or it is 10 + 1 = 11 ?
Printable View
இன்று கவியரசர் கண்ணதாசன் 88-வது பிறந்தநாள். அவர் மறைந்தாலும் அவருடைய காவிய வரிகள் மூலம் நாள்தோறும் நம்மிடம் உலாவந்துகொண்டுதான் இருக்கிறார். நடிகர்திலகத்துடன் இணைந்து கவியரசர் படைத்த பாடல்கள் ஒவ்வொன்றும் தேனருவியாய் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
நடிகர்திலகத்தைப் பற்றி கவியரசர் கூறிய வைர வரிகள்:
http://i1234.photobucket.com/albums/...ps650fe1e4.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2f8ed75c.jpg
http://i1234.photobucket.com/albums/...psb10e6419.jpg
http://www.youtube.com/watch?v=fdjQG...yer_detailpage
ரவி சார்
உங்கள்/கோபால் சார்/முரளி சார்/கார்த்திக் சார்
மற்றும் நம் எல்லா வலைபதிவாளர்களின் எழுத்துகளை விரும்பி படிப்பவன்
கோபால் சார் பன்முக திறமை கொண்டவர் .
இந்த 'கர்ணனின்' கர்ணன் திறனாய்வு அதற்கு ஒரு மிக சிறந்த எடுத்து காட்டு. அதே மாதிரி ஜெமினி திரியில் அவர் எழுதிய "நான் அவனில்லை " படித்தவுடன் மனதில் தோன்றிய உணர்வு
உண்மையில் "நான் அவன் (கோபால்) இல்லை "
உங்கள் அனைவரின் பாராட்டுக்கு நன்றி
இன்று கண்ணதாசன் பிறந்த நாள்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு போட்டியாக அவர் சிவகங்கை சீமை
படத்தை எடுத்ததாக பழைய தகவல்கள் நிறைய உண்டு. அதற்குள் செல்ல விரும்பவில்லை.
சிவகங்கை சீமை திரைபடத்தை எடுத்து முடித்து விட்டு அறிஞர் அண்ணாவிற்கு போட்டு கட்டிய போது அவர் கூறியதாக நான் படித்த ஒன்று தான் நினைவிற்கு வருகிறது
"சரக்கு எல்லாம் மிடுக்கு ஆக தான் இருக்கிறது. செட்டியார் தான் சரி இல்லை. கட்டபொம்மனுக்கு சரக்கு மற்றும் செட்டியார் இரண்டும் மிடுக்கு"
என்றும் அழியாத கதா பாத்திரங்கள் - 6
தங்க பதக்கம் : S .P சௌத்ரி
S .P சௌத்ரியை பற்றி பேசாதவர்களே இங்கு யாரும் இருக்க முடியாது - தங்க பதக்கம் - இந்த படத்தை சொன்ன உடன் கம்பீரமும் , ஒரு கடமை உணர்ச்சியும் எல்லோருக்கும் வருவது இயற்க்கை தான். வேறுவிதமாக இந்த பாத்திரத்தை அலச விரும்பினேன் - unconventional but ஒரு புதிய கண்ணோட்டத்தில் இதை உங்களுக்கு அன்புடன் சமர்பிக்கிறேன் ------------:smile2:
என் தங்கையை என்றுமே அவ்வளவு சோகமாக நான் பார்த்ததில்லை -யாரோ ஒரு constable வீட்டு திருமணத்திற்கு சென்று வருகிறேன் என்று சொன்னவள் மிகவும் சீக்கிரமாகவே வீடு திரும்பி விட்டாள் - அவளிடம் மெதுவாக பேசி பார்த்தேன் - அண்ணா நீங்கள் reception க்கு வருகிறேன் என்று சொன்னீர்கள் - ஏன் வரவில்லை -
முடியவில்லை அம்மா - வேலை மிகவும் அதிகம் - மேலும் எனக்கு அங்கு யாரையும் தெரியாது - ஆமாம் - யார் அந்த constable ?
