-
Quote:
Originally Posted by
Muthaiyan Ammu
முத்தையன் சார் ,
சூப்பரோ சூப்பர். தங்களது உழைப்பு அபாரம். அதைவிட அபாரம் தாங்கள் தெரிவு செய்யும் படங்களின் பிரிண்ட் தரம். குறிப்பாக நவரத்தினம் படத்தின் பிரிண்ட் மற்றும் நல்ல நேரம் படத்தின் பிரிண்ட். அவை எந்த கம்பெனியின் டிவிடி என தெரிவிக்க இயலுமா? நன்றி.
-
முத்தையன் சார்,
தங்களது தொகுப்பில் இரண்டாவதாக இடம் பெற்றுள்ள படம் எந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றது என்பதனையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.
-
இன்று தமிழ் இந்து நாளிதழில் வெளிவந்த மக்கள் திலகமும் இசையும் கட்டுரை மிக மிக அருமை. அதன் தொடர்ச்சியாக இன்று நவரத்தினம் திரைப்படத்தினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. மக்கள் திலகத்தின் மிகச் சுமாரான படம் என்று அன்றைய தினம் கருதிய படம். இன்று அருமையாக ரசிக்க முடிந்தது. குறிப்பாக ஸ்ரீதர் சுவாமிநாதன் அவர்கள் விளக்கிய கர்நாடக சங்கீத அடிப்படையிலான பாடல் காட்சி அற்புதம். மக்கள் திலகத்தின் திறமைக்கோர் மகுடம். மற்றும் படத்தின் தொடக்கத்தில் ஜரீனா அவர்களுடன் இடம்பெறும் அந்த ஹிந்திப் பாடலில் தலைவரின் நடன அசைவுகள் மிக மிக அற்புதம். குண்டடிப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிவந்த அந்தப் படத்தில் மக்கள் திலகத்தின் குரல் மிக மிக அருமையாகவும் தெளிவாகவும் அமைந்திருக்கிறது. மேலும் அந்த கர்நாடக இசையின் அடிப்படையிலான பாடலில் மக்கள் திலகத்தின் Lip movements எனச் சொல்லப்படும் உதட்டசைவு மிகவும் இயற்கையாக அமைந்து அவரே பாடுவதாக தோன்றியது. பிற பாடல்களிலும் அப்படித்தான் என்றபோதும் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் வித்தியாசமான குரலிற்கேற்ப மக்கள் திலகத்தின் உதட்டசைவும் வித்தியாசமாக இருக்கும். நன்றாக கவனித்துப் பார்க்கும் போது புரிவது டி.எம்.எஸ்., எஸ்.பி.பி., யேசுதாஸ்., சிதம்பரம் ஜெயராமன் போன்ற ஒவ்வொரு பாடகர்களின் குரலுக்கும் மக்கள் திலகத்தின் உதட்டசைவு வெவ்வேறு விதமாக இருப்பது புலப்படுகிறது. எப்பேர்பட்ட திறமை சாலி என்று வியக்க வைக்கிறது. இது தொடர்பாக மற்ற நண்பர்களின் கருத்துக்களையும் வரவேற்கிறேன்.
-
மக்கள்திலகம் --- டிஜிட்டல் முறையில் பல காவியங்கள் மெருகேற்றப்பட்டு வெளியாக உள்ளதாக நல்ல பல தகவல்கள் வருவது மிக்க மகிழ்ச்சி ஊட்டுவதாக இருக்கிறது...
-
சமீபத்தில் மறு வெளியீடு செய்யப்பட்ட கர்ணன்- சென்னை- ஆல்பட் அரங்கில் ஏப்ரல் மாதம் 11ம் தேதி மதியம், மாலை காட்சிகள் வரை திரையிட பட்டதாம்.. அன்று இரவு காட்சி முதல் மறுநாள் 12 மற்றும் 13ம் தேதிகளில் சிறிதும் வரவேற்பின்றி காட்சிகள் ரத்து செய்ய பட்டதாக கூற படுகிறது.. அதே போல் மதுரை, கோவை பகுதிகளிலும் காட்சி ரத்து செய்ய பட்டதாமே.. ஆனாலும் நாளிதழில் விளம்பரம் மட்டும் நிறுத்த பட வில்லையாமே.. இதனை பற்றி மேலதிக தகவல்களை நண்பர்கள் ஆரோக்கியமான முறையில் பகிரலாமே..
-
-
அன்பு நண்பர் ஜெய்சங்கருக்கு..நவரத்தினம் MODERN CINEMA, நல்லநேரம் MOSERBEER கம்பெனி சீடிக்கள்..என்பதை தெரிவித்து கொள்கிறேன்.. மேலும் அடுத்தகேள்விக்கான பதில்..இதோ..
http://i68.tinypic.com/9b9j80.jpg
http://i64.tinypic.com/2jer0bn.jpg
-
DINAMANI 17-4-2016
http://i65.tinypic.com/716zd3.jpg
நினைவலைகள்...மனு தாக்கல் செய்ய பணம் கொடுத்தார் எம்ஜிஆர்!
அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய போது, அதில் இணைந்து பணியாற்றி, விழுப்புரம் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ ஆனவர் பூ.கிருஷ்ணன் (81).
