https://scontent.fyto1-1.fna.fbcdn.n...dc&oe=5EDBE52Bhttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...e5&oe=5EDB3AE2
Printable View
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c0&oe=5EDCE89A
நன்றி ...தொடரும்,.................
'நான் பிறந்த நாட்டுக்கு எந்த நாடு பெரியது...இங்கு பெண்ணும் ஆணும் வாழும் வாழ்க்கை இனியது...
தென் நாட்டிலே தண்ணீரும் பொன் மீனும் விளையாடுது...மூன்று தமிழ் தோன்றும் இடம்எங்கள் நாடு....'
இன்று 09/05/2020 மதியம் 12.00 p.m. மணிக்கு மெகா தொலைக் காட்சியில் - நடிகர்திலகம் நடித்த. !!!
" தங்க சுரங்கம் " மெகா ஹிட் படத்தை கண்டு களியுங்கள். !!!
இதில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'கங்கை யமுனை இங்கு தான் சங்கமம்...ராகம் தாளம் மோகனம் மங்களம்...செந்தூர மை வண்ணம் சிந்தாமல் சிதறாமல்...சந்தோசம் கொண்டாடும் கைகள் இங்கே...'
இன்று - 09.05.2020 காலை 09.30 a.m. மணிக்கு வசந்த் டிவி யில் - நடிகர் திலகம் நடித்த படம். !!!
" இமயம்" படத்தை கண்டு களியுங்கள். !!!
நடிகர்திலகம், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்து உள்ளனர்.
'நல்லவன் எனக்கு நானே நல்லவன்...சொல்லிலும், செயலிலும் நல்லவன்..சொல்லிலும், செயலிலும் நல்லவன்...சிட்டு போல வானில் துள்ளி செல்ல வேண்டும்....'
இன்று 09/05/2020 ராஜ் டிஜிட்டல் பிளஸ் டி.வி. யில் காலை 09.30 a.m. (அல்லது) 10.00 a.m. மணிக்கு நடிகர் திலகம் நடித்த குடும்ப படம் " படித்தால் மட்டும் போதுமா"
கண்டு களியுங்கள்.
இந்த படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
'காலம் மாறலாம் நம் காதல் மாறுமா..காலம் மாறலாம் நம் காதல் மாறுமா....தடைகள் தோன்றும் போதும் தலைவி பார்வை போதும்.....'
இன்று 09/05/2020 மெகா 24 டிவி யில் மாலை 06.00 மணிக்கு நடிகர் திலகம் நடித்த மெகா ஹிட் படம்.
" வாழ்க்கை " படத்தை கண்டு களியுங்கள். ¶
இந்த படத்தில் நடிகர்திலகம், அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். ¶
Subject to change.
விஸ்வரூபம் ரிலீஸ்
6 நவம்பர் 1980
பொள்ளாச்சி சாந்தி
சாந்தி தியேட்டரின் பேரில் சிவாஜி ரசிகர்களுக்கு அலாதி பிரியம் உண்டு.
இந்த சாந்தி தியேட்டர் 2 மே 1980 ல் துவக்கப்பட்டது.இந்த அரங்கு கட்ட ஆரம்பிக்கும் போதே மற்றவர்களைக் காட்டிலும் சிவாஜி ரசிகர்களிடம் ஆனந்தம் அதிகம் தான்.
ஒன்று சாந்தி என்ற பெயருக்காக.
இரண்டாவதாக அதை நடிகர்திலகம் தான் கட்டிக் கொண்டிருப்பதாக வெளியான செய்தி.பின்னர் அது பொய்த்தகவல் என்பது தெரிந்தது.ஆனாலும் சாந்தி என்ற பெயர் நிச்சயம் என்றதால் மகிழ்ச்சியையே கொடுத்தது.
தியேட்டர் அன்றைய நவீன பாணி முறையில் சிறப்பாக கட்டப்பட்டு வருவதாகவும், ஒலி அமைப்புகள் மிகப் பிரமாதமாக அமைக்கப் போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.இவையெல்லாம் மக்களுக்கு பெரும் ஆவலைத் தூண்டி இருந்தன.
அழகு படுத்தும் வேலைகள் முடிந்து அரங்கமும் திறக்கப்பட்டாயிற்று.