அண்ணா - அவர் பெயரை சொன்னால் நீங்கள் ஆச்சிரியம் அடைவீர்கள் - அவர் பெயர் சுந்தரம் - அவருக்கு குழந்தைகள் கிடையாது - அவர் தம்பி வையாபுரியின் இரண்டாவது மகளுக்குத்தான் இன்று திருமணம் - அந்த பெண்ணும் , ஹேமா வும் ( ஹேமா என் தங்கையின் இரண்டாவது மகள் ) classmates - பல தவறுகள் செய்து வையாபுரி இன்னும் ஜெயில் யை விட்டு வரவில்லை - ஆனால் சுந்தரம் , தானே எல்லா பொறுப்புகளையும் எடுத்துகொண்டு இந்த வயதிலும் தன் கடமை சரியாக நிறைவேற்றுகிண்டார் -- அருமையாக திருமணம் நடந்தது
ஆமாம் அதற்கும் , நீ அழுவதிர்க்கும் என்ன சம்பந்தம் ? நான் கேட்டேன்
அண்ணா - அந்த constable சுந்தரம் வேறு யாரும் இல்லை - நம் எல்லோருக்கும் பிடித்த , எல்லோர் மனதிலும் நீங்காத இடம் பெற்ற , S .P சௌத்ரி அவர்களிடம் வேலை செய்தவர் - அவரை பார்த்தேன் - அவரிடம் மனம் விட்டு பேச முடியவில்லை - மணபெண்ணும் , மாப்பிளையும் ஆள் உயர இருந்த SPC யின் போட்டோ முன் விழுந்து வணங்கும் போது தான் சுந்தரத்தை கவனித்தேன் - அந்த போட்டோ க்கு முன் அவர் தேம்ப தேம்ப அழுதுகொண்டிருந்தார் - யாராலையும் அவரை சமாதானம் பண்ண முடியவில்லை - கூடி இருந்தவர்களில் சிலர் சொல்ல என் காதில் விழுந்த வார்த்தைகள் இவை : " SPC , சுந்தரம் வாழ்க்கையில் ஒளி ஏற்றியவர் - பல தடவை பொருள் உதவியும் , அன்பான ஆலோசனைகளையும் சுந்தரத்திற்கு கொடுத்திருக்கிறார் - அவரின் ஆசிர்வாதம் இல்லாமல் இந்த திருமணம் நடந்திருக்காது - "
அண்ணா அடுத்த வாரம் நாம் அவரை கண்டிப்பாக வீட்டில் சந்திக்க வேண்டும் - கொஞ்சம் free யாக அவர் இருப்பார் .
SPC யின் மீது உயிரையே வைத்திருப்பவள் என் தங்கை - ஏன் எங்கள் குடும்பத்தில் உள்ள எல்லோருமே தான் - மூன்று வயதே நிரம்பும் எங்கள் கடைக்குட்டி ஜானு வையும் சேர்த்துதான் சொல்கிறேன் ---
அடுத்த வாரமும் வந்தது - எங்கள் குடும்பத்தில் ஒருவர் விடாமல் எல்லோரும் சுந்தரத்தை பார்க்க அவர் வீடு சென்றோம் - திருவல்லிகேணியில் ஒரு நடுத்தரமான வீடு - கீழ் வீட்டை வாடைக்கு விட்டு விட்டு மேல் வீட்டில் ,தன் மனைவியுடன் வாழ்ந்து கொண்டுருக்கிறார் - வேலையின் போது போட்டுக்கொண்ட uniform எங்களை வரவேற்க்கின்றது - பிறகு சிறிய வராண்டாவில் பெரிய புகைப்படம் - கம்பீரம் என்றால் என்ன என்று SPC மூலம் எடுத்து சொல்லிகொண்டிருக்கின்றது - எங்களை வரவேற்ற சுந்தரமும் அவர் மனைவியும் அந்த பொற்காலத்திற்கு எங்களை கூட்டி செல்ல தங்களை தயார் படுத்தி கொண்டிருந்தனர்
நான் மெதுவாக நாங்கள் வந்த காரணத்தை அவரிடம் சொன்னோம் - அவர் முகம் தீடீரென்று மகிழ்ச்சியை பலமாக அரவணைத்து கொண்டது - SPC சார் யை பற்றி பேச , விவரிக்க ஒரு நாள் போறாதே - இருப்பினும் எல்லாவற்றையும் சொல்ல முயற்சிக்கிறேன்
நான் : முதலில் உங்களுக்கும் SPC க்கும் உள்ள நட்பை பற்றி சொல்ல முடியுமா ? அதன் பிறகு SPC யை பற்றியும் , அவருடன் வேலை செய்த உங்கள் அனுபவங்களை பற்றியும் சொல்ல முடியுமா ?
