின் மாமன்னர்களில் ஒருவர்
எனது நிலாப் பாடல்களின் பாடலாசிரியர் விவரம்
தரும் நண்பர் ராஜேஷ் அவர்களுக்கே இனிய
பிறந்த நாள் வாழ்த்துகளை அத்துடன் அவர் இதுபோல்
பல்லாண்டு பல்லாண்டு பல்வளமும் பெற்று
சிறப்பாய் வாழ வாழ்த்துவோமே!!!
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய பழைய பாடல்கள்
(நெடுந்தொடர்)
1
http://2.bp.blogspot.com/-HRNJSnA1-8...Y/s320/spb.jpg
தமிழில் கம்பீரக் குரல்களுக்கு நடுவே மிக மென்மையாய் குழைவாய் ஒரு வித்தியாசமான குரல். இரும்பை இளக வைக்கும் இனிய குரல். பலாச்சுளை குரல் பாலா.
பாலாவின் பழைய பாடல்கள் கேட்பதில் ஒரு அலாதியான சுகம் கிட்டும் என்பதில் சந்தேகமே இல்லை. இளையராஜா வருவதற்கு முன் அவர் நடிகர் திலகம், மக்கள் திலகம், ஜெமினி, ஜெய், ரவி, முத்துராமன், சிவக்குமார், விஜயகுமார் என்று தமிழில் உச்ச நட்சத்திரங்கள் அனைவருக்கும் பாடிய பாடல்கள் மீண்டும் உங்கள் நினைவுக்கு வரவேண்டும் என்பதே தொடரின் நோக்கம்.
என்னால் இயன்றவரை பாலாவின் பழைய பாடல்களை வீடியோ வடிவில் கிடைக்காத பட்சத்தில் ஆடியோ வடிவில் வழங்க உள்ளேன்.
வழக்கம் போல தங்கள் அனைவரின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.
பாலா நிறைய பழைய பாடல்கள் தமிழில் பாடியிருப்பதால் ஒவ்வொன்றையும் சுருக்கமாகத் தருகிறேன். விவரமாகத் தர ஆசைதான். (ஆனால் நேரமின்மை ராட்சஷன் இருக்கிறானே) ஆனால் முடிந்த மட்டும் எவ்வளவு பாடல்கள் இருக்கிறதோ அதில் பாதியாவது தர முயற்சிக்கிறேன்.
நிச்சயம் பாலாவின் ஒவ்வொரு பாடலும் உங்கள் அனைவரையும் குஷிப்படுத்தும் என்பதை மட்டும் இப்போதைக்கு சொல்லி விடைபெறுகிறேன்.
நன்றி!
முதல் பாடல் மட்டும் சற்றே விவரமாக.
http://cdn.raaga.com/r_img/250/t/t0002274-no-cd.jpg
முதலில் 'பால்குடம்' (1969) என்ற படத்திலிருந்து பாலா பாடிய ஒரு அற்புதமான பாடல். உடன் சுசீலா அம்மா. ஏ.வி.எம்.ராஜன்தான் ஹீரோ. (சி.க, முறைக்காதீர்கள். ஹீரோயின் பேரெல்லாம் சொல்ல முடியாது. வெவ்வேவேவ்வே)
மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்
புன்னகையின் நினைவாக
செண்பகத்தை வாங்கி வந்தேன்
பெண் முகத்தின் நினைவாக
உனக்காக....அன்பே! நான் உனக்காக.
கொஞ்சம் ஏ.எல்.ராகவன், கொஞ்சம் கண்டசாலா, கொஞ்சம் ஜேசுதாஸ், கொஞ்சம் சாய்பாபா இந்தக் குரல்களை எல்லாம் ஒரு குடுவையில் போட்டு கலந்தால் என்ன கிடைக்குமோ அது போன்ற ஒரு குரல் இந்தப் பாடலில் ஒலிக்கும் பாலாவின் குரல். ஆனால் குரல் தேன் அமுதம் இல்லாமல் வேறென்ன?
நிறைய பேர் கேட்க மறந்த பாடல். இதுதான் பாலா முதன் முதல் பாடிய பாடல் என்பவர்கள் உண்டு. 'ஹோட்டல் ரம்பா' தான் பாலாவின் முதல் படம் என்று வம்புக்கு வருபவர்கள் உண்டு. 'அதெல்லாம் இல்லை... முதல் பாடல் 'இயற்கை என்னும் இளையகன்னி' என்று 'சாந்தி நிலையம்' இல்லாமல் சாதிப்பவர் உண்டு. 'அதெல்லாம் கிடையாது... 'ஆயிரம் நிலவே வா... தான் பாலா முதன் முதல் பாடியது' என்ற அன்பு 'அடிமைப் பெண்'கள், ஆண்கள் ஒருபுறம். அதெல்லாம் நமக்கு ஏன்? பாலாவின் அமுதக் குரல் எந்தப் படத்தில் ஒலித்தால் என்ன?
