-
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொற்காலமே நடிகர்திலகம் சங்கத்தலைவராக பணியாற்றிய 1971 முதல் 1981 வரையிலான பத்தாண்டுகள்தான்.
1957-லேயே சங்கத்துக்காக நிலம் வாங்கப்பட்டிருந்தும் கட்டிடம் கட்டப்படாமல் வாடகை கட்டிடத்திலேயே இயங்கி வந்தது.இடையில் பதவி வகித்த தலைவர்கள் மற்ற சின்னச்சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார்களே தவிர, கட்டிட விஷயத்தை கையிலெடுக்கவில்லை.
நடிகர்திலகம் தலைவராகவும், மேஜர் செயலாளராகவும், வி.கே.ஆர். பொருளாளராகவும் பதவி ஏற்ற பிறகுதான் சங்கத்தின் செயல்பாடுகள் பரபரப்பாகவும், வெளிப்படையாகவும் ஆயின. சங்கத்தில் நிறைய பேர் புதிய உறுப்பினர்கள் ஆயினர். சங்கத்தின் செயல்பாடுகள் பற்றிய செய்திகள் அடிக்கடி பத்திரிகைகளிலும், பருவ இதழ்களிலும் வரத்துவங்கின.
நடிகர்சங்கத்துக்கான சொந்தக்கட்டிடம் கட்டும் திட்டம் உருவானது. சங்கத்தின் நிதியிருப்போடு வங்கியில் கடனும் பெறப்பட்டு கட்டிடவேலைகள் துவங்கி மளமளவென்று முன்னேறியது. அடிக்கடி உறுப்பினர்களின் மீட்டிங் கூட்டப்பட்டு ஆலோசனைகள் பெறப்பட்டன. வி.கே.ஆரின் கீழ் இரண்டு கணக்கு தணிக்கையாளர்கள் நியமிக்கப்பட்டு வரவு செலவு கணக்குகள் ஒவ்வொரு மீட்டிங்கிலும் உறுப்பினர்கள் முன் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்பதல் பெறப்பட்டது. எல்லா ஒப்பந்தங்களும் வெளிப்படையாக போடப்பட்டன.
வங்கி கடன் மட்டுமல்லாது சங்ககட்டிட நிதிக்காக பெரிய நகரங்களில் நட்சத்திர கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு நிதி திரட்டப்பட்டது.
நடிகர்சங்க வளாகத்தில் சங்கத்துக்கான கட்டிடம் மட்டுமல்லாது வருமானத்துக்காக பிரிவியூ தியேட்டர் ஒன்றும், கலையரங்கம் ஒன்றும் கட்டப்பட்டன. அந்த காலகட்டத்தில் வெளியான சில திரைப்படங்களில் இந்த அரங்கம் இடம்பெற்றிருக்கும். அனைத்தும் நடிகர்திலகத்தின் பதவிக் காலத்திலேயே கட்டிமுடித்து திறக்கப்பட்டன.
(அன்றைய நடிகர்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சினிமா இதழ்களிலும், வார இதழ்களிலும் வெளியான ஆவணங்கள் வைத்திருப்போர் இங்கு பதிவிடுமாறு வேண்டுகிறோம்).
இதுபோக நலிந்த கலைஞர்களுக்காக வீட்டு வசதி திட்டமும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு, வரையறுக்கப்பட்டு அரசின் வீட்டுவசதி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது.
வங்கிக்கடன்கள் முறையாக செலுத்தப்பட்டு வந்த வேளையில் இந்த அணியினரின் இரண்டாவது பதவிக்காலம் (5+5) முடிய, மீண்டும் போட்டியின்றி இந்த அணியையே தேர்ந்தெடுக்கலாம் என்று உறுப்பினர்கள் பலரும் விரும்பியபோது, சங்கத்தலைவராக தான் போட்டியிடப் போவதாக எஸ்.எஸ்.ஆர் அறிவித்தார். அதாவது அவர் 'எங்கிருந்தோ ஏவப்பட்ட அம்பாக' போட்டியில் குதித்தார்.
