Originally Posted by
Ragu Raj
மலையாள ரீமேக்கில் கமல்?
மலையாளத்தில் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த படம் ‘திரிஷ்யம்’. இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால்-மீனா ஆகியோர் நடித்திருந்தனர். மோகன்லாலின் பக்குவமான நடிப்பு, வித்தியாசமான கதை, ஆகியவை படத்திற்கு பலமாக அமைய கேரளா முழுவதும் இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இப்படத்தின் தமிழ், தெலுங்கு மொழிகளுக்கான ரீமேக் உரிமையை மோகன்லாலின் மைத்துனரான சுரேஷ் பாலாஜி வாங்கி வைத்துள்ளார். இவரிடமிருந்து தமிழ் உரிமையை வாங்கி தமிழில் ரீமேக் செய்து அதில் விக்ரமை நடிக்க வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தன. ஆனால், தற்போது இந்த படத்தின் ரீமேக்கில் கமல் நடிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. மோகன்லால் நடித்த ஜார்ஜ் குட்டி என்ற கதாபாத்திரத்தை கமல் ஏற்று நடிக்கவுள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
கமல் தற்போது ‘விஸ்வரூபம்’-2ம் பாகத்தை முடித்துவிட்டு, ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தமவில்லன்’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படங்கள் முடிந்தபிறகு ‘திரிஷ்யம்’ மலையாள ரீமேக்கில் நடிப்பார் என தெரிகிறது.