என் முதல் கேள்வியுடன் அருமையான அவர்கள் கொடுத்த கும்பகோணம் காபியை பறிகிகொண்டே அவருடன் SPC வாழ்ந்த காலத்திற்கு செல்ல ஆரம்பித்தோம்
சுந்தரம் : எங்கள் சந்திப்பு 01-06-1974 அன்று தொடங்கியது - அங்கிருந்து தான் என் வாழ்கையில் ஒரு பிடிப்பும் , மகிழ்ச்சியும் ஆரம்பித்தது - அவரிடம் வேலை செய்தேன் என்று சொல்வது தவறு - அவரின் குடும்பத்தில் ஒருவனாக இருந்தேன் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் - கம்பீரம் , கண்டிப்பு , நேர்மை இவை அனைத்தும் அவர் மூலமாகத்தான் தமிழ் அகராதியில் முதல் தடவையாக சேர்க்கப்பட்டன.
ஜகன் சரியான பாதையில் போகவில்லையே என்று அவர் தவித்த தவிப்பு - எந்த தந்தைக்குமே வர கூடாது - அவனை காணவில்லை என்று என்னிடம் சொல்லும் போதும் , எனக்கு அவனை தேட உத்தரவிட்டபோதும் , இதை ஒரு இன்ஸ்பெக்டரின்யின் கட்டளையாக எடுத்துகொள்ளாதீர்கள் சுந்தரம் - ஜகனின் தாய் FIR கொடுத்ததாக வைத்து கொள்ளுங்கள் - இப்படி இன்று யாராவது சொல்வார்களா - தன் செல்வாக்கை என்றுமே அவர் தன் குடும்பத்திற்காக உபயோக படுத்தினதில்லை - அவர் ஒரு மனிதரில் மாணிக்கம்
மாயாண்டியை SPC சார் பிடித்தவுடன் , அவனிடம் ஒரு statement யை வாங்க நான் பட்ட பாடு SPC சாருக்கு மட்டும் தான் தெரியும் - அவனை லாவகமாக மடக்கி statement யை வாங்கவைத்த விதம் இன்று நினைத்தாலும் எனக்கு புல்லரிக்கின்றது . அதன் பிறகு நடந்தது தான் சாதனை - எல்லா பத்திரிக்கைகளிலும் கொள்ளை , கற்பழிப்பு செய்திகள் வருவது நின்று மாறாக -மூகமுடி கொள்ளையர்கள் பிடிபட்டனர் என்றும் , ரயில் கொள்ளைகாரர்களை ஓடும் ரயிலில் பிடிபட்டனர் -circle இன்ஸ்பெக்டர் சௌத்ரியின் துணிகரம் என்றும் , 10 லட்சம் பெறுமான கடத்தல் தங்கம் பிடிபட்டது - DSP சௌத்ரி மாறு வேடத்தில் சென்று மடக்கினார் என்றும் , வெளி நாட்டுக்கு கடவுள் சிலைகளை கடத்திய பெரிய மனிதரை சௌத்ரி சார் கைது செய்தார் என்றும் செய்திகள் வராதே நாளே இல்லை - இந்த தமிழகம் தலை நிமிர்ந்து நின்ற நாட்கள் அவைகள்
மைனரிடம் அவர் பேசின சில வார்த்தைகள் வீரத்திற்கு வீரத்தை சொல்லிகொடுத்த வார்த்தைகள் அல்லவா அவைகள் - "என்ன மைனர்வாள் - என் தலையை கேட்டிங்க , நானே வந்திருக்கேன் எடுத்துகிறது -----------------"
ஒரு தந்தை கண்டிப்பாக இருந்தால் - பாசம் என்ன அறவே நின்று போய் விடுமா - என் தம்பி வையாபுரியை உங்களுக்கு தெரிந்திருக்கும் - வை+கை வளவன் என்று பெயரை வைத்துகொண்டு அப்பாயசத்தையும் , ரூபாவிற்கு மூன்று கிளி குட்டிகளையும் தருவதாக சொல்லி ஊரை ஏமாற்றி கொண்டிருந்தான் ---- பெரிய மனுஷுனாவதர்க்கு இரண்டு வழி இருக்கிறது - ஒன்று நன்றியை மறப்பது , இன்னொன்று நல்லவர்களை மறப்பது - என் தம்பி எப்பவோ பெரிய மனுஷனாகி விட்டான்.