போட்டியை விரும்பாத நடிகர்திலகம் பத்தாண்டு வகித்த தலைவர் பதவியை விட்டு விலகினார். மேஜர், வி,கே,ஆரும் தத்தம் பதவிலிருந்து விலகினர்.
எஸ்.எஸ்.ஆர். தலைவரானார். அவர் தலைமையில் சங்கத்தின் செயல்பாடுகள் முடங்கின. வங்கிக்கடன் ஒழுங்காக செலுத்தப்படாமல் நடிகர்சங்கம் கடன் சுமையில் தத்தளித்தது. அதன் பின் வந்த தலைவர்களால் கடன் சுமை மேலும் அதிகரித்தது.
விஜயகாந்த் தலைவரானபோது கடன்சுமையைக் குறைக்க நடவடிக்கை எடுத்து கணிசமான அளவில் குறைத்தார் என்றார்கள். இப்போதுள்ள நிலைமை தெரியவில்லை. எதுவும் வெளிப்படையாக இல்லை என்று பல உறுப்பினர்கள் நினைத்ததன் விளைவே சமீபத்திய சங்கத்தேர்தல் முடிவுகள்.
-
நடிகர்திலகம் தென்னிந்திய நடிகர்சங்கத் தலைவராக இருந்தபோது...
1972-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு மத்திய அரசின் சிறந்த நடிகருக்கான பாரத் விருது வழங்கப்பட்டபோது சங்கத்தின் சார்பில் நடிகர்திலகம் அவருக்கு பெரிய பாராட்டுவிழா நடத்தி பொன்னாடை போர்த்தி, கேடயம் பரிசளித்தார்.
1977-ல் மக்கள்திலகம் தமிழக முதலமைச்சராக பதவியேற்றபோது நேரு விளையாட்டரங்கில் சங்கத்தலைவர் நடிகர்திலகம் மாபெரும் பாராட்டுவிழா நடத்தி கேடயம் பரிசளித்தார். (இவ்விரு கேடயங்களும் தி.நகர் எம்.ஜி.ஆர்.நினைவில்லத்தில் விளக்கம் எழுதப்பட்டு வைக்கப்பட்டுள்ளன).
இரு விழாக்களிலும் மொத்த தென்னக திரையுலகமே திரண்டிருந்தது.
-
From Tamil The Hindu, written by Director S.P.Muthuraman.
http://tamil.thehindu.com/multimedia...a_2592592f.jpg
கவரிமான்’ ரிலீஸான அன்று நானும் ஒளிப்பதிவாளர் பாபு, எடிட்டர் விட்டல் உள்ளிட்ட படக் குழுவினர்களும் சென்னை அண்ணா சாலையில் உள்ள சாந்தி திரையரங்கில் படம் பார்க்கச் சென்றோம். ஒரு படம் ரிலீஸானதும் அதை மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கச் சொல்வார் மெய்யப்ப செட்டியார். ரிலீஸாகும் படத்தில் ஒரு சில இடங்கள் ரசிகர்களிடம் வரவேற்பு இல்லாமல் போனால், அடுத்து அந்தப் படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய் யும்போது அந்தக் காட்சியைத் திருத்த வாய்ப்பாக இருக்கும் என்பதற்காக, ரிலீ ஸான படங்களை தியேட்டரில் போய் பார்த்து ரிப்போர்ட் எழுதச் சொல்வார். அதை நாங்கள் இன்றும் பின்பற்று கிறோம்.
