-
படங்களில் தந்த நம்பிக்கை !
எம்.ஜி.ஆர். மிகவும் அழகானவர், செக்கச் செவேலென்று நிறம் அவருடையது. ஆனால், அவர் திரைப்படங்களில், தாழ்த்தப்பட்ட மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் போய் வாழ்வதாகக் காட்சிகள் இருக்கும், அவர் ரிக்க்ஷா ஓட்டுவார். கைவண்டி இழுப்பார், ஆனாலும் உழைப்பால் பிறகு படிப்படியாக உயர்வது போலவே காட்டுவார், அது ஏழை மக்களுக்கு ‘நம்மாலும் வாழ்வில் உயர முடியும்’ என்கிற நம்பிக்கையை விதைப்பதாக அமையும்.
அதுமட்டுமல்ல, கறுப்பு நிற மனிதன் எவ்விதத் தாழ்வு மனப்பான்மையும் கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்துவது போன்ற பாடல்களைப் பாடுவார் அவர்.
''உயர்ந்தவரென்ன, தாழ்ந்தவரென்ன
உடல் மட்டுமே கறுப்பு - அவர்
உதிரம் என்றும் சிவப்பு''
என்று பாடும்போது, கறுப்பு மனிதனின் இதயத்தில் நிச்சயம் ஒரு துணிவு பிறக்கும்.
''ஒன்றே குலம் என்று பாடுவோம்
ஒருவனே தெவன் என்று போற்றுவோம்''
''ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே''
என்றெல்லாம் பரந்துபட்ட கருத்துக்களை
முழக்கமிடுவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல் எழுதினாலும் சரி.
கண்ணதாசன் எழுதினாலும் சரி.
மருதகாசி எழுதினாலும், வாலி எழுதினாலும் சரி.
எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் அவருடைய கொள்கையைப் பிரதிபலிக்கும் கருத்துக்கள் நிறைந்த பாடல் வரிகளாகவே அது அமையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை.
''கண்போன போக்கிலே கால் போகலாமா?
கால்போன போக்கிலே மனம் போகலாமா?
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?''
என்று எம்.ஜி.ஆர். பாடும் அந்த காட்சியில் மகாத்மா காந்தி படம் காட்டப்படும், பொழுதுபோக்குச் சினிமா தானே மக்களை மகிழ்விக்கத்தானே பாடல்கள் என்று எண்ணாமல், அதிலும் ஒரு வாழ்வியல் நெறியை வகுத்துக் காட்டியவர் எம்.ஜி.ஆர்.
சமுதாய ஒற்றுமை, பொதுவுடைமைக் கொள்கை, கூட்டுறவே நாட்டுயர்வு, போன்ற கருத்துக்களை எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சொல்லியது போல், வேறு யாரும் எளிமையாகவும், அழுத்தம் திருத்த-மாகவும் கூறியதில்லை என்றே சொல்லலாம்.
(வெரித்தாஸ் வானொலியில் எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்கள் ‘தமிழ்ச் சினிமாவின் தற்காலப் போக்கு’ என்ற தலைப்பில் பேசியதிலிருந்து... )
எம்.ஜி.ஆர். வெற்றி ரகசியம் :
''காதல், வீரம், பண்பு, மனிதநேயம் போன்றவற்றை எம்.ஜி.ஆர். கையாண்டவிதம் தனிச்சிறப்பு உடையது, இயல்பான குணங்களாக அவருக்கு இவை பொருந்தி நின்றன. நடிக்கிறார் என்கிற உணர்வை ஏற்படுத்தாமல், அந்த பாத்திரமாகவே அவரை எண்ண வைத்தன. மக்கள் அவர்மீது ஒரு வித மோகம் கொண்டு நேசித்தனர் என்பது மறுக்க முடியாத உண்மை'' என்கிறார் எழுத்தாளர் கவுதம் நீலாம்பரன்.
நன்றி : தினமலர்........ Thanks...
-
ஒருமுறை மதுரை அருகே எழுமலை என்ற கிராமத்தில் வேனில் எம்.ஜி.ஆர். சென்று கொண்டிருந்தபோது, ஒரு மூதாட்டி தன் இரு மகள்களுடன் குறுக்கே வந்து நின்றார். வேனில் இருந்து இறங் கிய எம்.ஜி.ஆர்., ‘‘என்னம்மா, உங் களுக்கு ஏதாவது உதவி தேவையா?’’ என்றார்.
