தலைவரின்
சிரிப்பில் உண்டாகும் போதையிலே பிறக்கும் சந்தோஷமே...
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம்
தமிழ் வண்ணமே .. ஆதவன்
ரவியின் கைவண்ணமே...
பாராட்டுக்கள் ரவி...
Printable View
தலைவரின்
சிரிப்பில் உண்டாகும் போதையிலே பிறக்கும் சந்தோஷமே...
அது வடிக்கும் கவிதை ஆயிரம் அவை எல்லாம்
தமிழ் வண்ணமே .. ஆதவன்
ரவியின் கைவண்ணமே...
பாராட்டுக்கள் ரவி...
வாழ்த்துக்கு நன்றி..
ராகவேந்திரா சார்..!
தாங்கள் பதிவிட்ட, அய்யா
நடிகர் திலகத்தின் அரசியல் நேர்மை குறித்த கட்டுரை
மிக சிறந்த பதிவு.
எந்தச் சூழ்நிலையிலும்
தனக்கென்று எதன் மீதும்
ஆசை கொள்ளாமல், தேச
நலனே பெரிதென்று வாழ்ந்த
ஒரு மாமனிதரின் தூய
அரசியலை நல்லவிதமாய்
வெளிப்படுத்தியிருந்தது..
கட்டுரை.
80-களுக்குப் பிறகு நடிகர்
திலகத்தின் திரையுலக செல்வாக்கு மங்கிற்று என்றும்,
பெரும்பாலான படங்கள்
தோல்வியைத் தழுவின
என்றும், 70-களின் இறுதியிலிருந்தே வேறு மாதிரியான படங்கள் வரத்
துவங்கி விட்டன..நடிகர் திலகத்தின் நடிப்பு பாணி
அப்போது பழையதாகி விட்டது
என்றும் எழுதப்பட்டிருந்ததை மட்டும் ஜீரணிக்க முடியவில்லை.
கல்தூண், பரீட்சைக்கு நேரமாச்சு, ஆனந்தக் கண்ணீர்
உள்ளிட்ட சிறந்த நாடகக்
கதைகள் திரைப்படமாகி வெகுவாக ரசிக்கப்பட்டதெல்லாம் 80 களில்தானே?
70-களின் பிற்பகுதியிலேயே
வேறு மாதிரியான படங்கள்
வரத் துவங்கி விட்டன என்றால் "முதல் மரியாதை" போன்ற
படத்தை 80-களுக்கு முன்போ,ஏன்.. இன்று வரை கூட யாரும்
தரவில்லையே..ஏன்?
தாவணிக் கனவுகள், மிருதங்க
சக்ரவர்த்தி,மண்ணுக்குள் வைரம்,தாய்க்கு ஒரு தாலாட்டு, லட்சுமி வந்தாச்சு, ஜல்லிக்கட்டு, ராஜரிஷி, பசும்பொன்..என்று
அவர் அசத்தி ஆச்சரியப்படுத்திய பொற்காலம், 80-கள்தானே?
பழசாகிப் போகும் பாணியா
அவருடையது? "தேவர் மகனி"ல் நீங்கள் நடித்தால்தான் ஆயிற்று என்று பழசுக்காகவா
பரமக்குடிக்காரர் தவமிருந்தார்?
ஒருவேளை அவர் நடிப்பு பழையதுதான் என வைத்துக்
கொண்டாலும், கலையின்
ஆரோக்கியத்திற்கு
இந்தப் "பழையது"தான் நல்லது.
அவரது நல்ல படங்கள் எத்தனையோ தோல்வியைத்
தழுவியிருக்கின்றன. அதை
வைத்தா அவரது திரையுலக
செல்வாக்கை தீர்மானிப்பது?
தோல்விகளை வைத்து அவருடைய சிறப்பைத்
தீர்மானிப்பது தவறென்பது..
அரசியலில் மட்டுந்தானா..?
திரையுலகில் கிடையாதா?
சிந்திக்க வேண்டிய கருத்து ரவி...
பாராட்டுக்கள்
நாம் ஒப்பீட்டைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்வதன் காரணம் தேவையற்ற அல்லது திசை மாறிப் போகக் கூடிய விவாதங்களுக்கு இடம் தரவேண்டாம் என்கிற நல்லெண்ணத்தினால் தான்.