‘கவரிமான்’ படத்தை மக்களோடு மக்களாக அமர்ந்து சாந்தி திரையரங்கில் பார்த்துக்கொண்டிருந்தோம். சிவாஜி கணேசன் கொடுத்தப் பரிசுப் பொருளை தேவி கோபத்தோடு மாடியில் இருந்து குப்பைத் தொட்டியில் வீசுவதை திரையரங்கில் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
‘‘ஏய்… உனக்கு என்ன துணிச்சல். எங்க அண்ணன் கொடுத்தப் பரிசையே தூக்கி வீசிறியா?’’ என்று ரசிகர்கள் கடும் கோபத்தோடு ஆரவாரம் செய்தனர். இதை பார்த்த சாந்தி திரையரங்க நிர்வாகி வேணுகோபால் (சிவாஜி கணேசனின் மாப்பிள்ளை) உடனே எங்களை திரையரங்கத்தின் அலுவலகத் துக்குள் வருமாறு அழைத்தார். ‘‘இருக்கட்டும் என்ன நடக்கிறது என்று பார்க்கிறோம்’’ என்று கூறினேன். அவர், ‘‘தயவு செய்து வாங்க. சிவாஜி அவமானமானப்படுவதை அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. இந்த நேரத்தில் நீங்கள் இங்கே இருக்க வேண்டாம்’’ என்று எங்களை வலுக் கட்டாயமாக அறைக்கு அழைத்துச்சென் றார். அப்போது ஒரு விஷயத்தை உணர்ந் தேன். சிவாஜியின் ரசிகர்கள் அவரை அந்தப் படத்தில் வரும் ஒரு கதாபாத்திர மாக எடுத்துக்கொள்ளவில்லை. உண்மையான சிவாஜிகணேசனாகவே பார்க்கிறார்கள். எப்போதுமே அவரை இப்படித்தான் பார்க்க விரும்பும் ரசிகர் களால் அந்தக் கதாபாத்திரத்தை ரசிக்க முடியவில்லை. கதாநாயகர்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட இமேஜ் இருக் கிறது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்க வேண்டும் என்பதை நான் அன்றைக்கு உணர்ந்தேன்.
படத்தின் கிளைமேக்ஸ் நெருங்கும் இடத்தில் தேவி ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொள்வார். உண்மையாக பழகுகிறார் என்று தேவி நினைத்து பழகிவந்த சேகர் திடீரென தவறாக நடந்துகொள்ள முயற்சி செய்வார். அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்யும் தேவி ஒரு கட்டத்தில் சேகரை கத்தியால் குத்திவிடுவார். ரத்தம் சொட்ட சொட்ட அந்த இடத்தில் அவர் துடி துடித்து இறந்துவிடுவார். அதை பார்த்து விடும் சிவாஜிகணேசன், தேவியைப் பார்த்து ‘‘மானத்தை காப்பற்ற வேண்டிய சூழல் வந்தால் இப்படித்தான் செய்ய வேண்டி வரும். அன்னைக்கு நடந்த கொலையும் இப்படித்தான். குடும்ப மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற் காக நான் கொலை செய்தேன். கவரிமான் தன் உடலில் இருந்து ஒரு முடியை இழந்தாலும் உயிரை விட்டுவிடும். நீ வாழ வேண்டிய பொண்ணு. நான் ஏற்கெனவே ஒரு கொலை செய்துவிட்டு பழி சுமப்பவன்!’’ என்று கூறி மகள் தேவி கையில் இருக்கும் கத்தியை சிவாஜிகணேசன் வாங்கிக்கொண்டு பழியை தான் ஏற்பார்.
அப்போதுதான் தேவி முதல் தடவையாக சிவாஜியை ‘‘அப்பா’’ என்று அழைப்பார். தேவி சின்ன வயதாக இருக்கும்போது அம்மா பிரமிளா, அப்பா சிவாஜியோடும் மகிழ்ச்சி பொங்க படமாக்கப்பட்ட ‘பூப்போல உன் புன்னகையில்’ என்ற பாட்டின் இசையைப் பின்னணி இசையாக அந்த இடத்தில் இழையவிட்டிருப்பார் இளையராஜா. அதுதான் இளையராஜா!
