http://i58.tinypic.com/2h30ppf.jpg
Printable View
நன்றி திரு.செல்வகுமார் சார். தாங்கள் கூறியது போல உலகில் எங்கு தமிழன் தாக்கப்பட்டாலும் முதலில் ஒலிப்பது தலைவரின் குரலாகத்தான் இருக்கும். அருமையான கருத்தை கூறியிருக்கிறீர்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
http://i57.tinypic.com/30jsmds.jpg
திராவிட இயக்க பாடகரும் இனிய குரலுக்கு சொந்தக்காரருமான இசை முரசு திரு.நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு வருந்தத்தக்கது. திரு.குமார் சார் கூறியிருப்பதை போல மக்கள் திலகத்தைப் பற்றி அவர் பாடிய பாடல்கள் ஒரு காலத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது.
தலைவர் நடித்த குலேபகாவலி படத்தில் டைட்டில் பாடலான ‘நாயகமே நபி நாயகமே...’ பாடலை திரு.எஸ்.சி. கிருஷ்ணன் அவர்களோடு இணைந்து ஹனீபா பாடியிருப்பார். தஞ்சை ராமையாதாசின் வரிகளில் மிகவும் அருமையான பாடல். தொடக்க காட்சியிலும் தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலியில் அவர் குரல் மனதை உருக்கும்.
திரு.ஹனீபா அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.
‘‘நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
இணையிலாத எங்கள் பாதுஷா
தந்த நெறியின் படியே நாயகமே
இந்து முஸ்லிம் ஒற்றுமையோடு
இன்புற வேண்டும் நாயகமே
நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே
அறியாமை இருள் நீங்கி
இன்ப ஒளி வேண்டும் நபியே நாயகமே
அன்பின் இதயம் காணிக்கை செய்தோம்
அருள் தாரும் நபி நாயகமே
நாயகமே நபி நாயகமே
நலமே அருள் நபி நாயகமே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்