அந்த மூதாட்டி, ‘‘மகராசா, உன்னைக் கெஞ்சிக் கேட்கிறேன். என் விவசாய நிலத் தில் உன் பாதம் படவேண்டும். ஒருமுறை நடந்துவிட்டு வா, அதுபோதும்’’ என்றார். சிரித்தபடியே அவரது கோரிக்கையை ஏற்ற எம்.ஜி.ஆர்., அருகே இருந்த நிலத்துக்குச் சென்று மூதாட்டியின் கரத்தைப் பற்றியபடியே சிறிது தூரம் நடந்தார். அந்த மூதாட்டி கண்களில் நீர்வழிய, ‘‘இதுபோதும் ராசா, இனிமே இந்த நிலத்தில் பொன்னு விளையும்’’ என்றார். எம்.ஜி.ஆரின் ஜிப்பா பையிலிருந்து பணக் கத்தை அந்தத் தாயின் கரங்களுக்கு இடம் மாறியது!
தலைவரின் அருமையான பாடல் வரி...
நீங்க நல்லாயிருக்கணும்
நாடு முன்னேற
இந்த நாட்டில் உள்ள
ஏழைகளின் வாழ்வு
முன்னேற
என்றும்
நல்லவங்க எல்லாரும்
உங்க பின்னால
நீங்க
நினைச்சதெல்லாம்
நடக்கும் உங்க
கண்ணு முன்னால........ Thanks...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் .சந்தித்த*சவால்கள் - 1 yes news tv*
---------------------------------------------------------------------------------------------------
1 yes news tv யில்*இன்று (17/04/20) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் திரு.இருகூர்*இளவரசன்(எழுத்தாளர் )*அளித்த*தகவல்கள் விவரம் :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்கள் தனக்கு*தெரிந்தவர்கள் யாராயிருந்தாலும் அவர்கள் துன்பத்தில் இருக்கிறார்கள் என்று தெரிந்தால்*, தனது*உதவியாளர்* மூலம் அழைத்து**அவர்களின்*துன்பத்தை*போக்குவது*என்பது *அவரி ன்*வாழ்க்கையில்*அன்றாடம் நடக்கும்*விஷயங்கள்* நான் கோடம்பாக்கத்தில்,பூபதி நகரில்**குடிசை*மாற்று வாரியம் அருகில் குடியிருந்தபோது , சங்கரய்யா என்பவர் (தந்தை பெரியாரின்* சீடர்) என் வீட்டிற்கு கீழே குடியிருந்தார் . *திரு.சங்கரய்யா , தந்தை பெரியாரிடம் இருந்து பின்னர் பேரறிஞர் அண்ணா*, மு.கருணாநிதி ஆகியோரின் நட்பில்*இருந்தார்*. அப்போது முரசொலி*பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்தார் . திரு.சங்கரய்யா தனது முதிர்ந்த வயதில்*மனைவியுடன் வாழ்ந்து வந்தார் .* அப்போது அவர் மனைவிக்கு உடல் நலம் குன்றியது* மருத்துவ*சிகிச்சைக்கு பலரிடம்*பணம் கேட்டு கிடைத்த*பாடில்லை, தான் சார்ந்த இயக்கத்தினரிடம் கேட்டும் பலனில்லை. நோய் என்றால் அரசு மருத்துவமனை இருக்கிறதே .அங்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாமே என்று பரிகசித்தனர் .*.இதுபற்றி*என்னிடம்* தெரிவித்தபோது , நான்* உடனே நீங்கள் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று*எம்.ஜி.ஆரை*பாருங்கள்*.* நிச்சயம் உதவி கிடைக்கும்*என்று யோசனை சொன்னேன் . . ஆனால் ஆரம்பத்தில் .சங்கரய்யா சற்று*தயக்கத்துடன்* எம்.ஜி.ஆர். கட்சிக்கு*எதிரான இயக்கத்தில் நான் இருந்து அவரை வசை பாடியிருக்கிறேன் . அவரது அரசியலை*விமர்சனம் செய்து மேடைகளில் பேசியிருக்கிறேன் .* ஆகவே என் பிரச்சனையை*காது கொடுத்து கேட்பாரா*, எனக்கு*உதவி கிடைக்குமா*என்பது சந்தேகத்திற்கு உரியது*என்று என்னிடம்**சொன்னார் .* பதிலுக்கு*நான்* , முதலில் நீங்கள் அவரை*போய்* சந்தியுங்கள் . தன்னை*விமர்சனம் செய்தவர்களை கூட*, தன்னை*நேரில் வந்து சந்தித்து*உதவி கேட்டால்*மறுத்ததாக*நான் கேள்விப்பட்டதில்லை . எனவே நம்பிக்கையுடன் செல்லுங்கள் என்றேன்* .வேறு வழியில்லை*என்பதால் , ஒருநாள்*காலை*7 மணியளவில் எம்.ஜி.ஆரை சந்திக்க*ராமாவரம் சென்றார் .
தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். தினசரி தன் வீட்டில்*பொதுமக்களிடம் கோட்டைக்கு செல்வதற்கு முன்பு வரிசையில்*நிற்கும்*பொதுமக்கள் சிலரிடம்*மனுக்கள்*வாங்குவது வாடிக்கை. அந்த வரிசையில்*.சங்கரய்யா நின்றிருந்தார் .அவர் உருவத்தில் குள்ளமாக இருப்பார் . அவரை*பார்த்துவிட்ட*எம்.ஜி.ஆர். தன் உதவியாளரிடம் அவரை*தனியே அழைத்து வரும்படி கூற , அவர் வந்ததும்*என்ன வரிசையில் நிற்கிறீர்கள்.*என்ன விஷயம் .தயங்காதீர்கள் .விரைவாக சொல்லுங்கள் என்றார்*எம்.ஜி.ஆர்.*ஐயா, என் மனைவிக்கு*உடல்நலம் சரியில்லை . நானிருக்கும் இடத்தில உள்ள உறவினர்கள் , நண்பர்கள்,கட்சி*பிரமுகர்கள் பலரிடம் கேட்டு பார்த்து ஒன்றும் பலனில்லை . உடனடியாக மருத்துவ*சிகிச்சை அளிக்க*வேண்டிய சூழ்நிலை .நண்பர் ஒருவரின்*யோசனைப்படி , நம்பிக்கையுடன் உங்களை*நாடி வந்திருக்கிறேன் .என்றார்*.சங்கரய்யா .* எம்.ஜி.ஆர். சிறிது நேரம் இருக்க சொல்லி,பொதுமக்களை*அனுப்பியதும், விவரங்கள் கேட்டறிந்தார் . பின்னர் தனது*உதவியாளரிடம் சைகை காட்டி ரூ,50,000/- வரவழைத்து , சங்கரய்யாவிடம் அளித்து*உடனே ஆவன*செய்து எனக்கு*தகவல் அளியுங்கள் என்று சொல்லி அனுப்பினார் . சங்கரய்யாவுக்கு தேவைப்பட்ட*பணம் வெறும் ரூ.3,000/- தான் .வீட்டிற்கு சென்று*பணக்கட்டை*பிரித்து பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்தார்*சங்கரய்யா . இது நடந்தது*1979ல், எம்.ஜி.ஆர். அளித்த பணம் இப்போதைய*மதிப்பில்*பல லட்சங்கள் இருக்கும்*.
சங்கரய்யா தன்* மனைவியை*ஒரு பெரிய மருத்துவமனையில் அனுமதித்து*நல்ல சிகிச்சை*அளித்து ,ரூ.15,000/- செலவு* செய்து* அவர் உடல்நலம் தேறி வீட்டுக்கு வந்த*பின்னர் , சங்கரய்யா தன் வீட்டு*ஹாலில்*பெரிய எம்.ஜி.ஆர். புகைப்படம் ஒன்றை*மாட்டி வைத்தார் .விவரம் அறிந்து*நான் சங்கரய்யாவிடம் விசாரித்தேன் . எம்.ஜி.ஆரிடம் உதவி கேட்டு பெற்றீர்கள் என்று அறிந்தேன் . நீங்கள் திராவிடர்*கழக கட்சியை சார்ந்தவர் ஆயிற்றே. எப்படி எம்.ஜி.ஆர். படம் வீட்டில்*வைத்துள்ளீர்கள் என்று கேட்டேன் . பதிலுக்கு சங்கரய்யா என் மனைவியின்*மருத்துவ*சிகிச்சைக்கு நான் பணம் கேட்காத* ஆளில்லை. ஒருவரும்*உதவிக்கு வரவில்லை . எம்.ஜி.ஆரை கடுமையாக அரசியல் ரீதியில் விமர்சனம் செய்தும்*, பகைவனுக்கு* அருள்வது போல் , காலத்தின் அருமை கருதி*,நிலைமையை உணர்ந்து*உடனடி உதவி செய்து , என் மனைவியின்*உயிரையம், குடும்ப மானத்தையும்* காப்பாற்றிய**அவரை நான் கடவுளாக பார்க்கிறேன் என்றார்*சங்கரய்யா .