படத்தில் சிவாஜிகணேசன் தன்னை கொலைக்காரராக காட்டிக்கொள்ளும் இந்தக் காட்சியையும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தன் தனித்திறமை யான நடிப்பால் ரசிகர்களிடம் உயர்ந்த இடத்தை பிடித்தவர் அண்ணன் சிவாஜி கணேசன். நடை, உடை, பாவனை அனைத்திலும் ஒருவித மிடுக்கான தோற் றத்தையே அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பினார்கள். திரையில் அவரது இமேஜ் எந்த ஓர் இடத்திலும் குறையக் கூடாது என்பதில் மக்கள் தெளிவாக இருந்தனர். ரசிகர்களுடைய எதிர்பார்ப் புக்கு மாறாக சிவாஜிகணேசன் ‘கவரி மான்’ திரைப்படத்தில் நடித்ததால் அவரது ரசிகர்களால் அதை ஜீரணிக்க முடிய வில்லை. பெரிய அளவில் வெற்றிபெற வேண்டிய படம் பெயரை மட்டும் வாங்கித் தந்தது.
அண்ணன் சிவாஜிகணேசனை வைத்து நான் இயக்கிய இரண்டாவது படம் ‘வெற்றிக்கு ஒருவன்’. இந்தப் படத்தை பாஸ்கர் தயாரித்தார். படத்தில் சிவாஜிகணேசனுக்கு ஜோடி பிரியா. இவர் நடிப்பிலும் சுட்டி, வாழ்க்கையிலும் சுட்டி. ‘வெற்றிக்கு ஒருவன்’ படப்பிடிப் பில் சரியான திட்டமிடல் இல்லாததால் படத்தை தொடங்கியதில் இருந்தே சிக்கல்தான். படப்பிடிப்பு தாமதத்தால் நடிகர், நடிகைகளின் கால்ஷீட் முன்னுக் குப் பின் மாறியது. சிவாஜி இருந்தால் பிரியா இருக்க மாட்டார். பிரியா இருந்தால் சிவாஜியால் இருக்க முடி யாத சூழல். இப்படி பல காரணங்களால் படத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் எடுத்து முடிக்க முடியவில்லை. எப்பவுமே ஒரு படத்தை முறையே திட்டமிட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும். அது தவறியதால் படமும் தோல்விப் படமானது என்பதை இங்கே வருத்தத்தோடு நான் பதிவு செய்கிறேன்.
எப்பவுமே நான் சொல்வது ஒரு படம் வெற்றிப் பெற்றால் அது என் குழு வினருக்கு கிடைத்த வெற்றி. அது தோல்வி அடைந்தால் அதனை இயக்குநர் ஒருவரே ஏற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படத்துக்கு ‘கேப்டன் ஆப் தி ஷிப்’ என்று தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல் படுபவர் இயக்குநர்தான். அவர்தான் எல்லோரையும் சரியாக அழைத்துச் செல்ல வேண்டும். அது தவறியதால்தான் ‘வெற்றிக்கு ஒருவன்’ படம் தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை ஒரு இயக்குநராக நான் ஏற்றுக்கொண்டேன். அண்ணன் சிவாஜியை வைத்து தோல் விப் படம் கொடுத்துவிட்டோமே என்ற மன வேதனை ஒருவித வலியை ஏற் படுத்திக்கொண்டிருந்த நேரத்தில், மீண் டும் அவரையே வைத்து படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. சிவாஜி அவர்களை வைத்து இயக்கும் அந்த வாய்ப்பை தந்த தயாரிப்பாளர் யார்?
-
நினைப்போம்.மகிழ்வோம்-4
எதையும் ஒரு பக்தியோடு
முழுமையாகச் செய்து விடுகிற
நடிகர் திலகத்தின் வல்லமைக்கு மற்றுமொரு
சான்று.
"குங்குமம்" படத்தில் "சின்னஞ்
சிறிய வண்ணப்பறவை" பாடலை ஒரு பாகவதராய்ப்
பாடிக் கொண்டிருப்பார்.
பாடலினூடே ஓரிடத்தில்
"ஆ..ஆ" என நீளமாய்ப் பாடி
விட்டு, அருகமர்ந்து பாடும்
'ஊர்வசி' சாரதாவிடம் " "இப்படிப் பாட வேண்டும்"
என்பது போல் ஒரு பாவனை
செய்வாரே..ஆஹா!
