Originally Posted by
vasudevan31355
கோபால் சார் வருத்தத்திலும் நியாயம் இருக்கிறது. அவருடைய இந்த சீரிய, அரிய முயற்சிக்கு உறுதுணையாக ராகவேந்திரன் சார் அவர்களைத் தவிர வேறு யாரும் (நான் உட்படத்தான்) அவ்வளவு ஈடுபாட்டுடன் feed back தருகிறோமா என்றால் இல்லை என்ற பதில்தான் மிஞ்சுகிறது. கோபால் சாருடன் மணிக்கணக்கில் நான் போனில் உரையாடும்போது இதைப்பற்றி அலசுவோம். நிறைகுறைகளை அலசுவோம். அப்போது கூட அவர் பாராட்டுக்களுக்காக ஏங்கியதில்லை. தன்னுடைய கட்டுரைகளுக்கான சரியான, அதோடு தொடர்புடைய, அல்லது நேர்,எதிர்மறை விமர்சனங்களைத்தான் அவர் எதிர்பார்க்கிறார். அதை பெரும்பாலும் நாம் அளிப்பதில்லை. நாம் எல்லோருமே அவர் அலசி ஆராயும் தலைவர் படங்களை பலமுறை பார்த்திருக்கிறோம். அந்த சொந்தக் கருத்துக்களை அவருடைய கட்டுரைகளுக்கு இடையே நாம் பதிந்தால் அந்தக் கட்டுரைகளின் சுவாரஸ்யம் இன்னும் அதிகரிக்கும். அவருடைய இந்த புதிய பாணி வடிவமைப்பில் நாம் நிறையத் தெரிந்து கொண்டுள்ளோம். அதே போல் நமக்குத் தெரிந்ததை அவர் எடுத்துக் காட்டாமல் இருந்திருக்கலாம். நாம் அதை சுட்டிக் காட்டலாம். (விக்கிரமனின் குரல் ஜாலங்களை நண்பர் பார்த்தசாரதி அவர்கள் கோபால் அவர்களுக்கு எடுத்துச் சொன்னதைப் போல) அதைத்தான் கோபாலும் எதிர்பார்க்கிறார். பதில் கருத்துக்கள் சரிவர வெளிவராத பட்சத்தில் வடிவமைப்பவருக்கு சோர்வும் எரிச்சலும் சலிப்பும் வர வாய்ப்புள்ளது. அருமையாக எழுதும் நபர் சலிப்படைந்தால் நமக்குத்தானே நஷ்டம்?
அருமை நண்பர் கண்பத் அவர்கள் சொன்னது போல விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிற்கே உறுப்பினர்கள் பதிவிடுகிறோம். எம்ஜியார் அவர்கள் திரியில் புதிதாய் வரும் அங்கத்தினர்கள் அனைவரும் அவர்களால் முடிந்த பதிவுகளை ஒருவர் கூட விடாமல் அங்கு பதிவிடுகிறார்கள். அது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய விஷயம்.
இங்கு உறுப்பினர்கள் அதிகம் இருந்தும் பலர் பதிவிடுவதே இல்லை என்பது நிஜமாகவே வருத்தப்படவேண்டிய விஷயம். எல்லோருக்கும் காலம் பொன் போன்றதுதான். எல்லோருக்கும் வேலைப்பளு என்பது நிஜம். அந்த வேலைப்பளு கோபாலுக்கும் உண்டு....ராகவேந்திரன் சாருக்கும் உண்டு... கண்பத் சாருக்கும் உண்டு... கோல்ட் ஸ்டாருக்கும் உண்டு... ராகுல்ராமுக்கும் உண்டு...சவுரி சாருக்கும் உண்டு... எனக்கும் உண்டு...
இங்கு பதிவிடுபவர்களும் மற்றவர்களைப் போல நேரமின்மை என்ற காரணத்தை எடுத்துக் கொண்டால் நமது திரியின் நிலைமையை சற்று நினைத்துப் பாருகள்.
காலை தூங்கி எழுந்தது முதல் நடுநிசிவரை சிலர் திரிக்காக நேரத்தை செலவிடுகிறோம் எல்லோராலும் அப்படி இருக்க முடியாது என்பது தெரியாததல்ல. தினம் ஒருமணிநேரம் செலவிட்டு திரியில் பதிவுகள் இடலாமே.! இதை நானும் ராகவேந்திரன் சாரும் பலமுறை சொல்லியாகி விட்டது. தலைவரின் நடிப்பைப் பற்றி.... அவர் படங்களில் தங்களுக்குப் பிடித்த காட்சிகளைப் பற்றி... பாடல்களைப் பற்றி எழுதலாமே.... தங்களிடம் கைவசம் உள்ள ஆவணங்களைப் பதியலாமே....
சில உறுப்பினர்கள் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒருமுறை எட்டிப் பார்த்துவிட்டு செல்கிறார்கள். முரளி சார், கார்த்திக் சார், சாரதா மேடம் போன்ற சீனியர்கள் திரியில் வரலாறுகள் படைத்து நமக்கு முன்னோடியாகத் திகழ்ந்து இருக்கிறார்கள். அவர்கள் செய்துவிட்டுப் போன, செய்து கொண்டிருக்கிற சாதனைகள் என்றென்றும் நிலைத்திருக்கும். அவர்கள் இனி வந்து தினம் பதிவுகள் இட எதிர்பார்ப்பதை விட நாம் அவர்கள் வழியைப் பின்பற்றி நம்மால் முடிந்த பதிவுகளை இட்டு அவர்களை சந்தோஷப் படுத்தலாமே!
