எதுக்கும் சென்னையில் உள்ள மீனாட்சி அம்மாளிடம் செக் செய்துகொள்ளவும்.:)
Printable View
//இதே மாதிரி பல nt பாடல்களிலும் - கண்ணதாசன் இன்னும் வாழ்துகொண்டு இருக்கிறார்// உண்மை ரவி..
கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன் அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்..-
காட்டுமானை வேட்டையாடக் கலங்கவில்லையே இந்த வீட்டுமானின் உள்ளம் ஏனோ விளங்கவில்லையே..
உ.ஆ.சொல்லட்டுமே..- அது அருணோதயம்னு நினைவு..
தரையோடு வானம் விளையாடும்கோலம்
இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன் - சு.என்.சுந்தரி..
இரவல் தந்தவன் கேட்கின்றான் இல்லையென்றால் அவன் விடுவானா.. பாலும் பழமும்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது - பு.ப
ம்ம் சொல்லி க் கொண்டே போகலாம்..
"A small tribute to all great writers of this wonderful NT thread "
from
Ravi :):smokesmile:
The following two quotes are so much related to our thread and the great hubbers in this thread - let us see how are they related ----
Quote 1 :
Do not educate your child to be rich
Educate him or her to be happy
So when he or she grows up
He will know the value of things , not the price
Quote 2 :
If you can't be a pencil to write someone's happiness , then try to be a nice
Eraser to remove their sadness
This thread and great writers in this thread bring cheers to all fans of NT spread across global with their deep dedication , passion and love for NT - they know their time value of money but still dedicate their time in upholding the values of a great star /leader - the future generation will only know values of NT and not the unfair comments about him by some immature
Regarding 2nd quote : KC sir through his untiring efforts not only remains as a pencil in continuously writing happiness of many but also act as an Eraser in removing sadness of others thro' his team members .
Saluting one and all - let us further grow thro" partnership and concerted efforts of upholding NT's true values and take them to next generation :):smokesmile:
கொஞ்சம் கால யானையின் மீது ஏறி க் கொஞ்சம் பலவருடங்களுக்குப் பின்னால் நடை பழக வைத்தால் :
ஒல்லி ஒல்லி உடல் பேண்ட் சட்டை; சுருள் முடி சுமார் உருவம் - நடராஜ சுந்தரம் என் காலேஜ் மேட். கூட ப வடிவ மீசை..கொஞ்சம் நீளமாய் வளர்ந்த சைட் பர்ன் எனச் சொல்லப் படும் கிருதா, கண்களில் சிரிப்பு..உடலில் துள்ளும் இளமையுடன் யார் அந்த ஹாண்ட்ஸம் பாய்.. அட நான் தான் :)
இந்த ந.சு இருக்கிறானே அவன் யாரென்றால் மதுரை ஃபேமஸ் பொன்னுச்சாமி - சேதுராமன் நாதஸவர வித்வான்களில் பொன்னுச் சாமியின் பையன்.. அவன் சொன்ன ஒரு விஷய்ம்..
“தில்லானா மோகனாம்பாள் படப் பிடிப்பில்- என்னெல்லாம் நாதஸ்வரக் காட்சிகள் வரும்பொழுதும் அதை வாசித்த இருவரையும் வாசிக்கச் சொல்லிக் கேட்பாராம் சிவாஜி..கூர்மையாய்ப்பார்த்துக் கேட்ட பிறகு அவர்களிடமிருந்து நாதஸ்வரம் வாங்கி உடனேயே அவர்கள் செய்த முகபாவங்களைச் செய்து காண்பித்து - சரியாங்க என்பாராம்..அவர்கள் அந்த அச்சு அசல் பாவனையைப் பார்த்து வாயடைத்துப் போய்விடுவார்களாம்..அவ்வளவு அழகாக இருக்குமாம்..அதையே படத்தில் உபயோகப் படுத்தியிருந்தார் என்று அப்பா என்னிடம் சொல்லியிருக்கிறார்.”