நீரினில் தோன்றிய நிழலல்ல காதல்
நினைவுகள் தீட்டிய காவியப் பாடல்
உன்னை எதிர்பார்க்கும் மனமெனும் ஊஞ்சல்
இன்றே நீ வருக
இதயம் நலம் பெறவே
இதழால் தேன் தருக
உனக்காக
அன்பே!
நான் உனக்காக
முதல் பாடல் தமிழில் என்பதை நம்ப முடியாத அளவிற்கு பாலாவின் அசத்தல்.
பாடலின் நடுவில் ஒரு வில்லத்தனமான சிரிப்பொலி வருவதை மறக்காமல் கேட்டு என்ஜாய் செய்யுங்கள்.
சுசீலா அமர்க்களம். ஜாடிக்கேத்த மூடி.
காதலன் எழுதிய கடிதத்தை கவிதை நயத்துடன் காதலி பாடலாக வாசிப்பதை சுசீலா எவ்வளவு அற்புதமாக பிரதிபலிக்கிறார்!
அன்புநிறைக் காதலியே
அழகுமலர் பூங்கொடியே
திருமுகத்தில் நிலவெழுதி
இருவிழியில் மையெழுதி
உலவுகின்ற பேரழகே
உனக்கொன்று எழுதுகிறேன்
அருமையான வரிகள்தானே!
இன்னும் கவனியுங்கள். இதற்கு பின்னால் வரும் இசையமைப்பாளரின் (மெல்லிசை மன்னர் !?) அற்புதங்களை அனுபவிக்க மறந்து விடாதீர்கள் நண்பர்களே!
(ராகவேந்திரன் சார்! சில இணையதளங்களில் இசை 'சூலமங்கலம் சகோதரிகள்' என்று போட்டிருக்கிறார்கள். 'மெல்லிசை மன்னர்' என்று சில இணையதளப் பக்கங்கள் கூறுகின்றன. எது உண்மை ராகவேந்திரன் சார்? 'மெல்லிசை மன்னர்'தானே?)
இந்த இடத்தில் இசைக்கப்படும் இசைக்கருவிகளின் ஆதிக்கத்தை விளக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.)
வார்த்தைகளில் கவிதை வசித்தவர் (சுசீலா)
மலர் போல என் மனதை
பறித்ததுதான் பறித்தாயே
குழலோடு சூடாமல்
சுடுநெருப்பில் ஏன் எறிந்தாய்?
என்று திடுமென்று 'ராகத்தேன்' எடுத்து தெவிட்டாத இனிமை விருந்து படைப்பாரே!
பஞ்சமில்லா இனிமை.
கேட்டால்தான் தெரியும் மகிமை.
முதல் பாதியை பாலா ஆக்கிரமிப்பார் என்றால் இரண்டாம் பாதியில் சுசீலா சுகம் வீசுகின்றார்.
'மெல்லிசை மன்னரி'ன் மாபெரும் இசை ஜாலம். இசை பாடலுடன் பின்னி இணையும்.
ஒரே வரி! அற்புதம். ஆனால் உரிய அங்கீகாரம் கிடைத்ததா?
அப்புறம் பாடலைக் கேட்டு பாடலைப் பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை நிச்சயம் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்போதுதான் பாடலை நீங்கள் கேட்டீர்களா இல்லையா என்று நான் புரிந்து கொள்ள முடியும். நடுநடுவில் நான் டெஸ்ட் வைப்பேன்.:) பாஸாக வேண்டும்.:) என்ன புரிந்ததா?:)
இந்தப் படத்தின் வீடியோ கிடையாது. ஆனால் பாடல் பாலா புகைப்படங்களோடு வீடியோவாகக் கிடைக்கின்றது. மறக்காமல் பாலாவின் விதவிதமான போட்டோக்களையும் கண்டு களியுங்கள்.
https://youtu.be/oEyWNivZz_I
அஹோ வாரும் வாசு தேவரே.. புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்..அழகாய்ப் பாலா பற்றி ஆரம்பித்திருக்கிறீர்கள்..
//ஹீரோயின் பேரெல்லாம் சொல்ல முடியாது. வெவ்வேவேவ்வே) // ஹையாங்க்..இதுக்கு நான் ஒத்துக்கவே மாட்டேன் :)
மல்லிகைப்பூ வாங்கிவந்தேன்ல உனக்காக அ அ அன்பே ஏஏஏ நான் உனக்காக என இழுப்பது மிக அழகாக இருக்கும்..வழக்கம்போல் வீட் போய்கேட்கிறேன்..
படக் படக்க்னுமனசுல லிஸ்ட் விரியுதுங்க்ணா..வி வில் வெய்ட் ஃபார் யுவர் தொடர் அண்ட் நெக்ஸ்ட் சாங்க்க்..
நிலாதான் காணோம் எங்க போச்சு
வீடியோக்கு மதுண்ணா இருக்காக..