நான் : குறிக்கிட்டு... யாரு சார் - அந்த கவுன்சிலரா - உங்கள் மனைவியிடம் சொல்வாரே - விடை கொடு தாயே - படை பல பார்த்து , உடை பல அணிந்து , வடை பல தின்று , விடை பெற்று போகிறேன் , வணக்கம் என்று எல்லோருக்கும் புரியும் படியாக !?
சுந்தரம் : ஆமாம் - அவனேதான் - அவனை கூட திருத்த SPC சார் எவ்வளவோ முயற்சி எடுத்து கொண்டிருக்கிறார் - ஜகனின் போக்கு அவன் தாயையும் படுத்த படுக்கையாக்கி விட்டது ஒரு நாள் - ஜகன் செய்த ஒரே நல்ல காரியம் , மாயாண்டியின் மகளை , SPC சாரின் வீட்டிற்க்கு மறு மகளாக கொண்டு வந்ததுதான் - அருமையான பெண் அவள் - சௌத்ரி சாரின் குடும்பத்திற்கு ஏற்றவள் - ஒரு கொலைகாரனின் மகள் என்று தெரிந்தும் அவளை மருமகளாக ஏற்று கொண்டது , ஜகனுக்கு பெண் பார்க்க போன இடத்தில் , அந்த பெண்ணை பெற்றவர் - எனக்கு ஜகன் போல பையன் இருந்து உங்கள் பெண்ணை கேட்டால் தருவீர்களா என்று சொல்லி அவரை தலை குனிய வைப்பது , ஜகனை பிடிக்க சாணக்கியர் தோற்கும் அளவிற்கு பிளான் போடுவது , அவனை அவனைக்கொண்டே பிடிப்பது , ஒரு சிறிய வட்டத்திலேயே தன் மகன் இருக்கிறானே என்று ஆதங்கம் படுவது , தன் மனைவியை இழந்தபின் நொறுங்கி போவது , தன் மகனையே சுடுவதிர்க்கு தன்னை தயார் படுத்திகொள்வது - மகனை சுட்ட பின் , துக்கம் தாளாமல் , twinkle twinkle லிட்டில் ஸ்டார் என்று ஒரு குழந்தையை போல தேற்ற முடியாமல் புலம்புவது , ஜனாதிபதியிடம் தங்க பதக்கம் வாங்கும் போது அசாத்தியமான கம்பீரத்தை வெளிபடுத்துவது , கண்ணில் வரும் நீரை சற்றே கட்டி போடுவது - அப்பப்பா - சொல்ல வார்த்தைகள் இல்லை சார் - இப்படி பட்ட ஒரு மாமேதை வாழ்ந்த காலகட்டத்தில் நானும் வாழ்ந்ததிர்க்காக பெருமை படுகிறேன் - அவரிடம் வேலை செய்ததிற்கு பல ஜன்மங்கள் எடுத்தாலும் என்னால் நன்றியை முழுவதும் சொல்ல முடியாது
சுந்தரத்திற்கு மூச்சு வாங்கியது - அவர் மனைவி அன்புடன் எங்கள் எல்லோருக்கும் சமையல் செய்து வைத்திருந்தார் - அவர்களின் உபசரிப்பை தட்ட முடியவில்லை - SPC இடம் வேலை செய்தவர் அல்லவா - விருந்தோம்பலுக்கும் , நல்ல பணிவுக்கும் , நடத்தைக்கும் , நேர்மைக்கும் அவர்களுக்கு சொல்லி தரவா வேண்டும் ? - எல்லோரும் கண்ணீரை துடைத்துகொண்டு , கைகளை அலம்பிக்கொண்டு , SPC யின் photo விற்கு மரியாதை செலுத்தியபின் மதியம் உணவை ஒரு கை பார்க்க தயாரானோம் -
சுந்தரத்திடமும் , அவர் மனைவியிடம் இருந்தும் பிரியா விடை பெற்று வீடு வந்தோம் - என்ன ஆச்சிரியம் - அன்று ஜெயா டிவி யில் 6மணிக்கு தங்க பதக்கம் படம் - ஜானுவின் மகிழ்ச்சிக்கும் , என் தங்கையின் சந்தோஷத்திற்கும் , ஏன் எங்கள் எல்லோருடைய ஆரவாரத்திற்கும் அன்று எல்லையே இல்லை------ :-D
அருமை rks - உங்களையும் வீடியோ கிளிப்பில் பார்க்கும் போது சந்தோஷம் இரண்டு மடங்கு அதிகமாகிறது
.the cult movie Thangappadhakkam set many standards of basic traits for a honest Police Official.At that time many Police officials emulated Chowdry's get up including his mustache and majestic walk. This Silver Jubilee movie has become the numero uno classic as regards the definitive characteristics a policeman should inherit. Hats off for your new approaches in presenting NT's classics for a warm reception and cold storage in the minds of generations.