விழுப்புரம் நாலாயிரம் தெருவைச் சேர்ந்த இவர், வயது தளர்ந்த நிலையிலும், இன்றும் இயன்ற அளவு கட்சிப் பணியாற்றி வருகிறார். அவர், தனது முதல் தேர்தல் அனுபவங்களை நினைவுகூர்கிறார்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த நான், 5-ஆம் வகுப்பு வரை படித்தேன். விழுப்புரத்தில், 1952-களில் சோடா கடை வைத்திருந்த போது, திமுகவுடன் தொடர்பு ஏற்பட்டது.
எம்ஜிஆரை திமுகவிலிருந்து நீக்கிய போது, அதைக் கண்டித்து, விழுப்புரத்தில் எனது தலைமையில் 5 நாள்கள் ஏராளமானோர் உண்ணாவிரதம் இருந்தோம். எம்ஜிஆர் மீது பற்றுகொண்ட நான் அவர், 1972-இல் அதிமுகவைத் தொடங்கிய போது, அதில் இணைந்து பணியாற்றினேன். தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டு, கட்சிப் பணியாற்றினேன்.
அதிமுக முதல் தேர்தலான 1977-இல் என்னை அழைத்த எம்ஜிஆர், விழுப்புரத்தில் போட்டியிடுமாறு சொன்னார். என்னிடம் பணமில்லை, மாம்பழப்பட்டு செல்வந்தரை நிறுத்துங்கள் என்றேன். செல்வம் தேவையில்லை, செல்வாக்குதான் வேண்டுமென்று என்னையே நிற்கச் சொன்னதுடன், ரூ.5 ஆயிரம் கொடுத்து, மனு தாக்கல் செய்யச் சொல்லி அனுப்பினார்.
பிரசாரத்தை தொடங்கிய போது, எம்ஜிஆர் மீது பற்று கொண்ட ஆயிரக்கணக்கான மக்கள் என்னுடன் வந்து பணியாற்றினர். கிராமங்கள் தோறும் சைக்கிளில் சென்றுதான் பிரசாரம் செய்தேன்.
என்னை எதிர்த்து திமுகவில் கு.ப.பழனியப்பன், ஜனதா கட்சி ஆதிகேசவலு, காங்கிரஸில் காமராஜரின் சிஷ்யரான திருமாலும் போட்டியிட்டனர். 4 முனைப் போட்டி நிலவியது.
வசதி படைத்த அவர்கள் காரில் சென்று வாக்கு சேகரித்தனர். நான் சைக்கிளில் திரிவதை அறிந்த எம்ஜிஆர், என்னை அழைத்து, தேர்தல் செலவுக்கு ரூ.15 ஆயிரம் வழங்கினார். அதில் பழைய கார் ஒன்றை வாடகைக்கு எடுத்து பிரசாரம் செய்தேன்.
கார் வாடகை, டீசல், சுவரொட்டி, சுண்ணாம்பு அடிப்பது போன்ற செலவுதான் ஆனது. பொதுமக்கள், கட்சிக்காரர்களால் எனக்கு எந்தச் செலவும் ஏற்படவில்லை. வீதியெங்கும் இரட்டை இலை கோலம் போட்டு மக்கள் வரவேற்றனர். பிரசாரத்தின் போது, வழியில் டீ குடிப்பது, முறுக்கு, பட்டாணி வாங்கி சாப்பிட்டதுதான் பெரிய செலவாக இருந்தது. வாக்குச் சாவடி முகவர்கள் செலவுக்கு ரூ.25 கொடுத்ததைக்கூட அன்று வாங்க மறுத்துவிட்டனர்.
தேர்தல் பிரசாரத்துக்கு எம்ஜிஆர் வந்தார். இடமில்லாததால், கீழ்ப்பெரும்பாக்கத்தில் இருந்த உழுத விவசாய நிலத்தில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம். டிராக்டர் பெட்டியில் மேடை செய்து, அதில் எம்ஜிஆர் பேசினார். தன் இளமைக்கால ஏழ்மை நிலையை அப்போது மக்களிடம் அவர் பகிர்ந்து கொண்டார்.
3 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். எம்ஜிஆரை சந்தித்தபோது, நீ சுத்தமாக இருந்தா, ஊரில் தலை நிமிர்ந்து நடக்கலாம், இல்லேன்னா குனிந்துதான் போகணும் என்றார். தேர்தல் செலவு ரூ.17 ஆயிரம் ஆனது. மற்றவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் செலவாகியிருக்கும்.
பிரசாரத்தின் போது, தனக்கு செல்வாக்கு இல்லாததை உணர்ந்த காங்கிரஸ் வேட்பாளர், அதிமுக வேட்பாளரான எனக்கு வாக்களிக்கச் சொன்ன ஆச்சரியமும் நடந்தது. அப்போதெல்லாம் வாக்குக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை. விதி மீறலும், தேர்தல் கெடுபிடிகளும் அப்போதில்லை. கட்சியினரும் ஆர்வத்துடன் உடன் வந்து பிரசார பணிகளை செய்தனர்.
இன்று வாக்களிக்கப் பணம் கொடுக்க வேண்டும். கட்சிக்காரங்களுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற நிலைமை உள்ளது. இது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல என்றார் அவர்.
- எல். அன்பரசு
-
-