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 9
மலர்கள் நனைந்தன பனியாலே -
--------------------------------
--------------------------------
பொழுதும் விடிந்தது கதிராலே
இதயகமலம்
என்ன அருமையான பாடல் - ராகம் மோகனம் என்று நினைக்கிறேன் .
இரு கன்னம் குழிவிழ நகை செய்தான்
---------------------------------------------
----------------------------------------------
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
காதலின் மென்மையையும் , தாம்பத்தியத்தின் நுணுக்கங்களையும் மிகவும் அழகாக , முகத்தை சுளிக்க வைக்காமல் , பி .சுசீலாவின் குரலில் மதுர கானமாக நம்மை இன்னும் ஆக்கரமித்து கொண்டிருக்கின்றது.
மலர்கள் நனைந்தன பனியாலே - என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே - என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே - என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
.
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் - இரு
கன்னம் குழிவிழ நகை செய்தான்
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் - இரு
கன்னம் குழிவிழ நகை செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான்
என்னை நிலாவினில் துயர் செய்தான் - அதில்
எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை
சீவி முடித்தேன் நீராடி
சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை
சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி
பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
மலர்கள் நனைந்தன பனியாலே -என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
இறைவன் முருகன் திருவீட்டில் என்
இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
இறைவன் முருகன் திருவீட்டில் என்
இதயத்தினால் ஒரு விளக்கேற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உயிரெனும் காதல் நெய்யூற்றி
உன்னோடிருப்பேன் மலரடி போற்றி
மலர்கள் நனைந்தன பனியாலே என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
பொழுதும் விடிந்தது கதிராலே
சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே
மலர்கள் நனைந்தன பனியாலே என்
மனதும் குளிர்ந்தது நிலவாலே
https://youtu.be/51MO3MIWGiY
ஆயிரம் கரங்கள் நீட்டி - பதிவு 10
சுதந்திர பூமியில் பல வகை ஜனங்கலும் -
----தர்மம் எங்கே ? -------------
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்,
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை,
சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி,
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி
எவ்வளவு அருமையான , எதார்த்தமான வரிகள் - இவ்வளவு அழகாக இன்னும் தமிழில் வார்த்தைகள் கிடைக்குமா என்பது சந்தேகமே ... சமீபத்தில் மீண்டும் திரைக்கு வந்து நேப்பாள் பூகம்பத்தை ஏற்படுத்திய படம் - எல்லா பூக்களும் நடிகர் திலகத்தின் அழகையும் , நடிப்பையும் ரசிப்பதை பாருங்களேன் - தாங்கள் அவ்வளவு அழகில்லை அவரை வைத்து பார்க்கும் போது என்று தோல்வியை தழுவி பரிதாபமாக தவிப்பதையும் இந்த பாடலில் பார்க்கலாம்
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
.
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மங்கையின் கூந்தலில் மலர்கள் இருந்தால்
மங்கள மங்கை என்போம்,
மனிதனின் வாழ்கையில் நாணயம் இருந்தால்
மனிதருள் மாணிக்கம் என்போம்,
பண்ணிரண்டாண்டில் ஒரு முறை மலரும்
குருஞ்சி மலர்களைப்போலே,
தன்னலம் இல்ல தலைவர்கள் பிறப்பார்
ஆயிரத்தில் ஒரு நாளே,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்......
.
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
மணமுள்ள மலர்களில் தேனீ கூடும்
வண்டுகள் இன்னிசை பாடும்,
திறமை உள்ளவன் எங்கிருந்தாலும்
தேசம் அவனிடம் ஓடும்,
எல்லா மலரும் இறைவன் படைப்பும்
அவனது தோட்டம்,
தோட்டம் அனைத்தும் எனக்கே சொந்தம்
என்பது சுயநலக்கூட்டம்,
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
.
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
இலைகள் மறைத்தும் மணத்தை பரப்பும்
பெருமை உடையது முல்லை,
ஒருவன் புகழை ஒருவன் மறைத்து
உயரும் வரலாறில்லை,
சூரியன் போகும் திசையினில் எல்லாம்
வளையும் சூரியகாந்தி,
நேரிய வழியில் நிதமும் நடந்தால்
நெஞ்சுக்கு நிம்மதி சாந்தி,
.
சுதந்திர பூமியில் பலவகை ஜனங்களும்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்,
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்....
==================================
https://youtu.be/2gFduyZImR0
நண்பர் திரு.ராஜேஷ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கல்நாயக்,
பூக்கள் விடும் தூது திரைப்படம் 1983-ம் ஆண்டில் வெளிவந்தது (என்று சொல்லக் கேள்வி) 32 ஆண்டுகள் ஆகிறது. அப்போது, முதல் வெளியீட்டில் பார்த்திருக்கிறீர்கள் என்றால்....
எந்தவித மரியாதை விகுதியின்றி உங்களை வெறும் பெயர் மட்டுமே சொல்லி அழைக்க எனக்கு அனுமதி கொடுத்த உங்கள் பெருந்தன்மையை நினைத்தால்........ ரொம்ப நன்றிங்கய்யா.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்