இக்காவியத்தில் மறக்க முடியாத காட்சி. 'நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.....' பாடல் காட்சி. பல்லாண்டுகளுக்குப் பின் வந்து சேர்ந்த ஒரே மகன். பாசம் பிணைந்த களிப்புடன் ஆடிப்பாடும் சௌத்ரி பாடல் முடிவில் தன் கடமை மேலோங்க அதே மகனை கைது செய்து அழைத்துச்செல்லும் மிடுக்கு காவலர் பணியின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் ஒருசேர கட்டிகாக்கும் மேன்மை..... அதை நம் நடிகப்பேரரசர் உருவகப்படுத்தியிருக்கும் பாங்கு.......உரைக்க வார்த்தைகள் வரவில்லையே!
எம்ஜிஆர் அவர்கள் திரியில் நண்பர் tacinema ஒரு பதிவு இட்டிருந்தார். அவர் சொன்னதற்கு பதில் அளிக்காமல் அவர் யார் என்பதைப் பற்றியும், அவர் என்னவோ மாறு வேடம் புனைந்து வந்தவர் போலவும் சித்தரிக்க நடந்த முயற்சிகள் வருத்தத்துக்குரியது மட்டுமல்ல, கண்டனத்துக்குரியதும் கூட. ஒருவரை பற்றி தெரியவில்லை என்றால் உடனே multiple ID சாயம் பூசுவது முறையான செயல் அல்ல.
ஒருவர் ஒரு பதிவு இடும்போது அந்த பதிவின் இடது புறத்தில் பதிவாளர் பெயர் அவர் ஹப்பில் சேர்ந்த மாதம் வருடம் எல்லாம் இருக்கும். அதை கவனித்திருந்தால் tacinema (tamizhcinema என்பதன் சுருக்கம்) 2005-ம் ஆண்டே இந்த ஹப்பில் இணைந்து பதிவிட்டு வருவது தெரிந்திருக்கும். இன்னும் சொல்லப் போனால் இந்த இணையதளத்தில் என்னை விட சீனியர். ஒருவர் என்னென்ன பதிவுகளையெல்லாம் பதிவு செய்திருக்கிறார் என்று பார்ப்பதற்கும் படிப்பதற்கும் வாய்ப்பு இருக்கும்போது அதை செய்யாமல் குறை கூறுவது சரியா என்று யோசித்துப் பார்த்தால் புரியும்.
நண்பர் tacinema எங்கள் மதுரையை சேர்ந்தவர். 70-களில் பிறந்த இளைஞர். நடிகர் திலகத்தின் தீவிர ரசிகர். தற்போது USA-வில் வேலை செய்கிறார். அவர் பெயரை அவர் அனுமதியின்றி வெளியிடுவது முறையல்ல என்பதனால் நான் அதை வெளிபடுத்தவில்லை.