சிறிது*காலத்திற்கு பிறகு, குடும்பத்தில் உள்ள அனைவரும் சங்கரய்யாவின் 75*வது*பிறந்த நாளை விமரிசையாக கொண்டாட முடிவு செய்தனர் . சங்கரய்யாவும் எம்.ஜி.ஆரை சந்தித்து*ஆசி பெற்று ,தன் 75 வது* பிறந்த நாள் பற்றி கூறி , தன்*வீட்டில்*மிக எளிமையாக கொண்டாட முடிவு செய்துள்ளோம் என்று தெரிவித்துவிட்டு வந்தார் .* அன்று மாலை குடும்பத்தினர் , மற்றும் பேர குழந்தைகள் அனைவரும் குதூகலமாக கொண்டாட ஆயத்தமாக இருந்தனர்*.இரவு 7 மணியளவில் அந்த குடிசைமாற்று வாரிய பகுதியில்*திடீரென* அம்பாசிடர் கார் ஒன்று வந்தது .அப்போது சாலையில் கொஞ்சம்*மழையால்**சேறு*இருந்தது .எம்.ஜி.ஆர். காரில் இருந்து இறங்கி*அந்த சேற்றை*பொருட்படுத்தாமல் , வேட்டியை*தூக்கியவாறு லாவகமாக தாண்டி வீட்டுக்குள்*நுழையும்போது குடும்பத்தினர் அனைவருக்கும்**இன்ப அதிர்ச்சி* . சங்கரய்யா உடன் விரைந்து வந்து எம்.ஜி.ஆரை அழைத்து வந்து இருக்கையில் அமர்த்திவிட்டு உடன் தெருவாசல்* கதவை மூடிவிட்டார் . ஏனெனில் விவரம் அறிந்தால்*அந்த இடமே*பொதுமக்களால் சூழப்படும் .
எம்.ஜி.ஆர். சங்கரய்யாவின் மனைவியிடம் உடல்நலம் பற்றி விசாரித்தார் . சங்கரய்யாவின் மனைவி , உங்கள் புண்ணியத்தால் நான் உடல்நலம் தேறிவிட்டேன் ,* என்று என் கணவர்*உங்கள் வீட்டுக்கு காலடி*வைத்து உங்களிடம் உதவியை நாடினாரோ*, அன்று முதல் எங்கள் குடும்பம்*நன்றாக இருக்கிறது . நாங்கள் மூன்று வேளை திருப்தியாக உண்டு வாழ்கிறோம் .மிகவும் நன்றி ஐயா என்றார் .* வேறு ஏதாவது உதவி தங்களுக்கு தேவைப்படுகிறதா ,சொல்லுங்கள் . சங்கரய்யா என்னிடம் கேட்க மாட்டார் என்றுதான்*நான் உங்களை கேட்கிறேன். தயக்கம் வேண்டாம். தைரியமாக கேளுங்கள் என்றார் எம்.ஜி.ஆர். பின்னர் தனது உதவியாளரை*அழைத்து*ரூ.75,000/-பணத்தை ,* 75 வயதை*கணக்கில் கொண்டு*சங்கரய்யாவின் மனைவியிடம் அளித்தார் . பின்பு*சங்கரய்யாவிடம் அ. தி.மு.க. தலைமை அலுவலகம் ராயப்பேட்டையில், அவ்வை சண்முகம்*சாலையில் உள்ளது . அந்த அலுவலகத்தில் வரும் தொலைபேசி எண்களை தினசரி பதிவேடுகளில் பதிவு செய்து தாருங்கள்*உங்களுக்கு சம்பளமாக*ரூ.10,000/-தரப்படும் என்று சொல்லி*விடை பெற்றார் எம்.ஜி.ஆர். சங்கரய்யா அப்போது தன் வாழ்நாளில்*ரூ.600/- க்கு*மேல் சம்பளம் வாங்கியதில்லை. எனவே உண்மையில் எம்.ஜி.ஆரை தன் கடவுளாகவே பார்த்தார் சங்கரய்யா .
மேற்கண்ட சம்பவத்தை தெரிந்து கொண்டீர்கள் அல்லவா. இதுபோல ஏராளமான பேர்களுக்கு எந்த பிரதிபலனோ, பிரதி உபகாரமோ இல்லாமல் அவர்களின் நிலை அறிந்து, காலத்தே எம்.ஜி.ஆர். செய்த உதவிகள் எண்ணற்றவை .இதனால்தான் இன்றும் எம்.ஜி.ஆர். பற்றிய நூல்கள், புத்தகங்கள் வெளியாகி வருகின்றன. அவரது திரைப்பட பாடல்கள் பல இடங்களில் இன்னிசை நிகழ்ச்சியில் பாடப்பட்டு வருகின்றன .* இந்த மாதிரி*செய்கைகளால்தான் , மக்கள் திலகம், தமிழக முதல்வர் என்கிற நிலைப்பாடுகளை கடந்து , காலங்கள் மறைந்தாலும், காட்சிகள் மாறினாலும் ,*மக்கள் மனதில் இன்றும் நிலைத்து நிற்கிறார் எம்.ஜி.ஆர்..