அன்பு நண்பர் செல்வகுமார் அவர்கள் மேற்கோள் காட்டியுள்ள பதிவில் உள்ளபடி பார்த்தால் நடிகர் திலகம் அரசியலில் சுத்தமாக ஒன்றுக்கும் உதவாதவர் போலவும் செல்வாக்கு சுத்தமாக இல்லாதவர் போலவும் சித்தரிக்கப்படுகிறது. இதற்கு நாம் விளக்கம் சொல்ல வேண்டியது கடமையாகிறது.
சினிமா வேறு. அரசியல் வேறு.
சினிமாவைப் பொறுத்த மட்டிலும் தனியொருவரின் செல்வாக்கு அங்கே நிச்சயம் ஆதிக்கம் பெறும்.
ஆனால் அரசியலிலும் தேர்தலிலும் அவ்வாறல்ல. வாக்குக் கேட்டு மக்களிடம் செல்லும் போது அங்கே அனைத்துத் தரப்பினரின் வாக்குகளையும் ஒரு அரசியல்வாதி எதிர்பார்த்துத் தான் செல்கிறான். தேர்தல் வெற்றி பெறவேண்டுமென்ற நோக்கில் கொள்கை மாறுபாடு இருந்தாலும் அரசியலில் இது சகஜம், நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை என்பது போன்ற வாதங்கள் துணைக்கு வைத்துக் கொள்ளப்பட்டு கூட்டணி ஏற்படுத்தப்படுகின்றன. தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றிகள் - ஓரிரு தேர்தல்களைத் தவிர்த்து - கூட்டணியின் பலத்தினால் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அவ்வாறு கூட்டணி ஏதுமின்றி தனிக்கட்சியாக வெற்றி பெற்றது என்றால் அது ஜெயலலிதா தலைமை வகித்த அ.தி.மு.க. மட்டுமே. அவரைத் தவிர வேறு யாருமே கூட்டணி யிீன்றி தேர்தலில் வெற்றி பெற்றதாக நான் அறிந்த வரையில் இல்லை.
அவ்வாறு கூட்டணி அமைப்பதின் காரணமே அந்தக் கட்சியின் வாக்குகளையும் சேர்த்தால் வெற்றிக்கு உதவும் என்கிற கணக்கில் தான்.
செல்வாக்கில்லாத அரசியல்வாதி என்று தெரிந்தால் எந்த தலைவனும் கூட்டணிக்கு அழைக்க மாட்டார். இதுவே வரலாறு.
நடிகர் திலகம் சார்ந்த அரசியல் கட்சியைக் கூட்டணியில் சேர்த்து தேர்தலில் போட்டியிட்டதும் இதில் அடங்கும்.
இதை அந்த நண்பர் புரிந்து கொள்ள வேண்டும்.
நடிகர் சங்கத் தேர்தல், அதையொட்டிய வாக்கு சேகரிப்பு பிரச்சாரங்கள் இதைப் பற்றிய விவாதங்களில் அவரவர் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுத்துக்கொண்டு கருத்துக்களைக் கூறுகின்றனர்.
நடிகர் திலகம் தலைவராக இருந்த காலத்தில் அவருக்குப் பெயர் வரக்கூடாது என்பதற்காக நடிகர் சங்கத்தில் ஒரு பிரிவினர் முனைப்புடன் இருந்தனர் என்று ஒரு பேச்சு அந்தக் காலத்தில் உண்டு. எந்தவித பாகுபாடும் கருத்து வேற்றுமையையும் பாராமல் அனைத்து தரப்பினருக்கும் பொதுவாக, அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு, நடிகர் திலகம் தலைமையேற்ற நடிகர் சங்கம் நலிவுற்ற நடிகர்களுக்காக வீட்டு வசதித்திட்டம் ஏற்படுத்தியது. அப்போதைய சென்னைப் புறநகர் பகுதியில் தனி நகரமாகவே உருவாகும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு அதற்கான வங்கிக்கடன் வசதியெல்லாம் பேசி முடிக்கப்பட்டு நிறைவேறத் தயாராக இருந்த நிலை, அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் போது அப்போதைய வீட்டு வசதித்துறை அமைச்சர் இசைவும் அளித்ததாக அறியப்பட்ட நிலையில் அறிவிப்பு அளவிற்கு வந்த அந்த திட்டம் முடக்கப்பட்டு விட்டது. அது நிறைவேறி விட்டால் எங்கே நடிகர் திலகத்திற்கு பெயர் வந்து விடுமோ, ஏற்கெனவே நடிகர் சங்க கட்டிடத்தில் அவருக்கு சிறந்த தலைவர் என்ற பெயர் வந்து விட்டதே என்ற எண்ணத்தில் நலிவுற்ற நடிகர்களுக்கான வீட்டு வசதித்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கெல்லாம் பின்னணியில் இருந்தது யார் என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்.
