வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...78&oe=56D6890D
Printable View
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
வளரும் தேயும் நிலவைப் போலே
வளரும் தேயும் நிலவைப் போலே
மறைவார் தன்னாலே
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...78&oe=56D6890D
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இரவும் பகலும் நிலைப்பதில்லை
அழகும் பொருளும் அது போலே
இளமைப் பருவம் காணும் கனவு
இருக்கும் வரையில் அழிவதில்லை
இருக்கும் வரையில் அழிவதில்லை
வருவார் ஒரு நாள்
இருப்பார் இங்கே சில நாள்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
மரத்தில் இருக்கும் இலையுதிரும்
மறு படி துளிர்க்கும் காலம் வரும்
நல்ல மனிதரின் வாழ்விலும் துன்பம் வரும்
மறையும் மீண்டும் இன்பம் வரும்
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...80&oe=56DEE473
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...ea&oe=56F05B4E
அண்ட நிழல் தேடி வரும் நொண்டிகளை
ஆல மரம் அடித்தே விரட்டுவதும் உண்டோ
வந்தவரை வாழ வைக்கும் வசதி படைச்சவங்க
தண்டனைகள் தருவதும் நன்றோ
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
கண்ணிருக்கு உங்களுக்கு கருத்திருக்கு
கையேந்தும் எங்க நிலை தெரிந்திருக்கு
கடவுளும் நீங்க தான் எங்களுக்கு
https://scontent-lhr3-1.xx.fbcdn.net...0e&oe=56EFD73A
அமுத தமிழில் எழுதும் கவிதை
புதுமை புலவன் நீ
புவி அரசர்குலமும் வணங்கும் புகழின்
புரட்சி தலைவன் நீ
இனிய நண்பர் திரு எம்ஜிஆர் பாஸ்கரன்
மக்கள் திலகத்தின் அருமையான திரைப்பட நிழற் படங்கள் மற்றும் அரசியல் நிழற்படங்களுடன் தங்களுக்கே உரித்தான கவிதை நடையில் மக்கள் திலகத்தின் பாடல்களுடன் பதிவிட்டிருக்கும் தங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .
மக்கள் திலகம் எம் ஜி ஆர்
சொன்னார் அன்று
போராட்டமே எனது வாழ்க்கை
அவர் சொன்னதை செய்தார்
செய்ததை சொன்னார்
எம் ஜி ஆர்
என்ற மூன்றெழுத்து
உலகமெங்கும்
பேசும் ஒரே எழுத்து
அதன் உரிமை
அவருக்கே
அதை பெற
அவர் செய்த தியாகங்கள்
பட்ட கஷ்டங்கள்
இளமையில் வறுமை
மிகப் பெரும் பணக்காரக் குடும்பத்திலே
பிறந்தார்.
அறிவிற் சிறந்த பெற்றோர்
அளப்பரிய செல்வம்
அதை விட செல்லம்
தாயின் செல்லப் பிள்ளையாய் பிறந்து
தமிழகத் தாய் மாரின் செல்லப் பிள்ளையாய் ஆனவர்
தேர்தல் பணிக்காக தூர பயணம்
தலைவர் தன் தோழர்களுடன்
வழியில் ஓர் மூதாட்டி
சிறு கடை ஒன்றில்
கார் நிற்கின்றது
தலைவர் காரிலிருந்து இறங்கி
மூதாட்டியிடம் பொருள் பெற்று
பணம் கொடுக்க
வாங்க மறுத்தார் அந்த தாய்
தலைவர் வற்புறுத்தி கொடுத்தார் பணம்
கேட்டனன் எத்தனை பிள்ளைகள் உங்களுக்கு
அந்தத் தாய் சொன்னார்
எனக்கு இரண்டு ஆண் பிள்ளைகள்
இளையவன்
என்னுடன் விவசாயம் பார்க்கின்றான்
மூத்தவன் சென்னையில் சினிமாவில் இருக்கின்றான்
தலைவருக்கோ வியப்பு
நானும் சினிமாவில் தான் இருக்கின்றேன்
சொல்லுங்கள் அவர் பெயரை
நான் ஆவான் செய்கின்றேன் என்றார்
எம் ஜி ஆர் தான் என் மூத்த மகன்
உணர்ச்சி ம்போங்க எம் தலைவன்
அந்தத தாயை கட்டி அணைத்து
அழுதனன்
என்ன தவம் செய்தனன் நான்
என்ன செய்யப் போகின்றேன்
இவர்களுக்கு
அத்தகைய மா தலைவர்
இப்படி எத்தனையோ தாய் மார்கள்
எம் தலைவனுக்கு
சிறு வயதில் தந்தை
இறைவனடி சேர
பணமிழந்து வீதியில்
தாயுடனும்
சகோதரருடனும்
வறுமையின் கோரப் பிடியில்
சிக்கி
எஞ்சியது இவரும்
இவரது அண்ணனும் மட்டும் தான்
7 வயதில்
நாடகக் கம்பனி
சம்பளம் உணவு மட்டும் தான்
20 வயதில்
சினிமாவில் சிறு வேடம்
30 வயதில் முதன் முதலாய்
கதாநாய வேடம்
அவ் வினாடியில் இருந்தே
இறுதி வரை
மக்கள் நலம் பேணும்
பாத்திரங்கள்
கருத்துக்கள்
காட்சிகளில்
கருத்தோடு இருந்தார்.
பாசத்துக்குரிய நண்பர்களே
நமது இதய தெய்வம் மக்கள் திலகத்தின் புகழ் பாடும்
களமே இந்த மையம் நிறுவனத்தாரின் சீரிய முயற்சியில்
உருவான நமது மக்கள் திலகம் திரி.
இந்த திரி நம்மை இணைத்து நமது தலைவரின் பண்பை -
அவரின் மனிதநேயத்தை - அவரின் கலை மற்றும் அரசியல்
சாதனைகளை தினமும் நினைவு கூற பயன்பட்டு வருகின்றது.
இதன் பார்வையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து
நமது பதிவுகளை பார்த்து மகிழ்கின்றனர்.
மையம் நிறுவனத்தாரின் பிறிதொரு திரியில் நமது
இதய தெய்வத்தைப்பற்றி ஒரு நடிகர் எழுதிய (அவர் இன்று
உயிரோடு இல்லை) செய்தியை ஒருவர் பதிவிட கடந்த இரு
நாட்கள் நமது நண்பர்களும் மாற்று திரி நண்பர்களும்
தத்தமது உள்ளக்குமுறலை கொட்டி தீர்த்தனர்.
இனிமேலாவது நமது தலைவரைப்போல் நாம் அமைதி
காப்போம்.
நிச்சயம் அந்தப்பதிவு நம் அனைவரையும் மிகவும்
காயப்படுத்தி உள்ளது. அந்த திரி நண்பர்கள்
அந்த திரியின் நெறியாளர் அவர்களுக்கு அந்தப்பதிவை
நீக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
நிச்சயம் அவர்கள் திரியில் இருந்து அந்தப்பதிவை
அதன் நெறியாளர் அல்லது மையம் நிர்வாகத்தினர்
நீக்குவார்கள் என்று நம்புகிறேன்.
மாற்று திரி நண்பர்களே எங்கள் இதயதெய்வத்தைப்பற்றி
தவறான செய்திகளை பதிவிடாதீர்கள்.
அன்புடன்.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------