தமிழகத்தில் நாடகங்கள் பிரபலமான காலத்தில் , எம்.ஜி.ஆர். நாடக மன்றம், சிவாஜி நாடக மன்றம், எஸ்.எஸ். ஆர். நாடக மன்றம் , எம்.ஆர். ராதா நாடக மன்றம் , மனோரமா நாடக மன்றம் ,மனோகர் நாடக மன்றம் என பல மன்றங்கள் இருந்தன .எம்.ஜி.ஆர். நாடக மன்றம் சார்பில் 1959ல் இன்ப கனவு என்ற நாடகத்தில் எம்.ஜி.ஆர். நடிக்கும்போது , கதைப்படி, நடிகர் குண்டுமணி (150 கிலோ எடை ) யை தூக்கி கீழே கிடத்த வேண்டும் .* அப்போதுதலைக்கு மேல் தூக்கும்போது* வழுக்கி, எம்.ஜி.ஆர். கால் மீது குண்டுமணி விழ , உடனே படுதா* போடப்பட்டது . அப்போது எம்.ஜி.ஆர்.கால் முறிவு ஏற்பட்டு சில மாதங்கள் சிகிச்சையில் இருந்தார் . அந்த மாதிரி நாடகங்களில் நடிக்கும்போது எம்.ஜி.ஆர். வாத்தியார் போல சிறு குழந்தைகளுக்கு கல்வி பயிற்சி அளிப்பது போல காட்சி அமைக்கப்பட்டது . அந்த காட்சி முடிந்து குழந்தைகள் புறப்படும்போது , போய்விட்டு வருகிறேன் என்று சொல்லும்போது , அனைவருக்கும் சாக்லேட் (இனிப்பு ) வழங்குவார் எம்.ஜி.ஆர். அப்போது தங்கை பாத்திரத்தில் நடித்த நடிகை என்ன அண்ணா , நீங்கள் அளிப்பதே இலவச கல்வி* பயிற்சி . இனிப்பு வழங்க ஏன் அதிகம் செலவு செய்கிறீர்கள் என்று கேட்க, பதிலுக்கு எம்.ஜி.ஆர். என்ன செய்யறது தங்கச்சி, எனக்கு இருக்கிற வருமானத்தில் செய்கிறேன். வருமானம் மட்டும் அதிகம் கிடைத்தால் இவர்களுக்கு இனிப்பு என்ன சாப்பாடே போட்டு அனுப்புவேன் என்று கூறுவாராம் .7 வயதில் ஒரு வேளை சாப்பாட்டிற்கு தான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல* என்று ம் சொன்னாராம். இந்த அனுபவங்கள்தான் தான் பட்ட கஷ்டம் போல சிறு குழந்தைகள் சாப்பாட்டிற்கு அவதிப்பட கூடாது என்கிற வகையில் , பிற்காலத்தில், தான் முதல்வரானதும்*சத்துணவு திட்டம், இலவச செருப்பு, இலவச பல்பொடி இலவச சீருடை போன்ற திட்டங்களை அமுல்படுத்தினார்* எம்.ஜி.ஆர்.*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சந்தித்த*சவால்கள் நிகழ்ச்சியில் , கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ( படகோட்டி*), ஒரு பக்கம் பாக்குறா*(மாட்டுக்கார வேலன்), சிரித்து*வாழ வேண்டும் (உலகம் சுற்றும் வாலிபன் ) ஆகிய பாடல்கள்*ஒளிபரப்பாகின .......... Thanks.........
-
எம்.ஜி.ஆர். முதல்- அமைச்சரான நேரத்தில் நடிகர் சங்க அரங்கத்தின் திறப்பு விழா நடந்தது. எம்.ஜி.ஆர். தலைமையில், சிவாஜி முன்னிலையில் நடந்த இந்த விழாவில் லதாவின் நடனம் இடம் பெற்றது. அதுபற்றி லதா கூறியதாவது:-
நடிகர் சங்க விழாவில் உன் நடனம் முத்தாய்ப்பாக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொல்லியிருந்தார். 45 நிமிட நேரம் எனது நடனத்துக்கு ஒதுக்கியிருந்தார்கள். எனவே புராணக்கதையான மகாபாரதக் கதையை எடுத்துக்கொண்டு அதில் வருகிற திரவுபதி போன்ற கேரக்டர்களை `மோனோ' ஆக்டிங்கில் வெளிப்படுத்தி நடனமாடினேன். இந்த நடனத்துக்காக நான் ரிகர்சல் பார்த்தபோது காலில் ஒரு ஆணி குத்திவிட்டது. மறுநாளே நடன நிகழ்ச்சி என்பதால் வலியைப் பொறுத்துக்கொண்டு ரிகர்சலை முடித்தேன்.