இது போன்ற பல நற்காரியங்களை நடிகர் திலகம் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிறைவேற்ற தயாராக இருந்தார்.
அது மட்டுமா, உலகிலேயே சிறந்த நடிகராகத் திகழ்ந்த அவருக்கு ஒரு முறை கூட சிறந்த நடிகர் விருதினை அளிக்காத மத்திய மாநில அரசுகளின் அலட்சியத்தைக் கூட பொருட்படுத்தாமல், ரிக்ஷாகாரன் என்கிற படத்திற்காக எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாரத் பட்டம் வழங்கப்பட்ட போது அந்த விழாவை முன்னின்று நடத்தியது நடிகர் திலகம் தலைமையிலான நடிகர் சங்கம் தானே.. இதையும் அனைத்துத்தரப்பினரும் மறைப்பது ஏன்.
ஒருவர் ஒரு விஷயத்தை மறைக்கிறார் என்று குற்றம் சாட்டி அதற்கான விளக்கம் தரப்படும் போது, அந்த விளக்கத்திலும் முழுமை இராமல் தேவையானவை மட்டும் கூறப்படும் போது அந்த விளக்கமும் குற்றம் சாட்டப்படுபவரின் பேச்சைப் போலத் தானே அமைகிறது.
எது எப்படியிருந்தாலும் இறுதி வரை எதிர்ப்பிலேயே எதிர்நீச்சல் போட்டு தனக்கென யாரும் நிகரில்லை என்பதை நிரூபித்து வாழ்ந்தவர் நடிகர் திலகம் மட்டுமே என்பது உண்மை. இது இன்றில்லாவிட்டாலும் காலம் கண்டிப்பாக உணர்த்தும்.
'கலைமகன்' இன்று எனக்கிட்ட ஆணை.
'குழந்தையின் கோடுகள் ஓவியமா?
இந்த குருடன் வரைவது ஒரு காவியமா?
நினைந்ததை உரைத்தேன் புலவர்களே!
குற்றம் நிறைந்திருந்தாலும் அருளுங்களேன்!
கலைமக(ன்)ள் எனக்கொரு ஆணையிட்டாள்
சில காவியப் பொருள்களைத் தூது விட்டாள்
அலையெனும் எண்ணங்கள் ஓட விட்டாள்
அதை ஆயிரம் உவமையில் பாட விட்டாள்
பாட விட்டாள்'
'சாகுந்தல'த்தை சபையில் அரங்கேற்றும் சாகா வரம் பெற்ற புலவன். அதை அப்படியே கண்முன் கொண்டு வந்து சாதனை படைக்கும் கலைத் தெய்வம். பனை ஓலையில் எழுத்தாணி பிடித்து
பெற்ற வரத்தால் பிழை புரிந்த சூரனிடம்
பட்டதெலாம் தேவர் குலம் பதைத்தே
முறையுரைக்க
கற்றை சடை முடியான்
கண்ணைத் திறந்ததுவும்
கந்தன் பிறந்ததுவும்
கைவேல் எறிந்ததுவும்
சந்தக் கவிதையிலே சாற்றினேன்
தாய் கொடுத்த இந்த மழலையையும்
ஏற்றருள்வாய் தாயகமே!