எவ்வளவு கஷ்டமான விஷயமது..அதை அப்படியே முகத்தில் பாவனையாகக் கொண்டுவருவது ந.தியால் மட்டுமே சாத்தியம் என நினைக்கிறேன்.இதில் சரியாங்க எனக் கேட்டதில் அடக்கம் மிளிர்கிறதே...(சொல்றதெல்லாம் சரி..அது என்ன உன்னைப் பத்தியே வர்ணனை.. “மனசாட்சி..ச்சும்மா..ஒரு இதுக்குத் தான் :) )
இந்த திரியினால் எவ்வளவு நன்மைகள் - இந்த ஒரு குட்டி கதை போதும் - எவ்ளவோ stress லும் இந்த திரியை எட்டி பார்க்கும்போது , NTயை பற்றி படிக்கும்போதும் , மனம் அடையும் சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? முடியும் என்றல் அது சூரியன் மேற்கில் தான் உதயமாகிறான் என்று சொல்வதுபோல்
=======
ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த
ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக்கிட்டிருந்தான்.
பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப் பார்த்து,
மருந்து ,இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும்,
எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை.
-
கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள் சொன்னா,
‘நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு ,
ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்)
போய் உடமைபைக் காட்டுங்க!
அவர்தான் உங்களுக்ku சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்’னாள்.
-
என்னது மிருக டாக்டர்கிட்டேயா?
உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?’ன்னு சீறினான் கணவன்.
-
‘எனக்கொண்ணும் கெட்டுப் போகல!
உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு!
காலாங்காலத்தாலே கோழி மாதிரி
விடியறதுக்கு முன்னமேயே எழுந்திருக்கீங்க!
அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சிட்டு,
குரங்கு மாதிரி ‘லபக் லபக்’னு ரெண்டு வாய் தின்னுட்டு ,
பயந்தயக்குதிரை மாதிரி வேகமாக ஓடி ஆபிசுக்குப் போறீங்க!
-
அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க!
உங்களுக்கு கீழே வேலை செய்றவங்க மேலே கரடியா கத்தறீங்க!
அப்புறம் ஆபிஸ் விட்டவுடனே, ஆடு மாடுங்க மாதிரி பஸ்லே அடைஞ்சு
வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா,
நாள் பூராவும் வேலை செஞ்ச களைப்பிலே
நாய் மாதிரி என்மேலே சீறி விழறீங்க!
அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை ‘சரக் சரக்’னு முழுங்கிட்டு,
எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க!
-
மறுபடியும் விடிஞ்சா அதே மாதிரி கோழி கதைதான்!
இப்படி இருக்கிறவங்களை மனுஷ டாக்டர்
எப்படிங்க குணப்படுத்த முடியும்?
அதனாலதான் சொல்றேன்,
நாளைக்கே ஒரு கால்நடை டாக்டரைப் போய் பாருங்க!”
என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.
-
என்ன பதில் சொல்வதென்று தெரியாம கணவன் முழிக்க,
கோட்டான் மாதிரி முழிக்காதீங்க’
போங்கன்னு முத்தாய்ப்பு வச்சாளாம் மனைவி..!
:):smokesmile:
வாரியாரின் நகைச்சுவை பொதிந்த சொற்ப்பொழிவுகள், கருத்துக்கள் எக்காலத்துக்கும் நிலைத்து நிற்பவை.
NT யின் படத்தை நல்ல படங்களுக்கு எடுத்துக்காட்டாய் கூறுகிறார் - கொஞ்சம் பார்ப்போமா ?அப்படிப்பட்ட வாரியாரின் கருத்துக்கள் கொஞ்சம் இங்கே உங்கள் பார்வைக்கு.
'கம்' முனு இரு: "கம்முனு சும்மா இரு. எல்லாம் தானே நடக்கும்" என்று பேச்சுவாக்கில் சொல்வதுண்டு. உண்மையில் "கம்" எனபது விநாயகரின் பீஜ மந்திரம். "ஓம் கம் கணேசாய நம" எனபதாகும். 'கம்' என்ற விநாயக மந்திரத்தை உச்சரித்து கொண்டே இருந்தால், எல்லா காரியங்களும் மங்களமாகவே முடியும் என்ப்தே இதன் பொருள்.
