-
நண்பர் திரு.முரளி ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு,
என்னை சாதுர்யமாக எழுதுவதாக சொல்வதன் மூலம் நான் ஏதோ பொய் சொல்கிறேன் என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் உங்கள் சாதுர்யமே தனிதான் போங்கள்.
நான் தஞ்சாவூர்காரனல்ல. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.
முதலில் நேற்று நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்.
சரி, அதுபோகட்டும். உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக மணியனுடன் சித்ரா கிருஷ்ணசாமி சென்றதை ‘சக்தி கிருஷ்ணசாமி’ என்று மாற்றி எழுதியதை (மக்கள் திலகம் மேல் உள்ள வெறுப்பு கண்களை மறைக்கிறது. நேற்று கூட ஸ்ரீதரை எம்ஜிஆர் பாடாய் படுத்தினார் என்று போட்டு தாக்கியிருக்கிறீர்கள். நான் அதில் உள்ள வார்த்தையை கொடுத்திருக்கிறேன். ) நான் அம்பலப்படுத்தியதற்காக என் மீது கோபப்பட்டீர்களே. அதற்கு நீங்கள் இதுவரை தவறான தகவலை சொல்லிவிட்டேன் என்று ஒப்புக் கொண்டீர்களா? அதுவும் ஒரு ஆண்டுக்கு மேலாகிறது.
சரி அதுவும் போகட்டும். நேற்று சிவாஜியின் சாதனை சிகரங்களில் ஆகாச ..... அவிழ்த்து விட்டிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறேனே? ஆம். அது தவறுதான் என்று ஒப்புக் கொள்ள மனமில்லாத நீங்கள், கொஞ்சம் கூட யோசிக்காமல் என்னை எப்படி கேள்வி கேட்க முடிகிறது என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
இன்று முதல் (11/09/2015) மதுரை சென்ட்ரல் சினிமாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றி படைப்பான "இதயக்கனி " தினசரி 4 காட்சிகள்
திரையிடப்பட்டுள்ளது. முதல் நாள் வசூல் ரூ.18,000/ இருக்கும் என எதிர்பார்ப்பதாக
மதுரை நண்பர் திரு. எஸ். குமார் தெரிவித்துள்ளார்.
http://i62.tinypic.com/33nj1j8.jpg
-
-
-
-
-
-
-
-