தாயகமே! தாயகமே
என்று 'நடிகர் திலகம்' காவிய அரங்கேற்றம் பண்ணும் போது அது நிஜ சபையோ என்று நினைக்கத் தோன்றுகிறது. 'கந்தன் பிறந்ததுவும்' வரியில் திலகம் பின் பக்கம் உடல், கழுத்து இவற்றறை பின்னிழுத்து ஓலையில் முன் எழுதும்போது மூவேந்தனும் மண்டியிட்டு அடிபணிய மாட்டானா இந்த நடிப்பு வேந்தனின் நயங்களைப் பார்த்து?
வீணை ஓசையிடையே சுசீலாம்மா,
'காதல் மணம் கொண்ட பாசம்
இந்த கவிஞனின் மேக சந்தேசம்'
பாடும் போது நாடி நரம்புகள் சிலிர்த்தெழாதோ!
'சூரசம்ஹார சம்பவம்
கவி சொல்லும் குமார சம்பவம்
தாரகன் வீழ்ந்த சம்பவம்
கவி தந்த குமார சம்பவம்'
என்று விறுவிறுப்புமாய், வீரக் கொப்பளிப்புமாய் இசையரசி பாடும்போது இன்னல்கள் அனைத்தும் அந்தக் கணத்தில் மறைந்து மாயமாகும்.
https://youtu.be/HpPOKaKrbrU
http://i1028.photobucket.com/albums/...psigfxud5f.jpg
பாழாப்போன ஒலகத்துல படிச்சாத்தாய்யா மருவாதி.
பணிஞ்சு கும்புட்டுக்க.
படிப்புக் குடுப்பா..
அந்தப் பிரம்மன் பய பொஞ்சாதி.
டியர் செந்தில்வேல் சார்,
ஆவணப்பதிவுகள் பற்றி நீங்கள் உரைத்துள்ளது அனைத்தும் ஏற்றுக்கொள்ள தக்கதே. சிரமப்பட்டு சேர்த்து வைத்த ஆவணங்கள் முந்தையகால நேரடி கொடுக்கல் வாங்கல் முறையில் தவறிப்போக / காணாமல் போக வாய்ப்பிருந்தது உண்மையே. ஆனால் தற்போது இணையத்தில் பதித்து விட்டால், ஒரிஜினல் உரியவரிடம் பத்திரமாக இருக்க, ஆவணங்கள் நொடிகளில் உலகமெங்கும் சென்று சேர்ந்துவிடுகிறது.
குறிப்பாக நடிகர்திலகத்தின் திரைப்பட விளம்பர ஆவணங்கள் வைத்திருப்போர் அவற்றை சேகரித்ததே நடிகர்திலகத்தின் புகழை உலகெங்கும் பரவ செய்யத்தான் என்பதை கருத்தில் கொண்டு சிரமம் பாராது இங்கு பதிவிட வேண்டுகிறோம்.
முன்பு மரியாதைக்குரிய நமது பம்மலார் அவர்கள் பாகம் 9-ல் எல்லா ஆண்டுகளிலும் ஜூலை முதல் டிசம்பர் வரை வந்த அனைத்து பட விளம்பரங்களையும் பதித்தார். ஏனோ தெரியவில்லை ஜனவரியிலிருந்து நிறுத்திவிட்டார்.
தற்போது நண்பர் சிவா அவர்கள் இதற்கென தனி திரியொன்றை துவக்கியுள்ளார். நண்பர்கள் விளம்பர ஆவணங்களை "மட்டும்" அவற்றில் பதிவிட வேண்டுகிறோம். அவை பற்றிய பாராட்டு மற்றும் ஆலோசனைகளை இந்த பொதுத்திரியிலேயே பதிவிடவும். மிக முக்கியமாக விடியோக்களையும் ஸ்டில்களையும் அங்கு பதித்திட வேண்டாம். அது ஆவணங்களுக்கான திரியாக "மட்டுமே" இயங்கட்டும்.
சாதனைத்திரி செழிக்க அனைவரும் சிரமம் பாராது உரமிடுங்கள்.
நன்றி.
From Facebook
கடந்த ஈத் பெருநாள் விடுமுறையில் ' தெய்வமகன் '
எனும் நடிகர் திலகம் நடித்த தமிழ் திரைப்படத்தினை காணும் வாய்ப்பு கிட்டியது.