இனி மேலாவது அடிப்படை விவரங்களை கூட தெரிந்துக் கொள்ளாமல் இது போன்ற character assassination-ல் ஈடுபட வேண்டாம் என்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
பாடல்கள் பலவிதம் பகுதியில் மலர்ந்தும் மலராத பாடல் பின்னணி பற்றிய பதிவிற்கு பாராட்டு தெரிவித்த செந்தில், கல்நாயக், அலைபேசியிலும் இங்கே திரியிலும் பாராட்டிய கிருஷ்ணாஜி, அலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ரவி மற்றும் கோபால் ஆகியோருக்கு நன்றி. அந்த நாள் ஞாபகம் தொடருக்கு பாராட்டு தெரிவித்த ராமஜெயம் சார், சந்திரசேகர் சார், கிருஷ்ணாஜி மற்றும் கோபால் ஆகியோருக்கும் நன்றி.
பாடல்கள் பலவிதம் தலைப்பில் நான் எழுதி வந்த பாடல்களின் தொடர் தற்காலிகமாக இப்போது நிறைவு பெறுகிறது. மீண்டுமொரு சந்தர்ப்பத்தில் வேறு சில பாடல்களைப் பற்றிய தகவல்களை எழுதுகிறேன். அவை இன்னும் முழுமையாக சேகரம் செய்யப்படவில்லை என்பதனாலேதான் இந்த இடைவேளை. இந்த தொடரை (மீள் பதிவுகளாக இருப்பினும்) வரவேற்று பாராட்டிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
அருமை நண்பர் பார்த்தசாரதி பாடல்கள் பலவிதம் திரியில் நடிகர் திலகத்தின் பாடல் பற்றிய ஆய்வுகளை தொடருவார்.
ரவி,
கர்ணன் மற்றும் தங்கப்பதக்கம் பற்றிய வித்தியாச பதிவுகள் சுவையாக இருந்தன. இதன் பின்னணியில் இருக்கும் உங்கள் home work பாராட்டுக்குரியது. தொடருங்கள். வாழ்த்துகள்.
அன்புடன்
சில வருடங்களுக்கு முன்பு நமது ஹப்பில் நான் எழுதிய பதிவு. காலத்தை வென்ற கவிஞன் கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாளான இன்று அவர் நினைவாக இந்த மீள் பதிவு.
கண்ணதாசனும் காதலும்
கண்ணதாசனைப் போல் காதலை கொண்டாடியவர்கள் வெகு சிலரே. காதல், காதல் சார்ந்த ஏக்கம், ஏக்கத்தில் தொனிக்கும் விரகம்,தாபம் எல்லாவற்றையும் இலக்கிய நயத்தோடு சொன்னவர் கண்ணதாசன்.
காதல் என்ற உணர்வு மட்டும் ஒரு மனதுக்குள் வெகு விரைவில் நுழைந்து விடுகிறது. எப்படி?
நேற்று வரை நீ யாரோ நான் யாரோ
இன்று முதல் நீ வேறோ நான் வேறோ
கண்ணதாசன் காதலை பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்கிறார்,
காதல் என்பது எதுவரை?
கல்யாண காலம் வரும் வரை.
இளமையிலே காதல் வரும்; எது வரையில் கூட வரும்?
முழுமை பெற்ற காதலெல்லாம் முதுமை வரை ஓடி வரும்.
காதலர்கள் எப்படி இருக்க வேண்டும்? கண்ணதாசனின் பதில்
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
மௌனமே காதலாய் ஒரு பாட்டு பாட வேண்டும்
நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்.
காதல் ஏற்படுத்தும் தவிப்பை அதிலும் குறிப்பாக பெண்ணிடம் ஏற்படுத்தும் உணர்வுகளை எப்படி சொல்கிறார்?
கட்டவிழ்ந்த கண்ணிரெண்டும் உங்களை தேடும்; பாதி
கனவு வந்து மறுபடியும் கண்களை மூடும்.
பட்டு நிலா வான்வெளியில் காவியம் பாடும்; கொண்ட
பள்ளியறை பெண் மனதில் போர்களமாகும்.
காதலர்களுக்கிடையே நிலவும் உறவு எப்படி இருக்கும்?
ஆடச் சொல்வது தேன் மலர் நூறு
அருந்தச் சொல்வது மாங்கனி சாறு
கூடச் சொல்வது காவிரி ஆறு
கொடுப்பார் கொடுத்தால் மறுப்பவர் யாரு
பிரிந்த காதலர்கள் ஒன்று சேரும் போது உணர்வுகள் எப்படி வெளிப்படும்?