மறுநாள் நிகழ்ச்சியின்போது மேடையில் ஆடும்போது காலில் இருந்து ரத்தம் கொட்டுகிறது. மேடை முழுக்க ரத்தம் கோடுகளைப் போல காணப்பட்டது. முந்தினநாள் என் காலில் ஆணி குத்தியிருந்தது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே தெரியும். எனவே, மேடையில் நான் ஆடியபோது மற்றவர்கள் கரகோஷம் செய்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரின் முகம் மட்டும் இறுக்கமாக இருந்தது. நடனம் முடிந்ததும் மேடையேறி என்னைப் பாராட்டியவர், காலில் ஆணி குத்திய நிலையில் நான் நடனமாடியதை குறிப்பிட்டார்.
கலை மீது எத்தகைய பற்று இருந்தால், இப்படி காலெல்லாம் ரத்தம் ஒழுக நடனமாடமுடியும் என்று அவர் பேசியபோது, அரங்கு முழுக்க ஒரு கணம் அமைதி. மறுகணம் அரங்கே அதிர்ந்து போகும் அளவுக்கு கரகோஷம். நெகிழ்ந்து போனேன். நிகழ்ச்சி முடிந்ததும், மேக்கப் ரூமுக்கு வந்து என்னைப் பாராட்டிய சிவாஜி, நடனம் ரொம்ப நன்றாக இருந்தது. அதோடு அண்ணன் (எம்.ஜி.ஆர்) சொன்ன மாதிரி தொழிலில் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே வலியைப் பொறுத்துக் கொண்டு ஆடமுடியும் என்று பாராட்டினார்.
இரு பெரிய திலகங்களின் பாராட்டும், என் கால் வலிக்கு மிகப்பெரிய ஒத்தடமாக அமைந்தது. இவ்வாறு லதா கூறினார். தமிழில் எம்.ஜி.ஆர். படங்களில் மட்டுமே நடித்து வந்த நேரத்தில், தெலுங்குப் படங்களில் என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், கிருஷ்ணமராஜு, சோபன்பாபு ஆகியோருடன் லதா நடிக்கவே செய்தார். இதில் பல படங்கள் `ஹிட்' படங்கள். சிரித்து வாழவேண்டும் என்ற படத்தில் எம்.ஜி.ஆருடன் நடித்த நேரத்தில், அந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் என்.டி.ராமராவுடன் சேர்ந்து நடித்தார்.
(மும்மொழிப் படத்தில் கதாநாயகி)........ Thanks...
-
அது அண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்ற காலம்.
ஓராண்டுக்குள் திடீர் என அண்ணா மறைந்து விட
'அடுத்த முதலமைச்சர் யார்?' என நாலா திசைகளிலிருந்தும் கேள்வி வர..
நாவலர் நெடுஞ்செழியன் பெயரும் இடையில் வர..
உடனே ஓடோடிச் சென்று ராஜாஜியைச் சந்திக்கிறார் கருணாநிதி.
அதற்கு ராஜாஜி, "உன்னுடைய எண்ணம் ஈடேற வேண்டுமானால் அது ஒரே ஒருவரால்தான் முடியும்.
M.G.இராமச்சந்திரனைப்
போய் பார்” என்று அனுப்பி வைக்கிறார்.
உடனடியாக கருணாநிதி MGRயை சந்தித்து..
“எனது பேச்சும் மூச்சும் தமிழ் தமிழ் என்றுதானே ஒலித்துக் கொண்டிருக்கிறது.
எனது மனைவி மக்களை மறந்து, இரவு-பகல் பாராது இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பட்டி தொட்டியெல்லாம் மேடையேறிப் பேசிவருகிறேன்."
-என்று எதுகை மோனையுடன் MGRரிடம் பேச...
இவை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த புரட்சித்தலைவர் MGR இப்படி சொன்னார்..
“நான் பார்த்துக்கொள்கிறேன். பதட்டம் இல்லாமல் செல்லுங்கள்.”
உடனே அன்றைக்கு அரசியலில் மிகுந்த செல்வாக்கில் இருந்த
S.S.ராஜேந்திரனுக்குப் போன் செய்த பொன்மனச்செம்மல்..
“ராஜேந்திரா! மதியச் சாப்பாட்டுக்கு உன் வீட்டுக்கு வருகிறேன். அம்மாவிடம் சொல்லிவிடு ” என்று மட்டும் சொல்லி விட்டுப் போனை வைத்து விடுகிறார்.
சொல்லியபடி சரியாக ஒரு மணிக்கு SSR இல்லம் வருகிறார் MGR
இலை போட்டு இனிய முகத்துடன் SSR தாய் , இருவருக்கும் பரிமாற, இந்த நேரத்தில் SSR MGR ரிடம்
“அண்ணே! இப்படித் திடுதிப்புன்னு சாப்பிட வர்றேன்னு நீங்க சொன்னா இதுல ஏதோ விஷயம் இருக்கும் . என்னன்னு சொல்லுங்க” என்கிறார்.
