-
மக்கள்தலைவர் சிவாஜி அவர்களின் 87வது பிறந்தநாளை முன்னிட்டு சிவாஜி காமராஜ் கல்வி அறக்கட்டளை சார்பில் மதுரையில் வரும் 25.10.2015 ஞாயிற்றுக் கிழமை மாபெரும் இலவச பல் மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. முகாம் அழைப்பிதழ் உங்கள் பார்வைக்கு....
http://www.sivajiganesan.in/Images/1610_2.jpg
சிவாஜி என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!
-
மதுரை சென்ட்ரல் திரையரங்கில் 16.10.2015 வெள்ளி இளையதிலகம் பிரபு அவர்கள் நடித்த மாபெரும் வெற்றிக் காவியம் பாஞ்சாலங்குறிச்சி திரையிடப்பட்டது. தியேட்டரில் தலைவன் சிவாஜி மக்கள் இயக்கத்தின் சார்பில்வைக்கபட்டுள்ள வரவேற்பு பேனர்...
http://www.sivajiganesan.in/Images/1610_3.jpg
சிவாஜி என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா!!
-
அனைத்து நண்பர்களுக்கும்,
வணக்கம். பல்வேறு பணிகள் காரணமாக கிட்டத்தட்ட 18 நாட்களுக்கு திரியை பார்வையிடவோ பங்களிப்பு செய்யவோ இயலவில்லை. கிட்டத்தட்ட 60 பக்கங்கள் கடந்து போயிருக்கிறது. விடுபட்டுப் போன பக்கங்களை பார்வையிடவே பல மணி நேரம் பிடித்தது. படிக்க மேலும் சில மணி நேரம் என்ற போதிலும் முழுமையாக படித்து முடியவில்லை. எல்லாமே அருமை. தொடரட்டும் அனைவரின் பங்களிப்பும்
அன்புடன்
-
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து பெண் சிவாஜி என்றும் பெண் நடிகர் திலகம் என்றும் புகழப்பட்ட ஆச்சி மனோரமாவின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்
-
வாசு,
இல்லற ஜோதி சலீம் அனார், வெள்ளிக்கிண்ணம் ஏந்திய ராஜு பார்வதி, நடப்பது சுகம் என பிறருக்காக நடந்த சிவா, முத்து, நாகு என்று நீங்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் வழங்கிய மூன்றும் முக்கனி சுவை.
பாடல்களின் வர்ணனை உச்சத்தை தொடுகின்ற அதே நேரத்தில் continuity பற்றி குறிப்பிட உங்களால் மட்டுமே முடியும். அதுவும் கலாட்டா கல்யாணம் படத்தின் எங்கள் கல்யாணம் பாடலையும் சேர்த்து உதாரணம் சொல்லியிருக்கிறீர்கள். உண்மைதான். டிஎமஎஸ் குரலுக்கு ராஜன் பாடுவதாக வரும். அந்தப் பாடல் சென்னையில் அப்போது அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சியில் படமாக்கப்பட்டிருந்து. பாடல் படமாக்கப்படும் சேதி தெரிந்து நடிகர் திலகத்தை காண கட்டுக்கடங்காத கூட்டம் கூடி விட்டது. காவல்துறையை வைத்து கூட்டத்தை கட்டுப்படுத்தி படப்பிடிப்பை தொடர்ந்த போதிலும் நேரம் அதிகமாக அதிகமாக மேலும் கூட்டம் சேரவே வேறு வழியில்லாமல் அந்த சரணத்தை ராஜன் பாடுவது போல் படமாக்கினார் சிவிஆர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது போன்ற தொந்தரவு எதுவும் மூன்று தெய்வங்கள் படப்பிடிப்பில் ஏற்பட்டதாக தெரியவில்லை.
அது இருக்கட்டும். போனஸாக காளிதாசையும் கொடுத்து இருக்கிறீர்கள். வாழ்த்துகள்! தொடருங்கள்
அன்புடன்
-
செந்தில்வேல்,
நீங்கள் பதிவிடும் பல்வேறு பத்திரிக்கைகளில் வந்த புகைப்படங்கள், கட்டுரைகள், பட விளம்பரங்கள் குறிப்பாக 1965 முதல் 1975 காலகட்டத்தில் வெளிவந்த கண்ணைக் கவரும் நடிகர் திலகத்தின் புகைப்படங்கள் அருமை என்றால் ஒரு சில பாடல்களையும் விளக்கமாக எழுதி அவற்றில் சிறப்பான காமிரா கோணங்கள் வரை விவரிக்கும் உங்கள் பதிவுகள் பிரமாதம் என்றே சொல்ல வேண்டும். மனமார்ந்த வாழ்த்துகள்! தொடருங்கள்!
அன்புடன்
-
ஆதவன் ரவி,
என்ன சொல்வது இவரைப் பற்றி? ஆதவன் என்றாலே சூரியன். ரவி என்றாலும் சூரியன் இரட்டை சூரியனை பெயரிலேயே வைத்திருக்கும் இந்த மனிதனை என்ன சொல்லி பாராட்டுவது? நடிகர் திலகத்தின் 87 புகைப்படங்களை பதிவு செய்து ஒவ்வொன்றிற்கும் ஈரடி குறள் எழுதியதை பாராட்டுவதா? [அதிலும் பராசக்தி முதல் படம். மற்ற நடிகர்களுக்கு முதல் பாடம், கட்டபொம்மன் குதிரை ஸ்டில்லுக்கு குதிரை உங்களிடம் கற்றுக் கொண்டிருக்கிறது வேகம் போன்றவையெல்லாம் டாப்] அல்லது பாடல்களுக்கு கவிதையாய் பொழிப்புரை எழுதுவதை சொல்வதா? [சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பாடலும் சரி முத்து நகையே பாடலும் சரி ஓஹோ!] சிரிப்பில் உண்டாகும் பாடலுக்கு இறுதியில் நடிகர் திலகம் போடும் அந்த ஸ்டெப் இருக்கிறதே [வாசு வீடியோவே போட்டு விட்டார்] அதை நீங்கள் வர்ணித்த விதம் பிரமாதம். இந்த இரண்டு பாடல்களுமே அவற்றை பார்க்கும்போது என் மனதில் என்ன தோன்றியிருக்கிறதோ அதை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறீர்கள்.
உங்களை நேரில் பார்த்த அன்று சரியாக பேச முடியவில்லை. நிறைகுடம் படம் தொடங்கியவுடன் நான் கிளம்ப வேண்டிய சூழல். பிறிதொரு முறை சந்திப்போம். வாழ்த்துகள்! தொடருங்கள்!
அன்புடன்
-
முத்தையன் சார்,
எங்கிருந்தோ வந்தாள் மற்றும் அந்த நாள் ஸ்டில்களுக்கு நன்றி!
சிவா சார்,
புதிய திரிகளுக்கு வாழ்த்துகள்! அன்னையின் ஆணையின் அற்புதமான புகைப்படங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
மற்ற பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி! அரிதான பல பேசும்படம் புகைப்படங்களுக்கு ராகவேந்தர் சாருக்கு நன்றி! இந்த இடைப்பட்ட காலத்தில் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நண்பர்களுக்கும் மீண்டும் மனமார்ந்த நன்றி!
அன்புடன்
-
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...81&oe=562ADAD9
நன்றி - முகநூல் நண்பர் முகமது ஃபாரூக் அவர்களுடைய பக்கத்திலிருந்து..
-