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் நின்றால்
அதுதான் தெய்வத்தின் சன்னதி
அதுதான் காதல் சன்னதி.
காதலை பற்றி சொல்லும் கவிஞர் அந்த காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதை சொல்கிறார்.
மாலை சூடும் மணநாள்; இள
மங்கையின் வாழ்வில் திருநாள்
சுகம் மேவிடும் காதலின் எல்லை
வேறொரு திருநாள் இனி இல்லை
மணமகன் இன்ப ஊஞ்சலில்
மணமகள் மன்னன் மார்பினில்
அங்கு ஆடும் நாடகம் ஆயிரம்
அதில் நாமும் இன்றொரு காவியம்
இதில் ஒருவர் தாளமாம்
ஒருவர் ராகமாம்
இருவர் ஊடலே பாடலாம்
காதல் கனிந்து திருமணத்தில் முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு செல்கிறார்.
மலராத பெண்மை மலரும்
முன்பு தெரியாத உண்மை தெரியும்
மயங்காத கண்கள் மயங்கும்
முன்பு விளங்காத கேள்வி விளங்கும்
இரவோடு நெஞ்சம் உருகாதோ
இரண்டோடு மூன்றும் வளராதோ
முதலிரவை பற்றி நாயகன் நாயகியிடையே ஒரு கேள்வி பதில்
முதலிரவு என்று ஒன்று ஏனடி வந்தது ராதா
அது உரிமையில் இருவர் அறிமுகமாவது ராஜா.
முதலிரவில் நாயகியின் வெட்கத்தை கவிஞர் சொல்லும் அழகே அழகு.
பார்வையில் ஆயிரம் கதை சொல்லுவார்
படித்தவள்தான் அதை மறந்து விட்டாள்
காதலை நாணத்தில் மறைத்து விட்டாள்.
தோழியர் கதை சொல்லித் தரவில்லையா
துணிவில்லையா பயம் விடவில்லையா
அந்த உறவின் நிலையை எப்படி சொல்கிறார்?
வாயின் சிவப்பு விழியிலே
மலர் கண் வெளுப்பு இதழிலே
காயும் நிலவின் மழையிலே
காலம் நடத்தும் உறவிலே.
மறுநாள். அந்த இன்ப நினைவுகள் மனதில் வந்து மோத நாயகி இலக்கியம் பேசுகிறாள்.
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான்; இரு
கன்னம் குழி விழ நகை செய்தான்.
என்னை நிலாவில் துயர் செய்தான்; அதில்
எத்தனை எத்தனை சுகம் வைத்தான்
சேர்ந்தே மகிழ்ந்தே போராடி; தலை
சீவி முடித்தேன் நீராடி
கன்னத்தை பார்த்தேன் முன்னாடி; பட்ட
காயத்தை சொன்னது கண்ணாடி.
இதே இலக்கியம் வேறொரு பாணியில் வேறொரு பெண்ணால் எப்படி சொல்லப்படுகிறது?
காதல் கோவில் நடுவினிலே
கருணை தேவன் மடியினிலே
யாருமறியாப் பொழுதினிலே
அடைக்கலமானேன் முடிவினிலே.
கூடிக் கலந்து மகிழ்ந்த உயிர்கள் பிறிதொரு உயிரை உருவாக்கும் போது அங்கே ஆண் சொல்கிறான்.
நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே.
பெண் என்ன சளைத்தவளா? அவள் உடனே பதிலளிக்கிறாள்
அந்த கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே.
மற்றொரு ஆண் இதையே வேறு விதமாக பாடுகிறான். எப்படி?
கட்டில் கொண்டாள் அங்கு நான் பிள்ளையே
தொட்டில் கண்டாள் அங்கு என் பிள்ளையே.
இந்த உணர்வுகளையெல்லாம் ஒரு மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்தில் சொன்னால்?
ஒருவரின் துடிப்பினிலே விளைவது கவிதையடா
இருவரின் துடிப்பினிலே விளைவது மழலையடா.
எதை சொல்வது? எதை விடுவது?
கண்ணதாசனின் கவிதைகளைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
அன்புடன்.