உலாவ இடமா இல்லை : "வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்" என்று பாடினார் பாரதியார். அங்கு ஏன் உலாவ வேண்டும்? உலாவ பீச், பார்க் என்று எத்தனையோ இடம் இருக்கிறதே? அங்கெல்லாம் உலாவுவோம் என்று ஏன் எழுதவில்லை. காரணம், பாரத தேசத்தின் அந்தப்புற எல்லையாக இருக்கிறது பனிமலை. அங்கே இருப்பவர்கள், நாட்டை காக்கும் இராணுவ வீரர்கள். அவர்கள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தால், பகைவர்கள் நுழைந்து விடுவார்களே.அதனால்தான் வெள்ளிப் பனி மலையில் உலாவிக் கொண்டே, நடந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதற்க்காகத்தான் பாரதி இப்படி பாடினான்.
வேறுபாடு இல்லா பெண் உலகம் : எல்லா வேறுபாடுகளும் ஆண் உலகிலேயே காணப்படுகின்றன. பெண் உலகுக்கு இந்த வேறுபாடுகள் கிடையாது. ஐயர்,செட்டியார்,நாயுடு, முதலியார் முதலிய ஜாதிப் பெயர்கள் எல்லாம் ஆணின் பெயரை ஒட்டியே வருகின்றன. பெண் எந்த ஜாதியை சேர்ந்தவராக இருந்தாலும் மீனாட்சி அம்மாள், காமாட்சி அம்மாள் என்றுதானே வழங்குகின்றன.
அதிகம் எது? : பாண்டவர்கள் ஐந்து பேர். கவுரவர்கள் நூறு பேர். அந்த காலத்திலேயே நல்லவர்கள் ஐந்து பேரும், கெட்டவர்கள் நூறு பேரும் ஆக இருந்தார்கள். இப்போது கேட்கவா வேண்டும்?
கள் தேவை : கள்ளை குடித்தால்தான் போதை எனபது இல்லை. 'கள்' என்று சொன்னாலே பலர் மயங்கி விடுகிறார்கள். "நீ" என்பதற்க்கு பதில் நீங்'கள்' என்று சொல்லிப்பாருங்கள். எல்லாம் அந்த 'கள்' செய்யும் வேலைதான்.
சினிமா: இப்போதைய சினிமாக்களை பணம் பண்ணும் சாதனமாக ஆக்கிவிட்டார்கள். சினிமாக்கள் மூலம் நல்ல கருத்துக்களை இந்த சினிமாக்காரர்கள் சொல்லாமே? ஏன் சொல்லத் தயங்குகிறார்கள்? நான் ஆயிரம் சொற்பொழிவு நடத்துவதும் சரி, ஒரு நல்ல சினிமா வருவதும் சரி. பணம் சம்பாதியுங்கள். அதே சமயம் சமுதாயத்தையும் உருப்படவிடுங்கள். படங்கள் என்றால் திருவிளையாடல் , திருவர்ட்செல்வர் , கந்தன் கருணை - நடிப்பு மட்டும் அன்று , நல்ல படிப்பினையும் தந்த படங்கள் - ஒரு நாஸ்திகனையும் திருத்தக்கூடிய படங்கள்
பதவி அலைச்சல்: ராமபிரான், ஆட்சியே வேண்டாம் என்று, பெரிய பதவியை துறந்து தந்தை சொல்லைக் கேட்டு காட்டுக்கு போனார். ஆனால், இப்போது சிலர் பிள்ளையார் கோவில் அறங்காவலர் பதவிக்கே அலையாய் அலைகிறார்கள்.
Ravi
:):smokesmile:
Thanks sir - in the anxiety of making the menu , I mentioned " பொடி " before correcting, many have already read that ! _ also sorry for the mistake in வறுத்த முந்திரிபருப்பு -E&OE should be made applicable in all my postings till I reach the height ( extremely difficult but I don't give up ) of yourself , பம்மலார் sir Karthik sir , ragavendra sir , Gopal sir , Murali & Vasu sir and இன்னும் பலர்
நல்ல ஆசிரியரிடம் தமிழ் கத்துகொள்ளவில்லை சார் - அதனால் ஏற்பட்ட தடுமாற்றம் - மன்னிக்கவும்
NT படங்களுக்கு பிறகு - நல்ல தமிழை இந்த திரியில் தான் பார்க்கிறேன்- Improve ஆகிவிடும் சார் கூடிய விரைவில்
:):smokesmile: