9+1=10
Printable View
9+1=10
81 வருட திரைப்பட வரலாற்றை புரட்டிபோட்ட நடிகர்திலகம் அவர்களின் டிஜிட்டல் கர்ணன் காவியம் - சில நினைவலைகள்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 பொங்கலன்று வெளிவந்து மிக சிறந்த வெற்றியடைந்த காவியம் கர்ணன். இந்த திரைப்படத்தை பற்றி கேவலமான காழ்புணர்ச்சியில் பலர் பலவிதமாக பேசினாலும் கர்ணனின் வெற்றி எந்தகாலத்திலும் நிரூபிக்கப்பட்டவை.
2010 ஆம் ஆண்டு திவ்ய நிறுவனம் இந்த காவியத்தை நவீனமயமாக்க முடிவெடுத்து இந்த என்னத்தை சக விநியோகஸ்தர்கள்இடம் பகிர்ந்துகொண்டபோது, அவர்கள் எள்ளி நகயாடியதை இன்றும் நாம் நினைத்துபார்கிறோம்.
மிகவும் கஷ்டப்பட்டு திரைக்கு கொண்டுவந்த போதும் அந்த கோமான்கள் இவரை கிண்டல் செய்ததை விடவில்லை. "என்ன ஒரு 30 அல்லது 40 பேர் படம் பார்பார்களா ஒரு நாளைக்கு ? காசை வைத்துகொண்டு சும்மா இருக்க முடியவில்லையா ? காசு நிறைய இருந்தால் எங்களுக்கும் கொஞ்சம் கொடு என்பது போல கிண்டலும் கேலியும்.
இப்படி பல கிண்டலுக்கும் கேலிக்கும் இடையே கர்ணன் மார்ச் மாதம் 16 வெளிவந்தது ! ஒரு பக்கம் சக விநியோகஸ்தர்கள் கிண்டல் ..இன்னொரு பக்கம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வு மற்றும் இதர வகுப்புகள் தேர்வு, புது படங்களின் அணிவகுப்பு இப்படி பல சவால்களுக்கு நடுவே கர்ணன் வெளிவந்தது.
கர்ணனின் தோல்வியை மனதளவில் வேண்டிகொண்டிருந்த கயவர்கள் இதை மீண்டும் ஒருமுறை தோல்விப்படம் என்று திரும்பவும் பொய்யை பரப்ப பல ஆயுத்தங்களுடன் தயாராக இருந்தனர்.
அனால் இவர்கள் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் தவிடுபொடியாக்கி கர்ணன் 1964 முதல் எப்படி வெற்றி நடைபோடாரோ அதைவிட நான்கு மடங்கு வெற்றி நடைபோட்டார்!!
திரையிட்ட இடம் எங்கும் திருவிழாகோலம் !
எங்கும் கர்ணன்...கர்ணன்...கர்ணன்...என்ற பேச்சுதான் !
சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நாகை, தஞ்சை, என்று எங்கு திரும்பினாலும் கர்ணனின் வசூல் மழைதான்.
அதுவரை பொய்யர்களின் புளுகளை நம்பிய பல மக்களுக்கு ரசனைகள் மாறிய இந்த காலத்திலயே கர்ணன் இப்படி சக்கை போடு போடுகிறது. ரசனைகள் நன்கு இருந்த அந்த காலத்திலும் நிச்சயம் இந்த படம் மிக சிறந்த வெற்றிப்படமே என்பதை உணர்ந்துகொண்டு பொய்யுரைத்த புளுகு மன்னர்களை எள்ளி நகையாடினர்.
இதில் ஆத்திரமடைந்த ஒரு சில பொய்யர்கள், பார்க்கும் சுவர்களில் எல்லாம் கை காசு செலவுசெய்து POSTER மூலம் கர்ணன் படம் பற்றி நடிகர் திலகம் பற்றியும் அவதூறும், பொய்யும் கர்ணனின் 25, 50, 75, 100, 125, 150 நாள் ஓட்டம் வரை POSTER மற்றும் தங்களுடைய பத்திரிகை வாயிலாக பரப்ப முயன்றனர். இவர்களின் ஊளையும் ஒலகுரலும் மக்கள் சுத்தமாக நம்பவில்லை, IGNORE செய்தனர் என்பதுதான் உண்மை.
பல புதிய படங்களின் வரிசையான அணிவகுப்புகள் இருந்தபோதும் சத்யம் திரை அரங்கின் சத்யம் குழுமம் அவர்களின் திரை அரங்கு மூன்றிலும் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகள்.
100வது நாள் வருவதற்கு முன்பே ADVANCE BOOKING மூலம் நூறாவது, நூற்றி ஓராவது நாட்கள் மூன்று திரை அரங்கிலும் நிறைந்துவிட்டன !
கர்ணன் திரைப்படம் 81 வருட திரைப்பட வரலாற்றிலயே மறு வெளியீடில் புதிய சாதனையும் சகாப்தத்தையும் ஏற்படுத்தியது !
இன்னும் 4 அல்லது திரை அரங்கு கொடுத்திருந்தால் கூட அரங்கு நிறைவு சர்வ சாதாரணமாக கண்டிருக்கும் கர்ணன். ஆனால் தொடர்ந்து வந்த பல புதிய தமிழ், ஆங்கிலம், மலையாள படங்கள் சத்யம் மற்றும் ESCAPE வளாகத்தில் முன்பே ஒப்பந்தம் செய்ததால் அதிக அரங்குகள் தரமுடியாத சூழ்நிலை திரை அரங்கு உரிமையாளருக்கு.
மேலும் கர்ணன் திரைப்பட விநியோகஸ்தர் திரு சொக்கலிங்கம் அவர்கள் 2014இல் கர்ணன் காவியம் 50 வருட பொன்விழா என்ற காரணத்தால் அவரிடம் திரையிட கேட்டு வந்த விநியோகஸ்தர்களுக்கு கூட திரையிட தராமல் மறுத்தது இன்னொரு துரதிர்ஷ்டம் !
ஆக, ஒரு நவீனமயமாக்கிய பழைய படம் மூன்று அரங்கில் 100வது நாள் வருவதற்கு முன்பே, நூறாவது நாள் ADVANCE BOOKING மூலம் HOUSEFULL ஆவது என்ற சாதனையை நிகழ்த்திய முதல் படமாகிறது !
மேலும் இந்த மூன்று அரங்கிலுமே டிக்கெட் விலை 40ஒ 50ஒ 70ஒ அல்ல ! ஒரு டிக்கெட்டின் விலை 120 முதல் 150 ருபாய் ஆகும்.
ஒரு பழைய படம், 120 முதல் 150 ருபாய் டிக்கெட் கொடுத்து அதுவும் ADVANCE BOOKING மூலம் 100 வது நாள் முன்பே அரங்கு நிறைவு காண்பது திரை உலக வரலாற்றில் முதல் முதலான சம்பவம் !
கூட்டமே வராத இளம் காலை காட்சி அதாவது, 10 மணி காட்சி கூட ADVANCE BOOKING இல் அரங்கு நிறைவு கண்ட படம் கர்ணன் மட்டுமே !
கர்ணன் காவியம் 100வது நாள், அந்த நூறாவது நாள் வருவதற்கு முன்பே முன்பதிவில் மூன்று திரை அரங்கிலும் அரங்கு நிறைவு கண்ட ஆவணம் !
நிகழ்த்தியது நடிகர் திலகத்தின் கர்ணன் !
100 நாள் காண்பதற்கு முன்பே நூறாவது நாள் 120 முதல் 150 ருபாய் டிக்கெட் விலை கொண்ட 3 திரை அரங்கு HOUSEFULL கண்ட நவீனமயமாக்கப்பட்ட ஒரே படம் "கர்ணன்" - அதன் ஆவணம் !
http://i501.photobucket.com/albums/e...psb6bab147.jpg
KARNAN 100வது நாள் சுவரொட்டி !
http://i501.photobucket.com/albums/e...ps7c53b051.jpg
ஆஹா...அருமையான வாக்கியங்கள் சார் !
தங்கபதக்கம் பற்றி தரமான ஒரு விமர்சனம், எண்ணம் எழுதி எங்கள் கண்களுக்கும் மனதுக்கும் விருந்தளித்துள்ளீர்கள் ! மிக்க நன்றி !
உங்கள் நடை, நடிகர் திலகத்தை போல ஒரு ராஜ நடை, உங்கள் எழுத்து நடிகர்திலகத்தின் கண்கள் போல மிக தெளிவு மற்றும் கூர்மை !
தமிழை, ஆங்கிலத்தை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று இந்த திரை உலகிற்கு கற்றுத்தந்த ஆசான் நமது நடிகர் திலகம் அல்லவா, அவர் ரசிகர் நீங்கள் எப்படி இருப்பீர்கள்...!
விக்ரமன் உத்தமபுத்திரனில் உரைத்ததுபோல " ஹ ! மாமா ! தமிழை சிறிது எழுதிபார்க்கிறேன் ! என்பது போன்ற சர்வ லாவகமான எழுத்து உங்களுடையது without compromising on quality !!
சமீபத்தில் வெளியிட்ட நவீனமயமாக்கப்பட்ட திரைப்படத்தை அடுத்து நமது திவ்யா பிலிம்ஸ் திரு சொக்கலிங்கம் அவர்கள் நமது நடிகர் திலகம் நடித்த 1974இல் வெளிவந்து வெள்ளிவிழா கண்டு, அதற்க்கு முன் வெளிவந்தஅனைத்து படங்களின் வசூலையும் சர்வ சாதாரணமாக முறியடித்த சிவாஜி ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த " தங்கபதக்கம் " திரைப்படத்தின் கோவை, திருச்சி & தஞ்சாவூர் தவிர அனைத்து AREA உரிமையை வாங்கியுள்ளார்.
திரு சொக்கலிங்கம் அவர்கள் அடுத்ததாக "தங்கபதக்கம்" திரைப்படத்தை நவீனமயமாக்க உள்ளார் என்பது கூடுதல் செய்தி.
தவறு செய்வது தனது மகன் என்றாலும் சட்டம், சமுதாயத்திற்கு முன் அவனும் ஒரு சாமான்யனே.....தேசப்பற்றிற்கு முன் குடும்பபற்று ஒன்றும் இல்லை ! என்ற உயர்ந்த கருத்தை சொன்ன காவியம் !
இன்றைய சமுதாயர்த்திர்க்கு தேவையான உயர்ந்த எண்ணங்கள் மற்றும் கருத்துக்கள் இந்த காவியத்தில் உண்டு !
http://i501.photobucket.com/albums/e...ps7f09a549.jpg
KARNAN - 100th DAY GALA CELEBRATION
https://www.youtube.com/watch?v=MffLsNuZ3SY
KARNAN - 100th DAY GALA CELEBRATION
https://www.youtube.com/watch?v=VMMHVRjRUd8
மறுவெளியீட்டில் 100 நாட்களை கடந்து வெற்றிவாகை
சூடிய கர்ணன் காவியத்தின்
2ம் வருட நினைவூட்டல்
http://i157.photobucket.com/albums/t...ps1ee3c3ee.jpg
http://i157.photobucket.com/albums/t...ps51f432ab.jpg
http://i157.photobucket.com/albums/t...psc6346929.jpg
http://i157.photobucket.com/albums/t...ps458a9c8d.jpg
http://i157.photobucket.com/albums/t...ps089860f3.jpg
UNION MINISTER PARTICIPATES IN THE 100th DAY FUNCTION OF KARNAN
https://www.youtube.com/watch?v=W-Gv0cZPCMU
FANS REJOICE ONCE AGAIN IN THE 100th DAY FUNCTION OF KARNAN
https://www.youtube.com/watch?v=plJr1K_VWwM
https://www.youtube.com/watch?v=lc3wfd-BA7w