இவ்வளவு ஆவலை தூண்டிய தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாத காலம் ஆகியும் நடிகர்திலகம் திரைப்படம் வெளியாகவில்லையே என்ற ஆதங்கம் நாளுக்கு நாள் அதிகமானது.இந்நிலையில் தான் விஸ்வரூபம் பட ரீலீஸ் அறிவிக்கப்பட்டது.சாந்தியில் நடிகர்திலகத்தின் முதல் படம்.அந்த காலகட்டத்தில் தியேட்டர் ஆரம்பிக்கப்பட்டு 6 மாத காலம் நடிகர்திலகத்தின் படங்கள் திரையிடாமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒன்றுதான். அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை.1979 ல் ரிலிசான திரிசூலத்தின் தாக்கமே அப்போதும் இருந்தது.அதனால் திரையரங்குளில் நடிகர்திலகத்தின் படங்களை வெளியிடுவதில் பெரும் போட்டி இருந்தன.அந்த நேரத்தில் தனிக்காட்டு ராஜாவாய் தர்பாரை நடத்திக் கொண்டு இருந்த நேரம் வேறு.இப்படிப்பட்ட
நேரத்தில் தான் பொள்ளாச்சி சாந்தியில் விஸ்வரூபம் திரையிடப்பட்டது.
நான் அப்போது பத்துவயது சிறுவனானதால் பெற்றோருடன்தான் படம் பார்க்க செல்வது வழக்கம்.நடிகர்திலகத்தின் படங்களை தவிர வேறு படங்களை எங்கள் குடும்பம் பார்க்காது.இப்படத்தினை முதல்நாளிலேயே பார்க்க சென்றிருந்தோம்.
அன்று வியாழக்கிழமை.
சிறப்புக்காட்சிகளாக நான்கு நாட்களுக்கு 5 காட்சிகள்.
நாங்கள் 4 மணிக்காட்சிக்கு 3 மணிக்கு சென்று இருந்தோம்.தியேட்டருக்குச் சென்றால் பெருங் கும்பல் கும்பலாய் கூட்டம்.
எங்கள் நேரம் முந்தைய காட்சி இடைவேளையின் போதே அடுத்த காட்சிக்கான டிக்கட்டுகள் விற்கப்பட்டு விட்டன.படம் முடிந்து வெளி வரும் கூட்டமும், டிக்கட் வாங்க நிற்கும் கூட்டமும் சேர்ந்தால் சமாளிப்பது பெரும்பாடு என்பதால் தியேட்டர்களில் இந்த நடைமுறை இருந்தது.நடிகர்திலகத்தின் எந்த படமும் பார்க்காமல் திரும்பியதில்லை நாங்கள்.சரி 7 மணி காட்சி பார்க்கலாம் என முடிவு செய்து காத்திருந்தோம்.இந்த நேரத்தில் ஓட்டலுக்கு சென்று வந்து விடலாம் என்று ஒரு மணி நேரத்தை அதில் கழித்தோம்.
தியேட்டருக்குச் சென்றோம்.இப்போது டிக்கட் வாங்க முடியுமா என்ற கலக்கம்.ஏனென்றால் கூட்டம் அப்படி.நேரம் ஆக ஆக கூட்டம் கூட்டமாய் மக்கள் சேர்ந்தனர்.நம்பிக்கை தளர ஆரம்பித்தது.
இந்த நேரத்தில்தான் எங்கள் குடும்ப நண்பர் ஒருவர் வந்தார்.எங்களின் உணர்வு தெரிந்து தான் டிக்கட் எடுத்து கொடுப்பதாக கூறினார்.இந்நிலையில்
ஓடிக்கொண்டிருக்கும் காட்சியின் இடை வேளை வந்தது.இடைவேளை முடிந்து ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது.டிக்கட் கவுண்ட்டர்களில் பெரிய பரபரப்பு, தள்ளுமுள்ளு.நண்பரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் எங்களுடன் நின்று பேசிக் கொண்டிருக்கிறார்.டிக்கட் கொடுக்க ஆரம்பித்தாயிற்று.நண்பர் மெல்ல அடி எடுத்து வைக்கிறார்.கம்பிவலை ஜன்னலை நோக்கி ஒரு தாவல்.மேலே அந்த கம்பிகளை பிடித்து படிப்படியாக டிக்கட் கூண்டு அருகே நெருங்கி விட்டார்.கூட்ட நெரிசலால் பின் அவரை காணவில்லை.ஒரே பதைபதைப்பு.ஐந்து நிமிடங்கள் கழிந்தது .தோளை தொட்டு திருப்புகிறார் என்னை.கையில் வேண்டிய டிக்கட்டுகள்.அப்பாடா.!இப்போதுதான் நிம்மதி.தியேட்டரைப் பார்த்தால் இப்போது நான்கு தியேட்டர் கொள்ளவு கூட்டம். பார்க்கவே பெரும் மாநாடு போல் காட்சி அளித்தது.