ஒருமணிநேரம் தினம் நம் தலைவருக்காக நாம் ஒதுக்கக் கூடாதா?... சற்று சிந்தித்துப் பாருங்கள்... தினம் பதிவு செய்பவர்களுக்கும் எவ்வளவு வேலைகள் இருக்கும் என்று?
சந்திரசேகரன் சார் என்னதான் வெளியில் பலர் நமது திரியை வாசிக்கிறார்கள் என்று சொன்னாலும் பதிவு செய்யும் இந்த இடத்தில் அந்த பதிவுகளுக்கான feed back வருவதையே பதிவாளர் விரும்புவார். அதுதான் அவரை உற்சாகப்படுத்தும். அதை பாராட்ட வேண்டும் என்று எவரும் எடுத்துக் கொள்ள வேண்டாம். நான் சொல்வது பதிவின் நிறைகுறைகளை. நிறை என்றால் அதனுடன் சேர்ந்த கருத்துக்களை பதியலாம். குறை என்றால் தாராளமாக சுட்டிக் காட்டலாம். அதை பதிவாளர்கள் கண்டிப்பாக ஏற்றுக் கொள்வார்.
நாம் மனதார இங்கு சிலருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொன்னாலும் அதைக் கூட சிலர் ஏற்றுக் கொள்ள மறுப்பது, அல்லது ஏற்றுக் கொள்ளாதது போலக் காட்டிக் கொள்வது (ஒருவேளை தன்னடக்கமோ!) எந்த நாட்டில் கற்றுக் கொண்ட நாகரீகமோ தெரியவில்லை.
நிச்சயமாக நமது திரியில் பதிவாளர்களின் வருகை மிகக் குறைவே! பதிவுகளும் குறைவே!
இந்நிலை மாற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த பதிவுகளை இட வேண்டும். இல்லையென்றால் கோபால் போல சலிப்படைந்து வேறு blog-களுக்கு செல்லவேண்டிய நிர்ப்பந்தம் தான் இங்குள்ள பதிவாளர்களுக்கு ஏற்படும்.
ராதாகிருஷ்ணன் சார்!
உங்களை அடிக்கடி ஆன்லைனில் பார்க்க முடிகிறது...(ஆனால் திரிக்கு வருவேனா என்கிறீர்கள். திரியைப் 'படித்தால் மட்டும் போதுமா'?)
ஆனந்த் சார்,
வந்த புதிதில் தங்கள் சொந்த வடிவமைப்பில் அருமையான தலைவரின் ஸ்டில்களை கலைநயத்தோடு பதிவிட்டீர்கள். இப்போது என்ன ஆச்சு?
பார்த்தசாரதி சார்,
நீங்கள் வேலை அதிகம் என்று கூறவே கூடாது.... தங்கள் பாடல் ஆய்வுக்காக ஏங்கி ஏங்கி கண்கள் பூத்துப் போச்சு.
தம்பி செந்தில்,
உன் கதை என்ன? என்ன இந்தப் பக்கமே ஆளைக் காணோம்?
சிவாஜி செந்தில் சார்,
மாதம் இரண்டு முறை வருகிறீகள். தங்களிடம் நிறைய விஷயம் உள்ளது... இனி தினமும் பங்கு பெற வேண்டும்.
சுப்பிரமணியம் ராமஜெயம் சார்,
மிக சீனியர் நீங்கள். தங்கள் ஆசீவாதங்கள் எங்களுக்கு முக்கியம். அது போல தங்கள் அனுபவங்களும் எங்களுக்கு முக்கியம். உடல்நலனுக்குத் தகுந்தவாறு பதிவுகளை அளிக்க முயற்சி செய்யுங்கள்
அன்பு பம்மலார் சார்,
தங்களுக்காக அனைவரும் வெயிட்டிங். திரிக்கு வந்து புத்துணர்ச்சி கொடுங்கள்.
அன்பு முரளி சார்!
எங்கள் வழிகாட்டி நீங்கள். தங்கள் கைவண்ணத்தில் 'ஞானஒளி' யைக் காண ஆசை. ப்ளீஸ்! எனக்காக.
கார்த்திக் சார்!
கோடைகால மழையாய் குளிர்விக்க வந்து திடுமெனக் காணாமல் போய் விட்டீர்கள். மீண்டு(ம்) வந்து 'கார்' மழை கார்த்திக்காய் 'திக்' விஜயம் செய்யுங்கள்.
கோபால்,
நீ என்று உரிமையோடு உன்னை விளிக்க வைத்த சகலகலா நிபுணனே!
மனம் தளராதே! உன் பாதையில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கிறாய். வழியில் உள்ள சிறு முட்களும், கற்களும் உன்னை என்ன செய்து விட முடியும்? உன்னால் ஒரு சரித்திரம் உருவாகி 'அவன் ஒரு சரித்திரம்' என்று வாழ்ந்த நம் தெய்வத்தைப் போல இந்தியாவின் ஒரே உலக அதிசயத்தைப் படைத்த சரித்திர நாயகனாய் நீ மகுடம் தரிக்கும் நாள் அதோ தெரிகிறது.
இன்னும் விட்டுப் போன அன்பர்கள் அனைவரும் நமது திரியில் பதிவுகள் இட்டு தலைவர் புகழை ஈரேழு லோகமும் அறியச் செய்வோம்.
என்னுடைய இந்தக் கருத்துக்கள் யாரையாவது வருத்தப்படச் செய்திருந்தால் அதற்காக முன்கூட்டிய என் மன்னிப்பை இப்போதே தெரிவித்துக் கொள்கிறேன்