ரவி,
இதில் என் பெயரை எடுத்து விடுங்கள். நான் ஒரு கூகுல் தேடல் ஆள். என்னைப் போய் பெரிய பெரிய ஆட்களுடன் ஒப்பிடுகிறீர்களே!!!
Printable View
கலைவேந்தன் அய்யா அவர்களே,
இதைத்தான் இவ்வளவு நாட்களாக நான் சொல்லிக்கொண்டு இருந்தேன். தாயைக் காத்த தனயன், குலேபகாவலி போன்ற படங்கள் மட்டுமில்லாது அதற்கும் முன்னரே எம்.கே. தி அவர்களின் படங்களையும், பி.யூ.சின்னப்பா அவர்களின் படங்களையும் திரையிட்ட நாட்களில் பார்த்து மகிழ்ந்தவர் நீங்கள். உங்களோடு உங்கள் கொள்ளுப் பேரனும் இங்கே வந்து பதிவுகள் இடுகிறார் என்பதே எவ்வளவு பெருமையான விஷயம்.
நீங்கள் தாரளமாக என்னை ஒருமையில் மட்டுமல்ல, 'வாடா, போடா' போட்டும் அழைக்கலாம். அவ்வளவு சிறியவன். அதாவது உங்கள் பேரன் வயதில் உள்ளவன். இப்போதாவது புரிந்து கொண்டீர்களே. சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயத்தில் உங்கள் பேரன் வயதில் உள்ள என்னை அய்யா என்றெல்லாம் அழைத்து எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளிக்காதீர்கள்.
‘சேவல் வந்து முட்டையுமிட்டது தேசம் நல்லால்லே...’ என்று நீங்கள் போட்ட நாட்டு நிலவரப் பதிவு ... ?
வாசுதேவனை விட நான் பெரிதாக ஒன்றும் சொல்லத் தோணவில்லை. அரசியலில் உங்கள் அறிவு உங்கள் வயதினால் பெற்றது என்பதை பறை சாற்றுகிறது
வாசுதேவன் அவர்களே,
நீங்கள் முன்பு போல் எழுத ஆரம்பித்த பின்புதான் திரி பௌர்ணமி நிலவு போல முழுமை அடைந்து இருக்கிறது. (எப்பூடி நிலவை இங்கயும் கொண்டு வந்துட்டோமுல்ல!!!) நடிகர் திலகத்தின் மேல் உங்களுக்குள்ள பக்தி இங்கு அனைவரும் அறிந்ததுதான். அதை மீண்டும் உறுதி படுத்தி 'என் தம்பி'-யின் அட்டகாசமான பாடலை ( தட்டட்டும்....கை தழுவட்டும்) அற்புதமாக வடித்து விட்டீர்கள். அத்துடன் நீங்கள் கொடுத்த புகைப் படங்கள் அருமை. அருமை. என்ன ஸ்டைலிஷாக இருக்கிறார் நடிகர் திலகம். எத்தனை வரிகள். அத்தனையும் அற்புதம். இன்னும் நான் படித்துப் பார்க்க வேண்டும்.
அப்புறம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் முதல் பாடலை கொடுத்தீர்களே. என்னவென்று சொல்வது? பாடியவர் யாரென்று கண்டுபிடியுங்கள் என்று சொல்லி ஆடியோ மட்டும் கொடுத்திருந்தீர்கள் என்றால் நிச்சயம் என்னால் கண்டு பிடித்திருக்க முடியாது. ஆனால் அந்த இனிமை, அந்த நெளிவு எல்லாமே இருக்கிறது. பாடல் அருமையோ அருமை. தொடருங்கள். படித்து மகிழ்கிறோம். கலை வேந்தன் அய்யா சொன்னது போல் இவ்வளவு நாட்கள் நாங்கள் இதையெல்லாம் இழந்திருந்தோம். நல்ல வேளை நீங்கள் வந்தீர்கள். அருமை பாடல்கள் தந்தீர்கள், தருவீர்கள்.
திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே. நன்றி. நன்றி. நன்றி.
//திலக சங்கமத்தை மதுர கானத் திரிக்கு கொண்டு வரச்செய்த பெருமையும் உங்களுக்கே.// அப்ஜெக்*ஷன்யுவர் ஹான்ர். என்னை வாசு கேட்கவில்லை..கேட்டிருந்தால் நானும் இட்டாந்திருப்பேன்.. :)
சரி சிரி..டைப்போ சரி சரி..இந்தாங்க நீங்க கேட்ட திலக சங்கமம..
https://youtu.be/uLmsuXcID7U
எஸ்ஸ்ஸ்கேப் :)
சி.க.,
முன்பு யோசித்தேன். கிடைக்கவில்லை. கூகுளினேன். நெறைய மரங்கள் இருக்கின்றன தமிழ்ப் பாடல்களில். உங்களால் முடியும் ஒரு சிறிய (மன்னிக்கவும்) மிகப் பெரியத் தொடரே எழுத. சில
பச்சை மரம் ஒன்று
ஏரியிலே எலந்த மரம், தங்கச்சி வச்ச மரம்
நீ காற்று நான் மரம்
மரங்கொத்தியே
மண்ணுக்கு மரம் பாரமா மரத்துக்கு...
அத்தி மரம் பூத்ததே
அத்தி மரப் பூவிது
பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
கலைவேந்தன் அய்யா அவர்களும் வாசுதேவன் அவர்களும் தனி லெவல் உங்களைப் போல. நீங்களெல்லாம் ஒரே பந்தில் ஒன்பது என்ன அதற்கு மேலேயும் அடிப்பீர்கள்.
கல்நாயக்,
எனது தாத்தா வரும்போது சொல்கிறேன். அவரை மட்டும் நீங்கள் ‘அய்யா’ போட்டால் போதும். எனக்கெதற்கு ‘அய்யா’ போட்டு மரியாதை? சாதாரணமாக கூப்பிடுங்கள். கூச்சமாக இருக்கிறது. அரசியல் அறிவு என் தாத்தா சொல்லித் தெரிந்து கொண்டதுதான். எனக்கு தெரியாது. இதற்குத்தான் நிறைய விஷயம் சொல்ல (தாத்தாவிடம் கேட்டுத்தான்) பயமாயிருக்கிறது, என் வயதை தவறாக அதிகமாக கணக்கிடுவீர்களோ? என்று.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் (அய்யா - இப்போது இல்லை),
நான் அய்யா போட்டது ஒரு முன் ஜாக்கிரதைக்கே. வயது தெரிந்தும் நான் மரியாதை வார்த்தை சேர்க்காமல் அழைத்து நீங்கள் பாட்டுக்கு கோவித்துக்கொண்டால் என்ன செய்வது? அந்த பயத்தினால்தான் அய்யா சேர்த்தேன். இனிமேல் நான் அய்யா போடாவிட்டால் கோபித்துக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.
சி.க, நாயக்,
இந்தாங்க சில மரப் பாடல்கள்.
அத்திமரப் பூவிது
அருகில் சுத்தி வந்து தாவுது
https://youtu.be/2xV2vaqhpvI
அடடட! மாமரக் குயிலே... உன்னை இன்னும் நான் மறக்கலியே.
https://youtu.be/4fq3BNfKkcE
'வேப்ப மர உச்சியில் நின்னு... பேய் ஒன்னு ஆடுதுன்னு (பாடல் நடுவில வந்தாலும் மரம் மரம்தானே!)
https://youtu.be/LTCihMCfSCU
'மூங்கில் மரக் காட்டினிலே கேட்கும் ஒரு நாதம்'
https://youtu.be/VAGtycL-Pq0