http://i57.tinypic.com/idhef4.jpg
Printable View
இன்று பிற்பகல் 3 மணிக்கு மெகா டிவியில் , திரை எழில் வேந்தன் எம்.ஜி.ஆரின்
" தொழிலாளி " ஒளிபரப்பாகிறது .
http://i62.tinypic.com/2zz3z8i.jpg
அற்புதமான பாடல்கள் இசைஅமைத்த மெல்லிசை மன்னர் எம்.எஸ். வி. அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
இன்று இரவு 8 மணிக்கு
ராஜ் டிஜிடல் பிளஸ்சில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்டாக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.
நடித்த " ரகசிய போலீஸ் " ஒளிபரப்பாகிறது.
http://i62.tinypic.com/2zhh54j.jpg
இன்று பிறந்த காணும் மெல்லிசை மன்னர் திரு எம் எஸ் வி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
காமராஜருக்கு பிடிக்காத ஒரு விஷயம்...சினிமா...!
ஆனால் காமராஜரை வைத்தே ஒரு சினிமா கதையை உருவாக்கி இருக்கிறார் எம்.ஜி.ஆர்...!
அந்த கதை உருவான கதை..!
1962 ம் ஆண்டு , தேர்தல் நேரம் .. கும்மிடிப் பூண்டி ரயில்வே கேட் அருகே வந்த எம்.ஜி.ஆரின் கார் .... கேட் மூடப்பட்டிருந்ததால் அந்த இடத்தில் நிற்க...அவரது காருக்கு முன்னே ஒரு கருப்பு நிற அம்பாசிடர் கார் நின்று கொண்டிருந்தது.
எட்டிப் பார்த்த எம்.ஜி.ஆர். தனது உதவியாளரிடம் சொல்கிறார் …
” அது காமராஜர் ஐயா கார் மாதிரி தெரியுதே, போய் பார்த்துட்டு வா… ”
போய் பார்த்து விட்டு வந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் , “ஆமாங்க... காமராஜர் ஐயாதான்...” என்று சொல்ல , உடனே தன் காரை விட்டு இறங்கிப் போன எம்.ஜி.ஆர் , தலை வணங்கி காமராஜருக்கு வணக்கம் சொன்னார்...
காமராஜர் பதட்டத்துடன் தன் காரை விட்டு கீழே இறங்க முயற்சிக்க , தடுத்து விட்ட எம்.ஜி.ஆர்..காமராஜரிடம் இப்படிக் கேட்டாராம்....
“என்னங்க...ஏன் இப்படி தனியே வர்றீங்க...? செக்யூரிட்டி யாரும் இல்லையா? ”
எம்.ஜி.ஆர்.இப்படிக் கேட்கக் காரணம் என்னவென்றால் .... அப்பொழுது காமராஜர் முதல் அமைச்சர் ...
காமராஜர் சிரித்தபடி சொன்னாராம்...“என்னை யார் என்ன செஞ்சிடப் போறாங்க ..? எனக்கு எதற்கு பாடி கார்டு ? ”
எம்.ஜி.ஆரும் புன்னகைக்க ..அப்புறம் கொஞ்ச நேரம் பேசி விட்டு இருவரும் பிரிந்து சென்றார்களாம் ....
காரில் ஏறிய எம்.ஜி.ஆர் நீண்ட சிந்தனையில் ஆழ்ந்தாராம்....
நெடுநேர சிந்தனைக்குப் பின் சொன்னாராம்... “ என்னோட அடுத்த படத்துக்கு ஐடியா கிடைச்சிட்டது ...நம்ம காமராஜர் ஐயாதான் ஹீரோ...! ஒரு நாட்டுக்கு உண்மையான அரசன் யாருன்னா கத்தியில்லாமல் , தனக்கு சவால் இல்லாமல் .. யார் மக்கள் மத்தியிலே வலம் வருகிறானோ ....அவன்தான் உண்மையான தலைவன் ... இதை வச்சு ஒரு கதை எழுதணும்,” என்றாராம் எம்.ஜி.ஆர்...
அப்படி உருவான அந்தப் படம்தான் “அரச கட்டளை” ...!
இந்த நேரத்தில் காமராஜரின் எளிமையைப் பற்றிய இன்னொரு தகவல் நினைவுக்கு வருகிறது...!
காமராஜர் முதல் அமைச்சரானபோது சைரன் ஒலியுடன் அவருக்கான பாதுகாப்பு வாகனம் புறப்பட்டதாம்...உடனே அதைத் தடுத்த காமராஜர் கேட்டாராம் இப்படி...!
“நான் உயிரோடுதான இருக்கேன். அதுக்குள்ள ஏன் சங்கு ஊதுறீங்க?”
courtesy net
1960களில் தலைவர் இலங்கை விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு பயணத்தை மேற்க்கொள்வதற்காக காத்திருந்தார்.
தலைவரின் பாஸ்போர்ட் வழங்கப்படாமல் பொருமையை சோதிக்கும் அளவு தாமதம்.
தலைவரின் நெருங்கிய நண்பர் ஒருவர், அப்பொழுது முதல்வராக இருந்த காலஞ்சென்ற திரு பக்தவச்சலம் அவர்களை பாஸ்போர்ட் விஷயமாக சந்தித்து உரையாட ஏற்பாடு செய்திருந்தார்.
தலைவரின் மனதிற்குள் ஒரே போராட்டம், அப்போதய காலகட்டத்தில் தலைவர் அரசியலில் காங்கிரஸ் அல்லாத கட்சியை ஆதரித்து வந்ததால், முதல்வரை எப்படி சந்தித்து உரையாடுவது என்ற குழப்பம்.
முதல்வர் வீட்டிற்குள் நுழந்ததும், 'நீங்கள்ளாம், நமது நாட்டின் பெருமையை உயர்த்தும் கலைஞர்கள். நீங்கள்ளாம் வெளிநாடுகளில் நமது நாட்டின் பெருமையை உயர்த்தாவிடில் வேறு யாரால் முடியும். உங்கள் இலங்கைப் பயணத்திற்கு ஆதரவை காட்டுவது எங்களது கடமை, எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொடுக்க எனது ஆதரவு நிச்சயம் உண்டு, அதோடு இலங்கை பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்', என்று தலைவரிடம் கூறி அனுப்பினாராம்.
'உலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை' என்ற தலைப்பில், தலைவர் எழுதிய புத்தகத்தில் மேற்க்கூறியதை எழுதியிருக்கிறார்.
இதோடு, 'கட்சி வேற்றுமையில்லாமல் எப்படி கலைக்கு முக்கியத்துவமும் தக்க மரியாதையையும் அளித்து உதவினார்', என்றும் தலைவர் அந்நாளைய முதல்வரை புகழ்ந்து எழுதியிருக்கிறார்.
வாழ்க புரட்சி தலைவர் புகழ்.
courtesy net