Originally Posted by
g94127302
ஒரு இனிய அநுபவத்தை உங்கள் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் . நேற்று "பாபநாசம் " படம் பார்த்தேன் - அந்த படத்தைப்பற்றிய ஒரு சின்ன அலசல் தான் இந்த பதிவு .
நேரம் கிடைக்கும் போது இந்த பதிவைப்படியுங்கள் , படத்தையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு ச் சென்று பாருங்கள் .
இந்த படம் மலையாளம் , தெலுங்கு , ஹிந்தி , தமிழ் என்று பல மொழிகளில் வெளிவந்து வெற்றிக்கொடியை நாட்டி . ஹிந்தி யில் படம் உருவாகிக்கொண்டு இருக்கிறது . உலக நாயகனனின் நடிப்புக்கு நீண்ட நாட்களுக்குபிறகு நன்றாக தீனி போட்டப்படம் .
படத்தின் சிறப்புக்கள்
நீரோட்டம் போல தெளிவாக ஓடும் படம் - ஒரிஜினல் கதையை சிறிதும் சிதைக்காமல் , நிஜ வாழ்க்கையிலும் இணைந்த அந்த ஒரிஜினல் ஜோடியையே போட்டு படம் எடுத்திருக்கிறார்கள் . அதனால் நெருங்கி நடிக்கும் சில காட்சிகளில் செயற்கைத் தெரியவில்லை .
ஒரு நடுத்தர குடும்பம் எப்படி இருக்கும் என்பதை கமல் மிகவும் அழகாக தன் நடிப்பின் மூலம் புரியவைப்பார் .
அதிகம் படிக்காத தந்தை - வீட்டில் anchor ஆக இருக்கும் அவனுடைய மனைவி , பள்ளிக்குச்செல்லும் இரண்டு அழகான பெண் பிள்ளைகள் - அவனுடைய உலகம் மிகவும் சிறியது . ஆனால் அவன் மனம் ஒரு பெரிய பாசக்கடல் . படம் பார்க்கும் போது நாமும் நம்மை அறியாமலேயே அந்த குடும்பத்தில் ஒருவராகி விடுவோம் . அவன் எப்படி தன் மகளை ஒரு பழியிலிருந்து பாதுக்காக்கிறான் என்பதுதான் படத்தின் மீதி பாதி .
நடிகர் திலகத்தின் பெருமை
ந .தி யின் உண்மையான ரசிகன் என்பதை கமல் ஆத்மார்த்தமாக சொல்லும் சில வார்த்தைகளில் புரிந்துவிடும் .
" பாசமலரைபார்த்து அழாதவன் ஒரு மனிதனே இல்லை " என்று அழுதுகொண்டே சொல்வதும் , சிவாஜியின் நடிப்பை புரிந்துக்கொள்ளாதவன் ஒரு நல்ல ரசிகனும் இல்லை இன்று அவருடைய assistant யைப்பார்த்து கோபத்துடன் சொல்வதும் , கண்ணாடியில் , சிவாஜி ஸ்டைலில் முடியை முன்னுக்கு சுருட்டி விடுவதும் , அதையே பெருமையாக தன் மகளுடன் பகிர்ந்து கொள்வதும் , கமலின் உண்மையான ஆதங்கத்தில் ஒரு முத்திரை .
பல இடங்களில் அவரின் நடிப்பு நடிகர் திலகத்தின் பாணியிலே இருக்கும் - கடைசியில் அவர் குமறும்போது அந்த மாமேதையின் நடிப்பைத்தான் நமக்கு ஞாபகப்படுத்தும் .
கருவின் கரு :
தந்தை- மகள் பந்தம் ; தாய் -மகன் பந்தம் இப்படி கருவின் கருவை 3மணி நேரம் அருமையாக எடுத்துச்சொல்லும் படம்.
மகன் கெட்டவனாக ஆனதிற்கு எங்கள் கவனக்குறைவு தான் காரணம் - அவன் கேட்க்காமலேயே பல கெட்ட பழக்கங்கள் அவனுக்குள் வருவதற்கு எங்கள் பொறுப்பின்மைத்தான் காரணம் - என்று புலம்பும் ஒரு பெற்றோர் ஒரு பக்கம் ; என்ன ஆனாலும் , எது வந்தாலும் தான் பெற்ற குழந்தைகளை காப்பற்ற வேண்டும் - இதில் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று போராடும் பெற்றோர் ஒருபக்கம் - இவர்களை பார்த்துக்கொண்டே வாயடைத்துப் போகும் நாம் ஒருபக்கம் - இந்த எல்லா பக்கங்களையும் சேர்த்து வைப்பது இந்த படத்தின் வெற்றி , கமலின் நடிப்பு.
சில குறைகள் - படத்தின் நீளம் அதிகம் - குறைத்திருக்கலாம் - பாடல்கள் சட்டென்று மனதில் பதிய வில்லை - மலையாளம் நிறைந்த வாடைகள் அதிகமாக உள்ளன .. மீனா இன்னும் சிறப்பாக செய்திருப்பாள் கெளதமியை விட என்றே எண்ண தோன்றுகின்றது சில இடங்களில் .
"நாயகன்" கமலையும் , நடிகர் திலகத்தையும் மீண்டும் சேர்ந்து ஒரு படத்தில் பார்த்த திருப்தி - படம் தந்த பாடம் அதிகம் ...