கலைக்குரிசில் தமிழ் திரைப்படங்களில் எடுத்த அவதாரங்கள் பல நூறு. இப்படத்தில் எடுத்த அவதாரங்களோ முத்தான மூன்று. திரைப்பட கதாநாயன் என்றால், முக வசீகரமும், கட்டழகும், நல்ல நிறமுமாக கண்கவர் வசீகரனாக இருக்க வேண்டும் என்ற கட்டாயங்களை தைரியமாக உடைத்த பெருமகன்.
கோரமான குரூரமான தோற்றம் கொண்டவனாக நடித்தும் மக்களை வசியப்படுத்த முடியும் என நிரூபித்தவர்... துவக்கி வைத்தவர் இவர்தானோ...?
வேடங்களை வித்தியாசப்படுத்தி எப்படி நடிக்க வேண்டும் என்பதற்கு நடிகர் திலகத்தின் படங்கள் எப்போதுமே சக நடிகர்களுக்கு, புது நடிகர்களுக்கு பாடப்புத்தகங்கள். நன்கு கவனியுங்கள்.. நடையிலும், மேனரிசத்திலும், முகபாவனை, தோரணை, கைகளை பயன்படுத்தும் முறை, என நுட்பமாக வேறுபாடுகளை
வெகு கவனமாக நினைவில் நிறுத்தி நடித்திருப்பார்.
முதன் முதலாக ஆஸ்கார் அவார்டுக்கு அனுப்ப பட்ட தமிழ் திரைப்படம்.
படத்தின் கதைப்படி, விகாரமான தழும்புகளுடன் கூடிய முகத்துடன் உடைய, இளம்பருவத்தில் சமூகத்தில் பலராலும் இகழப்பட்டவர், பின்னர் தனது கடின உழைப்பினால் பெரும் செல்வந்தராக வாழ்பவர் வழக்கறிஞர் சங்கர். அவருக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவர் அவரை போலவே விகாரமான தழும்புகளுடன் பிறந்திருக்க, அதனை கொன்று விடுமாறு தனது நெருங்கிய நண்பரான மருத்துவரிடம் (மேஜர் சுந்தரராஜன்) கூற அவர் சினம் கொண்டு...இயலாது என கூற இருவருக்கும் வாக்குவாதம் ஆகிறது.. முடிவில் ஒப்புக்கொண்ட மருத்துவர், சங்கருக்கு தெரியாமல் அந்த குழந்தையை ரகசியமாக ஒரு அனாதை விடுதியில் பாபா என்பவரின் பொறுப்பில் வளர்க்க கூறுகிறார்.
வழக்கறிஞர் சங்கரின் அதிகாரப்பூர்வமான ஒரே மகனான வளரும் விஜய் , அம்மாவைப்போல அழகானவனாக இருந்தாலும், அப்பாவியாக, பொறுப்பின்றி அப்பாவின் பணத்தில் ஜாலியாக உல்லாசமாக பெண்களுடன் சுற்றுபவனாக இருக்கிறான். அவனது நண்பனாக நடித்து அவனை ஏமாற்றி பணம் பறித்து பல தகிடு தத்தம் செய்பவனாக நம்பியார் வருகிறார். டாக்டரின் மகள் நிம்மி (ஜெயலலிதா) விஜய் இருவரும் காதல் வயப்படுகின்றனர்.
இதற்கிடையில், பாபாவால் அனாதை என்ற பெயரில் வளர்க்கப்பட்ட முரட்டுத்தனமான பலமுடைய, சிதார் அற்புதமாக வாசிக்க தெரிந்த கண்ணன் (விகார முகம் கொண்ட மகன் சிவாஜி) பாபாவின் மறைவுக்கு முன்பு தான் அனாதை அல்ல என்ற விபரமறிந்து டாக்டரை சந்தித்து உண்மைகளை அறிந்து... அவர் வீட்டு மாடியில் தங்கி இருக்கும் கண்ணன் தனது குடும்பத்தினரை திருடனை போல இரவில் சென்று தரிசிக்கிறான்...திரும்ப வரும்போது.. தந்தையால் திருடன் என சந்தேகிக்க பட்டு குண்டடி பட்டு திரும்புகிறான்.