“கருணாநிதி முதலமைச்சர் நாற்காலியில் அமர விரும்புகிறார்.நானும் அமர வைப்பதாக வாக்குக் கொடுத்து விட்டேன். அதற்கு உன்னுடைய உதவி தேவைப்படுகிறது. உன் பக்கம் உள்ள MLAக்களை கருணாநிதிக்கு ஆதரவாக செயல்படச் செய்யணும்.” என்று MGR விளக்குகிறார்.
திகைத்துப் போன SSR நிறைய விளக்கங்கள் சொல்லி, “உங்களுக்காக என் உயிரையும் தருவேன். ஆனால் இது உங்களுக்கு வேண்டாத வேலை!” என்று எச்சரிக்கிறார்.
MGR வாதம் செய்யவில்லை ;
வற்புறுத்தவில்லை. SSRரிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்கிறார்..
“நான் இப்ப சாப்பிடட்டுமா ? வேண்டாமா ?”
SSR வெகு நேர யோசனைக்குப் பின் வேறு வழியின்றி சொல்கிறார்..
“சரி. நீங்க சாப்பிடுங்க.”
இப்படித்தான் முதலமைச்சர் பொறுப்பேற்கிறார் கருணாநிதி.
அதன் பின் நடந்ததை
நாடே அறியும்.
“யானைக்கு பாகனைவிட சிறந்த நண்பன் யாருமில்லை.
ஆனால் மதம் பிடித்தால்,யானைக்கு பாகனை விட மோசமான எதிரி யாரும் இல்லை.
சில நட்புகளும் அப்படி மாறுவதுண்டு!”
*இந்த உண்மை எத்தனை திமுக காருக்கு தெரியும்.ஏறி வந்த ஏணியை எட்டி உதைத்தவர் கருணாநிதி. அதனுடைய பலனை அவரது குடும்பத்தார் அனுபவித்தே தீர வேண்டும்*
"திண்ணை" பதிவிலிருந்து............ Thanks...
-
என்றும் எவர் கிரீன் ஹீரோ எம்.ஜி.ஆர்...62 திரைப்படங்களை ஒளிபரப்பிய சேனல்கள்
தமிழக மக்களின் நினைவில் என்றும் நீங்கா இடம் பிடித்தவர் எம்.ஜி.ராமச்சந்திரன். ஆண்டுகள் பல உருண்டு ஓடினாலும் மக்கள் மனதில் எவர் கிரீன் ஹீரோவாக இன்றும் ஜொலித்துக்கொண்டு இருக்கிறார் எம்.ஜி.ஆர். லாக்டவுன் நேரத்தில், அவரது ரசிகர்களுக்கு அவரின் திரைப்படங்கள் மூலம் ஒரு பாசிட்டி எனர்ஜி கிடைத்திருக்கிறது. Sponsored Upskill in AI and Data Science | Start free Trial Great Learning Sponsored Explore a new world from your sofa with one simple tool! ExpressVPN சினி தரவரிசை 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறாத டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்கள் 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் ரசிகர்கள் கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் தமிழில் ப்ளாக்பஸ்டர் வரிசையில் இடம் பெறாத டாப் 10 க்ரைம் த்ரில்லர் படங்கள் 2020ம் ஆண்டில் தியேட்டர் பணிநிறுத்தம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட தமிழ் படங்களின் பட்டியல் ரசிகர்கள் கொண்டாடிய சிம்பு பாடிய பிரபல 15 பாடல்களின் தொகுப்பு சிறந்த நண்பர்களாக தமிழ் திரைப்படங்களில் புகழ் பெற்ற கதாபாத்திரங்கள் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் ரசிகர்களை மிரளவைத்த படங்களின் பட்டியல் தமிழில் வரலாற்று கதை அம்சம் கொண்ட படங்களின் பட்டியல் உங்கள் குடும்பத்தோடு இந்த 23 தமிழ் திரைப்படங்களை அமேசான் பிரைமில் கண்டு மகிழுங்கள் 2020 - ஆம் ஆண்டில் அதிக டி.ஆர்.