ஜும்மந்தி நாதம் பாட்டு கேட்டேளா ....
Printable View
கமர்ஷியல் வெற்றிகளுக்காக பரதம் கூட 'தைய்யா தக்கா' 'தத்தக்கா பித்தக்கா' என்று பரத உடை அணிந்தே கொச்சைப் படுத்தப்பட்டது. அதுவும் விஜயலளிதாவ் ரொம்ப ஓவராகக் குதிப்பார். விட்டலாச்சார்யா ரொம்பவும் கெடுத்துக் குட்டிச்சுவராக்கினார். 'மாய மோதிரத்'தில் கூட பாரதிக்கு நவநாகரீக ஸ்விம்மிங் டிரெஸ். ராஜஸ்ரீ ஏகப்பட்ட படங்களில் கவர்ச்சி. ஜெயலலிதா, கிருஷ்ணகுமாரி எவரையும் விட்டு வைக்கவில்லை அவர்.
ஓ.. வாசு சார் என்பாக்கியமே பாக்கியம்.. மணாளனே ம பாக்கியம் பாட்டா அது..ஓ மிக்க நன்றி..(ஒருவிஷயம்..அந்த டிவிடி என்னிடம் இருக்கிறது..க.க.தெ என நினைத்து லலிதை தான் பார்த்தாகி விட்டதே என பார்க்காமல் இருக்கும் படம்..இனி பார்க்கிறேன் :) )
மதுண்ணா..எனக்குக் கொஞ்சமே கொஞ்சம் தான் தெரியுமாக்கும்.. இங்கு உள்ளவர் அளவு இல்லை..
ராஜேஷ்..எனக்கு ராஷ்டிர கூட பாஷை..ம்ம் கன்னடம் கொத்தில்லா ஸ்வாமி..இருந்தாலும் ஜெயந்தியின் படங்கள் அழகு..சர்ரோவோட படம் தாமரை நெஞ்சம் தானே வாசு சார்
சூரியகலா யாராக்கும் ( ஒரு நாளைக்கு எவ்ளோ வெடிடா பத்தவைப்ப கண்ணா..) :)
'இன்ப முகம் ஒன்று கண்டேன்'
'நான் வளர்த்த தங்கை' படத்தில். மைனாவதி நடிக்க, அவருக்கு குரல் தரும் இசைக்குயிலின் அபூர்வமான பாடல்.
https://www.youtube.com/watch?v=F_M2...yer_detailpage
சில படங்களில் விஜியை ஓவராக குதிக்க வைத்திருந்தாலும் சில பாடல்களில் நன்றாக நடனமாடியிருப்பார்.
பஞ்சபானன் என் செவியில் பரன்னு (அரக்கள்ளன் முக்கா கள்ளன் திரையில் இசையரசியின் குரலில்) விஜியின் நடனம்(கிருஷ்ணா ஜி எங்கே எங்கே)
https://www.youtube.com/watch?v=N1PDGcN5Egg
விஜியிடம் பிடிக்காதது எதையும் வேக வேகமாகச் செய்வார். ஒரு நளினம் இருக்காது. கொஞ்சம் முரடுத்தனம் தெரியும். பெண்மையின் நளினம் மிஸ் ஆகும்.
நீங்கள் போட்டதை பார்க்கிறேன். நன்றி!