-
நினைப்போம்.மகிழ்வோம்-5
"என் மகன்" படத்தில் வரும்
'பொன்னுக்கென்ன அழகு'
பாடல்.
பாடல் முடியப் போகும் நேரத்தில்,பக்கவாட்டில் முகம்
காட்டி,'பொன்னுக்கென்ன அழகு' என்று பாடி விட்டு,
புன்னகைத்தபடியே மஞ்சுளாவைப் பார்த்து தலையை ஒரு அரைவட்டம்
அடித்து நிறுத்துவாரே!?
-
நினைப்போம்.மகிழ்வோம்-6
"மிருதங்க சக்ரவர்த்தி".
இனி தொடுவதில்லை என
சபதம் செய்து விட்டு மூலையில் கட்டி வைத்த
மிருதங்கத்தை நீண்ட காலத்திற்கு பின் தொடும்
காட்சி.
உணர்ச்சிவசத்தில் நடை தள்ளாட, மெல்ல நடந்து வந்து,
மிருதங்க உறை பிரித்து, வருஷக்கணக்கில் படிந்த
தூசியெல்லாம் குனிந்து ஊதி,
வெளித் தெரியும் தனது காதலுக்குரிய வாத்தியத்தில்
"டங்" என ஒரு ஒலி எழுப்புவாரே!?
-
ரவி
நடிகர் திலகத்தின் நடிப்பில் நாம் காணும் பல சிற்சில நுணுக்கங்களையும் நினைப்போம் மகிழ்வோம்...
அதன் சிறப்பைத் தங்கள் எழுத்தில் படித்து நினைப்போம் மகிழ்வோம்
-
நினைப்போம்.மகிழ்வோம்-7
மற்றவர்கள் செய்யத் துணியாத சில நடிப்பு பாவனைகளை நடிகர் திலகமே
அதிகமாகவும், அற்புதமாகவும்
செய்திருக்கிறார்.
"எங்கிருந்தோ வந்தாள்"
படத்தின் " ஒரே பாடல்" பாடலின் ஊடே, திரும்பவும்
"ஒரே பாடல்" என்று பாடும்
இடத்தில், ஏதேதோ சோகத்தில்
ஓரிடத்தில் நிலை குத்தும்
பார்வையுடன் கூடிய அகன்ற
கண்கள்..
அதில் திரளும் நீர்...
ஆஹா!
-
நினைப்போம்.மகிழ்வோம்-8
"வீரபாண்டிய கட்டபொம்மன்"
படத்தின் மறக்க முடியாத,
ஜாக்ஸன் துரையை சந்திக்கும்
காட்சி.
ஆசனம் தராமல் அவமானப்
படுத்த நினைக்கும் ஜாக்ஸன்
துரையின் ஆசனத்தைத்
தன்னுடையதாக்கிக் கொண்டு,
அமர்ந்து கொண்டு, வீரன் என்கிற கர்வமாய் கண் செருகிக் கொண்டு, அமர்ந்த
சிம்மாசனத்தின் கைப்பிடியில்
கையூன்றிக் கொண்டு,
கம்பீரமாய் விரல் நுனிகளை
தொட்டு உருட்டுவாரே..!?
அது!
-
நினைப்போம்.மகிழ்வோம்-9
பாடலுக்கு வாயசைக்கும்
போது சிரித்துக் கொண்டே
வாயசைக்கும் அழகு, நம்
நடிகர் திலகத்திற்கு மட்டுமே
வாய்த்த திறமை.
"சொர்க்கம்" படத்தின்
'பொன்மகள் வந்தாள்" பாடலின்
ஊடே, நடன மங்கையின் மேல்
முகம் புதைத்து, உதடுகள்
அழுந்திய நிலையில்,
"மலர்வதோ புன்னகை" என்று
பாடுகையில்.. குறிப்பாக,
"புன்னகை" என்கிற சொல்லின்
போது மென்மையாக, கோணலாக, அழகாக கசிய
விடும் புன்னகை...