Originally Posted by
jaisankar68
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படப் பாடல்களைப் பதிவேற்றம் செய்த திரு. பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி. மக்கள் திலகத்தின் கடைசி படம் . பல முறை திரையில் பார்த்து மகிழ்ந்த படம். ரிலீஸ் ஆன அன்றே நான் பார்த்த மக்கள் திலகத்தின் படங்களுள் இதுவும் ஒன்று. ஆனால் தற்போது நல்ல பிரிண்ட்டில் பார்க்க இயலவில்லை. எந்த ஒரு டிவிடியிலும் கலர் சரியாக இல்லை. எங்கவீட்டுப் பிள்ளை போன்ற அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன் வந்த படங்களைக் கூட பளபளவென்ற கலரில் குறைந்தபட்சம் விசிடி அல்லது டிவிடி வடிவத்திலாவது பார்க்க முடிகிறது. ஆனால் கடைசி காலகட்டங்களில் வந்த படங்களான ஊருக்கு உழைப்பவன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் , போன்றவற்றை நல்ல பிரிண்ட்டில் பார்க்க இயலவில்லை. இது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது. மக்கள் திலகத்தின் படங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நல்ல பிரதி வைத்திருப்போர் இப்பணியினை செய்ய முன்வரவேண்டும். குறைந்தபட்சம் டிவிடியிலாவது பாதுகாக்க வேண்டும். இது என் தாழ்மையான வேண்டுகோள்.