சங்கருக்கும் தனது மூத்த மகன் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது, இருவரும் சந்திக்கும் காட்சி மிக்க உணர்வு பூர்வமான காட்சி. இதற்கிடையில் நம்பியாரின் சதியினால் விஜய் கடத்த படுகிறார். அவரை மீட்க புறப்படும் அவரை தாக்கி மயங்க செய்து மகன் கண்ணன் தம்பியை உயிருடன் மீட்டு திரும்புவதும் சண்டையில் குண்டடி பட்டு தாயின் மடியில் உயிர் விடுவதுமாக கதை நிறைவடைகிறது.
முதலில் கோர முகம் கொண்ட அலுவலகத்தில் இருந்து, சங்கர் இறங்கி வருவது முதல் கடைசி காட்சி வரை, மூன்று கதா பாத்திரங்களையும் முற்றிலுமாக வித்தியாச படுத்தி நடிக்கும் கலை...த்திறன், கலைக்குரிசில் கணேசனுக்கே உரித்தானது. பேசும் பேச்சு, விழிகளின் வீச்சு, நடக்கும் நடை, வித்தியாசமான குரல் என யாரோ...மூன்று வேறுபட்ட நடிகர்கள் நடிப்பது போல பூரணமாக வேறுபடுத்தி நடித்துள்ளார்.
என்னை மிகவும் கவர்ந்த காட்சிகள் பல.., சங்கர் மருத்துவரிடம் குழந்தையை கொல்லக்கூறும் காட்சி, கண்ணன் மருத்துவரை சந்திக்கும் காட்சி, மற்றும் தன் தாயை கண்டு விட்டு வீட்டுக்கு வந்து அந்த சந்தோஷத்தை பகிரும் காட்சி..(தெய்வமே...தெய்வமே...பாடல்..)
அடுத்து கண்ணன் தனது தந்தையை வீட்டில் சந்தித்து எப்படி தன்னை புறக்கணிக்கலாம் என்று வாதிடும் இடம், அப்போது தம்பியும் அறைக்குள் நுழையும்போது இவர் ஒரு ஓரத்தில் ஒளிந்து கொள்வது போல காட்சி இருக்கும், மூவரும் ஒரே பிரேமில் இருக்கும் காட்சி...அற்புதம். இன்றைக்கு உள்ள தொழில் நுட்பத்தில் இரட்டை கதா பாத்திரங்களை கையாளும் விதம் எளிது..ஆனால்...கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்பு...உள்ள வசதிகளை கொண்டு இப்படி அசத்தி இருக்கிறார்களே என்று மனம் வியந்தது. .
வேறொரு காட்சியில்
சங்கர் தனது நண்பனாகிய மருத்துவரை, தன் மகன் உயிரோடு இருக்கிறானோ என்ற சந்தேகத்துடன் சந்திக்கும் காட்சியும் மிகவும் உணர்வுப்பூர்வமானது. மேஜரின் நடிப்பும் சிம்மக்குரலோனிடம் போட்டி போடும் இடம் அது. காமெடிக்கு நாகேஷ்...வழக்கம் போல வெண்கலக்கடைக்குள் யானைதான். நடிகை பண்டரிபாய் பண்பட்ட நடிப்பில் நம்மை வசீகரிக்கிறார்.
வசனகர்த்தா திரு.ஆரூர் தாசின் வசனங்கள் துப்பாக்கி குண்டுகள் போல சில இடங்களில் பாய்கிறது...சில இடங்களில் குழைகிறது, நெகிழ்கிறது, பல இடங்களில் நம் மனதை நெகிழ்த்துகிறது வெகு..அற்புதம் .மகன் கண்ணன் பேசும்போது,
தேவை இல்லைன்னு நெனச்ச தந்தையும், அவரை தேடி அலைஞ்ச மகனும் ஒருத்தர ஒருத்தர் சந்திக்கிற அற்புதமான காட்சி...
எம் பேரு கண்ணன், நீங்க கூப்பிட்டு நான் தெரிஞ்சிக்க வேண்டிய பேரை...நான் சொல்லி நீங்க தெரிஞ்சிக்க வேண்டிய நெலமை...