பி ரேட்டிங் பெற்ற படங்களின் பட்டியல் 10 தமிழ் புதுமுக இயக்குனர்களின் இரண்டாவது படத்தினை எதிர்பார்க்கும் தமிழ் ரசிகர்கள் PrevNext அண்ணா அவர்களின் பேச்சால் ஈர்க்கப்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பின்னர் அதிலிருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என தனிக்கட்சி ஆரம்பித்து தொடர்ந்து மூன்று முறை தமிழக முதல்வரானார். தமிழக மக்களின் நெஞ்சத்தில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் நடிகர், இயக்குனர்,தயாரிப்பாளர் என பல கோணங்களில் தமிழ் சினிமாவில் வலம் வந்தார். திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தார். அவர் மண்ணுலகை விட்டு நீங்கினாலும், இன்றும் மக்களின் நெஞ்சில் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரை நினைவூட்டும் வகையில் இன்றும் அவரின் திரைப்படங்கள் பேசப்படுகிற்ன. செல்ல பேத்தியை கொஞ்சும் ராதிகா சரத்குமார்.. வைரலாகும் புகைப்படம் ! சமூக அக்கறை, பெண்ணூரிமை, அரசியல், காதல், குடும்பம், தத்துவ பாடல்கள், பட்டயை கிளப்பும் சண்டைக்காட்சிகள், உணர்ச்சி மிகுந்த வசனங்கள் என இவர் திரைப்படங்களில் இல்லாத அம்சங்களே இல்லை. அனைத்து வயதினராலும் ஈர்க்கப்பட்ட முதல் நடிகர் என்றால் அது நம் பொன்மனச்செம்மல்தான். அவரை மீண்டும் திரும்பிபார்க்க வைக்கும் விதமாக மார்ச் 20ல் லிருந்து கடந்த ஏப்ரல் 20 வரை அவரின் 62 திரைப்படங்கள் ஜெயா-டிவி தொலைக்காட்சி, சன்-லைஃப், ராஜ் டி.வி, மெகா-டிவி, முரசு, வசந்த்-டிவி ஆகிய சேனல்கள் மூலமாக ஒளிபரப்பானது. இந்த தகவலை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் வேகமாக பகிர்ந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் லாக் டவுன் முடிவதற்குள் 100 வித்தியாசமான படங்களை அனைத்து தொலைகாட்சிகளும் நிச்சயம் ஒளிபரப்பி விடும் என்று நம்புகிறார்கள். ஹோட்டல் படுக்கையறையில்… Sponsored Karan won 10 Lacs from ₹100 by playing Poker at home Adda52 எத்தனை முறை பார்த்தாலும் பார்த்த படத்தையே திரும்பி திரும்பி பல முறை பார்ப்பது, தற்போது தான் முதல் முறை பார்ப்பது போல் பரவசப்படுவது, டிவி யில் பாடல் ஒலிக்கும் போது கூட சேர்ந்து பாடுவது, சபாஷ் என்று அலறுவது, உடம்பில் ஒரு புது உத்வேகம் வந்தது போல் துடிப்பது இவை எல்லாம் எம் ஜி ஆர் பக்தர்களால் மட்டுமே முடியும். சின்ன குழந்தைகள் போல் இவர்கள் துள்ளி குதித்து சந்தோஷப்படுவது, இந்த கொரோனா லாக் டவுன் சமயத்தில் மிக பெரிய ஆனந்தமே . காலங்கள் கடந்தும் தத்துவ பாடல்கள் மூலம் நம்பிக்கை ஊட்டும் எம் ஜி ஆர் படங்களுக்கு எப்போதுமே ஒரு ஸ்பெஷல் சல்யூட் தான்.......... Thanks.........
-
-
ரஜினி நடித்த படையப்பா படத்தில் ஸ்டைலாக ரஜினி கால் மேல் கால் போடும் காட்சி ஹைலட்டாகக் காட்டப்பட்டது,அனால் அந்தக் காட்சி" பெரிய இடத்துப் பெண்"ணில் தலைவரால் மிகச் சாதாரணமாகச் செய்த காட்சி,அதை அப்பட்டமாகக் காப்பி அடித்துத்தான் படையப்பாவில் சேர்த்து பில்டப் செய்துவிட்டனர்............. Thanks.........
-
-
ஒன்று. அதிசயபிறவிகளில் ஒன்று.
இரண்டு
இரட்டை இலை தனது இரண்டு விரலால் காட்டி
வெற்றி கண்டவர்.
மூன்று.
மூன்று பிறவிகளைக் கண்டவர்.
நான்கு
தலைவர் மேடையில் பேசும்போது நான்கு பக்கத்திலும் கண்கள்
கவனம் செலுத்தும்.
ஐந்து.
ஐந்து புலன்களையும்
அடங்கி ஆண்டவர்.
ஆறு
ஆறு கோடி மக்களின் தலைவர்.
ஏழு.
தலைவரின் அதிர்ஷட எண் ஏழு.
எட்டு.
எட்டாவது வள்ளல்(8)
ஒன்பது.
நவரத்தினம் படத்தில்
வித்தியாசமாக ஒன்பது
கதாநாயகியுடன் நடித்தவர் இவர் ஒருவரே.
பத்து
பத்திரமாத்து தங்கம்
நம் தலைவர்......... Thanks.........