படம் முடிந்து கூட்டம் வருகிறது.அந்தக் கூட்டத்தில் பாதி பேர் வருவதற்கு முன்னரே பெருங்கூட்டம் உள்ளே நுழைகிறது.நான் பார்த்த தலைவரின் சில படங்களுக்கு டிக்கட்கூட கிழிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.அதில் இப்படமும் ஒன்று.தியேட்டருக்குள்ளே 100 பேர் கூட அமர்ந்திருக்க மாட்டார்கள். அதற்குள்ளாகவே டைட்டில் ஓட ஆரம்பித்துவிட்டது.என்ன நடக்கின்றது ஏது நடக்கிறது என்று புரியாமல் கலவர பூமியாகவே அந்த நிமிடங்கள் இருந்தன. ஒரே மக்கள் இரைச்சல், கூட்டம் கூட்டமான நகர்வுகள் என்று நகர்ந்து இருக்கைகள் நிரம்பிய பின்......
ஒலி சத்தங்கள் எங்கிருந்து தான் வருகிறதோ என்று தியேட்டருக்குள் தலையை திருப்பி திருப்பி தேட வேண்டியதாய் இருந்தது.அப்போதைய அறிமுகம் நவீன சவுண்ட் ட்ரெண்ட் சிஷ்டம்
" சைட் ஸ்பீக்கர்ஸ் ".முக்கிய காட்சிகளுக்கு பாடல்களின் பிண்ணனி இசைக்கு சண்டை காட்சிகளுக்கு இதை
பயன்படுத்துவர்.ரசிகர்களின் உணர்ச்சிகளை பல மடங்கு தூண்டிவிடும் இது.
அதற்கு முன் அந்த சிஷ்டம் பொள்ளாச்சி தியேட்டர் தியேட்டர்களில் இல்லை.எனவே எங்களுக்கு புது வித அனுபவத்தையும், பிரமிப்பையும் தந்தது.
"என்னை யாருன்னு நினச்சே "பாடல் ஆரம்பித்தது.
அப்பொழுது நடந்த ஆர்ப்பாட்டங்கள்...
வணக்கம் ..
திரையில் மின்ன,
ஸ்கிரீன் இறங்க இறங்க
நடந்து கொண்டே இருந்தன.
நன்றி
செந்தில்வேல் சிவராஜ்
Thanks Senthilvel
நடிகர் திலகம் சிவாஜி சமூக நல பேரவை மற்றும் நண்பர்கள் குழு சார்பாக ஏழை எளியோருக்கு அரிசி பருப்பு மளிகை சாமான்கள் 20க்கு மேற்பட்டோருக்கு வழங்கப்பட்டது 9:5:2020 காலை 10 மணி அளவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கலைப்பிரிவில் மாநிலத் தலைவர், சிவாஜி சமூக நலப்பேரவை மாநில தலைவர் திரு K.சந்திரசேகரன் காங்கிரஸ் வடசென்னை மாவட்ட தலைவர் திரு M.S.திரவியம் அவர்களின் அனணக்கினங்க 20க்கும் மேற்பட்டோருக்கு திரு E.சங்குராஜன் M.ஹரிராஜ் அவர்களின் ஏற்ப்பாட்டில் வழங்கப்பட்டது உடன் இருந்தோர் B.குபேரன் M.ரிஷிகரன் P.நாகரத்தினம் S.விஜயகுமார்
https://scontent.fyto1-2.fna.fbcdn.n...9b&oe=5EDCB4EB