அவர் கொடுத்த செக்கை திரும்ப கொடுக்கும்போது,
இதை வாங்கிக்கதான் எனக்கு என்ன உரிமை இருக்கு இல்லை, கொடுக்கதான் உங்களுக்கு என்ன அருகதை இருக்கு.
நீங்க பொறந்தப்ப உங்க அப்பாவும் இது மாதிரிதான் செய்தாரா...ஏன்னா..நீங்களும் என்னை மாதிரிதானே இருக்கீங்க...
உங்க அப்பா உங்களை வேணாம்னு ஒதுக்கலை ஏன்னா அவரு ஏழை...ஆனா என் அப்பா பணக்காரர் இல்லையா...
(இந்த இடங்களில் தந்தையாக நடிப்பவரின் குற்ற உணர்வுடனான முக பாவங்களை காண கண்கோடி வேண்டும்)
இங்க நம்பளை தவிர யாரும் இல்லையே...அப்பான்னு...உங்களை ஒரு தடவை..ஒரே ஒரு தடவை நான் கூப்பிட்டுக்கவா...என்று உருகுவது..
அழகிய மனதை தொடும் காட்சிகள்.
நம்பியாருக்கு வில்லன் வேடத்துக்கு ...சொல்லவும் வேண்டுமோ...?அடேய்...வேலப்பா ... இவன பிடிச்சு கட்டி போடுடா...அவருக்கே உரித்தான் பாணி... கலக்கி உள்ளார்.
பாடல்கள் அப்பப்பா...அருமை அத்தனையும் இனிமை...
தெய்வமே...தெய்வமே...என்ற பாடலை கூறுவதா...
கேட்டதும் கொடுப்பவனே...கிருஷ்ணா ..கிருஷ்ணா ..
காதல் மலர் கூட்டம் ஒன்று...வீதி வழி போகும் என்று...
காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள் என் விழிகளிலே...
கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ...
கண்கள் பேசுதம்மா.... என்று பாடல்களை
இசைக்குரல் நடிகர். டி.எம்.சவுந்தர ராஜன், கானக்குயில் சுசீலாவுடன் இணைந்து பாடி அசத்தி உள்ளார்...
பாடல் காட்சிகளில் நடிகர் திலகத்துக்கு ஈடு கொடுத்து தன் பங்களிப்பை செய்து.. அந்த காட்சிகளை பரிமளிக்க செய்துள்ளார்.
பாடல் வரிகள் வார்த்தெடுத்த தங்க...இழைகள்...போல வெகு பொருத்தம்..காலம் கடந்தும் வாழும் வரிகளை தந்துள்ளார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் .
M.S. விஸ்வநாதன் அய்யாவின் பாடல்களை கேட்கும்போது...தெய்வமே..தெய்வமே..என்று அவரை பார்த்து பாட வேண்டும் போல என்று தோன்றுகிறது..
இசைஅமைப்பு... தெய்வீக இசை அய்யா...உங்களுடையது...
காலங்கள் கடந்தாலும் மனதை வசீகரிக்கும் இசை.
திரு.ஏ.சி.திருலோக சந்தர் விறுவிறுப்பான இயக்கத்தில் அசத்தி உள்ளார். கூட்டத்திலே யார்தான் கொடுத்து வைத்தவரோ...பாடல் கொஞ்சம் இடறியது...அதாவது அந்த கதாநாயகியின் குணாதிசயத்துக்கு திடீரென ஒரு சேரிப்பெண்
ரேஞ்சுக்கு இறங்கி...ஆடுவது கொஞ்சம் பொருந்தாதது போல இருந்தது. பாபாவாக நடித்தவர் கண்ணியமான நடிப்பு.
மொத்தத்தில், முத்தான, சத்தான படைப்பு. காலம் உள்ளவரை.. கலைகள் ரசிக்கப்படும் வரை,
கலைத்தாயின் தெய்வமகன் கணேசனின் புகழை என்றும் பேச செய்யும் படம் என்பதில் ஐயமில்லை. வாய்ப்பு கிடைத்தால் அவசியம் நீங்களும் கண்டு மகிழுங்கள்.